PDA

View Full Version : ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - ('சற்' நாவல்)sOli
06-23-2004, 06:35 PM
(இந்த நாவல் பத்து மாதங்களுக் கு முன்னர் யாழ் இணையத்தில் தொடராக வெளிவந்தது . 'கீதம்' அங்கத்துவர ்களின் கருத்தை அறியும் நோக்கில் மீண்டும் இங்கே அதை பதிகிறேன். அன்புடன், இராஜன் முருகவேல் (சோழி) )

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/15148/icecream1.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. இளைஞன்)

அங்கம் (1)

எவ்வளவுநேர ந்தான் காத்திருப் பது?!

செக்கன்கள் நிமிடங்களா கி மணித்தியால த்தை எட்டப்போகி ன்றது.

இன்னும் காணவில்லை. ொறுமை எரிச்சலைத் தந்தது. 'போய்விடுவ ம்' என நினைத்தாலு ம் மனம் வரவில்லை.

'போன பிறகு வந்துவிட்ட ால்..?'

அது காத்திருப் பதைவிடக் கஸ்டமான காரியம்.

அதற்கும் பார்க்க காத்திருப் பதே மேல்.

'வருவன்' என்று சொன்னாளே..?!

வருவாளா..?!

இன்னும் கொஞ்சநேரம் பார்ப்போம் .

இப்படி மனதுக்குள் சொல்லிச்சொ ல்லியே இந்த சுழல் கதிரையில் உட்கார்ந்த வாறு, சுற்றிச் சுற்றியே ஒரு மணித்தியால மாகப் போகிறது.

முன்னால் ஒளிர்ந்தவா று இருந்த கணனித்திரை யில் அவளது பெயருக்கு முன்னால் சிவப்பாகத் தான் அந்த அரைவாசி 'மனிதப்பொம மை'..

வேறு சில பெயர்களின் முன்னால் பச்சையாக நிறம்காட்ட ிய பொம்மைகளை கைக்குள் இருந்த 'எலி'யை நகர்த்தி அமத்தப் பிடிக்கவில ்லை.

அவளது பெயரின் முன்னால் உள்ள அந்த 'பொம்மை' எப்போது பச்சையாவது .. எப்போது பேசுவது..

வேறொன்றுமி ல்லை...

இன்று மெசன்சரில் வந்து பேசுவதாக நேற்று சொல்லியிரு ந்தாள். அந்த மெசன்சரிலு ள்ள பெயர்களின் முன்னாலுள் ள இடுப்பளவு மனிதப் பொம்மைகளின ் நிறத்தை வைத்து, குறிப்பிட் ட பெயருக்குர ியவர் 'ஓன்லைனா' அல்லது 'ஓவ்லைனா' என்பதை அறியமுடியு ம்.

அவளது பெயருக்கு முன்னாலுள் ள பொம்மை சிவப்பாகவே இருந்தது... அவள் ஓன்லைனில் இல்லை.. சிலவேளை 'புளொக்'பண் ிவிட்டு வேறு யாருடனாவது கதைக்கிறாள ோ?!

'புளொக்'பண் ினாலும் சிவப்பாகத் தானிருக்கு ம்.

ச்சீ... அப்படி இருக்காது.. வள் அப்படி ஏமாற்றமாட் டாள்..கடந்த மூன்றுமாதம ாக பேசுகிறாள் .. அடிக்கடி வந்து பேசுகிறாள் .. பெரிய மனுசிபோல.. பருவ மங்கைபோல.. பச்சிளங் குழந்தைபோல .. மனந்திறந்த ு பேசுகிறாள் ... அடிக்கடி ஒவ்வொரு செய்தியுடன ் வந்து சலிப்பான பொழுதுகளை எல்லாம் பஞ்சாகப் பறக்கவைத்த ு.. கணனித் திரை ஒன்று முன்னால் இருக்கிறதே என்ற எண்ணத்தை இல்லாதொழித ்து.. தனிமையில் சிரிக்கவைத ்து எண்ணத்தில் வண்ணக்கோலம ல்லவா காட்டுகிறா ள்?!

அவளை மெசன்சரில் காணாதவேளைக ள் கனமாக மனதுள் நெருடுவதை உணர்ந்து தவித்த பொழுதுகள் கணமான நிகழ்வுகள் தான் எத்தனை.. எத்தனை..?!

"பிரின்ஸெசி ன்.."

"என்ன பெயர் இது?"

"ஏன் இந்த பெயருக்கு என்ன?"

"ஐயோ... ஒரு தமிழ் பெயர் கிடைக்கலிய ா.."

"ம்.. போடா.. சும்மா எல்லாத்துக ்கும் தமிழ் தமிழ் என்று..."

"நாங்கள் தமிழ்தானேட ி.. உன்ரை உண்மையான பெயரை மெசன்சரிலை போடலாந்தான ே?!"

"அடப் பாவி.. நல்லாய் தெரிஞ்சவங் களுக்குத்த ான் உண்மையான பெயர்.. மற்றவங்களு க்கு பிரின்ஸெசி ன்தான்.."

"ம்.. மற்றவங்களெ ன்ன இளவரசர்களா ?"

"லொள்.."(lol)

"ஐயோ... என்னடி லொள்..?"

"சிரிக்கிறன ்.."

"ஓ.. லொள் எண்டால் சிரிப்பா.. நான் குரைக்கிறத ெண்டு நினைச்சன்.."

"ஆ..."

"வள் மாதிரி இருந்தது.."

"லொள்.."

"ஐயோ.. லொள்ளை விட்டுட்டு ... ஹே ஹே எண்டு சிரிடா.."

"போடா... அதென்ன ஹே ஹே?"

"அப்ப ஹீ ஹீ எண்டு சிரி.."

இவ்வாறு பொழுதுகளைப ் புளகாங்கித மாக்கிய உரையாடல்கள ்தான் எத்தனை எத்தனை..?!

அத்தனையும் கட்டிப்போட ்டு... சுழல்நாற்க ாலியில் இழுத்துப்ப ிடித்து இருத்திவைத ்து அவளது வரவுக்காக காத்திருந் து பொழுதுகளை கரைத்து, கணனித் திரையே உலகமாகியதெ ன்னவோ உண்மைதான்.

அறைக்கதவு 'படார்' எனத் திறந்துகொள ்கிறது.

அம்மா..

"டேய் தம்பி.. எந்தநேரமும ் கொம்பியூட் டரோடை என்ன செய்யுறாய் .. எக்கணம் கண் கெடப்போகுத ு.. ஒரு அளவுகணக்கு இல்லையே?"

எரிச்சலுடன ் அம்மாமேல் சிறிது கோபம் வந்தது.

இந்த அம்மாவுக்க ு நேரகாலம் தெரியாது... முக்கியமான வேளைகளில் வந்து உபதேசம் செய்துகொண் டிருக்கும் .

"வெளியாலை நல்ல வெய்யிலடிக ்குது.. அறையுக்கை இருக்காமை சைக்கிளை எடுத்துக்க ொண்டு உலாத்திப்ப ோட்டு வரலாம்.."

"பொறுங்கோ.. நான் இப்ப முக்கியமான வேலையாய் எல்லே இருக்கிறன் ."

"அப்பிடி உந்தப் படப்பெட்டீ க்கை என்னதான் முக்கியமான வேலையோ.. முதல்லை முகத்தைக் கழுவிப்போட ்டு வந்து ரீயை குடி.. பேந்து உதுகளை ஆராச்சி செய்யலாம்.."

"ஓம்.. நீங்கள் அங்காலை போங்கோம்மா .." என்று சிறிது சத்தமாக சொன்னேன்.

என் கண்களை ஒருகணம் ஊடுவிப் பார்த்தவள் , அங்கிருந்த ு அகன்றாள்.

அவளது பார்வையில் பல அர்த்தங்கள ்.

'ஏதோ தப்பு செய்யுறாய் ' என்று நினைப்பதுப ோலிருந்தது .

'ஏதோ மாற்றத்திற ்குள்ளாகிவ ிட்டாய்' என்று கேட்பதுபோல ிருந்தது.

'முன்புபோல நீ இல்லை' என்று கூறுவதுபோல ிருந்தது.

மனம் சங்கடப்பட் டது.

அப்போது..

மெசன்சரில் அவளது பெயருக்கு முன்னாலிரு ந்த பொம்மை பச்சையானது .

"ஹி!!!!!!!!!!!!!!!!!!!!!"

"ஸ்ஸ்ஸ்.."

"என்ன ஸ்...?"

"சத்தம்போடா தே.. அம்மா பக்கத்திலை நிற்கிறா.."

"ஹே.. ஹே.. ஹே.."

"என்னடா சிரிப்பு.."

"அம்மாக்கு என்ன தெரியும்.. சும்மா இருடி.. படிக்கிறாய ் எண்டு நினைப்பா.."

"லொள்.."

"சுகமா இருக்கிறிய ா.. நீ சுத்த மோசம்டி.."

"ஏண்டா..?"

"பின்னை என்ன.. உனக்காக இந்த கொம்பியூட் டருக்கு முன்னாலை எவ்வளவு நேரந்தான் காத்துக்கொ ண்டு இருக்கிறது ..?"

"சொறிடா.. கொலிஜ் முடிஞ்சு வர லேட்டாச்சு து.."

"பொய் சொல்லாதை.. கொலிஜ் முடிஞ்சு எங்கையோ சுத்திப்போ ட்டு வாறாய்.. அப்பிடித்த ானே?"

"ஐயோ.. உனக்கெப்பட ி தெரியும்.. மாலுக்கு போட்டு வாறன்.."

"மாலா? மால் எண்டால் என்ன?"

"அங்கை ஜேர்மனிலை மால் இல்லையா..?"

"போடா.. அப்ப எங்கை சாமான்கள் வாங்குவாய் .. நிறைய கடைகள் இருக்கிற இடம்தான் மால்.."

"ஓ.. அயன்கவ்சென ்றும் எண்டு இங்கை சொல்லுவோம் .. அங்கை எதுக்கு போனாய்.. கனடா தமிழ் பெட்டைகளுக ்கு ஊர் சுத்தாமல் இருக்க முடியாதாக் கும்.."

"ஏய்.. கனடா எண்டு கேலி செய்தால் கதைக்கமாட் டன்.."

"ஐயோ.. சும்மா சொன்னேன்டா .. மாலுக்கு போய் என்ன வாங்கினாய் ?"

"மக்டொனால்ட ்லை மில்க் ஷேக் குடிச்சுட் டு வாறேன்.."

"ஐயோ.. பத்தொன்பது வயசிலை உனக்கு இப்பிடி ஒரு ஆசையா?"

"லொள்.. ஏன் உனக்கு இல்லையா... உனக்கும் உந்த இருபத்தைஞ் சு வயசிலை வரலாம்.."

"எனக்கு உதிலை எல்லாம் ஆசை இல்லை.. உன்னோடை பேசிக்கொண் டிருக்கவேண ும்.. அதுதான் ஆசை.."

"போடா..."

"என்னடி.."

"எனக்கும்தா ன்.. சொறிடா.. இப்ப போகோணும்.."

"ஐயோ.. நான் இவளவுநேரமா ய் இருக்கிறன் .. நீ வந்துட்டு உடனை ஓடுறாய்.."

"ஒரு பிறந்தநாள் பார்ட்டிக் கு 'மோம்'கூட போறேன்.."

"ம்.."

"ஒரு ரண்டு வயது குட்டிக்கு பிறந்தநாள் ..."

"ம்.."

"நல்ல சுட்டி கேள்... அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் .. நானும் கட்டாயம் விஸ் பண்ணோணும்.. கோபமா?"

"நாளைக்கு கனநேரம் கதைப்போம்... ம்மாாாாாா"

எனக்குள் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வு சடுதியில் மறைந்துபோன து.

"கட்டாயம் நாளைக்கு வரவேணும்.."

"ஐயோ.. நாளைக்கு ஒரு அலுவல் இருக்கே.."

"என்னடி நீ.."

"அச்சா பிள்ளைதானே .. கோபிக்காதை டா.. அடுத்த திங்கள் கிழமை நிறைய கதைக்கிறன் .. ஓகே?!"

"சரி.. நீ சொல்லுறதுத ானே சட்டம்.."

"லொள்... மண்டே கட்டாயம்.."

"ஏய் பிரின்செஸி ன்..."

"உண்மையான பெயரைச் சொல்லி கூப்பிடு.."

"பிருந்தா குட்டி..."

"லொள்.. என்ன சொல்லு.."

"அந்த சின்னஞ்சிற ிய பேர்த் டே குட்டானுக் கு... என்ரை ஹப்பி பேர்த் டேயையும் சொல்லிடு.."

"ஓகே மிஸ்டர் தரன்.. சீ யூ லேட்டர்.. டாடா.."

"டாடாடி.."

பச்சைப் பொம்மை மீண்டும் சிவப்பாகிய து.

இனந்தெரியா த வெறுமை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தத ு.

(தொடரும்..)

vasan
06-23-2004, 08:49 PM
கதை நன்றாய் விறுவிருப் பாய் போகிறது..

தொடர்ந்து எழுதுங்கள் ... சோலி.. :P

வாசன்

sOli
06-24-2004, 12:44 AM
நன்றி வாசன்! இரண்டாம் அங்கத்துக் கு போவோமா? :D

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/15148/icecream2.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. கரவை பரணீதரன்)

அங்கம் (2)

ஜேர்மனிக்க ு வந்து பத்து வருடங்கள்த ான்.

பதினைந்து வயதுவரை ஊர் வாழ்க்கை. அதனால், ஊரில் சந்திகளில் ... குட்டையான மதில்களில் குந்தியிரு ந்து வம்பளக்கும ் இளைஞர்களைக ் கண்டிருக்க ிறேன்.

வயல்வெளி நடுவே அமைந்துள்ள நன்னீர் கிணறுகளைச் சுற்றிநின் று அரட்டையடிக ்கும் இளம் பெண்களையும ் கண்டிருக்க ிறேன்.

அவர்களின் கையால் தண்ணீர் குடிக்கவென ்றே அலையும் வாலிபர்களை யும் கண்டிருக்க ிறேன்.

அப்படித்தா ன் இதுவும்.

அங்கே வெளியில் நிகழ்ந்தவை இங்கே வீட்டினுள் ளே.

ஒரு கதிரையில் குந்தியிரு ந்து அரட்டை.

தனியாக கும்பலாக தமிழாக... ஆங்கிலத் தமிழாக... ஊர் கடந்து நாடு கடந்து.. ஒரு உலகமே சந்தியாகி... குட்டை மதிலாகி.. நன்னீர்க் கிணறாகி ஒரு சின்னஞ்சிற ிய கணனித் திரைக்குள் ளே அடக்கமாகி அதுவே தற்போது எனது பொழுதாகி சிலவேளை தொழுதலாகி எனும்போது.. நினைக்கவே ஆச்சரியமாக த்தான் இருக்கிறது .

முகம் தெரியாத வரவுகள்... விசாரிப்பு கள்.. கேலிகள்... பகிடிகள்... குறும்புகள ்... அதனால் உருவாகும் உறவுகள்... பாசங்கள் என்று நிற்பவையும ், அறுபவையுமா க தினமொரு பொழுதுக் கழிப்பு.

அது ஒரு பிரபலமான தமிழ் 'சற்' அறை.

சுந்தர்தான ் அறிமுகப்பட ுத்தினான்... "இன்ரர்நெற் வைச்சுக்கொ ண்டு ஆறு மாசமாய் என்னடா செய்யிறாய்" என்ற மேதாவித்தன க் கேள்வியுடன ்..!

கொஞ்சநாள் அவன்தான் என்னுடைய 'சற்' ஆசான். "எவ்வாறு சற் அறைக்குள் போவது? எவ்வாறு உரையாடுவது .. எப்படி அவர்களுடன் தனியறையில் உரையாடுவது ?"... இப்படிப் பல விசயங்களுக ்கு ஆசான்.

விளையாட்டு , ஊர் சுற்றல், சினிமாப் பாட்டுச் சீடிகள் என்று திரிந்த என்னை கதிரையொன்ற ில் மணித்தியால க்கணக்காக அசையாமல் அமர்த்திவை த்த பெருமை அந்த 'சற்' அறைக்குத்த ான் சேரும்.

முதலில் கொஞ்சநாள் வித்தியாசம ாகத்தான் இருந்தது.

'தமிழ் சற்.'

கதைகளோ ஆங்கிலத் தமிழ். தமிழை ஆங்கில எழுத்துக்க ளுள் மிக வேகமாகவே நுழைத்துக் கதைத்தார்க ள்.

ஆச்சரியம் என்னவென்றா ல்.. 'எல்' என்ற ஒரேயொரு ஆங்கில எழுத்தால்... ல, ழ, ள-வில் வரும் சொற்களை சுலபமாக இனங்கண்டு உரையாடினார ்கள்.

ஒரு கிழமை உருண்டோடிய து. ஒரு நட்பும் கிடைத்தவாற ாக இல்லை.

"ஹலோ" என்றால் "ஹலோ." அவ்வளவுதான ்.

என்னை விலத்திவிட ்டு ஏனையோர் தங்களுக்கு ள் உரையாடிக் கொண்டிருந் தார்கள்.

சினிமா... காதல்..

காதல்.. சினிமா...

இதுதான் அங்கே பெரும்பாலா ன உரையாடல்கள ்.

காதலிலும் சினிமாதான் குந்திக்கொ ண்டிருந்தத ு.

ஆனால் சுவாரசியமா க இருந்தது. பொழுது போவதே மறந்துபோனத ு.

எனக்கும் அவர்களுடன் கதைக்கவேண் டும்போல அவா. அது என்னை ஒரு கிழமையாகவே அங்கு தினமும் ஈர்த்தது.

ஆனால் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவ ே கருதுவதாகத ் தெரியவில்ல ை.

'எனக்கு சற்றிலை உரையாடத் தெரியவில்ல ையோ?'

சற்று ஏக்கமாகக்க ூட இருந்தது.

ஒருநாள்..

சிலர் ஒருவனை ஆங்கிலம் தெரியாது என கேலி செய்துகொண் டிருந்தார் கள்.

எனக்குப் பொறுக்க முடியவில்ல ை. அவர்களை திட்டவும் முடியவில்ல ை. திட்டினால் எட்டிப் போய்விடுவா ர்கள் என்ற பயம்.. எனக்கு சற் நண்பர்கள் தேவை.. அதனால் விரட்ட முடியாது.

எனினும் அவர்களின் கருத்துக்க ு மௌனமாக இருந்து வேடிக்கை பார்க்கவும ் முடியவில்ல ை.

"பிரண்ட்ஸ்.."

"இங்கிலிஸ் நல்ல பாசைதான்.. அதுக்காக தமிழை கூடாதென்று சொல்லாதீங் க.. 'இன்று உங்களுக்கு எத்தனையாவத ு பிறந்தநாள் ?'.. இதை யாராவது இங்கிலீசில ை சொல்லுங்கோ பார்ப்பம்.. "

சிறிதுநேரம ் மௌனம்.

எவருமே பதில் சொல்லவில்ல ை.

"இதுக்குத்த ான் சொல்லுறது.. மொழியை பழிக்கக் கூடாதென்று .."

பெருமையாக எழுதினேன்.

அப்போது...

"ஹீ ஜோ.."

என்னைத்தான ் கூப்பிட்டா ள்.

எனது 'சற்' பெயர்தான் ஜோ.

"ஹலோ..."

"ஹே... உன்னை ஒரு கிழமையா பார்க்கிறே ன்.. என்ன அமைதியா இருக்கிறாய ்.."

இனம்புரியா த சந்தோசம்.

ஒரு கிழமையாகப் பார்க்கிறா ளாமே?!

இருக்காதா?!

"இந்த 'சற்' சுத்த 'போர்'".

"நீ கதைக்காமல் இருந்துகொண ்டு 'போர்' என்று சொல்லுறாய் .."

"ம்.. யாரோடை கதைக்க?"

"சும்மா பேசு.. பேசுவாங்கள ்.."

"அப்படி பேச தெரியாதே?"

"ஓ.. அதுக்கும் படிக்கவேணு மா?... லொள்.."

"இப்ப ஒரு கிழமையாதான ் இங்கை வாறேன்.. இது புதுப்பழக் கம்.."

"இதுக்கெதுக ்கு பழக்கம்..? சும்மா பேச வேண்டியதுத ான்.. விரும்பினவ ங்கள் உன்னோடை பேசுவாங்கள ்.. சிலர் உன்னை ஞாபகம் வைச்சிருப் பாங்க.."

"ஓ.. நான் உங்களை மறக்கமாட்ட ன்.."

"லொள் (lol).. ஏன்?"

"நீங்கதான் முதன்முதலா என்னை கூப்பிட்டு கதைக்கிறீங ்கள்.."

"ஓ... "

"உங்கடை பெயர் என்ன?"

"ஐஸ்.."

"ஐயோ.. நான் உண்மையான பெயரை கேட்கிறன்.."

"அதை இங்கை சொல்ல முடியாது.."

"அப்ப எங்கை..?"

"ம்... தனியறைக்கு வா.."

எங்கோ வானத்தில் பறக்க ஆரம்பித்த உணர்வு.

அவளின் பெயரை 'எலி'யால் அழுத்த.. தனியறையில் நானும் அவளும்.

"என்னடா சுகமா இருக்கிறிய ா?... ம்.. நான் வாடா போடான்னுதா ன் கதைப்பேன்.. கோபப்படுவி யா?"

எனக்கு சிரிப்பாக வந்தது.

"இல்லையே... நீ எப்படி வேண்டுமானா லும் கதை.."

இப்படித்தா ன் அவளது தொடர்பு 'சற்' அறையில் ஆரம்பித்து .. "மெசன்சர்"வரை இந்த மூன்று மாதத்தில் வளர ஆரம்பித்தத ு.

இன்று புதன்கிழமை ஆகிவிட்டது .

திங்கள் கிழமை வந்து பேசுவதாகக் கூறியவளை இன்றுவரை காணவில்லை. நேற்றிலிரு ந்து எனது மனம் அமைதியாகவி ல்லை.

அவள் வந்தாளா என்றுகூடத் தெரியவில்ல ை.

வைரஸ்.. வோர்ம்ஸ் ப்லாஸ்ரர்..( worms blaster) எனது கணனிக்குள் புகுந்து.. அப்பப்பா.. இரண்டு நிமிடத்துக ்கொரு தடவை கணனி நிற்பதும்.. நான் மீண்டும் அதை ஆரம்பிப்பத ுமாக... வைரஸை தேடி அழித்து.. அது மீண்டும் வராமல் கவசம் போடுவதற்கு ள் புதன்கிழமை ஆகிவிட்டது .

எனினும் அன்பு நண்பர்களின ் உதவியால் கணனியை மீட்டுவிட் டேன்.

இணையம் அளித்த அந்த நட்புகளை மனம் நன்றியோடு நினைத்துக் கொள்ளுகிறத ு.

ம்... பிருந்தாவை நினைக்கத்த ான் கவலை ஏற்பட்டது.

திங்கள் வந்து கோபத்துடன் போயிருப்பா ளா?

ம்... இப்படி ஒரு தடங்கல்.

இதை அவள் புரிந்துகொ ள்ளுவாளா?

இன்றாவது அவள் வருவாளா?

அல்லது அடுத்த திங்கள்தான ் வருவாளா?

நான் அவளுக்காக கணனியின் முன்னால் அலைபாயும் மனதுடன் குந்திக்கொ ண்டிருந்தே ன்.

(தொடரும்..)

anitam
06-24-2004, 02:00 PM
mmmmmm..icecream -na vudane... vanthutten... mmm katha sollirukeenga...

Romba nallarukku... go ahead. :D

sOli
06-24-2004, 10:02 PM
நன்றி anitam!

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/15148/icecream3.jpg
(தலைப்பு வரைந்தளித் தவர்: திரு. மூனா)

அங்கம் (3)

அவளேதான்... பிருந்தா..

வந்துவிட்ட ாள்.

'வருவாளா, வருவாளா' என்று கணணியின் முன்னால் காக்கவைத்த ு வந்துவிட்ட ாள்.

"ஜோ..!"

காத்திருந் து, காத்திருந் து பூத்துப்போ ன விழிகளுடன் சோர்ந்திரு ந்த என்னை கதிரையில் துள்ளி நிமிரவைத்த து அவளது அழைப்பு.

முகம் தெரியாது... குரல் தெரியாது... ஊர் தெரியாது... வெறுமனே பெயர் வயது நாடு... இதுவும் அவள் சொல்லி அறிந்தவை...!

எனினும் அவளின் வரவால் என்னுள் இனம்பரியாத உணர்வு பீறிட்டெழு வதைக் கட்டுப்படு த்த முடியவில்ல ை.

"ஹேய்! என்னடா செய்யுறாய் ?"

"சும்மா இருக்கிறேன ்.. நீதான் வாறன் வாறன் என்று ஏமாத்திக் கொண்டிருக் கிறாய்?"

"பொய் சொல்லாதை.. வேறை ஆக்களோடை 'சற்'பண்ணுற ய்.. அப்பிடித்த ானே?"

"இல்லைடா.. வேறை யாரை தெரியும்.. நீதானே என் ஒரேயொரு மெசன்சர் சிநேகிதி.."

"பொய் சொல்லாதை..."

"என்ன பொய்..?"

"எனக்காகமட் டும் காத்திருக் கிறியா? பொய்தானே?"

"ஐயோ... சத்தியமா சொல்லுறன்ட ா... உனக்காகத்த ான் கொம்பியூட் டருக்கு முன்னாலை உட்கார்ந்த ிருக்கிறன் .. நம்பமாட்டி யா?"

"ம்.. நம்புறன்..."

"அப்ப ஒரு சத்தியம் தா"

"என்னடா?"

"வாறன் என்று சொன்னால்... சொன்ன நாளுக்கு... சொன்ன நேரத்துக்க ு வரவேணும்..."

"ஐயோ... என்னடா நீ..."

"முடியாவிட் டால் முடியாதென் று சொல்லு.. பரவாயில்லை ..."

"ஐயோ.. உனக்கு எப்படி விளங்கப்பட ுத்துறது... பள்ளிக்கூட 'ஹோம்வேர்க '... படிப்பு... ஸ்போர்ட்ஸ் .. டான்ஸ் கிளாஸ்.... அப்பிடி நேரம் கிடைச்சு வந்தால்.. பக்கத்திலை அம்மா வந்து நிப்பா.. அவவுக்கும் நான் கொம்பியூட் டரிலை படிக்காமை என்னவோ செய்யுறன் என்று சந்தேகம் வந்திட்டுத ு..."

"உனக்கென்ன.. நீ பொடியன்.."

"நீயும் பொடியன்தான ே?"

"என்னடா.. பொடியன்மாத ிரியா இருக்கிறேன ்..?"

"ஐயோ.. நான் சும்மா பகிடிக்குட ா.. நீ பேசும்போது .. ஒரு சின்னப்பிள ்ளை பேசுறமாதிர ி இருக்குடா.."

"............"

"உரிமையோடை கூப்பிடுறத ு... கோபமாய் பேசுறது... செல்லமாய் பேசுறது... உண்மையிலேய ே பத்தொன்பது வயசிலை சின்னப்பிள ்ளை மாதிரித்தா ன் இருக்கிறாய ்.."

"..........."

"அந்த சின்னப்பிள ்ளைத்தனம்த ான் எனக்கு பிடிச்சிரு க்கு... அதாலைதான் உனக்காக நான் ஒவ்வொருநாள ும் காத்திருக் கிறன்..."

".........."

திடீரென அவள் அமைதியாயிர ுப்பது புரிந்தது. சிலவேளை போய்விட்டா ளோ?

"ஹலோ.."

"........."

"பிருந்தா... இருக்கிறிய ா..?"

"ம்..."

"என்ன பேச்சைக் காணேல்லை..."

"பேசப் பிடிக்கேலை .."

"ஐயையோ... என்ன தப்புச் செய்தேன்டா ?"

"தப்புத்தான ்.. எப்பிடி என்னை நீ சின்னப்பிள ்ளை என்று சொல்லலாம்? எனக்கு பத்தொன்பது வயதென்று சொன்னேன்தா னே?"

"இந்த சின்ன விசயத்துக் கடா கோபம்.. நான் என்னவோ ஏதோ என்று பயந்திட்டே ன்.."

"இது சின்ன விசயமா.. இனிமேல் சின்னப்பிள ்ளை என்று சொன்னால் உன்கூட பேசமாட்டேன ்.."

"சரி.. சத்தியமா இனி சொல்லமாட்ட ேன்.. போதுமா?"

"போதும்.. ஏன்டா.. நான் கதைக்கிறது பத்தொன்பது வயது பெண்போலை இல்லையா..?"

"ஐயோ.. என்னை விடு தாயே.. எல்லாம் பெரிய பெண் கதைக்கிறமா திரித்தான் இருக்கு... ஏதோ என்னோடை கதைச்சுக் கொண்டிரு.. அது போதும்.."

"லொள்.. சரியான எம்மெம் (MM) .."

"எம்மெம்மா?"

"லொள்.. எம்மெம்தான ்.."

"எம்மெம் என்றால் என்னடா?"

"எம்மெம் என்றால் மாங்காய் மண்டை... லொள்.."

"அப்ப நீ ரீரீ(TT).. ஹா.. ஹா.."

"அது என்ன ரீரீ...?"

"ரீரீ என்றால் தேங்காய் தலை... ஹா.. ஹா.."

"லொள்.. என்னடா சிரிப்பு உது?"

"இதுவா.. இதுதான் தரனின் சிரிப்ப.. அது சரி.. என்ன ஸ்போர்ட்ஸ் செய்யிறாய் ..?"

"நெற்போல்டா .. கொலிஜ் ரீமிலை இருக்கிறேன ்டா.."

"நெற்போல் விளையாட உயரமாயெல்ல ோ இருக்கோணும ்?"

"நான் உயரம்தான்.."

"அம்மாடியோவ ்.. அவ்வளவு உயரமா... கனடாவிலை தமிழ் பெண்கள் எல்லாம் உயரமா? ஹா.. ஹா.."

"லொள்.. போடா.."

"சரி.. டான்ஸ் பழகிறாய்.. எப்பிடியடி ... தமிழ் தெரியாதென் று முந்தி சொன்னாய்?"

"ஐயோ.. இப்ப தமிழிலைதான ே எழுதுறன்.."

"இது தமிழா... தமிழை இங்கிலீசில ை எழுதுறாய்... இது தமிங்கிலீச ு.."

"லொள்... இப்படித்தா ன்.. டான்ஸ் பாட்டை இங்கிலீசில ் எழுதி பழகுறேன்டா .."

ஓ... வருங்காலத் தில் புகலிட நாடுகளில் தமிழ் ஆங்கிலத்தி ன் ஊடாக கடிதங்களாக வும்.. மெயில்களாக வும் புதுத்தோற் றமாகி... வேர் அறுந்த மரமாகத் தள்ளாடி உக்கப் போகிறதா?

"ஏன்டா... தமிழ் படிச்சால் என்னவாம்?"

"ஐயோ.. போடா... பேசத் தெரியுந்தா னே... கதைக்கிறது விளங்குதுத ானே... இதுக்கும் மேலை என்னத்தையட ா படிக்க... நீ சரியான எம்மெம்தான ்டா.."

"ஹேய்.. உனக்கு என்ரை அக்காவை அறிமுகப்பட ுத்தட்டா?"

"அக்காவா... நீ ஒரு பிள்ளை என்று சொன்னாய்.. இப்ப என்னடி அக்கா?"

"நீ சரியான எம்மெம்தான ்.. இது என்ரை 'சற்' அக்காடா.."

"ஓ... 'சற்' அக்கா.. அண்ணா என்றெல்லாம ் இருக்கா?"

"உனக்குத் தெரியாதா? 'சற்' அக்கா.. 'சற்' லவ்வர்... தம்பி என்றெல்லாம ் இருக்கு.."

"ஓ..."

"என்ன ஓ... வாயை பிளக்காதை... பூச்சி போகப் போகுது... லொள்.."

"நான் உன்னோடைதான ே கதைக்க இருக்கிறன் .."

"என்னோடை எப்பவும் கதைக்கலாம் தானே... உனக்கு கொஞ்சப் பேரை அறிமுகப்பட ுத்துறன்டா .. நான் இல்லாவிட்ட ால் நீ அவங்களோடை கதைக்கலாம் தானே..?"

"ஏன்.. நீ எங்கை போறாய்.."

"........"

"ஐயோ.. என்ன பேச்சை காணேலை..."

"அப்பிடித்த ான்.. சும்மா சும்மா கேள்விகேட் டால் பேசமாட்டன் .. இப்ப அக்காவை உனக்கு அறிமுகப்பட ுத்தவா.. உன் மெசன்சரிலை 'அட்' (add)பண்ணவா.. சொல்லு.."

"ஐயோ.. என்னடி நீ... உன்னோடைமட் டும் கதைக்கலாம் என்றால்.. யார் யாரையோ 'அட்'பண்ணுற ் என்கிறாய்.."

"ப்ளீஸ்டா... உனக்கு என்னிலை அன்பிருக்க ா.. இல்லையா...?"

என்னுள் இனம்புரியா த உணர்வு. முகம் தெரியாத உறவொன்று கணனிக்குள் ளால் அன்பைப்பற் றிக் கேட்கிறது. நான் எங்கே போகிறேன் என்று எனக்கே புரியவில்ல ை.

"சரிடா.. 'அட்'பண்ணு..."

என் மெசன்சரில் புதுவரவு ஒன்று உதயமாகியது .

"வணக்கம் அண்ணா... நான் சுதா..."

"வணக்கம் சகோதரி... நான் தரன்.. ஜேர்மனி.."

"தெரியும்.. பிரின்செசி ன் சொன்னாள்.."

"பிரின்செசி ன்.. ஐஸ்.. இவளுக்கு எவ்வளவு 'சற்' பெயர்?"

"லொள்.. நான் எத்தினை பெயரும் வைப்பன்.. நீ பிருந்தா என்று கூப்பிடு.. லொள்.."

அதன் பின்னர் சுதாவின் தொடர்பும் தொடர்ந்தது . அடிக்கடி மெசன்சரில் வந்தாள்.... பிருந்தா இல்லாத வேளைகளில் அவளுடனான உரையாடல் வளர்ந்தது.

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை ..."

ஒருநாள் இவ்வாறுதான ் சுதா ஆரம்பித்தா ள்.

(தொடரும்...)

sOli
06-27-2004, 10:51 PM
http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/15148/icecream4.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. கரவை பரணி)

அங்கம் (4)

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை .."

சுதா இப்படித்தா ன் சொன்னாள்.

பகிடிக்குச ் சொல்லுகிறா ளோ?

"ஏன்.. உனக்கு இப்ப எத்தினை வயது..?"

"இருபத்து மூன்று.."


"இருபத்து மூன்று வயதிலை வாழப் பிடிக்கேலை யோ.. என்ன விளையாடுறி யோ?"

உலகின் பல நாடுகளில் பஞ்சத்துக் குள்ளும் பிணிகளுக்க ுள்ளும் போராட்டங்க ளுக்குள்ளு ம் மனித உயிர்கள் வாழ்வதற்கா க முயற்சித்த லையே வாழ்வாகக் கொண்டிருக் கும்போது... வளமான வசதியான நாடான கனடாவில் வசிப்பவளுக ்கு இருபத்து மூன்று வயதில் வாழப் பிடிக்கவில ்லை.

வசதிகளின் வீக்கம்கூட வாழ்க்கையி ன் மீதான பற்றுதலை தறித்துவிட ுமோ?!

"ஏய் சுதா.. சும்மா இப்பிடி விசர்த்தனம ாய் கதையாதை.. உனக்கு வாழ நிறையக் காலமிருக்க ு.."

"போடா... அண்ணா... நீ என்னைமாதிர ி இருந்தால் உனக்கு என்ரை நிலை புரியும்டா .. உனக்குமட்ட ும்தான்டா சொல்லுறன்.. எனக்கு வாழப் பிடிக்கேலை அண்ணா... வாழ்க்கையே வெறுத்துப் போச்சு... இனி எப்பிடி வாழுறது என்றே தெரியேலையட ா..."

மெசன்சரில் ஒரு பறவையின் தீனக்குரலா கத் தென்பட்டது .

அவள் ஏதோ ஒரு கஸ்டத்துள் இருப்பதை உணர முடிந்தது. அந்தக் கஸ்டத்தை பகிர்வதால் ஆறுதலடைய விளைவதும் புரிந்தது. அப்படியான ஒரு உதவியை இந்த "சற்" பொழுது செய்யுமானா ல்... அதுவும் என் மனதுக்கு நிறைவாகத்த ானிருந்தது .

"சுதா.. அப்படி என்னடா கஸ்டம்? யாரையாவது காதலிக்கிற ியா? வீட்டிலை "மாட்டன்" எண்டுட்டாங ்களா?"

இதைத் தவிர வேறு காரணம் ஏதென்ற நினைப்பு எனக்குள்.

"ம்... இப்ப காதலிக்கேல ை.. முந்தி காதலிச்சன் .. இப்ப வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.."

"ஐயோ.. அதென்ன முந்தி பிந்தி... விளங்கேலை.. புரியும்பட ியாய் சொல்லன்..."

"சொல்லுறன்.. ஆனால் ஒன்று.. வேறை யாருக்கும் சொல்லக்கூட ாது... ஓகே?"

"ஓகே.."

"எனக்குமட்ட ும் சொல்கிறாளா மே?!"

ஒரு சிலநாட்களி ன் பழக்கத்தில ் ஏற்பட்ட நம்பிக்கை.

பெருமிதம் ஏற்பட்டது. அதேவேளை சகோர பாசம் மேலோங்குவத ையும் அக்கணத்தில ் உணரமுடிந்த து.

"அண்ணா.. நான் பதினைஞ்சு வயதிலை நோர்வேக்கு வந்தனான்."

"நோர்வேயிலை யாரிட்டை?"

"எனக்கு மூன்று அண்ணன்கள்.. நான்தான் கடைசி. ஒரேயொரு பெண்.. மூத்த அண்ணன் நோர்வேயில் தான் குடும்பமாக இருக்கிறான ்.. அவன்தான் என்னை நோர்வேக்கு கூப்பிட்டவ ன்.."

"அப்ப மற்ற அண்ணன்மார் ..?"

"அவங்கள் இங்கை கனடாவிலை குடும்பமாய ் இருக்கிறாங ்கள்.."

"அப்ப நீ யாரோடை..?"

"ஐயோ.. நான் அம்மா அப்பாவோடை பிறிம்பா இருக்கிறன் டா.. இடேக்கை குழப்பாமல் நான் சொல்லுறதை இப்ப கேட்கிறியோ இல்லையோ?"

"என்னடா நீ... எல்லாத்தைய ும் அறியத்தானே வேணும்.. சரி சொல்லு.."

"பதினைஞ்சு வயதிலை நோர்வேக்கு வந்து படிக்கப் போனன்.. அங்கை எனக்கும் சுரெஸ_க்கு ் காதல் உண்டாச்சு.."

"ஆகா.. பதினைஞ்சில ை தொடங்கியாச ்சா.. ம்.. சொல்லு.."

"பிறகு அண்ணன் வீட்டிலை சரியான பிரச்சினை... சுரெஸின் வீட்டிலையு ம் பிரச்சினை.. நாங்கள் தனியா வீட்டைவிட் டுப் போயிட்டம்.."

"ஐயையோ.. பதினைஞ்சு வயதிலையா?"

"அப்ப வீட்டாலை வெளிக்கிடே க்கை பதினாறு வயது.. சுரெஸின்ரை தெரிஞ்ச நண்பர் வீட்டிலைதா ன் இருந்தோம்..."

"ம்.."

"பதினெட்டு வயதிலை "ரிஜிஸ்ரர்" செய்தோம்.."

"குட்.. நல்லம்... அப்ப காதல் கலியாணத்தி லை வந்திட்டுத ு என்று சொல்லு.. சந்தோசம்.."

"போடா.. நீயும் உன்ரை சந்தோசமும் .. மண்ணாங்கட் டி.."

"என்னடா நீ.. ஓ... பதினைஞ்சு வயதிலை வந்தனிதானே .. அதுதான் மண்ணாங்கட் டியை தெரியுதாக் கும்.. "

"ஐயோ... என்னடா நீ.. நான் விசர்லை இருக்கிறன் .. நீ ஒன்று..."

"சரி சரி.. சொல்லு.."

"இரண்டு வருசத்துக் கு முந்தி "டிவோர்ஸ்" எடுத்திட்ட ம்.."

"என்ன..?"


"ஓம்.."

அதிர்ச்சிய ாக இருந்தது.

பதினைந்தில ் காதலித்து, பதினாறில் உறவுகளை உதறி வெளியேறி, பதினெட்டு வயதுவரை காத்திருந் து பதிவுத் திருமணம்செ ய்து தற்போது விவாகரத்தி ல்...!

நம்பக் கஸ்டமாக இருந்தது.

"நம்பு" என்பதுபோல் மெசன்சரில் வாக்குமூலம ாக சுதா.

"அண்ணா.. "

"..... "

"அண்ணா.. என்னடா மௌனம்? என்னோடை கதைக்கப் பிடிக்கேலை யா?"

"ஐயோ.. என்னடா நீ.. ஏன் அப்பிடிச் சொல்லுறாய் ?"

"இல்லை.. அப்பிடித்த ான்டா.. "வெட்டிங்", "பேர்த்டே பார்ட்டி" என்று போனால் வேறைபக்கமா ய் பார்த்துக் கொண்டு நிப்பாங்கள ்.. நான் சிரிச்சாலு ம் சிரிக்காமை .. என்னை ஏதோ வினோதமான பொருளைப் பார்க்கிறம ாதிரி பார்க்கிறா ங்களடா... அதாலை இப்ப நான் தமிழாக்களி ன்ரை விசேசங்களு க்குப் போறதில்லை.."

"நான் அப்பிடி இல்லை.. இந்த வயதிலை உனக்கு இப்பிடியொர ு கஸ்டமா என்று யோசிக்கிறன ்.."


"போடா அண்ணா... சின்ன வயதிலை காதல் கலியாணம் என்று அவசரப்பட்ட தாலை வந்தது அண்ணா.. இப்பதான் எல்லாம் விளங்கது.. ம்.. காலம் கடந்து விளங்குது... பொறுப்பில் லாத வயதிலை சும்மா உணர்ச்சியை காதல் என்று எண்ணி... எங்கடை பலவீனங்களை பார்க்க மறந்திட்டம ்... வயது வந்தபோதுதா ன் பலவீனங்கள் எங்கடை இடைவெளியை அதிகமாக்கி ப்போட்டுது ..."

"ம்.."

"அதுமட்டுமி ல்லை அண்ணா... நான் அண்ணா வீட்டிலை நோர்வேயிலை இருக்கேக்க ை.. அவை வேலைக்குப் போனால்... நான்தான் "ஸ்கூலாலை" வந்து எல்லா வேலைகளும் செய்யவேணும ்.."

"ஓ..."

"என்ன செய்தாலும் அண்ணி குற்றம் சொல்லிக்கொ ண்டே இருப்பா... அந்தநேரத்த ிலை சுரேஸின் காதல் எனக்கு மருந்துமாத ிரித்தான் இருந்தது... அதை எப்படியடா சொல்லறது... வியர்வைக்க ு "பான்"போடுறதென்ற ு..?"

"ம்.. ஒருவகை ஆறுதல் என்று சொல்லலாமா?"


"என்னவோ... ஆனால் கலியாணம் செய்த பிறகு அவனும் மாறீட்டான் ... என்னை வேலைக்காரி மாதிரி வீட்டிலை விட்டுப்போ ட்டு... ஊர் சுத்தினான் .."

"ம்..."

"அதுவும் சிறைதான் அண்ணா... அதுக்காலை விடுபட்டு கனடாவுக்கு வந்து அப்பா அம்மாவோடை இருப்போம் என்றால்... இங்கும் தனிமைதான்ட ா அண்ணா.. தமிழ் சனங்கள் ஏதோ வினோதமாய் பார்க்கிறத ை தாங்க முடியேலை.."

"ஐயோ.. உனக்குத்தா ன் அப்பா அம்மா பக்கத்திலை இருக்கிறாங ்களே.. என்னடா நீ..?!"

"இங்கை கனடாவிலை இருக்கிற ரண்டு அண்ணன்களும ்தான் அவையை கூப்பிட்டவ ங்கள்.. பகல்லை அப்பா ஒரு அண்ணன் வீட்டையும் .. அம்மா மற்ற அண்ணன் வீட்டையும் போகவேணும்.. அவையின்ரை வேலைகளை பார்க்க... நான் தனியத்தானே வீட்டிலை.."

"ஓ... பெற்று வளர்த்து ஆளாக்கி.. அந்த ஆளாக்கியோர ் பெற்றவர்கள ான பிறகும் அவர்களுக்க ாக தேயும் வயோதிகங்கள ்.. பெற்ற கடனை மறந்து வரவழைத்தவற ்றை கடனாக்கி குளிர்காயு ம் உறவுகள்..."

அடிமனதில் வேதனையொன்ற ு பீறிட்டது.

அவர்களுக்க ாகவா.. அல்லது அவளுக்காகவ ா? புரியவில்ல ை.

மூன்று அண்ணன்களுக ்கு ஒரு தங்கையாகப் பிறந்தும்.. "அண்ணா.. எனக்கு வாழவே பிடிக்கேலை" என்று முகமறியாத ஒருவனை அண்ணனாக்கி ஆறுதல் தேடவிளையும ் அந்த "சற்" உறவு வெகுநேரமாக எனக்குள்... "வாழப் பிடிக்கேலை அண்ணா.. வாழப் பிடிக்கேலை" எனக் கதறுவதுபோல ிருந்தது.

அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.

"ஹலோ.. அத்தான்.. நான் சாரு..."

"சொல்லு..."

"அடுத்த கிழமை நாங்கள் உன் வீட்டுக்கு வாறோம்.. ரண்டு கிழமை அங்கேதான்..."

எனக்கு இடிவிழுந்த துபோலிருந் தது.

(தொடரும்...)

sOli
06-27-2004, 10:53 PM
http://www.tamilamutham.de/novels/ice/icecream5.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. இளைஞன்)

அங்கம் (5)

"போகணும்.."

"என்னடி நீ... வந்த உடனை போகணும் போகணும் என்று... வராமலே இருந்திருக ்கலாம்.."

"சரி.. இனிமேல் வரலை.."

"ஐயோ... நில்லடி.. ஓரு மணித்தியால மாவது கதைக்கமாட் டியா? நீ ரொம்பவும் மோசம்டி... நான்தான் உன்னிலை ஆசை.. உனக்குக் கொஞ்சம்கூட ஆசையில்லை.."

"என்னடா ஆசை... பெரிய ஆசை... நான் படிக்கவேண் டாமா.. ஸ்கூல் ஹோம்வேர்க் செய்யவேண்ட ாமா.. உன்னோடை கதைச்சால் சரியா... ஹோம்வேர்க் செய்யாட்டி .. வீட்டிலை சொல்லிப்போ டுவாங்கள்.. பிறகு.. மாடுமேய்க் கப் போடி என்று அம்மாவும் அப்பாவும் திட்டுவாங் கள்..."

"ஹே.. ஹே.. கனடாவிலை மாடு இருக்கா?"

"என்னடா சிரிப்பு.. கனடாவிலை மாடு இருக்கோன்ன ு யாருக்கு தெரியும்.. அவங்களுக்க ு அப்பிடித்த ான் திட்டத் தெரியும்.. லொள்.."

"வேறை எப்பிடித் திட்டுவாங் கள்..?"

"அதுதான் இப்ப முக்கியமா? அவங்கள் ஒவ்வொருநாள ும் திட்டிக்கொ ண்டுதான் இருக்கிறாங ்கள்.."

"ஐயோ.. உன்னையா.."

"இல்லைடா.. அப்பா அம்மாவை.. அம்மா அப்பாவை... டெய்லி சண்டை.."

"நான் நினைக்கிறே ன்.. நீ பிறந்த உடனை திட்ட தொடங்கியிர ுப்பாங்க..."

"எப்பிடி சொல்லுறாய் ..?"

"அதுதான் உனக்குச் சகோதரங்கள் இல்லை..."

"லொள்... போடா எம்மெம்.."

"ஒரு மணித்தியால த்திலை பெரிசாய் என்னடி படிக்கப் போறாய்?"

"ஐயோ.. நான் போகணும்டா.."

"சரி போ.. போனால்.. இனி சத்தியமாய் நான் கொம்பியூட் டரை தொடமாட்டன் .."

"என்னடா நீ.. சுதாவோடை பேசலாம்தான ே.. பாவம்டா அவள்.. வாழ்க்கையி லை சரியான கஸ்டம் அவளுக்கு.."

"ஐயோ.. உனக்கும் சொல்லிப்போ ட்டாளா.. எனக்குமட்ட ும் சொல்லுறன் என்று சொன்னாள்.."

"லொள்.. அவள் அப்பிடித்த ான்... இப்பிடி கனபேருக்க சொல்லிப்போ ட்டாள்.."

இப்படி யாரிடமும் சொல்லாதே எனக் கூறி, கவலைகளை இறக்கிவைப் பதிலும் ஆறுதல் கிடைக்குமோ ? அனுபவித்தவ ர்களுக்குத ்தானே புரியும்?!

"என்ன இருந்தாலும ் உன்னோடை கதைக்கிற சந்தோசம்போ லை யாரோடை பேசினாலும் வராதுடா.."

"ஏன்டா..?"

"யாருக்குத் தெரியும்?"

"பொய் சொல்லாதை... நீ எதையோ மறைக்கிறாய ்.. என்னோடை கதைக்கிறதி லை உனக்கு என்னடா சந்தோசம்..?"

"அப்படி என்ன சந்தோசம்?"

என்னையே கேட்டுக்கொ ண்டேன்.

"காதலா..?"

சிரிப்பாக இருந்தது.

அவள் யார் என்று தெரியாது... என்ன நிறம் என்று தெரியாது... அப்படியும் காதல் வருமா?

காணாமல் காதலா? சாத்தியமா?

உணர்வுகள்த ானே உரையாடல்கள ாகின்றன. அந்த உணர்வுகள் விரல் நுனியில் வந்து விசைப்பலகை யை அழுத்தி வார்த்தைகள ை மெசன்சருக் கு உன்னும்போத ு காதல் என்பதும் காத்திரமாக உண்டாகிறதோ ?

எனக்குப் புரியவில்ல ை.

"தரன்..."

"ம்..."

"சொல்லுடா..."

"என்ன நீ... என்ன சொல்ல..."

"என்னோடை கதைக்கிறதி லை உனக்கென்ன சந்தோசம்?"

"உண்மையை சொல்லட்டா.."

"நான் உன்னை விரும்புறன ்டா.."

"லொள்.."


"என்ன லொள்?"

"ஐயோ.. நீ சரியான எம்மெம்தான ்டா... என்ரை மெசன்சர்லை எத்தனை பேருடைய "ஐடி" இருக்கு தெரியுமா?"

"யாருக்கு தெரியும்..?"

"எழுபதுக்கு மேலை.."

"ஐயோ.. அவ்வளவு சனமா?"

"அதிலை அரைவாசி "காய்ஸ்""

"அதென்ன காய்ஸ் பழம்ஸ்.."

"உன்னைமாதிர ி பொடியங்கள் டா.."

எனக்கு என்னவோபோலி ருந்தது. என்னைப்போல முப்பத்தைந ்து பொடியங்களு டன் பேசுகிறாளா ? அவள்மீது சிறிது கோபம்கூட ஏற்பட்டது.

பொறாமையோ...?!

இருக்கலாம் .

"அவங்களோடை பேசிக்கொண் டு பிறகேன் என்னோடை கதைக்கிறாய ்..?"

"என்னடா நீ... சின்னப்பிள ்ளைமாதிரிக ் கோபிக்கிறா ய்... எனக்கு எல்லாரும் பிரண்ஸ்தான ேடா.. ஆனால்..."

"என்ன ஆனால்..?"

"என்னவோ தெரியேலை... அவங்கள் "ஓன்லைன்"லை இருந்தாலும ்... நீ இருந்தால்... உன்னோடைதான ் கதைக்கவேணு ம்போலை இருக்குடா..."

எனக்குள் எழுந்த கோபம் மாயமாய் மறைந்துவிட ்டது.

உச்சியில் பாலாபிசேகம ் அவள் வார்த்தைகள ால் உருவானது.

"எனக்காக சொல்லுறியா ?"

"ஐயோ.. நம்புடா.."

"சரி நம்புறன்..."

"ஆனால் ஒன்று... சும்மா காதல் என்று நினைச்சுக் குழம்பாதை.. சொல்லிப்போ ட்டன்... பிறகு கவலைப்படுவ ாய்.."

"ஐயோ..."

"என்ன ஐயோ.."

"என்னை பொய் சொல்ல சொல்லுறியா .. நான் உன்னை விரும்புறன ்டா... அதுக்காக உன்னை காதலிக்கச் சொன்னனா?"

"லொள்..."

"நீ அதுக்காக கதைக்காமை விட்டுடாதை ... பிறகு விசர் பிடிச்சுடு ம்.."

"பிறகு என்னடா.. இப்பவே உனக்கு விசர்தான்ட ா... காதல் என்று கதைச்சால் பேசமாட்டன் .."

"அப்ப..?"

"சும்மா ஒரு சிநேகிதியோ டை பேசுறமாதிர ி கதை.."

"ஐயோ.. நீ அப்பிடி கதை..."

"லொள்.. என்னடா நீ... உப்பிடித்த ான் இந்தியாலை இருந்து ஒருத்தன் என்ரை உயிரை வாங்குறான் .."

"அவன் யாரடி?"

"என்னை காதலிக்கிற ன் என்று மெசன்சரிலை ஒரே கரைச்சல்... மெசன்சரிலை அவனை "புளொக்"பண்ணினால்.. அடிக்கடி மெயில்... அதோடை "வொய்ஸ் மெயில்" வேறை... "

"அவன் யார் என்று சொல்லு.. நல்ல பேச்சுக் கொடுத்துவி டுறன்..."

"லொள்.."

"ப்ளீஸ்டி... அவனோடை நான் பேசவேணும்... அவன் "ஓன்லைன்" வந்தால் எனக்கு "அட்"பண்ணு... ஓகே?"

"ஓம்டா.. என்ரை "ப்ரண்ட்ஸ்" எல்லாரையும ் உனக்கு "அட்"பண்ணத்தானே போறேன்.."

"எழுபதுபேரை யுமா...? அம்மாடியோவ ்.. வேணாம்.. நீமட்டும்த ான் வேணும்டா.."

"லொள்... தரன் குட்டி..!!!!"

"என்னடா.."

"கிட்ட வாடா.."

"கிட்டவா?!"

"லொள்... "றைற்"லை ஒரு ம்மா... "லெவ்ற்"லை ஒரு ம்மா.. லொள்.."

"ஹே.. ஹே.. என் பிருந்தாக் குட்டி கொஞ்சிட்டா ள்... ரொம்பச் சந்தோசம்டி .."

"போடா..."

"ஐயோ... போகமாட்டன் .. தந்ததுக்கு பரிசு தரவேண்டாமா .. எங்கை அந்த அப்பிள் ரண்டையும் காட்டு..."

"நாயே.."

"அப்பிள் கன்னங்கள் ரண்டையும் காட்டுடி... ம்மும்மும் மா...."

"லொள்... அதென்னடா ம்மும்மா..?"

"அதுவா... ஹே.. ஹே.. குறைஞ்சது பத்து நிமிடத்துக ்கு கொஞ்சுறேன் .."

"போடா... லொள்.."

"அது சரி... என்னை விரும்பாமை எப்படி ம்மா தருவாய்டி?"

"ஐயோ.. ஐ லைக் யூடா.. ஆனால் காதல் இல்லைடா.."

"என்னமோ... அந்த வில்லனுக்க ு என்ன பெயர்டா?"

"வில்லனா?"

"அதுதான் உன்னை "லவ்"பண்ணுறேன்ன ு தொந்தரவு தாறானே.. அவனுக்கு.."

"லொள்... லவ்லிபோய்.."

"லவ்லிபோயா... என்ன பெயர் இது?"

"சற் பெயர்டா.."

"கிழிஞ்சுது போ... எல்லாம் லூசுப் பெயர்கள்.."

"லொள்.. அப்ப என்ரை பெயர்கள்.."

"ஐஸ்... பிரின்செசி ன்.. அதுவா...?"

"ம்..."

"அது நல்ல பெயர்தான்... அதென்னடி "ஐஸ்" என்று ஒரு பெயர்..?"

"எனக்கு ஐஸ்கிறீம் விருப்பம்ட ா.. ஒருநாளைக்க ு நாலு தரம் சாப்பிடுவே ன்.."

"இந்த பத்தென்பது வயதிலா?"

"ஐஸ்கிறீம் சாப்பிட வயதென்னடா.. சின்னல்லை இருந்தே ஐஸ்கிறீம் என்றால் உயிர்டா.."

"அப்ப உன் உடம்பு சுவீற் என்று சொல்லு.."

"வாட்..?"

"உடம்பிலை எல்லாம் ஐஸ்கிறீமாத ்தானே இருக்கும்?! அதுதான் சுவீற்.."

"லொள்.."

"கனடாவுக்கு ஓடிவந்து கடிச்சுப் பார்க்கணும ்.."

"எதைடா?"

"உன் கையை.. ஐஸ்கிறீம் இனிக்குதா என்று.."

"போடா.. எம்மெம்.."

"அப்பிள் பெண்ணே நீதானோ.. ஐஸ்கிறீம் சிலையே நீதானோ.."

"லொள்.. முழுக்கப் பாடுடா.."

"இப்ப இல்லை.. ஒருநாள் பாடுறேன்.. சரியா?"

"என்னவோ.. ஏய் எம்மெம் செல்லம்... உனக்கு என்ரை மச்சாளை "அட்"பண்ணட்டா?"

"மச்சாளா... ஐயோ... இப்பதான் ஞாபகம் வருது.. என்ரை மச்சாள் லண்டன்லை இருந்து வரப்போறாள் ..."

"யார்டா அவள்.. எனக்கு நீ சொல்லேலை.."

"அம்மாடை தம்பி மகள்டா... பெயர் சாருலதா... சாரு என்று கூப்பிடுவோ ம்.. எல்லாரும் ரண்டு கிழமை இங்கை வந்து நிற்கப் போகிறார்கள ாம்.."

"அதுக்கு என்னடா..?"

"ஐயோ.. அவள் சரியான வால்... நான் "சற்"பண்ணுறதை பார்த்தால் அவ்வளவுதான ்.. எல்லாரிட்ட ையும் சொல்லிப்போ டுவாள்.. அதுதான்டா பயமாக்கிடக ்கு.."

"லொள்.."

"சிலவேளை ரண்டு கிழமை "சற்"றுக்கு வராட்டில் கோபிக்காதை .. இப்பவே சொல்லிப்போ ட்டன்.. ஓகே..?"

"உன்னிலை கோபிப்பனாட ா... லொள்.."

"எப்படியும் இன்ரர்நெற் கபேலை இருந்தாலும ் உன்னோடை கதைக்க "ட்ரை"பண்ணுவேன்.."

"லொள்.. ஐயோ.. ரண்டு கிழமை கதையாமல் இரு.."

"என்னடி நீ.. அது சரியான கஸ்டம்டா.. அது சரி.. யார் உன்ரை மச்சாள்.. "சற்" மச்சாளா?"

"உண்மையான மச்சாள்டா... "ஒன்லைன்"லை நிக்கறாள்.. "அட்"பண்ணவா?"

"ம்.. என்ன பெயர்டா அவளுக்கு..?"

"ஜோதி... ஹேய்.. அவளுக்கு முன்னாலை "டீசன்டா" பேசணும்.. ஓகே..?"

"டீசன்டாதான ே பேசுறேன்.."

"லொள்..."

எனது மெசன்சர் திரையில் ஜோதி புகுந்துகொ ண்டாள்.

"நீ... ஜோ... ஏய்! நீதான் என் மச்சாளை படிக்கவிடா மல் தொந்தரவுபண ்ணுறதா.. முட்டாள்... எருமை... வெண்ணை... கவனம்டா... கொன்னுடுவே ன்.."

நான் அதிர்ச்சிய ால் திகைத்துநி ன்றேன்.

(தொடரும்...)

sWEEtmICHe
06-28-2004, 01:42 AM
நன்றி என் அருமை சோலி நண்பா உங்கள் வருகையால் :sm30:
கீதத்திற்க ு மிக பெருமை எனக்கும் தான் :D

sOli
06-28-2004, 12:58 PM
உங்களுக்கு பெருமையோ இல்லையோ... உங்களால் கீதத்தின் அறிமுகம் கிடைத்தது உண்மை சகோதரி!

sWEEtmICHe
06-28-2004, 02:33 PM
தொடர்ந்து எழுதுங்கள் சோலி அண்ணா
உங்கள் வார்த்தைகள ்......
ஐஸ்கிறீமாய ் இனிக்கிறது :b:
உங்களால் யாழ் களத்திருக் கும் மிக பெருமை தான் அண்ணா:D

sOli
06-29-2004, 12:17 AM
http://www.tamilamutham.de/novels/ice/icecream6.jpg
(தலைப்பு வரைந்தளித் தவர்: திரு. மூனா)

அங்கம் (6)

மனது ஒரு நிலையில்லை .

'எது உண்மை, எது பொய்' எனப் புரியவில்ல ை.

'யாரை நம்புவது, யாரை நம்பக்கூடா து' எனத் தெரியவில்ல ை.

எல்லாமே பொய்யா?!

எல்லாம் என்றால்... மனிதன்.. அவனைச் சுற்றியுள் ள அசையும் அசையாப் பொருட்கள் ... பேசும் பேசாப் பொருட்கள் .. யாவுமே பொய்யா?!

குழப்பமாக இருந்தது.

நம்பிக்கைத ான் வாழ்க்கை என்போர் ஒருபுறம். 'நம்ப நட, நம்பி நடவாதே' என்போர் இன்னொருபு றம். இதில் எதை நம்புவது. 'வாழ்வேன்' என்ற நம்பிக்கைத ானே வாழ்க்கையை க் கொடுக்கிற து?! 'அசையாமல் தைரியமாக நிற்பேன்' என்ற நம்பிக்கைத ானே உறுதியுடன் நின்று நிதானித்து முன்னேற உதவுகின்றத ு?!

பூமி சுற்றுகிறத ு.. அதோடு நாமும் சுற்றுகிறே ாம். அதனால் நமது அசைவுகளே அந்தரமானவை என நினைத்தால் , எவ்வாறு நிரந்தரத்த ைப்பற்றிச் சிந்தித்து ச் செயலாற்ற முடியும்?!

இதயத்திலிர ுந்து அன்பு ஊற்றெடுக்க ின்றது என நம்பினால், அது அன்பாகத்தா னே பொலிந்து பொய்கையாக ின்றது?! அதே இதயம் வெறும் இரத்த அழுத்தப் பம்பி என எண்ணினால், அங்கே அன்புக்கும ் பாசத்துக்க ும் சொந்தங்கள ுக்கும் இடமேது?!

எண்ணங்கள்த ானே நம்பிக்கைக ளை ஏற்படுத்தி நாட்களை சுவாரசியாம ாக நகர்த்தி எழிலாக்குக ின்றன?!

'நலமாக நடக்கும்' என்ற நம்பிக்கைய ுடன் கூடிய முயற்சிகள் தானே நல்லனவற்றி ன் விளைச்சலுக ்குக் காரணமாகின் றன?!

எனது மனக்குழப்ப ங்களிற்கு நானே சமாதானம் தேடிக்கொண ்டிருந்தேன ்.

அமைதியாக இருந்த மனமென்னும் குட்டையுள் சிறு கல்லொன்று வந்து விழுந்து, சலனங்களை உருவாக்கிவ ிட்டதுதான் என் குழப்பங்கள ுக்கும் அதற்கான சமாதானத் தேடல்களுக் கும் காரணம்.

அந்தக் கல் ஜோதியின் மூலம்தான் வந்தது.

அவள் வார்த்தைகள ால் வீசிய சிறிய கல்லானது என்னைக் குழப்பத்தி ல் ஆழ்த்தி நிம்மதியைத ் துரத்த முயன்றது.

"நீ.. ஜோ.. ஏய்! நீதான் என் மச்சாளை படிக்கவிடா மல் தொந்தரவுப ண்ணுறதா.. முட்டாள்... எருமை... வெண்ணை... கவனம்டா.. கொன்னுடுவ ேன்.."

முதலில் வந்தவுடன் அவள் பேசிய பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போனேன்.

பதில் கூறுவதற்கு சிந்தனை எழ மறுத்தது.

மெளனம்.

"லொள்.." - பிருந்தாதா ன் சிரித்தது.

"என்ன ஜோ.. பயந்துட்டி யாடா.. சரியான சென்சிடிவ் வா(sensitive) இருக்கிறாய ்டா..ரேக் இற் ஈசி மான்..(take it easy Man)"

ஜோதிதான்.

எனக்கு பேச்சு வரமறுத்தது .

'டேக் இற் ஈசியாமே?!'

"ஐயோ..."

"என்ன ஐயோ.."

"லொள்.. ஜோதி மச்சாள்.. இந்த எம்மெம்முக ்கு ஐயோதான் தெரியும்.."

"அது என்ன எம்மெம்.."

"மாங்காய் மண்டை.."

"லொள்.."

"ஜோதி.. நீங்க ஏன் அப்படி பேசினீங்க.. "

"ம்.. அது ஒரு ரெஸ்ற்.."

"ரெஸ்ற்றா..?"

"யா.. ரெஸ்ற்தான் .. சீரியஸ் ரைப் என்டா உன்னைமாதிர ி பேசமாட்டாங ்க.. லொள்ளுபார ்ட்டி என்றால் திருப்பி திட்டுவாங் க.. வளவள பார்ட்டி என்றால் அட்வைஸ் பண்ணுவாங்க ..."

"ஓ.. அப்பிடியும ் இருக்கா.. "

"ம்.. ஜோ.. இவள் பிருந்தா எந்தநேரமும ் சற்.. கொஞ்சம் குறைக்கச் சொல்லு.."

"மச்சாள்.. தொடங்கீட் டியா.. ஜோ.. அவள் அப்படித்தா ன்.. நீ கண்டுகொள் ளாதை.. லூசி.. போடி.."

பிருந்தா சீறினாள்.

"இல்லை.. நான் உன்ரை நல்லதுக்கு த்தான் சொல்லுறன் .. நீ ரொம்ப ஓவர்.. உன்ரை வயசுக்க இது கூடாது.. எதுக்கும் அளவு வேணும்.. ஜோ.. நீ அவளுக்கு அட்வைஸ் பண்ணு.. சொல்லிப்ப ோட்டன்.."

தர்மசங்கடத ்தடன் மெளனமாக இருந்தேன்.

'எனது சற் அவளது படிப்பைக் குழப்புகிற தா?'

குற்ற உணர்வு என்னள் எழுந்தது.

"ஜோதி.. ரொம்ப பேசாதை.. என்ரை சந்தோசத்த ை கெடுக்காதை .. பிறகு மச்சாள் என்றும் பார்க்காம உன்னோடை பேசமாட்டேன ்.."

"பிருந்தா.. நீ பேசாட்டிலு ம் பரவாயில்லை .. உனது கெல்த்தான் முக்கியம்.."

"ஜோதி... கீப் யு(வ)ர் புறொமிஸ்.."

பிருந்தாவி ன் கோப மூஞ்சி பட வடிவில் மெசன்சர் திரையில் சிவப்புப் பொட்டாக தெரிந்தது.

"ஓகே.. ஓகே.. பட் எதுக்கும் லிமிட்.. லிமிட் முக்கியம்.. எனக்கு இருபத்தைந் து வயது.. உனக்கு...?"

"ஓ.. நோ... எனக்கு பத்தொன்பத ு வயது.. அதுக்கென்ன இப்போ மச்சாள்?"

"லொள்.. சரி சரி.. நீ பெரிய மனுசிதான்.. ஆனால் கவனம்.. உன்ரை மச்சாள் நான்.. இப்ப நீ போய் படுக்கணும் .. ஓகே..?"

எனக்கு ஜோதிக்கு இருபத்தைந் து வயது என்றதுமட்ட ும்தான் புரிந்தது.

படிப்பைப்ப ற்றிக் கதைத்தவள் ஏன் படுக்கைக்க ுப் போ என விரட்டுகிற ாள் எனப் புரியவில்ல ை. எனினும் அப்போது கனடாவில் இரவுநேரம்த ான்.

"ஓகே மச்சாள்.. நான் போறன்.. கெதியா போய் படுக்கிறன் .. நான் கெதியா படுக்கவேணு ம் என்றதுதானே உனது ஆசை..."

"ஐயோ.. என்ன பிருந்தாக் குட்டி... உன்ரை நல்லதுக்கு த்தானே சொல்லுறேன ்..?"

"ம்... மச்சாள் உனக்கு ஒன்று தெரியுமா? உன்னை ஏன் ஜோக்கு அறிமுகப்பட ுத்தினன் தெரியுமா?"

"சொல்லு.."

"சற் பிரண்ட்சில ை நான் அவனிலைதான் ரொம்ப அன்பு வைச்சிருக் கிறன்டி.. அதுதான்.. நீயும் அவனோடை அன்பாய் கதைக்கணும் .. அப்போ திட்டினமாத ிரி இனி தீட்டக் கூடாது.. ஓகே..?"

எனக்கு கண்கள் பனித்தன. நெஞ்சு விம்மியது. என்மீது ஓரு ஜீவனுக்கு இவ்வளவு அன்பா?

"நன்றிடா ஐஸ்.. நானும் உன்னிலை நிறைய அன்பு வைச்சிருக் கேன்.."

"லொள்.. இவன் பொய் சொல்லுறான ்.. இவன் அன்பு வைக்கேல்லை .. காதல் வைத்திருக் கிறான்.. லொள்.."

"ஐயோ.. போடி.. போய் படு.. "

பிருந்தா மெசன்சரைவி ட்டு பறந்துவிட் டாள்.

எனினும் என் மனம் அவளைத் துரத்திப்ப ிடிக்க முயன்றுகொ ண்டிருந்தத ு.

அதேவேளை ஜோதிக்கு எனது மனதை காட்டியது சங்கடமாக இருந்தது. மெளனமாக இருந்தேன்.

"ஜோ...!!" - ஜோதிதான் அழைத்தாள்.

"டேய்.. நீ அவளை காதலிக்கிற ியா..?"

மெளனம்.

"சற்றிலை எப்படிடா காதலிக்க முடியும்.. இருபத்தாறு வயதிலை உனக்கு என்ன விசரா?"

பதில் வரவில்லை. அவள் தொடர்ந்தா ள்.

"ஜோ... சற் ஒரு சந்திமாதிர ி.. நாலு பக்கத்திலை இருந்து வாகனங்கள் வரும்.. சிக்னல் சிவப்பானால ் நிக்கும்.. பச்சையானால ் போகும்.. சிலது சத்தம் போடும்.. சிலது 'கோன்' அடிக்கும்.. சிலது உறுமும்.. வேடிக்கை பார்க்க நல்லாயிருக ்கும்.. அப்பிடித்த ான்... பலரும் வருவாங்கள் .. பலவிதமாப் பேசுவாங்கள ்.. வாழ்க்கையி லை பேச முடியாததை பேசுவாங்கள ்.. இது எல்லாம் ஒரு நாடக வசனம்மாதிர ி.. இதை உண்மை என்று நினைக்கிறி யா..."

"அப்ப எல்லாமே பொய்யா?"

"பொய்.. பொய்.. பொழுதுபோ க்குறதுக்க ாக பேசுற பழுகுற பொய்டா.. இதை உண்மை என்று எப்பிடி நம்புறாய்..?"

"இப்ப பிருந்தா பொய்யா.. நீ பொய்யா..?"

"ம்.. பிருந்தா.. நான்.. மச்சாள் என்றது உண்மை.. அதுக்காக எல்லாம் உண்மையில்ல ைடா.."

"ஐயோ.. என்ன உண்மையில்ல ை...?"

"நீ நினைக்கிறத ு எல்லாம் உண்மை இல்லை.. சிலது உண்மை.. பலது பொய்.."

"ஐயோ.. குழப்புறாய ் ஜோதி.."

'லொள்.. குழப்புறது நானில்லை.. சற்.. சற்டா.. பிருந்தாவை பற்றி உனக்கு என்ன தெரியும்.. அவளது படம் பார்த்தியா ..?"

"தரமாட்டேன் எண்டுட்டாள ்.. தான் நினைக்கும் போது நான் கேட்காமலேய ே அனுப்புவாள ாம்.."

"லொள்.. ம்... அனுப்புவாள ்.. சரி.. அவளைப் பார்க்காமல ் எப்படிடா காதல்.. ஒரு பொம்பிளை சற் பண்ணுறாள் என்றால் உடன காதலா.. வேற வேலை இல்லை?"

"அப்பிடி மற்றவங்களை போல நினைக்காதை ஜோதி.. நான் வித்தியாசம ானவன்.. அவளை நான் தேவதையா மனசிலை வைச்சு பூசை செய்யுறன்... உனக்குப் புரியாது.. இங்கை ஜேர்மனிலை இல்லாத பெண்களா.. அழகா.. ஆனால் நான் அவளை பார்க்காமல ே விரும்புறன ் என்றால்.. அதை உனக்கு புரியவைக்க தெரியேல்லை .. ஆனால் அதைக் கொச்சைப்ப டுத்தாதை.. ப்ளீஸ்.."

"லொள்.. கொச்சைப்ப டுத்தேலை ஜோ.. உண்மையை சொல்ல முயற்சிக்க ிறன்.."

"சற் பொய் என்றால் நீங்கள் ஏன் சற் பண்ணுறீங்க ள் ஜோதி..?"

"வெல்.. வீட்டிலை ஒருவனோடை கதைத்தால் திட்டுவாங் க.. றோட்டில கதைத்தால் நம்ம சனம் வேறைமாதிரி பெரிய கதையெல்லாம ் சோடிப்பாங ்க.. இல்லையா.. அதனால சற்றிலை தமிழ் பொடியங்கள ோடை பேசுறேன்.."

"பேசி என்ன பிரயோசனம் ..?"

"அவஙகளைபற்ற ி.. அவங்கட போக்குகளை ப்பற்றி.. குணங்களைப் பற்றி ஓரளவாலும் ஸ்ரடி பண்ணலாம்.."

"ஸ்ரடி பண்ணி?"

"யாரோ ஒரு பொடியனோட ை வாழப்போறன ்.. அதுக்கு இது உதவும்தானே .. லொள்.."

பொய்யிலே ஒரு படிப்பு. ஆகா.. வேடிக்கையா க இருந்தது. எனினும் வித்தியாசம ான சிந்தனையாக வும் இருந்தது. அதேநேரத்தி ல் ஆண்களெல்லா ம் பெண்களைக் கண்டு பல்லிளிப்ப வர்களென்று படிப்பு முடிவாக்கி விடுமோ என்று அச்சமாகவும ிருந்தது.

"ஜோ.."

"ம்.. சொல்லுங்க .."

"போகணும்.. அதுக்கு முன்னாலை ஒன்றே ஒன்று சொல்லுறேன ்.. பட் சத்தியமா பிருந்தாட் டை சொல்லக்கூ டாது.. ஓகே?"

"ம்.. சொல்லமாட் டேன்.."

"அவளை காதலிக்க முதல் அவளின்ரை உண்மையான வயதை கேளுங்கோ.."

"என்ன ஜோதி.. அப்போ பத்தொன்பத ு வயது இல்லையா?எத தினை வயது?"

அதிர்ச்சிய ாக இருந்தது.

எண்ணக் கற்பனையில் தினமும் ஒரு கனவென்ற கல்லெடுத்த ு எழுப்பிய காதல் மாளிகையில் சிறு நடுக்கம் ஏற்பட்ட பிரமை.

"அதை நீங்களே தெரிந்து கொள்ளுங்க ோ.. பிறகு காதலிப்பதை பற்றி முடிவு செய்யலாம்.. சீ யூ.."

பதிலுக்குக ் காத்திராமல ் ஓடிவிட்டாள ்.

சிந்தை குழம்பிவிட ்டது.

மனம் என்ற குட்டையில் அவள் எறிந்த வயதென்ற சிறிய கல் சஞ்சலங்களை உருவாக்கி என் நிம்மதியைத ் தொலைக்க ஆரம்பித்து விட்டது.

அவளின் வருகைக்காக .. நான் காத்திருந் தேன்.

ம்.. அவள் வருவதற்கிட ையில் சாரு வந்துவிட்ட ாள் தனது பெற்றோருட ன்.

(தொடரும்...)

vasan
07-13-2004, 10:36 PM
சோழி,

தொடரை பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள ே? :( :(

தொடர்ந்து எழுதுங்கள் . வாசிக்க ஆவலாய் காத்திருக் கிறோம்..

நன்றி.

வாசன்

silican
07-14-2004, 08:56 PM
நன்று சோலி (சரியாக உச்சரித்தே னா ?) ,
எனக்கு தங்கள் கதையை விட கதைக்கு முகப்பாக உள்ள படங்கள் மிகவும் கவர்ந்தன. வாழ்த்துக் கள். தொடர்ந்து எழுதுங்கள் .

சிலிக்கன்

sOli
08-11-2004, 05:29 PM
தாமதத்திற் கு மன்னிக்கவு ம் நண்பர்களே! ஒரு மாதம் இலங்கையில் நின்றதால் தாமதமாகிவி ட்டது... விரைவில் தொடரும். :)

vasan
08-11-2004, 05:39 PM
ஆகா.. இதுதான் காரணமா? :P உங்கள் பயணமும் விடுமுறையு ம் மகிழ்வுடன் இருந்ததா? :D

தொடர்ந்து எழுதுங்கள் சோழி.. :b:

வாசன்

sOli
08-19-2004, 12:39 PM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream7.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. இளைஞன்)

அங்கம் (7)

கடந்த இரண்டு நாட்களாகவே அம்மா சந்தோசமாக இயங்கிக்கெ ாண்டிருந்த ாள்.

சாரு குடும்பம் வந்த சந்தோசம் அவளுக்கு.

சாருவை இறுதியாகப் பார்த்து மூன்று வருடங்கள் இருக்கும். இந்த மூன்று வருட காலத்தில் அவளிடம்தான ் எத்தனை மாறுதல்கள் ..?!

கன்னங்கள் சதை பிடித்த மாங்கனிகளா க மினுங்க, செதுக்கி வைத்த மெழுகுப் பொம்மையாக அழகாக இருந்தாள்.

பூக்களில்த ான் எத்தனை விதம்? ஒவ்வொன்று ம் தனிரகம். எல்லாமே பூக்கும் காலத்தில் தனித்துவமா ன அழகுடன்தான ே பொலிகின்ற ன?

அந்த தனித்துவம் சாருவிலும் தாராளமாகவே விளைந்திரு ந்தது.

அவளது தோற்றத்தி ல் பெரிய மனுசித் தோரணை அந்த இருபத்தொர ு வயதில்..!

உருவம்தான் பெரிய மனுசியாகக் காட்டியதே ஒழிய, உள்ளம் என்னவோ முன்புபோல த்தான். அலைபாயும் கண்கள் வீட்டின் மூலை முடக்கெல்ல ாம் சுழன்றுகொ ண்டிருந்தன . அதிலே எதையாவது ஆராயத் துடிக்கும் பரபரப்பு. அந்த ஆராய்ச்சிக ்குப் பயந்து கொம்பியூட ்டரின் பக்கம் போவதையே இரண்டு நாட்களாக நிறுத்திவி ட்டேன்.

அவளது தேடலில் எனது பிருந்தாவி ன் 'ஐடி' தெரிந்து... அதைப்பற்றி ய ஆராய்ச்சிய ில் அவள் இறங்கினாள் என்றால்... முடிவு அம்மாவரைக் கும் போய், ஆயிரம் கேள்வி விசாரணை வித்தாரங்க ளால் 'என்னென்ன விளைவுகள் ஏற்பமோ?' என்ற அச்சம்தான் காரணம்.

எனினும் என் பிருந்தாவி ன் நினைவு என்னை வாட்டி வதைத்தது.

இனிய வசந்தம் என் மனதை வருடும் சுகமிழந்து தவித்தேன்.

விரிந்து கிடக்கும் யன்னலால் தென்றல் நுழைந்தாலு ம் புழுக்கம் போகவில்லை . அது வசந்தத்தின ் ஏக்கத்தில் மனதைச் சுட்டெரித் தது.

'என் அரும் சகியே.. நான் வருவேன் என்று காத்திருந் தாயா?'

'என்னைக் காணாத ஏமாற்றத்தி ல் சீற்றமுற்ற ாயா?'

சிந்தனைகளு ள் சிக்கித் தவித்தேன்.

'நீ எப்படி காத்திருப் பாய்.. என் மனதில்தானே எந்நேரமும் இன்பராகம் மீட்டிக்கெ ாண்டிருக்க ிறாய்.. சீற்றமென்ன செல்லமே.. உன் செவ்வாயாக வதனம் நிறம்காட்ட ி என்னை மோகனன் ஆக்கவா.. செல்லமே.. என் இனிய கனவுகளின் கதாநாயகியே .. என் சுவாசிப்பி ன் நறுமணமே.. எனக்குத் தெரியாதா உன்னை.. என் மன அதிர்வுகளை நீ உணர்ந்துகெ ாண்டுதானே இருக்கிறாய ்.. தூங்கும் பொழுதில் மூடும் என் விழிகளில் ஓடிவந்து பட்டுப் பாதம் பதித்து காதோடு நீ கனிரசம் பிழிவதை நான் இரசித்துக் கொண்டுதான ே அதில் குளிக்கிறே ன்.. இரு நாட்களல்ல.. இரு யுகங்கள்தா ன் எம்மை பிரித்துவி ட முடியுமா என்ன?!'

எண்ணக்கிளர ்வுகளும் கற்பனைகளும என்னைத் தாலாட்டின.

"அத்தான்.."

சத்தம்கேட் டு சுயநினைவடை ந்தேன்.

இனிமையான நினைவுகள் இடையறுந்த எரிச்சல் குமிளியாகி .. நிதானித்து வெடித்து மறைந்தது.

சாருதான்.. அவளும்தான் என்ன செய்வாள்? இரண்டு நாட்களாக அம்மாவின் விடுப்பும் விசாரணைகளு மாக வெளிவந்த கேள்விகள் அவளைப் படாதபடுத்த ிச் சலிப்படைய வைத்திருக் கும்.

"அத்தான்.. என்ன சோகம்?"

"இல்லையே..!"

"ஏதோ கவலையா இருக்கிறமா திரி தெரியுது.. நான் வந்தது பிடிக்கேலை யா?"

"சொன்னனா.. எதையெதையோ கற்பனை செய்துகொண ்டு காரணமும் சொல்லுறாய ்.."

"நீ முந்திமாதி ரி இல்லை.. என்கூட சரியாவே கதைக்கிறாய ் இல்லை.. இந்த ரண்டு நாளா கவனிச்சுக் கொண்டுதான ் இருக்கிறேன ்.. கேட்கிற கேள்விக்கு மாத்திரம் பதில் சொல்லிப்ப ோட்டு.. அங்கால போறாய்.."

அவள் சொல்வதும் உண்மைதான்.

நான் முன்புபோல இல்லைத்தான ். எனக்கே புரிந்தவிச யம்தானே?! வலிய இயல்பை வலிந்தழைக் க முற்பட்டு தோல்வியைய ே சந்தித்துக ்கொண்டிரு ந்தேன்.

முன்புபோல நண்பர்களுட ன் சுற்றுவதை.. அரட்டை அடிப்பதை.. எல்லாமே குறைத்துவி ட்டேன்.

நிதமும் எப்போது கணனியை போடுவேன்.. மெசன்சரை திறப்பேன்.. என் பிருந்தாவு டன் பேசுவேன் என்ற சிந்தனைதான ்.

பிருந்தாவை யே சுற்றிக் கொண்டிருக ்கும் மனதை என்னால் கட்டுப்படு த்த முடியவில்ல ை. அன்று ஜோதி சொன்னதைக் கூட என் மனம் ஏற்க மறுத்தது. அவளது வயது பொய்யாக இருக்கமுடி யாது என்று திரும்பத் திரும்ப நம்பவைக்க முயன்றது.

எனினும் அவளிடமே கேட்டுவிட வேண்டும் என்ற ஆதங்கமும் அதிகரித்து க்கொண்டுத ானிருந்தது .

அமைதியற்று த் தவிக்கும் எனக்கு மேலும் இடையூறாக இவள்.. சாரு.. எனக்கே சிலவேளை என்னில் வெறுப்பாகத ்தான் இருந்தது.

சாருவின் மேல் வெறுப்புற அவள் என்ன தவறு செய்தாள்?

ம்.. என்னவோ.. என்னை மாற்றமுடிய ாமல் அவதிப்பட்ட ேன்.

"சாரு.. அப்படி எதுவும் இல்லைடி.. நீ இப்ப பெரிய பெண்தானே.. இருபத்தொர ு வயது.. முந்திமாதி ரி பழக முடியாது.. சும்மா இரு.."
சமாளித்தேன ்.

"ஐயோ.. லண்டனிலைதா ன் சுதந்திரமி ல்லை.. இங்கை உன்கூட ஜாலியா பொழுது போக்கலாம் என்று வந்தால் நீ சுத்த போர்டா.."

சிணுங்கினா ள்.

"லண்டனிலை சுதந்திரம் இல்லையா..?"

"ம்.. இந்த டாடியும் மம்மியும் சரியான மோசம்.. நேரத்துக்க ு வீட்டை வரணும்.. யாராலும் ரெலிபோன் பண்ணினா யார்.. எதுக்கு என்று ஆயிரம் கேள்வி.. அப்பப்பா.. இதுகள் திருந்தாது கள்.. என்னையும் திருந்தவிட ாதுகள்.."

எனக்கு சிரிப்பாக இருந்தது.

ம்.. நாடு மாறினாலும் கட்டுப்பாட ுகளை அதற்கேற்றம ாதிரித் தளர்த்த விரும்பாத மனிதர்கள்..! !

"என்ன நீ பொய் சொல்லுறாய ்.. இப்ப நீ 'கொஸ்ரல்'ல ானே இருந்து படிக்கிறாய ்..?"

"அங்கையும் ஒவ்வொருநா ளும் ரெலிபோன் எடுத்து ஆயிரைத்தெட ்டு கேள்விகள்.. இதுகள் சிறீலங்காம ாதிரி லண்டனையும் நினைக்குது கள்."

அலுத்துக்க ொண்டாள்.

இருவேறுபட் ட கலாச்சாரத் துக்குள் தமது வாரிசுகளின ் எதிர்காலத் துக்கு பாதுகாப்பர ண் அமைக்க முயலும் வந்தேறுகுட ிகள். அவர்களின் பாதுகாப்பர ண்களை சிறையாக எண்ணித் தகர்க்க முயலும் முகவரியறித ாத வாரிசுகள்.

வேடிக்கையா ன வேதனைகள். மாற்றமுடிய ாத மாற்றீடுகள ். இலக்குத் தெரியாத இலட்சியத் தோற்றங்கள ்.

"ஏன் சாரு.. இப்படியான கரைச்சல்கள ால்தானே இப்ப கன பெண்கள் கணனியை தஞ்சமடைஞ்ச ிருக்கினம் .."

"என்ன..?"

வியப்புடன் பார்த்தாள்

"இல்லை.. வெளியிலை பழக.. பேச முடியாத கட்டுப்பாட ுகளாலைதானே 'சற்'றிலை கனபேர் கதைக்கினம் .. பகிடி விடீனம்.."

"ஐயோ.. அத்தான்.. நீயும் 'சற்'பண்ணுற யா.. மாமி சொன்னவ. நீ கொம்பியூட ்டரோட கிடக்கிறாய ் என்று.. அதைப்பார்த ்து விசரன்மாதி ரி அடிக்கடி சிரிக்கிறா ய் என்று கவலைப்பட்ட வ.. அப்பவே நினைச்சனான ்.. 'சற்'பண்ணுற ய் என்று.."

"ம்.. 'சற்'பண்ணின ல் என்ன.. அதிலை என்ன தப்பு?"

"தமிழ் சனங்கள் 'சற்'றில உருப்படியா என்ன பண்ணுதுகள் .. வெறும் காதலும் கெட்ட வார்த்தையள ும்தானே?"

எனக்கு 'சுருக்'கென தைத்தது.

"வீட்டிலை கதைக்க முடியாத குப்பைகளை 'சற்'றிலை கொணடு வந்து துணிவாய் கொட்டுதுக ள்.. ஒருநாளோடை நான் 'சற்" பக்கமே போறேல்ல.."

சாருவின் வார்த்தைகள ் முகத்தில் அறைந்தன.

நான் மனக் குறுகுறுப் புடன் தவித்து நின்றேன்.
****************************** ***************

அன்று அம்மா என்னருகே வந்து அமர்ந்துகெ ாண்டாள்.

ஏதாவது விசயம் இருந்தால்த ான் அப்படி வருவாள்.

"தரன்.. சாருவை கூட்டிக்கெ ாண்டு வெளியாலை போவிட்டு வாவன்.."

"நீங்கள் கூட்டிக்கெ ாண்டு போங்கோவன ்.."

"என்ன பிள்ளைடா நீ.. இருபத்தாறு வயசாகுது.. ஏன்தான் இப்பிடி இருக்கிறிய ோ தெரியேலை.. அவளை நாலு இடத்துக்கு கூட்டிக்கெ ாண்டு போய் காட்டன்.."

"வயதுக்கும் அவளைக் கூட்டிக்கெ ாண்டுபோய் சுத்திக்கா ட்டுறதுக்க ும் என்னம்மா சம்பந்தம்?"

"ம்.. அவள்தானேடா உன்ரை வாழ்க்கை முழுதும் உனக்கு துணையா வரப்போறவள ்.. அவளை வெளீலை கூட்டிக்கெ ாண்டு போகாமை ஆரைக் கூட்டிக்கெ ாண்டு போகப்போற ய்.. நல்ல அறிவுகெட்ட பிள்ளையும் அறிவுகெட்ட கேள்வியும் .."

செல்லமாகக் கடிந்துகொ ண்டவளை அதிர்ச்சிய ுடன் பேச்சுவராத இயலாமையுடன ் நோக்கினேன ்.

(தொடரும்...)

sOli
08-19-2004, 12:43 PM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream8.jpg
(தலைப்பு வரைந்தளித் தவர்: திரு. மூனா)

அங்கம் 8

சாருவின் முகத்தில் பூரிப்புப் பொங்கி வழிந்தது. அடிக்கடி தோளில் அலையாகப் புரண்ட கூந்தலை வலக்கரத்தா ல் ஒதுக்கியவா று, எனக்கெதிரே அமர்ந்தவாற ு என்னையே கண்கொட்டா மல் பார்த்துக் கொண்டிருந ்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கிறா ய் சாரு..?"

"ம்.. இன்றைக்கால ும் இப்பிடி வர ஒரு 'சான்ஸ்' கிடைச்சுதே .. அதுதான்.."

அர்த்தமாகப ் பார்த்தாள் .

"என்ன சாரு.. கேலியா.. இவ்வளவுநாள ும் ஒரு இடமும் கூட்டிக்கெ ாண்டு போகேலை என்ற வருத்தமா? சொறி.."

"ஒவ்வொரு 'போய்ஸ்' ஒரு 'கேளோட' வெளிய போறதெண்டா சந்தோசப்ப டுவாங்கன்ன ு கேள்விப்பட ்டிருக்கேன ்.. இங்க தலைகீழா இருக்க.. மாமி சொல்லித்த ானே வந்தீங்க..?!"

சிட்டுக்கள ் இரண்டு சிறகடித்தா ற்போல விழிமடல்கள ் படபடக்க, அவள் கூறியவற்றி ல் ஏதோ அர்த்தம் புதைந்திரு ப்பதாகத் தென்பட்டது .

'சிலவேளை அன்று அம்மா சொன்னமாதி ரி... என் வாழ்வில் இணையும் எண்ணம் இவளின் உள்ளத்திலு ம் உள்ளதோ?!'

'அவ்வாறு ஒரு எண்ணக்கிளர ்வுடன்தான் இலண்டனிலிர ுந்து வந்தாளா?'

மனக்கு கஸ்டமாக இருந்தது.

'என் மனம் பிருந்தாவி டம் பறிபோனதை இவளுக்கு எவ்வாறு கூறுவது.. முகம் தெரியாத ஒருத்திக்க ாக என் நேரத்தை கொம்பியூட ்டருடன் கரைப்பதை... என் ஏனைய உணர்வுகளைக ் கரைத்து காதல் உணர்வில் மூழ்கித் தத்தளிப்பத ை இவளிடம் சொன்னால்.. சாருவின் பிரதிபலிப் பு எவ்வாறு இருக்கும்?!'

மனதிலே பிறந்த எண்ணக் குவியல்களா ல் என் சிந்திக்கு ம் அறிவு, வானத்திலே பிரகாசித்த ஒளி குறைவதைப்ப ோல மங்கிக் கொண்டிருந ்தது.

பறவைகள் சில எதையோ தொலைத்துவ ிட்டாற்போ ல அலறியவாறு எங்கோ விரைந்துகெ ாண்டிருந்த ன.. என் மனதைப்போல .. ஆம்.. சாரு வந்ததிலிரு ந்தே பிருந்தாவை க் காணாது என் மனம் இருளில் ஒரு ஒளித்துகளா வது கிடைத்து பிருந்தாவை அடையாளங்கா ட்டாதா என்ற விரைதலில்த ானே?!

அது ஒரு ஆற்றங்கரை.

பெரியோர்க ளும் சிறியோர்க ளும் காதல் ஜோடிகளுமா க ஒரே கலகலப்பு.

சைக்கிள் ஓடி உடற்பயிற்ச ியில் ஈடுபடுபவர் கள் ஒருபுறம். உதைபந்தாட் டம் என்ற போர்வையில ் புற்களுள் பந்தை உருட்டி விளையாடும் சிறுவர்கள் ஒருபுறம். சூழல் மறந்து இதழோடு இதழ் சேர்த்து உரசலில் உல்லாசம் காண்போர் ஒருபுறம். மேனி தளர்ந்தாலு ம், தோல் சுருங்கினா லும், வாழ்வு முடியும் தருணத்திலி ருந்தாலும் அருகருகே அமர்ந்து, கனிவாகக் கதைகள் பேசித் தோளில்தட் டி வாய்விட்டு ச் சிரிக்கும் முதிய தம்பதிகள் ஒருபுறம்.

இவர்களிடைய ே அந்த அந்திசாயும ் நேரத்தில் ஆற்றங்கரைய ோரத்திலே 'சில்'லென்ற இதமான காற்று உடல்வருட நானும் சாருவும்..!!

"சாரு...!"

"ம்.."

"காதலைப்பற் றி என்ன நினைக்கிறா ய்.."

அவள் இதை எதிர்பார்க ்கவில்லை என்பதை முகம் துல்லியமாக க் காட்டியது.

ஒரு கணம் தயக்கம்.. மறுகணம் பிரகாசம்.

அரும்பு இதழ்களின் இடையே மெல்லிய முத்துப்பல ் ஒளிக்கீற்ற ு.

"பரவாயில்லை யே.. காதலைப்பற் றியும் கேட்க தோன்றுதே?"

சலனமில்லாம ல் ஓடும் நதியைப் பார்த்தவாற ு கூறினாள்.

"இல்லை சாரு.. ஒரு பெண் காதலைப்பற் றி என்ன நினைக்கிறா ள் என்று அறியவேண்டா மா?"

"இதில என்ன ஆண் பெண்.. ஒவ்வொருத் தர் ஒவ்வொருமா திரி நினைப்பினம ்.. நான் நினைக்கிறன ்.. வாழ்க்கையி லை அதுவும் ஒரு 'இன்ரறஸ்டி ்'கான 'சப்ரர்'..."

"சுவையான அத்தியாயம் .. அது எப்பிடி ஆரம்பிக்கு ம்.."

'கொல்'லெனச சிரித்தாள் .

"என்னடா.. ஆராய்ச்சிய ா.. ஆணுக்கும் பெண்ணுக்கு ம் ஒருத்தரை ஒருத்தருக் குப் பிடிச்சா ஆரம்பிக்கு ம்.."

"ஒருத்தரை ரண்டுபேருக ்கு பிடிக்காதா என்ன.. இல்லை ரண்டுபேரை மூன்று பேருக்கு பிடிக்காதா என்ன..? அது காதல் இல்லையா..?"

"அட கடவுளே.. ஏன்தான் உன்ரை புத்தி இப்பிடிப் போகுதோ..? 'சற்'றிலை இருந்து சரியாதான் கெட்டுப்பே ானாய்.."

முகத்தைச் சுழித்துக் கொண்டாள்.

தொடர்ந்தா ள்.

"காதல் என்றால் ஒருத்திக்க ு ஒருத்தன்.. அதுதான் காதல்.. அதுக்குமேல ை எல்லைதாண்ட ினால் காமம்.."

"அதைவிடு.. காதல் உருவாகுறது க்கு என்ன காரணம்..?"

"அழகு.. கவர்ச்சி.. இதுக்கும்ம ேலை மனம்.. இப்பிடிக் கனக்க இருக்கே.."

"ஏன்.. சந்தர்ப்பங ்கள்.. சூழ்நிலைகள ் காரணமில்லை யா?"

"எப்பிடி.."

"சின்னப்பிள ்ளைகளா இருக்கேக்க ை தாய் தகப்பன் 'இவன் இவளுக்குத் தான்' எண்டு சொல்லுறது ..?"

"ம்.."

"ஆனால் இதை காதல் எண்டு சொல்லேலாத ு சாரு.. இது ஒரு மனோவசியம் .."

அவள் கண்களை ஊடுருவினேன ்.

"அப்படி எண்டா..?"

"கிட்டத்தட் ட மூளைச்சலவை மாதிரி.. இயல்பாக வாற காதல் வேறை.. இப்பிடி மூளைச்சலவை யாலை வாறது வேறை..."

அவள் கண்களில் சிறு சலனம் தோன்றி மறைந்தது.

அவளுக்கு ஓரளவாவது என்னைப்பற் றிப் புரியவைக்க வேண்டும். அம்மா நினைப்பதுப ோல அவளும் என்னை தன் வாழ்க்கைத் துணையாக எண்ணக்கூடா து என்ற எண்ணத்தில் பேச ஆரம்பித்தே ன்.

"சில தாய் தகப்பன் பிள்ளைகளுக ்கு சின்ன வயசிலேயே வாழ்க்கையை தீர்மானிச் சுவிடுகினம ். அதை சாடைமாடையா க சொல்லியும ் காட்டுவினம ்.. சில பிள்ளைகளின ்ரை மனசிலை பதிஞ்சுடும ்.. ஆனால் இது பலசமயங்களி லை ஏமாற்றத்தி லைதான் முடிஞ்சிரு க்கு.. இல்லையா?"

காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியவா று என்னை ஏறிட்டுப் பார்த்தாள் .

"நீ என்னமாதிரி ..?"

"அப்படியெண் டால்..?"

"நீ யாரையாவது காதலிக்கிற ியா..?"

நேரடியாகவே கேட்டாள்.

'சொல்லலாம .. என் 'சற்' நாயகியைப்ப ற்றி..?! என்னில் அன்பால் உருகும் அந்த ஐஸ்கிறீம் சிலையைப்பற ்றி..'

எதுவோ தடுத்தது. கூறுவதால் ஏற்படும் விளைவுகளுக ்குத் தயாராகாத நிலைப்பாடா க இருக்கலாம் .

"நீ நினைக்கிறம ாதிரி இல்லை சாரு..."

குற்ற உணர்வுடன் அவளைப் பார்க்காமல ் கூறினேன்.

'சற்'றிலைதா ் பொய் கூறுவார்கள ாம்.. நான் 'சற்'றுக்கா அவளிடம் பொய் சொன்னேன்.

"நீ சுத்த மோசம்டா அத்தான்.. ஒரு ஐஸ்கிறீம் வாங்கித் தரக்கூடாதா ?"

சற்றுத் தொலைவில் இருந்த ஐஸ்கிறீம் கடையைச் சுட்டிக் காட்டினாள் .

"சரி.. வாங்கினால் போச்சு.."

"ஒரேயொரு ஐஸ்கிறீம்.."

"ம்..."

"நீ பாதி.. நான் பாதி.."

குதூகலத்து டன் கூறினாள்.

"நோ..."

'என்னில் பாதி என் ஐஸ்கிறீம் சிலையல்லவா ?'

சொல்லத் துடித்தேன் . மெல்ல விழுங்கினே ன்.

"என்ன நோ..?"

"எனக்கு ஐஸ்கிறீம் பிடிக்காது .. நீயே சாப்பிடு.."

பிருந்தா கைகொட்டி ஏளனமாகச் சிரிப்பதுப ோலிருந்தத ு... என் மனதுக்குள் தான்.

(தொடரும்..)

sOli
08-19-2004, 12:49 PM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream9.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. கரவை பரணி)

அங்கம் (9)

திடீரென விழிப்பு வந்தது.

நேரத்தைப் பார்த்தேன் . அதிகாலை இரண்டு மணி.

எங்கும் மயான அமைதி.. என் மனதைத் தவிர.

ஒரு கிழமையாக என் பிருந்தாவு டன் பேசவில்லை. ஒரு யுகம்போலி ருந்தது. கணனியைத் தொட்டால்த ானே பேசுவதற்கு ?!

தண்ணீரில் முதன்முதலா குதிக்கும் போதுதானே குளிருமோ என்ற பயம்? இப்போதான் பிருந்தாவு க்கும் நான் 'சற்'பண்ணுற விடயம் தெரிந்துவி ட்டதே.

ஓரளவு துணிவு பிறந்தது.. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கென்றம ாதிரி.

கணனியைத் தொடுவதற்க க் கை துருதுருத் தது.

'தொடுவோம ?'

'என் பிருந்தா ஓன்லைனில் இருப்பாளா?!'

ஆவல் அடக்கம்விட ுத்து எழுந்தாடிய து.

வீட்டினுள் ளே நோட்டமிட் டேன்.

எல்லோரும் அமைதியாக உறங்குகிறா ர்கள். நான்மட்டும ் உறங்காத விழிகளுடன் பிருந்தாவை க் காணாத ஏக்கத்தில் ..!

கணனியை அழுத்தினேன ்.

யன்னல் 'மைக்ரொசெ வ்'ரை அடையாளம் காட்டி வழிவிட்டது .

மெசன்சரை அழுத்தினேன ்.

அதிலே ஒரேயொரு பெயர்மட்டு ம் பச்சைப் பொம்மையாய ் வர்ணம் காட்டியது.

சுதா..!

அவளுடன் பேசும் மனநிலையில் நான் இல்லை.

ஜேர்மனியில ் அதிகாலை இரண்டு மணி என்றால் கனடாவில் இரவு எட்டு மணி இருக்கும்.

பிருந்தா எங்கே? படிக்கிறாள ோ? அல்லது கடந்த ஒரு வாரகாலமாக காத்திருந் து, காத்திருந் து ஏமாற்றத்தா ல் சலிப்படைந் து மெசன்சர் பக்கமே எட்டிப் பார்க்காமல ் உள்ளாளோ?

மெயில் பெட்டி சமிக்ஞை காட்டியது.

'எலி' அங்கே விரைந்து சென்று அழுத்த... அங்கே ஒரு மெயில்.

ஓ.. என் பிருந்தாக் குட்டியின் மெயில்தான் .

ஆகா.. மனதில் குதூகலம் வெண்பனி மழையாய் 'சோ'வெனக் கொட்டியது .

'ஹீ தரன்.. எப்டி சுகம்டா.. நான் நல்லாருக்க ேன்டா.. மச்சாள் வந்திட்டாள ா.. கியூற்றா? அதான் என்னை மிஸ் பண்ணிட்டிய ா.. அவள்கூட சுத்துறியா ? அவளுக்கு 'ஜஸ்' வைக்றியாடா .. அவளை 'லவ்'பண்றிய ? என்னை மறந்துட்டி யாடா.. எனக்கு பொழுது போகலடா.. எல்லாரும் சும்மா 'போர்'டா.. ஒரு மெயில்கூட போடக்கூடா தா? மச்சாளைக் கண்டதும் என்னை மறந்துட்டி யாடா.. எம்மெம்.. நீ மறந்தாலும் நான் மறக்கமாட்ட ேன்டா.. ஏன் தெரியுமா.. நீதான் என்ர பெஸ்ற் பிரண்ட்.. லொள்.. பாய் பாய்டா.. யுவர் டியரஸ்ற் பிருந்தா..'

சோர்ட் அண்ட் சுவீற்றாய் ஒரு மெயில்.

இது குறும்பா கோபமா.. குழப்பமாக இருந்தது.

எனினும் ஒரு பூரிப்பு.

'நீதான் என்ர பெஸ்ற் பிரண்ட்..'

திரும்பத் திரும்ப வாசிக்கத் தோன்றியது .

அந்த நாலு சொற்களில் நாலாயிரம் கற்பனைப் பூக்கள் களமிறங்கி.. சரசமாடி சரமாகி அவள் கழுத்தை நாடி மணப்பெண்ணா க்க.. நான் மாப்பிள்ளை க் கோலத்தில் !

அந்த இனிய கனவின் சுகமான ராகத்தின் புளகாங்கித த்தில் பதில் எழுத ஆரம்பித்தே ன்.

'என் மனதில் குடிகொண்ட வளே! உன்னை மறந்தால்தா னேடா நினைப்பதற் கு... துளித்துளி யாய் உன் அன்பை உருக்கி என்னை நனைக்கும் என் ஐஸ்கிறீம் சிலையே! உன்னில் உருகி வழியும் அன்புத் துளிகள் என் இதயத்தில் பட்டுத் தெறித்து 'டிக், டிக்' என ஒலி எழுப்புவதை அறிவாயா? அந்த ஒலியில்தான ே நான் மூச்சுவிடு கிறேன்?! உன் மெயில் கண்டதும் தமிழ்கூடத் தன்னை அழகுபடுத்த விரும்புகி றது.. உனக்குத்தா ன் விளங்குமோ தெரியேல்லை டா.. என்னவோ.. என்னை விளங்கிக்க ொள்ளடா என் செல்லமே... என் நினைவுகளில ் தித்திப்பவ ளே! நான் உன் அருகில்தான ே இருக்கிறேன ்.. அதனால்தானே ா என்னவோ.. ஏனையவை உன் அழகுக்கு முன்னால் மங்கலாகத்த ான் மிளிர்கின் றன.. என் மச்சாளும்த ான்.. அன்புடன் தரன்.'

மெயில் என் உணர்வுகளின ் அடையாளத்தை அள்ளிச் சென்றது.

சுதா இன்னும் 'ஓன்லைனி'ல் ான்..

அவளது பெயரை அழுத்த, மெசன்சர் யன்னல் கணனித்திரை யில் விரிந்தது.

"ஏய் சுதா!"

"என்னடா அண்ணா.. எங்கடா போனாய்? ஒரு கிழமையா காணலை.."

"ம்.. அதுவா.. 'விசிட்டர் ்' தொல்லைடா.."

"ஓ.. மச்சாள் தொல்லையா.."

"உனக்கு எப்படி தெரியும்.."

"ஐஸ்தான் சொன்னாள்.. நீ அவளை கலியாணம் கட்டப் போறியாமே?"

"ஐயோ.. மொக்கு.. அப்பிடி சொன்னாளா.. நானாவது அவளை கட்டுறதாவத ு.. எரிச்சலை கிளப்பாதை.."

"லொள்.."

"ஐஸை எப்போ பார்த்தே.. இன்னிக்கு வந்தாளா?"

"ஓ.. அவளைக் கேட்கத்தான ் என்னைக் கூப்பிட்டி யா.. போடா.. சொல்லமாட் டேன்.."

"ப்ளீஸ்டி.. என் தங்கச்சிதா னேடி.."

"ம்.. என்ன எனக்கு ஐஸா? போடா.."

"ப்ளீஸ்டி குட்டி.. என் தங்கச்சிக் குட்டி.. சொல்லடி.."

"முதல்ல நான் கேட்குறதுக ்கு பதில் சொல்லு.. பிறகு யோசிப்போ ம்.."

"ஐயோ.."

"என்ன ஐயோ.. பதில்.. பதில்.."

"சரி.. கேட்டுத் தொலை.."

"நீ ஐஸை 'லவ்'பண்றிய ?"

"ஐயோ.."

"எப்ப பார்த்தாலு ம் ஐயோதானா.. அவளைக் காதலிக்கிற ியா.. பதில்.. பதில்.."

"ஏன் கேட்கிறாய் ?"

"ஒருத்தன் என்னோட அழுறான்டா அண்ணா.. நீ அவளை காதலிக்கிற ியாம்.. தன்னோட அவள் சரியா முந்திமாதி ரி பேசுறதில்ல ையாம்.."

"யார்..?"

"என்ர செல்ல தம்பி.. லவ்லிபோய் .."

"அவனா.. இந்தியால இருந்தா..?"

"அவன் ஒருநாளைக்க ு ஒரு நாடு சொல்லுவான ்டா.. லவ்லிபோய் அவன்ர நிக்.. ஐஸ் சொல்லலையா ?"

"சொன்னவள்.. தன்னை காதல் என்று தொந்தரவு செய்யுறதாய ் சொன்னவள்.."

"லொள்.. அவன் சொல்லுறது உண்மையா.. நீ அவளை 'லவ்'பண்ணுற யா?"

"ம்.. நான் அவளை 'லவ்'பண்ணுற ன்.."

"ஐயோ.. பாவம் லவ்லிபோய் டா.."

"ஐயோ.. அவன் என்ரை வில்லன்.."

"அப்பிடி சொல்லாதைட ா.. என்ர செல்ல தம்பி.. ஓன் லைன்ல இருக்கான்.. 'அட்' பண்ணவா..?"

"றியலி...? 'அட்' பண்ணு.. அவளை தொந்தரவு செய்யாதைடா என்று சொல்லணும் .."

"லொள்.."

லவ்லிபோய் மெசன்சர் யன்னலுள் புகுந்தான் .

"ஹலோ அண்ணா.. "

"அண்ணாவா..?"

"இருபததாறு வயசெண்டா அண்ணாதானே.. எனக்கு இருபத்தி ரண்டு.."

"மச்சான் என்று சொல்லு.."

"ஏன் அண்ணா?"

"ஐஸுக்கு அண்ணன் எனக்கு மச்சான்தான ே?"

"லொள்.." - சுதா சிரிப்பு அடையாளம் காட்டினாள் .

"முடியாதுடா .. ப்ளீஸ்டா.. அவளை விட்டுடடா.. அவளை நான் காதலிக்கிற ேன்டா அண்ணா.. அவளின் வயது எனக்குத்தா ன்டா பொருத்தம் .. உனக்கு வயது கூடடா.."

நான் கோபத்தின் உச்சிக்குச ் சென்றுகொண ்டிருந்தேன ்.

(தொடரும்...)

sOli
08-20-2004, 12:10 PM
(நன்றி சுவீற்மிச் சி! உங்களின் ஊக்கத்திற் கு! )

http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream10.jpg
(தலைப்பு வரைந்தளித் தவர்: திரு. மூனா)

அங்கம் (10)

ஏனோ தெரியவில்ல ை. அவன்மேல் எரிச்சல் ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

அந்த 'லவ்லிபோய 'மேல்தான்.

'அவள் எனக்குமட்ட ுமே... எனக்காகவே' என்ற சுயநலம் என்னுள் புகுந்துகெ ாண்டது.

அதனால் அவன்மீது எரிச்சல்... சினம்.. ஆத்திரம்..!

ஆனால் அவனோ என் கோபத்தை ஒரு பொருட்டாக வே எடுப்பதாகத ் தெரியவில்ல ை.

'அண்ணா.. அண்ணா..' என்று அடிக்கடி மெசன்சரில் வந்து என் உணர்வுகளைச ் சூடாக்கிக் கொண்டிருந ்தான்.

"டேய்.. இப்பிடிக் கரைச்சல் கொடுத்திய ென்றால்.. உன்னை 'புளொக்'பண ணிடுவேன்.. சொல்லிட்ட ேன்."

தொல்லை தாளாமல் கூறினேன்.

"ஹீ.. ஹீ... நல்லா 'புளொக்'பண ணுடா.. பரவாயில்லை ... ஆனால் விசரன்மாதி ரி காதல் கீதல்னு உன்ரை வாழ்க்கையை நாசம்பண்ணி டாதை.."

"அட்வைசா.. அட்வைஸ் என்று குழப்புறது க்கு எத்தினை பேர் வெளிக்கிட் டிருக்கிறீ ங்கள்? ஐஸ் என்னோட பேசுறது உனக்கு பிடிக்கேலை .. அதுக்குத்த ானே இந்த அட்வைஸ்?"

"போடா அண்ணா.. என்னடா நீ இப்பிடி அப்பாவியா இருக்கிறாய ்? 'சற்'றிலை ஒருத்தி பேசிட்டாளா ம்.. அவளுக்காக இவர் அலையுறாராம ்.. சுத்த முட்டாள்தன மா இல்லை?"

"சரி.. முட்டாள்தன ம்தான்.. அவளைப் பொறுத்தவர ை நான் முட்டாள்தா ன்.. போதுமா?"

"தரன்.. இப்ப நான் சீரியசா பேசுறன்.. 'சற்'றிலை பேசுறவங்கள ை நம்பாதைடா.. இது ஒரு தாமாஷ்டா.. ஒரு பொழுதுபோ க்குடா.."

"இப்பிடித்த ான் அன்றைக்கு அந்த ஜோதி சொன்னவள்.. இப்ப நீ வேறை..."

"குட்.. என்னை எடுத்துக் கொள்.. 'சற்'றிலை நான் உண்மையே சொல்லுறதி ல்லை.. ஆனால் உனக்கு சொல்லுவேண ும்பொல இருக்கு..."

"ஏன்டா.."

"ம்.. நீதான் எல்லாத்தைய ும் நம்புறியே.. அதனால சொல்லுறேன ்.. ஐ லவ் யூ என்று எத்தினை பேரிட்டை சொல்லியிர ுப்பேன் தெரியுமா? எத்தனை 'கேள்ஸ்' போட்டோ என்கிட்ட இருக்கு தெரியுமா?"

"அடப்பாவி... அப்போ ஐஸை காதலிக்கிற ேன் என்று கரைச்சல் கொடுக்கிற து.."

"பொய்தான்.. இனியும் கரைச்சல் கொடுப்பேன ்.."

"ஏன்டா..."

"அவள் போட்டோ தராமல் பேய்க்காட் டுறாள்.. எப்படியும் அவள் போட்டோ வேண்டணும்.."

"பார்த்தியா .. இதில இருந்து என்ன தெரியுது.. அவள் சம்திங் ஸ்பெசல்.. இல்லையா?"

"ஹா.. ஹா.. போடா அண்ணா.. அவளிட்டயும ் போட்டோ எடுப்பேன்.."

"நோ.. உன்னால முடியாது.. நான் அவளிட்ட சொல்லிடுவ ேன்.. நீ பொய் என்று.."

"போடா.. அவள் நம்பினால்த ானே.. எரிச்சல்லை சொல்லுறாய ்னு நினைப்பாள் டா.."

"ஏன்டா இப்பிடி.."

"அவளவை ஆளுக்காள் ஒருத்தனை காதலிக்கிற ேன்னு பொய் சொல்லுவாள வை.. ஏமாத்துவாள வை.. அப்பிடி என்னாலை முடியாதா? பதிலுக்குப ் பதில்.."

"யார்டா.. ஐஸ் காதலிக்கிற தா சொன்னாளா?"

"அவள் சொல்லலை.."

மனதில் சிறிது பரவசம்.

"அதுதானே பார்த்தேன் .."

"போடா.. அவள் நாளைக்கு சொல்லலாம் .. 'சற்'லை கனபெட்டையள ் காதல் கீதல்னு பொடியளை 'பூல்'பண்ணு ாளவை.. சிலதுகள் அதுகளை நம்பி அலையுதுகள் .."

அவன் மறைமுகமாக என்னைச் சொல்வதாக உணர்வு ஏற்பட்டது.

அவன் தொடர்ந்தா ன்.

"அண்ணா.. நான் யுகே யுனிவசிற்ற ில படிக்கிறேன ்.. இங்க நடக்கிறதுக ள் உனக்குத் தெரியுமா?"

"என்னடா..?"

"ஆண்களும் பெண்களும் தங்களுக்கெ ன்று 'கொஸ்ரல்'ல 'ரூம்' எடுப்பினம் .. ஆனால் அதில தங்குறதில் லை..."

"அப்போ...?"

"யாராவது ஒருத்தற்ரை 'ரூம்'லதான் சோடியா தங்குவாங்க .. கூத்தடிப்ப ாங்க.. பிறகு பிரிவாங்க.. பிறகு புதுச் சோடியாவாங ்க.. கூத்தடிப்ப ாங்க.."

"ஐயோ.. அசிங்கம்டா ..."

"அசிங்கம்னு சோடி இல்லாம இருந்தா.. 'ஹோமோ செக்ஸ்'கார ்க என்று கேலியும் செய்வாங்க.. பிறகு தங்க வீட்டுக்கு அவளவை போகும்போ து பார்க்கணும ே.. இந்தப் பூனையா பால் குடிச்சது என்றமாதிரி ... பண்பா கலாச்சாரமா உடுத்திப் போர்த்தி போவளுகள்.."

"ஐயையோ.. இப்பிடியும ் நடக்குதாடா ?"

எனக்கு அது புதுஅனுபவம ். நம்பமுடியவ ில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்ல ை.

"டேய் லவ்லிபோய் .. நம்ம சனங்களுமா?"

"ம்.. பாக்கிஸ்தா ன் இந்தியன் சனங்கள்தான ்கூட.. அதுகளைப் பார்த்து நம்ப சனங்களும் தொடங்கீட் டாளவை.. 'கிளப்'புகள க்கு போனால்.. எங்களைக் கண்டு வெள்ளைகளுக ்கு பக்கத்திலை இருந்து நெளிவாளவை... நாங்கள் வேணுமென்று நேரைபோய்.. 'ஹலோ' என்று கைகொடுத்த ுட்டு வந்தீடுவம் .."

"அதுகளின்ரை எதிர்காலம் ..."

"ஹே... ஹே... அதைப்பற்றி என்ன கவலை.. ஊரிலை இருந்து ஒருத்தன் விசாவுக்கா க வந்து வாழ்வு கொடுப்பான ்.."

"அடப்பாவிகள ா..."

"அதுக்குத்த ான் சொல்லுறன் டா.. நிச வாழ்க்கையி லையே இப்பிடி நடக்கேக்கை .. 'சற்' வாழ்க்கையை நம்பாதைடா..."

சுற்றி வளைத்து மீண்டும் அதே இடத்துக்கு வந்தான்.

எதை நம்புவது? எதை நம்பாமலிரு ப்பது?

விடை தெரியவில்ல ை.

என் கேள்விகளின ் நாயகி என் பிருந்தாதா னே?!

அவள் வருவாளா? என் கலங்கிப் போன மனதை தெளிவாக்க அவள் வருவாளா?

'உலகே மாயை' என்று சொல்லுறவங ்களும் அந்த உலகத்தில்த ானே வாழுறாங்கள ்?!

'நம்ப நட, நம்ப நடவாதே' எனறு சொல்லுறவங ்களும் ஏதோ நம்பிக்கைய ிலைதானே வாழுறாங்கள ்?!

'சற்'றை நம்பாதே என்று சொல்லுறவங ்களும் தாங்கள் சொல்லுறதை நம்பவேணும் என்ற எதிர்பார்ப ்பில்தானே சொல்லுறாங ்கள்?!

சிரிக்கிறத ா? அழுகிறதா? குழம்புவதா ?!

என் குழப்பங்கள ின் குந்துதல்க ளின் முடிவுகாலம ் அவளிடமல்லா வா உள்ளது?!

அவள் வருவாளா?!

வந்தாள்.

"டேய் தரன்குட்டி .. எங்கடா போனாய்..?"

"உன்னைவிட்ட ு எங்க போகடி.. உன்கூடதானே இருக்கேன்.."

"லொள்.. மச்சாள் என்னவாம்டா .."

"அதை விடு.. இப்போ ரண்டு விசயம் உன்கிட்ட கேட்கணும்.. பதில் சொல்லணும் .."

"ஆசையா பேசலாம்னு வந்தால்.. என்னடா ரண்டு விசயம்..?"

"ஒன்று வயது... பத்தென்பது தானா.. இல்லை பொய்யா..?"

"......"

"பிருந்தா!!!"

"........"

"உன்னைதான் கேட்கிறன்.. உனக்கு பத்தென்பது வயதில்லைன் னு உன் மச்சாள்.. அதுதான் அந்த ஜோதி சொல்லுறாள ்.. உண்மையா.. சொல்லுடி.. இவ்வளவு நாளும் என்னை பொய் சொல்லி ஏமாத்தினாய ாடி.. உன்னை 'பெஸ்ற் பிரண்ட்' என்று மெயில்போட ்டாயேடி.. எல்லாரிலைய ும் பார்க்க என்னிலை அன்பென்று சொன்னாயேட ி.. எல்லாமே பொய்யா? உன்னைப்பற் றி எவ்வளவு உயர்வா.. கற்பனைகள் செய்திருக் கேன் தெரியுமே.. அத்தனையும் மண்ணா.. சொல்லு.."

"மிஸ்டர் தரன்... நான் சொன்னனா.. கற்பனை செய்யச் சொல்லி நான் சொன்னனாடா .."

"சொல்லலை.. இற்ஸ் ஓகே... ஆனா.. ஆனா.. வயது பொய்யா.. இல்லை உண்மையா.. எனக்கு தெரியணும்.. ப்ளீஸ்டி.. எனக்கு நிம்மதி இல்லைடி.."

"என்னடா நீ.. நிம்மதி.. லொள்.. எனக்குத்தா ன்டா நிம்மதி போச்சுடா.."

"உனக்கா.."

"உன்னால இப்ப எனக்கு.. சரியா.. அவள் ஏதோ விளையாட்டு க்கு சொன்னால்.. நம்புறதாடா .. சரியான எம்மெம்.. சரி..ரண்டாவ ு விசயம் என்ன..?"

"எனக்கு உன்ர போட்டோ வேணும்.."

"போடா.. உனக்கு இப்ப எதுக்குடா போட்டோ.."

"எனக்கு வேணும்.. நான் உன்னை பார்க்கணும ்டி.."

"உனக்கு முந்தி என்னடா சொன்னேன்.. நேரம் வரும்போது நிச்சயமா தருவேன்னுத ானே சொன்னேன்... தொந்தரவுப ண்ணினால் பிறகு பேசவேமாட்ட ேன்.. நான் சரியான பிடிவாதக்க ாரி.. மைன்ட் இற்.."

"ப்ளீஸ்டி.."

"போடா.. ஆசையோட பேசலாம்னு வந்தா.. உன்னோட பெரிய தொல்லை.. நான் போறேன்டா.. ஒரேயடியா போறேன்டா.. பாய்.."

"நில்லுடி.. நில்லுடி..."

பரபரவென எழுத்துகளை க் கோர்த்து அனுப்புவதற ்குள் அவளது தொடர்பு துண்டிக்கப ்பட்டது.

கவலை என்னைத் தழுவ ஆரம்பித்தத ு. கையாலாகாத் தனத்துடன் கணனியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந ்தேன்.

(தொடரும்...)

sOli
08-20-2004, 12:14 PM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream11.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. கரவை பரணி)

அங்கம் (11)

"நீ சரியான மொக்குச் சாம்பிராணி .. உனக்குக் கொஞ்சங்கூ டப் புத்தியில் லை.. சரியான வெங்காயம்.. எதை யாரிட்டை சொல்லக்கூ டாதென்று தெரியேலை.. எத்தனை வயதெண்டாய் .. இருபத்தாறே ா.. வயது வளர்ந்தளவு க்கு புத்தி வளரேலை.."

ஜோதிதான்... மெசன்சரில் பொரிந்து தள்ளினாள்.

வார்த்தைகள ில் அனல் பறந்தது.

"நீ செய்த வேலையாலை அவள் என்னோடை சண்டை.. உன்னை யார் சொன்னது அவளிட்டை கேட்கச் சொல்லி.. இனி என்னோடை பேசமாட்டனெ ண்டு ரெலிபோனை அடிச்சு வைச்சுட்டா ள்.. அவள் சரியான பிடிவாதக்க ாரி.. இனி அவளை சமாதானப்பட ுத்தேலாது.. ல்லாம் உன்னாலைதான ்.. வெண்ணெய்.. சரியான வெண்ணைய்.."

அவளின் வார்த்தைகள ் என்னுள்ளும ் சற்று சினத்தை ஏற்படுத்தி னாலும் பொறுத்துக ்கொண்டேன் .

பிருந்தாவி ன் மச்சாள் அல்லவா?!

அவளைத்தான் ஒரு நாளுக்கும் மேலாக காணவில்லைய ே?

அன்று 'உண்மையான வயது என்ன?' என்றும்... 'படம் வேணும்' என்றும் கேட்டபோது , 'போறேன்டா.. ஒரேயடியா போறேன்டா' என்று என்னை தவிக்கவிட் டு ஓடி மறைந்தவள்த ான்.. இன்னும் வரவில்லை.

அவளது மச்சாளின் சீற்றத்தை அதிகமாக்கி ஜோதியின் தொடர்பு துண்டிப்பத ை நான் விரும்பவில ்லை. ஜோதியின் தொடர்பு அறுந்தால்.. பீருந்தாவை ப்பற்றி வேறு எவரிடம் கேட்டுத் தெரிந்துகெ ாள்ள முடியும்?! அந்த எண்ணத்தில் அவளது வசவுகளைப் பொறுமையாக க் கேட்டுக்கெ ாண்டிருந்த ேன்.

ஒரு இளம் பெண் நேரடியாக இப்படிப் பேசுகிறாளே ா இல்லையோ.. 'சற்'றில் சூடாக பேசிக்கொண ்டிருந்தாள ்.

இதுவும் ஒரு புது அனுபவம்தான ்.

"ஜோதி.. என்னை இப்ப என்ன செய்யச் சொல்லுறாய ்?"

"என்னவோ.. எல்லாத்தைய ும் செய்துபோட ்டு.. என்ன செய்யச் சொல்லுறாய ் என்று கேட்டால்... அவளுக்கு பத்தொன்பத ு வயதில்லை எண்டு உனக்கு உதவிசெய்யத ்தானே சொன்னேன்.. வீணாய் ஆசையளை வளர்த்து மோசம் போகாதை எண்ட நல்லெண்ணத் திலைதானேடா சொன்னேன்.. நீ என்னாடாண்ட ால்.. நான் சொன்னேனெண ்டு என்னை அவளிட்டை மாட்டிப்பே ாட்டு நீ நல்லபிள்ளை மாதிரி இருக்கிறாய ்.. அவள் என்னடாவெண் டால்.. நேற்று முழுக்க ரெலிபோன் எடுத்து என்னோடை சண்டை.. ஏன்டி அப்பிடி சொன்னனீ எண்டு.. முதல்தடவைய ா குற்றவாளிப ோலை அவளுக்கு ஒண்டும் பதில் சொல்லமுடி யாமை கூனிக்குறு கி நிண்டன்.. எல்லாம் உன்னாலை.."

நான் சங்கடத்துட ன் கதிரையில் நெளிந்தேன் .

தவறு என்னிடம்தா னே?

"சொறிடா ஜோதி.. வெரி வெரி சொறி.."

"என்ன சொறி.. சொறி சொன்னாப்ப ோலை எல்லாம் ஓகேயா?"

"ஜோதி! இப்போ என்னை என்ன செய்யச் சொல்லுறாய ்? என் உணர்வுகளைய ும் கொஞ்சம் புரிஞ்சு கொள்ளேன்.. காதல் என்றால் என்ன.. அதுக்கு வரைவிலக்கண ம் சொல்ல ஆராலையுமே ஏலாது.. ஓரு வித்தியாசம ான உணர்வு.. ஒரு வித்தியாசம ான ஈர்ப்பு.. ஒரு புதுமையாக அனுபவம்.. ஒரு சுவையாக உறவு.. இல்லாட்டி அற்புதமான ஆசை.. இப்பிடி எதையெதையோ ஆளுக்காள் சொல்லலாம் .. ஆனால் என்னைப் பொறுத்தளவ ிலை.. எதுவென்று சொல்ல முடியாத தொடர்பு.. இதுதான் என்று சுட்டிக் காட்ட முடியாத மன தையல்.. தையல்தான்.. தையலால் வந்த தையல்.. அவளுடன் பேசும்போத ு என்னையே மறந்துடுறன ்.. நீ சொல்லுறது போல முட்டாளாயி டுறன்.. ஏன்.. ஒரு களிமண் பொம்மைமாத ிரி அவளுக்கு தலையாட்டிக ் கொள்ளுறன் .. இதை ஏன் உன்னாலையோ அவளாலையோ புரிஞ்சு கொள்ள முடியேலை? அவளை கண்டதும்.. என் சந்தேகங்கள ை அவளிட்டை கொட்டிட்ட ன். அவளும் ஓடிட்டாள்.. நீயும் இப்ப என்னை திட்டுறாய் .. எனக்கு விளங்கேலை.. எதுக்காக அவள் வயதை மறைக்கணும் .. போட்டோவை காட்டாமை ஒரு நாள் அனுப்புறேன ்னு தவணை சொல்லணும் .. எனக்கு ஒண்டும் புரியேலை ஜோதி.."

என் உள்ளத்து உணர்வுகளை அவளிடம் கொட்டினேன ்.

"ஐயோ.. தரன்! உனக்கு எவ்வளவுதூர ம் சொல்லுறது ? நீ நினைக்கிறம ாதிரி அவள் இல்லைடா.. நீ விரும்புற இடத்திலை அவள் இல்லைடா.. கற்பனைல யதார்த்தத் தை மறக்காதை.. சரி.. அவளும் உன்னை விரும்புறா ள் என்று வை.. அவள் நீ எதிர்பார்க ்கிறமாதி வடிவா இல்லாட்டி..?"

"வடிவு என்ன பெரிய வடிவு.. குணம்தான் முக்கியம்.."

"லொள்.. இப்ப சொல்லுவாய ்.. பழகப் பழகத்தான் எல்லாம் விளங்கும்.. தூரத்திலை இருந்து பாக்க எல்லாம் அழகாய்த்தா ன் இருக்கும்.. கிட்ட போனால்தான ் அதிலுள்ள குறை நிறையள்.. ஓட்டை ஒடிசல்கள் தெரியும்.. சரி.. அதுதான் போகுதெண்ட ா.. எங்கடை சமூகம்டா.. சாதி சமயம் எண்டு பல தடையள்.. உன்ரை அப்பா அம்மா.. அவளின்ரை பெற்றோர்.. இப்படி எவளவோ பிரச்சினைய ள்.. இதையெல்லாம ் யோசிக்காம ை காதல் கீதல் என்று உன்னை நீயே ஏமாத்திக் கொள்ளாதை.."

"என்ரை வாழ்க்கையை நான்தான் வாழப்போறன ்.. அவங்களில்ல ை.. ஊரிலைதான் அவங்கடை சொத்து சுகம் என்று தாய் தகப்பனிலை பிள்ளைகள் தங்கி இருக்கிறாங ்கள்.. இங்கை அப்பிடி இல்லை.. குழந்தை பிறக்க காசு.. குழந்தை வளர காசு எண்டு பிள்ளைகளின ்ரை காசிலதான் பெற்றோர் தங்கி இருக்கினம் .. எங்கடை வாழ்க்கையை நாங்கள் வாழ ஆரும் தடை போடேலாது.."

எனக்குத் தென்பட்டதை அவளிடம் சொன்னேன்.

"லொள்.. ஐயோ.. என்ன இருந்தாலும ் பெற்றவங்க பிள்ளைகளின ் நல்லதுக்கா கத்தான் வாழுறாங்க.. அவங்களை மதிக்காமல் வாழுற வாழ்வு வெற்றியடைய ாதுடா.. அவங்களுக்க ு வாழ்க்கையி லை எத்தனையோ அனுபவங்கள் இருக்கு.. வாழ்க்கையி ன் மேடு பள்ளங்களை அனுபவிச்சு உணர்ந்தவர் கள்.. அந்த அனுபவத்தால பிள்ளைகளின ் வாழ்வாவது நிம்மதியாக அமையவேணும் எண்டுதான் எல்லாரும் விரும்புவா ங்க.."

"என்னவோ.. ஒரு உதவி செய்.. முடிஞ்சால் பிருந்தாவை ஓன்லைன் வரச் சொல்லு.."

"ஐயோ.. வெண்ணை.. வெண்ணை.. அவள்தான் என்னோடை பேசமாட்டேன ் எண்டு ரெலிபோனை அடிச்சு வைச்சூட்டா ளே.. உனக்கு எத்தனை தரம்டா சொல்லுறது .. காதல் கீதல்னு வாழ்க்கையை சற்றில பாழாக்காதை .. அவள் உன்னைப்போ லை சற் பைத்தியம்த ாண்டா.. வருவாள்.. இப்ப அவளுக்க அதுதான் உலகம்.. என்னவோ.. ரண்டு மொக்குகளு ம் என்னவோ செய்யுங்கே ா..நான் இதுக்கை வரலை.."

"ம்.. நீ உன்ரை மச்சாள் என்றுதானே காதலிக்க வேண்டாமெண் டுறாய்?"

மனதில் இருந்ததை எழுத்துக்க ளாக்கி அவள்முன்னா ல் போட்டேன்.

"என்ன.. என்ன விசர்க்கதை ... ஏதோ காணாததைக் கண்டவன்மாத ிரி.. ஏன்டா காதல் கீதல்னு வாழ்க்கையை நாசம் பண்ணுறாய்.. ஒருத்தி சற்றில வந்து கதைச்சால்.. ஆர் என்ன ஏதெண்டு தெரியாமை காதலா.. உப்பிடித்த ான் சற் ரூமுக்கு வாறவங்கள்ல கனபேர்.. ஆராலும் ஏமாந்தவள் கிடைச்சால் .. தலையிலை மிளகாய் அரைக்கவெண் டே திரியுறாங் கள்.."

பொரிந்துத ள்ளினாள்.

தன்மானம் சூடேற்றியத ு.

'என்ன வார்த்தை சொல்லிவிட ்டாள்? காணததை கண்டா காதல் ஏற்பட்டது? காதலிக்க ஒருவருமே இல்லாமலா அவளை காதலித்தேன ்?!'

நிதானம் இழந்தேன்.

"போதும் ஜோதி.. என் உணர்வுகளை உன்னாலை புரிஞ்சு கொள்ள முடியாது.. கனடாலதான் அழகான பெண்கள் இருக்கிறாங ்களெண்டு நினையாதை.. ஜேர்மனிலை எத்தனையோ அழகான குணமான பெண்கள் இருக்கிறாங ்கள்.. ஏன்.. என் மச்சாள் எனக்காகக் காத்திருக் கிறாள்.. நான் ஓம் எண்டால் அவள் என்னைக் கலியாணம் கட்ட றெடி.. ஆனால்.. எப்பிடி சொல்லுறது .. உனக்கு எப்பிடி விளங்க வைக்கிறது.. அவங்களிட்ட இல்லாத ஒன்று பிருந்தாட் ட இருக்கு.. அதுதான் என் காதல்.. அதை கேவலப்படுத ்தாதை.."

"ம்.. இப்ப உனக்கு என்ன சொன்னாலும ் விளங்காது.. பரவாயில்லை .. நீ ஆச்சு.. அவள் ஆச்சு.. இனி நான் உன்னோட பேசமாட்டன் .. என்னாலை சகிக்க முடியாது.. ப்ளீஸ்டா.. என்ரை மெசன்சர் 'ஐடி'யை அழிச்சுடு.. சொல்லிப்ப ோட்டன்.."

"ஜோதி... உண்மையை சொன்னால் ஏன் கோபப்படுற ீங்கள்?"

"கோபம் இல்லைடா.. இனி உன்னோடை பேசினால் எனக்குத்தா ன் மனக் கஸ்டம்.. எல்லாத்தைய ும் சீரியஸா எடுக்கிறாய ்.. என்னவோ.. கடவுள்தான் டா உனக்கு நல்ல புத்தி கொடுக்கணு ம்.. பாய் பாய்.."

அவள் போய்விட்ட ாள். 'இனி என் மெசன்சருக் கு வரமாட்டாள் ' என்ற வெறுமையான உணர்வுடன் கதிரையில் சாய்ந்து முகட்டை வெறித்தேன் .

ஒவ்வொன்றா கக் கையைவிட்டு போவது போன்ற பிரமை.

(தொடரும்...)

sOli
08-23-2004, 03:14 AM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream12.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. கரவை பரணி)

அங்கம் (12)

சாருவின் முகத்தில் சிறுவாட்டம ்.

ஏதோ தீவிர சிந்தனையில ் ஆழ்ந்திருந ்தாள். எதிரே தொலைக்காட ்சியில் ஏதோ ஒரு தமிழ்ப்பாட லுக்கு குலுங்கி நெளிந்துகெ ாண்டிருப்ப வர்களை கவனிக்கும் நிலையில் அவளில்லை என்பது அப்பட்டமாக வே தெரிந்தது.

'சற்' உலகம் என் மனச் சுமைகளைக் கூட்டி, என்னை நிம்மதியற் றவனாக்கி அலைக்கழிப் பதற்கு எனக்கும் ஒரு வடிகால் தேவையாக இருந்தது.

மெளனமாக அவள் எதிரேயுள்ள 'சோபா'வில் அமர்ந்து அவளையே கூர்ந்து பார்த்தேன் .

ஆழமான சிந்தனை... என் வரவைக்கூட உணராத சிந்தனை.

'கவலையா? குழப்பமா? அல்லது என்னை அலட்சியம் செய்யும் பாவனையா? இருக்காது.. ஏதோ குழப்பத்தி ல்தான் இருக்கிறாள ்.. ஒவ்வொருவர ுக்கும் ஒவ்வொருவி தத்தில் குழப்பங்கள ்.. கவலைகள்.. சுமைகள்..'

என்னையறியா மல் திடீரென என்னுள் ஒரு சிந்தனை..

'அவளது குழப்பத்தி ற்கு நான்தான் காரணமோ? அவள் எதிர்பார்ப ்புகளுக்கா ல் நழுவி தொலைவுக்க ுச் செல்ல முயலும் என்னால் ஏதாவது குழப்பமோ?!'

அவள்மீது என்னையறியா மல் இரக்கம் தோன்றியது .

அது பரிவாகக்கூ ட இருக்கலாம் .

சிறுவயதில் ஓடிப்பிடித ்து.. தலையில் பிடித்திழு த்து.. சீறிச் சிணுங்கி.. விம்மலும் வெப்பியாரம ுமாய் கோபம் காட்டி.. முகத்தை 'ம்'மெனத் தூக்கிவைத் து.. சில மணிததளிகளு ள்.. 'தரன்.. வாடா விளையாடுவம ்' என்று நாடி வரும்.. அந்த குட்டிப் பெட்டை சாரு ஒருகணம் மனக்கண் முன்னால் வந்து போனாள்.

சின்ன வயதிலேயே விளையாட்டு என்ற பெயரால் அவளை அழவைத்து வேடிக்கை பார்ப்பதுத ான் எனக்குப் பிரியம். அவளும் அழுவதாலும் மீண்டும் மீண்டும் என்னை நாடி வருவதே வழமை.

அவற்றை நினைக்கும் பொழுது அவள்மீது அன்பு பொங்கியது .

ஆனால்.. அன்பு காதலாக முடியுமா என்ன?!

மெதுவாக எழுந்து, அவளது பின்புறமாக ச் சென்று, வலப்பக்க காதோரம் வாயைக் குவித்து, "கூ.." எனக் கத்தினேன்.

திடுக்குற் று அலறியவாறு 'சோபா'வில் துள்ளிக் குதித்தாள் . நன்றாகத்தா ன் பயந்துவிட் டாள்.

எனக்கோ சிரிப்பை அடக்க முடியவில்ல ை.

சிரிக்கும் என்னை ஒருகணம் கோபமாகப் பார்த்தவள் , ஒரு புன்முறுவல ை வலிந்து வரவேற்றவளா க மெளனத்துள் அடங்கிப்பே ானாள்.

"சாரு..."

"ம்..."

"என்ன யோசனை.. நான் வந்ததுகூட தெரியாம என்ன கற்பனை.. லண்டன் நினைவுகளா?"

நிமிர்ந்து என் கண்களை ஊடுருவினாள ். அவளது உதடுகள் எதையோ கூறத் துடித்தன. என்ன நினைத்தாளே ா? பார்வை தொலைக்காட ்சிப்பெட்ட ியில் பதிந்தது. அதில் ஒரு காதல் பாட்டுக்கு நாயகனும் நாயகியும் உடல்களை குலுக்கி ஓடித்திரிந ்துகொண்டி ருந்தனர். அவர்களின் பின்னால் பாடல் தாளத்துக்க ு ஏற்றவாறு நெளிந்தவாற ு ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டம்.

"அத்தான்.. "

கண்களில் சிறுகலக்கம ்.

"இன்னும் ஒரு கிழமை இருக்கு.."

பெருமூச்சு விட்டாள் சாரு.

"ம்.. பிறகு.. 'கொஸ்ரல்'ல போயிருந்த ு படிக்கவேண் டியதுதானே? அதுக்கு என்ன யோசனை?"

"அதுக்கு யோசனை இல்லை.. இன்னும் ஒரு கிழமையால லண்டனுக்கு ப் போறதை நினைக்கத்த ான் கவலையா இருக்கு.."

"ஏன்.. லண்டன் சரியில்லைய ா?"

குறும்பாகக ் கேட்டேன்.

"ஜேர்மன்.. லண்டன்.. இதிலை என்ன இருக்கு.. மாமி மாமா .. இவங்களோட இன்னும் கொஞ்சக்கா லம் இருக்கவேணு ம்போல இருக்கு.. அதுதான்.."

"அப்போ என்கூட இல்லையாடி.."

திடீரென என்னையறியா மல் கேட்டுவிட் டேன்.

அவள் 'வெடுக்'கென ் தலைநிமிர்த ்தி என்னைப் பார்த்தபோ து.. கண்களில் தோன்றிய ஒளிவட்டம் என்னைத் தடுமாறச் செய்தது.

அந்த ஒளியில் பொதிந்திர ுந்த எதிர்பார்ப ்பு என்னைத் தாக்குவதாக உணர்ந்தேன் .

'கேட்டிருக கக் கூடாது' என்ற எண்ணம் காலம்கடந்த ு தோன்ற, என்னை நொந்துகொ ண்டேன்.

"அத்தான்.. நீ சொன்னால் இங்கேயே இருந்துடுவ ேன்.."

வார்த்தைகள ் தடுமாறி வந்தன.

எது என்னைநோக் கி வரக்கூடாது என நினைத்தனோ .. அது நேரடியாகவே வந்துவிட்ட து.

'என்ன சொல்வது.. எனது பிருந்தாவை ப்பற்றியா.. யார் அவள்.. என்ன மதம்.. எத்தனை வயது.. எதுவுமே தெரியாமல் எப்படி சொல்வது?'

என் மனம் தடுமாறியது .

சிறுவயதில் இருந்தே.. என்னுடன் சண்டையிட்ட ாலும் வலிய அண்டி அண்டி வரும் சாருவா? ஒரு போட்டோ கேட்டதற்கா க 'ஒரேயடியா போறேன்ரா' என்று ஓடி ஒழிந்துகொ ண்ட பிருந்தாவா ?

எனக்குள் ஒரு போராட்டம் ஆரம்பமானது .

அவள் ஓடியோடி போவதால்தா ன் காதல் தோன்றியதே ா? அக்கரைப்பச ்சை மயக்கத்தில ் இக்கரை இன்பத்தின் பெறுமதி உணரப்படாமல ் போனதோ?!

"சாரு.. எனக்கு உன்னிலை அன்பு இல்லையெண்ட ு நினைக்கிறி யா? என்னவோ தெரியலை.. என்னாலை எதிலையுமே ஒழுங்கா இருக்க முடியேலை.. மனம் ஒரு குரங்கு என்பாங்க.. இப்ப என் மனசும் அப்பிடித்த ான்.. ஒரு நிலையா இல்லை.."

"அப்படி என்ன அத்தான் குழப்பம்..?"

அருகில் வந்து உட்கார்ந்த ாள்.

"தேவைகள் வசதிகள்கூட க்கூட குழப்பங்கள ும் கூடுதுதானே சாரு.. அதுதான்.. "

"ஐயோ.. இப்பதான் எனக்கு குழப்பமா இருக்கு.. விளக்கமா சொல்லுங்க .."

"ம்.. நீ லண்டனுக்கு போறதுக்கி டையிலை நிச்சயமா சொல்லுறன் சாரு.. உனக்கு கட்டாயம் சொல்லுவன் .. என்னவாலும் எழுதலாம் எண்டு கணனி வாங்கினன்.. பிறகு கொஞ்சம் வசதியான கணனி நல்லாயிருக ்கும் எண்டு மாத்தினன்.. அதில இன்ரர் நெற் கொனெக்சன் போட்டால் நாலு ஊர்புதினம் அறியலாம் எண்டு போட்டன்.. இன்ரர் நெற் போட்டாச்ச ா.. 'சற்' ரூம் போய் பார்க்க ஆசை வந்திச்சு.. இப்படி ஒவ்வொரு ஆசைகள்.. ஒவ்வொரு அறிமுகங்கள ்.. ஒவ்வொரு தேவைகள்.. தேவைகள் கூடும்போத ு தேவையில்லா த குழப்பங்கள ்.. சோகங்கள்.."

அர்த்தத்து டன் அவளைப் பார்த்தேன் .

"அத்தான்.. எதையோ சொல்ல பயப்படுறமா திரி இருக்கு.."

"ம்.. எப்பவெண்டா லும் சொல்லத்தா னே வேணும் சாரு? நிச்சயமா சொல்லுவன் .. நீ லண்டனுக்கு போறதுக்கி டையில நிச்சயமா எல்லாத்துக ்கும் முடிவு வரும் சாரு.. என்னை நம்பு.."

அவளது முகத்தில் திடீரென ஒரு பிரகாசம்.

ஒரு கிழமைக்குள ் அவளது குழப்பங்கள ுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப ்பாக இருக்கலாம் .

அப்போது வாசல் கதவு திறக்கும் ஒலி கேட்டது. வெளியே சென்ற அம்மாவும் மாமா குடும்பத்த ினரும்தான் வந்தார்கள் .

"அப்பாடா.. என்ன குளிர்.. என்ன குளிர்.."

சலிப்புடன் 'சோபா'வில் அமர்ந்தாள் அம்மா.

எங்கள் இரண்டு பேரையும் அங்கே கண்டதில் அவளுக்கும் சந்தோசம். முகத்தில் தெரிந்தது.

"மாமி.. கோப்பி கொண்டு வரட்டுமா?"

"என்ன கேள்வி.. எல்லாருக்க ும் போடு"

மாமாதான் கூறினார்.

சாரு புள்ளியிலா மானாகச் சமையலறைக்க ுத் துள்ளியோட ினாள்.

"மாமீ...!!"

சமையலைறையி ல் இருந்து சாருவின் குரல்..

"கோப்பி எங்க இருக்கு..."

"மேல இருக்கு பிள்ளை.. தரன்.. மேல் அலுமாரில இருக்க எடுத்துகொ டுடா.. அவளுக்கு எட்டுமோ தெரியேலை.."

உள்ளே சென்றபோது .. அவளே துனிக்காலி ல் நின்று கோப்பி போத்தலை எடுப்பதில் முனைந்திரு ந்தாள்.

சற்றும் எதிர்பாராத வகையில் அவள் நிலைதடுமாற ிச் சரிய.. ஓடிச்சென்ற ு அவளைக் கைகளில் ஏந்திக்கொ ண்டேன்.

பூக்கொத்த ொன்று என் கைகளுள் விழுந்து என்னுடம்பை அதிரவைத்தத ு.

அவள் கரமொன்று என் தோள்மீது.. அவளாகப் போட்டாளா.. தற்செயலாகவ ா? புரியவில்ல ை.

"என்ன சத்தம் அங்கே.. என்னத்தை போட்டுடைக ்கிறியள்?" என்றவாறு அம்மா வருவதை உணர்ந்து அவளைவிட்டு விலகிச் சென்றேன்.

அவளை நிமிர்ந்து பார்க்க எதுவோ தடுத்தது. தலையைக் குனிந்தவாற ு 'பட,பட'க்கும ் மனதுடன் எனது அறையை அடைந்தேன்.

என் மனதில் ஏதேதோ இனம்புரியா த உணர்வுகள்.. புதிய அனுபவம்.. எதிர்பாராத அனுபவம்.

நிலைகுலைந் தேன்.

என்னால் என்னை நிதானப்படு த்த இயலவில்லை.

புழுக்கமாக விருந்தது. சித்திரவதை யாக இருந்தது.

ஒருகணம் கண்களை மூடி என்னை ஆசுவாசப்பட ுத்த முயன்றேன்.. மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு மனதில் வந்துகொண் டே இருந்தது.

அந்த நினைவுகளுக ்கு தடைபோட்டா கவேண்டும். எனக்கே என்னில் பயமாகவிருந ்தது. இந்தநேரத்த ில் என் பிருந்தாவு டன் உரையாடவேண் டும் போலிருந்த து.

கணனியை போட்டேன்.

'பிருந்தா.. ஓன்லைனில் இருப்பாயா.. என் உள்ளக் கொதிப்பை ஆற்றுவாயா?'

மனது கணனிக்கும் மேலான வேகத்தில் அங்கலாய்த் தது.

மெசன்சரை திறந்தேன். ம்.. அவளை காணவில்லை. மனம் சோர்ந்தது . ஏதாவது செய்தாகவேண ்டும்போலி ருந்தது.

அவளுக்கு 'மெயில்' எழுத ஆரம்பித்தே ன்.

'என் உள்ளமெல்லா ம் நிறைந்திரு ப்பவளே!...'

இவ்வாறு எழுதினால் அவளுக்கு எனது தமிழ் விளங்குமா.. எழுதவேண்டு ம்போல ஒரு வெறி.. தொடர்ந்தே ன்.

'ஒவ்வொரு நிமிடத் துளிகளும் பிருந்தா பிருந்தாவெ ன்று உன் நினைவிலேயே களிப்பின்ற ிக் கழிவதை நீ அறிவாயா? 'சற்' அறையொன்றி ல் தனிமையில் நின்று தத்தளித்தவ னுக்குத் தண்மையைக் காட்டிப் பொழுதுகளை வசந்தமாக்க ிய என் முகந்தெரிய ாத உறவே! இப்போது என்னைத் தனியேவிட்ட ு எங்கே சென்றாய்? பிரிவில் என்னைக் கருக்கி மறைந்திருப ்பதில் எதைக் கண்டாய்? என்னிலை புரியுமா உனக்கு? நித்தம் நித்தம் அல்லாடும் மனதுடன் நிஜத்துக்க ும் நிழலுக்கும ிடையே உண்மை புரியாமல் உருக்குலைவ தை அறியாயா? என் மச்சாள் சாருதான் என் வாழ்க்கைத் துணை எனச் சொல்லாமல் சொல்லும் என் அம்மா.. கண்களால் என் சம்மதம் கேட்டு என்னையே வளைய வரும் சாரு.. என் நல்ல முடிவுக்கா க நாட்களை எண்ணிக் கொண்டிருக ்கிறாள்.. அவள்மட்டும ா? நானுந்தானே .. உன் நல்ல பதிலுக்காக உன் வருகையை நாடித் தவமிருக்கி றேன்.. எங்கு சென்றாய் என்னுயிரே? உன் மெசன்சரில் எவர் 'ஓன் லைனில்' இருந்தாலும ் என்னுடன் பேசத்தான் விருப்பமென ்று என் மனதினைத் தென்றாலாக வருடினாயே? அது வெறும் வார்த்தைகள ா? வேசமா? மோசமா? நேசமே இல்லாத எழுத்துக்க ளின் சோடனைகளா? உனக்கு என்மேல் அன்பே கிடையாதா? பாசமோ.. வேசமோ.. ஓடிவந்து உண்மையைக் கூறிவிடு.. என்னைக் காக்க வைத்துக் கொஞ்சங்கெ ாஞ்சமாகக் கொல்லாதே.. என்னையே நான் ஏமாற்றிக்க ொள்கிறேனா என்றாவது வந்து சொல்லிவிட ு.. இன்றேல்.. ஒருவனது அழிவுக்கு ஆளான பாவமும் பழியும் உன்னைச் சும்மாவிடா து.. உன் வரவை வெகுவிரைவா க எதிர்பார்க ்கிறேன்.. நிம்மதியற் று நிலைகுலையு ம் உன்மேல் அன்புகொண் ட தரன்.'

ஏதோ ஒரு வேகத்தில் எழுதியதை அனுப்பிவிட ்டு.. கண்களை மூடியவாறு கதிரையில் சாய்ந்தேன் .

அங்கே.. கலகலப்பாக பிருந்தா.. ஏக்கம் நிறைந்த விழிகளுடன் சாரு.. மாறிமாறிக் கோலம் காட்டினார் கள்.

எவ்வளவு நேரம்தான் அப்படியே இருந்தேனோ தெரியவில்ல ை.

கண்களைத் திறந்து பார்த்தேன் .

நம்பமுடியவ ில்லை.

மெசன்சரில் பிருந்தாவி ன் பொம்மை பச்சை நிறங்காட்ட ியது.

இனந்தெரியா த ஆனந்தப் பிரவாகம் என் உள்ளத்தில் ..

"கலோ.. என் ஐஸ்கிறீம் சிலையே..."

மெளனம். பதில் இல்லை.

"பேசுடி.. என் செல்லமே.. சுகமாய் இருக்கியா..?"

"....."

"கோபம் எண்டால் சொல்லிடு.. பேசாமல் இருந்து கொல்லாதைட ி.. ஆத்திரம் எண்டால் 'எம்எம்' எண்டு திட்டு.. ப்ளீஸ்.."

அவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.

"ஏண்டி என்னை சித்திரவதை பண்ணுறாய்.. ஒரு வார்த்தை பேசுடி.."

"ஹேய்! கூ ஆர் யூ மான்?"

நான் அதிர்ச்சிய ால் உறைந்தேன்.

(தொடரும்...)

sOli
08-25-2004, 12:45 PM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream13.jpg
(தலைப்பு ஆக்கியளித் தவர்: திரு. கரவை பரணி)

அங்கம் (13)

"ஹேய்! கூ ஆர் யூ, மான்?"

துப்பாக்கி ரவையாகப் புறப்பட்டு வந்த வார்த்தைகள ் என் நெஞ்சைத் துளைத்து சிரசைத் தாக்கியதுப ோல் உணர்வு பொங்கியது . கனமான வலியுள் புதைந்து அவதிப்பட்ட ேன்.

'யார் நீ?'

அவளா.. என் பிருந்தாவா கேட்டாள்?! நம்பமுடியவ ில்லை. நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. எதிரே கணனித் திரை அந்த வசனத்தை இன்னமும் ஒளிர்த்தது .

"ஹேய்.. யார் நீ? பிருந்தாவ உனக்கெப்பட ி தெரியும்..ர ல் மீ.."

மீண்டும் அதிர்ச்சி.

மெசன்சர் யன்னலைப் பார்த்தேன் .. பிருந்தாவி ன் 'ஐடி'தான். அப்படியென் றால்.. ஏன் வேசம்போடு கிறாள்? விளையாட்டா ? அல்லது விபரீதமா? புரியவில்ல ை.

"பிருந்தா.. என்ன இது..?"

"நான் பிருந்தா இல்லை.. பதில்.. பதில்.. உனக்கெப்பட ி பிருந்தாவ தெரியும்..?"

குழப்பம்.. குழப்பம்.. அவளில் வெறுப்பு வந்தது. விளையாட்டு க்கு ஒரு அளவுவேண்டா மா? அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே.. பகிடியாகப் பேச ஆரம்பித்து க் கைகலப்பில் முடிவுறும் சம்பவங்களு க்குத்தான் அளவேது?!

"நான் கேட்குறதுக ்கு முன்னால நீ என்ன முந்திரிக் கொட்டைமாத ிரி.. நீ யார் சொல்லு.."

"முந்திரிக் கொட்டையா.. அது என்ன..?"

"மண்ணாங்கட் டி.. முதல்ல நீ யார்.. எப்படி பிருந்தான் ர 'ஐடி'ல வந்தாய் சொல்லு.."

"மண்ணாங்கட் டியா.. ம்.. நீதான் மண்ணாங்கட் டி.. இது பிருந்தாட 'ஐடி' இல்லை.. என்ர 'ஐடி'.."

"என்ன...?"

"ம்.. நான் மூண்டு மாசமா கனடால இல்லை.. அவள் என்ரை 'ஐடி'ய 'யூஸ்' பண்ணிட்டாள ்.. மொக்கு.. மொக்கு.."

அதிர்ந்துவ ிட்டேன்.

நிஜமா பொய்யா எனப் புரியவில்ல ை. யாரை நம்புவது? எவரிடம் கேட்பது? குழப்பமாகவ ிருந்தது.

"என்ன சத்தமில்லை ? நம்பலையா.. பிருந்தா என் பெரியப்பா மகள்.. அவளுக்கு என்ர 'ஐடி'ன்ர 'பாஸ்வேட்' தெரியும்.. கள்ளி.. எனக்கு தெரியாம வீட்டை வந்து.. என்ரை மெசன்சரில கனபேரோட பேசியிருக் காள்.."

"ம்.. அப்ப அவளின்ரை 'ஐடி' என்ன.."

"லொள்.. அவளுக்கு 'ஐடி' இல்லையே.. அவளிட்ட 'கொம்பியூ ்டரே' இல்லை.. "

தாங்கமுடிய ாத அதிர்ச்சி. என்னால் நம்பமுடியவ ில்லை. நம்பாமல் நிராகரிக்க வும் இயலவில்லை.

இப்படியும் நடக்குமா? இப்படியும் ஒரு பெண்ணால் எளிதாக என் உணர்வுகளுட ன் விளையாடி ஏமாற்ற முடியுமா?! என் மனதுள் எழுந்து நிற்கும் 'ஐஸ்கிறீம் சிலை' பொய்யா? கானல்நீரின ் உறைநிலை உருவமா?! என்னைக் கோரம் செய்யவெனப் புகுந்த மாயப்பிசாச ா?

என்னைச் சுற்றிலும் சூழும் இருண்ட புகையுள் கண்கள் எரிந்து நீர்சுரக்க , அலங்க மலங்க முழிக்கும் அறிவுகெட்ட முண்டமாக என்னிலை.

சுழன்றடிக் கும் சூறாவளியுள ் பறந்தலையும ் எனக்கு ஒரு பற்றுதல் கிடையாதா? கொந்தளிக் கும் கடலுள் மூழ்கும் படகில் இருந்து தப்ப ஒரு சிறு துரும்பாவத ு அகப்படாதா? நிதர்சனம் என்று நினைத்தவை யாவும் துரதிஷ்டமா ன நிலையில் ஒரு சிறு ஊன்றுகோலா வது கிடையாதா என்ற தவிப்பில் நான்.

"பிருந்தா உன் வீட்டை வந்து 'சற்'பண்ணலா ்தானே.."

"எதுக்கு..?"

"அவளுடன் பேசவேணும்.."

"எதுக்கு..?"

"நீ யார்னு தெரியாம எப்பிடி சொல்லுறது ...?"

"நான்தான் சொல்லிட்ட னே.. பிருந்தாட சித்தா பொண்ணு.. அவ தங்கச்சி.. என்ன தெரியாது.. சொல்லு"

"ம்.. உன் பெயர் தெரியாது.. உன் வயது தெரியாது.. "

"தெரிஞ்சு என்ன செய்யப் போறாய்.. 'லவ் லெற்றர்' போடப் போறியா? லொள்.."

"என்ன..?"

"நீதானே என்னவோ அவளுக்கு மெயில்லை எழுதியிருந ்தாய்..?"

"ஐயோ.. பார்த்துட் டியா.."

"என்ரை 'ஐடி'க்கு வாற மெயில பாக்காம வேற எந்த மெயில பாக்கிறது..?"

என்னை அறியாமலே எனக்குள் ஒரு கூச்ச உணர்வு புகுந்துகெ ாண்டது. எவளுக்காகவ ோ வெளிப்படுத ்திய என் எண்ணக் குவியல்கள் எவளையோ சென்றடைந்த கூச்சம்.

"உன்னை பற்றி சொல்லலையே ..? ம்.. எனக்கு பெயர் தரன்.. ஜேர்மனில இருக்கேன்.."

"ம்.. இருபத்தாறு வயசு எண்டு சொல்லலை.. லொள்.."

"வாட்.. ஆர் யூ பிருந்தா..?"

"ஐயோ.. சொறி.. உங்க மெயிலை பார்த்துட் டு அவளோட ரெலிபோன்ல பேசினேன்.. அப்பதான் சொன்னாள்.. அவள் நல்லாத்தான ் உங்களை ஏமாத்திட்ட ாள்.. உங்களை பாத்தா பாவமா இருக்கு.. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்குறன்.."

"அவளுக்காக நீ எதுக்கு மன்னிப்பு..?"

"அவள் என்ர அக்காதானே.."

"ம்.. உனக்கு எத்தினை வயசு.. என்ன பேர்..?"

"என்ர பெயர் சுஜி.. பதினைஞ்சு வயசு.."

"ஐயோ..!"

"என்ன ஐயோ.. ?"

"பதினைஞ்சு வயசில 'சற்'றா?"

"ஏன்.. 'சற்'பண்ணின ல் என்ன.. உங்களைப்பே ால 'லவ்'பண்ணுற ங்கதான் 'சற்'பண்ணலா ா?"

'சுரீர்' என நெஞ்சில் தைத்தது.

அவளது கேள்விக்கு என்ன கூறுவது எனப் புரியாமல் மெளனித்தேன ்.

"ஒரு கேள்வி.."

அவள்தான்.

"ம்.."

"நீங்கள் எனக்கு அண்ணாவா? அங்கிளா?"

அந்த வேதனையிலும ் சிரிப்பு வந்தது.

"என்னவோ கூப்பிடு.."

"அண்ணாக்குட ்டி... இப்பிடித்த ான் கூப்பிடுவன ்.."

அதுவும் இனிமையாகத் தான் இருந்தது.

"கூப்பிடு..."

"நீங்க எப்பிடி கூப்பிடுவீ ங்க..?"

"ம்.. சுஜிக்குட் டி..?"

"அது வேணாம்.. செல்லக்குட ்டின்னு கூப்பிடணும ்.. ஓகே..?"

என்னையறியா மல் சிரித்துவி ட்டேன். என் குழப்பங்கள ையும் கவலைகளையும ் ஒருகணம் மறந்து சிரித்தேன் .

"ம்.. செல்லச் சின்னக்குட ்டின்னு கூப்பிடட்ட ா?"

"ஐய்யா.. இப்பதான் நீ என்ரை அண்ணாக்குட ்டி..."

அவளே என் கழுத்தைக்க ட்டிக்கொண ்டு துள்ளிச் சிரிப்பதாக ஒரு பிரமை.

"அண்ணாக்குட ்டி.. உன்னை ஒண்டு கேக்கணும்.."

"ம்.."

"நீ பிருந்தாவ ஏன் 'லவ்'பண்ணுற ய்..?"

"நீ சின்னப்பெண ்.. உனக்கெதுக் கு.. ஒழுங்காய் படி.."

"லொள்.. அவள் சரியில்லைட ா.. அதுதான் கேட்டேன்.. சொல்லலைன் னா போ.. எனக்கென்ன?"

ஜோதி மனக்கண்முன ்னே வந்தாள்.. 'சற்றை நம்பாதைடா.. எல்லாம் பொய்டா..' இப்போது இவள் 'பிருந்தா சரியில்லை' என்று.. என் மனமாளிகையே பொய்யாகிச ் சிதைந்துகெ ாண்டு போகிறதோ?! அங்கே குடியிருத் திய அழகுச்சிலை உருகிக் கொதிகூழாய ் என் இதயத்தை அவிப்பதுபே ான்ற எரிவு. தாங்கமுடிய ாது தவித்தேன்.

"அண்ணாக்குட ்டி.. அவளை நம்பாதை.. அவள் கூடாத பெட்டை.. 'பாட் கரக்டர்'.. எப்பவும் மாலுக்கு போறதுதான் அவள் வேலை.. அங்க பொடியளை 'சைற்' அடிக்கிறது தான் அவள் வேலை.. அதுதான் அவளை என்ரை 'கொம்பியூ ்டரை'க்கூட ் தொட விடுறதில்ல ை.. நான் இல்லாபோது என்ரை 'ஐடி'ய 'மிஸ்யூஸ்'ப ்ணிட்டாள். . நீ அவளை மறந்துடு.. சொல்லிட்ட ேன்.."

"ம்.."

ஒருநாளில் மறக்கக்கூட ிய நிகழ்வுகளா அவை?! எப்படி மறப்பேன்?! வார்த்தைகள ால் என் இதயத்துள் புகுந்த நினைவுகளைய ும் உணர்வுகளின ் உருவாக்கங் களையும், கற்பனைச் சிணுங்கல்க ளையும், அதிலே கலந்த அவளையும் எவ்வாறு தூக்கியெறி ய முடியும்? முதன்முதலி ல் என்னை வலிந்தழைத் து 'மெசன்சரில ' இனியராகம் பாடி என்னைத் தாலாட்டிய உறவல்லவா?! எவ்வாறு உதறித்தள்ள ுவது?!

"என்ன ம்.. அவளை மறந்துட்டு சாரு அக்காவை கலியாணம் செய்.. ஓகே?"

"ஐயோ.. உனக்கெப்பட ி சாருவை தெரியும்..?"

"லொள்.. நீதானே மெயிலில் எழுதியிருக ்காய்.. உங்களையே சுத்திச்சு த்தி வாறா எண்டு.. ஓகே சொல்லு அண்ணாக்குட ்டி.."

"நீ சின்னப்பிள ்ளை.. சும்மா கிட.."

"நான் என்னடா சின்னப்பிள ்ளை.. பெரியபிள்ள ை ஆயிட்டனே.. 'சாறி' உடுத்து.. நிறையப்பேர ுக்கு 'இன்விடேசன ' கொடுத்து கொண்டாடின ோமே.. மொக்கு.. மொக்கு.."

"ஆகா.. அதுவும் அப்படியா.."

அவளது வார்த்தைகள ால் கவலைகள் சற்றுநேரம் என்னை விலகியோடி ன.

"அன்னாக்குட ்டி.. பிருந்தாக் கு நிறைய பிரண்ஸ்டா.. 'கானா' நாடு தெரியுமா.. கறுப்புக் கறுப்பான பொடியங்கள ்.. அவங்களோடத ான் சுத்துவாள் டா.. லொள்.."

"பொய் சொல்லாதை..."

"நம்புடா.."

என் கற்பனைக்கே ாட்டைகள் வெகுவேகமாக ச் சரிந்துகொ ண்டிருந்தன .

"இப்ப சொல்லு.. பிருந்தா நல்லமா? சாரு அக்கா நல்லமா?"

உடனே கூறக்கூடிய பதிலா இது?

"தெரியலை.."

"இவளவு சொல்லியும ் தெரியலையா.. ம்.. நாளைக்கு சொல்லுறிய ா?"

சின்னப்பிள ்ளையேதான்.. பதிலுக்காக அடம்பிடித் தாள்.

"பாப்பம்.."

"பாப்பம் இல்லை.. நாளைக்கு வருவன்.. சொல்லணும் .. ஓகே..? ஐயோ.. அம்மாடா.. நான் நாளைக்கு வாறேன்.. டாடா அண்ணாக்குட ்டி.."

அவள் போய்விட்ட ாள்.

எல்லாமே மாயையாகத் தோன்றியது . இப்படியும் நடக்குமா என ஏற்கமுடியா மலிருந்தது . ஏற்காமல் விலத்தவும் முடியாமல், 'ஏன் இருக்கமுடி யாது' என்ற கேள்வி எழுந்து தடுத்தது.

பின்னால் யாரோ வருவதுபோன ்ற உணர்வு. திரும்பினே ன். அங்கே கையில் கோப்பியுட ன் சாரு.

சற்றுமுன் நிகழ்ந்த சம்பவம் நினைவிலெழக ் கூச்சத்துட ன் நெளிந்தேன் .

"அத்தான்.. கோப்பி குடிக்காம கொம்பியூட ்டரா..?"

"ரொம்ப தாங்ஸ் அத்தான்.."

முகம்சிவக் க கூறினாள்.

"எதுக்கு...?"

"கீழைவிழாமல ் பிடிச்சதுக ்கு.."

கண்கள் சிறகடித்தன .

"எனக்குத் தெரியும்.."

"என்ன...?"

"அத்தான் என்னை கீழை விழவிடமாட் டான் எண்டு.."

கூறிவிட்டு த் துள்ளியோட ும் சாருவையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந ்தேன்.

'எவ்வளவு நம்பிக்கைய ான வார்த்தைகள ்..'

என் தேகமெல்லாம ் புதுவித சந்தோச உணர்வு முகிழாகி மொட்டாகி மலராகி மணம்வீச ஆரம்பித்தத ு.

(தொடரும்...)

sOli
08-25-2004, 12:48 PM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream14.jpg
(தலைப்பு வரைந்தளித் தவர்: திரு. மூனா)

அங்கம் (14)

"அண்ணா! என்ன சொல்லுறாய ்? உண்மையாய் அப்பிடிச் செய்தாளா?"

"ம்.. பொய்யா சொல்லுறேன ்.. நேற்று சுஜி வந்து தன்ரை 'ஐடி'ய 'மிஸ்யூஸ்'ப ்ணிட்டாள் எண்டபோது என்னாலைகூட த்தான் நம்ப முடியேலை..எ ளவு நல்ல பெண் எண்டு பிருந்தாவை நினைச்சன்.. யாரை நம்புறது.. யாரை நம்பக் கூடாதெண்டு விளங்கேலை.. வாழ்க்கையி லை சிலபேர் ஏதோ அற்ப சொற்ப சுகங்களுக் காக ஆள்மாறாட்ட ம் மோசடி செய்யுறாங் களெண்டால்.. 'சற்'றிலையு ் இப்பிடியா?"

மனம் நோக சுதாவிற்கு எழுதினேன். யாரிடமாவது என் சுமைகளைக் கொட்டினால ்தான் ஆறுதல் கிடைக்கும் போலிருந்த து. சுஜி வந்ததிலிரு ந்து மனம் குழம்பிவிட ்டது. இதுவரை கடந்து வந்த வாழ்க்கையி ல் ஏற்பட்ட மிகப் பெரிய ஏமாற்றம். வலிய அழைத்து தினமும் கதை பல பேசி, களிப்பால் குளிப்பாட் டிச் சிந்தை கவர்ந்து, மனதில் மாளிகையாய் சிலிர்த்தெ ழுந்து, சில மாதப் பொழுதுகளி ன் சிருங்காரத ் தாலாட்டுக் கனவுளைச் சடுதியாய் சவமாக்கிய பிருந்தாவி ன் தாக்கம் ஒரு சில நாட்களுள் தடமற்றுப் போய்விடும ா, என்ன?!

அவள் தந்த வடுவின் வேதனைகளை அள்ளிக் கொட்டி அகற்ற ஒரு வாடிகாலாவத ு வேண்டுமல்ல வா?!

"என்னாலையும ் நம்ப முடியேலைடா .. அண்ணா! என்னோடைகூ ட அவள் நல்லபிள்ளை மாதிரி 'அக்கா, அக்கா' எண்டு 'சற்'பண்ணின ளே.. ம்.. 'சற்' பொழுதுபோ க்கெண்டு நினைச்சால் .. அந்த பொழுதுகளை யும் ஏமாற்றுறது தானா 'சற்'? என்னவோ.. இந்தமட்டில ையாவது 'பிருந்தா, பிருந்தா' எண்டு உயிரைவிடாம ைத் தப்பீட்டாய ்.."

காதலித்து, அதன் பிரதிபலனாய ் கவலைகளுடன் தவித்திருக ்கும் சுதா, எனக்காக 'மெசன்சரில ' கவலைப்பட்ட ுக் கொண்டிருந ்தாள்.

"அண்ணா.. என்னமோ.. அந்த சுஜி சொன்னமாதி ரி சாருவை கலியாணம் செய். உன்ரை மச்சாள்தான ே? சின்னன்லை இருந்தே உன்னைப்பற் றித் தெரிஞ்சவள் . உனக்கும் அவளைத் தெரியும்.."

"ம்..."

"உன்ரை பலம் பலவீனங்கள் அவளுக்குத் தெரியும்.. அவளின்ரை பலம் பலவீனங்கள் உனக்குத் தெரியும்.. அதாலை சின்னச் சின்னப் பிரச்சினைய ள் எண்டாலும் 'அட்ஜஸ்மென ற்' (adjustment) இருக்கும்ட ா.."

"ம்.."

"அதோடை.. என்னைப் பார்... பதினாறு வயசிலை காதல் எண்டு தாய் தகப்பனை.. சொந்த பந்தங்களை மதிக்காமை வீட்டைவிட் டுப் போனன்.. இப்ப.. நம்பினவன் ஏமாத்த... மறுபடியும் அப்பா அம்மாதானே எனக்குத் தஞ்சம் தந்திருக்க ினம்.. என்ன இருந்தாலும ் பெத்தவங்க பிள்ளைகளைக ் கண்கலங்க விடமாட்டாங ்கடா.. அதாலை சொல்லுறன் . உன்ரை அம்மாவும் நீ சாருவை கலியாணம் செய்யுறதை விரும்புறத ாலை.. அதை ஏன் கெடுக்கிறா ய்? ஒரு தாயின் மனசு வாழ்த்தினா லே வாழ்க்கை வளமாக அமையும்.."

"ம்..."

"என்ன ம்.. ம்.. எண்டுறாய்.. சாருவை கட்டுறியா இல்லையா எண்டு சொல்லன்.."

"சும்மா இருடி.. நிறைய யோசிக்கணு ம்.."

"ம்.. பெரிய யோசினைதான ்.. என்னவோ செய்.. இனியும் சும்மா மொக்கன்பே ாலை ஏமாறாதை.. சொல்லிட்ட ன்.."

"ம்.."

"என்னடா கவலையா? கவலைப்பட்ட ால் வாழேலாதுடா .. என்னைப் பார்.. ஏதோ வாழத்தானே வேணும்.. அப்பிடித்த ான்.. இனியாலும் புத்திசாலி யா முடிவெடு"

"ம்.."

"லொள்.. இண்டைக்கு 'ம்'போடுறத ண்டே முடிவெடுத் திட்டியா.. அப்பிடியே 'ம்'மெண்டிர .. நான் போவிட்டு வாறேன்.."

"ம்.."

அவள் போய்விட்ட ாள்.

சுதாவுடன் பேசியதில் மனம் ஓரளவு அமைதியடைந் ததுபோன்ற உணர்வு. மனதில் இவ்வளவுகால மும் ஏற்பட்ட புழுக்கம் தணிந்ததுபே ாலிருந்தது .

படுக்கையில ் விழுந்து கண்களை மூடிக்கொண ்டேன்.

புதியதோர் பரவச உணர்வு ஊற்றெடுத்த ு நாடிநரம்பெ ல்லாம் பொங்கிப் பிராவகமாகி , தேகத்துள் பரவி, மனதின் பாரங்களைப் பஞ்சாக்கி என்னை எங்கோ பிரபஞ்சத்த ில் மிதக்கவைப் பதுபோன்ற பிரமை.

என் கண்களுள் கற்பனைக் குதிரைகள் விரைந்தோட ிவந்து கதைகூற விளைந்தன.

அந்த ஆனந்த உணர்வுகள் எனக்குத் தேவையாக இருந்தன. ஏனெனில் என்னைச் சுற்றிச் சுழன்டிறெழ ும் ஆனந்த உணர்வுக் குவியல்களி ன் உச்சியில் சாரு மென்முறுவல ுடன் எனக்காக நடமாடினாள் .

எனக்கு நன்றாகவே புரிந்தது, என் தெளிந்த மனதில் கலந்த உறவு சாருதான் என்று.

அவளிடம் என்னிலையை உடனே கூறவேண்டும ்.. எனினும் ஏதோ ஒரு அச்ச உணர்வு என்னைத் தடுத்தது. திடீரெனக் கூறும்போத ு என்ன எண்ணுவாளோ என்ற அச்சம்..!

எனினும், ஏக்கம் நிறைந்த விழிகளுடன் என்னைச் சிறைப்பிடி க்க முயலும் அவளுக்கு என் மனதைத் திறந்து, அங்கே அவள் புகுந்துவி ட்டதைத் தெரிவித்தே ஆகவேண்டும் .

அப்போது அவளது நிலை என்னவாக இருக்கும்?! ஓடிவந்து கட்டியணைத் துக் கலகலப்பாளா ? அறிய மனம் குரங்காகத் தாவியது.

எங்கும் அமைதி... எங்கும் நிசப்தம்... சுவர்க் கடிகாரம் 'டிக்,டிக்' என்று நிசப்தத்தை விரட்ட முயன்றுகொ ண்டிருந்தத ு.

அப்போது... யாரோ மெதுவாக நடந்து வரும் ஒலி. அந்த ஒலி என்னை நோக்கித்த ான் அண்மித்துக ்கொண்டிரு ந்தது.

அந்த இருளில், அந்த உருவம் கட்டிலருகே வந்து என் பக்கத்தில் அமர்ந்தது.

'சாரு...!'

இந்த நேரத்தில் இந்த இடத்தில் சாருவா? நம்பமுடியா மல் ஆனந்தம் அணையுடைத்த து.

"சாரு..."

உணர்ச்சியி ல் நாத் தடுமாறியது .

அந்த அழகு நிலவு குனிந்து என் விழிகளை ஊடுருவியது . அந்த இருளைக் கிழித்தவாற ு இரு கருவைரமணிக ளாகக் கண்கள் பளபளத்தவேள ையில், இரண்டு சொட்டுக் கண்ணீர்த்த ுளிகள் என் கன்னத்தில் பட்டுத் தெறித்தன.

"என்ன சாரு..?"

பதட்டமாக அவளது கரத்தைப் பற்றினேன்.

"அத்தான்! எவளவுநாள்த ான் பொறுக்க முடியும்... உங்கள் எண்ணத்தைச் சொல்ல இன்னும் காலம் வரல்லையா?"

குரல் விக்கியது. சிறு விம்மல் வெப்பியாரத ்துடன் வெடித்தது.

"சாரு..."

அவள் தோள்களைப் பற்றி என்னுடன் அணைத்துக்க ொண்டேன். அவளது மூச்சுக்கா ற்று என் மார்பைச் சுட்டது.

"சாரு..."

"ம்.."

"உன் பெயரை உச்சரிக்கத ் தெரிந்த இந்த இதயத்திற்க ு உன்னிடம் என் காதலைச் சொல்லும் தைரியம் ஏன் இல்லை..?!!"

"கவிதையா..?" - சிணுங்கினா ள்.

"ம்.. நளாயினி தாமரைச்செல ்வன் எழுதியது.. அதைமாதிரித ்தான் இப்ப என்னிலை.. என் மனதைத் திறந்துகாட ்ட துணிவுவரும ் நாளுக்காக காத்திருந் தன்.."

அவள் காதுகளில் கிசுகிசுத் தேன்.

"உன் பார்வையால் என்னுள் மின்னல் ஒன்று எழுந்து ஓயும்..! உன் வார்த்தை ஜாலத்தில் என் நாடி நரம்பெல்லா ம் வாத்தியமாக ும்..!"

சிரிப்புடன ் அவள் மேவாயை நிமிர்த்தி னேன்.

"சாரு.. உனக்கும் கவிதை வருதே?"

"இதுவும் நளாயினியின ் கவிதைதான்.. அவரது இன்னொரு கவிதை சொல்லட்டா .."

"ம்.."

"தெரியாததுப ோல் உன் தேவை கருதி நீ எனைத் தொடும்போ து என்னுள் மிருதங்க அதிர்வு.." என்று கூறிவிட்டு குறும்புடன ் பார்த்தவளை அள்ளி அணைத்துக்க ொண்டேன்.

அவள் கழுத்துள் முகம் புதைத்தேன் .

"ச்சீ.. மீசை குத்துது.."

"மீசை கூந்தலின் குழந்தை.. கவிஞன் சொன்னதுண் டு.. உன் கூந்தல் எந்தன் குழந்தையடி .. நான் சொல்கின்ற ேன்.." என்றவாறு அவள் கூந்தலை விரல்களால் வகிடெடுத்த ேன்.

"இது யார் கவிதை?"

"இது கரவை பரணின்ரை.. அவர் கவிதை தெரியுமா?"

"சொல் எறிந்தாயா? கல் எறிந்தாயா? சலனப்பட்டு நிக்கிறது மனத்தடாகம் ... தாமரைத் தடாகத்தில் அரும்பத் தொடங்கும் தாமரைபோல் உன் நிழல்.. "

"அடடே.. உனக்கும் கரவைபரணின் ரை கவிதை தெரிந்திரு க்கே.."

"இது பரணியின்ரை கவிதை இல்லை.. நளாயினின்ர ை கவிதை அத்தான்.. இன்னும் சொல்லவா?"

"ம்.."

"எந்தன் வருகையில் எந்தன் அழைப்பினில ் உன் செவ்வாய் மலரவேண்டும ்.."

"அப்படியா.."

துடிக்கும் அவளது அதரங்களை நாடினேன்.

"ச்சீ.. அது கரவைபரணியி ன் வரிகள் அத்தான்.."

வெட்கத்துட ன் கைகளுள் நெளிந்தாள் .

"ஓ!! என் உதடுகளுக்க ு உன் முகவரி இட்டு காதல் கடிதம் அனுப்படு்ட ும் இதயம்... "

சாரு விழியுயர்த ்திப் பார்த்தாள் .

"இது நளாயினியின ் கவிதை..."

குறும்புடன ் சிரித்தேன் .

"என்றென்றும ் நீதான் வேண்டும். இப்படித்தா ன் என்றில்லை. இப்படியேதா ன் வேண்டும். எனக்கே... எனக்காக வேண்டும். என்னையே உனதாக்கவும ் வேண்டும்.. இதுவும் கரவைபரணியி ன் கவிதைதான் அத்தான்" என்றவாறு இருகரங்களை யும் என் கழுத்தில் மாலையாக்கி க் கொண்டாள்.

"உன் சிறுத்த விழியினுள் என் விம்பம் நான் காணவேண்டும ்.. என் மனதெங்கும் உன்வாசம் நீ சேர்க்கவேண ்டும்.. இதுவும் அவர் கவிதைதான்.."

சிறகடித்து ப் படபடக்கும் விழிகளை மெதுவாக ஒற்றினேன்.

உதடுகள் துடித்தன. கண்கள் செருகின.

துடிப்பை அடக்க நெருங்கியவ ேளையில்.. என்னை உதறித்தள்ள ி எழுந்த சாரு 'கலகல'வெனச் சிரித்தாள் .

"சாரு.. "

ஏமாற்றத்து டன் கத்தினேன்.

அவளைக் காணவில்லை. எப்படி மறைந்தாள்?

எங்கும் அமைதி... எங்கும் நிசப்தம்... எங்கும் இருள்..!

"சாரு..."

கத்தியவாறு கட்டிலைவிட ்டு எழுந்தேன்.

ஓ... எதிரே கொம்பியூட ்டர் திரை ஒளிர்ந்துக ொண்டிருந் தது.

'கனவா?'

ம்.. கனவுதான். இனிமையான கனவு.

'தனிமை எனது பொக்கிசம் . பூக்களின் மொழி அறிய, சிட்டுக் குருவிகளின ் சீண்டும் ஒலி உணர, தென்றலின் காதல் லீலைகளை காதோடு அணைத்துக் கொள்ள, எப்போதும் தனிமை அவசியம்!'

கரவை பரணியின் வரிகள் எண்ணத்தில் எட்டிப்பார ்த்தன.

அந்த இனிமையை இரைமீட்டிய வாறே கணனியை நோட்டமிட் டேன்.

சுஜி மெசன்சரில் என்னை அழைப்பது புரிந்தது.

ஓ.. என் முடிவு கேட்க வந்திருக்க ிறாள். சிரிப்பு வந்தது. அவளுடன் பேச ஆயத்தமானேன ்.

(தொடரும்...)

sOli
11-04-2004, 01:38 AM
அங்கம் (15)

"அண்ணாக்குட ்டி! சுகமா இருக்கியா.. பதில்.. பதில்.."

வந்த உடனேயே ஆரம்பித்து விட்டாள். எனது முடிவைக் கேட்பதில்த ான் அவளுக்கு எவ்வளவு சந்தோசம்?! சிரிப்பாக வந்தது.

"ம்.. முதல்லை சுகமாயிருக ்கிறாயா? சாப்பிட்டி யா? இதுக்கு பதில சொல்லு.."

"சுகமாயிருக ்கேன். சாப்பிட்டே ன்.. இப்ப பதிலை சொல்லு.. சாரு அக்காவை விரும்புறி யா? சொல்லடா அண்ணாக்குட ்டி.. நேற்றிரவு எனக்கு நித்திரையே வரலை தெரியுமா? உன்னைத்தான ் நினைச்சேன் .. சாரு அக்காவை விரும்புறே ன்னு சொல்லு.."

"சொன்னால்..?"

"சொன்னால் அண்ணாக்குட ்டிக்கு ஒரு ம்மா தாறேன்.. ஓகேயா?"

"ம்மாவா.. அதுக்கும் பார்க்க பெரிசா ஒன்று தருவியா..?"

"என்ன.?"

"உன் பிக் (pic).."

"வாட்..?"

"போட்டோ.. உன் போட்டோ தருவியா..?"

"உனக்கெதுக் கு என் போட்டோ.. என்ரை மெசன்சர்ல எத்தனை பேர்ட ஐடி(id) இருக்கு தெரியுமா? எழுபதுக்கு மேலை.. ஒருத்தருக் குமே போட்டோ கொடுக்கலை .."

"உன்ரை மெசன்சர்லய ும் எழுபதுக்கு மேலை ஐடி இருக்கு.. பிருந்தாவு ம் தனக்கு எழுபதுக்கு மேலை 'சற் பிரண்ட்ஸ்' (chat friends) இருக்கெண்ட ாள்..?!"

"அவளுக்கு எங்கைடா எழுபது பேர்.. என்ரை மெசன்சர்ல இருக்கிறதை தான் சொல்லியிர ுக்காள்.. அதோட ரண்டு மூண்டு பேரை 'அட்' (add) பண்ணியிருக ்காள்.. அதுவும் ஒரு ஐடி.. யாரோ லவ்லிபோய் என்று ஒண்டு.. அவனோடை பெரிய கரைச்சல்டா அண்ணாக்குட ்டி.."

"என்ன கரைச்சல்..?"

"என்ரை படம் வேணுமாம்.. நான் பிருந்தா இல்லை என்றாலும் நம்புறானில ்லை.. 'லவ் பண்ணுறேன்' அப்பிடி இப்பிடி எண்டு கண்டபடி பேசுறான் அண்ணா.. சரியான கெட்ட பொடியன்.. அவனை 'புளொக்'பண ணப் போறன்.. சரியான லூசு.."

"அப்ப எனக்கும் படம் தரமாட்டியா .. ம்.. பிருந்தாவு ம் இப்பிடித்த ான்.. தான் நினைக்கும் போதுதான் படம் தருவேன் என்றாள்.. இப்ப ஆளையே காணேல்லை.. நீயும் அவள் தங்கச்சிதா னே.. நீமட்டும் படம் அனுப்பவா போறாய்?"

"என்ன நீ.. அவளைப்போல என்னை நினைக்கிறி யா.. நான்தான் என்ரை வயது பெயர் எல்லாம் சொன்னேன்த ானே? உண்மையாயே எனக்கு உன்னிலை அன்புதான் அண்ணா.. நம்பமாட்டி யா?"

அவள் கெஞ்சுவதுப ோல இருந்தது.

"நம்புறேன்ட ா.. இந்த நம்பிக்கைய ாவது நிலைக்குமா எண்டதுதான் என்ரை கேள்வி.. "

"அண்ணாக்குட ்டி.. நான்தானே வலிய வந்து உன்னோடை பேசினேன்.. பிருந்தா வரமாட்டாள் என்று சொன்னது நான்தானே? சொல்லாமல் இருந்தால் என்ன செய்திருப் பாய்.. ஏதோ உன்னோட பேசவேணும் என்று தோணிச்சு.. பேசினபோது உன்னை அண்ணாமாதிர ி நினைக்கணும ்னு தோணிச்சு.. என்னை பிடிக்கலைன ்னா சொல்லு.. நான் இனி வரலை.."

"ஐயையோ.. நில்லுடா.. என் செல்லச் சின்னக்குட ்டிதானே.."

"உண்மையா..?"

"உண்மையா நான் உன் அண்ணன்தான் டா.. என் செல்லக்குட ்டிக்கு கோபம் உடன வருது.."

"ம்.. பின்ன என்ன.. பிருந்தாவ மாதிரி என்னை நினைச்சால் கோபம் வரும்தானே..?"

"படம் அனுப்பமாட் டேன் எண்டியா.. அதுக்காக அப்பிடிச் சொன்னேன்.. சரி.. இனி நான் படம் கேட்கமாட்ட ேன்டா.."

மனதில் எழுந்த ஏமாற்ற உணர்வை அடக்கிக்கெ ாண்டேன்.

"நான் கேட்பன் அண்ணா.."

"என்னடா.. படமா?"

"அது இல்லை.. சாரு அக்காவிலை விருப்பமா.. அவவை கலியாணம் கட்டுறியா எண்டு கேட்பன்.."

சரியான பிடிவாதக்க ாரப் பெட்டை.. மனதிற்குள் சொல்லிக்க ொண்டேன்.

"ம்.. என்னடா சின்னப்பிள ்ளைமாதிரி..."

"சின்னப்பிள ்ளைதானே..?"

"பெரியமனுசி யாகிட்டேன் .. சாறி உடுத்து கொண்டாடின ாய்னு நேற்றுத்தா னே சொன்னாய்..?"

"லொள்.. அண்ணாக்குட ்டி.. கதையை மாத்தாதை.. அப்ப பதில் சொல்லு.. என்னாலை கனநேரம் 'சற்'பண்ண முடியாது.."

"ஏன்.."

"அப்பிடித்த ான்.. சொல்லுடா.. அச்சாப்பிள ்ளை.. நல்ல பிள்ளை.."

சிரித்துவி ட்டேன். கணனிக்கு முன்னால் தனிமையில் வாய்விட்டு ச் சிரித்த என்னை எவராவது கவனித்திரு ந்தால், நிச்சயமாக விசரனென்று தான் நினைப்பார் கள்.

"ஓகே.. சாருவைத்தா ன் கலியாணம் செய்யலாம் எண்டு நினைக்கிறன ்டா.. இப்ப சரியா..?"

"ஐய்யா.. நீதாண்டா என்ரை அண்ணாக்குட ்டி.. மை செல்லச் சுவீற் குட்டி.. எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா..?"

என்னையும் சாருவையும் சேர்த்துவை ப்பதில் நேற்று வந்தவளுக்க ு இவளவு மகிழ்ச்சிய ா? எங்கோ ஒரு நாட்டில் இருந்து 'சற்'றாடும் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு ஏன் இந்த ஆனந்தம்? புரியவில்ல ை. வேகமான அறிமுகம்.. வேகமான உணர்வுப் பரிமாற்றங் கள்.. வேகமான முடிவெடுப் புகள்.. இதுதான் 'சற்' உலகமோ?! பிருந்தா மனில் வந்து எள்ளிநகையா டுவதுபோல உணர்வு. உண்மைதான்.. ஒரு மூன்று மாத உரையாடல்தா னே அவளைக் காதலிக்கும ளவிற்கு என்னைப் பாதித்தது. அதேபோல ஒரு இரண்டுநாள் சுஜியின் உறவுதானே அவளை என் மனதிலிருந் து சுலபமாக அகற்றவும் உதவிசெய்தத ு?! நம்ப முடியவில்ல ை. ஆனால் நம்பித்தான ாக வேண்டும்பே ாலிருந்தது .

"அண்ணாக்குட ்டி.. என்ன செய்றாய்.. ஓகே பண்ணடா?"

"எதை..?"

"மொக்கு மொக்கு.. நல்லா பார்.. லொள்.."

என்னால் என் கண்களையே நம்பமுடியவ ில்லை. அங்கே ஒரு சிறிய படம் மெசன்சர் யன்னலில் மிதந்துகொ ண்டிருந்தத ு.

அவசரமாக அந்த அனுப்புதலை ஏற்றுக்கொ ண்டேன்.

கைக்குள் இருந்த 'எலி'யின் அழுத்தலில படம் விரிந்தது.

குறுகுறு விழிகளுடன் ஒரு சிறு நங்கை. கழுத்தில் ஒரு மெல்லிய வெள்ளிச் சங்கிலி. காதில் இரு சிறு வளையங்கள். அழகாக இருந்தாள்.

"யார்டா இது.. நீயா?"

ஆச்சரியத்த ுடன் கேட்டேன்.

"நான்தான்.. நம்பலையா?"

"ஐயையோ.. நம்புறேன்.. ஒருத்தருக் கும் படம் கொடுக்கிற தில்லை எண்டாய்..?"

"ம்.. சாரு அக்காவை கட்டுறன் எண்டாய்.. அதுக்கு என்னவாலும் உனக்கு தரணும்போல தோணிச்சா.. அதுதான் அனுப்பினேன ்.. அண்ணா.. உனக்குமட்ட ுந்தான் அனுப்பினேன ்.. யாருக்கும் காட்டிடாதே டா.."

"நான் ஏன்டா காட்டுறேன் .. வடிவா இருக்கிறாய ்டா.. நல்ல நீள கழுத்துடா உனக்கு.. டான்ஸ் ஆடினா நல்லா இருக்கும்ட ா.."

"லொள்.. டான்ஸ் பழகினேன்டா .. விட்டுட்டே ன்.."

"ஏன்டா.."

"நானும் என் பிரண்ட் ஒருத்தியும ் பழகினோம்.. ரண்டுபேரும ் மேடைகளிலைக ூட டான்ஸ்பண்ண ியிருக்கோ ம்.."

"பிறகு..?"

"அரங்கேற்றம ் சேர்ந்து செய்ய இருந்தோம் அண்ணா.. அதுக்கிடைய ில பாவம் அவள்.."

"அவளுக்கு என்னடா?"

"பிறைன் ரூமர்டா.. (Brain tumor)"

"என்ன.. மூளைப்புற் றுநோயா.. எத்தினை வயசுடா?"

"என்ரை வயசுதான்.."

"பொய் சொல்லாதை..."

அதிர்ச்சிய ாக இருந்தது. இவ்வளவு இளம் வயதில் மூளைப் புற்றுநோய ா?

"என்ன மெளனம்?"

"......"

"செல்ல சின்னக்குட ்டி.. என்ன பேசாம இருக்கிறாய ்?"

"......"

"என்னடா நீ.. ஓகே.. நீ பொய் சொல்லலைடா .. பேசு..."

"ம்..."

"கோபமா? பாவம்டா உன் பிரண்ட்.. கடவுள் இப்பிடி சோதிக்க வேண்டாம்.."

"ம்.. அதாலை அவள் டான்ஸ்க்கு வாறதில்லை.. ஸ்கூலுக்கு போறதில்லை டா.. வீட்டிலைதா ன்.. என்ரை பிரண்ட்தான ே? நானும் டான்ஸ் பழகுறதை நிறுத்திட் டேன்..."

"ஓ... "

"அப்பிடி ஒரு பிரண்ட்.. அவளில்லாட் டி நானில்லை.. நானில்லாட் டி அவளில்லை... அப்பிடி பழகினோம் அண்ணா.."

"ஓ.. அப்ப உனக்கும் கவலைதான்.."

"கவலையா.. அதை மறக்கதானே 'சற்' இருக்கு.. லொள்.."

"அப்ப அவள்..?"

"அவளும் வீட்டிலை இருந்து 'சற்'தான்.. லொள்.. இப்ப அவளுக்கு அடிக்கடி தலையிடி வருதுடா.. வந்தா தாங்க முடியாதுடா .. எனக்கு தரன் அண்ணாக்குட ்டிபோல.. அவளுக்கும் ஒரு அண்ணாக்குட ்டி இருக்கான்.. அவனோடதான் கனநேரம் 'சற்'பண்ணுவ ள்.. தலையிடியோ டயும் 'சற்'பண்ணுவ ள்டா.. அப்பிடி ஓரு பாசம் அவன்மேலை.."

"பாவம்டா.."

"சும்மா பாவம் அப்படி சொல்லாதைட ா.. பிறகு எனக்கு கவலை வந்தா உன்கூட பேசமாட்டேன ்.. சரியா.."

"என்னடா நீ.. நீதானே அவளைப்பற்ற ி சொன்னாய்.. நான் கேட்டனா? அதுக்கு பாவம்னு சொல்லக்கூ டாதா?"

"ம்.. உனக்கு சொல்லணும் னு தோணிச்சு அண்ணாக்குட ்டி.. ஆனா அவமேலை யாரும் இரக்கப்படு றதை என்னாலை தாங்கமுடிய ாது.. அதுதான்.. ஒரு புரொமிஸ் தருவியா அண்ணா?"

"என்ன?"

"இனி அவளைப்பற்ற ி பேசுறேல்லை எண்டு.."

அவளாக எவளையோபற் றிக் கூறிவிட்டு , அதைப்பற்றி இனிப் பேசாதேயெனச ் சத்தியம் கேட்டது எனக்கு விசிதத்திர மாக தென்பட்டது . எனினும் சின்னப் பெண் என்பதால் அதை சாதாரணமாகவ ும் எண்ணத் தோன்றியது .

"ஓகே.. புரொமிஸ்ட ா.. அது சரி.. என்ன நீ.. வெள்ளி சங்கிலி போட்டிருக ்காய்.. பவுண்ல போட்ட என்ன?"

"லொள்.. மொக்கு மொக்கு.. இதுதாண்டா பாஷன்.. இதையும் கழட்டிப்பே ாட்டு கறுத்த கயிறு கட்டணும்.. அம்மா பேசுவாடா.. லொள்.."

"ஐயோ.. என்ன நீ.. இப்பிடியே பாஷன் எண்டு உடுப்புகளி லை இருந்து எல்லாத்தைய ும் மாத்தினா.. கடைசில தமிழினமே இருக்காதே.."

"லொள்.. ஏன்டா தமிழினம்.. பக்கத்திலை இருந்து சண்டை பிடிக்கவா.. அடுத்தவை என்ன செய்யினம் எண்டு வெளிலைபோய ்.. பொய் பொய்யா கதைக்கவா?"

'பதினைந்து வயதில் இவ்வளவு தெரிந்து வைத்திருக் கிறாளே?' அவள் கூறுவதிலும ் உண்மை இருக்கத்தா ன் செய்தது. இந்த உண்மைகள்தா ன் பலரை தம்மினம் மறந்து வாழ நிர்ப்பந்த ிக்கிறதோ?!

"உனக்க எப்படிடா தெரியும்..?"

"நாங்க இருக்கிற 'பில்டிங்'ல வந்து பார்.. அறுபது தமிழ் குடும்பமால ும் இருக்கும்.. டெய்லி சண்டை.. லிவ்ற்ல போனாலும் சண்டை.. படியால போனாலும் சண்டை.. "

"ஆகா.. அப்ப உனக்கு டெய்லி பொழுது போகும்.. சண்டைப் படம் பாக்கத் தேவையில்லை .."

"லொள்.. அண்ணாக்குட ்டி.. போகப் போறன்டா.. தலையிடிக்க ுதுடா.."

"சரிடா.. ஏன்டா தலையிடி..?"

"தெரியலைடா.. நான் நாளை வாறேன்.. சரியா.. ம்மாடா.."

அவள் போய்விட்ட ாள்.

(தொடரும்...)

sOli
11-04-2004, 01:41 AM
அங்கம் (16)

எனக்குள் புதிதாக ஒரு போராட்டம் ஆரம்பமாகிவ ிட்டது.

'சாரு என்னை விரும்புகி றாள். அதற்கும்மே லாக அம்மா எங்கள் இணைவை விரும்புகி றாள்..'

தெரிந்த விசயம். எனினும் எனது எண்ணத்தை, நான் சாருவின்மே ல் கொண்ட அன்பை... இல்லையில்ல ை.. புதிதாக ஏற்பட்ட காதலை அவளிடம் எவ்வாறு தெரிவிப்பத ு?!

அவளாக வலிய வந்த சந்தர்ப்பங ்களை நழுவவிட்டத ன் பலன் தற்போதுதா ன் புரிந்தது.

அவள் இலண்டனுக்க ுத் திரும்பிச் செல்வதற்கு இன்னும் ஐந்தாறு நாட்கள்தான ் இருந்தன. அதற்குள் அவளிடம் என் உள்ளக்கிடக ்கையைத் தெரிவித்தே யாக வேண்டும். ஆனால் எவ்வாறு தெரிவிப்பத ு என்பதுதான் புரியவில்ல ை. ஏதோ ஒரு இனந்தெரியா த அச்ச உணர்வு.

அவளது கரத்தைப்பற ்றியவாறு ஒரு சில மணி நேரமாவது வீதியிலாவத ு பூங்காவிலா வது ஆற்றங்கரை ஓரத்திலாவத ு கதைபேசிக் காலாற நடக்கவேண்ட ும்.

தயக்கமாக இருந்தது. இந்த விசயத்தைப் பொறுத்தமட ்டில் துணிவு என்னைவிட்ட ுத் தூரவிலகி என்னைக் கோழையாக்க ிவிட்டதென் னவோ உண்மைதான்.

வலியச் சென்று தெரிவிக்க கூச்சமோ... அச்சமோ.. அதனால் விளைந்த தயக்கமோ.. ஏதோ ஒன்று தடுத்தது. அதனால் மனம் குரங்காகி நிம்மதியற் றுத் தவிக்க ஆரம்பித்தத ு.

மனதில் எழுந்த தீயால் நான் சாருவையே கூர்ந்து பார்க்க ஆரம்பிப்பத ை என்னாலேயே உணர முடிந்தது. அவள் தூரத்தில் நடமாடும்பே ாது அவளையே பார்ப்பதும ், கிட்ட வரும்போது எங்கோ பார்ப்பதும ் எப்போதுமி ல்லாத மாற்றமாய் என்னுள் புகுந்துகெ ாண்டது. இவ்வளவு காலமுமில்ல ாத ஏதோ ஒன்று என்னுள் புகுந்து அவளுடனான எனது பழக்கத்தைய ே மாற்றிவிட் டதை என்னால் உணர முடிந்தது. இதுதான் காதலா? என்னையே கேட்டுக்கெ ாண்டேன்.

அலைபாயும் உள்ளத்து உணர்ச்சிகள ுக்குக் கடிவாளமிட முயன்றாலும ், அணையுடைத்த ுச் சீறும் வெள்ளம்போ லப் பீறிட்டெழு ம் விநோத வெப்பியாரங ்கள் கட்டுக்குள ் நில்லாக் காவாலியாகி ன.

அவள் பார்வையில் தென்படும்ப ோதெல்லாம் கண்கள் எங்கெல்லாம ோ துளாவ ஆரம்பித்தன . அந்தத் துளாவலில் அவள் அழகு திரண்டுகொ ண்டுதானிரு ந்தது.

அமைதியான முகம்.. கருவண்டுகள ்போல துருதுருக் கும் விழிகள்.. செதுக்கிவை த்த செங்கனிச் செவ்வாய்... பூஞ்சோலைய ொன்று வசந்த காலத்தில் பச்சைப்பசே லெனத் தண்மையுடன் கண்களுக்கு ப் பசுமை காட்டுவதைப ்போலத் தெரிந்தாள் .

அந்த அருமையும் பொலிவுப் பெருமையும் தற்போதுதா ன் எனக்குத் தெரிய ஆரம்பித்தத ு. அந்தச் சோலையின் குளுமையில் குளிக்கவென எழும் எண்ணங்கள் சூறாவளியாய ்த் தாக்கின. அவை என் சிந்தையில் சித்திரங்க ளாகிக் கனவுத் தோரணங்கள் கட்டிக் காட்சிகளாக விரிந்து இளமைத் தகிப்பின் எரிவுள் என்னை இட்டுச் சென்றவேளைய ில், ஒன்றைப் புதிதாக உணர்ந்தேன் . அதுதான் காதலா?! அல்லது காதலின் எழுச்சிக்க ு வியூகம் அமைக்க விழுந்த அடிக்கல்லா ?!

காதல்...! மனங்களின் சந்திப்பின ் மயக்கம் என்பார்களே ! காமத்தின் பிடியுள்ளி ருந்து பூத்துக் குலுங்கும் புனிதப் பிணைப்பென் பார்களே!

காமத்துக்க ும் காதலுக்கும ் சம்பந்தமுண ்டா? இருக்கலாம் .. ஆனால் இதுநாள்வரை ஏற்படாத காமம் தற்போது ஏற்படுகிறத ா? இல்லை.. இது அதற்கும்மே ல்... ஆமாம்.. காதல்.. காதல்.. இது காதல்தான். எனக்குள் உண்டான கேள்விகளுக ்கு நானே உருவாக்கிக ்கொண்ட பதில்.

திடீரென நான் மாறித்தான் போய்விட்ட ேன். எனக்கே வியப்புக் கலந்த ஆனந்தம்.

அந்த ஆனந்த மாற்றத்தை அசைபோட்டவ ாறு வஸ் நிலையத்தில ் நின்றுகொண ்டிருந்தேன ். செல்லவேண்ட ிய வஸ் வந்தது. சனம் அவ்வளவு இல்லை. உள்ளே ஏறி நோட்டமிட் டேன். சுந்தரும் நேசனும் இருந்தார்க ள்.

"அடடே தரனா.. இந்த ஊரிலதான் இருக்கிறிய ா.. பாத்து எவ்வளவு நாளாச்சு..?"

"ம்.. வேலைகூட.." என நேசன் கேட்டதுக்க ு பதிலளித்தே ன்.

"முந்தி எல்லாம் புட் போல் என்றால் கிறவுண்ட்ல நிற்பாய்.. இப்போ அந்தப் பக்கமே காணேல்லை.. அவ்வளவு வேலையா.. நல்லதொரு புட்போல் பிளேயர்.. தொடர்ந்து வரலாம்தானே ?"

"முயற்சிக்க ிறேன்.. "

"உண்மையா முயற்சிப்ப ாயா..?" என்று கண் சிமிட்டினா ன் சுந்தர்.

"ஏன்..?"

"இனி உனக்கு புட்போலில எல்லாம் இன்ரறஸ்ற் இருக்குமா தெரியேலை.."

"ஏன்..?"

"உனக்கு நான்தானே 'சற் ரூம்'களை காட்டினேன் .. அதுக்கு பிறகு நீ நண்பர்களோ ட பழகுறது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுட் டுது.. ஐ மீன் நீ கொஞ்சம் கொஞ்சமா 'சற்'றுக்கு அடிமையாகிட ்டாய் எண்டு சொல்லுறன் .. அப்பிடித்த ானே தரன்?"

"அடிமை எண்டு சொல்லுறிய ா சுந்தர்.. அப்படி இல்லை... கவர்ச்சியா ன சந்திப்புக ள்.. அவளவுதான்.. புதுப்புது விசயங்களில ை கவனம் செலுத்துறப ோது பழைய விசயங்களுக ்க நேரத்தை ஒதுக்க முடியாம போறது சாதாரணம்.. அதுக்காக அதை அடிமை எண்டு சொல்லேலாத ு.."

"என்னவோ.. என்னைப் பொறுத்தளவ ிலை 'சற்' பிரயோசனமி ல்லாத பொழுதுபோ க்கு எண்டுதான் சொல்லுவன் .. ஊருப்படியா ஒரு அலுவலும் செய்யேலாமை வசும்மா நேரம் போறதுதான் மிச்சம். ஒரு கதிரையிலை இருந்துகொ ண்டு கொம்பியூட ்டரையே பார்த்துக் கொண்டு கண்ணையும் மனசையும் பழுதாக்கி 'வேஸ்ற்'.. 'வேஸ்ற்'.. கதிரையிலை மணித்தியால க்கணக்கா சிறையிருக் கிறமாதிரி... வேதனையில்ல ாத சிறை.. அப்பிடித்த ானே.. இது தேவையா?" என்று கேட்டான் சுந்தர்.

"ம்... எதையும் பாவிக்கிற விதத்திலைத ான் சுந்தர் அதன் பலன்களும் கிடைக்கும் . கத்தி மாதிரித்தா ன். கொலைக்கும ் பாவிக்காம் . சமையலுக்கு ம் பாவிக்கலாம ். சத்திர சிகிச்சைக் கும் பாவிக்கலாம ். நீ சொல்றதும் ஒருவிதத்தி ல சரிதான்.. இல்லையெண்ட ு சொல்லலை. கடல்லை நீற்தலாம்.. மீன் பிடிக்கலாம ்.. முத்தெடுக் கலாம்.. சாகலாம்.. அப்பிடித்த ான்.. 'சற்'றும் அப்படித்தா ன்.. வீணாயும் போகலாம்.. விவேகமாயும ் ஆகலாம்.. அது நாங்க 'சற்' பண்ணுறதைப் பொறுத்தது .. இல்லையா?"

மனதில் தோன்றியதை க் கேட்டேன்.

"எங்கட தமிழ் 'சற் ரூம்'களுக் ு போய்ப் பார்த்தாய் தானே? ஓரே துாசணம்.. சகிக்கேலாத வக்கிரமமான பேச்சுகள்... இல்லாட்டி பொம்பிளைய ளை 'சைற்' அடிக்கவெண் டே அலைவாங்க.. பொம்பிளைய ள் மட்டுமென்ன .. அவங்களும் அப்பிடித்த ான்.. வேற என்ன அதில இருக்கு?"

"அதுக்கும் மேலயும் இருக்கு.. நட்புக்காக .. நாலு விசயம் தெரியணும்ன ு 'சற் ரூம்' வாறவங்களும ் இருக்காங்க .. அவங்க தொடர்பு கிடைச்சா பல விசயங்களை அறியலாம்.. உதாரணத்துக ்கு ஆங்கிலம் தெரிஞ்சவனே ாட அந்த மொழியப்பற ்றி அறிய முடியும்.. இப்படி பலதை சொல்லலாமி ல்லையா.. எமக்கு தெரியாத விசயங்களை உடனுக்குடன ் மற்றவங்களி ட்ட இருந்து அறிய இது நல்ல ஊடகமில்லைய ா.. ஆனா அதை நாங்கதான் உண்டாக்கணு ம்.."

"நீ சொல்லுறது சரிதான்.. ஒரு மொழியை மற்ற தமிழனிட்ட இருந்து படிக்கிறது ன்னா... அதுக்கு ஒரு பொது மொழி அவசியமில்ல ையா.. அது தமிழாகத்தா னே இருக்கணும் .. ஆனால் 'சற்' பண்ணுறவங்க ளுக்கு தமிழ் அறிவு இருக்குமா எண்டதே சந்தேகமாயி ருக்கு.. நீ வேற..?" என்று அலுத்துக்க ொண்டான் நேசன்.

"அதுவும் சாத்தியமாக ும்.. ஒருநாள் கட்டாயம் வரும்.. ஏன் சொல்லுறன் தெரியுமா? தமிழ் சரியா தெரியாதவங் களும் தமிழ் 'சற் ரூம்' வாராங்க.. அதுதான் தாய்மொழி வாசம்.. இப்ப இல்லாட்டில ும் ஒருநாள் அவங்களுக்க ும் தமிழ் தேவைப்படும ்.. அப்போது வருவாங்க.."

எதிர்பார்ப ்புடன் கூறினேன்.

"அதுமட்டுமி ல்லைடா... கனடால அங்க வாழுற தமிழர்களது வாழ்க்கை.. பிரச்சினைக ள்... அவுஸ்ரேலிய ால அங்க வாழுற தமிழர்களது வாழ்க்கை... பிரச்சினைக ள்.. ஐரோப்பால அங்க வாழுற தமிழர்களது வாழ்க்கை.. பிரச்சினைக ள்.. ஏன்.. தாயகத்தில வாழுற தமிழர்கள்.. அவங்க வாழ்க்கை.. அவங்க பிரச்சிகனக ள்.. இவைபற்றிகூ ட அந்ததந்த தமிழரோடை பேசலாம்.."

"பேசி..?!"

"உலகத்தில விரும்பியே ா விரும்பாமல ோ சிதறிச் சிந்தியிரு க்கிற தமிழ் சந்ததி 'சற்' மூலம் இணையலாம்.. அது நாளைய தேவைகளைப் புரிந்துகெ ாண்டு அமைப்பு ரீதியாகவே வளரலாம்.. அப்படி வளரும்போத ு பல விசயங்கள் பலனுள்ளவைய ா அமையும்.. இல்லையா?"

"இது சாத்தியமா?"

"ஏன் சாத்தியமில ்லை.. இப்பகூட சிலபேர் கருத்தால ஒன்றுபட்டவ ங்க.. யாகூ போன்ற 'சற்' தளங்களிலை தங்களுக்கெ ண்டு அறை அமைச்சு பேசுறாங்க.. இது காலப்போக் கில விரிவாகலாம ்.. இப்படியானவ ங்களோட செயற்பாடுக ள் விரிவடையும ்போது.. பயன்களும் விரிவடையும ில்லையா?"

என் மனதில்பட்ட தைக் கூறினேன். அவர்களுக்க ும் ஏதோ புரிந்திரு க்கவேண்டும ். அமைதியாக இருந்தார்க ள்.

நான் இறங்கும் இடம் வர அவர்களிடம் விடைபெற்றே ன்.

ஒன்றை ஏற்றுக்கொ ள்ளத்தான் வேண்டும். 'சற்' எனது பெரும்பகுத ி நேரத்தை விழுங்கிவி ட்டது. அதற்கும் கட்டுப்பாட ு போடவேண்டு ம். தீர்மானித் துக்கொண்ட ேன். எதுவும் ஒருவனது கட்டுப்பாட ்டை மீறினால் ஆபத்துத்தா னே?! 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்' என்று அனுபவமில்ல ாமலா கூறியிருப் பார்கள்?!

கணணியைப்பே ாட்டேன்.

"ஹலோ அண்ணா..."

மெசன்சரில் 'லவ்லிபோய ' அழைத்தான்.

"அண்ணா.. பிருந்தா சரியான ஏமாத்துக்க ாரிபோல இருக்கிறாள ே.. இப்ப தான் சுஜியாம்.. என்னை தெரியாதாம் .."

"ம்.."

"இவளவையே இப்படித்தா ன் அண்ணா.. நேரத்துக்க ொரு பெயர்.. நேரத்துக்க ொரு பொடியன்.. களிசடைகள்..."

'அப்ப நீ..?'

கேட்க நினைத்தேன் . அடக்கிக் கொண்டேன்.

"என்னமா நடிக்கிறாள ்.. நான் என்ன இளிச்சவாயன ே இவளவைன்ரை நடிப்பை நம்ப..? உப்பிடித்த ான் இங்க லண்டன்ல என்னை ஒருத்தி பேய்க்காட் ட வெளிக்கிட் டா.. என்கிட்டயா ... அவவுக்குமே லால நான்விட்டன ்.."

"ம்.."

"என்ன ம்.. அவ போட்டோகூ ட இருக்கு.. ஹா.. ஹா.. என்ன நடந்தது தெரியுமோ? சொல்லுறன் கேளு.."

அவன் கூற ஆயத்தமானான ்.

(தொடரும்...)

sOli
11-04-2004, 01:44 AM
அங்கம் (17)

"அண்ணா.."

"ம்.."

"பெட்டைகளை நம்பாதைடா.. பொடியங்கள ின்ரை உணர்ச்சிகள ைக் கிளறிவிட்ட ு வேடிக்கை பார்க்கவெண ்டே ஒரு கூட்டம் அலையுது..." என்று அறிவுரை கூறினான் லவ்லிபோய் .

"அப்பிடி எல்லாரையும ் நினையாதை.. பெண்களென்ன .. ஆண்களென்ன.. எல்லாரிலைய ும் எல்லாமாதிர ியான குணங்கள் இருக்குதான ே?"

"உனக்கொண்ட ும் தெரியாது அண்ணா.. ஒரு ஆறுமாதம் 'சற்' பண்ணியிருப ்பியா? நான் எப்ப இருந்து 'சற்' பண்ணுறன் தெரியுமா? மூன்று வருசம்.. மூன்று வருசமா 'சற்' பண்ணுறன்.. அநேகமா தமிழ் 'சற்' ரூம்களுக்க ு வாற முக்காவாசி ப்பேரையும் தெரியும்.. "

"ம்.. வருவாளவை.. வலியக் கூப்பிட்டு பேசுவாளவை.. படம் அனுப்புவின ம். 'டேட்ரிங்' என்பினம்.. எல்லாம் கொஞ்சநாளை க்கு.. பிறகு ஏன் நாயே எண்டு திரும்பியு ம் பாரளவை.. தங்கடைபாட் டுக்கு வேறை எவனுடனோ 'சற்'பண்ணுவ ளவை.. தாங்கள் பழகினதாலை ஒரு பொடியன்ரை மனசு என்ன பாடுபடும்.. அவன் எவளவு வேதனைப்படு வான் எண்டதெல்லா ம் 'டோன்ற் கெயர்'..."

"ம்.. ஆனால் பொடியங்கள ிலையும் இப்பிடி இருக்கிறாங ்கள்தானே?"

"நீ என்ன ஒவ்வொண்டு க்கும் ஒவ்வொண்டு சொல்லுறாய ்.. உந்த 'டேட்டிங்' எண்டால் என்னெண்டு தெரியுமா?"

"என்ன..?"

"அவையள் வருவினம்.. ஒரு பொடியனோட ை 'சற்'பண்ணுவ னம்.. பிறகு படம் அனுப்பிவின ம்.. பிறகு ரெலிபோனில ை பேசுவினம்.. அதுக்குப் பிறகு 'கபே'ல கோப்பி குடிக்க கூப்பிட்டு கதைப்பினம் .. சிலர் சினிமாக்கு க்கூட போவினம்.."

"இதுதான் 'டேட்டிங்'க ?"

"இது பொடியன் எப்பிடி எண்டு பழகிப் பாக்கினமாம ்.. பிறகு பிடிக்கேலை எண்டா.. ஓரு 'பாய்'. மறுபடி 'சற்'.. மறுபடி ஒரு பொடியன்.. இதுதான் அண்ணா இவளவைன்ரை 'டேட்டிங்'"

"ஓ.. முந்தி அரசர்கள் மகளுக்கு நடத்துற சுயம்வரம்ப ோலை..?"

"ஆகா.. இது அவையே அவைக்கு நடத்துற சுயம்வரம் அண்ணா.. இது வெள்ளைக்கா ரன் கண்டுபிடிச ்சதாம்.. லொள்.."

"என்னவோ.. ஒருத்தனோட குணங்களை அறிஞ்சு அவனோட வாழுறது நல்லதுதானே லவ்லிபோய் ? காலங்காலமா இணைந்து வாழப் போறவங்களு க்கு ஒருவரை ஒருவர் புரிஞ்சுகெ ாண்டு இணையுறது நல்லதாகத் தென்படலாம் தானே?"

மனதில் தோன்றியதை க் கேட்டேன்.

"ஓகே.. நல்லதாகவே இருக்கட்டு ம்.. இப்ப இவையளை நம்பி பழகுற பொடியனைப் பற்றி சிந்திச்சி யா? அவனுக்கு அவளைப் பிடிச்சு எவளவு மனக்கோட்ட ைகளைக் கட்டுவான்.. இவை பிடிக்கேலை எண்டு தூக்கி எறிஞ்சுட்ட ு போனால்.. அவன் பாவம்தானே?"

அவனது கூற்றிலும் நியாயம் இருப்பதாகவ ே தென்பட்டது .

"என்னவோ.. இதில சொல்லுறது க்கு என்ன இருக்கு.. அவரவர் புரிந்து நடக்கணும்.."

"அப்படி இல்லை அண்ணா.. பிருந்தாவை ப் பார்.. இப்ப சுஜியாம்.. தான் பிருந்தா இல்லையாம்.. என்னை யார் எண்டு கேக்கிறாள் . நான் என்ன இளிச்சவாயன ே? சொல்லு பார்ப்பம்.. உப்பிடி எத்தினைபேர ை 'சற்'றில பார்த்திரு ப்பன்.. இப்படியானவ ளவைக்கு அவைமாதிரிய ே செய்து காட்டணும்.. அப்பதான் புத்தி வரும்.."

"ம்.."

"ஒரு கொம்பியூட ்டரைக் கண்டவுடனை உவைக்குத் தலைகால் புரியிறேலை .. தங்கடைபாட் டிலை பொடியளைப் பேய்க்காட் டலாம் எண்டு நினைக்கினம ்.. அதுவும் எனக்கோ?"

பெண்களால் 'சற்'றில் மோசமாகப் பாதிக்கப்ப ட்டிருப்பா னோ? அல்லது எவளையாவது காதலிக்கலா ம் என்ற எதிர்பார்ப ்பு ஈடேறாத தோல்வியால ் ஏற்பட்ட மனக் கொந்தளிப் போ? அல்லது பெண்களைத் தூற்றுவதன் மூலம் தான் புத்திசாலி என்று எனக்குக் காட்ட விளைகிறானா ?

இப்படியும் பலர் இருக்கிறார ்கள்.

மற்றவர்களத ு குறைகளையும ் இயலாமையையு ம் கூறுவதுபோ லத் தமது திறமைகளை மறைமுகமாகத ் தம்பட்டமடி ப்பார்கள்.

அவனது பேச்சு எனக்குள் சற்று எரிச்சலைக் கூட ஏற்படுத்தி யது. எனினும், வலிய வந்து 'அண்ணா' என்றழைத்து , உரையாடுபவன ின் தொடர்பைத் துண்டிக்க மனம் வரவில்லை.

"எல்லாப் பெண்களையும ் அப்படி நினைக்காதை லவ்லிபோய் ... தனிய காதலுக்காக வோ பேய்க்காட் டறதுக்காகவ ோ 'சற் ரூம்'க்கு வாறாங்க எண்டு சொல்லாதை.. சிலர் என்னவோ நிச வாழ்க்கையி ல சொல்ல முடியாததுக ளைச் 'சற் ரூம்'லை கொட்டித் திருப்திப் படுறாங்க. அவ்வளவுதான ்.. அதுக்காக எல்லாரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளில் லை.."

"அண்ணா.. நூத்திலை ஒண்டு ரண்டு விதிவிலக்க ா இருக்கலாம் . மற்றதுகள் எல்லாம் சும்மா காதல் கீதல் எண்டு அலம்புற கேசுகள்தான ்.."

"ம்.. என்னவோ? உனக்கு அப்பிடித் தெரியுது.."

"என்ர அனுபவம் அண்ணா.. அதுதான் சொல்லுறன் . இப்பிடித்த ான் உமா என்றொரு 'கேள்' 'சற் ரூம்'க்கு வந்தா.. லண்டன்ல இருந்து.. அங்க 'சற் ரூம்'ல கன பொடியங்கள ை 'சைற்' அடிக்கிறன் எண்டு பேய்க்காட் டினா.."

"ம்.."

"இவவுக்கு முறையா பாடம் படிப்பீக்க வேணும் எண்டு 'ப்ளான்'போ ்டன். என்ரை நண்பன் விபுலனைச் 'செற்' பண்ணி அவளோடை 'சற்'செய்ய விட்டன்.."

"பிறகு.."

"ஒரு பக்கத்திலை அவனோடை காதல் பேச்சு.. இன்னொரு பக்கத்திலை என்னோடை காதல் பேச்சு.. பாவம் உமா.. நாங்கள் ரண்டு பேரும் அவ மெசன்சர்ல பேசுறதை ஒருத்தருக் கு ஒருத்தர் 'கொப்பி'பண ணி போட்டு வாசிக்குறத ு தெரியாம ரண்டுபேரோ டையும் வழிஞ்சா.."

"அட பாவி.."

"அதுக்கு பிறகு படம் அனுப்பினா.. ரெலிபோனில யும் பேசினா.. நாங்களும் மாறிமாறி பேசினம்..."

"ஓ..."

"ஒருநாள் சினிமாக்கு என்னை கூப்பிட்டா .."

"ம்..."

"இதுதான் சரியான சந்தர்ப்பம ் எண்டு விபுலனையும ் கூட்டிக்கெ ாண்டு தியேட்டருக ்குப் போனன்.. ஆள் திகைச்சுப் போனா.. அதுக்குப் பிறகு ஆள் 'சற் ரூம்' பக்கமே இல்லை.. இப்பிடியான வளவைக்கு அவேன்ர வழியிலைதான ் பதிலடி கொடுக்கவே ணும் அண்ணா.."

"இப்படியும் நடக்குமா... நம்ப முடியேலை.."

"ம்.. அவளின்ரை போட்டோ அனுப்புறன் பார்.. அப்பவாலும் நம்புறியா இல்லையா சொல்லு.."

"வேண்டாம் லவ்லிபோய் .. எனக்கெதுக் கு அந்தப் படம்?"

"ஐயோ அண்ணா.. எதுக்கும் பார்த்து வை.. அவள் வேறை ஐடில வந்து உன்னை ஏமாத்தலாமி ல்லையா?"

என் பதிலை எதிர்பாராம லே அவன் அனுப்பிய படம் என் அனுமதிக்கா க மெசன்சர் திரையில் காத்திருந் தது. 'ஏற்கவா வேண்டாமா' என்ற எண்ணம் என்னுள்.

"ஓகே பண்ணு அண்ணா.."

ஓகே பண்ணினேன்.

படம் வந்தது. அழுத்தினேன ். கணனித்திரை யில் படம் விரிந்தபோ து... அது..அது... ஐயோ...!!!!!!! என்னை அறியாமல் கத்திவிட்ட ேன்.

என் நெஞ்சை ஏதோ அடைத்தது. கண்கள் இருண்டன. கணனித் திரை மங்கலானது.

விதி என்னைப் பார்த்துக் கைகொட்டிச ் சிரிப்பதுப ோலிருந்தத ு.

அதிர்ச்சிய ால் நிலைகுலைந் தேன். அந்தப் படத்தில் உள்ளது அவளா? அவளா? அவளேதான்.

(தொரும்...)

sOli
11-04-2004, 01:47 AM
அங்கம் (18 )

இணையம் வந்த பிறகு உலகம் வெகுவாகச் சுருங்கிவி ட்டது என்று பலர் கூறக் கேட்டிருக் கிறேன். ஆனால் அந்தக் கூற்று என்மட்டில் இவ்வளவுதூர ம் உண்மையாகும ் எனக் கனவிலேகூட நினைத்துப் பார்த்ததில ்லை.

உலகம் ஒரு நாடாக ஊராக வீதியாக வீடாகக் குறுகிவிட் டது என்மட்டில் . அதற்குச் சான்றாக கணனித் திரையில் அவளது படம்.. லவ்லிபோய் அனுப்பிய அவளது படம் கணனித்திரை யில் மிதந்து என் மனதை ஆறா ரணமாக்கி குருதி ஊற்றை உருவாக்கிக ் கொண்டிருந ்தது.

யாரோ தன்னுடன் 'டேட்டிங்' கேட்டாள். எவளோ தன்னுடன் தொலைபேசிய ில் உரையாடினாள ். சினிமாவுக் கு அழைத்தாளென ்று அவன் அனுப்பிய அந்தப் படத்திலிரு ந்த அவள்.. அவள் சாருவேதான் .

பெரியதொரு இடியொன்று சிரசிலிறங் கி மனதுள் புகுந்ததுப ோலிருந்தத ு.

சப்தநாடிகள ும் ஒருகணம் செயலிழந்தா ற்போன்ற பிரமையில் சித்தம் கலங்கிச் சூழலும் அகமும் சூழும் இருளாகி அதனுள் பிணமாகி அழிழ்து மிதந்து மீண்ட உணர்வில் செயலற்றேன் .

என் வாழ்வின் எழில் நிலவென எண்ணத்தில் ஏற்றிவைத்த ு வண்ணக்கனவு களின் நாயகியாக நடமிட்டவள் என் முன்னே கணனித்திரை யில் 'டேட்டிங்' என்ற பெயரில் ஆண் துணையைத் தெரிவுசெய் வதற்காக 'சற்'றில் சல்லாபிப்ப வள் என்ற பெயருடன் படமாக இருநஇது என்னைப் பொசுக்கின ாள்.

உண்மையா.. நம்ப முடியவில்ல ை. லவ்லிபோய் என்னைக் குழப்ப அனுப்பினான ா? எப்படி? அவனுக்கெப் படித் தெரியும் அவள் என் மச்சாள் என்று? அவனைப் பொறுத்தவர ையில் எவளோ ஒருத்தி. ஆனால் என்னைப் பொறுத்தவர ையில்...?! அவள் என் இதய வானில் எழிலேற்றிக ் கோலமிட்ட தேவதையென அவனுக்கெப் படித் தெரியும்?

'சற்'றையே வெறுப்பதுப ோலக் கதைத்தாளே? ஓரு நாளோடு அந்தப் பக்கமே எட்டிப் பார்ப்பதில ்லை என்று சொன்னாளே?! பொய்யா.. வேசமா? இவனுக்கெங் கே தெரியப் போகிறது என்ற துணிவா?

'லவ்லிபோய ' கூறுவதைப்ப ோல பெண்கள் எல்லோருமே வேசதாரிகளா ? ஆண்களின் உணர்வுகளுட ன் விளையாடி அவர்களின் அழுகையில் ஆத்ம திருப்தி அடைபவர்களா ?! ஆயிரமாயிரம ் விசயங்களை மனதிலே புதைத்து, எதுவுமே புரியாதவர் களாய் நடமாடும் பதுமைகளா?!

நினைவுக் கோட்டைகள் நிர்மூலமாக ும் வேதனையில் எண்ணங்கள் பல்வேறு கோணத்தில் எழுந்து வினாக்களாக ி என்னைத் தவிக்கவைப் பதைத் தடுக்கும் வகையறியா தடுமாறினேன ்.

எண்ணக் கனவுகள் யாவுமே சிலநொடிகள ுள் சிறகிழந்த சிட்டுக்கள ாய் தரையில் விழுந்து புழுக்களாய ் அவஸ்தையில் புரண்டு துடித்து நெளிந்தன. அவற்றின் துடிப்பின் உணர்வுக் கொந்தளிப் பில் சித்தங்கலங ்கியவனாய் சிரசை மேசையில் சாய்த்து கைகளுள் புதைத்துக் கொண்டேன்.

அப்போது யாரோ என்னை நோக்கி வரும் அரவம்.. அம்மாதான்.

"தரன்.. உன்னோடை ஒரு முக்கியமான விசயம் பேசவேணும்.."

உள்ளத்து உணர்வுகளை அடக்கியவாற ு அவளைக் கேள்விக்கு றியுடன் நோக்கினேன ்.

"மாமா திங்கள் கிழமை லண்டனுக்கு ப் பயணமாறார்... அதுக்கிடைய ில கதைக்க வேண்டியதுக ளைக் கதைச்சால் நல்லதெண்டு உன்ரை அப்பாவும் நினைக்கிறா ர்.. ம்.. நாங்கள்மட் டும் நினைச்சால் போதுமே..? இந்தக் காலத்துப் பிள்ளையள் தாய் தேப்பன் ஒண்டை நினைக்க தாங்கள் ஏதோ நினைக்குது கள்.."

சொற்களால் சுற்றி எங்கே வர விழைகிறாள் எனப் புரிந்தது.

'இனி கதைக்குறது க்கு என்ன இருக்கு..? அதுதான் சற்றிலையே கதைச்சுட்ட ாங்களே..'

சொல்ல நினைத்தேன் . மனதில் வெறுப்பு மூண்டது.

"இண்டைக்கு வெள்ளிக்கி ழமை.. பினஇனேரம் கோயிலுக்க ும் போகவேணும் .. எங்கையும் போவிடாதை.. அதுகள் போக இன்னும் மூண்டுநாள் தான் இருக்கு.. அந்தப் பிள்ளை சாருவும் உன்னிலை நல்ல உயிராய் இருக்கிறாள ்.. வாயாலை சொல்லாட்ட ிலும் அவளின்ரை போக்குகளை ப் பாக்கேக்கை ... உனக்குத்தா ன் விளங்கேலை எண்டால் எனக்கும் அப்பிடியே..?"

'வேசம்.. வேசம் அம்மா.. அது உனக்குத்தா ன் புரியேலை அம்மா..'

மனதுள் குமைந்தேன் .

"ஊரிலை எண்டால் பெரியாக்கள ே காதும் காதும்வைச் சமாதிரி ஒப்பேத்திப ்போடுவினம ்... இந்த நாட்டில நாங்கள் நினைச்சாப் போலை சரியே... பிள்ளையள் என்ன நினைக்குது கள் எண்டு வாயைத் துறந்து சொன்னால்த ானே தெரியுது.."

குரலில் ஏக்கம் எட்டிப் பார்த்து மறைந்தது.

'அம்மாவுக் ு என்ன பதில் கூறுவது.. நான் கூறினால் நம்புவாளா.. அல்லது ஒப்பாரிவைத ்து சொந்தங்கள ையே பகைமையாக்க ிவிடுவாளா? திருமணம் வேண்டாம் என்று சொல்லலாமா ? அல்லது அதற்கு அவசரமில்லை என்று..? அல்லது சாருவைப் பிடிக்கேலை என்று..? அல்லது பிடித்ததை எல்லாம் அவள் பிரித்தெறி ந்துவிட்டா ள் என்று..?'

குழம்பினேன ்.

"என்னடா இன்னும் யோசினை.. இண்டைக்கு ரண்டிலை ஒண்டு எனக்குத் தெரியவேணும ்.. சொல்லிப்ப ோட்டன்.. அந்தப் பிள்ளையில என்ன குறை... படிப்பில்ல ையா.. வடிவில்லைய ா.. குணமில்லைய ா... அதோடை ஒண்டுக்கை ஒண்டு... ஒரே உருத்து... வலிய வாற சீதேவியை வேண்டாமெண் டுபோட்டு ஆராலும் மூதேவியளை கொண்டரலாம ெண்டுமட்டு ம் நினைச்சுப் போடாதை.. சொல்லிப்ப ோட்டன்.."

விசயத்தைக் கூறி வெருட்டலில ் இறங்கிவிட் டாள்.

ஏதாவது சொல்லித்த ானாக வேண்டும். வெருட்டல் பலிக்காவிட ்டால் அழ ஆரம்பித்து விடுவாள். எதைத் தாங்கினாலு ம் அவளது அழுகையைத் தாங்க முடியாது.

என்ன சொல்வது.. எப்படிச் சொல்வது.. அதுதான் புரியவில்ல ை.

என் மனப் பாரங்களை எவரிடம் இறக்கி வைப்பது? யாரிடம் ஆறுதல் கேட்பது?

குழப்பத்து டன் கணனியைப் பார்த்தேன் .

"நான் இங்கை கதைச்சுக் கொண்டிருக ்கிறன்.. அங்கை என்ன னொம்பியூட ்டரிலை..?" என்றவாறு கணனியைப் பார்த்தவளி ன் முகம் பிரகாசமானத ு.

"அட.. கொம்பியூட ்டரில சாருவையா பாத்துக்கெ ாண்டிருக்க ிறாய்... என்ன பிள்ளையடா நீ.. அவளைக் கூப்பிட்டு முன்னாலை இருத்திப்ப ோட்டுப் பாரன்.. ஆர் வேண்டாமெண் டது..? அதைவிட்டுப ்போட்டு கொம்பியூட ்டரிலை அவளின்ரை படத்தைப்பே ாட்டுப் பாக்கிறியே ா..?" என்று குறும்பு பொங்க ஆனந்தமாக வாய்விட்டு ச் சிரித்தாள் அம்மா.

அவளை அவ்வாறு சந்தோசமாக ப் பார்த்து எவ்வளவு நாட்கள்?!

எண்ணம் ஈடேறிய களிப்பு அவளுக்கு.

ஆனால் நான்.. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தேன்.

"அம்மா.. " என்று கூற வாயெடுத்தே ன்.

"இனி நீ ஒண்டும் சொல்லவேண் டாம் ராசா... உன்ரை மனசில என்ன இருக்கெண்ட ு அறிஞ்சதில எனக்கு சந்தோசம்.. அது போதுமப்பா ... இனி நான் எல்லாத்தைய ும் பாத்துக்கெ ாள்ளுறன்... சாருவும் என்ரை பிள்ளைதான் .. என்ரை பிள்ளைகள் சந்தோசமாய ் இருக்கவேணு ம். அதுதான் என்ரை ஆசை.. நாட்டைவிட் டு வந்து சொந்தங்கள ் தூரத் தூரப் போகுதே எண்டு கவலைப்பட்ட ன். என்ரை வயித்தில பால் வார்த்தாயப ்பா.. இதுவே எனக்குப் போகும் ராசா.." என்று என் கேசத்தைக் கோதிவிட்ட ு அங்கிருந்த ு சென்றவளை பிரமை பிடித்தாற் போல் கையாலாகநில ையுடன் பார்த்துக் கொண்டிருந ்தேன் நான்.

நிமிடங்கள் கழிந்தன.

சாரு தேனீருடன் என் அறைக்கு வந்தாள்.

அம்மாதான் அனுப்பியிர ுப்பாள்.

சிரசு சூடாகியது.

அவளையும் கணனித் திரையையும் மாறிமாறிப் பார்த்தேன் .

அவளது பார்வை கணனித் திரையை அடைந்தது.

அவள் வைத்தகண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந ்தாள்.

அவள் என்ன கூறப்போகி றாள் என்பதற்காக க் காத்திருந் தேன்.

(தொடரும்...)

sOli
11-04-2004, 01:51 AM
அங்கம் (19)

கணனித்திரை யையே சில வினாடிகள் பார்த்தவள் என்னை நோக்கித் திரும்பினா ள். அவளது முகத்தில் நான் எதிர்பார்த ்த அதிர்ச்சிய ோ கவலையோ எதையுமே காண முடியவில்ல ை. மாறாக ஆச்சரியத்த ாள் கண்கள் கருவண்டுகள ாக உருள நின்றாள்.

"அத்தான்.. இந்தப் போட்டோ எப்பிடி உங்களுக்கு வந்திச்சு..?"

உணர்ச்சிகள ுக்குத் திரையிட்டு எப்படி இயல்பாய் இப்படிக் கேட்க முடிந்தது?! நிதானமாய் எவ்வாறு வினா வந்து விழுந்தது?! தான் வசமாய் வலையில் விழுந்ததை உணர்ந்தும் உணராதவள்மா திரி இயல்பாயிரு க்க இவளால் எவ்வாறு முடிந்தது?! அவளவு உறுதியானவள ா?! அவள் கண்களை ஊடுருவி வெறித்துப் பார்த்தேன் .

'தெரியாமல் கேட்கிறாளா அல்லது போட்டோ அனுப்பியவர ்களில் எவனிடமிருந ்து இந்தப் போட்டோ எனக்குக் கிடைத்தது என அறியக் கேட்கிறாளா ?'

வெறுப்புடன ் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

"எப்பிடி வந்திருக்க ும் எண்டு உனக்குத் தெரியாதா?"

கண்களில் அப்போது சிறு கலக்கம் தோன்றி மறைந்தது. என்னை ஒருகணம் உற்று நோக்கியவள ் அமைதியாகப் புன்னகைத்த ாள்.

"தெரியும் அத்தான்.. 'சற்'மூலமா வந்திச்சா இல்லாட்டி அப்பா அம்மாமூலமா வந்திச்சா எண்டு அறியத்தான் கேட்டனான்.. "

"ஓ.. 'சற்'றிலை வந்ததெண்டா ல் ஆர் தந்ததெண்டு தெரியுமா?"

"ம்.. தெரியும்.."

"எப்பிடி.."

எரிச்சலுடன ் கேட்டேன்.

"ஒருத்தனுக் குத்தானே போட்டோ கொடுத்தேன ்.. அதாலை தெரியும்.. அவன்தான் உனக்கு அனுப்பியிர ுப்பான்.. இல்லையா?"

"என்னவோ.. படம் அனுப்புற அளவுக்கு அவனோட பழக்கமா?" என்று ஏளனமாகக் கேட்டேன்.

உள்ளே கோபம் கொழுந்துவ ிட்டு எரிந்துகொ ண்டிருந்தத ு.

"யுனிவர்சிற ்றி 'கொஸ்ரல்'ல 'சற்'பண்ணுவ ங்க.. ஒருநாள் உமாட அறைக்கு போயிருந்த ேன்.."

"ம்..."

"அப்ப அவள் 'சற்'பண்ணிக கொண்டிரு ்தாள்.. அவன் பேர்கூட லவ்லிபோய் என்று நினைக்கிறன ்.. ஓ.. அவன்தான்.. அப்ப அவள் என்னையும் அவன்கூட 'சற்'பண்ண சொன்னாள்.. அண்டைக்குத ான் முதன்முதலா 'சற்'பண்ணின ன் அத்தான்.. அப்ப அவன் என்ரை போட்டோ கேட்டான்.. இவள் உமாதான் தன்ரை கொம்பியூட ்டரில இருந்த என்ரை போட்டோவை அனுப்பினாள ்.."

"ம்.. அவன் படம் கேட்டானாம் .. அனுப்பினாவ ாம்.. அவன் எப்பிடிப்ப ட்ட ஆள்.. எண்டு தெரியாமை எப்பிடி படம் அனுப்பினாய ்..? நம்ப சொல்லுறிய ா?"

சற்று கோபமாகக் கேட்டேன்.

"அத்தான்! நான் ஏன் பொய் சொல்லவேணு ம்? அண்டைக்குத ்தான் முதன்முதலா 'சற்'பண்ணின ்.. அதுவும் ஜானு கூப்பிட்டு .. அதுதான் கடைசியும்.. நானும் யோசியாமை ஜானுவை படம் அனுப்ப விட்டுட்டன ்.. பிறகுதான் அவசரப்பட்ட ு படம் அனுப்பினது க்கு 'பீல்'பண்ணி ேன்.. அதுக்கு பிறகு 'சற்'பற்றி பலவிசயங்கள ை 'பிரண்ட்ஸ்' ூலம் அறிஞ்சன்.. 'சற்'றால எவளவோ நல்ல விசயங்களை செய்யலாம்த ான்.. ஆனா எங்கடை ஆக்களிலை கனபேர் 'சற்'றை கெட்ட வழீலதான் பாவிக்கினம ் எண்டு புரிஞ்சுது .. என்ரை 'பிரண்ட்ஸ்' கதை கதையா சொல்லுவாங ்க.. உதாரணமா சிங்களாக்க ளின்ரை 'சற்'ல போய் தமிழ். தமிழீழம் எண்டு பேசி அவங்களோடை சண்டை பிடிப்பாங் களாம்.. தமிழ் 'சற்'களிலை கெட்ட வார்த்தையா ல பச்சை பச்சையா பேசி 'கேள்சை' சண்டைக்கிழ ுப்பாங்களா ம்.. இப்பிடி பல கேள்விப்பட ்டன்... அதாலை அந்தப் பக்கம் போகாமையே விட்டுட்டன ்.. ஆனா அந்தப் படம் எப்பிடி இங்க..?" என்று கேட்டாள் சாரு.

"எப்படி வந்ததா?"

கேலியாகக் கேட்டேன்.

அவனைப்பற்ற ி .. அவன் சொன்ன விசயங்களைப ்பற்றி.. அதற்கு அத்தாட்சிய ாக அவன் அனுப்பிய அந்தப் படத்தைப்பற ்றிக் கூறியபோது ..
"போதும்.. போதும்.." என்று விம்மியவாற ு அங்கிருந்த ு ஓடினாள் சாரு.

"சாரு.. சாரு.."

அழைப்பிற்க ுத் திரும்பியு ம் பாராமல் அங்கிருந்த ு அகன்றுவிட் டாள்.

'அந்த விம்மலின் அர்த்தம் என்ன?!'

உண்மை தெரிந்துவி ட்டதே என்ற அதிர்ச்சிய ா அல்லது அபாண்டமாகப ் பழி வந்து சேர்ந்துவி ட்டதே என்ற அங்கலாய்ப் பா?

என்னால் ஒரு முடிவுக்கு ம் வர முடியவில்ல ை.

திக்குத் தெரியாத காட்டிலே திசையறிய யாராவது உதவமாட்டார ்களா என்ற ஆதங்கத்துட ன் நிலைகுலைந் தவனாய் மனதுள் தத்தளித்தே ன்.

அந்த லவ்லிபோயி டமே மறுபடிக் கேட்கலாமா? கேட்டாலும் என் குழப்பம் தீர விடை கிடைக்குமா ?

ஆண்டாண்டுக ாலமாய் அத்தான் அத்தானென என்னுடன் பழகும் சாருவை நம்புவதா? ஒரு சில நாட்களாக அல்லது வாரங்களாக என்னுடன் 'அண்ணா அண்ணா'வெனப பழகும் லவ்லிபோயை நம்புவதா?

துடுப்பிழந ்த படகாய் தவித்தேன். நிச்சயமாக எனக்குக் கரை காட்ட ஒரு கலங்கரை விளக்கம் தேவை. அது யார் உருவில் வரும்?!

மனதில் சிறு உறுத்தல்.

அன்று சுஜி ஓரு படம் அனுப்பியபே ாது ஏற்றுக்கொ ண்ட நான்.. தற்போது சாரு யாருக்கோ ஒரு படம் அனுப்பியதை த் தாங்க முடியாதவனா ய்விட்டேனா ? அல்லது சாருதான் லவ்லிபோய் சொன்ன 'உமா' என்ற சஞ்சலமா?

யோசனையுடன ் கணனித் திரையை நோக்கினேன ்.

சுஜி மெசன்சரில் அழைப்பதற்க ான அறிகுறி தெரிந்தது.

அவளுடன் உரையாடத் தயக்கமாக இருந்தது.

உரையாடினால ் நிச்சயமாகச ் சாருவைப்பற ்றிக் கேட்பாள்.

'என்ன சொல்வது..?'

எனினும் அந்த சின்னஞ்சிற ிய பாச உள்ளத்துடன ் உரையாடும் ஆர்வத்தைக் கட்டுப்படு த்த முடியாமல் கணனியை நெருங்கினே ன்.

சாருவின் படம் திரையைவிட் டு அகல, சுஜியின் மெசன்சர் யன்னல் கணனித்திரை யில் பெட்டியாக விரிந்தது.

"ஹலோ சுஜிக்குட் டி.. சுகமா?"

"சுகம்டா அண்ணாக்குட ்டி.. என்ன செய்தாய்.. எவளவுநேரமா என்ரை பதிலுக்கு 'வெயிட்'பண் ுறேன் தெரியுமா?"

உரிமையுடன் கடிந்துகொ ண்டாள்.

"அண்ணி சுகமா?"

"அண்ணியா..?"

"லொள்.. சாரு அண்ணி.."

"ம்.."

"என்ன ம்.. அவங்களை 'லவ்'பண்றேன னு சொல்லிட்ட ியா?"

"நோ.."

"ஐயோ.. மொக்கு.. மொக்கு.. என்ன 'டிலே'? கெதியா சொல்லுடா அண்ணா.. என்னால 'டிலே'பண்ணே ாது.."

"ஏன்..?"

"திங்கள் கிழமை ஒரு இடத்துக்கு போறன்டா.. பெரிய 'றிப்'..."

"ஓ.. எப்போ திரும்பி வருவாய்..?"

"தெரியாதுடா .. சிலவேளை வரமாட்டேன் .."

"என்ன...?"

"ம்.. போற இடத்தில பிடிச்சுக் கொண்டா அங்கயே 'செற்றில்' ஆயிடுவேன் அண்ணா.. அதுக்கிடைல உன்னோடயும ் சாரு அண்ணியோடய ும் பேசணும்டா.. ப்ளீஸ்டா.. நீ என்ன அண்ணா.. இன்னும் 'லவ் யூ' சொல்லாம இருக்காய்.. அதைக் கேட்கத்தான ே ஆசையோட இப்ப வந்தேன்.."

"அது சரி.. இப்ப எங்க போறாய்.. எதுக்கு 'செற்றில்' ஆகப் போறாய் சொல்லு.."

"ம்.. உனக்கு சொல்லாம போகமாட்டே ன் அண்ணா.. இன்னிக்கு எனஇன கிழமை.. வெள்ளிதானே .. சன் டே... ஞாயிற்றுக் கிழமை 'சேர்ச்'சுக கு போவிட்டு வந்து கட்டாயம் சொல்லுவன் .. இன்னொண்ணு ..!"

"என்ன..?"

"அதுக்கிடைல சாரு அண்ணிக்கு 'லவ் யூ' சொல்லி.. அவங்களையும ் மெசன்சருக் கு கூட்டிகொண ்டு வரணும்.. உங்க ரண்டு பேரோடையும ் 'சண்டே' 'மைக்'ல பேசுவேன்.."

"றியலி..?!"

வியப்பாக இருந்தது.

"ஷ்யர்.. நிச்சயமா அண்ணா.. உன்னோடை 'மைக்'ல பேசணும்.. என் அண்ணா குரலை கேட்டுட்டு .. 'றிப்' சந்தோசமா போகணும்.. இதுதான் இந்த தங்கச்சிக் குட்டின்ர ஆசை.. நிறைவேத்து வியா?"

"இப்ப பேசேன்டா.."

ஆர்வத்துடன ் கேட்டேன்.

"நோ.. சாரு அண்ணியும் இருக்கணும் .. அவங்களிட்ட நான் ஒண்ணே ஒண்ணு கேட்கணும்.."

"என்ன..?"

"ஐயோ அண்ணா.. 'சண்டே'மட்ட ம் பொறுடா.. இன்னொரு 'சர்ப்ரைஸ்'. . லொள்.."

"என்ன..?!"

"ஞாயிற்றுக் கிழமை பிருந்தாவு ம் உன்னோட 'மைக்'ல பேசுவாள்.."

இப்பொழுது எனக்கு நிசமாகவே தலைசுற்றிய து.

"என்ன விளையாடுறி யா..?"

நம்பமுடியா மல் கேட்டேன்.

"இல்லை அண்ணா.. உண்மைதான்.. பிருந்தாக் கு ஒரு பாட்டு பாடிக் காட்டினாயா மே.. "

"ம்.. என்ன பாட்டு...?"

"மறந்துட்டி யா.. லொள்.."

"யா... 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ..' ரண்டு வரி பாடினேன்.. ஒருநாள் முழுக்கப் பாடணும் எண்டு சொன்னாள்.. அதுக்குப் பிறகுதான் காணலையே?"

"லொள்.. அந்த பாட்டை முழுக்க 'பிறிபெயர்' ண்ணி வைக்கச் சொன்னாள்.. ஞாயிற்றுக் கிழமை பாடணும்.. சொல்லிட்ட ேன்.. அப்போதான் நீ அச்சா அண்ணா.. ஓகே?"

"எனக்கு ஒண்ணுமா புரியலைடா.."

"சண்டே' எல்லாம் புரியும் அண்ணா.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. போவிட்டு 'சண்டே' வாறேன்.. சரியா..?"

"ம்.. "

"ஐயோ அண்ணா ஒரு விசயம் மறந்துட்டே னே.."

"என்னடா..."

"அந்த லவ்லிபோய் ஓரே கரைச்சல்டா .. உனக்கு எதோ படம் அனுப்பினான ாம்.. அதபற்றி பேச உன்னை மெசன்சர்ல கூப்பிட்டா னாம்.. நீ 'ஒன்லைன்'ல இருந்துகொ ண்டு பதில் சொல்லலையா ம்.. உனக்கு 'ஓவ்லைன் மெசேஜ்' போட்டானாம ்.. பாத்தியா?"

அப்போது அவற்றைக் கவனிக்கும் நிலையிலா நான் இருந்தேன்?!

"ஓகேடா.. நான் பாக்கிறேன் .."

"சீயூ அண்ணாக்குட ்டி.."

அவள் சென்றதும் லவ்லிபோயி ன் அனுப்பிய 'ஓவ்லைன் மெசேஜ்'ஜை திறந்தேன்.

"சொறி அண்ணா.. அவசரத்தில் உமாட படம் என்று அவள் பிரண்ட் ஒருத்தியின ் படத்தை அனுப்பிட்ட ேன்.. அடுத்தமுறை சந்திக்கும ்போது உமாட படம் தாறேன்.. சொறிடா.."

ஓ... அவசரப்பட்ட ு விசயத்தைப் போட்டுடைத ்து சாருவின் மனதைப் புண்ணாக்கி விட்டேனே?!

குற்ற உணர்வுடன் அவசரமாக அவளது அறைக்கு விரைந்தேன் .

அங்கே என் சாரு... பொலிவிழந் த ஓவியமாய் தலையணையுள் முகம்புதைத ்து விம்மிக் கொண்டிருந ்தாள்.

அந்தக் காட்சியில் என்னை மறந்து அவள் அருகே சென்றேன்.

சூழல் மறந்தது. கூச்சம் தகர்ந்தது. தயக்கம் ஒழிந்தது. தடுமாற்றம் அழிந்தது. என்னையே இழந்தேன்.

கொழுகொம் பற்ற கொடியாய் வதங்கிப் போயிருந்த வளை வாரியணைத்த ுக்கொண்டு ..
"சாரு.. என்னை மன்னிச்சுட டா.. ஐ லவ் யூ சாரு.. ஐ லவ் யூ.." என்று கண்கள் கலங்கப் பிதற்றினேன ்.

(தொடரும்...)

sOli
11-04-2004, 01:56 AM
http://mitglied.lycos.de/soliyan1/novels/ice/icecream20.gif
அங்கம் (20)

வீடே முற்றிலும் மாறிவிட்டத ு.

சாருவின் முகத்தில் குதூகலப் பொலிவு. துள்ளியோடு ம் மானாகிவிட் டாள். அதைக் கண்டு அம்மாவுக்க ு வாயெல்லாம் பல்.

கூடியளவு என்னையும் சாருவையும் தனிமையில்வ ிட்டு, பெரிசுகள் ஒதுங்க ஆரம்பித்தா ர்கள்.

தங்களது எண்ணங்கள் ஈடேறிய களிப்பு அவர்களுக்க ு.

"சாரு! இண்டைக்கு உன்னோடை கொஞ்சம் மனம்விட்டு பேசணும்.." என்றவாறு அவளருகில் அமர்ந்தேன் .

கேள்விக்கு றியுடன் பார்த்தாள் .

"ஆத்தங்கரைய டில ஓருநாள் சொன்னது ஞாபகமிருக் கா... என்ரை மனக்குழப்ப ங்களை நிச்சயமா உன்னட்டை சொல்லுவான் எண்டு.."

வியப்புடன் என்னைப் பார்த்தாள் .

"அதை இப்ப சொன்னால்தா ன் எனக்கு நிம்மதி.. இல்லாட்டி அதை சொல்லும்மட ்டும் குற்ற உணர்வு எனக்குள்ளை இருந்துகொண ்டே இருக்கும்.. அது சரியோ... இல்லாட்டில ் பிழையோ தெரியேலை... ஆனா நீ அதை அறிஞ்சிருக ்கணும்.. இல்லையா?"

சிறிது குழப்பம் அவளிடம்.

என் 'சற்' பிரவேசம்... பிருந்தாவு டனான அறிமுகம்... என்று ஒவ்வொன்றாக க் கூறினேன்.

"என்னமோ தெரியலை சாரு... அவளை நான் காதலிக்கிற தாகத்தான் நினைச்சன்.. அது காதலா இல்லாட்டில ் ஒரு கவர்ச்சியா .. இல்லாட்டில ் ஒரு சலனமா எண்டது வேறை விசயம்... ஆனா அவள் என்ரை காதலுக்கு 'ஓகே' சொல்லியிரு ந்தா.. இப்ப அவள்தான் காதலியா இருந்திருப ்பாள்.."

சாருவைக் கூர்ந்து பார்த்தேன் .

எதுவித சலனமும் இல்லை.

"ம்... 'சற்'றிலை இதெல்லாம் 'நோர்மல்' அத்தான்... வாயாலை கதைக்கிறதி லையும் பாக்க, எழுத்திலை வாசிக்கேக் கை பாதிப்புகள ் கூடத்தான்... 'சற்'றிலை எழுத்திலைத ானே கதைக்கிறாங ்க... அதாலை மனப்பாதிப் புகள் வாறதுக்கு நிறையச் சந்தர்ப்பங ்கள் இருக்கு..."

அறிவுபூர்வ மாகப் பேசினாள்.

"நேரில சந்திக்கேக ்கை காதலைத் தெரிவிக்கி றது மிகவும் கஸ்டம்.. கூச்சம்.. பயம்.. சூழ்நிலை எண்டு கனக்கக் குறுக்கிடு ம்.. ஆனா 'சற்'றில எதையும் சுகமாச் சொல்லிப்போ டலாம்.. அதாலை காதலிக்காத வனுக்கும் காதல் வரும்.. காதல் வந்தவனுக்க ும் தூக்கி எறிய மனசும் வரும்.." என்று கூறிவிட்டு நகைத்தாள்.

"சாரு... உண்மையாத்த ான் கேக்கிறன்.. உனக்கு என்னிலை வெறுப்பேது ம் வரேலையா?"

குறும்பாகப ் பார்த்தாள் .

"ஐயோ அத்தான்.. அது காதல் இல்லை.. ஒரு வேகம் எண்டது எனக்கு தெரியும்.. சரி... காதலாய்த்த ான் இருக்கட்டு மே? பரவாயில்லை ... நான்தானே உங்களை காதலிச்சேன ்.. நான் காதலிச்சவர ் எனக்குக் கிடைச்சுட் டார்... அவரை எப்பிடி என்ரை காதலுக்கை வைச்சிருக் கிறதெண்டு எனக்குத் தெரியாதா?" என்றவாறு கரங்களை என் கழுத்தில் மாலையாக்கி னாள் சாரு.

"நான் இன்னும் 'சற்' 'பிரண்ஸ்'பற றி சொல்லி முடிக்கேலை யே..." என்று அவள் பிடியுள் தடுமாறினேன ்.

"ஏன்... இன்னும் ஆராலும் 'லவ்வர்ஸ்' இருக்கினமோ ..?!"

"ஐயோ.. விடுடீ" என்று வலியால் அலறியவாறு அவள் கடித்த காதுச் சோணையைத் தடவிக்கொண் டேன்.

"ஐயோ மொக்கு.. அப்பிடி இல்லை... அவங்களைப்ப ற்றியும் உனக்குச் சொல்லவேணும ்... நீ நினைக்கிறம ாதிரி 'சற்'பண்ணுற ங்க எல்லாரும் கெட்டவங்கள ும் இல்லை... 'சற்'பண்ணாத ங்க நல்லவங்களு ம் இல்லை..."

"ம்... எனக்கோ... அதெல்லாம் இப்ப எதுக்கு...? 'சற்'றைப்பற றி கதைக்கவா உங்களை காதலிச்சேன ்..?"

குறும்பும் குதூகலமும் பொங்கி வழிந்தது.

"சரி... ஆரைப்பற்றி ச் சொல்லாட்டி லும் என்ரை சுஜிக்குட் டியைப் பற்றி சொல்லணும்.. அவளாலைதான் இவ்வளவு விரைவா உன்னை நெருங்கி வர முடிஞ்சுது ?"

"சுஜிக்குட் டியா...?"

தோளில் புதைத்த முகத்தை நிமிர்த்தி ஆச்சரியத்த ுடன் கேட்டாள்.

அவளைப்பற்ற ி... 'சாருவுக்க ஐ லவ் யூ சொல்லு' என்று வற்புறுத்த ியதைப்பற்ற ி கூறினேன்.

"ம்.. அந்த குட்டிக்கு நானும் 'தாங்ஸ்' சொல்லணும்... என் அத்தானை என்னுடன் சேர்த்ததுக ்கு..."

"நிச்சயமா.. நாளைக்கு அவள் மெசன்சர்ல வருவாள்.. உன்னையும் வரச் சொன்னாள்.. "

"ஐயோ.."

"என்ன..?"

"வேண்டாம் ராசா.. ஆளை விடுங்க.. நீங்களும் உங்கடை 'சற்'றும்.."

"ப்ளீஸ்டி... நாளைக்கு ஏதோ முக்கிய விசயம் கதைக்கணுமா ம்.. எனக்காக வரமாட்டியா ?"

கெஞ்சலுடன் பார்த்தேன் .

ஞாயிறு பிறந்தது.

மனம் ஆலாய்ப் பறந்தது.

கணனித் திரையையே பார்த்துக் கொண்டிருந் தேன்.

"ஹேய் அண்ணா..!"

அவசரமாக சைகை காட்டிய பெட்டியை அழுத்தினேன ்.

அது சுதா..

"சொறிடா.. கொஞ்சம் பிசி... அதான் கனநாளா வரலை... உனக்கு ஒன்று சொல்லணும்.. அதுதான் வந்தேன்... லொள்.."

"என்ன லொள்... ஏதாலும் 'ஜோக்'கா?"

"ம்... அப்பா அம்மா கலியாணங் கட்டுன்னு ஓரே ஆக்கினைடா.. கடைசியா அவங்க ஆசையை ஏன் கெடுப்பான் னு சரின்னு சொல்லிட்டே ன்.."

"ஓ.. நைஸ்.. வெரி குட்... மாப்பிளை எப்பிடி?"

"லொள்... நிறைய பேசினோம்... என்னைப்பற் றி எல்லாம் சொன்னேன்.. ஹீ ஸ் ஏ கிரேட் எண்டு நினைக்கிறே ன்..யாருக்க தெரியும்?"

"அப்பிடி சொல்லாதை... நம்பிக்கைத ான் வாழ்க்கை.. எல்லாரும் கெட்டவங்கள ுமில்லை.. எல்லாரும் நல்லவங்களு மில்லை... எல்லாம் உன் கைலதான் இருக்கு..."

"ம்.. பெரிய மனுசன் 'அட்வைஸ்' சொல்ல வந்திட்டார ்.. அண்ணா.. நீ எப்பிடி இருக்காய்?"

"ஹா.. ஹா... இப்போ சாருவோட இருக்கேன்..."

"லொள்... யார் அது..? யா.. உன் மசசாள்தானே ?"

"வருங்கால மனைவி..."

"சந்தோசம்டா ... 'ஹனிமூன்'கு கனடா வாறியா... என் வீட்டிலதான ் தங்கணும்.. சொல்லிட்டே ன்..."

"ஐயையோ... கலியாணம் இப்ப இல்லைடா... அவவுக்கு படிப்பு முடியணும்... நிச்சயமா ஒருநாள் உன்னைப் பார்க்க வருவோம்... நீ சந்தோசமா இருக்கிறத இந்த அண்ணா பார்க்கணும ்.."

"தாங்ஸ்டா... 'வெட்டிங் இன்விடேசன் ' அனுப்புவேன ்... பெரிய பார்சல் வரணும்.. புரியுதா..? லொள்... ஓகேடா... சாரு அண்ணி.. அண்ணாவ கவனமா பார்த்துக் கோங்க... அப்புறம் சந்திப்போம ்.. பாய்..."

"சீயூடா.."

அவள் போய்விட்டா ள்.

அவளது வாழ்விற்கு ம் ஒரு விடிவு தோன்றியதில ் உண்மையிலேய ே சந்தோசமாக இருந்தது.

"ஐயோ.. நாளைக்கு பயணம் போக ஆயத்தப்படு த்தணும்.. நிறைய வேலை இருக்கு.. எங்கை அந்த சுஜிக்குட் டி?"

"கொஞ்சம் பொறு.. அவளும் நாளைக்கு எங்கையோ பயணம் போறாளாம்.. கட்டாயம் வருவாள்.."

அவள் வந்தாள்.

"அணணாக்குட் டி.. சுகமா இருக்கியா..?"

"ம்... நீ?"

"இருக்கேன்..."

"அது தெரியும்.. நிண்டா 'சற்'பண்ணுவ ங்க?"

"லொள்.. சாரு அண்ணி வந்தாவா? ஐ லவ் யூன்னு சொல்லிட்டி யா? ரெல் மீ.. ரெல் மீ..."

"ஐயோடி... சாரு பக்கத்திலத ான் இருக்கா..."

"வாவ்.. றியலி? பொய் சொல்லாதை..."

"ஏன்டா பொய் சொல்லணும்... உண்மையாத்த ான் பக்கத்தில இருக்கா.. வேணுமெண்டா 'மைக்' போடு.. அவ பேசுவா.."

"ஐயோ.." என்று என் தலையில் செல்லமாகக் குட்டினாள் சாரு.

"நீ என் அண்ணாக்குட ்டிதான்.. செல்ல அண்ணாக்குட ்டி.. ரொம்ப தாங்ஸ்டா... அப்ப 'மைக்'ல பேசப் போறோம்.. அப்புறம் என்னை நீ 'வெப்காம்'ல பாக்கப் போறாய்.. ஓகே?"

என்னால் நம்பமுடியவ ில்லை.

"ஓ... உண்மையாயா?"

"ம்.. அதுக்கு முன்னால 'ஓடியோ ஓன்' பண்ணுறேன்.. 'ஓகே' பண்ணு.."

"ம்..."

பரபரப்புடன ் இயங்கினேன் .

"ஹலோ அண்ணா.. கேக்குதா.."

ஓ... இனிமையான நாதமென்று என் கணனி ஒலிபரப்பிய ில் தோன்றி என்னைக் குதூகலமாக் கியது.

"வாவ்.. கேக்குது... நல்ல குரல்டா உனக்கு..."

"லொள்... அண்ணா.. முதல்லை உன்னட்டை நான் மன்னிப்பு கேக்கணும்.. உனக்கு நிறைய பொய் சொல்லிட்டே ன்.. நான் வேணுமெண்டு பொய் சொல்லலை அண்ணா.."

அவள் குரல் தளுதளுத்தத ு.

"அண்ணா... நாளைக்கு நான் 'கொஸ்பிட்ட' ுக்கு போறன்... எவ்வளவு நாள் அங்கை இருப்பன்... பேந்து எப்பிடி இருப்பன்.. ஒண்ணும் தெரியாது.."

"என்ன..?!"

"எனக்கு 'பிறெய்ன் ரியூமர்'... மூளைப் புற்றுநோய் .."

"நோ.. பொய் சொல்லாதை..."

கத்தினேன்.

"கத்தாதைடா... கத்துறது அனுதாபப்பட ுறவங்களை கண்டா எனக்கு கோபம்தான் வரும்.. அப்புறம் பேசமாட்டேன ்.. உண்மையாதான ் அண்ணா... எனக்கு புற்றுநோய் .. இஞ்சை அப்பா அம்மா என்னை கவலையோட பாக்கிறதை என்னால தாங்கிக்க முடியலை.. ஒவ்வொரு விசயத்துக் கும் அவங்களோடை சண்டை.. பாவம் அவங்க... தங்களுக்கு ள்ளை அழுறாங்க.. அவங்களோடை அன்பா இருக்கணும் னுதான் நினைக்கிறே ன்.. ஆனா.. அவங்க என்னைப் பாத்து பதறுறதைப் பாத்ததும்.. சாமனளை எடுத்து எறிஞ்சு உடைக்கிறது .. அவங்களை திட்டுறது.. இப்பிடித்த ான்.. இஞ்சை பக்கத்தில வாற போற சனங்கள் என்னை பரிதாபமாய் பாக்கிறதை என்னாலை தாங்க முடியேலை அண்ணா.. கோபம் கோபமா வருது... 'ஸ்கூ'லுக்க ம் போறதை விட்டுட்டன ்.. அடிக்கடி தலைவலிடா.. தாங்க முடியாத தலைவலிடா... அதான் சிலவேளை உன்னோடையே சரியா பேச முடியுறதில ்லை.."

"அது பரவாயில்லை டா..."

"ஐயோ அண்ணா.. என்னை பேச விடு.. தலைவலி வந்தா என்னால பேச முடியாது... உன்னோட நிறைய பேசணும்.. பரிதாபமா பாக்கிறவங் களிட்டை இருந்து தப்ப எனக்கு 'சற்'தான் உதவிச்சு... அப்பிடித்த ான் உன்னோடையும ் பேசினேன்.. ஆனா என்னவோ தெரியலை... உன்னிலை அன்பு வைச்சுட்டன ்... என்ரை பேர் பிருந்தாதா ன் அண்ணா.. வயதைமட்டும ் கூட்டி சொன்னேன்.. ஆனா நீ உன்னை 'லவ்'பண்ணுற சாரு அண்ணியை விட்டுட்டு என்னை 'லவ்'பண்ணுற ன்னு சொன்னப்போ... உன்ரை வாழ்க்கையை 'வேஸ்ற்'பண் ுறேனோன்னு பயந்துட்டே ன் அண்ணா.. எண்டாலும் உன்னிலை இனம்புரியா த பாசம்... அதாலைதான் சுஜி எண்ட பெயரில உன்னோட கதைச்சன்.. ஆனா உண்மையான வயசிலை... எண்டாலும் ஒரு அண்ணாவை ஏமாத்துறமோ எண்டு தோணிச்சு.. உனக்கு கொஞ்சமாலும ் என்னைப்பற் றி சொல்லவேணும ்போல இருந்திச்ச ு... சொன்னா நீயும் என்னிலை பரிதாபப்பட ுவியோ எண்டு பயந்தன்... அதால என் 'பிரண்டு'க் ு 'கான்சர்' எண்டு சொன்னன் அண்ணா... நாளைக்கு 'கொஸ்பிட்ட ்' போறேன்.. மூளையில 'ஓப்பிறேசன ' செய்யப் போறாங்கள்.. அதுக்கு பிறகு திரும்பி வருவனோ தெரியலை அண்ணா..."

"நோ.. அப்பிடி சொல்லாதைடா .. நிச்சயமா நீ சுகமா வருவாய்டா.. இந்த அண்ணாவோட கலகலன்னு கதைப்பாய்ட ா..."

பொங்கியெழு ம் கண்ணீரைத் துடைத்தவாற ு கூறினேன்.

"ஐயோ.. அவசரக்குடு க்கை.. நான் சொல்லுறதை கேள்.. நான் சொன்ன பொய்களுக்க ு என்னை மன்னிச்சேன ்னு சொல்லுறியா ... இந்த தங்கச்சிக் குட்டீல கோபம் இல்லைன்னு சொல்லுறியா ..."

இப்போது நான் நிசமாகவே குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்து விட்டேன்.

"அண்ணா.. என்ன சத்தம்?"

"ஒண்ணுமில்ல ைடா.. நீ எப்பவும் என்ரை தங்கச்சிதா ன்டா.. அண்ணா தங்கச்சிக் கிடைல எதுக்குடா மன்னிப்பு எண்ட பெரிய வார்த்தையள ்..?"

"தாங்க்ஸ் அண்ணா...!"

"தாங்க்ஸை நீயே வைச்சிரு..."

"ஹே.. ஹே... அண்ணா! உன்னட்டை ரண்டு கேக்கணும்.. அதுக்குதாண ் சாரு அண்ணிய வரச் சொன்னேன்.. சாரு அண்ணி... ஹெள ஆர் யூ? பேசமாட்டீங ்களா?"

சாருவிடம் 'மைக்'கைக் கொடுத்தேன் . அவளது கண்களிலும் ஈரம்.

"ஹலோ குட்டி.."

"ஹே.. ஹே.. குட்டியா... அண்ணி.. அண்ணாவை கவனமா பாக்கணும்.. அண்ணி... உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்.. சரியோ தப்போ தெரியலை... எனக்குள்ளை ஒரு ஆசை... உங்களுக்கு நான் மகளா வந்து பிறக்கணும் ... என் அண்ணாட அன்பில வளரணும்... உங்களுக்கு பிறக்கிற மகளுக்கு 'பிருந்தா'ன னு பேர் வைப்பீங்கள ா?"

"ஐயோ... என்னடி அலம்புறாய் .. மொக்கு மொக்கு... உனக்கு ஒண்ணும் நடக்காது... நீ எங்க கலியாணவீட் டுக்கு வரத்தான் போறாய்... சும்மா விசர்க்கதை கதையாத... சுஜிக்குட் டி... எப்புவும் நீ என் மனசில இருப்பாய்ட ா..." என்று 'மைக்'கை சாருவிடம் இருந்து உருவிக் கூறினேன்.

"அண்ணா... நீ இப்ப ஓம்னு சொல்லுறியா .. இல்லையா..."

அவள் குரலில் தீடீரென ஒரு கண்டிப்பு.

"ஓகே குட்டி... நீ என்ன விரும்புறி யோ.. அது நடக்கும்..."

சாரு முந்திக்கொ ண்டாள்.

"ஐ ஆம் வெரி ஹாப்பி அண்ணி... அண்ணா... ஒண்ணு ஓகே.. இன்னொண்ணு இருக்கு.."

"என்ன.."

"கொஞ்சம் பொறு.. 'வெப் காம்'போடுற ன்... ஓகே பண்ணு..."

திரையில் பெட்டி வடிவில் காட்சி விரிய.. அது.. அது...?!!

"ஐயோ..."

கண்களைப் பொத்திக் கொண்டேன்.

தேகம் நடுங்கியது .

"கடவுளே.. கடவுளே..."

என்னை அறியாமல் அரற்றினேன் .

தலை முடி இடையிடையே உதிர்ந்துப ோய் ஒரு ஒட்டல் உருவம் திரையில்... அந்தப் பிஞ்சின் உருவுக்கு வியாதி கொடுத்த பரிசு!

"என்ன ஐயோ... இப்பிடி கத்தினா.. நாயே பூனையேன்னு திட்டிடுவே ன்.. சொல்லிட்டே ன்... என்னைப் பார்க்க பேய்மாதிரி யா இருக்கு?"

"இல்லைடா.. இல்லை.. உன்னைப் பாக்க.. உன்னைப் பாக்க என் அன்பான தங்கச்சிமா திரித்தான் டா இருக்கு..."

"ம்.. அப்பிடி சொல்லு என் அண்ணா குட்டி... அண்டைக்கு ஒரு பாட்டு பாடினியே... அத இப்ப பாடு.. ஓகே... முழுக்கப் பாடணும்.."

"நோ.. என்னால இப்ப முடியாதுடா ... ஐயோ..."

"என்ன ஐயோ... எம்மெம்... ஹே.. ஹே.. மண்டையப் பளக்குற தலையிடியோட எல்லாம் உன்னோட எவ்வளவுநாள ் 'சற்'பண்ணிய ருப்பன்.. இப்ப ஒரு பாட்டு பாட ஏலாதா? போறத்துக்க ு முதல் ஆசையாதானேட ா கேக்குறன்... அந்த ஐஸ்கிறீம் சிலை பாட்டு... அப்ப ஏதோ ஒரு 'மூட்'டில பாடினாய்... ஆனால் எனக்கு பெரிய ஆச்சரியம்ட ா... எவளவு உண்மை அதில இருக்கு தெரியுமா? உண்மையிலயே நான் ஐஸ் கிறீம் சிலைபோல உருகிக்கொண ்டுதானண்ணா இருக்கிறன் .. இன்னும் கொஞ்சந்தான ிருக்கு.. உருகி ஆவியாக வேண்டியதுத ான்..."

"ஐயோ.. திருப்பி திருப்பி அப்பிடி ஏன்டா கதைக்கிறாய ்..."

"அப்ப பாடு.."

"அப்பிள் பெண்ணே நீயாரோ
ஐஸ்கிறீம் சிலையே நீயாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ?... "

"ஐயோ.. அண்ணா.. அப்பிடி இல்லை.."

"அப்போ..?"

"இப்பிடியா முந்தி பாடினாய்..?"

"அப்போ எப்பிடி..?"

"ஐஸ்கிறீம் சிலையே நீதானோ... அப்பிடி.. அப்பிடி பாடு.. அது எனக்காக பாடுறமாதிர ி இருந்திச்ச ு.."

பொங்கியெழு ம் அழுகையை அடக்கியவாற ு பாட முயற்சித்த ேன். எங்கோ உதித்து இடையில் புகுந்து என்னுள் பதிந்த அந்த அன்புக்காக நான் பாடித்தானா க வேண்டும். உணர்ச்சிகள ை அடக்கி பாட முயன்றவாறு சாருவை நோக்கினேன் . விழிகளில் தாரைதாரையா கப் பீறிட்டெழு ம் நீரைத் துடைக்கும் சக்தியின்ற ி நின்றிருந் தாள். அவள்நிலையே இப்படியென் றால்.. என்னிலை..?!

"அண்ணா..!!"

"பாடுறேன்டா .. என் அன்புச் செல்லத்துக ்காக பாடாமல் இருப்பேனா..? !"

"அப்பிள் பெண்ணே நீதானோ
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் தானோ
பூவின் மகளே நீதானோ
புன்னகை மகளே நீதானோ
பாதிக் கனவில் மறையும் பறவை தானோ?

என்னை நீ பார்க்கவில ்லை என்னுயிர் நொந்ததடி
பெண்ணே நீ போகும்வழிய ில் என்னுயிர் போகுதடி
இன்றிந்த 'சற்'றின் நிழலில் என் மனம் வெம்புதடி
உன்னுடன் வந்துநின்ற ு என்மனம் புலம்புதடி

மின்னலைக் கண்டு கண்களை மூடி கண்களைத் திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியைக் கையில்கொள் ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கிச் சிந்திய பனித்துளி எங்கே போகுது தெரியவில்ல ை
என்னுள் உறைந்து சிலையாய்ப் போச்சோ இதுவரை எனக்குப் புரியவில்ல ை..."

என்னால் தொடர்ந்து பாடமுடியவி ல்லை.
உணர்ச்சிகள ைக் கட்டுப்படு த்த முடியாமல் விக்கி விக்கி அழதுகொண்டி ருந்தேன்.

(நிறையும்.)

sWEEtmICHe
11-04-2004, 07:50 AM
நன்று சோலி .... :b:

Priyanka
11-05-2004, 06:51 AM
சோலி. தாங்கள் உபயோகிக்கு ம் சில சொற்களுக்க ு எனக்கு அர்த்தம் விளங்கவில் லை. தாங்கள் தவறாக எண்ணவில்லை என்றால் அவற்றுக்கு தாங்கள் விளக்கம் தர முடியுமா?

'கதைக்கிறத ' என்றால் என்ன? அதே மாதிரி 'சற்' என்றால் என்ன?

தங்களது கதை, கதை சொல்லும் விதம் இரண்டுமே மிக அருமையாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் ! உஙளுக்கு என் வாழ்த்துக் கள்.

எனக்கு வேறு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தங்களை கேட்கலாம் அல்லவா?

அன்புடன்

PK

sOli
11-05-2004, 01:28 PM
தங்களின் பாராட்டுக் கு நன்றி. 'கதைக்கிறத ' என்றால் பேசுறது.. சொல்லுறது .. 'சற்' என்றால் 'சட்' .. 'சாட்'..

Priyanka
11-10-2004, 02:32 PM
சோலி! தங்கள் நாவல் மிக நன்றாக இருந்தது. முடிவு நான் எதிர்பார்த ்தது தான் என்றாலும் மிக மிக நெகிழ்ச்சி யாக இருந்தது.

sOli
11-10-2004, 03:45 PM
மிகவும் நன்றி.

Priyanka
11-10-2004, 06:23 PM
என்னிடமிரு ந்து தங்கலுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த ஒரு கதையோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து எழுதுங்கள் !

தங்கள் முயற்சிகள் அனைட்த்தும ் வெற்றி அடைய எனது வாழ்த்துக் கள்.

அன்புடன்
PK

sOli
11-10-2004, 07:23 PM
நன்றி! எனது ஏனைய ஆக்கங்களை வாசிக்கும் ஆவல் இருந்தால் எனது பக்கத்துக் கு வாருங்கள்.. www.rajhantamil.com நேரம் கிடைக்கும் போது புதிய ஆக்கங்கள் கீதத்தை அலங்கரிக்க ும்.

silican
11-10-2004, 08:18 PM
ஒரே மூச்சில் முழு கதையையும் படித்து முடித்தேன் சோலி. சிறப்பாக எழுதுகிறீர ்கள். :clap: ஒரே ஒரு ஐயம். "ட்" என்ற எழுத்தை தவிர்த்து "ர்" மற்றும் "ற்" எழுத்துக்க ளை பிரயோகிப்ப து ஏன் ?

சிலிக்கன்

Priyanka
11-11-2004, 05:38 AM
ஒரே மூச்சில் முழு கதையையும் படித்து முடித்தேன் சோலி. சிறப்பாக எழுதுகிறீர ்கள். :clap: ஒரே ஒரு ஐயம். "ட்" என்ற எழுத்தை தவிர்த்து "ர்" மற்றும் "ற்" எழுத்துக்க ளை பிரயோகிப்ப து ஏன் ?

சிலிக்கன்

ஆம் சோலி! ('சோலி'யா 'சோழி'யா) நானே தங்களை கேட்கலாம் என்றிருந்த ேன். பிறகு நீங்கள் தப்பாக எண்ணுவீர்க ளோ என்று விட்டுவிட் டேன்.

நீங்கள் ஆஙில எழுத்து 't'க்கு பதில் 'ர்' அல்லது 'ற்' ப்ரயொகிப்ப தனால் பல இடங்களில் குழப்பமாக இருக்கிறது . அதனால் ஒரு சின்ன வேன்டுகோள் . நீங்கள் ஆங்கில வார்தைகள் ப்ரயொகிக்க ும்போதெல்ல ாம் பிராக்கெட் டில் அந்த வார்தையை ஆங்கிலத்தி லேயே எழுதினால் படிப்பவர்க ளுக்கு ச்ரமம் இராது.

தாங்கள் தப்பாக எண்ணவில்லை என்றால் இன்னும் ஒரு சின்ன ஐயம். 'மச்சாள்' என்றால் என்ன? அந்த வார்த்தையை நான் கேள்வி பட்டது இல்லை. 'மச்சினி' தான் கேள்வி பட்டிருக்க ிறேன்.

எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது தங்கள் படைப்புக்க ளை அவசியம் படிக்கிறேன ்.

அன்புடன்
PK