PDA

View Full Version : அந்நியன் - விகடன் விமரிசனம்che
06-24-2005, 07:00 AM
அந்நியன் http://www.vikatan.com/av/2005/jul/03072005/p6a.jpg

‘இன்றைய இந்தியாவுக ்குத் தேவை இந்த அந்நியன் தான்!’ என்கிறார் இயக்குநர் ஷங்கர்.

http://www.vikatan.com/av/2005/jul/03072005/p7.jpg

ஆட்டம், பாட்டம், அதிரடி, காமெடி என கலர்ஃபுல் கலவைக்கு நடுவே Ôகாஸ்ட்லி மெஸேஜ் சொல்லும் டிபிக்கல் ஷங்கர் பிராண்ட்!

அய்யங்கார் வீட்டு அம்பியாக விக்ரம். வக்கீலின் செல்லப் பெயரே ‘ரூல்ஸ் ராமானுஜம்’ . சட்ட திட்டங் களை மதித்து நடக்கிற அம்பிக்கு, உலகத்தின் மீது அத்தனை புழுக்கம். ‘ஏன் இங்கே யாருமே ஒழுக்கமா இல்லே? ஏன் இங்கே எல்லாமே தப்பா இருக்கு?’ என வேதனையுடன் அலைகிறார். இவர் புத்தி சொன் னாலும் யாரும் திருந்துவத ாக இல்லை. இன்னொரு பக்கம் அம்பி உருகி உருகிக் காதலிக்கிற சதாவும், ‘இப்படி தொட்டதுக்க ெல்லாம் ரூல்ஸ் பேசிண்டு அலையறவரோட வாழ்க்கை நடத்த முடியாது’ என காதலை Ôஜஸ்ட் லைக் தட் நிராகரிக் கிறார்.

எதற்கெடுத் தாலும் ரூல்ஸ் பேசும் ‘அம்பி’க்க ு அடுத்தடுத் து நேரும் அவமானங்களு ம், அவர் உள்ளக் கொதிப்பும் அத்தனை பரிதாபம்! காதலை சதாவிடம் சொல்ல முடியா மல், ஒரு டிரங்க் பெட்டி நிறைய கிரீட்டிங் கார்டுகளை தானே எழுதி வைத்துக்கொ ண்டு, அம்பி தவிப்பது பரிதாபமோ பரிதாபம்!

http://www.vikatan.com/av/2005/jul/03072005/p6.jpg

விரக்தியில ும் வேதனையிலும ் கிடக்கிற அம்பிக்குள ்ளிருந்து வெடித்துக் கிளம்புகிற ார்கள் வேறு வகையான இரு மனிதர்கள். காரணம் ‘மல்டிபிள் பர்சனா லிட்டி டிஸார்டர்’ (இந்த மன நோய் பற்றி ஏற்கெனவே புரிந்துகொ ள்ள உதவிய ‘குடைக்குள ் மழை’, ‘சந்திர முகி’க்கு நன்றி)! அநியாயங் களை வேட்டையாடி அழித்து ஒழிக்கும் கொலைவெறி அந்நியன்; சதாவின் காதலைப் பெற ஃப்ரீக் அவுட் ரோமியோ வாக உலாவரும் ஜாலி ரெமோ ஆகிய இருவரும் அம்பிக்குள ் குடியேறிய பிறகு, ஆர்ப்பாட்ட ம் ஆரம்பம்!

இந்த உண்மை ‘அம்பி’ உட்பட எல்லோருக்க ும் தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பது திகில் கிளைமாக்ஸ் ! புரிந்துகொ ள்ள இது சற்றே கடினமான அவுட் லைன்தான். ஆனால், ஸ்கிரீ னில் அத்தனை பிரமாண்ட மான, நேர்த்தியா ன உருவாக் கத்தில் அசத்தியிரு க்கிறார் ஷங்கர்!

மக்கள் பணத்தைக் கொள் ளையடிக்கிற , மாபெரும் தவறுகள் செய்கிற மெகா முதலைகளை விட்டுவிட் டு, சராசரி ரேஞ்சில் இருக்கிற சின்னச் சின்ன களைகளை மட்டுமே கிள்ளி எறிவது, அந்நியனின் கெத்துக்கு லேசாக இடிக்கிறது . சாலையோரம் அடிபட்டுக் கிடந்த ஒருவரை ஆஸ்பத் திரிக்கு அழைத்துச் செல்ல மறுத்த கார்காரருக ்கு மரண தண்டனை தருவதெல்லா ம் டூ மச்! அப்படியானா ல், இடித்துத் தள்ளிய ஆசாமி, உதவிக்கு வராமல் வேடிக்கை பார்த்த கூட்டம், கார்களை நிறுத்தாமல ே போனவர்கள் என்று எல்லாரையும ் ‘கண்ணகி’ லெவலுக்கு கொளுத்தியி ருக்க வேண் டாமா?

இருந்தாலும ், அந்த தண்ட னைகள் ஒவ்வொன்றும ் பகீர் திகீர் காமிக்ஸ் ரகம்! திமுதிமுத் து நகரும் மெகா எருமைக் கூட்டத்துக ்குள் தள்ளிவிட்ட ு ரத்தக் கூழாக் குவது... உடம்பு முழுக்க மசாலா தடவி எண்ணெய்க் கொப்பரைக்க ுள் துக்கி எறிவது (‘‘சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் மாதிரி, நீ எனக்கு சொக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ்!) என்று கதிகலக்கல் ! காட்சிகளின ் கோரத்தை நேரடி யாகக் காட்டி அருவருக்கச ் செய்யாமல், நம் கற்பனைக்கே விட்டிருப் பது பொறுப்பான ஐடியா!

ஆக்ஷன் காட்சிகளோ பிரமிப்பு வகை! குறிப்பாக, கராத்தே ஸ்கூலில் ஏழெட்டு டஜன் ஆட்களை மூர்க்கமாக விக்ரம் அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி... மிகத் துணிச்சலான ஸ்டண்ட் நடிகர்களும ் கேமராக்களு ம், கிராஃபிக்ஸ ம் இணைந்து நடத்தி யிருக்கும் மாயாஜாலம் அப்படியே மேட்ரிக்ஸ் அச்சு! ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினுக்கு சபாஷ்!

தப்பு செய்கிற யாரையும் மன்னிப்புக ்கே இடமின்றிக் கொல்லும் அந்நியன், ஊழலுக்குத் துணை போகிற சதாவையும் கொல்லத் துடிக்கும் போது... படக் படக்கென்று அவனுக்குள் ளிருந்து ரெமோ வெளிப்பட்ட ு, சதாவைக் காப் பாற்ற முயல்வது விறுவிறு ஹைக்கூ!

அம்பியின் கண்ணில் பட்ட தப்பு ஆசாமிகளுக் கு மட்டுமே மரண தண்டனை தருகிறார் அந்நியன். இதற்கு எதற்கு ‘அந்நியன் டாட் காம்’... அதில் புகார்கள் வரவேற்பு என்று ஏன் பில்டப்?

விறைப்பும் முறைப்புமா க நடிப்பில் மின்னுகிறா ர் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ ். ஆனால், அவர் எதற்காக மாறுவேடம் போடுகிறார் ... அதில் என்ன சாதிக்கிறா ர்? அந்தக் காட்சிகளில ் த்ரில்லும் இல்லை... காமெடியும் இல்லை! விக்ரமின் திறமைக்கும ் உழைப்புக்க ும் தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறி இருக்கிறார ் ஷங்கர். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும ் பிரமிப்பூட ்டும் நடிப்பு. மேனரிஸம், பாடி லாங்வேஜ் என ஒவ்வொன்றில ும் ஆச்சர்யமூட ்டும் அனல்! கட்டுக் குடுமி அம்பியின் படபடப்பு, ஸ்பிரிங் முடி அந்நியனின் கொதிகொதிப் பு, ப்ளீச் தலை ரெமோவின் ஜிலுஜிலுப் பு என அசத்தல் பரிமாணங்கள ். தோற்றத்தில ், முக பாவங்களில் , உடல் அசைவுகளில் ... அட, குரலில்கூட வெரைட்டியா ன வித்தியாசம ்... கலக்கிட்டீ ங்க விக்ரம்!

போலீஸ் பிரகாஷ்ராஜ ், அம்பியை அடித்துத் துவைத்து விசாரிக்க, சடார் சடாரென அந்நியன் வெளிப்பட்ட ு மாறி மாறி பிரகாஷ்ராஜ ைக் கலவரப் படுத்துகிற காட்சி... ஜிலீர் சிக்ஸர்! அய்யங்கார் ஆத்து உச்சரிப்பு க்கு மட்டும் இன்னும் மெனக்கெட்ட ிருக்கலாம் .

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், அய்யங்கார் வீட்டு அழகேவும் குமாரீ..யும வெண்பொங்கல ் என்றால், காதல் யானையும் அண்டங்காக் காவும் தலப்பா கட்டு பிரியாணி! ‘அண்டங்காக ்கா...’வில் வண்ணமயமாக பெயின்ட்டோ ற்சவம் நடத்தியிரு க்கும் கலை இயக்குநர் சாபுசிரிலி ன் பங்களிப்பு அபாரம்!

http://www.vikatan.com/av/2005/jul/03072005/p8.jpg

கேமராமேன்க ள் மணிகண்டன் ரவி வர்மனின் உழைப்பு இயக்குநரின ் கருவை இன்னும் சுகமான பிரசவம் ஆக்கியிருக ்கிறது.

‘அஞ்சு பைசாவ அஞ்சு கோடி பேர் அஞ்சஞ்சு தடவை திருடுறது தப்பா?’, ‘சட்டத்தை நீங்க மீறலாம், ஆனா நான் கையிலெடுக் கக் கூடாதா?’ போன்ற பளீர் சுளீர் வசனங்களைக் கேட்ட மாத்திரத்த ிலேயே சுஜாதா என்று கண்ணை மூடிக்கொண் டு சொல்லி விடலாம். ‘இருபத்தைந ்து வருடங்களில ் சிங்கப்பூர ும் ஜப்பானும் எப்படி எல்லாம் மாறி இருக்கிறது ? பிறகு ஏன் இந்தியா மட்டும் இப்படியே இருக்கிறது ?’ என்று அந்நியன் வாயிலாக ஷங்கர் கேட்கிறாரே , அந்தக் கேள்வி அப்படியே நெஞ்சில் தைத்து நிற்கிறது!

ஷங்கரின் மெகா ஹிட்களான ‘ஜென்டில்ம ேன்’, ‘இந்தியன்’ படங்களை அந்நியன் பல இடங்களில் நினைவூட்டி னாலும்... சாகாவரம் பெற்ற ஊழலையும் முறைகேட்டை யும் எதிர்க்கிற கேரக்டர் கள் எப்போதுமே போரடிப்பதி ல்லை தான்!

‘அந்நியன்’ ... மசாலா மாயாஜாலம்!

mermaid
06-24-2005, 02:02 PM
ரொம்ப அழகா இருக்கு எழுதின விதம். படிக்கும் போதே பாககனும்னு தோனுது. ரொம்ப நன்ரி.( i donno how to write the other "ri") can u reply me?

thamizh
06-25-2005, 01:35 AM
hey thanks a lot for the review from Vikatan, was looking around for it!
romba nandri.
Ps: To mermaid: றி is a Ri (capital R and lowercase i) hope u got it now ! :wink:

vaalu2005
06-25-2005, 03:40 PM
en vimarsanathaai erkanavee anniyan reviee thred la irukku parkavum

che
06-26-2005, 09:19 AM
thanks every one.