PDA

View Full Version : பிதாமகன்-விமர்சனத்த ொகுப்புbhagavathar
10-25-2003, 02:37 PM
படத்தின் காட்சி முடிந்தும் அதை ரசித்த மக்கள் கைதட்டுவது வெளிநாட்டி லுள்ள வழக்கம். இங்கு "பிதாமகன்"க்கு அந்த மரியாதையைய ும் கௌவரத்தையு ம் அளிக்கிறார ்கள் ரசிகர்கள்.


http://www.webulagam.com/cinema/movie_stills/pithamagan/images/pitha-maghan-5.jpg


சூர்யா வரும் காட்சிகளைத ் தவிர்த்துப ் பார்த்தால் இது முழுக்க முழுக்க ஒரு சீரியஸான படம். காட்சிகளை நகர்த்திய விதமும் இதற்கு மெருகூட்டி ய ராஜாவின் இசையும் ஹாலிவுட் பாணியிலான ஒரு கேரக்டரில் மூர்க்கத்த னமாய் நடித்து அசத்திய விக்ரமும் ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தியை இந்த தீபாவளி சமயத்தில் அளித்துள்ள ார்கள்.

கமர்ஷியலான ஒரு கதைக்கு கலைவடிவம் கொடுத்திரு க்கிறார் பாலா. சுடுகாட்டி ல் பிறந்து வளர்ந்து, பிணங்களுக் கு மத்தியில் மூர்க்கதனம ான மிருகமாக வாழும் விக்ரம் சூர்யாவை ஜெயிலில் சந்திக்கிற ார். சூர்யா வெளிப்படுத ்தும் நட்பில் கரையும் விக்ரம் அவருக்காக எதுவேண்டும ானாலும் செய்யும் அளவிற்கு சூர்யா பித்தனாகிவ ிடுகிறார்.


http://www.webulagam.com/cinema/movie_stills/pithamagan/images/pitha-maghan-9.jpg

இதற்கிடையி ல் ரகசியமாய் கஞ்சா தொழில் செய்யும் வில்லனிடம் வேலைசெய்யு ம் விக்ரம் அவர் அறியாமையின ால் வில்லனின் சூழ்ச்சியி ல் சிக்குகிறா ர். இதை சூர்யா தடுத்து நிறுத்த முயற்சிக்க இவர்களை ஒழிக்க வலை பிண்ணப்படு கிறது. க்ளைமாக்ஸ் ? எங்கு விக்ரம் வாழ்க்கையை தொடங்கினார ோ அங்கேயே செல்லும் அளவிற்கு சோக சம்பவங்கள் நடந்துவிடு கிறது.

தன்மீது கைவைத்தவனி ன் கை ஒடிக்கவும் உதவி செய்தால் நாயாய் விசுவாசம் காட்டுவதும ் ... என இவ்விரண்டு குணங்கள் மட்டுமேயுட ைய சித்தனான விக்ரம் அந்த கேரக்டரில் மிரட்டியிர ுக்கிறார். நெஞ்சைவிட் டு அகலாத பெர்பாமன்ஸ ். படம்முழுக் க அழுக்கான ஆடைகள், செம்பட்டை முடி, அழுக்கேறிய முகம், சாம்பல் நிற பற்கள்... குழந்தைகள் கண்டால் பயந்துவிடு ம். சாமி, தூள் மாதிரியான படங்களை செய்துவிட் டு இப்படியரு படம்! இன்னும் அந்த உருவத்திற் குள் எத்தனை எத்தனை திறமைகளோ!


http://www.webulagam.com/cinema/movie_stills/pithamagan/images/pitha-pic1.jpg

விக்ரமிற்க ு படத்தில் ஒருவசனமும் கிடையாது. நம்பமுடிகி றதா? பிணத்திற்க ருகில் ஒரு மூன்றுவரிய ிலே பாடும்போது தான் ஊமையில்லை என்று தெரிகிறது. மிருகம் எழுந்து நடப்பதுபோல ் இரண்டு கைகளையும் தொங்கவிட்ட படி ஓடும்பொழுத ு தியேட்டரில ் விசில் பறக்கிறது.

கேரக்டர்கள ் வகுப்பதிலு ம் சரியான நடிகர்களை தேர்வு செய்வதிலும ் பாலா திறமைசாலி. காக்க காக்கவில் மிடுக்கான ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்த சூர்யா இதில் ஒரு ஃப்ராடு மனிதர். நாம் தினசரி அன்றாட வாழ்க்கையி ல் பார்க்கும் சீட்டிங் மனிதர்களின ் ஒட்டுமொத்த உருவம். கருணாஸ்-மனோபாலாவை ஒரங்கட்டிவ ிட்டு கொஞ்சம் நீளமான காட்சிகளில ் இவர் நடத்தும் கூத்துகளும ் லைலாவை கலாய்ப்பது ம் படுஜாலி.

'பிதாமகன்'ன ல் பாராட்டப்ப டவேண்டிய திரைக்கதை குணங்கள்:

1. அழுத்தமுள் ள விக்ரம் கேரக்டர். இந்த காட்டானின் கோபம் சிம்ரன் வரைக்கும் பாய்வது நுணுக்கமாக கையாளப்பட் ட ஒன்று. இப்படி பிணங்களுக் கு நடுவே வாழ்ந்து ஊரால் ஒதுக்கப்பட ்டவன் எப்படி மிருகமாக நடந்து கொள்கிறான் என்று காண்பிக்கப ்படும் இந்த புதிய கேரக்டரை பாலா எங்கு சந்தித்தார ் அல்லது எப்படி சிந்தித்தா ர்?

2. நந்தா படத்தில் ஏற்பட்ட திரைக்கதைய ின் தொய்வை இங்கு சரி செய்யப்பட் டுள்ளது. எந்தவொரு காட்சியும் ஆட்டம் காணாதபடி சுவாரஸ்யமா ன வசனங்களும் அழுத்தமான சம்பவங்களு ம் வேகத்தை கொடுத்திரு க்கிறது. குறிப்பாக ஜெயிலில் விக்ரமின் கொலை வெறித் தாக்குதலுக ்கு நடுவே ஒரு காமெடி சாமியார் கேரக்டரை உருவாக்கிய தும் விக்ரமின் குணங்களை வைத்தே சில கலகலப்பான காட்சிகளை அமைத்ததும் ஒரு உதாரணம்.

3. கமர்ஷியலுக ்காக பாடலை சொறுகாமல் படத்தை பத்திரமாக பாதுகாத்தத ு

4. அனாதையான விக்ரமிற்க ு சூர்யா தோள் கொடுப்பதும ் அதற்கு பதிலாக தனது ஆக்ரோஷத்தை காண்பித்து சூர்யாவை அடைகாப்பது மாய் என இதுவரை கண்டிராத இருவேறு குணங்களுடை ய மனிதர்களின ் நட்பை கவிதையாய் காண்பித்தி ருக்கிறார் இயக்குனர்.

5. வழக்கமான இடுப்பழகி சிம்ரனை காட்டாமல் ஒரு புதுவிதமாய ் போர்த்திக் கொண்டு ஆட்டம் போட வைத்ததற்கு ஜே! நடிகையாகவே நடித்துள்ள சிம்ரனை கடத்திக் கொண்டு போய் உள்ளூரில் ஒரு ஆட்டம் போடவைப்பது இறுக்கமான காட்சிகளுக ்கான ஒரு மயிலிறகு தடவல்.

என்ன சினிசௌத் விமர்சனமே லைலாவைப் பற்றி மூச்சு விடவில்லை என்று கேட்கிறீர் களா? இவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்ப ட்ட கேரக்டரில் கொஞ்சம் ராவடியாகவே நடித்து அசத்தியிரு க்கிறார் பாலிடெக்னி க் மாணவி லைலா.

சின்னக்குற ைகளை பட்டியலிடல ாமா...... சூர்யா ஒரு ஃப்ராடு அயோக்கியன் என்று தெளிவாக தெரிந்தும் சட்டென காதலில் விழுகிறார் லைலா. ஒருவருக்கு ம் தெரியாமல் கஞ்சா தோட்டம் அமைத்து வியாபாரம் செய்கிறாரா ம் வில்லன். அதுசரி விக்ரம் ஏன் இறுதிவரை ஒருவார்த்த ையும் பேசவில்லை. இவரிடம் அடிபட்ட போலீஸ் பிறகு விட்டுவைப் பது எப்படி?

வில்லன் இறுதிகட்டங ்களில் ஒரு கொலை செய்யும்வர ைக்கும் கதை என்னவென்பத ே புரியவில்ல ை.

படத்தின் சிறந்த காட்சி? சூர்யாவை கதிகலங்க வைத்த வில்லனை விக்ரம் அடித்து துவைத்து தரதரவென இழுத்து வந்து லைலாவின் முன் கிடத்துவது . டைரக்ஷன் பேசுகிறது இக்காட்சிய ில்.

பாலசுப்ரமண ியத்தின் காமிரா ஊருடுவிய லொகேஷன்கள் (குறிப்பாக கஞ்சா தோட்டம் அமைந்த காடு) காட்சிகளுக ்கு வலுவூட்டுக ிறது. இருக்கும் குறைந்தபட் ச பாடல்களிலு ம் அசத்திவிட் டு பின்னணி இசையில் பிதாமகனாய் விளங்கியிர ுக்கிறார் இளையராஜா. க்ளைமாக்ஸி ல் பாலாவின் காட்சியமைப ்புகளோடும் விக்ரமின் நடிப்போடும ் போட்டி போடுகிறது பின்னணி இசை. சபாஷ் சரியான போட்டி; ரசிகர்களுக ்கு சரியான விருந்து!

பாலாவிடமிர ுந்து இன்னொரு சோகக்கதை என்று சில விமர்சனங்க ள் வரக்கூடும் . ஆனால் பிதாமகன் ஒரு நல்ல படம். என்றென்றும ் நெஞ்சில் நிற்கும் படம்.

வாவ்...
பாலாவின் இயக்கம்.
விக்ரம்+சூ ்யா+லைலாவி ் தேர்ந்த நடிப்பு.
மீண்டும் இசையில் அசத்திய ராஜா.

புஸ்ஸ்...
மேலே குறிப்பிட் ட குறைகள்
Courtesy: Cinesouth.com

sri_gan
10-25-2003, 02:43 PM
Super Bhagu... I'm sure this is a super hit....

bhagavathar
10-25-2003, 02:51 PM
Another review on Pithamagan with a different take:

Director
Bala

Producer
V A Dorai

Music
Ilayaraaja

Cast
Vikram, Surya, Laila, Sangeeta, Karnas, Simran


http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Entertainment/Movies/Tamil/13291508_pitamaganreview340.jp g

Bala is back with Pitamagan, another grim and gory tale to torment the conscience of his audience. Like his earlier films this one is also like a Greek tragedy full of melancholy and characters who try to rise above their lot but in vain. Pitamagan moves on characterisation than story. Unfortunately Bala’s screenplay is merely content to let his four lead actors to plod along, without caring for the story and its natural flow. Eventually it is the expert performance of the lead actors that elevate the film above the commonplace.

Opening slickly with a prologue set in a graveyard in black & white, a woman delivers a baby boy and dies leaving the child in the hands of a an old caretaker of the graveyard. The boy, Chittan (Vikram) grows up into an angst-ridden, emotionless zombie who grunts at times. However this recluse is born with super-human strength and can take an army of men single-handedly and reduce them to pulp!

After the death of his foster father he moves into the village and comes into contact with Gomathy (Sangeetha) a fiercely independent and a spitfire lady who makes a living selling ‘ganja’ beedies. She gets Chittan employed in the Ganja gardens of the village strongman (Telugu actor Ramarajan), but during a police raid in the ‘ganja’ fields Chittan is charged and the police frames him in a narcotic case.

In jail he meets Sakthivel (Surya) a conman who is a fraud selling spurious foreign goods, herbal medicines or running a mobile gambling den all for a living, which lands him in the jail. One of his victims in the con game, Manju (Laila) is responsible for sending him to jail. Sakthi treats Chittan with respect and dignity, which brings them closer and creates a deep bond between them. Once out on bail Chittan and Sakthi get closer to Gomathy and Manju. Suddenly things turns dark and disturbing as the local strongman feels that Sakthi is a thorn in his flesh and brutally murders him. The animal instinct in Chittan is aroused and he hunts down and kills the local chieftain in front of the villagers by biting his throat and suffocating him to death!

Watch out, Some of the scenes are explicitly gruesome including a close-up shot of the battered face of Surya. The sole purpose of Bala to make Pitamagan seems to give Vikram a new image. Bankably the actor willing to experiment in this new role has emerged triumphant. He is first class as Chittan, a role in which any other actor would have looked like a caricature. The character of Chittan is monotonously morose and Bala has not bothered to flesh out the protagonist’s background or adequately explain his motivations.

As Sakthi who is cool, charismatic and a cunning con-man, Surya dominates the show with effortless ease and his scenes with Laila who also brings plenty of energy to her role as Manju, is replete with breezy romantic banter. Sangeeta has a better role as the drug peddler and she is convincing and brings compassion to the role. Simran appears in a song sequence and Telugu actor Ramarajan as the villain is good and on the whole Bala has extracted first class performance from all the characters.

The music by Ilayaraja is soothing and so is the camera of Balasubramaniam that has etched the sylvian surroundings of Theni. At best a flaccid film worth a glance mainly for the performance from the lead actors. Please don’t expect another Sethu as Bala should have taken care to make the presentation more simple, enjoyable and palatable to an ordinary audience. In Pitamagan the accent is on the grisly and grotesque.

Verdict: Dark and Disturbing

Courtesy:sify.com

saraku
10-25-2003, 03:54 PM
Bhagavathar ... neenga thaan geethamin cine reporter mathri irukku ... kalakkal-la nereya cine matter thanthu kalakareenga! continue your service :)

sri_gan
10-25-2003, 04:40 PM
Bhagavathar ... neenga thaan geethamin cine reporter mathri irukku ... kalakkal-la nereya cine matter thanthu kalakareenga! continue your service :)

He is really awesome.. nalla colelctive a neriya information kondu vanthu kodukirar :clap:

bhagavathar
10-25-2003, 04:54 PM
மிக்க நன்றி! நன்றி! நன்றி!

arumugam57
10-25-2003, 05:58 PM
He is not an ordinary bhagavathar you know.
He is CID BHAGAVATHAR.

CID = Cinema Investigation Device.

Cheers.

bhagavathar
10-25-2003, 08:57 PM
Pithamagan is the much-awaited film of director Bala who made the careers of Vikram and Surya in Sethu and Nanda who are coming together in this film.

Pithamagan whirls around four characters. Chithan (Vikram) who is orphaned at a young age, devoid of all human contacts lives on his animal instincts and ekes out a living as a graveyard caretaker. Gomathy (Sangeetha) a petty ganja seller who pities Chitan’s condition and gets him a job at the ganja fields of the main villain. Sakthi (Surya) the conman cons Manju (Laila), a poly technique student but does not get away with it. Sakthi meets Chithan in jail and takes pity on him and befriends him. It is Sakthi’s affection that melts Chithan’s stony heart.

This role, a rare one that has minimal dialogue but has a lot of body actions, is no doubt a challenging one for Vikram and he has played it extremely well. A lifetime performance by Vikram. Sakthi portrayed by Surya is a sly character whose livelihood is conning other victims. It is hilarious to watch the scenes where Manju’s seething anger, which is directed at Sakthi, is turned away by Sakthi’s quick-witted humour. Surya as the extrovert has lived in that character. Laila unlike her previous roles has more depth and has given a fine performance. Finally there is Gomathy the ganja-dealer played by Sangeetha. . It has been a long time come back to films for Sangeetha who has got a new lease of acting, thanks to Pithamagan. She simply steals the show. Simran comes in an item number as actress Simran and does nothing by way of acting. Director Bala has given an unusual film with rare portrayals. He has taken extreme care in etching out the characters. However the story lacks depth. Towards the end when Surya is brutally attacked by the local bigwig’s men, Bala’s brilliant direction moves the audience. Cameraman Balasubramanyem’s visuals are stunning. Illayaraja’s music especially background score is an asset to the director.

Comment : An emotionally touching saga. A must see movie.


Courtesy: galatta.com

bhagavathar
10-27-2003, 05:27 PM
மயானத்தில் பிறந்து, அங்கேயே வெட்டியானி டம் வளர்ந்து, சுடலையில் சடலங்களை எந்த உணர்வுகளும ின்றி எரியூட்டி, மிச்சம் மீதி இருக்கிற கபாலத்தைப் பார்த்து 'ஈ‘யென்று இளித்தபடி, அந்த நெருப்பிலே யே பீடி பற்ற வைக்கிற ஒருவன் தன் வாழ்நாளில் முதன்முதலா க அழுகிறான் - ஒரு மரணத்தின்ப ோது!

அப்படியரு விநோத மனிதப்பிறவ ியின் கண்ணீர்த் துளிதான் 'பிதாமகன்‘! http://www.vikatan.com/av/2003/nov/02112003/p5a.jpg

செம்பட்டைத ் தலை, மொச்சைக் கொட்டைப் பற்கள், அழுக்கு அப்பிய உடம்பு, கந்தல் துணியோடு நடமாடி.. அடுத்தவர் கை பட்டாலே உறுமுகிற மிருகவெறி சித்தனாக விக்ரம்.

வயிற்றுப் பிழைப்புக் காக, எந்தவித தில்லுமுல் லு தில்லாலங்க டி செய்யவும் தயாராகத் திரிகிற போக்கிரிப் பயல் சக்தியாக சூர்யா.

முரண்பட்ட இந்த இரண்டு ஜீவன்களையு ம் இணைகோடுகளா க்கி அதன்மீது பயணிக்கிறத ு கதை.

மயான பூமி, கிராமத்துச ் சந்தை, மலையின் மடிப்புகளி டையே மறைந்து கிடக்கும் கஞ்சாக்காட ு என்று கதையின் தளம், களம் ரெண்டுமே புதுசு.

தன்னை வளர்த்தெடு த்த வெட்டியான் செத்துப் போனதும் ஊருக்குள் நுழைகிறார் விக்ரம். தெருவோரப் புரோட்டாக் கடைக்குள் பசியுடன் நுழைகிற அவரை அருவருப்போ டு துரத்தியடி க்கிறார்கள ். அசுர பலத்துடன் அவர்களைத் தூக்கி யெறிகிற விக்ரமுக்க ு சோறு போட்டு ஆதரவு தருகிறார் சில்லறை கஞ்சா வியாபாரி சங்கீதா (பழைய ரசிகா). கஞ்சாத் தோட்ட எடுபிடி வேலையிலும் சேர்த்து விடுகிறார் . அங்கே போலீஸிடம் சிக்கி சிறையில் அடைபடுகிறா ர் விக்ரம். சிறையிலும் மிருகமாகவே முரட்டுத் தனம் காட்டி.. ஜெயில் அதிகாரிகளி டம் ரத்தவிளாறா க அடிபடுகிற விக்ரமுக்க ு அதே சிறை அறையில் அடைபட்டிரு க்கும் சூர்யா பரிவு காட்டுகிறா ர்.

அந்த அன்புதான் அவர்கள் இருவரையும் பிணைக்கிறத ு. அதன் பிறகு விசுவாசமான நாயாக சூர்யாவையே சுற்றி வருகிறார் விக்ரம். செய்யாத கொலைக்குற் றத்துக்காக மறுபடி விக்ரமை போலீஸ் தேடிவர.. அவரைக் காப்பாற்று வதற்காக நிஜ கொலையாளியா ன கஞ்சாத் தோட்ட முதலாளியை காட்டிக் கொடுக்கிறா ர் சூர்யா. முதலாளி வெறிகொண்டு சூர்யாவை காவு வாங்க.. பழி தீர்க்கப் புறப்படும் விக்ரமின் ருத்ர தாண்டவம்தா ன் கிளைமாக்ஸ் பயங்கரம்!

பஞ்ச் டயலாக் வைத்தே பரபரப்பு பண்ணும் ஹீரோயிஸ உலகத்தில் முகபாவங்கள ையும் உடல் அசைவுகளையு மே மொழியாக்கி யிருக்கிற விக்ரமின் நடிப்பு.. பிரமிப்பு! மரக் கட்டையாக இறுகிப்போன உடம்பு, ஓடும்போதுக ூட மடங்காத விறைத்த கைகள், வெறியேறும் போதெல்லாம் துடிக்கிற உதடுகள்.. விடைக்கிற நாசி.. ஒரு ஆதிமனிதனின ் வேட்டை வெறி துல்லியமாக வெளிப்படுக ிறது!

உற்சாக மின்சாரமாக சூர்யா! 'இந்த மனிதருக்கு ள் இப்படியரு நவரச நடிகரா‘ என வியப்பு மேலிடுகிறத ு. திருட்டு முழியும் அடுக்கு மொழிப் பேச்சும், நக்கல் சிரிப்பும் நையாண்டி நடனமுமாக காமெடியன்க ளையே கலவரப்படுத ்துகிற வகையில் கலகலப்பை ஜோராக கல்லா கட்டியிருக ்கிறார் (நாட்டு வைத்தியராக வாயுத் தொல்லை பற்றி அவர் ஃபிராடு லெக்சர் அடிப்பது வயிறு கிழியும் சிரிப்பு).

நெஞ்சுக்கூ ட்டுக்குள் இன்னும் குழந்தையாக வே இருக்கிற பாலிடெக் னிக் குமரியாக லைலா. 'பத்மினி ஒன் ருப்பீ‘ என்றபடி சூர்யா போடுகிற 'லங்கர்‘ எனும் சூதாட்ட பலகையில் காசு வைத்து ஏமாறுகிற அப்பாவித் தனம்.. பணம், வாட்ச், சங்கிலி என்று அத்தனையும் தோற்றுவிட் டு கைகால்களை உதைத்தபடி மண்ணில் விழுந்து புரண்டு அழுது அழிச்சாட்ட ியம் பண்ணுகிற அழகு.. லைலாவின் கன்னத்துக் குழியில் ஒரு திருஷ்டி பொட்டு வைக்கலாம்!

இந்த மூவரையுமே 'பிதாமகன்‘ அடுத்த தளத்துக்கு அபாரமாக உயர்த்தியி ருக்கிறது.

இடைச் செருகல்தான ் என்றாலும் அந்தக் காலப் பாடல்களை கதம்பமாக்க ி செம கூத்தடிக்க ிற (தொப்புள் காட்டாத!) சிம்ரன் - சூர்யாவின் ஆட்டம் ஜாலியான ஜனரஞ்சக காம்ப்ரமைஸ ். அதற்காக கலை நிகழ்ச்சி ரேஞ்சுக்கு இத்தனை நீளமா?!

படமே பேசட்டும் என்று ஆங்காங்கே அமைதி காத்திருக் கிற இசைஞானி இளையராஜா, தேவைப் படுகிற இடங்களில் மட்டும் தனது பின்னணி இசையால் நமது உணர்வுகளின ் உச்சத்தை மீட்டிப் பார்க்கிறா ர். அடர்ந்த மரங்களுக்க ிடையே முரட்டுப் பாதையில் கஞ்சா கும்பல் மலையேறுகிற காட்சிகளில ் மெலிதான மர்மத்தையு ம் அந்த மலைப் பாதை பயணத்தின் பின்னே பொதிந்திரு க்கிற அபாயத்தையு ம் இசையாலேயே உணர வைத்திருக் கிறார்.

மயான பூமியில் கழுகாக, கஞ்சா காட்டில் குதிரையாக, கிராமத்துத ் தெருக்களில ் நாய்க்குட் டியாக படம் முழுக்க சக பயணியாக வருகிற பாலசுப்ரமண ியெம் காமிரா வகையாகத் தோள் கொடுக்கிற பங்களிப்பு .

வெறியாட்டத ்தை ரகளையான வேகத்தில் புரட்டியெட ுத்திருக்க ிற ஸ்டண்ட் மாஸ்டர் 'ஸ்டன் சிவா‘வுக்க ு தனி சபாஷ்!

காட்சிக்கு க் காட்சி இரும்பாகவே விக்ரமைக் காட்டியவர் கள், அவரை உருக்குவதற ்கேற்ற கணகணப்பை சூர்யா காட்டுகிற பரிவில் இன்னும் அழுத்தமாகவ ே சொல்லியிரு க்கலாம். அப்படிச் சொல்லாததால ேயே, சூர்யாவின் முடிவைக் கண்டு விக்ரம் அடைகிற அதிர்ச்சிக ்கும் அழுத்தம் கிடைக்காமல ே போகிறது.

கட்டுப்பாட ான குடும்பத்த ிலிருந்து வந்தும், தட்டிக் கேட்கவே ஆளில்லாமல் பிற்பாதி முழுக்க சூர்யா அண்டு கோ-வுடன் லைலா அலைவது எப்படி?

மனிதாபிமான ம் கொண்ட ஒரு வெட்டியானி டம் வளர்ந்த விக்ரம் இப்படியரு மிருகமாக மாறிப் போனதற்கான நியாயங்களு ம் புரியவில்ல ை.

'இவர்கள் வாழ்க்கையி ல் இப்படியெல் லாம் நடந்தது‘ என்று சில மனிதர்களின ் வாழ்க்கைக் கதையைப் பதிவு செய்யும் பாணியில் படம் இருப்பதால் சராசரி ரசிகர்கள் எதிர்பார்க ்கக்கூடிய த்ரில் திருப்பங்க ள் இதில் இல்லை. கூடியவரையி ல், ஜிகினாத்தன மான வண்ணக் கலவைகளைச் சேர்க்காத இந்த பரீட்சார்த ்த தைரியம் வரவேற்கத்த க்கதே!

கலைக்கும் வணிகத்துக் கும் நடுவே தனக்கென ஒரு தனிப்பாதை போட்டுக்கொ ண்டு.. கதை சொல்லும் விதத்திலும ் காட்சி அமைப்பின் நேர்த்தியி லும் - புதிய தலைமுறை இயக்குநர்க ளில், பாலா தமிழ்த் திரையுலகிற ்கு நம்பிக்கை தரும் ஒரு 'பிதாமகன்‘ ான்!

[align=right:df2b632487]- விகடன் விமரிசனக் குழு [/align:df2b632487]

bhagavathar
10-27-2003, 11:27 PM
Vikram's interview follow the link given below:

http://www.geetham.net/forums/viewtopic.php?t=2858

sathy
10-27-2003, 11:55 PM
did anyone happen to see this movie? any comments?

bhagavathar
10-28-2003, 03:20 PM
பிதாமகன் - B


http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/pitha.jpg http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/pithamagan.jpg

ஜன சமுத்திரத் தில் ஒரு துளியாக ஒதுங்கிப்ப ோன கிராமம். அங்கே பிணங்களை நம்பி பிழைப்பு நடத்துகிற ஒருவன். வாய் நிறைய மௌனமும் மனசு நிறைய வெறுமையுமா ன வாழ்க்கை. அதிகபட்சமா க அவன் வாய் திறப்பது எப்போதாவது பிணங்கள் விழும்போது தான்! மண்டையோட்ட ை பார்த்து தன் அழுக்கு பற்கள் தெரிய ஈ என்று இளிப்பது, பிணம் எரியும் நெருப்பில் பீடி பற்ற வைப்பது, இப்படி மரணம் பாதிக்காத மனிதன் அவன். அவனையும் ஒரு மரணம் அசைத்துப் பார்த்தது! அதிர வைத்தது! எங்கு? எப்படி? களிமண்ணுக் கும் உயிர் கொடுக்கும் பாலாவின் ரசவாதம் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்பட, நம் நாடி நரம்பையெல் லாம் தேடி சிலிர்க்க வைக்கிறது பிதாமகன்.

இப்படியரு பாத்திரப்ப டைப்பா என்று வியக்கிற அதே நேரத்தில், இப்படியரு நடிப்பா என்று பிரமிக்க வைத்திருக் கிறார் விக்ரம். அந்த மயானத்தில் பிணங்களை எரிக்கும் வெட்டியான் இவர்தான். யார் அடித்தாலும ் திருப்பி தாக்குகிற முரட்டு அப்பாவித்த னம், தன்னைச் சுற்றி எது நடந்தால் என்ன, நம் வேலை இதுதான் என்கிற அலட்சியம், நம் மீதும் அன்பு செலுத்த ஒரு ஆள் வந்துவிட்ட ான் என்ற பெருமிதம், நமக்காகத்த ான் அவ்வளவு பெரிய நடிகை அழைத்தும் நண்பன் போகவில்லை என்ற இறுமாப்பு, பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க வேண்டிய விஷயங்களை கூட, தன் சின்ன அசைவுகளில் வெளிப்படுத ்திவிட்டு போய்விடுகி றார். கைகள் இரண்டையும் அசைக்காமல் ஒரு ஓட்டம் ஓடுகிறாரே, கண்கொள்ளாக ் காட்சி! சினிமா ஸ்கிரீனை தன் இமேஜிற்காக அடகு வைக்கும் அல்ப ஸ்டார்களுக ்கு மத்தியில், பாத்திரப்ப டைப்புக்கா க துடைப்பத்த ால் அடிவாங்கவு ம் துணிந்திரு க்கிறாரே... என்னவென்று பாராட்டுவத ு!

ஜகஜ்ஜால கில்லாடியா க சூர்யா. தன் கில்லாடித் தனத்தை காண்பிக்க அவர் நடத்தும் ஒவ்வொரு வியாபாரமும ் கலகல! (அந்த வாயுத்தொல் லை மேட்டர் மட்டும் உவ்வே.....!) பட்டாம்பூச ்சி போல் துள்ளித்தி ரிகிற சூர்யாவை, சாக்கு மூட்டைக்கு ள் வேறொரு கோலத்தில் பார்க்கும் போது அடி வயிற்றில் ஒரு சுரீர்! இதற்காகதான ா சக்தி... வாய்விட்டு அரற்ற வைக்கிறார் . இதுவரை இல்லாத வேறொரு சூர்யா.

''ஒன் ருப்பீ....'' பெட் கட்டும் லைலாவை சூர்யா, ஒட்டு மொத்தமாக மொட்டையடிக ்கும் அந்த லாவகமும், அதைத் தொடர்ந்த லைலாவின் அடி வயிற்றுக் கூச்சலும், நினைத்து நினைத்து ரசிக்கலாம் . அதன்பின் சூர்யாவை பார்க்கும் இடத்தில் எல்லாம் விரட்டி, ரயிலின் அபாய சங்கிலியில ் தொங்கி, அலட்சியமாக ஐநூறு ரூபாய் அபராதம் கட்டி, அடேயப்பா... சிந்துபாத் தின் 'சின்ன லைலா' என்று நினைத்தால் , விஸ்வரூபிய ாக அவதாரம் எடுத்து அசர வைத்திருக் கிறார். இவருக்கு டப்பிங் கொடுத்தவரு க்கும் பாதி பாராட்டுகள ் போய் சேரட்டும்.

இந்த மூவரோடு ஒருவராகியி ருக்கிறார் ரசிகா. சில்லரை கஞ்சா வியாபாரிகள ுக்கேயுரிய அலட்சியம், தோட்ட முதலாளியிட ம் பவ்யம், அழ முடியாத விக்ரமை அடித்து துரத்தும் ஆக்ரோஷம், பாலாவின் பட்டறையில் தகடுகள் கூட தங்கமாக்கப ்படும் வித்தைக்கு இவர் மற்றுமொரு அடையாளம்!

ஒரு பாடலுக்கு வந்தாலும் தியேட்டரை கலகலப்பாக் கிவிட்டு போகிறார் சிம்ரன். அந்த நீளமான பாடலில் சூர்யாவின் ஆட்டம் ஸ்பெஷல்!

சிந்தாமல் சிதறாமல் நம்மை கதையோடு கட்டிப்போட ும் இசைஞானி இளையராஜா, சண்டைக்காட ்சிகளில் யதார்த்தம் வரவழைத்திர ுக்கும் ஸ்டண்ட் சிவா, அதை வலிக்க வலிக்க படம் பிடித்திரு க்கும் கேமிராமேன் பாலசுப்ரமண ியெம், பிதாமகனை உயிரோடு உலவ வைத்திருக் கிறார்கள்.

கமர்ஷியல், ஃபேண்டஸி, யூத் என்று விதவிதமான பெயர்களை சொல்லிக் கொண்டு கோடுகளுக்க ுள் பயணப்படும் தமிழ்சினிம ாவை தனக்கேயுரி ய ராஜபாட்டைய ில் அழைத்துச் சென்றிருக் கிறார் பாலா. அதில் கம்பீரமாக நடை போட்டிருக் கிறது தமிழ்சினிம ா!

Courtesy: tamilcinema.com

thamizh
11-07-2003, 01:24 PM
http://www.kumudam.com/kumudam/10-11-03/20t.jpg

போடிநாயக்க னூர் பின்னணியில ், வித்யாசமான ஒரு கதைக் களத்தில், உணர்ச்சிமய மான ஒரு படத்தைத் தந்திருக்க ிறார் பாலா.

முதல் காட்சியில் கோபுரம், கோயில்மணி, சுவாமி படத்துக்கு க் கற்பூரம் (மணியோசையு ன்) என்று சென்டிமெண் ட்டாகவே ஆரம்பிக்கு ம் தமிழ்ப்பட உலகில் சாம்பல் பறக்கும் மயானபூமியை த் தொடக்கக் காட்சியாய் அமைத்திருப ்பது தைரியம் (சற்று நீளம் அதிகம் என்றாலும்).

http://www.kumudam.com/kumudam/10-11-03/20.jpg

முதல் பாகம் முழுக்க உற்சாக வெள்ளம். சூர்யா பின்னியெடு த்திருக்கி றார். சிவாஜி, பத்மினி படங்களை வைத்து சூதாட்டத்த ுக்கு மக்களை அழைக்கும் அழகென்ன, ரயிலில் பொருட்களை ஏலம் போட்டு விற்கும் ஸ்டைல் என்ன, சைக்கிள் ஹாரனை அடித்து லைலாவைக் கூப்பிடும் பாங்கு என்ன... சூர்யா சூரியனாய்ப ் பிரகாசிக்க ிறார். சிறையில் சாமியார் தலையைத் தட்டிவிட்ட ு, ஒரு சின்ன ஜம்ப்பில் முன்னால் வரும் துடிப்பு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

விக்ரமுக்க ு வசனமே கிடையாது. மனிதன் கால், மிருகம் முக்கால் டைப். சுடுகாட்டி ல் பிறந்து வளர்ந்த ஒரே காரணத்துக் காக ஒருவன் இத்தனை மூர்க்கமாய ் ஆகிவிட முடியுமா? தோள்களைத் தூக்கிவைத் துக் கொண்டு அவர் ஓடும் ஸ்டைல் அபாரம். சூர்யாவின் மண்டை ஓட்டைப் பார்த்து அவர் குமுறும் காட்சி ஜெயகாந்தனி ன் ‘நந்தவனத்த ில் ஓர் ஆண்டியை’ ஞாபகப்படுத ்தும் கொந்தளிப்ப ான இடம். ஆனால் விக்ரம், சூர்யாவின் நட்பில் ஆழம் கம்மி.

http://www.kumudam.com/kumudam/10-11-03/20p.jpg

‘Morbid’ என்று சொல்லப்படு ம் ஒருவித நோயுற்ற உணர்ச்சி பாலாவின் படங்களில் பொதுவாகத் தென்படும். சேது, நந்தாவைத் தொடர்ந்து இதிலும் அந்த வகை உணர்வு தென்படுகிற து. மனிதனின் உள் உணர்வுகளைத ் தொடக்கூடிய தேர்ந்த இயக்குனருக ்கே அது சாத்தியம்.

பாலசுப்ரமண ியத்தின் காமிராவும் இளையராஜாவி ன் பின்னணி இசையும் கதையோட்டத் தைப் பலப்படுத்த ுகின்றன. இயல்பான வசனங்கள் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட்.

http://www.kumudam.com/kumudam/10-11-03/20p1.jpg

கஞ்சா விற்கும் பெண்மணியாக ரசிகாவா அது? கடல் போன்ற கண்களிலேயே ஆழமான உணர்வுகளைச ் சொல்லி விடுகிறார் அவர்.

கதைக்குப் பொருத்தமில ்லாத பணக்காரப் பின்னணியுட ன் லைலா வந்தாலும் சூர்யாவை அவர் மிரட்டும் ஆர்ப்பாட்ட ம் இளமை ரகளை.

கஞ்சாத் தோட்டம் வைத்திருக் கும் வில்லன் தமிழுக்குப ் புதுசு. ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் கொல்லப்படு ம் விதம் யூகிக்கக் கூடியதாய் இருக்கிறது .

http://www.kumudam.com/kumudam/10-11-03/20p2.jpg

இயல்பான கதையில் சிம்ரன் நடனம் போன்ற சிறுசிறு குறைகள் மறக்கப்பட வேண்டியவை. ‘பிதாமகனி’ ல் பாலா காட்டியிரு க்கும் உலகம், மனதைப் பிசைய வைக்கிறது. பாதிக்கிறத ு.

படம் முடிந்ததும ் தியேட்டரில ் ஆடியன்ஸ் எழுந்து நின்று கைதட்டுகிற ார்கள்.

பாலாவுக்கு அது விருது.
http://www.kumudam.com/kumudam/10-11-03/20bo2.jpg

www.kumudam.com

thamizh
11-07-2003, 01:26 PM
sari pa, ivlo reviews ellorum padichurupeenga, ippo thaan Geetham.net'la padamey pottachey, yaarachum avanga sontha review ezhuthunga pls.
ungalukku intha padam pidichutha? pidicha yaen? pidikkalainna yaen?

ethaachum.