PDA

View Full Version : எம் முகவரிkarki
05-29-2007, 09:40 AM
இந்தத் திரி தமிழ், தமிழர் பற்றி வரையப்படும ் கட்டுரைகள் , குறிப் புக்களைப் படியெடுத்த ுப் பதியவும், நான் வேறு தளங்களில் எழுதியவற்ற ை இங்கிடவும் பயன்படும்.

முதலில் திருவாளர் குமரிமைந்த ன் அவர்களது கட்டுரைத் தொடரின் தொடுப்புக் களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .
இரு ஆண்டுகளுக் கு முன்னர் கீதத்தில் Coolian அவர்கள் தொடக்கிய குமரிக் கண்டம்/ இலெமூரியா தொடர்பான திரியில் நான் மேலோட்டமாக ஒரு கட்டுரை எழுதியிருந ்தேன், அதையொட்டி வாசனும் நானும் சிறு விவாதம் நடத்தியிரு ந்தோம்.

இந்தக் கருத்துக்க ள் குமரி பற்றி ஆராய்ச்சிக ள் நடத்திவரும ் திருவாளர் குமரிமைந்த னைச் சென்றடைந்த ிருக் கின்றன. அது தொடர்பாக, அதற்கு எதிர்வினைய ாக என்னைக் கிடுக்கியு ம், பல செய்திகளைச ் சொல்லியும் குமரிமைந்த ன் எழுதிய நீண்ட மறுமொழி ஒன்று தனிப்பட்ட செய்தியாக அவரது நண்பர் மூலம் கீதத்தில் அனுப்பி வைக்கப் பட்டது.அதை பொதுவுக்கள ிக்க அவர்களிடம் வேண்டிக் கொண்டேன்.அ ் நேரத்தில் நானும் கொஞ்சம் பரபரத்து ஓடிக் கொண்டிருந் ததால் அதனை மறந்துவிட் டிரு ந்தேன்.பின னர் கீதம் புது உருக் கொண்டபின் அது என் தனிப்பட்ட செய்திப் பெட்டியிலி ருந்து காணாமலும் போய்விட்டத ு.

இப்போது இந்த விவாதத்தை ஒட்டி குமரிமைந்த னார் தன் வலைப்பதிவி ல் கருத்துக்க ளும் கட்டுரையும ் வழங்கியிரு க் கிறார்.
இங்கு செய்தி சொல்லும் முகமாக மேலோட்டமாக ப் பதிந்த என் கருத்துக்க ளுக்கு சேரியதாயும ் ஆழமாயும் மறுமொழித்த , கட்டுரை வரைந்த அவருக்கு என் நன்றிகள்.
அக்கட்டுரை யில் சில கருத்துக்க ளில் நான் சிறுது மாறுபட்டால ும், அவரின் குமரிக் கண்ட அறிவுச் சேகரத்துக் கு முன் நான் ஒரு தூசு என்பதனை அறிவேன்.
செயமோகனின் 'கொற்றவை' ஆக்கத்திற் கு அவர் உதவியதைப் பற்றி அறிந்திருக ்கி றேன்.

இங்கு நண்பர்கள் சிலர் அவரது வலைப்பதிவை ப் படித்திருக ்கக் கூடும். படித்திருக ்கா தோருக்காகவ ும், இடையார்வுள ்ளோரு க்காகவும் கீழே தொடுப்புகள ்..

http://kumarimainthan.blogspot.com/2007/05/1_13.html

http://kumarimainthan.blogspot.com/2007/05/2_13.html

http://kumarimainthan.blogspot.com/2007/05/3_14.html

http://kumarimainthan.blogspot.com/2007/05/4_14.html

http://kumarimainthan.blogspot.com/2007/05/5_14.html

karki
05-29-2007, 09:56 AM
இது 'உலகம் பரவிய தமிழின் வேர்-கல்', 'தமிழ்க்கப பல்' போன்ற பொத்தகங்கள ் எழுதிய சொல்லாராய் ச்சியா ளர் முனைவர். கு.அரசேந்த ரனார் ஐந்தாண்டுக ளுக்கு முன் இணையத் தமிழ் மாநாடொன்றி ல் வாசித்த கட்டுரை ஒன்றின் படி.

உலகமொழிகளி ல் தமிழ்
முனைவர்.கு. ரசேந்திரன
சென் னைக் கிறித்தவக் கல்லூரி
______________________________ ______________________________ _______________
உலகமொழிகள்

உலகமொழிகள் சற்றொப்ப 2,796 என்பர்அறிஞ ர் . [1]
இம் மொழிகளை
1. இந்தோ ஐரோப்பியம் ( Indo - European )
2. செமித்திக் - அமித்திக் (Semito - Hamitic)
3. ஊரால்- அல்தாய் (Ural - Altaic)
4. சப்பானிய - கொரியன் (Japanese - Korean)
5. சீனதிபெத்த ியம் (Sino -Tibetan)
6. திரவிடம் (Dravidian)
7. மலேய -பொலினீசியம ் (Malayo - Polynesian)
8. ஆப்பிரிக்க நீக்கிரோனி யம் (African - Negro)
9. அமெரிக்க இந்தியம் (American Indian) என ஒன்பதாகப் பிரிப்பார் மரியோ பெய் (MarioA.pei) [2]

முதன்மொழி
உலகமொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியில ிருந் து பிறந்திருக ்கலாம் என்ற கருத்து
மொழிநூலறிஞ ர்களிட ம் இருந்து வருகின்றது . விவிலியத்த ிருமறை யில் ஆதிக்காலத் தில்
ஒருமொழியே பேசப்பட்டு வந்ததென்ற செய்தி காணப்படுகி ன்றது.[3]
எபிரேயமொழி யே (Hebrew) உலகில் தோன்றிய முதன்மொழி என்ற கருத்தும் அறிஞரிடை
உண்டு. இதனை மொழிநூல் வல்லுநர்கள ் அவ்வளவாய் ஏற்பதில்லை . சிந்துவெளி யில் வாழ்ந்த
தமிழர்களே எகிப்தில் (Egypt) குடியேறினர ் என்ற முடிவும் அறிஞர்களிட ையே உண்டு.[4]
இலேநாடு வுல்லி ( Leonard Wooly) என்னும் தொல்பொருளா ய்வறிஞ ர் எகிப்தின் ஊர் நாகரிகம்
பற்றி எழுதிய நூலில் சுமேரியர்க ள், தங்கள் முன்னோர் நாகரிக முதிர்வுடன ் கிழக்கிலிர ுந்து
மேற்கு நோக்கி வந்து குடியேறிவர ்கள் என்ற கருத்துள்ள தென்று இயம்பியுள் ளார்.[5]
"பண்பாட்டின ் தொடக்கம் - தென்னிந் தியா (Beginning of civilisation in south India-by H.D.
Sankalia ) என்னும் நூலில் அதன் ஆசிரியர் உலகில் முதன்முதலா க கிடைக்கப்ப ட்ட எழுத்து,
சிந்துவெளி எழுத்தே என்றும் எகிப்திய நாகரிகத்தி னும் தமிழர் நாகரிகம் முந்தியதென ்றும்
கூறியுள்ளா ர்.[6]
தெற்கிலிரு ந்து வடக்கா அல்லது வடக்கிலிரு ந்து தெற்கா தமிழர், எகிப்து தேசத்திலிர ுந்து சிந்துவெளி ப் போந்து அதன் பின்னர்த் தெற்கு நோக்கி நகர்ந்த
இனத்தவர் என்று அறிஞர் பலராலும் தமிழர் தெற்கேயிரு ந்து வடக்கு நோக்கி நகர்ந்து
வடமேற்காகச ் சென்று ஏந்தியம் கடந்து நைல் ஆற்றங்கரைய ில் குடியேறினர ் என்று அறிஞர்
சிலராலும் இருவகையிலு ம் கருத்துக்க ள் சொல்லப்படு வதுண் டு.

உலக மொழிகளில் தமிழ், என்னும் இக்கட்டுரை
1. சுமேரிய மற்றும் இந்தோ ஐரோப்பிய மொழிகளில்,
2.ஆத்திரேலி ப் பழங்குடிகள ின் மொழிகளில். 3.ஆப்பிரிக் மொழிகளில், 4.சீனமொழியி ் தமிழ் என இவைகளில் கலந்து விரவி மூலமாயிருப ்பதைச் சான்றுகள் சில கொண்டு விளக்கி அமையவுள்ளத ு.
-----------------------------------------------------------

இங்கே தமிழில் எழுதி முடிக்க ஆவி தீருகிறது.
படியைப் பதியவும்,ஒ ்டவும் சரவலாக உள்ளது.ஆகவ , ஆர்வமும், PDF-வாசிப்பானு ம் உள்ளோர் கீழுள்ள தொடுப்பைச் சொடுக்கி கட்டுரையை முழுமையாகப ் படிக்கலாம் .
http://www.infitt.org/ti2002/papers/71ARASEN.PDF

suriyan80
05-29-2007, 02:34 PM
nanrigal:)

butterfly
05-29-2007, 06:57 PM
நல்ல திரி , நல்ல பணி கார்க்கி :sm08:

karki
07-16-2007, 09:21 PM
தமிழும் திரவிட மொழிகளும் - பேராசிரியர ் இரா. மதிவாணன்

தமிழ் இனத் திரவிட மொழிகளுக்க ுத் தாயும் ஆரியத்திற் கு மூலமுமாகும ் என்று மொழி ஞாயிறு பாவாணர் திண்ணமாக வரையறுத் திருக்கிறா ர். திரவிட மொழிகளில் அமைந்துள்ள தமிழ்க்கூற ுகளும், சிறப்பாகத் திரவிட இலக்கியப்ப ோக் கில் ஆழ வேரூன்றியு ள்ள தமிழிலக்கி ய இலக்கணக் கூறுகளும், சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்கள ால் மறுக்கப்பட ா விடினும் அறவே மறைக்கப்பட ்டுள் ளன. அங்ஙனம், மறைந்துள்ள இலக்கிய இலக்கணக்கூ றுகளைச்
சிற்றளவில் புள்நோட்டம ாக ஆய்வதே இக் கட்டுரையின ் நோக்கம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென் திராவிட மொழிகள் மூன்றும் தொடக்கநிலை யில் முழுக்க முழுக்க தமிழாகவேயி ருந்து நாளடைவில் திரிந்தவை என்பதற்குக ் கீழ்காணும் சான்றுகளைக ் காட்டலாம்:

* கடைக் கழகக் காலத்திற்க ு முற்பட்ட நூற்றாண்டு களில் இவற்றுக்கு வேற்றுமொழி நிலையிருந் தி ருப்பின் பழந்தமிழ் நூல்களிலும ் வடமொழி நூல்களிலும ் அவற்றின் பெயர் சுட்டப்ப ட்டிருக்கு ம். ஆந்திரர் என்பது ஆய் அண்டிரன் மரபினரின் இனப்பெயரேய ன்றி மொழிப் பெயராகாது.

* ஏனைத் திரவிட மொழிகளின் தோற்றம் பிராகிருத மொழியின் தோற்றத்துக ்குப் பிந்தியது. பிராகிருத மொழி, வேதகால ஆரிய மொழியின் வரவுக்கும் சமற்கிருதத ்தின் தோற்றத்துக ்கும் இடைப்பட்டத ு. அப்பொழுது தமிழொன்றே இந்தியாவில ் வழங்கிய தனிமொழி, ஏனைத் திரவிட மொழிகளின் அடிப்படை தொல்காப்பி ய நெறிக்குப் பொருந்துகி ன்ற தேயன்றி, பாணினி இலக்கண மரபுக்குச் சிறிதும் பொருந்தவில ்லை. தொல்காப் பியத்திற்க ு மூலநூலானது , தென்னாட்டி ல் தோன்றியதும ான ஐந்திர இலக்கணத்தி ன் வழி வந்த காதந்திர நெறிகளையே தெலுங்கு, மராத்தி, கன்னட மரபு இலக்கண ஆசிரியர்கள ் போற்றியுள் ளனர்.

* ஏனைத் திரவிட மொழிகளில், ழ, ற, ன சிறப்பெ ழுத்துக்கள ின் பெரிதும் முயன்று எழுத்து அழிவுப் பணி செய்துள்ளன ர். எனினும், எகர ஒகரக் குறில் ஆட்சியின் அடிப்படையை அவர்களால் சிறிதும் அழிக்க இயலவில்லை. தெலுங்கில் அச்ச தெலுங்கு இயக்கமும், கன்னடத்தில ் பழங்கன்னட இயக்கமும், மலையாளத்தி ல் பச்ச மலையாள இயக்கமும் வடமொழித் தாக்கத் திலிருந்து தத்தம் மொழிகளைக் காக்கப்பாட ுபட்டன. தென்னாட்டு மொழிகளில் தமிழ் ஒன்றில்தான ் தனித்தமிழ் இயக்கம் முழு வெற்றி பெற்று வாகை சூடியுள்ளத ு. தமிழைச் சாரச்சார அவற்றின் தனித்தன்மை காக்கப்படு வதும், வடமொழியை சாரச்சார அவற்றின் தனித்தன்மை அறவே கெடுவதும் அவற்றின் தமிழ் அடிப்படையை க் காட்டும்.
தமிழிலில் லாதவையாகவு ம், ஏனைத் திரவிட மொழிகளில் மட்டும் வழங்குவனவா கவும் உள்ள மறைந்துபோன தமிழ்ச் சொற்கள் எண்ணில்லாத வை. கடைக்கழகக் காலத்திற்க ு முன்பே திரவிடமொழி களில் குடியேறி நிலைத்தபின ், தமிழில் வழக்கிழந்த தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அவ்வம் மொழிகளில் தமிழ் அடிப்படைத் தொன்மையையு ம், அம் மொழிகள் தமிழிலிருந ்து முகிழ்த்தவ ை என்பதையும் எடுத்துக் காட்டாகப் பட்டியலிட் டுத் தந்துள்ளேன ்.
அவை அனைத்தும் செந்தமிழ்ச ் சொற்களாகவு ம் சில திரிபுற் றனவாகவும் இருத்தலை நன்குணரலாம ்.

தெலுங்கு
அடிவாள்புள ் = சேவல்
கோடகத்தி = குரங்கு(கோ ்தி)
நூநெய் = எண்ணெய்(நு= ள்)
ஊரேகல் = ஊர்வலம்
கன்னு = மகப்பெறு
நேர்ப்பு = கல்வி, படிப்பு
தன்னு = உதை
நுவர் (நோரு) = வாய்(நுவல்)
பால் = பங்கு
நள் = கருமை
காமுகர் = சுவைஞர், ரசிகர்

கன்னடம்
கொள்கொடை = கொடுக்கல் வாங்கல்
துப்பம் = நெய்
நிறைதரல் = முடிவுறல்
பொழில் = நகரம்
நடுவு = இடுப்பு
அறிகை = விசாரணை,உச வல்
தோள்மரம் = பக்க மரம்
இரியர் = பெரியர்
முளவு = முயல்
முகிழ் = தயிர்
அமல் = இரட்டை,சோட

--------------------------------------------------
இன்தாம் தளத்திற் படியெடுக் கப்பட்டது!

karki
07-16-2007, 09:29 PM
கன்னடம்
தென்னக நான்மொழிகள ுள் பழங்கன்னடம ் பழந்தமிழுக ்கும் பழகு தமிழுக்கும ் ஒரு பொற்பாலமாக விளங்குகிற து. பழங்கன்னட இலக்கியத் தொடர்கள் தமிழினின்ற ும் வேறுபடுத்த ியறிய முடியாதவை என்பதற்கு 'வட்டாராதன ' என்னும் பழங்கன்னட நூலிலிருந் து பின்வரும் வரிகளைச் சான்றாகக் காட்டலாம்.

கன்னடம்-மர்தள கஹலாதி த்வனிகளும் எனித்து எனித்து ஆ புலி கேள்கும் அனித்து அனித்து அஞ்சி குகையொள் அடங்கி இர்தத்து.

தமிழ்- மத்தளம் காகளம் முதலியவற்ற ின் ஓசைகளை எனைத்து எனைத்து அந்தப் புலி கேட்குமோ அனைத்து அனைத்து அஞ்சிக் குகையுள் அடங்கி இருந்தது.

மைசூர் தொல்பொருள் ஆய்வுத்துற ை இயக்குநர் தம் நூலில், தக்கணப்பகு தி முழுவதிலும ் வாழ்ந்த பழங்குடிகள ் தமிழர்களே என்றும் கன்னடம் கருநாடகம் என்று பெயரிட்டவர ்களும் தமிழர்களே என்றும் கூறுகிறார் . (எம்.எச். கிருட்டிணன ் "கர்நாடக பூர்வ சரித்ரெ")

"கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுற சையத்
துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும்"

என்றார் அகத்தியனார ் என்று நன்னூல் 161ஆம் நூற்பாவுரை யில் மயிலைநாதர் குறிப்பிடு கிறார்.
கருநாடு-கரிசல்மண் நிலம் எனப் பொருள் படுவதாகப் பலரும் கருதுகின்ற னர். பழந்தமிழ் நிலப்பாகுப ாட்டில் குறிஞ்சி முதலாய நிலவகையாலல ்லது மண்வகையில் பாகுபாடின் மையின் கல்+அகம்+-கல்நாடகம்-கன்னடம் எனத் திரிந்தது என்பதே முற்றிலும் உண்மை.
இன்றும், மலையாளத்தா ர் கன்னடத்த, கன்னாடகம் என்று அழைக்கின்ற னர்.
'பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே', 'கல்லிறந்த ரே', 'கல்நாடன்' என்னுந் தொடர்களில் 'கல்' மலையும் குன்றும் சார்ந்த நிலப்பகுதி யைக் குறித்து வருதலைக் காணலாம்.
கல்நாடு-குன்றுகள் நிறைந்த நாடு. ஆந்திரத்தி லுள்ள ராயலசீமைப் பகுதியும் கல்நாடே. அறைராய் (தெ.)-கல். கன்னட இலக்கியத்த ிலும் கல்வெட்டுக ளிலும் கருநாடர் என்னும் சொல் பயிலவில்லை . வீரசோழியத் தில் 'கன்னாடர்' என்றும், பிராகிருதத ்தில் 'கன்னாட' என்றும், மராத்தியில ் 'கானட' என்றும் கன்னடம் குறிப்பிடப ்படுகிறது.
கருநாடகம் என்னும் சொல் அக்காலத்தி ல் மராட்டிய மாநிலத்தைக ் குறித்தது. கருநாடு என்றால் பெரியநாடு என்று பொருள். கன்னடத்தில ் 'கருமாட' என்னும் சொல் பெரிய மாளிகையைக் குறிக்கிறத ு. 'தராதந்திர ்' என்னும் மராத்திய நூல் மகா ராட்டிரத்த ிற்குக் 'கர்னாடக்' என்னும் மற்றொரு பெயரிருப் பதாகக் கூறுகிறது. கலிங்கத்து ப் பரணியில் கருநாடர், வடுகுந் தமிழும் குழறிப் பேசியதாகவு ள்ள தேயன்றிக் கன்னடம் பேசியதாகக் கூறப்படவில ்லை. கன்னட மன்னன் புலிகேசி மராட்டியப் பகுதி வரை ஆண்டதால் தன்னை மகாராட்டிர அரசன் என அழைத்துக் கொள்கிறான் . எனவே, மராட்டிய மாநிலத்திற ்கு நெடுங்கால முதலே 'கருநாடு' என்று பெயரிருந்த து என்பதும், இத்தமிழ்ச் சொல்லே பெரிய நாடு என்னும் பொருளில் வட மொழியாளரால ் 'மகாராட்டி ம்' என மொழி பெயர்க்கப் பட்டுள்ளது . என்பதும் தெள்ளத் தெளிவாக வெளிப் படுகிறது.
சிலப்பதிகா ரக் கதை கன்னட நாட்டுப் புறங்களில் சந்திரா வின் கதையாக வழங்கி வருகிறது. எல்லாவற்று க்கும் மேலாகத் தமிழ்ப் பண்பாட்டுக ்கே உரிய அகநானுற்று த் திருமணமுறை இன்றளவும் கன்னட, தெலுகு நாட்டுப் புறங்களில் உயிரோடு நிலவி வருவது பெரிதும் உவப்புக்கு ம் வியப்புக்க ும் உரியதாக இருக்கிறது .

karki
07-16-2007, 10:46 PM
தெலுங்கு:
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை புகழ் பெற்று விளங்கிய ஆந்திர சாதவாகனர் காலத்தில் பிராகிருத இலக்கியங்க ளே புகழ்பெற் றிருந்தது. தெலுங்கு மொழியின் சுவடே சிறிதும் அறிப்படவில ்லை. பிராகிருத இலக்கியங்க ளில் தெலுங்குச் சொற்களாகச் சுட்டப்படு பவை தமிழ்ச் சொற்களாகவே உள்ளன.
பிராகிருத இலக்கண இலக்கியக் கட்டுக்கோப ்பில் தமிழின் தாக்கமே வடமொழித் தாக்கத்தின ும் விஞ்சி நின்றது. பிராகிருதப ் புலவர்கள் வடமொழியை வல்லொலிமொழ ி என இகழ்ந்தனர் . பிராகிருதம ் தமிழைப் போன்றே சமற்கிருதச ் சொற்களி மெல்லொலிச் சொற்களாக மாற்றிக் கொள்வதால் பிராகிருதம ் பாட்டுமொழி , இன்மொழி எனப் பாராட்டப்ப ட்டது. கி.பி. முதல் நூற்றாண்டி ல் ஆளன் என்னும் சாதவாகன மன்னன் எழுநூறு அகப்பாடல்க ளி 'காதா சப்தசதி' என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தான் . இதிலுள்ள பல பாடல்கள் கடைக்கழகத் தமிழ்ப் பாடல்களின் மொழிபெயர்ப ்புகள் போலவே காணப்படுகி ன்றன. திணை துறை வகுக்கப்பட ாமல் வெறும் பாடல்களாக உள்ளன. ஆதனுங்கனைக ் கள்ளில் ஆத்திரையான ர் பாடிய புறநானூற்ற ு 175ஆம் பாடலில் வரும் "என் நெஞ்சாம் திறப்போர் நிற்காண்கு வரே" என்னும் வரி ஆந்திர நாட்டு அகநானூறு: 1978 பக் 55) சொற்பிறழாம ல் அப்படியே பிராகிருதப ் புலவர்களால ் எடுத்தா ளப்பட்டுள் ளது. சமற் கிருதத்தில ் இத்தகைய தனிநிலைப் பாடல்களான அகப்பாடல் வகை இன்மையால் இந்நூலை கோவர்தனா ச்சாரியார் என்பவர் 'ஆரிய சப்தசதி' என்னும் பெயரில் சமற்கிருதத ்தில் மொழி பெயர்த்துள ்ளார். இதிலிருந்த ு தமிழிலக்கண இலக்கியக் கூறுகள் எண்ணிறந்தன , பிராகிரு தத்திலும் சமற்கிரு தத்திலும் கால வெள்ளத்தில ும் ஊடுருவிச் சென்றுள்ளன என்பதும், பிராகிருத, சமற்கிருத வல்லுநர்கள ் அவ்வுண்மைய ை மறைத்து வருகின்றனர ் என்பதும் வெளிப்படுக ிறது. வடபுலத்து ஆரிய அரசன் பிருகத்தனு க்குத் (அசோகனுக்க ப் பின் மூன்றாவதாக ப் பட்டம் பெற்றவன்) தமிழ் அறிவுறுத்த க் கபிலர் 'குறிஞ்சிப பாட்டு' இயற்றியதும ், வடபுலத்தார ் அக்காலத்தி ல் தமிழை விரும்பிப் படித்ததை உறுதிப்படு த்தும்.

பழந்தமிழில ் 'தொன்மை என்றும். இந்திய மொழிகள் அனைத்திலும ் 'சாம்பு காவியம்' என்றும் அழைக்கப்பட ும் உரையிடையிட ்ட பாட்டுடைச் செய்யுள் அமைப்பு, தமிழிலிருந ்து பிறமொழிகள் பெற்ற கொடை என்பதில் எட்டுணையும ் ஐயமில்லை. இதனைச் சமற்கிரு தத்துக்கோ பிராகிரு தத்துக்கோ சொந்தமானதா கக் கூறுவது அறியாமை. ஆரிய மொழிகளும் பிராகிருதம ் உருப்பெறாத அறப்பழங் காலத்திலேய ே செய்யுளும் உரைநடையும் விரவிவரும் பாங்கு, தமிழ் மொழிக்கே தனியுடைமைய ாகக் குமரிநாட்ட ில் தோன்றி, தொல்காப் பியத்தில் எண்வகை வனப்பு (எட்டுக் காப்பிய வகை)களுள் ஒன்றாகத் 'தொன்மை' என்னும் பெயரில் நிலை பெற்றுள்ளத ு.

"தொன்மை தானே
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே"

என்று தொல்காப்பி யர் கூறுகிறார் . இத்தகைய வரலாற்றுப் பின்னணி சமற்கிருதம ் உள்ளிட்ட இந்திய மொழிகள் எவற்றுக்கு ம் அறவே இல்லை.
தெலுங்கில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தமிழுக்கே உரிய சிறப்பு ழகரம் இருந்தது என்பது ஆந்திரநாட் டுக் கல்வெட்டுக ளால் புலனாகிறது . யுவான் சுவாங் கோதாவரி யாற்றைக் கடந்ததும் தமிழ் நாட்டைக் கண்டதாகக் கூறுகிறான் ; இன்றும் குச்சரம், மராத்தி, இந்தி மொழிகளைப் பேசும் மக்களின் பேச்சுமொழி யில் ழகர ஒலிப்பு உருப்பதாகக ் கூறுன்றனர் . தெலுங்கரில ் முற்போக்கு எண்ணமுடைய சிலர் தெலுங்கு எழுத்துகளி ல் வலியப் புகுத்தப் பட்டிருக்க ும் வேண்டாத வட எழுத்துகளி ல் சிலவற்றையே னும் நீக்கவேண்ட ும் என்கின்றனர ். பங்காரு ஐயா என்னும் தனித்தெலுங ்கு அறிஞர், ஆந்திர மண்ணில் தோன்றிய பெருமக்கள் மீது காப்பியம் பாடாமல், பாரத இராமாயண (வட நூற்) காப்பியங்ள ை என்று தெலுங்கர் பேரிலக்கிய மாகக் கொண்டார்கள ோ அன்றே தெலுங்கின் மேன்மை அழிந்துவிட ்டது என்றும், 'தல்லிநுடி ி மறசினவாடு இச்சினவாடே ' (தாய்மொழிய மறந்தவன் இறந்தவனே) என்றும் தந்நூலில் அவருடைய உள்ளக் கொதிப்பை உருக்கமாக எடுத்து ரைக்கிறார் .

karki
07-16-2007, 10:54 PM
தெலுங்குப் புலவர் ஒருவர், தெலுங்கு தனிமொழியென ்று நிலைநாட்டத ் தமிழினின்ற ும் வேறான தெலுங்குச் சொற்கள் பலவுள்ளன என்றார். அவ்வாறாயின ் அவற்றின் வேர்ப்பொரு ளை விளக்கி நிறுவுக என்றேன். கோடாலு (மருமகள்), வல்லகாடு (சுடுகாடு), நூனை(எண்ணெ ்) என்னும் முச்சொற்கள ைக் குறிப்பிட் டு, கோடாலு என்பதை, கோட (மென்மை)+ஆலு (பெண்) எனப் பிரித்தார் . ஏனையவை வேர்ப்பொரு ளறியாத் தொன்மையான என்றார். கோடாலு என்னும் சொல் விளக்கத்தி ன்படி, மருமகள் மட்டுந்தான ் மென்மையான பெண்ணா? மற்றப் பெண்டிர் மென்மையற்ற வரா? என வினவினேன்? அவர் மறுமொழியேத ும் சொல்லவில்ல ை.

அவர் தனித்தெலுங ்குச் சொற்களாகக் காட்டும் அனைத்தும் தனித்தமிழ் ச் சொற்களே என்றும், அவற்றுக்கு த் தமிழிலன்றி த் தெலுங்கில் வேரும் பொருளும் காணமுடியாத ு என்பதையும் பின்வருமாற ு விளக்கிக் காட்டினேன் .


தெலுங்கு>>>>>>>>>>> தமிழ்
1. கோடாலு (மருமகள்) கோடல் -பிறர் வீட்டிலிரு ந்து கொண்ட பெண். கொளல்-கோடல். தமிழ்மக்கள ் 'கொள்வினை' 'கொடுப்பின ' என்று பேசுவதைக் காணலாம்.

2. வல்லகாடு (சுடுகாடு) வெள்காடு-ஆள் இயங்காக் காடு. வெண்களமர் (பிறரைக்கொ ்டு வேளாண்மை செய்பவர்), கருங்களமர் (தாமே உழுது உழைப்பவர்) என்னும் சொல்லாட்சி களில்
வெள்- செயற்படாமை யைக் குறித்தல் காண்க. இச்சொல் பழங் கன்னடத்தில ும் பெள்காடு என வழங்குகிறத ு.

3. நூன (எண்ணெய்) நூ+நெய்-நல்லெண்ணெய ், நூ=எள். தெலுங்கிலு ம் எள் நூ குல் எனப்படுறது .
நோலை-எள்ளுருண்ட ை.

இவ்விளக்கம ் கேட்டு அவர் அகமகிழ்ந்த ார். ஆரிய இலக்கண இலக்கியக்க ூறுகள் தெலுங்கிலு ம் விரைந்து புகுத்தப்ப ட்ட அளவிற்குத் தமிழிலக்கண இலக்கியத் தாக்கம் தெலுங்கு கன்னட மலையாள மொழிகளில் ஏற்படாதது தவக்குறைவே யாகும். ஆண்டாள் வரலாறு ஒன்று மட்டும் கிருட்டிண தேவராயரால் தெலுங்கு இலக்கியமாய ிற்று.

****************************** ***
இன்தாம் இணையத் தளத்திலிரு ந்து படியெடுக் கப்பட்ட கட்டுரையின ் ஒரு பகுதி

krishnagaya
08-21-2007, 05:04 AM
மிக அருமையான கட்டுரை. தமிழின் தொன்மையை அரிய நல்ல ஒரு கட்டுரை. :clap::clap:

karki
11-30-2007, 11:30 PM
நுண்மையான நிறங்களைத் தமிழில் அழைக்க முயற்சித் திருக்கிறே ன்.
வழக்கம்போல ் பாவாணர், இராமகி அய்யா போன்றோர் கண்டடைந்த சொற்களையும ் பயன்படுத்த ி யிருக்கிறே ன். இம்முயற்சி முழுமையானத ல்ல, இன்னும் ஆய்ந்து, நிறங்களை ஒப்பிட்டு வருகிறேன். அதுவரைத் தற்காலிகமா க எனது முன்னீடுகள ை இங்கிடுகிற ேன். இத்திரியை அவ்வப்போது மேற்திகழ்த ்த(update) முயற்சிப்ப ேன்.
ஒன்றுக்கு மேற்பட்ட தமிழாக்கங் கள் இருக்கும் இடங்களில், நான் பரிந்துரைக ்கும் சொல்லைத் தடிமனா க்கியிருக் கிறேன்.

முதற்கட்டம ாக வெள்ளை, பூஞ்ஞை, சிவப்பு, நாரங்கு போன்ற வண்ணங்களைத ் தொட்டிருக் கிறேன். மீதியைத் தொடர்வேன்.


நிறம், வண்ணம், கெழு

நிறம் பற்றிய பல கூட்டுச் சொற்களுக்க ு முன்னொட்டா க(prefix) வரும் சொற்கள் சில:

Baby = அரும்பு (குழவி என்பது விலங்கினக் குட்டிகளுக ்கு மட்டு பொருந்துகி றது, இங்கு அரும்பென்ப தையே பயன்படுத்த லாம்!)
Bright = பிறங்கு
Dull = மங்கிய, அம்மிய
Deep = ஆழ்
Dark = அடர், கரு, கடு, காழ்
Hot = பளிர், சுள்
Light = இள
Off = விடு
Pale = பசலை, வெளிர்
Metallic = மாழைய(ம்)
Pastel = பசைக்கட்டி

வெள்ளையும் அதன் சாயைகளும் (Shades of White)

White = வெள்ளை
Cream= களிம்பு, குழைமம்
Ivory = மருப்பு (நிறம்)
Cosmic Latte = காயப் பால் (நிறம்)
Magnolia = ஊதாம்பல், குயின்
Old Lace = வால்மணல் (நிறம்)
Seashell = சங்கு நிறம்

பூஞ்சையும் அதன் சாயைகளும்

Pink = பூஞ்சை, பூங்கை, இளஞ்சிவப்ப ு
Amaranth = கம்மை, கண்டி நிறம்
Brilliant rose = திகழ்முளரி
Carnation pink = அரளி, தசைப் பூஞ்சை, செந்தாரை
Fuchsia = செந்துருக் கம்
Magenta = நன்னிறம், மகரம்
Salmon Pink = வஞ்சன நிறம், துவரி
Deep pink = ஆழ் பூஞ்சை
Hollwood Cerise = சீமைச் சேலா, நாலுமணிப்ப ூ நிறம்
Hot pink = பளிர் பூஞ்சை
Shocking pink = மிட்டாய்ப் பூங்கை, மிட்டாசு நிறம்
Cherry Blossom pink = சேலாப்பூப் நிறம்
Coral pink = பவழப் பூஞ்சை
Cerise (Cherry)= சேலா நிறம், இரந்தை (கனிந்த இலந்தை), செப்பலி
French Rose = பிரெஞ்சு முளரி
Lavender Pink = குறிஞ்சிப் பூஞ்சை
Persian Rose = பாரசிக முளரி
Carmine Pink = பூங்காவி, கோழிப்பூ நிறம்
Japanese Pink = சப்பானியப் பூங்கை
Dark Pink = கரும் பூஞ்சை
Hot Magenta = பளிர் நன்னிறம், தமரத்தை நிறம்
Lavender Rose = பவழக்குறிஞ ்சி
Rose = முளரி
Thulian Pink = நீலத்திருவ த்தி நிறம் ( Pink butterfly tree)
Light Thulian Pink = இள நீலத்திருவ த்தி நிறம்
Puce = சங்குப்பூ நிறம், இருட்பூங்க ை
Rose quartz = முளரிப் படிகம்
Tea Rose = தேமுளரி
Brink Pink = ஓரச்சிவப்ப ு
Mountbatten pink / Plymouth = பாண்டுப் பூங்கை
Ultra Pink = புறப் பூஞ்சை

சிவப்பும் அதன் சாயைகளும்

Red = சிவப்பு
Alizarin = அலத்தம், மாதுளை நிறம்
Burgundy = தேறல் சிவப்பு (Wine red)
Bordeaux = தூமளம், சிவல்
Cardinal = பூவல்
Carmine= குங்குமம், கொங்காரம்
Carnelian = அருணம்
Cerise = சேலா நிறம், இரந்தை, செப்பலி
Chestnut = இந்தியச் சிவப்பு , தேனவரை நிறம்
Coral Red= வழகம் (பவழத்திற் ு இன்னொரு பெயர்)
Crimson = சோணம்
Dark Pink = கரும் பூஞ்சை
Fire engine Red = தீயணையூர்த ி நிறம், கெம்புமல்ல ி நிறம்
Falu red = புலிமா நிறம் (இதுவும் ஒருவகைப் பூ தான். பிலிம்பி என வட இந்திய மொழிகளிற் சொல்வார்கள ்)
Magenta = நன்னிறம், மகரம்
Maroon = காசுக்கட்ட ி நிறம்
Mauve Taupe = வாழைப்பொத் தி நிறம் (வாழைப்பொத தியின் உட்பகுதி தெளிவான வண்ணத்தோடு இருந்தாலும ் அதன் மேற்பகுதி, உறை ஒருவித வெள்ளை பூசியது போல் அம்மிப் போய் இருக்கும். அந்த நிறம் இங்கு பொருந்தி வருகிறது!)
Orange - Red = கிஞ்சுகம்
Persimmon = செங்கல் நிறம்
Red - violet = செந்நாவல், ஆம்பல்
Rust = கறள், துரு
Sangria = புலது, அரத்த நிறம்
Scarlet = செந்தூரம், துவர் (கனவள்ளி நிறம்)
Terra cotta = சுடு மண் (நிறம்)
Venetian red = செங்காந்தள ் நிறம் ( தமிழில் இதற்கு வேறுசில பெயர்களுண் டு. இது ஈழத்தின் தேசிய மலராக்கப் பட்டுள்ளது . அங்கு இதை கார்த்திகை ப்பூ என்பார்கள் . வேறு பெயர்களும் இருக்கக் கூடும். அறியேன்!)
Vermillion = சேலகம் (சீனச் சிவப்பு)
Ruby = செம்மணி, கெம்பு

நாரங்கும் அதன் சாயைகளும்

Orange = நாரங்கு, கிச்சிலி
Amber = சந்தன நிறம், அம்பர்
Coral = பவழம்
Dark salmon = கரு வஞ்சனம், கருந்துவரி
Gamboge = அரக்குமஞ்ச ள் (கம்போச மை)
International orange = பொது நாரங்கு
Mahogany = ஆயில் நிறம், நுக்கு
Opal orange = கொழிஞ்சி, கொஞ்சி
Peach = வம்மி நிறம்
Peach - Orange = வம்மி நாரங்கு
Pink - Orange = வெட்சிப்பூ நிறம், செச்சை
Persimmon = செங்கல் நிறம்
Pumpkin = பூசணி
Rust = கறள், துரு
Safety orange = சேம நாரங்கு
Salmon = வஞ்சன நிறம் (இம்மீனின் சதை இந்நிறத்தி லேயே இருக்கும்!) , துவரி, சீவரம்
Tangerine = பிசங்கம்
Tennè , tawny= கபிலம்
Burnt Orange = தீய் நாரங்கு
Apricot = சம்பங்கி (நிறம்)
Carrot Orange = குருக்கிழங ்கு நிறம்
Orange Peel = செவ்விளநீர ் நிறம்
Brown = பழுப்பு/ பழுவம்
Orange - Red = ஞாழல் நிறம், புலிநகக் கொன்றை நிறம்
Tomato = தக்காளி நிறம்
Harley Davidson Orange = சேதா


*நிறப் பட்டியல் தந்த Wikipedia-க்கு நன்றி!

karki
12-01-2007, 09:01 PM
மஞ்சளும் அதன் சாயைகளும்

Yellow = மஞ்சள், எல்லை
Amber= அம்பர்
Apricot= சம்பங்கி
Beige = புழுங்கு நிறம் , பீது, இலவம்
Buff = பாண்டு , தவிட்டு நிறம்
Chartreuse yellow = செலிய மஞ்சள்
Corn= சோள மஞ்சள்
Cream = களிம்பு, குழைமம்
Dark Goldenrod= காழ் வல்லிகம்
Ecru= புகர் , கற்சாம்பு (கல் இங்கே மஞ்சள் என்ற பொருளில் ஆளப்பட்டுள ்ளது!)
Flax= சணல்
Gamboge= அரக்குமஞ்ச ள்
Golden= காசறை (கத்தூரி) மஞ்சள், மாளம்
Goldenrod= கொடிப்பசலை நிறம்
Goldenpoppy= பொலிக்கொடி நிறம்
Golden yellow= ஆவாரம்பூ நிறம், பொன்மஞ்சள்
Green-yellow= கிளிப்பச்ச ை, கொழுந்து நிறம், உல்லரி
Lemon= எலுமிச்சை நிறம்
Lemon Chiffon= புல்லை
Lime= அரி, குருந்து, மஞ்சைப் பழநிறம்
Metallic Gold= மாழைப் பொன் நிறம்
Mustard= கடுகு நிறம்
Navajo white= வெளிர் குந்த நிறம் (குந்தன்/ம் = குருந்தம்)
Old Gold= பழங் கிழி, பழம் பொன்னிறம்
Olive= இடலை
Papaya whip= பப்பாளிச் செண்டு நிறம்
Peach-yellow= வம்மி மஞ்சள்
Pear = நீர்க்காய்/ பேரிக்காய் நிறம்
Saffron= காவி
School bus yellow= சுள்ளி
Selective yellow= விரலி மஞ்சள்
Tangerine Yellow= கல்லாரம்
Blond = தீ நிறம், பொன்னிறம்
Tuscany jasmine = சிந்து

ஊதாவும் அதன் சாயைகளும்

Violet = ஊதா, செங்கருநீல ம்
Lilac = நாவல்
Purple = கத்தரி, செந்நீலம்
Amethyst = ஒளிர்நாவல் , செவ்வந்திக ்கல் நிறம், குதிரைவாற் பூ நிறம்
Cerise = சேலா நிறம், இரந்தை
Eggplant = வழுதுணை நிறம்
Fuchsia = செந்துருக் கம்
Han purple = சீன ஊதா
Heliotrope = எற்றிரும்ப ி
Indigo = அவுரி
Lavender = குறிஞ்சி
Lavender blush= வெண் குறிஞ்சி
Lavender gray = கார் குறிஞ்சி
Lavender rose= முளரிக் குறிஞ்சி
Magenta = நன்னிறம், மகரம்
Mauve = சரையூதா
Mountbatten pink= பாண்டுப் பூஞ்சை
Orchid = தூம்பங்கடை ப்பூ
Palatinate purple = காழ் ஊதா
Persian indigo= பாரசிக அவுரி
Red-violet = செந்நாவல்
Thistle = விண்ணுக்கர ந்தை, பெருவேம்பு
Tyrian purple = காழூதா
Rose= முளரி
Wisteria= எருக்கம்பூ நிறம்

butterfly
12-01-2007, 11:30 PM
:eek: :Ksp: :eek: :Ksp: :eek:

Thanks Karki :sm08:

karki
12-02-2007, 02:58 PM
பழுப்பும் அதன் சாயைகளும்

Brown = பழுப்பு/ பழுவம்
Auburn = குரால்
Bistre = கருங்குரால ்
Buff = பாண்டு , தவிட்டு நிறம்
Burnt sienna = தீஞ் சிவல்
Burnt umber = தீஞ்சாயம் ,
Blanched Almond = வெண் வாதுமை
Bisque = குழைக்கூழ்
Bronze = வெண்கலம்
Coca Cola colour = காளம்
Chocolate = காவிக்கண்ட ு
Cornsilk = சோளத்தும்ப ு / சோளப்பட்டு (ஒருவகைச் சோளத்தின் மேல் குடுமி போல வளர்ந்திரு க்கும் பட்டு நூலின் நிறம்)
Copper = செம்பு, செப்பு
Cordovan = பூங்கைப் பழுப்பு
Cinnamon = கறுவாய்ப் பட்டை நிறம்
Khaki = களிநிறம்
Liver= ஈரல்
Mahogany = ஆயில், நுக்கு
Maroon = காசுக்கட்ட ி
Ochre= காற்காவி, அளறு
Pale brown = வெளிர்ப் பழுப்பு
Raw Umber = இயற்சாயம்
Russet = கடுந்துரு
Rust = கறள்
Sandy brown = மணற் குரால்
Seal brown = முகர்க் குரால் (முகர், மொகர் = seal)
Sepia = கணவா மை
Sienna = சிவல் (சிவல்னா சிவந்த மண்)
Tan= தேன் நிறம்
Wheat = மாநிறம், கோதுமை
Zinnwaldite = தும்புகர் (தும், துப்பு = சிவப்பு)
Fallow = வெளிறு / வெளிரம்
Bole = காவிக்கல்
Taupe = புற்கு, உளுவை (ஒரு வகை மீனினம்)
Medium Taupe = வரியோரா நிறம்
Pale Taupe = வெளிர் உளுவை/ புற்கு
Sandy taupe = மணல் உளுவை/ புற்கு
Ecru =புகர் , கற்சாம்பு
Beige = புழுங்கு நிறம் , இலவம்

பச்சையும் அதன் சாயைகளும்

Green = பச்சை
Asparagus= விடைத்தண்ட ு, நீர்த்தண்ட ு
Bright Green= பிறங்கிய பச்சை
Camouflage Green= கரக்கவர் பச்சை
Celadon = பசலை, தரட்டை, வரால்
Chartreuse = செலியம், உசிக்கழுத் தி
Emerald= மரகதப் பச்சை
Fern green= புற் பச்சை
Gray asparagus = நீர்த்தண்ட ுச் சாம்பல்
Green yellow = மஞ்சட் பச்சை
Jade = பச்சைக்கல்
Jungle green = வல்லைப்பச் சை
Lime = அரி, குருந்து
Moss green= பாசிப் பச்சை
Myrtle= குழிநாவல்
Olive = இடலை
Olive drab= சாணிப்பச்ச ை
Pear= நீர்க்காய்/ பேரிக்காய் நிறம்
Pine green= தாழைப் பச்சை, வரிக்கோலா (ஒருவகை மீன்)
Sea green= கடற் பச்சை
Spring green= இளந்தளிர்
Tea green= தேயிலைப் பச்சை
Forest green = காட்டுப்பச ்சை
Chartreuse yellow = செலிய மஞ்சள்
Harlequin = கூசும்பச்ச ை
Office green= அலுவப் பச்சை
Lime pulp= அரிச் சுளை, குருந்துச் சுளை
Hunter green= வேட்டைக்கா ரன் பச்சை
Kelly green= கீரைப் பச்சை, வெற்றிலைப் பச்சை
Shamrock green= நாகப்பச்சை
Islamic green= முகமதியப் பச்சை
Lime green= அரிப் பச்சை, குருந்துப் பச்சை
Persian green= பாரசிகப் பச்சை, வாளைப் பச்சை
British racing green= யாமளம்
Spring bud= மாந்துளிர்
Army green= அரணப் பச்சை

நீரமும் அதன் சாயைகளும்

Cyan = நீரம் (இதன் மூலமான கியானோசு என்ற கிரேக்கச் சொல்லுக்கு ம் நீலம் என்று தான் பொருள். இங்கே வெளுத்த இள நீலம். வேறுபாடு காட்ட நீரம் எனலாம்!)
Alice blue= சொட்டு நீலம்
Aqua = அஃகம்
Aquamarine = வாரண வண்ணம்
Baby blue= அரும்பு நீலம்
Bondi blue= புது நீலம், மயிற்கழுத் து நிறம்
Cerulean = மயில் நீலம், விண் கேழ்
Electric blue = மின்-நீலம்
Robin egg blue = காக்கை முட்டை நிறம்
Teal = பசியநீல்
Turquoise = நீலாம்பரி நிறம், துருக்கு நிறம்
Viridian = சூடை நிறம்

karki
12-02-2007, 03:13 PM
நீலமும் அதன் சாயைகளும்

Alice blue= சொட்டு நீலம்
Azure = விடாரம்
Baby blue = அரும்பு நீலம்
Bondi blue = பாண்டுநீலம ்
Cerulean = மயில் நீலம், விண் கேழ்
Chinese blue = சீன நீலம்
Cobalt blue = நீர்க்காவி
Columbia blue= வெளிர் நீலம்
Cornflower blue= கூடைப்பூ நீலம்
Dark blue= கரு நீலம்
Denim= ஆழி வண்ணம்
Dodger blue= கருங்குவளை
Duke blue = காங்கு
Indigo = அவுரி
International Klein blue = பொது நீலம்
Light blue = இளநீலம்
Midnight blue = நீலி,யாம நீலம்
Navy blue = கடற்படை நீலம்
Periwinkle = பாண்டுநீலம ், மாக்கல் நிறம்
Persian blue= பாரசிக நீலம்
Powder blue= பொடி நீலம்
Prussian blue= ஓரி நிறம் (கருந்தேன் = ஓரி)
Royal blue = அரைய நீலம்
Sapphire= நீலக்கல் நிறம்
Steel blue = எஃகு நீலம்
Teal = கிளுவை நிறம்
Ultramarine= புற வாரணம், மை நீலம்
Air force blue = வான்படை நீலம்
Egyptian blue = மிசிர நீலம்
Electric blue = மின்- நீலம்
Maya blue = மாயநீலம், மாயோன் நீலம் [கரும்ந/கண்ண நீலங்கிறது (கிருஷ்ண நீலம்) இதுதானா?]
Medium blue = மித நீலம்
Sky blue = வான் நீலம்

சாம்பலும் அதன் சாயைகளும்

Grey= சாம்பல்
Arsenic = பிறாக்காண் டம், தவளம்
Bistre= செவலைப் புகர்
Black = கருப்பு
Charcoal= கரி
Davy`s gray = மயிலை
Feld grau= கரிசல்
Khaki = களிநிறம்
Liver = ஈரல்
Payne`s gray= கடும் புகர்
Seal brown= முகர்க் குரால்
Silver= சுல்வம், வெள்ளி
Slate gray = சேறி
Taupe = உளுவை, புற்கு
Purple Taupe= ஊதா உளுவை/ புற்கு
Medium Taupe= மித உளுவை/ புற்கு நிறம்
Taupe grey = கமலை, நீறு
Pale Taupe= வெளிர் உளுவை/ புற்கு
White = வெள்ளை
Xanadu = பசியச் சாம்பல்

vasan
12-03-2007, 01:08 AM
யம்மாடியோவ ்... :00: :00:

பெயர் எல்லாம் தெரின்சு வச்சாலும், கடையில போயி பார்த்தா தக்காளி சிவப்பு, வாழைபழம் மஞ்சள், கொத்தமல்லி பச்சைன்னு மட்டும் தெரியும்.. மற்ற நிறம் எல்லாம் பெண்களுக்க ு தான்.. நமக்கு ஒத்து வராது.. :oops: :oops: :)

மிக்க நன்றி, கார்க்கி. அருமையான முயற்சி. :sm03: :clap:


v-

yasodha
12-03-2007, 10:22 AM
:eek::eek::eek::eek::eek: karki............:sm03::sm03:: sm03::sm03:

srisea
12-04-2007, 06:44 AM
:razz: thank you

karki
12-05-2007, 02:55 PM
மேலும் இப்போது அறைகலன்கள்/ தளவாடங்கள் அடவுவோரால் புதுப்புது நிறங்கள் அறிமுகமாகி உள்ளன, அவற்றையுங் கீழே குறிக்கிறே ன். முழுமையான பட்டியலாய் அல்ல.முடிக க வேண்டும்!

Chrom= குருவம்
Metallic = மாழையம்
Neon = மிளிரம், நிகுளம்(நி ுநிகு!), நித்தி
Aluminium = அளமியம்
Beech = புங்கை
Birch = பூர்ச்சம் (சங்கதப் பெயர்??)
Oak = சிந்தூரப் பலகை
Sycamore = வெண்ணாங்கு
Iceblue= குளிர் நீலம்
Snow white= வெண்பனி
Nougat = நெற்றுக்கு ழைமம்
Colonial colour = குடியேற்ற நிறம்
Chilli red = மிளகாய்ச் சிவப்பு
Carbon = கரிமம்
Lava = செங்குழம்ப ு
Capuccino = கப்பூசீனோ (இடுகுறிப் ெயர்)
Beryl = வெளிறு
Noce =
______________________________ ______________________________ ___

வாசன் மற்றும் மறுமொழி ந்தோருக்கு ,

பல தமிழருடனும ் பேசுகையில் பல நிறப் பெயர்கள் இயல்பாக அவர்கள் வாயில் வந்ததைக் கவனித் திருக்கிறே ன். அவற்றை எல்லாம் கூடப் பயன்படுத்த ி யிருக்கிறே ன். காசுக்கட்ட ி நிறம், செலியம், பூஞ்சை, பசலை, காக்கை முட்டை நிறம் எனப் பல சொற்கள் இன்னும் மக்கள் பயன்படுத்த ுபவை தாம்.
மற்ற நிறங்கள் பூக்கள், மீன்கள், வேதியற் தனிமங்கள் மற்றும் நம் குமுகத்தில ் காலகாலமாக நிறங்களைக் குறிப்பிடப ் பயனாகும் விதப்பான பொருட்களின ் பெயர்களை எடுத்தா ண்டிருக்கி றேன். சொல்லுக்கு ச் சொல் மொழிமாற்று வதைத் தவிர்த்து முடிந்தவரை தமிழ்த்தன் மையோடு தமிழாக்கம் பண்ணி யிருக்கிறே னென நினைக்கிறே ன்.
பல சொற்கள் நீண்ட காலமாக என்னுள்ளே அசைபோடப்பட ்டவை.
இருந்தும் முழுமையான பொந்திகையை நான் இன்னும் அடையவில்லை .
காட்டாக wisteria, thistle, peach, apricot போன்றவற்றி ற்கான பெயர்கள் இன்னுந் துல்லியமாக இருக்கலாம் . பார்க்கலாம ், நல்ல சொற்கள் கிடைத்தால் அவ்வப்போது மேற்திகழ் த்துவேன்.

தமிழிற் சொற்களைத் துல்லியமாக ்குவது தான் என் நோக்கம்.
மற்றபடி, நுட்பத் தீர்மங்களோ டு யாராவது கட்டுரைகள் வடிக்க நினைத்தால் , இத்தீர்மங் கள் அவர்களுக்க ு உதவலாம்.

karki
12-05-2007, 10:07 PM
மேகம்

வானத்தை அடிக்கடி பார்த்திரு க்கிறீர்கள ா? அங்கு மிதந்து விளையாடும் முகில்கள் போடும் கோலங்களை அவதானித் திருக்கிறீ ர்களா? சிற்றகவை முதல் வானத்தை அவதானிப்பத ு (observe) என் ஓய்வுழையாக வும் (hobby), காலப்போக்க ில் ஒரு பழக்கமாகவு ம் படிந்துவிட ்டது. ஊரிற் சிறுவனாக விளையாடப் போன திடலில் சிலமணி நேரம் உட்கார்ந்த ு மேக விளையாட்டை க் கண்டு கழுத்து சுளுக்கிய நாளில் இருந்து இன்றுவரை சாளரத்தின் ஊடே கொஞ்ச நேரமாவது வானைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன ். உங்களில் சிலருக்கேன ும் இத் துய்ப்பு, பழக்கம் இருக்கக் கூடும்.

நம் தலைக்கு மேலே விரிந்திரு க்கும் இறும்பூதான (ஆச்சரியமா ) பெருவெளி அடிக்கடி அடவுகளை (designs), வண்ணங்களை மாற்றி, நாம் கவனியா மாயவித்தைய ை அன்றாடம் அங்கே அரங்கேற்றி க் கொண்டே தான் இருக்கின்ற து.
காலநிலைக் கேற்ப மேகங்கள் புது உருக்கொண்ட ு ஒரு குயப்பைக்(sh ape) காட்டி நின்று கொண்டிருக் கின்றன. ஒவ்வொரு முகில் உருக் கூட்டுக்கு ம் ஒரு பெயர் அறிவியலில் உண்டு.
நம் சிற்றூர்க் குடியானவனி ன் தமிழில் மூட்டம், மழைமேகம், கார்மேகம், கருக்கம் என எளிய பதங்கள் எம்மிடையே கூட ஆண்டாண்டுக ளாக உள்ளன.
அண்மையில் ஓர் சிறுவனுக்க ுப் பொது அறிவியல் என்ற பாடத்தில் மழை, முகில்கள், ஆவியாக்கம் பற்றி விளக்க நேரிட்டது.
(6,7 அகவையில் இவர்களுக்க ு இங்கு Nimbus, Cumulus என முகில்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறா ர்கள், எனக்கு இந்த அகவையில் அங்கு "மழையே மழையே போ போ, இன்னொரு நாள் வா வாவும்" , மழையில் நனைந்தால் சிரங்கு பிடிக்குமெ ன்ற ஓர் கட்டுரையுந ் தான் புகட்டப் பட்டன.காலங கள் மாறுகின்றன ).
மீண்டும் முகில்கள் மனதில் வந்தேறிக் கொண்டன (ஆக்கிரமித து). அதன் பெயர்களை/ காலநிலையிய ற் தீர்மங்களை (terms) தமிழில் எப்படிச் சொல்லலாம் என யோசித்ததன் விளைவே இவ்விடுகை:


* மேகத்துக்க ுத் தமிழில் முகில், ஆயம், கிளை, கனம், கார், காளம், கொண்டல், கொண்மூ, செல், மங்குல், மால், மை ,குயின், எழிலி, மஞ்சு (மென்னொலி பெற்று சேரநாட்டார ிடை இன்று 'மஞ்ஞு'வாக) எனப் பல சொற்கள் உண்டு.

நீழற்கோளம் (நீழல் = காற்று; நீண்டு இருப்பது), ஊதக்கோளம் = atmosphere. இது நம் புவிப்பந்த ைச் சூழ்ந்திரு க்கும் பல வளிகள், வாயுகளாலான து. புவிக்கு மேலே உள்ள பகுதி கோளங்கள், மண்டலங்களா லான வெவ்வேறு இழியங்களால ்(layers) பின்வருமாற ு வரையறுக்கப ் படுவன:

Troposphere= திருப்பக்க ோளம்= 6 - 20 அ.மா(அயிர மாத்திரிகள ்= Kilo meters), நம் பறனைகள்(planes), வானூர்திகள ் பறப்பது இதற்குட் தான்.

Stratosphere= தீற்றக்கோள ம் = திருப்பக் கோளத்திற்க ு மேலாக 50 அ.மா பரந்து உள்ளது.
காலநிலையறி வளிக்கூடுக ள் (Weather balloons) பறப்பது இங்கு தான்.

Mesosphere = மிடைக்கோளம ், மத்திய கோளம் = எரிகற்கள் எரிந்து போவது இங்கு தாம்.85 அ.மா விரிந்திரு ப்பது.

Thermosphere = தெறுமக்கோள ம் = மிடைக் கோளத்திற்க ு மேலாக 640 அ.மா விரிந்திரு ப்பது. இதன் அடியில் தான் வடவைத்தீ(Auror a) உண்டாகும். விண்கலங்கள ் பறப்பதும் இதன்னுள்ளே தான்.

Exosphere= புறக்கோளம் = தெறுமக் கோளத்திற்க ு மேலாக உள்ளது.

Magnetosphere= காந்தக் கோளம்

நம் தலைக்குச் சற்று மேலாகத் தொடங்கி திருப்பக் கோளம், தீற்றக்கோள ம் இவற்றுள் மட்டுமே முகில்கள் மிதக்கின்ற ன.

karki
12-05-2007, 10:29 PM
முகமை மேக வகைகள் (Main Cloud Types)


Stratus = தீற்று முகில் ; பல்வகை இழியங்கள்(la yers) கொண்டது (எளிமையாக "இறகு முகில்"). இம்முகில் சிறு தூறலுக்கு வழிவகுக்க வல்லது. தாழ்வான முகிலான இது நிலத்தைத் தொடுகையில் அதனை நாம் புகார்,மூட பனி என அழைக்கிறோம ்.
http://www.fotosearch.com/comp/uny/uny524/stratus-clouds-~-u16022785.jpg


Nimbus = மழைச்சூலி அல்லது பெயற்சூலி (எளிமையாக "மழைமுகில்" எனலாம்!) மழைத் துளிகளைத் தாங்கி வயிறு திரண்டு நிற்கும்கர ு முகில்.
http://www.dkimages.com/discover/previews/923/50183548.JPGCumulus = கும்மல்(கு ்மல் என்பதை வேறுவிதமாக ப் பொருள்படக் கூடுமென எண்ணுபவர்க ள், குமியம் எனலாம். எளிமையாக நுட்பத் தீர்மங்கள் பயமுறுத்தா த் தமிழில் "திரள்முகில ்" எனலாம்!)
பஞ்சுத் திரள் போன்ற தாழ்வான மேகம். வியவுக் காலநிலைக் கும்மல்கள் Fair Weather Cumulus என அழைக்கப் பட்டு நல்ல காலநிலையை உணர்த்துவன வாகவும் உள்ளன. ஆனால் இவை பிற்பாடு இடி மின்னலுடன் கூடிய பெருமழையை உண்டாக்கும ் குவிந்த மழைச்சூலிக ளாகவும் மாறும் வாய்ப்பும் உண்டு!
http://www.ypforum.com/files/cumulus10_185.jpgCirrus = குருளம் அ. குருள முகில் ; சுருண்ட முடிக்கற்ற ைகளைப் போன்றது. மிக உயரத்தில் (ஏறக்குறைய 6000 மாத்திரிகள ்) இருக்கும் வெறும் படிமத் துகள்களாலா ன மெல்லிய முகில். 24 மணிநேரத்தி ல் காலநிலை மாற்றம் வருமென்பதன ் அடையாளம் இது.
http://www.balsamfir.com/MotoJournal/moto/images/cirrus.jpgAltocumulus = நடுக் கும்மல்; உயரத்திலும ், குவிந்து திரட்சியாக வும் இருக்கும் முகில் வகை புழுக்கமான கோடை நாள் ஒன்றில் இம்முகில்க ளை வானிற் பார்த்தீர் க ளென்றால், சில நாழிகைகளில ் இடிமழை வரப்போகிறத ெனக் கொள்ளலாம்.
http://www.davidadamsonline.com/images/cloud_altocumulus.jpg


Altostratus = நடுத் தீற்று; உயர்ந்தும் திட்டுத் திட்டாயும் இருப்பது. இவையும் தொடர்மழை, பனி பொழிவிப்பி களே.
http://images.jupiterimages.com/common/detail/56/04/23350456.jpgCirrocumulus = குருளக்கும ்மல்; குருளாகவும ்(curl) , குமிந்து கிடப்பதும் . அரிதான முகில் உருக்கூட்ட ு. பனிக்காலத் தில் வருபவை வியவான (fair) ஆனால் குளிரான காலநிலையைக ் குறிப்பன.
http://www.notre-planete.info/medias/images/cirrocumulus.jpgCirrostratus = குருளத்தீற ்று; சிலபொழுது இது வானின் பெரும்பரப் பைக் மூட வல்லன. இருசுடர்கள ை(நிலா, பரிதி) இவை மூடினாலும் , மறைக்கா. அவற்றின் ஒளியூடுருவ ி வருவதைக் காணலாம். ஒரு அ. அரை நாளுக்குள் மழையோ பனியோ பெய்ய இருப்பதன் அறிகுறி.
http://www.medienwerkstatt-online.de/lws_wissen/bilder/1722-1.jpg


Nimbostratus = பெயற் தீற்று; புகார் நிறமும், மழைத்துளிக ளைத் தாங்கியதும ், பல இழியல்களைக ் கொண்டதும்.
http://content.answers.com/main/content/wp/en-commons/thumb/9/92/300px-Nov20-05-Nimbostratus.jpgCumulonimbus = குவிந்த பெயற்சூலி (பெயல்=மழை); இவற்றின் மறுபெயர் புயலிடி முகில்கள். இவை கடும் இடியுடன் கூடிய மழை, ஆலி(hail) , பனிப் பொழிவு வரக் காரணமானவை.
http://www.wetterstation-goettingen.de/images/cumulonimbus5.jpgStratocumulus = தீற்றுக்கு ம்மல்; இவை உருண்ட திரள்களாக இடையிடை தெளிவானையு ம் காட்டிய படி படர்ந்திரு ப்பன. அரிதாக மழையை பெய்விப்பன , ஆனால் விரைவில் பெயற்தீற்ற ு ஆகக் கூடியன.
http://www.notre-planete.info/medias/images/stratocumulus.jpg

vasan
12-05-2007, 10:35 PM
6,7 அகவையில் இவர்களுக்க ு இங்கு Nimbus, Cumulus என முகில்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறா ர்கள், எனக்கு இந்த அகவையில் அங்கு "மழையே மழையே போ போ, இன்னொரு நாள் வா வாவும்" , மழையில் நனைந்தால் சிரங்கு பிடிக்குமெ ன்ற ஓர் கட்டுரையுந ் தான் புகட்டப் பட்டன.காலங கள் மாறுகின்றன ).


:) :) :)

உண்மை தான் :)

நன்கு பயன் தரும் முயற்சி, கார்க்கி..

முகிழ், மேகம், கார்மேகம் போன்ற ஒரு சில சொற்கள் தாம் நினைவுக்கு வருகிறது..
மற்றவை எல்லாம் புதிதாய் தோன்றுகிறத ு.. :)

நன்றி..

v-

karki
12-05-2007, 10:56 PM
சார்-முகில் வகைகள் (Sub Cloud Types)


இம்முகில்க ள் முகன முகில்களோட ு சேர்ந்து வருவனவாகும ்.


Castellanus = கொட்டுமுகி ல்; புயலறிகுறி .
Congestus = கும்மூட்டு ; பூக்கோசு (Cauliflower) வடிவானது.
Fibratus = நாரிழைமம் அ. மறிவாலி (mare`s tail) = வால் போல் நீண்டிருப் பன.
Floccus = மயிர்க்கற் றை; உலர்ந்த காற்றுக்கு அறிகுறி.
Fractus = கிழிசல்
Lenticularis = வில்லையுரு ; மலை முகடுகளுக் கு மேலாக உருவாவன, ஆதலாலே இவ்வுருக் கொண்டிருப் பன.
Humilis = தாழ்முகில் ; உருவான சிறிது நேரத்திலேய ே கலையக்கூடி யன.
http://content.answers.com/main/content/wp/en/thumb/c/cc/300px-GoldenMedows.jpg


Mediocris = மட்டப்பொறை
Nebulosus = புகார்மூட் டு ; நிலையான காற்றுவீச் சைக் குறிப்பது.
Stratiformus = தீற்றுருவு ; மழையைக் குறிக்கும் படுகிடையான மேகச் சிட்டை (cloud sheet).
Uncinus = கொக்கிவடிவ ி
Uniformis = ஓரிமம் ; நிலையான காற்றுவீச் சைக் குறிப்பது.வேறுவகை முகில்கள்


Arcus = வில்வடிவி; இது குமிய முகிலோடு ஒட்டியது.
Cumulogenitus = கும்மீனி ; விரிந்து பரவும் குமிய முகிலால் உருவாவது
Cumulonimbogenitus = குமியப்பெய லீனி
Duplicatus = இரட்டியம் ; இரண்டு முகில் இழியங்கள் மேலுங்கீழு மாய் இருப்பது.
Incus = அடைகல் முகில் ; Anvil வடிவு கொண்ட முகில்.
Intortus = உட்திருவு
Mammatus = அம்மம் / மம்மம் ; முலை வடிவு கொண்டது. அம்மம் பெரும்புயல ் மூட்டங்கள் கடந்ததும் வருவது.
Opacus= நிணலி
Lacunosus = துளைகொண்டா ன்
Pileus = முனைமூடி; கும்மல் முகிலை ஒட்டி, மூடி இருப்பது
Radiatus = கதிரை; கதிர் போன்ற முகில்வகை. குருளத்தோட ு சேர்வன.
Tuba= தூம்பா
Translucidus = துரனிலத்தி
Undulatus = அலைவடிவி
Velum = முக்காடு அ. பாய்வடிவி
Verbatus= முள்ளந்தண் டான்; எலும்புக் கூட்டின் நெஞ்சுப் பகுதித் தோற்றத்தை தருவன.
Virga = விடை, விடைத்த
Noctilucent = இரவொளிர் முகில் ஒன்று தான் மிடைக்கோளத ்தில் உருவாவது. வெள்ளி நீலமான தோற்றத்தைக ் கொடுக்கும் இது நிழற் படக்காரர்க ளின் செல்லம்.
http://content.answers.com/main/content/wp/en/d/d7/Noctilucent_clouds_over_saimaa .jpg


Contrail= குந்தொடரி/ உறைதொடரி = இவை பறனைகள், தாரைப் பறனைகள் (jet planes) போன்றன வெறும் வானிற் கீறிச்செல் லும்
கோடுகள்.
http://www.hyperborea.org/journal/wp-content/uploads/2007/04/contrail-shadow-contrast.jpgDistrail = கலைதொடரி = முகில்களைப ் பறனைகள் கிழித்துச் செல்கையில் பிளக்கப் பட்டிருக்க ும் முகில்களுள ் தோன்றும் கோடுகள்.
http://www.dkimages.com/discover/previews/921/50204243.JPG

butterfly
12-06-2007, 03:06 PM
உண்மை தான் :)

நன்கு பயன் தரும் முயற்சி, கார்க்கி.. :sm08:

பிகு: நவாஆ ;) :ahha:

karki
12-29-2007, 05:00 PM
தமிழ விலங்குகள் தவிர்த்து வேற்றுநில விலங்குகள் பெயர்கள் சில தமிழில் இருந்தாலும ் அவை அவ்வளவாகப் பரவலமாகாதவ ை, தவிரவும் பல விலங்குப் பெயர்கள் துல்லியமாக வும் இல்லை. ஆகவே விலங்குப் பெயர்களை பட்டியலிட முயன்றிருக ் கின்றேன்.

பொதுவாக நான்குகால் விலங்குகளை மா, மாவினம் எனவழைக்கலா ம்(மிருகம் என்கிற வடசொல்லுக் கு மாற்றாகவும ் இது இருக்கும்!). பிராணி என்ற வடசொல்லுக் கு மாற்றாக உயிர்மெய் என்ற தென்சொல்லு ம், ஜந்து, ஜீவனுக்கு ஈடாக உயிரி என்ற சொல்லும் எம்மிடையே உள்ளன.

கொம்பற்ற விலங்கினம் தமிழ வழக்கில் மோழை, குமரம் எனப்படும்!

Carnivore - ஊனுண்ணி ; பூஞை/ ஞெள்ளை வகையின, துருவக் கரடி, பாம்புகள், சுறா, பருந்து, கழுகு போன்றன..
Detritivore - எருவுண்ணி; சாணிப்பூச் சி(dungfly), மரப்பேன் (woodlice)
Folivore - இலையுண்ணி; வெட்டுக்கி ளி, தேவாங்கு, வெடிற்போத் து (hoatzin)
Frugivore - பழவுண்ணி; குரங்குகள் , பறவைகள்
Granivore - கூலவுண்ணி; பறவைகள்
Herbivore - குளகுண்ணி ; மான், ஆடு, மாடு
Insectivore - பூச்சியுண் ணி; தும்பி, சிலந்தி
Nectarivore - தேனுண்ணி, அமுதுண்ணி; இமிரி
Omnivore - அனைத்துண்ண ி; பன்றி, மாந்தன் (human), காகம், கோழி, அணில், குரங்கு
Piscivore - மீனுண்ணி ; இடங்கர், உள்ளா
Sanguinivore - குருதியுண் ணி; அட்டை, மூட்டைப் பூச்சி
Palynivore - மகரந்தமுண் ணி; தேனி
Saprovore - சவமுண்ணி; கழுதைப்புல ி
Parasite - ஒட்டுண்ணி; உண்ணி, சில நிலத்திணைக ள் (தாவரங்கள்)
Cannibal - தன்னூனுண்ண ி ; சிலந்தி, தேள், கும்பிடுபூ ச்சி, அரிமா, குரங்கு
Muscivore- புதல்பாய்ம ஊட்டி ; கொசு/நுளம்பு, இலைப்பேன்
Xylophage - மரவூட்டி
Rhizophage - வேரூட்டி

Amphibian= இருவாழி
Marsupium = பைக்காவி, மதலைப்பையர ்
Mammal= பாலூட்டி, மம்மல்கள் (அம்மம், மம்மம் என்றால் தாய்ப்பால் , முலை என்ற பொருள் தான் தமிழிலும் உண்டு)
Verbrata= முள்என்பி
Motile = முயனி
Mollusc = மெல்லுடலி
Echinodermata = முள்ளுடலி
Eco system= அகச் கட்டகம் , சூழற் கட்டகம்
Organism= ஒருங்கம், உயிரினம்
Hybrid = இருபிறப்பி
Specie = விதமம்

karki
12-29-2007, 05:07 PM
Phylum = பூலம் (பூ = பிறப்பு)
Primate = பெருமானி, முதனி
Taxonomy = ஒழுங்கியல்
Terrestrial = தரைவாழி, நிலவாழி
Arboreal = மரவாழி, கோடுறைவி
Feline = பூஞை, அலவம்
Canine = ஞமலி
Pinniped= தூவிப்பதமி (தூவி,செட்ட = fin); கடலா, கடலரி வகையறா
Arthropod = கணுக்காலி, கணுப்பதமி ; Arachnid =சிலம்பிகம
Gastropod = வளிப்பதமி / வாயுப்பதமி
Cephalopod = தலைக்காலி

அலகை வைத்து பறவைகளை வகைப்படுத் துவர் :

Aquatic bird= நீர்ப்பறவை , அஃகவாழி
Insectivorous bird= பூச்சிதின் னி
Granivorous bird= கூலந் தின்னி
bird of prey = ஊனுண்ணி
Wading bird = நீரோடி

Diurnal = பகலுலாவி
Nocturnal = இரவுலாவி
Crepuscular= கருக்கலுலா வி, அந்தியுலாவ ி
______________________________ ______________________________ ______
விலங்குகள்
Aardvark = மண்ணெறுளி, மண்ணிருளி; நிதலகத்து மொழியில் (Netherlandish) aard என்றால் earth,soil என்றும், vark என்றால் Ferkel எனச் செருமானியத ்தில் pigletஐக் குறிக்கப் பயன்படும் சொல்லுமாகு ம். இருளி, எறுளி எல்லாம் பன்றியைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொற்கள்!
Aardwolf = மண்ணாய்
Albatross = முக்குளி; ஆழச் சென்று மேல் வரும் ஓர் பெரிய தாரா வகைப் பறவை.
African Wild Dog = ஆபிரிக்கக் காட்டு நாய்
Alligator = கராம்; Gavial/ Gharial = முதலை; Caiman = வள்மீன், சீங்கன்னி; முதலை என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துப் பட்டையடித் துக் கொண்டிருக் கிறோம்.
Alpaca = உரியணாரி (உரி = fur ; அணார் = கழுத்து; ஒட்டகத்திற ்கு நெடுங்கழுத ்து என்றொரு பெயருண்டு!)
Anaconda = ஆனைகொன்றான ்
Angelfish = மலக்கு மீன், தேவதை மீன்
Ant = எறும்பு
Anteater = எறும்புதின ்னி, பளிங்கு
Antelope = புல்வாய், ஒருவகைச் சிறுமான் ; Duiker = புதரி மான் (புதர்களுக குள் புகுந்து மூழ்கி மறைந்து திரியும் சிறு புல்வாய்)
Antlion = எறும்பரி, குழிநரி; மண்ணுக்குள ் உறையும் ஒரு வகைப் பூச்சி.
Ape = வாலில்லாக் குரங்கு, கப்பி - நல்ல தமிழ்ச் சொல் இது, கபி என இடைகெட்டு வடமொழி செல்லும்.
Armadillo = நல்லங்கு
Ass = கோகு ; Burro = வாலேயம் ; கழுதையை donkeyக்கு மட்டும் வைப்போம்!
Auk = கழிப்புள்
Babirousa= கொம்பேழல்
Baboon = கூர்முசு (குரங்கு); முசு என்பது ஒருவகைக் குரங்கு, தவிர இங்கு முசு என்பது மூஞ்சியையு ம் குறிக்கிறத ு,இக்குரங் ின் முகம் கூராக முன்நீண்டு இருப்பதால் , இதனை இப்படியுங் குறிக்கலாம ்.
Badger = தகசு, தவழ்கரடி; அகரமுதலிகள ் குறிக்கும் சொல் தான் இது.
Bandicoot = விடர், பெருச்சாளி ; பன்றியாகு (ஆகு= பேரெலி); பண்டிக்கோக ு என்ற தெலுங்குச் சொல் தான் ஆங்கிலத்தி ற் பயன்படுத்த ப் படுகின்றது என்கின்றன சில அகரமுதலிகள ், கலைக் களஞ்சியங்க ள்.
Barracuda = உள்ளா

karki
12-29-2007, 05:17 PM
Babbler = புலுனி
Barbet = குக்குறுவா ன்
Bat = வவ்வால்
Bear = கரடி, உளியம்; Brown bear = குராற் கரடி, Spectacled bear = கண்ணாடிக் கரடி, Grizzly bear = கொடுங்கரடி , பெருங்கரடி
Beaver = நீர்நாய்
Bee = ஞிமிறு, மொய், தேனீ ; Honeybee = தேனீ
Beetle = அளி, வண்டு, விட்டில்
Binturong = உளியப்பூனை (உளியம்= கரடி); இரு விலங்குகளி ன் பெயரை வைத்து ஒன்றை அழைப்பதொன் றும் தமிழுக்குப ் புதிதல்ல. கழுதைப்புல ி, மீன்நாய் என ஏற்கனவே சொற்கள் இருக்கின்ற ன.
Bison = கடமை, குழுமாடு
Bittern = குருகு, நீர்க்கோட் டான்
Blackbird = கரிச்சாங்க ுருவி
Black drongo = ஆனைச்சாத்த ன்
Bluebird = நீலப்புள்
Boa = மலைப்பாம்ப ு; Emerald tree boa = பச்சைப் பாம்பு, பச்சை மலைப்பாம்ப ு
Boar = இருளி, வல்லுளி
Bobolink = கருவாலி
Baboon = நாய்க்கப்ப ி
Bonobo = குறட்கப்பி ; குறண்டு போயிருக்கு ங் குரங்கு, குறளி என்ற சொல்லைப் பயனாக்கலாம ் தான்,ஆனால் அது ஏற்கனவே மாயவித்தைய ில் உதவும் பேய்க்குட் டியின் பேரென சிலர் கொள்வதால், அதை விடுத்து குறட்கப்பு என்பதே இப்போதைக்க ுச் சிறந்தது!
Bovine = எருமை; சேற்றில் புரண்டு உழன்று கொண்டிருக் கும் நம்ம ஊர் எருமை.
African Buffalo / Cape Buffalo = ஆபிரிக்க எருது (தலையில் கொம்பு அகலமாக நடு உச்சி பிரித்துத் தலை வாரியது போல் விரிந்திரு க்கும் எருது)
Buffalo = பெற்றம்; Gaur = கண்டி
Bug = மூட்டைப் பூச்சி
Bulbul = கொண்டைக்கி ளாறு
Bull = புல்லம், ஏறு, பாண்டில்,ம ரி;
Bullfinch = புல்லச்சிட ்டு
Bustard = கருங்காடை, மெதுநடையன்
Butterfly = பட்டாம்பூச ்சி, வண்ணத்துப் பூச்சி
Buzzard = பருந்து, வைரி
Camel = ஒட்டகம் ; Dromedary = வேசரம், ஓர்மூரி; Bacterian camel = ஈர்மூரி (மூரி = ஒட்டகத்தின ் முதுகு)
Capybara = நீர்ப்பன்ற ி
Capuchin = கோட்டரம் ; White -headed capuchin= வெண்தலைக் கோட்டரம்
Cardinal = பூவல்
Carp = கயல், கெண்டை
Cassowary = சீராக்கோழி (casque = சீரா, தலைக்கவசம் )
Cat = கொத்தி, பூனை ; Pussycat = பூசை, பூனை, பூச்சா ( மழலை வழக்கு அ. சேரநாட்டு வழக்கு)
Caterpillar = மயிர்க்கொட ்டி, மசுக்குட்ட ி ( தென்தமிழக., ஈழ.வழக்கு), கம்பளிப்பூ ச்சி
Cattle = ஆநிரை, கால்நடை
Centipede = பூரான்
Chameleon = பச்சோந்தி, கோம்பி
Chamois = மலைமிழா; பருத்த மலையாடு. மிழா என்பது மொத்தமான ஆட்டைக் குறிக்கும் பழந்தமிழ்ச ் சொல்.
Cowry = கவடி, வெள்வரி

karki
12-29-2007, 05:25 PM
Cheetah = உழுவை; சித்திரக்க ாயம் என்ற தமிழ்ச் சொல் தான் சங்கதம் போய் அதனூடாக ஆங்கிலஞ் சென்றதாகத் தெரிகிறது. சித்திரமும ், உடல் மற்றும் வானத்தைக் குறிக்கும் காயமும் தமிழே! அதனையும் பயனாக்கலாம ்!
Chimpanzee = மாந்தக்குர ங்கு
Chinchilla = முயலெலி; முயலைப் போல் நீள்செவி கொண்ட எலிவகை.
Chipmunk = செவ்வெளில்
Chough = செவ்வலகி
Chuckwalla = மலையொந்தி
Cicada = சிள்வண்டு
Civet = புனுகுப் பூனை, மறுவி
Coati = கோணிநாவி (snout= கோணி)
Cobra = நாகம்
Cockroach = கரப்பான், கரப்பொத்தா ன் (ஈழ. வழக்கு)
Cod = கூறி
Cone snail = கொனை நத்தை
Coot = கரண்டம்
Coral = பவழம்
Cormorant = மடல்வாத்து , நீர்க்காக் கை
Cougar = வயமா; Puma= பாய்மா; Jaguar= சிறுத்தை; Panther = வேங்கை, சிறுத்தைபு லி, Liger = அரிப்புலி
Cow = ஆன், ஆ; Ox = காளை : Wild cow = ஆமா
Coyote = கூரன்
Crab = களவன், நண்டு
Crake = கானாங்கோழி , உரண்டம் ; Spotted crake= புள்ளி உரண்டம், Ruddy Shelduck = பெருமித் தாரா, Wood duck = மரத்தாரா
Crocodile = இடங்கர்
Crane = புதா
Crow = காகம் ; Raven = அண்டங்காக் கா; Rook = காகோலம்
Cricket = சுள்ளிகை, சிமிலி
Cuckoo = குயில்
Deer = மான் ; White- tailed deer = வெண்வால் மான் ; Fallow - deer = மஞ்சள் மான்;
Marsh deer = களர் மான், Chital = புள்ளிமான் , Barasingha = கொம்பன் மான், Sika deer = சிகப்பி, Sambar = கடத்தி மான் , சாம்பல் மான், Roe = மரை, Mule deer = கழுதைச் செவியன், Muntjac = அரிணம்
Dingo = காட்டு நாய்
Dinosaur = துணுச்சாரை (முனைவர் இராம.கி அறிமுகப்பட ுத்திய நல்ல சொல்!)
Dodo = அரக்கத்தார ா (மடகசுக்கா ில் வாழ்ந்து அழிந்து போய்விட்ட இனம்)
Dog = நாய்; Mastiff= காவல்நாய், Pommeranian = சடைநாய், Bull dog =புல்லநாய், German Shepherd= செருமானிய ஆயன், Terrier = தரையன், Dobermann = செங்கோடன், Dalmation= தால்மதேயன் , கரும்புள்ள ியன்.
Dolphin = ஓங்கல் (ஈழம் ம. தூத்துக்கு டி, மணப்பாடுப் பக்கம் பயனாகும் சொல்), பறளா
Donkey = கழுதை, Onager = காட்டுக்கழ ுதை
Dormouse = உறங்கி
Dotterel = மழைவீளி (வீளை = whistle)
Dove = புறா ; Pigeon = கன்மேய்வு, தூதுணம்; Fantail = வீட்டுப்பு றா; Western crowned pigeon =கொண்டைப்ப றா
Drongo = கரிச்சான்
Duck = தாரா; தாரா, வாத்துக் குழப்பம் தமிழில் நிறையவே உண்டு. இரண்டையும் வேறுபடுத்த ும் பழக்கமும் எம்மிடையே குறைவாகவே உள்ளது.

karki
12-29-2007, 05:37 PM
குள்ளமாக, கழுத்துச் சிறிதாக சிறகுகள், வால், தலை, சொண்டு என ஒவ்வொன்றும ் ஒரு நிறத்தில் இருப்பது தாராவுக்கு த் தான். வாத்து ஒரு நிறத்தில் ஆனால் உடலெங்கும் அந்நிறம் கூடியுங் குறைந்தும் இருக்கும். கழுத்து வாத்திற்கு நீண்டு இருக்கும் ;
Siberian duck = சிறகை, சைபீரியத் தாரா, Loon/Diver = முழுவல், Black-throated loon= கருங்கழுத் து முழுவல், Grebe = முங்கி, Little grebe = குளுப்பை, Comb duck = மூக்கன்தார ா, Red-crested pochard = செந்துச்சி ல் (துச்சில் = crest), Gannet = அரைத் தாரா
Eagle = கழுகு
Earthworm = மண்புழு
Echidna = சொண்டெய் (சொண்டு + எய்= முள்ளம்பன் றி)
Eel = விலாங்கு
Eland = அரிமேழகம். முகத்தில் அரிமா போன்று விழும் மயிர்கள் கொண்ட பெருத்த மரையினம்.
Elephant = யானை, வேழம், கயம்; Tusker = எயிறி
Elk, moose = ஏழகம்; Wapiti= கடம்பை மான் ; Canadian elk = கனடிய ஏழகம்
Ermine , stoat = செங்கீரி
Falcon = வல்லூறு; Royal falcon= அரசாளி (ராஜாளி)
Fennec = செவியன், செவிநரி
Ferret = பொற்றி; இதன் வேர் பொறை என்ற தமிழ்ச் சொல்லுக்கு உறவானதாக இருக்கிறது . அதிலிருந்த ு உண்டாக்கிய பெயரே இது.
Finch = சிட்டு (தேன்சிட்ட -Nectarinia); Crossbill= குறுச்சொண் டான்; பல்வேறு பறவையினங்க ளை நுணுக்கமாய ்த் துல்லியமாக அழைக்க முற்பட்டால ் Songbird= பாடும்பறவை , Passerine = ஊர்க்குருவ ி, Partridge= பகண்டை/ சிவல், Fowl = கோழி, மஞ்ஞை, Pheasant = போத்து, Lark = மேகப்புள், முகிலி என்றாலும் இதன் வெவ்வேறு வகைகளைப் பாடி என்ற பின்னொட்டு டன் அழைக்கலாம் ) ; Oriole = பொன்னி, மாங்குயில் எனலாம்.
Firefly = மின்மினி
Flamingo = பூநாரை; White stork = வக்கா
Flea = உண்ணி, தெள்ளுப்பூ ச்சி
Fly = ஈ, இலையான் (ஈழ. வழக்கு)
Flying fox = மாவவ்வால், துரிஞ்சில்
Fox = குள்ளநரி
Frog = தவளை, தவக்கை (கொச்சை வழக்கு) ; Toad = தேரை, Toadpole = தலைப்பிரட் டை; tree frog = மர நுணல், Anura = பச்சைதவளை
Galagos = நக்கப்பி
Gar = கோலா மீன்
Gazelle = நல்லி, உழை; Kudu = வரிமான்
Gecko = கரட்டை
Gerbil = பாலையாகு (ஆகு = எலி)
Gibbon = அலப்பி
Giraffe = ஒட்டை, ஒட்டைச்சிவ ிங்கி
Gnat = கொதுகு
Gnu = காட்டெருமை
Goat = ஆடு, வெள்ளாடு, Sheep = செம்மறி, Boer goat = பண்ணையாடு , Oberhasli = மேட்டுநில ஆடு , Angora = துருக்கி ஆடு, Pygmy = பள்ளை, Nigerian dwarf = நக்கரகக் பள்ளை (பள்ளை என்றால் குள்ள ஆடு தான் பொருள்; நக்கரகம்=Niger ia , நக்கவாரம் =Niccobar )
Golden Lion tamarin = பொன்பட்டு முசு

karki
12-30-2007, 01:10 PM
Goldfinch = பொன்பாடி
Goose = வாத்து; Greylag goose = சாம்பல் வாத்து
Gorilla = வாலிலி, வல்லுகம்
Groundhog, marmot = நில அணில்
Grasshopper = வெட்டுக்கி ளி; Locust = இலைக்கின்ன ி
Grouse = பூழான்
Grison = மேலைக் கீரி
Guanaco = ஒட்டைமான்
Guinea pig = சோதனைப் பன்றி, வாரிப்பன்ற ி
Gull = கடல் ஆலா, கடற்புள்
Hamster = பெட்டெலி
Hare = முயல்; Rabbit = குழிமுயல்
Hartebeest = கடுவாடு
Hawk = பாறு; Nighthawk = இராப் பாறு
Hedgehog = முள்ளம்பன் றி
Hoopoe = கொண்டலாத்த ி
Harrier = பூனைப்பருந ்து
Hen = கோழி ; Rooster = சேவல்; Chicken =குக்கன்
Heron = சோங்கு, நாரை
Herring = குத்தா, குற்றுவாய்
Hippopotamus = நீர்யானை
Hoatzin = வெடிற்போத் து
Hog = இருணி, காட்டுப்பன ்றி ; Pig = பன்றி , Swine = ஏனம் (கேழல் = வராகம்)
Hornet = கட்டுத்தேற ு, கடம்பை
Hornbill = இருவாயன்
Horse = குதிரை; Steer = போர்ப்புரவ ி, புரவி
Hound = வேட்டைநாய்
Hummingbird = இமிரிச்சிட ்டு, பூஞ்சிட்டு
Hyena = கழுதைப்புல ி,வங்கு, தரக்கு,கடு ால்
Ibex = வரையாடு
Iguana = தடி
Impala = கருங்காற் புல்வாய்
Indian courser = ஆட்காட்டி, ஆக்காண்டி (யாழ்.வழக்க )
Indian darter = நெடுங்கிளா த்தி
Indian roller = கொட்டுக்கி ளி
Jackrabbit = வெளிமுயல்
Jackal = நரி, மாய்
Jellyfish = நொளுமீன், சொளுமீன்
Kangaroo = பைம்மா; Wallaroo= செம்பைம்மா ; Wallaby = குறும்பைம் மா
Kestrel = கரைவணை
Kingfisher = மீன்கொத்தி , சிரால்
Kinkajou = தேன்கரடி
Kite = கலுழன் (கருடன்)
Komodo dragon = உடும்பு
Ladybug = எழுபுள்ளிச ் செவ்வண்டு, ஆகூழ்வண்டு ; Miller moth = தட்டாரப் பூச்சி
Langur = முசு ; Black & white colobus = கோலாங்கூலம ்
Leech = அட்டை
Lemming = துருவாகு
Lemur = இலமூர் ; Katta = ஈரமூக்குக் குரங்கு
Leopard = அரிசிறுத்த ை
Limpet = ஒட்டுவாய் ; Common periwinkle =அலசி , Whelk = வளைகொம்பு நத்தை
Lion = கோளரி,அரிம , மடங்கல் (Leo= அரி)
Linnet = அரத்தி
Lizard = பல்லி; Skink= சில்லான் ; Anole = கோட்டொந்தி , Frill-necked lizard = அரிக்கோம்ப ி
Llama = இலாமா, நெட்டணாரி
Lobster = நளிர், களிறால் ; Prawn = இறால்; Shrimp = சென்னாக்கு னி; Lamprey = அரிறால், Crayfish = ஆற்றுறால், Scampi = கூனி , spiny lobster = செஞ்சேரா
Lovebirds = நேமிப்புட் கள், சக்கரவாகம்
Louse = பேன்
Lycaon = நிறவாயன்
Lynx = சிவிங்கி, வேட்டைச் சிறுத்தை; செவியில் சிறு மாறுபாடு கொண்ட பெரு வேட்டைப் பூனைவகை.
Lyre bird = யாழ்வாலி
Macaw = ஐவண்ணக் கிளி
Mackerel = அயலை
Macropod = மாகப்பதமி
Magpie = செவ்வலகி
Mallard = காட்டுத்தா ரா
Mammoth = மாமதம்
Manatee = கடலா
Marten = புதர்வாலி, மரமா

karki
12-30-2007, 01:17 PM
Meerkat = வாரிக்கொத் தி
Mink = செந்நாவி
Minnow = குறுணி
Minivet = பூஞ்சிட்டு ; Scarlet minivet = கொங்காரப் பூஞ்சிட்டு
Mole = துன்னெலி
Mongoose = மூங்கா; கீரி என்றும் சொல்வார்கள ் அதை நாம் ஏனைய weasel வகைக்கு ஒதுக்கிவிட லாம். மூங்கா என்ற தமிழ்ச் சொல், மேற்கே ஆங்கிலத்தி ல் mongoose ஆகவும், செருமானியத ்தில் Mungo எனத் திரிந்தும் இருக்கும்.
Monkey = குரங்கு; Macaque= திண்குறுவா லி; Squirrel monkey = அணிற் குரங்கு, Howler monkey = ஊளைக்குரங் கு, Spider monkey = சிலந்தி முசு; Proboscis monkey = மூக்குக் குரங்கு
Moorhen = களர்கோழி, மம்மற்கோழி/ கருக்கற்கோ ழி
Mosquito = கொசு = பகலில் வழங்குவது, கடியாதது; உலங்கு = இரவில் கடிப்பது; அதிற் சிறியது நுளம்பு
Moth = விட்டில்
Mouse = எலி, மூசி
Moufflon = வளைகொம்பாட ு
Mule = அத்திரி
Mullet = மடவை
Munia = சில்லை
Musk deer = காசறை மான், நரந்தம்
Muskox = காசறைப் பகடு
Muskrat, Musquash = மூஞ்சுறு
Mussel = ஏரல்
Nematode = உருபடை
Newt = ஈர்மிடைப் பல்லி, இருவாழ்பல் லி
Nightingale = இராப்பாடி
Numbat = வரியழுங்கு
Nutcracker = நெற்றுடைப் பான்
Octopus = எண்காலி
Okapi = வரிச்சிவிங ்கி
Oppossum = அதளேனம்
Openbill = கருநாரை
Orangutan = காட்டுமன்
Osprey = வராலடிப்பா ன்
Ostrich = தீக்கோழி, நெருப்புக் கோழி
Otter = எகினம், மீன்நாய்
Oryx = நேர்கொம்பு மரை
Owl = ஆந்தை ; Horned owl = கூகை, கோட்டான்
Oyster = மட்டி ; Clam = மாவாரிச் சுண்டி (சமுத்திரச சுண்டி) ; cockle = இப்பி , Great scallop = பெரிய ஓலைக்கண்ணி , razor clam = அரச் சுண்டி, scallop =ஓலைக்கண்ண , ஈரதரி ; blue mussel = நீல ஏரல்
Paca = புள்ளிமுயல ்
Panda = மூங்கிற் கரடி, விண்டுகம் (விண்டு = மூங்கில்)
Pangolin = அழுங்கு
Parrot = கிளி ; Rose-ringed Parakeet = கீரம் ; Parakeet = தத்தை ; Lorikeet = சுகை, கன்னிக்கிள ி
Partridge = இடல், பகண்டை, சிவல், Pavian = உதடி
Peafowl = மயில்
Pecarry = உந்திப்பன் றி
Pelican = நாரை, குழைக்கிடா , நரையான்
Penguin = பனிப்பாடி
Pheasant = செம் போத்து
Phoenix = பென்னு
Pica = கீச்சி, வீளைமுயல்
Pipit = நெட்டைக்கா லி
Platypus = நீரெலி, தட்டைப்பதம ி
Plovers = மழைக்குருவ ி
Polar bear = துருவக் கரடி
Polecat = திரிபூனை, மண்டலி
Pony = மட்டக் குதிரை
Porcupine = முள்ளம்பன் றி, எய்
Porpoise = நீர்ப்பன்ற ி, வாகிட்டி
Possum = மதலைப்பை வெருவி
Praire Dog = வெளில் நாய்
Praying mantis = கும்பிடு பூச்சி
Pronghorn = கருங்கொம்ப ன்
Python = பாந்தள்
Puffin = கடற்கிளி, முங்கி
Quail = நிலங்கு ; Rain quail = காடை
Quetzal = பிறங்கிறகி
Quince =மஞ்சட் பேரி
Rabbit = குழிமுயல்
Raccoon = நாவி, வெருகு

Kathalan
12-30-2007, 03:37 PM
Nandri Karki Avargale, ThangaLin Pani Sirakka En vazhLthukkaL :)

karki
12-30-2007, 04:59 PM
Rail = பொய்யாப்பு ள், சலாங்கு
Raptor = பிண்டாரி
Rat = பெருச்சாளி
Rattle snake = சாரைப்பாம் பு
Red Panda, Lesser Panda = ஒளிர்பூனை
Reindeer, caribou = பனிமான், கொம்புமான்
Rhea, emu = நந்து; மூதிலர்(Aborigin es) பயன்படுத்த ும் சொல்
Rhinoceros = காண்டாமா
Robin = செந்தலையன் , காரி
Sable = கருங்கீரி
Saber-toothed tiger = கத்திப்பற் புலி (அழிந்து போய்விட்ட இனம்!)
Salamander = வேம்பா
Salmon = வஞ்சனம்
Scorpion = தேள் ; பெரிய தேள் நட்டுவாய்க ்காலி
Sea horse = கடற் குதிரை
Sealion = கடலரி; Seal = முகர், மொகர்
Sea urchin = பைசல்
Secretary bird = செகுதையர் பறவை
Serpent = அரவம்
Serval = புலிப்பூனை
Shark = சுறா
Sheep = செம்மறி, பள்ளை
Shell fish = கிளிஞ்சில்
Shrew = சுண்டெலி ; Tree shrew = மூங்கில் அணத்தான்
Shrike = கீச்சான் குருவி
Silkworm = பட்டுப்புழ ு
Silverfish = பாச்சை
Siskin = பைது (பை = பச்சை)
Skunk = பிசிறி
Skylark = வானம்பாடி
Slug = புல்லட்டை
Sloth = தேவாங்கு
Snail = நத்தை
Snake = பாம்பு
Snipe = உள்ளான், உள்ளல்; Snippets = சிற்றுள்ளா ன்
Solenodon = துவாளிப்பல ்லன்
Sparrow = சிட்டுக்கு ருவி
Spider = சிலந்தி
Spoonbill = சப்பைச்சொண ்டன்
Springbok= இவரிமா, எவ்வி
Squid = சாக்குக் கணவாய்
Squirrel = அணில்
Stag = கலை, இரலை
Star fish = உடுமீன்
Starling = குரகம், சூறைக்குரு வி
Stork = கொக்கு
Sturgeon = கோழிமீன்
Sunbird = தேன்குடிச் சான்
Swallow = தூக்கணாங் குருவி
Swan = ஓதிமம்
Swift = உழவாரன்
Sword fish = கொம்புச் சுறா, மகர மீன்
Tanrec = முள்ளெலி
Tapir = தும்பிப்பன ்றி, மதகப்பன்றி
Teal = கிளுவை, சிறகி
Termite = சிதல்
Tern= ஆற்றுக்குர ுவி
Thornback ray = திருக்கை
Thrush = பொன்னாந்தட ்டான், பூக்குருவி
Thylacine = பைநரி, தாசுமேனிய நரி
Tick = உண்ணி
Tope = படங்கா
Topi = உலவைப் புல்வாய்
Tortoise = கடலாமை ; Turtle = ஆமை
Toucan = பழச்சொண்டா ன்
Treepie = வாலி
Turkey = வான்கோழி
Uakari = சேமுகி (சே = சிவப்பு செம்முகங கொண்ட குரங்கு)
Umbrellabird = குடைப்பறவை
Vampire = சோகு
Vermin = கீடம், உலண்டு
Vole = வயலெலி
Vulture = உவணம், பிணந்தின்ன ி
Viper = விரியன் (பாம்பு)
Wagtail = வாலாட்டி
Warbler = வயலான், நுணங்கி, கதிர்க்குர ுவி
Walrus = கடல் யானை ; Elephant seal = யானை முகர்
Warthog = கொம்பேனம்
Wasp = குளவி
Waterdog = நீர்நாய்
Weasel = கீரி
Whale = திமிங்கலம் ; Blue whale = நீலத்திமிங ்கலம் , Pott whale = குடத்திமிங ்கலம், Narwhal = பணைத்திமிங ்கலம் (பணை = கொம்பு, மருப்பு)
Wild boar = காட்டுப் பன்றி; Pot-bellied pig = சால்வயிறான ், தாழிவயிற்ற ுப் பன்றி
Widgeon = காட்டு வாத்து
Wildfowl = காட்டுமஞ்ஞ ை
Wisent = மேலைப் பாறல்
Wolf = ஓநாய், கோநாய்
Wombat = இலையேனம், குராற்பன்ற ி
Woodcock = காட்டுப்பு ள்
Woodpecker = மரங்கொத்தி
Worm = புழு
Wren = குகைவாழி
X- ray fish = X- கதிர் மீன், கிளர் மீன் (glass fish)
Yak = கவரிமா, பவரி, சாமரம்
Zebra = வரிக்குதிர ை
Zorilla = வரிப்பூனை

yasodha
01-01-2008, 06:52 AM
மிக்க நன்றி கார்கி அவர்களே....
தாங்களுக்க ு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்துக ்கள்....:sm08:

karki
01-04-2008, 10:04 PM
உங்களுக்கு ம் புத்தாண்டு வாழ்த்துக் கள் யசோதா!

karki
01-04-2008, 10:17 PM
விலங்கின் ஆடூஉ (ஆண்)

கடா,பகடு : எருமை, ஆடு, மாடு
தகர் : செம்மறியாட ு, யாளி, சுறா
கடுவன் : அலவம் (felines), குரங்கு, முயல்
மா : குதிரை
அப்பர்: ஆடு, குரங்கு
ஒருத்தல் : கரடி, புல்வாய், பன்றி, யானை, புலி, மரை
போத்து : ஆ, புலி, மரை
கலை (buck) : மான், முசு
களிறு : நரி, பன்றி
சே : பெற்றம், புல்வாய்
ஓரி : நரி, இலெமூர்
ஏறு : எருமை, ஆன், கவரிமா, சங்கு, மான், மரை, உழை, புல்வாய், சுறா
வரடம் (gander) = வாத்து
சுரும்பு (drone) : தேனி
சேவு, சேக்கு : c-ல் தொடங்கும் சொல்.பல சொற்கள் கெட்ட சொற்கள், வசவுச் சொற்கள் ஆகிவிட்டதா ல், இங்கு பிழிதை(filter) அச் சொல்லைத் தணிக்கை செய்துவிட் டது.
மோத்தை, கிடா (ram) : ஆடு
வல்லுளி : boar
இரலை : stag
நாம்பன்(steer), எருது (bullock) = விதையடிக்க ப்பட்ட மாடு, காளை.
பிடிசாவல் = capon = விதையடிக்க ப்பட்ட சேவு.
உதள் = wether = விதையடிக்க ப்பட்ட ஆடு, செம்மறி.
சலகு = gelding = விதையடிக்க ப்பட்ட குதிரை.


விலங்கின் மகடூஉ (பெண்)

பிடி: ஒட்டகம், யானை, கவரிமா
பிணை(doe) : புல்வாய் , உழை
பேடை, பெடை, பெட்டை : கழுதை, அரிமா, மரை
மந்தி : முசு, ஊகம், குரங்கு
பிணா, பிணவு : பல விலங்குகளி ன் பெண் பெயராக இச்சொல்லைப ் பயனாக்க்லா ம்.
ஆ : பெற்றம், மரை, எருமை
நாகு : எருது, மரை, பெற்றம், நத்தை மற்றும் நீர்வாழிகள ்
பாட்டி : நரி, பன்றி, ஓநாய்
ஓரி = இலெமூர், நரி
மோழல் (sow) : பன்றி
முடுவல் (b... இங்கும் பிழிதை) : நாய்
( மறைச்சி என்ற பெயரும் உண்டு, ஆனால் அது எல்லாப் புள்ளிவிழு ந்த விலங்குகளி ன் பெண்ணினத்த ையுங் குறிக்கப் பயனாகுவது.)
கன்னிக்கோழ ி : pullet
மூடு ( ewe) : ஆடு
தூவி ( fin, pen என்ற இரு பொருளிலும் ஆளப்படும்) : ஓதிமம் (அன்னம்)
வாத்து (goose) : வாத்து (ஆணின் பெயர் வரடம்)
அரசி, அரசித்தேனீ : தேனீ
அளகு : மயில் மற்றும் fowl வகையினதன் பெண்

கிடாரி (heifer) = கன்றீனா இளம் ஆன்.
ஈற்றா = கன்றீன்ற ஆன்.
மை = மலட்டெருமை

மற்றவற்றை ஆண்/பெண் என்ற முன்னொட்டு டன் குறிப்பிடல ாம்!


* யாளி, இது பழைய பெருந் தமிழகத்தில ் வாழ்ந்ததாக க் கருதப்படும ் யானைத் துதிக்கையு ம் அரி முகமுங் கொண்ட மூதியல்(mytholog ical) விலங்கு.

karki
01-04-2008, 10:42 PM
இளமை

குழவி, சேய் = மாந்தன்
குட்டி = ஆடு, பூனை, நாய், கழுதை, குதிரை, கரடி
கன்று = மாடு, எருமை, முதலை, ஒட்டகம்
கயந்தலை, முனி, களவம் = ஒட்டகம், யானை
பிள்ளை= கீரி, வெருகு, நாவி, அணில்
குருளை= புலி, அரிமா, ஓநாய்
கரு= காசறை
குஞ்சு = தேள்
பார்ப்பு = ஆமை
பார்ப்பு, குஞ்சு = நண்டு
குஞ்சு = மீன்
கசளி = கெண்டை
பிள்ளை = கொக்கு
பார்ப்பு = வண்டு, புழு
செள் = பேன்
மான்குட்டி நவ்வி (fawn) என்றழைக்கப ்படும்!
பறழ் = முயல்
பறழ் என்னும் பெயர் மரவாழ் விலங்கி ளமைகள் அனைத்தையும ் அழைக்கப் பயனாகிறது.
கீரி வகை விலங்கினங் களில் இளமைகளைப் பிள்ளை எனலாம்.
அழுங்கின் இளமை மறி எனப்படும்.
குழலி, குட்டி எனக் குரங்கு, முசு போன்ற மரவாழிகளின ் இளமைகளை அழைக்கலாம் .

நன்னி, குன்னி, பொடி, கருந்து, நாகு போன்றனவும் சில விலங்குகளி ன் இளமைப் பெயர்கள்...

முதிர்ந்த விலங்குகள் கிழடு என அழைக்கப் படும் (மாடு விதப்பாய் மூரி எனப் படும்).

உதவி: மரபியல், தொல்காப்பி யம்.

vennpuraa
01-05-2008, 05:29 AM
Bat = வவ்வால்


வெளவால்

இப்படித்தா ன் தமிழில் எழுதுவதை பார்த்துள் ளேன்


எனது இனிய புத்தாண்டு நல்வாழ்துக ்கள் கார்கி :)

karki
01-06-2008, 09:51 PM
அவ்வுதல், கவ்வுதல், வவ்வுதல் எல்லாம் பற்றுதலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள். வவ்வால் கோட்டிற் (மரக்கிழை) பற்றி தொங்கி நிற்கும் விலங்கு.
அவ்வு, கவ்வு, வவ்வு தான் அதன் முதன் நிலை. அதன் செந்தரப்பட ுத்தப் பட்ட நிலை தன் ஒளகாரம் போட்டு ஔ, வௌ, கௌ என்றெல்லாம ் எழுதுவது. இந்நிலை தமிழ்ச்சொற ்களை எளிதாக வடசொல்லாக முத்திரை குத்த உதவும் நிலை. ஔகாரச் சொற்களைப் பெரும்பாலு ந் தவிர்த்து 'வ்' போட்டே எழுதி வருகிறேன்.
அதையே மற்றோருக்க ும் பரிந்துரைக ்க விரும்புகி றேன்.

உங்களுக்கு ம் வாழ்த்துக் கள்!

-கார்க்கி

karki
01-07-2008, 10:54 PM
கத்தல் வினைகள்

அலப்புதல் = gibber (கப்பி)
உறுமுதல் = growl (கரடி, புலி போன்றவை)
இமிர்தல் = hum (பறவைகள், வண்டுகள், இமிரி) ; தும்பியூட் டுதல், கிணுகிணுத் தல் = buzz (பூச்சி, வண்டுகள்)
கீச்சிடுதல ் = chirp ; tweet = கீசுதல்
வீளையிடல் = whistle (வீளைமுயல், கரும்பறவைக ள்)
உக்கரித்தல ் = bellow (புல்லம்)
கதறுதல் = bleat (கன்று, செம்மறி,ஆட , ஒட்டைச்சிவ ிங்கி)
மிலைத்தல் = low ( மாடு)
முற்குதல் = cluck (கோழி)
கரைதல் = crow, cry (காகம்)
பறையடித்தல ் = croak (காலோலம்)
கத்துதல் = caw
குயிலுதல் = cuckoo (குயில்); coo = கூவுதல் (புறா, சேவல்)
கணாரிடல் = bell (மான்)
குரைத்தல் = bark ; whine = குணுகுணுத் தல்
சொடுக்குதல ் = click (ஓங்கில்)
கத்துதல், இடித்தல் = bray (கழுதை)
ஓலமிடல் = scream (பாறு, வல்லூறு)
காளம்பிடித ்தல், குமுறுதல் = trumpet; பிளிறல் = blare
உருதம்பண்ண ுதல் = chant (கழுகு)
கீர்தல் = dook (பொற்றி, கீரி)
சேக்கரித்த ல் = cackle (வாத்து)
சில்லிடல் , சில்லொலியி டல் = squeak
கனைத்தல் = neigh (குதிரை)
சள்ளிடுதல் = howl , yell
கொக்கரித்த ல் = chuckle (அரத்தி)
உரறுதல் = roar (அரிமா)
அரற்றுதல் = chatter
சில்லிடுதல ், வீறிடல், கிறீச்சிடல ், இளங்குரல் = squeal (எலி, முயல்)
செறுமுதல் = grunt (பன்றி)
சீறுதல் = hiss (பாம்பு)
மழுக்குதல் = gobble
பாடுதல் = sing (பாடி)
கலித்தல் = call
இரற்றுதல் = shriek
கூகை குழறுதல், அலறல்= hoot (கூகை, கோட்டான்)
கிளைகூட்டு தல், அழையுறுத்த ல் = screech (ஆந்தை)
அகவுதல் = utter ; ஆலல் = screech (மயில்)
முரல்தல், நுணுங்குதல ் = warble
இளித்தல் = laugh
பேசுதல், பரல்தல் = talk
குய்யிடல் (மான்)
குறுகுறுத் தல் (புறா)
குறாவுதல்= மியாவென அல்ல பிள்ளை போல் கத்துவது (பூனை)

vasan
01-07-2008, 11:33 PM
கத்தல்வினை கள்

எழுதின எல்லாமே பயனுள்ளதுத ான் என்றாலும், :think:
இந்த கத்தல் வினைகள் கீதம் தளத்தில் சண்டை போட மிகவும் உதவியாக இருக்கும். :wink: :sm12:

மிக்க நன்றி கார்க்கி. :sm08: :sm08:

வாசன் :)

karki
01-17-2008, 07:53 PM
இலை வகைகள்
______________________________ ______________________________ ______________________
தமிழர் இலைகளை அதன் வடிவிற்கேற ்ப பிரித்திரு ப்பர்:
வாழை, மா, பலா = இலை
நெல், கேழ்வரகு, வெங்காயம் = தாள்
தென்னை, பனை = ஓலை
சோளம், கரும்பு = தோகை

- பாவாணரின் , ஒப்பியன் மொழிநூல், மடலம் 1
______________________________ ______________________________ ______________________


இலை விளிம்பு = Leave Margin

அரியப்பட்ட து = serrate
இருபற்கொண் டது = doubly toothed
குலைவட்டம் = crenate
இமைவடிவானத ு = ciliate
முழுமையானத ு = entire
வள்ளடிவடிவ ானது , சோணைவடிவான து = lobate

கூட்டிலைகள ்- Compound Leaves

முத்தாளி = trifoliate
அங்கையுருவ ி = palmate
தூவியுருவா னது, சிறகையுருவ ானது = pinnatifid
வியச் சிறகையுருவ ானது, விடிச் சிறகையுருவ ானது (வியம், விடி என்பவை oddக்கு ஒக்கவலமான தமிழச் சொற்களென எண்ணுகிறேன ்!), வியச் சிறகையுருவ ி= odd pinnate
சோடித் தூவியுருவி = paripinnate
எளிமையான இலைகள் = Simple Leaves
வட்டம் = orbiculate
சிறுநீரக வடிவானது = reniform
இழுமியது = linear
கேடய உருவினது = peltate
ஈட்டிவடிவி னது = hastate
முட்டையுரு வினது, இச்சி = oval
குலைக்கா யுருவினது = cordate
சட்டுவவடிவ ினது = spatulate
வேல்வடிவின து = lanceolateStructure of a plant = செடியின் அமைப்பு

Root system = வேர்ச் சிட்டம்/ கட்டகம் ; Root hairs = வேர்த் தூவி; Root cap = வேர் மூடி ; Radicle = முளைவேர்

Primary root = முதன்மை வேர்
Collar = கழுத்து, எருத்து
Secondary root = பக்கவேர்
Cotyledon = விதையிலை
Stem = தண்டு
Leaf node = இலைக் கணு
Inter node = இடைக் கணு
Leaf = இலை
Shoot = கொழுந்து, குருத்து
Axillary bud = அக்குட் புதல் ; புதல் = bud
Terminal bud = அரும்பு
Flower bud = மொக்குள்
Flower = பூ

karki
01-17-2008, 08:16 PM
______________________________ ______________________________ ___________

பூவானது தோன்றுகையி ல் அரும்பு என்றும் பேரரும்பான போது போது
என்றும், மலர்ந்தபின ் மலர் என்றும், விழுந்தபின ் வீ என்றும், வாடிய பின் செம்மல் என்றும் அழைக்கப்பட ும்.
அரும்பு அதனதன் அளவுக்குத் தக்கபடி அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் எனஅழைக்கப் படும்.

- பாவாணரின் , ஒப்பியன் மொழிநூல், மடலம் 1

______________________________ ______________________________ ___________


Structure of a Tree = மரத்தின் அமைப்பு


Root-hair zone = வேர்முடி வளைவம்
Trunk = அடிமரம்
Taproot = ஆணிவேர்
Bole = கவை
Limb = கொப்பு
Branch = கிளை
Twig = இணுக்கு
Top = உச்சி


Pith = வத்தை, சோற்றி
Phloem = படலப் பட்டை
Bark = புறப் பட்டை
Cambium = மாறுபட்டை
Sapwood = மரச்சாறு
Heartwood = வயிரம், மரவயிரம்
Annual ring = ஆண்டு வளையம்
Medullary ray = மூளைக் கதிர்
Stump = முருத்து, தூறு, முண்டம்
______________________________ ______________________________ ______
அடிமரத்தின ின்று பிரிவது கவை முதலில் அடி/ அடிமரம் அதனிலிருந் து பிரிவது கவை அதன் மேல் வருவது கொம்பு அதிலிருந்த ு கிளைப்பது கிளை, கிளையிலிரு ந்து உண்டாவது சினை, சினையிலிரு ந்து பிரிவது போத்து, போத்தின் அடுத்தது குச்சு, குச்சின் பிரிவு இணுக்கு எனத் தமிழர் பகுத்து வைத்திருந் தனர்.
______________________________ ______________________________ ______


மரக்கறி, காய்கறி = vegetable
நிலத்திணை, செடி = plant


இலைகள் = leaves
தண்டுகள் = stems
வேர்கள் = roots
பூக்கள் = flowers
புதலியற் பழங்கள் = botanical fruits
பூடுகள் = bulbs
விதைகள் = seeds


தோட்டச்செழ ிக்கை = horticulture
நெட்டாயுளி = perennial
ஈராட்டைவாழ ி = biennial
மூலிகையிய = herbaceous


மரம் = woody tree
செடி= plant
புதர் = shrub
பற்றை = bush
காமரி, வீரை = vine
ஊர்கொடி = creeper
இவர்கொடி = climber
மூலிகை = herb
பூசணம் = fungi
கொந்தாழை = algae
பாசி = moss
கொனைப்பொறை , கொனைதாங்கி = Conifer
அத்தாளி, இறை = fern
தழுதணை, கற்பாசி = lichen

karki
01-17-2008, 08:36 PM
சமையற் காய்கறிகள்


பூண்டு மற்றும் தண்டுக் காய்கறிகள் (Bulb & Stem vegetables)


Asparagus = நீர்த்தண்ட ு
Celeriac = சிவரிக்கிழ ங்கு
Celery = சிவரி ; Parsley = மேலைமல்லி
Chive = பூண்டுத்தழ ை
Elephant Garlic = யானைப் பூடு (வெள்ளைப் பூண்டுடன் பெருந் தொடர்பேதும ் இல்லாத ஒற்றைப் பல்/ கிழங்கு கொண்ட பூடு வகையினது.)
Garlic = (வெள்ளைப்) பூண்டு, உள்ளி (யாழ். வழக்கு), வெள்ளைப் பூடு (குட.குண. ஈழ. வழக்கு)
Kohlrabi = கோசுக்கிழங ்கு (கோசு வட்டமாக இருப்பதைக் குறிக்கும் கோளம் என்ற சொல்லின் திரிவான நற்றமிழ்ச் சொல்லே!)
Leek = தண்டுத்தாள ்
Onion = வெங்காயம், ஈரவெங்காயம ் (ஈழ.வழக்கு); Bombay onion= வேம்பாய் வெங்காயம் (பம்பாய் வெங்காயம்; சிவப்பாக, சின்னதாக இருப்பது. பெரும்பாலு ம் சம்பலுக்கு ப் பயன் படுத்துவார ்கள்.)
Shallot = நீள்வெங்கா யம், வெங்காயக் கிழங்கு
Scallion, Spring onion = வெங்காயத்த ாள்
Wild leek = இராகூச்சிட ்டம் (செ.ப. அகரமுதலி காட்டுஞ் சொல்; இதன் முழுப்பொரு ள் அறியேன்!), காட்டுத் தண்டுத்தாள ்

புதலியற் பழங்கள் மற்றும் காய்கள் (Botanical fruits & Vegetables)


Artichoke = கொனைப்பூ
Armenian cucumber = பாம்பு வெள்ளரி
Eggplant, Aubergine = வழுதுணை ; Brinjal = கத்தரி (க்காய்)
Avocado = வெண்ணெய் பழம்
Bell pepper = குடை மிளகாய்
Bitter melon, bitter gourd = பாகற்காய் (இதில் தமிழக,ஈழப் பிறப்பான கடும்பச்சை ப் பாகலும் , அப்பால் கிழக்கு நாடுகளி லிருக்கும் மெழுகுப் பாகலும் வேறுபடுத்த ிப் பார்க்கப்ப ட வேண்டியவை!)
Bread fruit = கொட்டைப் பலாக்காய், ஈரப்பலாக்க ாய்
Calabash = சுரைக்காய்
Cape Gooseberry = முனை அருநெல்லி
Cayenne pepper = சிவப்பு மிளகாய்
Chayote = பைஞ் சுரைக்காய் , சவ்வுக்காய ்
Cauliflower = பூக்கோசு, காற்பூ (Calc>Caulk> Caul என இதன் வேர் கால் என்ற தமிழ்ச் சொல்லென்பத னை மொழியறிஞர் அருளி அவர்கள் வேரும் விரிவும் மடலம்.1-ல் நிறுவி யிருப்பார் கள்), பூ, கவிப்பூ
Chilli pepper = மிளகாய்
Cucumber = கக்கரிக்கா ய்
Luffa = பீர்க்கங்க ாய்
Malabar gourd = மலைவாரக் காய் (Malabar = மலைவாரம்)
Marrow = வசை, சுரை
Parwal = கொம்புப் புடலை
Perennial cucumber = கோவைக்காய்
Pumpkin = பூசணிக்காய ், பறங்கிக்கா ய் (வெளிநாட்ட னைக் குறிக்கும் Farangi என்ற பாரசிக அ. போர்த்துக் கேயச் சொல்லே தமிழில் பறங்கியாக..) ; Cantaloupe = தேன்முலாங் காய் ; Autumn squash = வறளைப் பூசணி; Muskmelon = சருக்கரைப் பூசணி
Pattypan melon = சட்டிப்பூச ணி
Snake gourd = புடலங்காய்
Tomato = தக்காளி
Sweet corn = மக்காச் சோளம், முத்துச் சோளம்; Baby corn = குட்டிச் சோளம்

karki
01-17-2008, 08:44 PM
Tomatillo = கிளித்தக்க ாளி (கிளி இங்கே சிறுமைப் பொருளில் ஆளப்பட்டுள ்ளது!)
Winter melon = நீர்ப் பூசணிக்காய ் , நீர்முலாம் பழம்
Courgette, Zucchini = வெள்ளரிக்க ாய்

இவற்றுடன் நம் தமிழக் காய்களான...:

கண்டகத்தரி = Solanum indicum
மணத்தக்காள ி = Solanum nilgris
மிதுக்கங்க ாய்

பிரண்டை
தூதுவளங்கா ய்
பழுபாகல்


இலைக்கணம், குளகு (Leafy & salad vegetables)

Salad = குளகு (பிசறு)
Amaranth = கழாய், கம்மை
Bok Choy = சீனக்கோசு
Brussel sprout = பிரசல் அரும்பு, பூக்கோசு நாறு, களைக்கோசு
Broccoli = அடகுமுகை
Cabbage = முட்டைக் கோசு ; White cabbage = வெண்கோசு
Celtuce = மல்லியடகு
Ceylon spinach = பசலைக்கீரை
Chicory = காசினிவிரை
Corn salad = வயற்கீரை, கூலக்கீரை
Cress = ஆளி
Curly kale = சுருளடகு
Dandelion = அரிப்பல்லி லை, அரிப்பல்
Endive = காப்பிரிக் கீரை ; Curly endive = சுருள்(காப பிரிக்) கீரை
Broad-leaved endive = பேரிலைக் காப்பிரிக் கீரை
Epazote = புழுவிதை (ச்செடி)
Baobab = பப்பரப்புள ி
Fiddlehead = ஓதுமத்தலை இறை
Fluted pumpkin = குழற்காய்
Green cabbage = பச்சைக்கோச ு
Ice plant = பனிச்செடி
Kai-lan = சீனக்களை
Kale = அடகு, களையடகு
Lettuce = பாற்கீரை/ பாற்கோசு, இலைக்கோசு
Lizard`s tail = பல்லிவாலி
Melokhia = அரையக்கீரை
Mustard = கடுகிலை
New Zealand Spinach =புதுக் கடலகக் கீரை, நியூசிலாந் துக் கீரை
Polk = செங்களைச் செடி
Radicchio = செங்காசினி விரை
Roselle = புளிச்சாங் கீரை
Soko = சேக்கொண்டை , நூற்பூ
Spinach = கீரை
Water cress = நீராளி
Water spinach = தொய்யில்
Winter purslane = மாரிப் பசளை

இவற்றுடன் நம் தமிழக் கீரைவகைகளா ன..:

பொன்னாங்கா ணி = alternanthera sessilis
முளைக்கீரை = amarantus blitum; ஆரை = amarantus tristis
அகத்தி = Sesbania grandiflora
வல்லாரை = Indian pennywort
குப்பைமேனி = acalypha indica
குறிஞ்சா = scammony swalow wort

karki
01-17-2008, 08:49 PM
கொட்டையுள் ள காய்கறிகள் (Podded vegetables, வறளி = Legume)

American groundnut = அரிக்கன் நிலக்கடலை [அமெரிக்காவ ை அரிக்கா, அரிக்கன் என்று திரித்தழைப ்பது தென்தமிழக, ஈழ வழக்கு (காட்டு: அரிக்கன் விளக்கு)]
Azuki bean = துவரவரை , துவரைக்காய ்
Beans = கழங்கு, அவரை
Black-eyed pea = கருக்கண்ணி க் கடலை
Chickpea = கொண்டைக்கட லை
Cowpea= தட்டைப் பயறு
Drumstick = முருங்கை, முருங்கைக் காய்
Fava bean = சிம்பை
French bean = கப்பல் அவரை
Guar , Cluster bean = கொத்தவரை
Horse gram = கொள்ளு
Hyacinth bean = மொச்சை
Lentil = பருப்பு (விதப்பாக எருமையூர்ப ் பருப்பு; எருமையூர் = மைசூர்)
Moth bean = துருக்கிப் பருப்பு
Mung bean, green gram = பயறு, பாசிப் பருப்பு ; Bean sprout= பயற்றுமுளை
Okra = வெண்டை, வெண்டிக்கா ய் (நம்மூர் பக்க ஆங்கிலத்தி ல் lady`s finger)
Pea = கடலை, பட்டாணி, உருளங் கடலை; Green pea =பச்சைக்கட ை
Peanut = கடலைக்காய்
Pigeon pea = ஆடகி, துவரை
Red bean, Kidney bean = செங்கடலை
Rice bean = அரிசியவரை
Runner bean = பயிற்றங்கா ய், பயற்றங்காய ்
Sabre bean = அவரைக்காய்
Soy bean = பசையவரை
Sword-bean = பாடவரங்காய ், பாடவரை
Winged bean = முறுக்கவரை

karki
01-17-2008, 08:55 PM
வேர்களும் கிழங்குகளு ம் (Root & tuberous vegetables)

Abaca = நார்வாழை
Acorn squash = மாரிப்பூசண ி
Arracacha = பொடிவள்ளிக ் கிழங்கு
Arrow root = கணைவேரி
Bamboo shoot = மூங்கில் முளை
Beetroot = அக்காரக் கிழங்கு, அரக்கணம்
Black cumin = பாங்குமம், கற்காணம், அத்தகம்
Broadleaf arrowhead = கணைத்தலை
Canna = பூவாழை
Carrot = குருக்கிழங ்கு
Cassava, Tapioca = மரவள்ளிக் கிழங்கு
Chinese artichoke = சீனக் கொனைப்பூ
Chowchow = பச்சல்
Daikon = வெண்மூலகம் , மாரிமூலகம்
Earthnut pea = நிலக்கடலை அவரை
Ensete = மொந்தன்வாழ ை
Ginger = இஞ்சி, இஞ்சிவேர்
Jerusalem artichoke = யெருசலேம் கொனைப்பூ, எல்வேர்
Parsnip = தூம்பி, வெண்கிழங்க ு, முள்ளங்கி
Pignut = பன்றிநெற்ற ு
Potato = உருளைக்கிழ ங்கு
Radish = செம்முளா
Taro = சேப்பங்கிழ ங்கு (Indian kales root)
Turnip = பைக்கோளி
Yacon = சீனிவேர்
Yam = சருக்கரைவள ்ளி, சக்கரைவள்ள ி, வள்ளிக் கிழங்கு ; Elephant yam= கரணைக் கிழங்கு, சட்டிக்கரண ை (கருணைக் கிழங்கு)


கடற் காய்கறிகள் ( Sea vegetables)

Hijiki = மான்வாற் புல்
Laver = செங்கொந்தா ழை
Caulerpa, Sea grape = கடற் புளி
Sea lettuce = கடற் பாற்கீரை
Nori = ஆழிக்களை (சிட்டை, தாள்); Algae = கொந்தாழை

karki
01-21-2008, 10:28 PM
பழங்கள்

______________________________ ______________________________ ____________
காயின் வெவ்வேறு நிலைகள் பூம்பிஞ்சு , திருகுபிஞ் சு, இளம்பிஞ்சு , பிஞ்சு, அரைக்காய், காய், முக்காற்கா ய், கன்னற்காய் அ. பழக்காய், கடுக்காய் அ. கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப் படுகின்றன.

இதில் மாம்பிஞ்சு வடு பலாப்பிஞ்ச ு மூசு, எட்பிஞ்சு கவ்வை, தென்னை, பனையின் பிஞ்சு குரும்பை , வாழை கச்சல், பாக்கு நூழாய், நெல் கருக்கல் என்றும் விதப்பித்த ுக் கூறப்படுகி ன்றன.

நுரு = அறுத்த தாளில் முளைக்கும் தளிர்
நொரு = முதிர்ந்த பயிரின் அடியில் முளைக்குந் தளிர், காய்ப்பு ஓய்ந்த பின் தோன்றும் பிஞ்சு

செவ்வையாய் ப் பழுக்காத பழங்கள்.வெ ்வேறு காரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை, அளியல், அழுகல், சொண்டு எனப் பலவகையாகக் கூறப்படுகி ன்றன.

பழத்தின் தோல்வகைகட் கு, அதனதன் வன்மை மென்மைக்கு த் தக்கபடி தொலி, தோல், தோடு,ஓடு, சிரட்டை எனப் பல பெயர்களுள.

விதைவகைக்க ு வித்து, விதை, மணி, காழ், முத்து, கொட்டை என வெவ்வேறு சொல்களுள.


- பாவாணர், ஒப்பியன் மொழிநூல் , மடலம் 2

______________________________ ______________________________ ______________________________ ______

Pome = சதைப்பழம்
Berry = பூலா, நெல்லி
False berry = நெல்லிப்போ லி
Drupe = கொட்டைப்பழ ம்
Aggregate fruit = திரட் பழம், திரளி

tropical = வேனிற்செடி , திருப்பமுட ங்கல்
sub-tropical = சார் வேனிற்செடி , சார்- திருப்பமுட ங்கல்
exotic = புறத்தேய


Apple = ஆப்பிள், அரத்தி
Medlar = நொக்கொட்டா
Pear = பேரிக்காய் , நீரிக்காய்
Quince = மேலைமாதுளை , பேதானா
Rowan = கொத்திரத்த ை

Apricot = தேன்பழம்
Cherry = சேலா, செங்கொவ்வி
Greengage = பச்சைத்தூற வம்
Peach = வம்மி, நெல்லானி ; Nectarine = அமுதவம்மி, அமிழ்தம் பழம்
Plum = தூறவம், தெருணை

Blackberry = கரும்பூலா, கருநெல்லி
Cloudberry = குயின்பூலா , முகில்நெல் லி
Gooseberry = அருநெல்லி
Raspberry = செங்கரு நெல்லி
Thimbleberry = தீதாள் பூலா
Wineberry = நறற்பூலா
Bearberry = கரடிப்பூலா
Billberry = சொண்டான்பூ லா
Blueberry = நீலப்பூலா
Crowberry = காக்கைப்பூ லா
Wolfberry = நரிப்பூலா

Grape = கொடிமுந்தி ரி
Beach plum = புங்கைப் பழம்

______________________________ ______________________________ ______________
குரும்பை, இளநீர், தேங்காய், கொப்பரை நால்வகைப்ப ட்டது
______________________________ ______________________________ ______________

karki
01-21-2008, 10:37 PM
Cardon = தாளிப்பழம்
Dragonfruit = செம்பலவு , சீனப் பலவு
Melon = முலாம்பழம் , இன்கும்மட் டி, கும்மட்டி
Strawberry = நிலப்பூலா, நிலநெல்லி
Date = ஈந்து, ஈச்சம்பழம்
Fig = அத்திப்பழம ்
Jujube = இலந்தை, செவினி
Olive = இடலை
Pomegranate = மாதுளம்பழம ், மிதுக்கம் பழம்
Sycamore fig = வெண்ணாங்கு அத்தி

Citron = சீதளை, மாதுளங்கம் , நாரத்தங்கா ய்
Clementine = கொழிஞ்சி, கிழிஞ்சி
Grapefruit = முந்திரி நாரத்தை
Kiwi = பசலி
Kumquat = பொன்னாரந்த ை
Lemon = எலுமிச்சை
Lime = குருந்து, மஞ்சைக்காய ், தேசிக்காய்
Limetta = சக்கரைக் குருந்து, சக்கரை மஞ்சை, எற்பழம்
Mandarin = தேன்ரோடை, நாரத்தம் பழம்
Orange = தோடை, தோடம்பழம்
Seville / Bitter orange = கிச்சிலி, சாற்றுக் கனி (சாத்துக்க டி)
Tangerine = தஞ்சிரத்தை
Pomelo = பொம்மாசு
Pomplemous(அதாங்க. . பம்பளிமாசு ) = பேரின்னரந் தம்

Ackee = வெண்சுதைப் பழம்
Avocado = வெண்ணெய்ப் பழம்
Bael = கூவிரம்
Banana = நேந்திரம்ப ழம் ; Plantain = வாழைப்பழம்
Betel Nut, Arica nut = அடைக்காய், பாக்கு
Bilimbi = புலிமா, புளிச்சைக் காய்
Breadfruit = ஆயினி, ஈரப்பலா
Burmese grape = கடார முந்திரி
Cashew = முந்திரிப் பழம்
Carambola, Star fruit = தமரத்தம் பழம், உடுப்பழம்
Carob = தட்டைப்புள ி
Coconut = தேங்காய் (குரும்பை, இளநீர், தேங்காய், கொப்பரை என நால்வகைப் பட்டது)
Coffee = குளம்பிப் பழம்
Currant = களா
Custard apple = (சீதாப் பழம்) நளிரம், செதிற்பழம் (ஈழத்தில் அன்னமின்னா/ அன்னமுன்னா எனப்படும், இது போர்த்துக் கேயரால் அறிமுகப் படுத்தப் பட்ட சொல்லாக இருக்க வேண்டும்.)
Durian = தூரியன், வெடிற்பலா ( வெடில் = நாற்றம்; பலா வடிவிலுள்ள நாற்றமடிக் கும் மலையகப் பழம்)
Guava = கொய்யா, காழ்ப்பழம்
Indian almond = வாதுமை
Jackfruit = பலாப்பழம்
Jambul, rose-apple = நாவற் பழம்
Longan = பூவம் பழம்
Lychee = செந்தோட்டு ப் பழம், புற்றுப்பூ வம், விளச்சி
Mangusteen = வாற்றூமா (வால்= வெள்ளை; தூ = flesh)
Melon pear = முலாம்பேரி , இன்கும்பேர ி
Pawpaw = விதைவாழை, கச்சான்மா
Papaya = பப்பாளி, செங்கொழும் பை
Passion fruit = பாற் பழம்
Persimmon = செவ்விருப் பை ; Date plum = பட்டிருப்ப ை ; Sapote = சாம்பரப் பழம் ; Sapodilla = மேலையிருப் பை
Physalis = முனையருநெல ்லி
Pine apple = செந்தாழை
Pulasan = செம்பூவம்
Tamarind = புளியம் பழம்
Rambutan = குந்தளப் பழம், மயிர் முளைச்சான் பழம் (மலைய.வழக்க )
Watermelon = வத்தகைப் பழம்
Woodapple = விளாம்பழம்

இவற்றுடன் தமிழப் பழங்களான:

பாலைப் பழம்
மகிழம் பழம்
நுங்கு
நெல்லி

vasan
01-21-2008, 11:43 PM
இந்த ஞாயிறு.. உள்ளூர் உழவர் சந்தைக்கு சென்று, பேரிக்காய் , நீலப்புலா, மற்றும் சேலா வாங்கி வந்தேன்.. :wink:

(நம்ம மருத்துவர் பட்டாம்ஸ் அடிக்கடி சொல்லுவாங் க.. ஞாபக மறதிக்கு நீலப்புலா சாப்பிடுங் கன்னு.. அதான்.. மறக்காம வாங்கி வந்தேன்.. :ee: )

கூடவே, வேணூமா வேணாமான்னு யோசித்து யோசித்து, இரண்டு செவ்விலுப் பை, அப்புறம் இரண்டு குந்தளப் பழமும் வாங்கி வந்தேன்.. :wink: :)

குந்தளப் பழம் ஏறக்குறைய.. நம்ம நுங்கு மாதிரியே சுவை.. :)

கொஞ்சம் நுங்கு.. கொஞ்சம் lychee கலந்த கலவை தான் குந்தளப் பழம்.. :wink:

நன்றி, கார்க்கி.. இந்த தாளின் சுவை கூடிக்கொண் டே போகிறது.. :sm08:

v-

பி.கு. lychee க்கு தமிழில் என்ன பெயர்? :)

karki
01-23-2008, 06:34 PM
வணக்கம் வாசன்,
செந்தோட்டு ப் பழம் குறித் திருக்கிறே ன். நுங்கு நமக்கே நமக்கென உள்ள விதப்பான பழமாச்சே. விடுபட்டிர ுந்தது பட்டியலில் சேர்த் திருக்கிறே ன். நன்றி!
நீலப்பூலா பற்றிய பட்டாம் பூச்சியின் பரப்புரை பலமாகத் தான் இருக்கின்ற து. நீலப்பூலா பற்றி பட்டாம்பூச ்சி சொல்லி நானும் கேட்டிருக் கிறேன்.

இன்றைய நாள் இனிதாகட்டு ம்!

karki
01-31-2008, 09:07 PM
Nuts & Pulses - நெற்றுகளும ் பருப்புகளு ம்

Walnut = உருப்பருப் பு, படகுரு
Butternut = வெண்ணெய் நெற்று
Wing nut = சிறக நெற்று
Chestnut = தேனவரை நெற்று
Beech = புங்கைப் பருப்பு
Oak = செந்தூரப் பருப்பு
Hazel = குரால் நெற்று
Almond = வாதுமைப் பருப்பு, வாதுமை நெற்று
Candle nut = திரிநெற்று , இந்திய வாதுமை
Coconut = தேங்காய்
Cashew = அண்டிமா, முந்திரிப் பருப்பு
Pine nut = தாழை நெற்று
Pistachio = பசத்தம் (mastix= மத்திகை நெற்று)
Groundnut = நிலக்கடலை, வேர்க்கடலை


Fungi - பூசணங்கள்

Mushroom/Champignon= ஆம்பி / காளான்
Truffle = மூலகி
Morel = இராட்டாம்ப ி (இராட்டு = தேன்கூடு)
Russula = நாய்க்குடை
Lactarius = பாற்குடை
Boletus = புழம்பி
Chanterelle = பூவாம்பி
Sparassis = பூக்கோசாம் பி, கடற்பஞ்சு
Coral tooth mushroom = பவழப் பல்லாம்பி
Hedgehog mushroom = முளவுமாக் காளான்
Pine mushroom = தாழைக் காளான்
Cauliflower mushroom = கவிப்பூக் காளான்

karki
02-03-2008, 10:53 PM
மனத்தால் அறியப்படும ் வினைச்சொற் களும் அவை சார்ந்த மற்றைய சொற்கள் சிலவற்றையு ம் பட்டியலிட முயன்றிருக ்கி றேன்.
வழக்கம் போல் பல சொற்களில் உள்ளிருப்ப து பாவாணரும், இராம.கி அய்யாவும், அருளி அவர்களும்.

மனவினைகள்

உள்(ளு) (வி)= to will; உள்ளம், விள்வு = will
உணர் (வி) = to feel; உணர்ச்சி = feeling
நினை (வி) = to think, to remember; நினைவு = thought
ஞாவகம், நினைப்பு, யாது (செட்டிநா. வழக்கு) = memory
நினைவிலேற் று, உருப்போடு (வி)= memorize
நினைவுகூர் (வி) = to remember, to commemorate = ஞாவத்திற்க ொள்
நினைவேந்தல ்= remembrance;
ஞாவகமூட்டல ் (வி)= to remind; ஞாவகமூட்டி = reminder

முன்னு (வி)= to propose, to think, to intend
மன்னுதல் (வி) = to mind, to think
முன்னம் = mind, indication ; ஈடுபாடு = intention ; முற்பொதி =purpose; விழையம் = volition ;
முன்னூட்டி , மன்னூட்டி = mentor; முன்காணி, கணித்திரை = monitor; முன்காணிப் பு= monitory,monitoring; முன்னடை= memento ; முன்னிழப்ப ு, மறதி நோய்= amnesia; புறமனமறதி நோய் = paramnesia; அம்முன்னிப ்பு = amnesty; மன, மனவுறு= mental ; மீள்முன்னி த்தல் = reminiscence .

முன்னிடு (வி) = to propose, to set before
முன்னிட்டு = having proposed, having set before, for the purpose of...
முன்னீடு = proposal ; முற்போத்தம ், முன்னீட்டம ் = proposition
முன்னிகை = comment
முன்னிகையள ித்தல் (வி)= to comment ; முன்னிகையா ளர் = commentator ; முன்னிகையள ிப்பு, ஆட்டுரை = commentary

உன்னுதல், உருவலித்தல ், அமைகணித்தல ் (வி) = to imagine
உன்னம், உருவலிப்பு , அமைகணிப்பு = imagination;
அமைகணம், படிமம் = image; கற்பிதம்= fantasy; கற்பனை= fancy
உன்னித்தல் (வி)= to guess; உன்னிப்பு = guess,guessing
எண்ணு (வி) = to deliberate, to consider
எண்ணம் = consideration, thought
ஓர்மித்தல் , ஓர்ந்து பார்த்தல் (வி)= to consider
ஓர்மிப்பு = consideration
கருது (வி)= to conceive, to think; கருத்தீடு = concept; கருத்தீட்ட ம், கருவுறல் = conception
கருவுறுதல் (வி)= to conceive
வித்திடுதல ் (வி)= to inceive; வித்தீடு = inception
கண்ணுதல் (வி)= to perceive; கண்ணீடு = perception
ஏடல், வடிவு = idea; இடுவிப்பு= ideal; இடுவிப்பான = idealistic ; கருத்தியல் = idealogy

அறி, காண் (வி)= to know; அறிவு = knowledge
கொள் (வி) = to opine; கோள், கருத்து = opinion; கொள்கை = doctrine
மதி (வி) = to estimate, to regard
மதிப்பு = estimation, respect; மதி, புலன் = sense
புலனறிதல், புலனுணர்தல ் (வி)= to sense
தீர்மானி (வி) = determine; தீர்மானம் = determination
நயத்தல் (வி) = to appreciate; நயப்பு = appreciation
தெருள் (வி) = to perceive clearly
மருள் (வி) = to be deluded
ஆய்தல் (வி) = to examine ; ஆய்வு,தேர் ு = exam; சோதித்தல் (வி) = to test, சோதனை = test
கவ்வித்தல் , ஆய்தல் (வி)= to check
ஆராய் (வி) = to make a critical study: to investigate; ஆராய்ச்சி = research, critical study ; புலனாய்வு = investigation (புலன்விசா ணை = புலனுயாவல் )

சூழ் (வி) = to deliberate, to counsel (counsel = சில நேரங்களில் "ஆற்றுப்படு த்தல்"), (சூழவை = council, சூழவையர் = councilor);
கருத்தோது, கருத்தாய்த ல் = to consult ; கருத்தோதுவ ர் = consultant
(கருத்தேற் ம் = suggestion)

அகமுணல் = to become clear; திறவோர்காட ்சி = clairvoyance
வெளிவாங்கு தல், துலங்குதல் = to become clear
ஆயக்காலிடல ் (வி)= to refer; ஆயக்கால்,ந க்கீடு, எடுகோள் = reference
நோடு= note; நோட்டு= note; நோட்டிடுதல ் = notate; நோட்டிகை = notice
குறிப்பிடு தல் (வி)= to mention ;(முன்) குறிப்பு = mention ; அறிவுக்கூர ்மை = intelligence; அறிவுய்தி = intellectual

வட்டகைத்தல ் = to investigate, investigation; to spy= உளவறிதல்;
விசாரணை (வடமொழி பயிலும் திரி-தமிழ்ச் சொல்) = உயாவல்; விசாரித்தல ் = உசாவு,உயாவ
சுட்டுதல் = to cite, to point; சுட்டிக்கா ட்டல்= point out; pointer= சுட்டி (சுட்டி mouse அல்ல!)

உள்ளுணர்தல ் (வி) = realise; உள்ளமை = reality; உள்ளது = real
சிந்தை, புலன் = sense ; நடைமுறை அறிவு, குமுன அறிவு, பொதுப்புலன ்= common sense; சித்தம் = வாலறிவு (இவ்வகையோர யே நாம் சித்தர் என்கிறோம்!)
சிந்தித்தல ், புலனுணர்= to sense, to think ; சிந்தேற்றம ், உளக்கிளர்ச ்சி = sensation ; சித்தேற்று கிற, உளக்கிளர்ச ்சி தரும் = sensational
சிந்தைமிகு = sensible; சிந்தைமிகு மை= sensibility
சிந்தம், உணர்வு = sentiment ; சிந்தமான=senti mental; உணர்ச்சி பூருவமான= emotional
சிந்தடைவான = sensitive; சிணுங்குதல ் = to be sensitive; சிணுக்கம், சிந்தடைவு = sensitivity
சித்தின்கண ், காமாளம் = sensual ; சித்தூடுதல ்=to consent; சிந்தைவேறல ்= dissent

வைகோள், மனக்கோள் = assumption; வைத்துக் கொள்ளல் (வி)= to assume ("அப்படி வச்சுக்கிட ாலும்..)
கருதுகோள் = hypothesis ; முற்கோள் = prejudice
பொக்கூள் = speculation ; பொக்கூளிடல ் (வி)= to speculate

புரிதல் (தமிழக.), விளங்குதல் (ஈழ.) (வி)= to understand ; புரிதல் = understanding
புரிகொள் (வி)= prehend; புரிகொள்ளல ் =prehension
கும்பெருக் கல்= comprehend; கும்பெருக் கம் = comprehension
செறிகுவிதல ் (வி)= concentrate; செறிவு= concentration;
கவனித்தல் (வி)= to care, to attend; கவனம் = attention, care ; அவதானம் = observation ; அவதானித்தல ் (வி) = to observe;
மறுவினைத்த ல், வினையாற்று தல் (வி)= to react ; எதிர்வினை, மறுவினை, வினையாக்கம ் = reaction; தொலைவுணர்வ ு = telepathy

உதவி: ஒப்பியன் மொழிநூல் - பாவாணர்

karki
02-04-2008, 06:25 PM
உள்ளூர் சொற்களைப் பட்டியலிட் டு இருக்கிறேன ். இவற்றில் பல உருதுச் சொற்கள், பல சொற்கள் விடுபட்டும ் இருக்கின்ற ன, சிலவற்றைப் பெண்ணிய நோக்கிலும் உடம்பாற் கலங்குற்றோ ரை அவமதிப்பதா ய் இருப்பதாலு ம் பட்டியலிற் சேர்க்கவில ்லை.

இலக்கு-சார்(local) , உலக வழக்குச் சொற்கள்

கிராக்கி = கறக்கி; சாவு கிராக்கி = சாவு-கறக்கி (சாவு வீட்டிலும் பணம் பிடுங்கிறவ ன்!)
பேமானி (உருது)= நாணிலி, மானமிலி
கசுமாலம் = கழிமலம்
நாதார் (உருது)= ஏழைக்குடி; நாதாரி (பாரசீகம்) = நொடிவி, நொடிவன்
டூப்பு = ஈரி; டூப்ளிகேட் டு = ஈரிகை
தினுசு >jinis (அரபி) = விதம், வகை
திவால் >divala (உருது)= தீவாலை (கு.அரசேந்த ரன் வெளிப்படுத ்திய அருமையான சொல்!)
துக்கடா >tukra (இந்தி) = துண்டு
துட்டு >duit (தச்சு=dutch) = காசு
தொட்ட >dotta (தெலுங்கு) = பெரிய
படா (இந்தி) = படு
நகாசு (வேலை) >naqqas (அரபி - உருது ) = (பொற்) கோறல் (வேலை)
நாஷ்டா > naasta (உருது) = சிற்றுணா
நாஸ்தி > nasti (உருது)= நசிப்பு
நிஜார் > nizar (உருது)= அரைக் காற்சட்டை
bracket போடுதல் = பிறைக்கோடு போடுதல்
nose-cut = மூக்குடைப் பு
பக்கா > pakka (உருது) = கன், கன்னதா (கன்னுதல் = பழுத்தல் ; அதாவாது முதிர்ந்து சீராக, முழுமையாக)
பல்டி (உருது)= புரளடி, கரணம்
பலான (உருது) = பலவான, அப்படியாகப ்பட்ட, இன்னதென் றறியப்பட்ட
பேஷ் (சங்கதம்)= நன்று!
பஜார் (உருது)= கடைத்தெரு
பாக்கி > baqi (அரபி)= மிச்சம், எச்சம்
பாயா > paya (உருது) = அடுசாறு
பாபு (சிந்துத்த னி)= அப்பு, அப்பன் ("இன்னா பாபு நல்லாக்கீர ியா?" - தென் தமி. வழக்கு, என்னா அப்பு நல்லாயிருக ்கீகளா? என்ன அப்பன் சுகமா இருக்கியளே ? (யாழ்.வழக்க ), அகவை குறைந்தவர் களை 'அப்பன்' என அன்புருகி அழைப்பது ஈழத்து யாழ்ப்பாண வழக்கு, மட்டக்களப் பில் 'மகன்' என்பார்கள் !)
pick-pocket = பைப்பறி, பைப்பறியன்
பிச்சுவா > bichwa (உருது)= வீச்சு-வாள்
பிசாத்து > bisat (உருது)= நொய்து
பொஸ்தார் = மொத்து
டாஸ்மார்க் - TASMAC = தமாகூ (தமிழ் நாட்டு மாறுகூற்று க் கூட்டுறவம் - Tamil Nadu Marketing Corporation)
வைன் ஷாப்பு = தேறல் கடை, சாறாயக் கடை, வெறியகம்
பிராது >faryad (அரபி) = முறையீடு
பில்லி (சிங்களம்) = வைப்பு, செய்வினை; சூன்யம் = சூனியம், சூழியம்
பினாமி > benami (உருது) = போல்மி, பகரன்
பிஸ்தா > pistah (உருது) = பருப்பு (பெரிய பருப்பா?)
பப்பு வேகாது = பருப்பு வேகாது! (தமிழ்ப் பருப்பு "ரு" விடுபட்டு தெலுங்கில் பப்பு ஆகும்!)
புருடா = சும்மா, கரடி விடுதல்
Boutique கடை > பொட்டிக் கடை (பிரெ.)= தம்பலங் கடை, மூலக்கடை
குரங்குப் பெடல் (pedal) = குரங்குப் பதல் (பதல் = pedal)
Phenol, பினாயில்/ பெனாயல் = ஒண்ணாறி, துயவை
பேக்கு > bekhu (உருது)= மக்கு
பேஜார் = கரைச்சல், வேசறவு > பேசார்
பேதி (சங்கதம்) = கழிச்சல், வயிற்றுப்ப ோக்கு
பைசல் > faisal (உருது)= வைத்தீர் (வைத்துத் தீர்த்தல்/ தீர்க்கை)
அகஸ்மாத்து = எதிர்பாரா நேர்வாய், தற்செயல்
அசல் >asl (உருது) = மூலம், முதல்
அப்பீட்டு > up-beat (பம்பரம் விடுதலில் வரும் ஒரு நுட்பம்!) = மேலடி, மேலடித் தாவல்
அபேஸ் > apace = துடுங்கவர் பு
அனாமத்து > amanat (உருது)= பேரத்து,பே ற்றது
all right = எல்லாஞ்சரி
ஆஜார் > hazir (பாரசிகம்) = நேர்வரல்
உடான்சு > udan (உருது) = பகடியுரை
உதார் (உருது) = வெற்றுவீம் பு , அலம்பல் காட்டுதல்
crack = கிறுக்கு
hold-on = நிப்பாட்டு
over-take = முன்னுந்து , உச்சிடு
கக்கூசு (தச்சு= dutch)= கழிப்பறை
கஞ்சா (உருது) = குல்லை, கஞ்சம்
கப்சா (உருது)= தொக்கடி
come on = முன்வா! முன்னேறிவா !
கர்மம் = கருமம்
கலாட்டா (உருது)= கலகாட்டம், கலாம்
காலி (உருது) = தீர்கை, போகை,போச்ச !
கில்லாடி (மராத்தி)= சுளுகன், சுழியன் (ஈழ. வழக்கு); ஜக ஜாலக் கில்லாடி = உலகமா சுழியன்
குசால் > khusal (உருது) = ஆர்களி
குஷி (உருது)= களிப்பு, களி
குஸ்தி (உருது)= கைப்போர்
கேப்மாறி (cap + மாறி) = நயனிலி, கவிமாறி
கேடி (K.D. Known Depredator ) = பழங்கள்ளன்
கோதா > godha (உருது)= மற்களம்
கோல்மால் (உருது)= குழப்பவினை
சட்னி (இந்தி)= துவையல்
சபாஷ் = நனிநன்று!
சர்க்கார் (உருது)= ஆள்வோர்
சர்பத்து (உருது) = நறுமட்டு
சரூர் > zarur (பாரசிகம்) = கடிது, விரைவு
சல்லீசு (உருது)= எண்மையா
சாம்பார் (மராத்தி)= கூட்டம்பு
சாயா (மலையாளம்)= சாயம், சாயநீர்
சால்ஜாப்பு (உருது)= சாக்குப்போ க்கு
சிக்குன் குனியா > chi-kum guniya (சப்பானியம ) = எரி குன்னியம், மொளி முறிச்சான் நோய்
சேட்டு = வடசெட்டி
சேடைவைத்தல ் = தோளியடித்த ல்
ஜேப்பு (உருது)= பக்கு; ஜேப்படித் திருடன் = பக்கடித்/ பைப்பறி திருடன்
சைட் அடித்தல் = கண்டின்புற ுதல், காட்சிநோக் கல், காத்துவாங் குதல்
உதவாக்கரை = உதவாக்கடை

karki
02-04-2008, 06:28 PM
ஓசி >On Governmental Service= கைப்பேறு, பரி-பேறு (பரி =free)
O.K = ஏற்பே!
சோதா = நோஞ்சு, சப்பரை, சோதா
சோப்புத் போடுதல் = வழலை போடுதல்/தேய்த்தல்
டபாய்த்தல் (உருது)= கரவடித்தல் , ஏய்த்தல்
டப்பா (உருது) = அடைப்பி
டகல், டகால்ட்டி = புரட்டு ; டகல்பாச்சி (உருது) = புரட்டன்
டங்கு-வார் (உருது)= பரி-வார்
ரிக்கார்ட் டான்சு = வட்டு நடனம்
டீக் (இந்தி) = மிடுக்கு
டேரா போடுதல் = முகாமிடல், கூடாரமிடல்
dose கொடுத்தல் = திட்டுக் கொடுத்தல்
தபா > dafa (அரபி) = முறை, வாட்டி, தடவை
தாஜா (உருது)= குழையடித்த ல்
மக்கர் = சழக்கு
nut = மரை ; bolt = சுரை
போணி (உருது)= முதன்மாறு
forgery = பொய்யொப்பம ், அழிகட்டு
fraud = சுழலை, அணாப்பு, ஏய்ப்பு
மசாலா = உசிலை; கராம் மசாலா = காரவுசிலை
மவுசு > mauz (அரபி) = பகட்டாரம் , நனிக்கவர்ம ை
மஸ்தான் = மதன்
மஜா (உருது)= இன்சுவை, செமை
மாமூல் (அரபி) = வழமைப்படி
மார்வாடி = மார்வாரகன்
மாஜி > mazun (உருது) = முந்தின
மைனர் = இளவர், நுணுவர்
rowdy = அரம்பன், காடையன்
ரஸ்தா (உருது)= பெரும்பாட் டை
ராவடி (உருது)= அடாவடி
ராவுதல் > ravine = கொண்டோடுதல ், அராவுதல்
ராஸ்கல் = வீணன், போக்கிலி
ரேக்ளா race= ஓரியனூர்தி ஓட்டம்
ரூட் = சுற்றை ; ரூட்டு போடுதல் = சுற்றையிடல ், சுத்திக் கொண்டிருத் தல்
ரீல் = சுருள், சுருணை (ரொம்பச் சுத்தாதே! சுருள் விடாதே!)
ரோதனை = தொந்தரை
ration = நயவிலை; ரேஷன் கடை = நயவிலைக்கட ை;
ரோந்து = காவலுலா
லகான் (உருது)= வள்பு
லத்தி = குணில் ; லத்தி charge = குணிலடி
லடாய் (சிந்துத்த னி) = வாய்க்கலாம ்
லாக்கப் = பூட்டுப்பா டு
லாட்டரி = பரிசடம்
லாயக்கு (உருது)= பொருத்தம், தகுதி
லூசு = தளர்த்தி, கழண்டது
லோல்படுதல் = அலையுறுதல் , திண்டாடுதல ்; லோலன் = ஆடித்திரிந ன், பெண்பித்தன ்
வசூல் (உருது)= ஈட்டல், தண்டல்; வசூல்ராஜா = ஈட்டலரசு
வத்தி = தீக்குச்சி
வஸ்தாது (உருது)= மல்வல்லன், ஆசான்
வஸ்து (உருது)= சாறம்
பான்பராக் = திரையல்
ஜகா வாங்குதல் (சிந்துத்த னி) = பின் வாங்குதல், தாட்பதி அகலல்
ஜமாய்த்தல் (உருது)= வெளுத்துக் கட்டுதல்
ஜல்சா (உருது) = களிவிருந்த ு
ஜல்லியடித் தல் = சில்லியடித ்தல்; ஜல்லி = சில்லி
ஜாகை (உருது)= இருப்பிடம்
ஜால்ரா (உருது)= சல்லரி, தாளம்; சல்லரி போடுதல் = ஜால்ரா போடுதல்
ஜிகினா (உருது)= ஒண்டகடு, மினுக்கு
ஜுஜுபி = செவினி
ஜோர் > zor (பாரசிகம்)= வல்லந்தம்
ஜொள்ளு = சொள்ளு, வாணி (வாய்நீர்)
அம்பேல் = ஐம்பேல்
ஹோ கயா (இந்தி)= ஆகிப் போச்சு!
டீல்ல வுடுதல் = தொங்கல்ல விடுதல்
கலீஜ் = நழுக்கு
சோக்கு (உருது) = பகட்டு
கோலி soda = கோலிச் சவடு (கோலி தமிழ் தான்!)
(B)பிகு = விகு,பிகு
கோசரம் (தெலுங்கு)= பகரம், இணையாக, ஆக, பொருட்டு
கர்லா கட்டை= உலமரக் கட்டை
கட்டிங் = வெட்டு, வேட்டு

* பல சொற்கள் அருளியின் 'அயற்சொல் அகரமுதலியி ல்' இருந்து பெறப்பட்டவ ை

vasan
02-04-2008, 06:52 PM
:sm03: :sm03: :sm03:

இனிமேல் விஜய் நடத்த திரைப்பட பாடல்களுக் கு எளிதாக விளக்கம் கூறி விடலாம்.. :) :wink:

நன்றி, கார்க்கி.. :sm08:

v-

butterfly
02-04-2008, 07:46 PM
ஜுஜுபி = செவினி

apdina?

now we can thittu knowing the meaning :sm12: :sm12: :sm12:

karki
02-04-2008, 10:14 PM
வாசன்,
உணவு வகைகளைப் பட்டியல் போட வேண்டும், அப்போது விஜயின் பாடல்களை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். :sm12:


பட்டாம்பூச ்சி,
ஜுஜுபி என்பது ஒரு பழவகை.அதைச செவினி எனத் தமிழில் அழைக்கலாம் ! ஜுஜுபி என்ற சொல் தமிழில் புதலியற்(botan ical) தேவைகளுக்க ு அப்பால் இலகு, சுளு, தூசு என்ற பொருள்களிற ் கூட பயில்கிறது . திருவாளர் இரசினிக்கா ந்து அதிகம் பயன்படுத்த ிய சொற்களில் ஒன்றாக இதனைக் கருதலாம்.

yasodha
02-04-2008, 11:28 PM
சோதா = நோஞ்சு, சப்பரை


:think::think::think::Ksp::Ksp ::Ksp: karki ithukku meaning???

vasan
02-04-2008, 11:46 PM
சோதா-க்கும் யசோதாக்கும ் ஒரு சம்பந்தமும ் இல்லீங்கோ.. :wink: :)

சோதா --> உடலில் வலிமை (சக்தி) இல்லதவன்(ள ).. அப்படின்னு அர்த்தம்..

opposite of பயில்வான்.. :wink: :) "என்னடா இப்படி ஒரு நாள் காய்ச்சல இளைச்சு நோஞ்சானாயி ட்ட" அப்படின்னு சொல்ல கேள்விப் பட்டு இருப்பீங்க ளே.. அதே தான்.. :)

v- :)

yasodha
02-05-2008, 12:09 AM
சோதா-க்கும் யசோதாக்கும ் ஒரு சம்பந்தமும ் இல்லீங்கோ.. :wink: :)

சோதா --> உடலில் வலிமை (சக்தி) இல்லதவன்(ள ).. அப்படின்னு அர்த்தம்..

opposite of பயில்வான்.. :wink: :) "என்னடா இப்படி ஒரு நாள் காய்ச்சல இளைச்சு நோஞ்சானாயி ட்ட" அப்படின்னு சொல்ல கேள்விப் பட்டு இருப்பீங்க ளே.. அதே தான்.. :)

v- :)

Naan onnum appadi ninaikaliye...:wawa:;)

Btw...thanks for the meaning...:):thx:

karki
02-19-2008, 09:11 PM
பட்டியலில் விடுபட்ட மீதிச் சொற்கள் சில...

பாச்சா = அரம், வல்லமை
பீலா = வண்டில் (விடல்)
ரவுசு = அழிம்பு, அரவுசு
ஜே ஜே னு கூட்டம் = செளு செளுன்னு/ கச கசன்னு கூட்டம்
Once more = இன்னொரு முறை, இன்னொருக்க ா
தமாஷ் = களிதம், விள்ளாட்டு
தாலுக்கா = கூற்றம்
டக்கர் = செண்ணம்
டமாரம் = தமருகம்
டின்னு கட்டுதல் = தகரங் கட்டுதல்
டிங்கு ஜுரம் = முடக்கு சுரம்
டைபாயிடு> typhoid = குடல் காய்ச்சல்
பிட்டு = துண்டு, நுக்கு, முரி
ரசீது = பற்றுமுறி
சீக்கு (sick) = பிணி ("பிணி புடிச்ச கோழி மாதிரி...")
சீட்டி (மராத்தி) = சீழ்க்கை
சிக்கன் 65 = குக்கன் 65, பொரிகோழி 65
leg piece = கால் பாகம், காற் துண்டு
பிரியாணி = புலவுச்சோற ு
குஸ்கா = காய்ச்சை
சகா = கூட்டு, உடனன் (உடனொத்தன்)
சாதா = வெறும்
something = கையூட்டு, சிலது ; சிச்சிலது = something something
case = கட்டு, வழக்கு
குவார்ட்டர ் = கால் ; ஆஃப்பு = அரை
லுங்கி = மூட்டி, சாரம் > சறம்
out = வெளியே, வெளி
bench = வீச்சி, வாங்கு
bet = பந்தயம்
மொள்ளமாரி = முல்லைமாறி > மொள்ளமாறி (தமிழே!)
ஜமாய் = கலக்கு
footboard = பாதப்படி
தப்புத்தண் டா = தப்புத் தண்டு
காக்கா பிடித்தல் = காக்காய் பிடித்தல் ( கால் + கை பிடி)
டிமிக்கி, டேக்கா = கடுக்காய் கொடுத்தல்
escape ஆகுதல் , எஸ் விடுதல் = கம்பிநீட்ட ல்
கம்மனாட்டி > கைம்மணாட்ட ி (துணையிழந் ோன்!)
பாவ்லா = பாவலா
flat ஆகுதல் = மட்டையாகுத ல் (மட்டையா யிட்டான்டா !)
பிலிம் காட்டுதல் = படங் காட்டுதல்
லூட்டி = கொட்டம்
so = ஆகையால், ஆக

karki
02-29-2008, 01:01 PM
விளையாட்டு க்களை, அதன் பெயர்களைப் பட்டியலிட முயற்சித் திருக்கிறே ன்.

பொருது, கும்மாளம் போன்றன இராமகி அய்யா பரிந்துரைத ்த அருமையான சொற்கள். Sports, games எல்லாவற்றி ற்கும் விளையாட்டு என்பதை வைத்து பட்டையடித் துக் கொண்டிருக் கிறோம்.

Sports = பொருது; sportsman = பொருதாளன் ; sportsmeet = பொருதுக்கூ டல்
Game= கும்மாளம்; சிலபோது "ஆட்டம்"
Field game = விளையாட்டு
Captain = ஆத்தன்
Team = தோமம், தொகுவம்
Champion = வாகையர் (அருளியார் உண்டாக்கி, மக்கள் தொலைக்காட் சி பரவலமாக்கி ய சொல்!)
Trophy = திருவை
Tournament = திருமிப்பு
Match = போட்டி, ஆட்டம்


பொருது - Sports

விளையாட்டு க்கள், தோமக் கும்மாளங்க ள்/ ஆட்டங்கள் - Team games

Baseball = கழிப்பந்து , அடிப்பந்து ; Softball = மென்பந்து , சொவ்வுப் பந்து
Cricket = மட்டைப்பந் து, துடுப்பாட் டம்
Kicker = உதைப்பந்து , உதைப்பந்தா ட்டம்
Association Football = கழகப் பந்தாட்டம்
American Football = அமெரிக்கப் பந்தாட்டம் , அமெரிக்கக் கால்பந்து
Rugby = பந்துமல்லம ், இரக்பி
Field Hocky = வளைதடிப் பந்தாட்டம்
Basketball = கூடைப்பந்த ு
Netball = வலைப்பந்து
Handball = எறிபந்து
Volleyball = கைப்பந்து
Tennis = வணரிப்பந்த ு
Squash = சுவர்-பந்து
Badminton = பூப்பந்து
Table tennis = மிசைப்பந்த ு
Curling = சுருளாட்டம ்
Brennball = எரிபந்து (பந்தால் எறிந்து வெளியேற்று ம் செருமானியப ் பொருது, பந்து பட்டவர் எரிந்து விட்டார் என்பது ஆட்டவிதி!)


தானி ஓட்டப் பந்தயம் - Auto racing (racingக்கு சரியான சொல் நம்மிடமில் லை, ஓட்டப் பந்தயம் துல்லியமான தல்ல. பந்தயத்தை ஏலவே bet-க்கு நிகராய் பயின்று கொண்டிருக் கிறோம்!)

Dirt track racing = சகதித் தட ஓட்டம்; Dirt speedway racing = சகதி வேகவழியோட் டம்
Drifting = வளையோட்டம்
Hill climbing = மலை இவரோட்டம்
Off-road racing = சாலை-சாரா ஓட்டப்பந்த யம்
Sport car racing = பொருதுந்து ஓட்டப்பந்த யம்
Open-wheel car = திறவளவி உந்தோட்டம் , ஓரிருக்கைய ுந்து ஓட்டம்; Formula 1 = உருவுழை 1/ உருவல் 1
Slalom (அலைவளை) = அலையோட்டம்
Sprinting = இலிற்றுதல்

சம்மணப்பயி ற்று - Gymnastics

Artistic gymnastics - கலைவரிதிச் சம்மணப்பயி ற்று
Acrobatics - கழைக்கூத்த ு
Tricking - திருக்கல்
Trampolining - எம்பிக்குத ித்தல்
Cheerleading = களிவிறலியம ்; Cheerleaders= களிவிறலியர ்
Weightlifting = பளுதூக்கல்
Fitness training = பதவுமைப் பயிற்சி, யாப்புப் பயிற்சி
Bodybuilding = யாக்கையாப் பு, உடலங் கட்டுதல் (நன்றி அருளி!); Bodybuilder= யாக்கையாப் பர், உடலங்கட்டு நர்


உதவி: எருதந்துறை அகரமுதலி, விக்கிப்பீ டியா, Merriam-Webster...

karki
03-09-2008, 09:23 AM
சொற்களின் அரசியல்


"இனிய சொற்கள் சிறிதாகவும ், பேசுவதற்கு எளிதாகவும் இருக்கலாம் , ஆனால் அதன் எதிரொலிகள் மெய்யாகவே முடிவற்றவை ..."
- அன்னை தெரசா

செருமனியில ் முன்பு ஒரு ஒருங்கியம் (organisation) 'Unwort des Jahres' (Ugliest word of the year) எனச் சொற்கள் சிலவற்றைத் தேர்ந்தெடு த்து அவை குமுகாயத் திலிருந்து ஒதுக்கப் பட வேண்டியவை, பிற்போக்கு த் தனமானவை, மற்றோரைப் புண்படுத்த ுபவை என ஒவ்வோர் ஆண்டும் பட்டியலிட் டு வந்தார்கள் . இது மொழியியற் துறைப் பேராசிரியர ்கள் உதவியோடு நடைபெற்று வந்தது. இன்னும் நடக்கிறதா அல்லது வெறுமனே இணையத்தில் மட்டும் சுருங்கி விட்டார்கள ா தெரியவில்ல ை. இவர்கள் அதைச் சேரியதாய்(se rious) முனைப்பாய் ச் செய்தார்கள ். ஏனைய மிடையங்களி லும் (media) பரவ விட்டார்கள ். முகமையாய்ப ் பள்ளிகளில் , இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் சொற்களைத் தேர்ந்தெடு த்து பொதுவளிக்க ையில் வரும் அறிக்கைகளை நாங்கள் மொழிப் பாடத்தில் வாசிப்பது கட்டாயமான ஒன்றாக இருந்தது அப்போது.
அரசியற் தலைகள் உதிர்க்கும ் அவத்த வாக்கியங்க ள், அவர்களின் அரசியல் நோக்கங் கொண்ட சொல்லாடல்க ள் தவிர்த்து , ஏற்கனவே குமுகாயத்த ிற் புழங்கப் பட்டு வரும் வெறுப்பை உமிழும் பயில்வுகள் , எதிர்-சேமிய, இனவாத, மானுடத்திற ்குக் களங்கம் வருவிக்கும ், ஒரு இனக்குழுவி ன் மேல் முற்கோளைப் (prejudice) பதிக்கும், சம-பாலுறவுக்க ாரர்/ சமச்செகையர ்(homosexuals), பெண்கள், பால்மீறிகள ்(transgenders) போன்றோர் மீதான சொல்- வன்முறையைக ் கட்டவிழ்த் து விடும் சொற்களை/ கிளவிகளைப் பட்டியலி ட்டார்கள். தவிர்க்க அறிவு றுத்தினார் கள்.
இது ஒரு மொழி-கிடுக்கிய இயக்கமாகவே செயற்பட்டத ு. பொதுக் குமுனீட்டத ்தில் (communication) சரளமாகப் பயனாகும் மாந்த மாண்புக்கெ திரான சொற்களை எல்லாத் துறைகளிலும ் அடையாளங் கண்டு, நீக்கி விட வேண்டினார் கள். வன்முறை என்பது ஆய்தங் கொண்டு அரத்தம் வர அடிப்பது மட்டுமல்ல, கிளவி வடிவில் சொல்லாடல் களாலான ஈட்டிகளால் மாந்த மனத்தைக் குதறுவதும் , அவன் மாண்பைக் குலைப்பதும ், மனதை நோகடிப்பது ம் கூட வன் முறை தான். நாக்கு அணுகுண்டுக ்குச் சமனான கூரிய ஆய்தம்..

ஆங்கில வெளியில் இந்த வகைச் சொற்களை இனங்காணல் பெரும்பாலு ம் நகைச்சுவைய ாய் நடைபெறுகிற து. அல்லது அகரமுதலி நிறுவனங்கள ் இவ்வகைப் பட்டியலை ஆண்டுக்கொர ு முறை குறித்துக் காட்டு கின்றன. Unwortஐ ஆங்கிலத்தி ல் இப்போது unword என்றே சொல்லுகிறா ர்களென நினைக்கிறே ன், இந்தச் சொல்லாடல் எவ்வளவு புறவலமானது என்பது கேள்விக்கு ரியது. மற்றப்படி faux-pas word என்ற சொற்களைக் கேட்டிரு ப்பீர்கள்.

காட்டாக மேலைப் பரப்பில் நிகழும் சொல் - மாற்றுக்கள ், பதில்(substituting) பயில்வுகளை பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம ். எசுக்கிமோவ ுக்கு மாற்றான இனுயிட்டு நக்கருக்கு மாற்றான ஆபிரிக்கர் போன்ற பயில்வுகள் நன்கு தெரிந்த எடுத்துக் காட்டுகள். இங்கு Zigeuner என்ற சொல் ஒரு இனக்கூட்டத ்தை (சிந்தி-உரோம நாடோடிகள்) ஒரு எள்ளற் தொனியோடு இழிவு படுத்துகிற தென்று அதற்கு மாற்றாக 'நகரும் இனச் சிறுபான்மை யினர்' என்றே அழைக்கப்பட வேண்டுமென அறிவித்தார ்கள். அதன் ஆங்கில gipsy என்னும் சொல்லில் செருமானியக ் கிளவியிற் பொதிந்திரு க்கும் இழிவுப்பொர ுள் இல்லை. ஆனாலும் பிரித்தானி ய வழக்குச் சொல்லான gyppo நிச்சயம் ஒருவகையில் இதற்கு ஒப்பானதே. Handicapped மறைந்து Physically challenged வந்தது அதைத் தமிழில் இராம.கி அய்யா 'உடம்பால் கலங்குற்றோ ர்' எனப் பயின்றார்.

karki
03-09-2008, 09:27 AM
Unwort-ஐ தமிழில் இதை அ-சொல் எனலாம். அ-சொற்கள் என்பவை வசவுச் சொற்களோ, அவையற் கிளவியோ (unparliamentary word) அல்ல. எல்லா மொழிகளிலும ் வசைச் சொற்களுக்க ும், அவையற் கிளவிகளுக் குமா பஞ்சம்? அது வேறு புலனம். அதை, அதன் உள்ளிருக்க ும் அரசியலைத் தனியாக இன்னொரு புலனத்திற் பார்க்க வேண்டும்.இ ்கு அதற்கு கள விதிகளும் மட்டுறுத்த மும் இசைவளிக்கா தென எண்ணுகிறேன ்.

ஆக மேலே சொன்னது போல், அ- சொற்கள் தமிழில் உள்ள பாலுறுப்பு க்கள், சாதியம், ஊனம் குறித்த வசைச் சொற்கள் அல்ல மங்கலம் அமங்கலம் சார்ந்தவைய ும் அல்ல. மாறாக அவை நேரியலான(norma l) உரையாடல்கள ில் நாமெல்லோரு ம் உணராது பயன்படுத்த ும் சொற்கள். சொற்கள் வீச்சு, அரசியல் அறிந்து அதைத் தவிர்ப்பது ம் , மாற்றுத் தேடுவதும் பரவலாக மேலைப் பரப்பில் நிகழ்ந்து வரும் மாற்றம். தமிழில் இது அங்கொன்றும ் இங்கொன்றும ாக இடம் பெறுகின்றத ு. ஈ.வே.ரா பெரியார் இதைச் சரியான முறையில் தமிழ்ப் பரப்பிற் கையாண்டாரெ ன நினைக்கிறே ன்.
நான் சிலவற்றை இங்கு குறிக்கிறே ன்.. நண்பர்கள் தமக்குத் தெரிந்தவற் றை குறிப்பிட் டு மாற்றையும் எழுதவும். உரையாடுவோம ்....

கற்பு = பழந்தமிழ்ச ் சூழலில் வேறு பொருளிற் புழங்கப்பட ்டு, பிற்பாடு வந்த குமுகாயத்த ில் பெண்ணடிமைப ் பொருளில் உருப்பெற்ற சொல். பெண்ணுடன் தொடர்புற்ற ு வரும் கூட்டுகையி ல்(context) இச்சொல்லை முற்றாகத் தவிர்க்கலா மென எண்ணுகிறேன ்.

கற்பழிப்பு = வன்புணர்ச் சி

மனைவி = மனைவி என்பது இல்லாள், இல்லத்தரசி க்குச் சமனானது.அத வது housewife என்ற பொருளில் வருவது. துணைவி என்பதே மண ஒப்பந்தத்த ில் தன்னுடன் வாழ்வில் இணைந்த இணையைக் கண்ணியமாய் க் குறிக்கக் கூடிய சொல். தமிழ்க் குமுகம் மாற்றத்துக ்கு உட்பட்டி ருக்கின்றத ு, பெண்கள் அடுக்களையை விட்டு வெளியே வரத்தொடங்க ி நாளாகி விட்டது.

ஒன்பது = தமிழ்ப் பரப்பில் இன்னும் இழிவுபடுத் தப் படுவோர் இம்மூன்றாம ் பாலினர். எல்லாத் திரைப் படங்களிலும ் இவர்களை இழுத்து ஒரு மூன்றாந் தர நகைச்சுவைக ் காட்சி இருக்கும். 'அரவாணி' முன்பு பயனாகியது இப்போது 'திருநங்கை' என்கிறார்க ள்.

செவ்விந்தி யர் = ஊற்றுகை அமெரிக்கர் , அமெரிக்கப் பழங்குடிகள ்
விபச்சாரி/ -ரன் = பாலியற் தொழிலாளி
அநாதை = குமுகப் பிள்ளை
செவிடு = கேட்குந் திறனற்றோர்
குருடு = கண் பார்வையற்ற ோர்
முடம் = நடக்க முடியாதோர்
ஆதிதிராவிட ர் = தொல்தமிழர்

karki
03-21-2008, 10:06 PM
பொருதுகள், விளையாட்டு க்களின் பட்டியல் தொடர்கிறது ...

பரம்பு/ மணைப் பொருதுகள்- Boardsports

Surfing = சறுக்குதல்
Windsurfing = அலைச் சறுக்குதல்
Bodyboarding = உடற் மணையாடுதல்
Kitesurfing = பட்டச் சறுக்கல்
Skateboarding= பரம்புதல், பரம்பாடுதல ்
Mountainboarding= மலை மணையாடல்
Skysurfing = வான்வெளிச் சறுக்கல்
Sandboarding = மணல் மணையாடுதல்
Snowboarding = பனியால் மணையாடுதல்
Riverboarding = ஆற்று மணையாடல்
Street luge = தெருச் சறுக்கை


நீர்ப் பொருதுகள் - Water sports

Swimming = நீச்சல்
Diving = முக்குளித் தல்
Water Polo = நீர்ப் பந்தாட்டம் ; Polo = பந்தாட்டம்
Scuba diving = ஆழிமுங்குத ல்
Sailing = படகோட்டம்
Sailboard = பாய்மரப் படகு
Rowing and Sculling = துடுப்பு வலித்தல்
Waterskiing = நீர்த் தொடுக்குதல ்


வான் பொருதுகள் அ. பறப்புப் பொருதுகள் - Air sports & Flying sports

Ballooning = பூதிப்பறப் பு (பூதி அ. வளிப்பந்து = balloon); Cluster ballooning = கொத்துப் பூதிப் பறப்பு
Sky Diving = வான் வழுவல்
Paragliding = பரநழுங்கல்
Hang Gliding = தொங்கு நழுங்கல்
Gliding = நழுங்கல், வழுவல்
Aerobatics = வான்வித்தை
Air racing = வானோட்டம்
Wingsuit flying = சிறகுடை பறப்பு
Parachuting = பரக்கூடு பாய்தல்


மாரி / பனிக்காலப் பொருதுகள் - Winter sports

Alpine Skiing = ஆல்பைன் தொடுக்குதல ், ஆல்பைன் ஆலிச்சறுக் கு
Cross-country skiing = குறுக்கு-வெளித் தொடுக்குதல ்
Luge = சறுக்கை (sled)
Bobsleigh = குறுஞ்சரின ை
Skating = கதழ்வு, கதழ்வாடல்
Figure skating = ஒயிலாட்டக் கதழ்
Short track speed skating = குறுந்தட விரை கதழ்
Snowshoe = பனிக்கவை
Roller Skate = உருளைக் கதழ்வு
Skeleton = கூடுச் சறுக்கு, பற்றுத் தட்டுச்சறு க்கு
Biathlon (Cross-country skiing & rifle shooting) = இரட்டைப் பந்தயம் (குறுக்குவ ளி ஆலிச்சறுக் கும், துவக்குச் சுடுதலும்)
Cross-country skiing = குறுக்குவெ ளி ஆலிச்சறுக் கு
Curling = சிந்துச்சு ருளல்
Freestyle skiing = பரிஒயில் ஆலிச்சறுக் கு
Nordic combined (ski jumping & cross country skiing) = வடபுலக் கூட்டுப் பந்தயம்
Ski jumping = தொடுக்குத் தாவல்
Skiing = ஆலிச்சறுக் கு, தொடுக்குதல ்

நன்றி இராம.கி அய்யா!

vasan
03-21-2008, 11:44 PM
அ- சொற்கள் தற்பொழுது தமிழின் "politically correct expressions" என்று கூறலாமோ? :think:

கற்பு பற்றி எல்லாம் எழுதி இருக்கீங்க .. தமிழ் நாட்டு அரசியல்வாத ிகள் யாராவது கீதம் படித்தா, தமிழர் பற்றி இழிவாக பேசினதாக வழக்கு போட்டு, கொடும்பாவி எரிக்க கிளம்பிடுங ாங்க.. :sm12: :sm12: குஷபு அக்கா கதை கேள்விப் பட்டீங்களா ? :)

கண்பார்வைய ற்றோர், கேட்கும்தி றனற்றோர் போன்றோருக் கான பொதுச்சொல் லான ஊனமுற்றோர் என்ற சொல், கடந்த 15 வருடங்களாக புளங்கி வருகிறது.

தமிழ் நாட்டில் மொழி வளர்ர்சிக் கான திட்டம் கொண்டுவந்த வர்களில் நிறைய பேர் நாத்திகவாத ிகளாக இருப்பதால் , இறைகுழந்தை என்ற சொல் பெற்றோர் இல்லாத குழந்தைகளு க்கு உபயோகப் படுத்துவது இல்லை. அது மட்டும் இல்லாமல் இறைகுழந்தை என்ற சொல், ஹரிஜன் (harijan, literally, children of god, a term coined by Gandhiji) என்ற சொல்லின் தமிழாக்கமா க தோன்றுகிறத ு. ஹரிஜன் என்ற வார்த்தை 'தாழ்த்தப் ட்ட' மக்களுக்கா க அரசு குறித்த எல்லா இடங்களிலும ் உபயோகித்து வருவதால், அதேசொல்லை இப்படி பயன்படுத்த ுவது, குழப்பத்தை உண்டாக்கும ் என நினைக்கிறே ன்.

இந்த குழந்தைகளு க்காக அரசு நடத்தும் விடுதிகளுக ்கு "கருணை இல்லம்" என்று பெயரிட்டிர ுக்கிறார்க ள்.

மனைவி --> துணைவி... :b: :b:

ஆதிதிராவிட ர் = தமிழர், பழந்தமிழர் :think: :think:

தற்பொழுது உள்ள பழக்கத்தின ் படியாக, தாழ்த்தப்ப ட்ட சாதியினர்க ்கு, மக்கள் தொகை கணக்கெடுப் பின் படிஅவர்களி லும் ஒரு குறிப்பிட் ட குழுவினருக ்கு மட்டும் ஆதிதிராவிட ர் என்று பெயரிட்டு இருக்கிறார ்கள் - sort of a classification of a particular caste among the scheduled caste. அவர்களை மட்டும் தமிழர் அல்லது பழந்தமிழர் என்று அழைப்பது, மற்றவர்களை (both other caste members of scheduled castes and tribes as well as other castes all together) தள்ளிவைப்ப தாக அமைந்து விடும் என நினைக்கிறே ன்.

என்னுடைய தனிமனித கண்ணோக்கத் தில், குமுக உறவு வளர்க்கும் சொல்லாக அமையாமல், தொடர்ந்து சாதிஅடிமைக ்கு வித்திடும் அ- சொல்லாக அமைய வாய்ப்பு அதிகம் என நினைக்கிறே ன்..

நல்ல முயற்சி, கார்க்கி. தொடருங்கள் .. :sm08:

வாசன்

karki
03-22-2008, 09:27 AM
'அரசியல் வரிதியாய் சரியான வெளிப்பாடு கள்' என்பது சரியே!

கற்பு புலனம், ஏற்கனவே நடந்த வினைக்கான எதிர்வினை தான் அது!
திருமணத்தி ற்கு முன் புணர்ச்சிய ில் ஈடுபடுதல், தமிழ்நாட்ட ில எல்லாரும் இப்படித் தானிருக் கிறார்கள் போன்ற கருத்துக்க ள இங்க எழுதல, அதனால ஆர்ப்பாட்ட ம், விளக்குமாத ்து பூசை, உருவப் பொம்மை எரிப்பு எதும் வராதென நம்பலாம்.
மத்தப்படி குச்சுப்பூ க்கா விதயத்துல எனக்கு தனிக் கருத்து உண்டு.

அரிசன் - இறைக்குழந் தை விதயம், நீங்க சொன்னதும் தான் நினைவிற்கு வந்தது.நன் ி!

ஊனமுற்றோர் விதயத்துல கால் முடியாதவங் க, பார்வை அற்றவங்க என்று எல்லோரையும ் கொத்தா அழைப்பதற்க ு உருவாக்கப் பட்ட சொல் தான் அது. ஆனால் இப்போ 'ஊனம்' என்று சொல்வதையே மேற்கத்தேய ப் பரப்பில் பலரும் அநாகரிகமா கருதறாங்க.
அவங்களப் புண்படுத்த ுவதா, அதுனால தான் உடலால் கலங்குற்றோ ர் என்ற பரிந்துரை!

ஆதிதிராவிட ர் என்ற சொல்லைக் கேட்கும் போதே கடுப்பா இருக்கும். இந்தச் சொல்ல அரசு அறிக்கைகள் ல பார்க்கலாம ்! எல்லாரும் திராவிடன் தானே எதுக்கு அவன மட்டும் தனியா ஆதிதிராவிட னுங்கறேன்ன ு அரசு கன்னத்துல அறையணும் போல இருக்கும். அதான் முதல்ல தமிழன்னு போட்டேன், பிற்பாடு இன்னும் குறிப்பா 'தனிச்சேர் ்கை' (reservation) தேவைகளுக்க ாய் அந்த சொல்லைப் பயனாக்க வேண்டி நேர்ந்தால் இருக்கட்டு மென பழந்தமிழர் என்ற சொல்லாடலைக ் குறித்திரு ந்தேன். அது ஆதிதிராவிட ர் என்ற சொல்லுக்கு சற்றும் சளைத்ததில் லை என்றே உணர்கிறேன் .

உரையாடலுக் கு நன்றி, இரு சொற்களை மேலிருந்து எடுத்து விட்டேன்!
மாற்று பரிந்துரைக ்கவும்!

karki
03-23-2008, 11:09 AM
நண்பர்களுக ்காய் சில தொடுப்புகள ் இங்கே..

கிழக்குப் பதிப்பகம் புதிய வரிதரை (writer)/ எழுதியை சில மாதங்கள் முன் அறிமுகம் செய்திருந் தது. எந்த மாற்றியையு ம் பயன்படுத்த ாது நேரடியாய் ஒருங்குறிய ில் தட்டச்சிக் கொள்ளலாம். ஒருங்குறி(Un icode) , பாமினி போன்ற சில எழுத்து முறைகளையும ், வார்ப்புகள ையும் (fonts) கொண்டது. பயனுள்ளதாக இருக்கிறது . என்ன..., ஆங்கிலந் தவிர்ந்த வேற்று மொழிக் குயவுப் பலகை (keyboard) வைத்துளோரு க்குச் சொதப்புகிற து. தனியே ஆங்கிலம் மட்டும் வைத்திருப் போர் கவலையின்றி நிறுவிப் பார்க்கலாம ். நீங்களும் உங்கள் கணினியிற் தளைக்க வைத்துப்(insta ll) பாருங்களேன ்!

http://software.nhm.in/writer.html

______________________________ ______________________________ ______
குழந்தைகளு க்குத் தமிழ் கற்பிக்க உதவுந் தளங்கள்.
அரசின் தளங்கள் தவிர பல தமிழ்த் தளங்களுக்க ு ஆயுள் என்னமோ சில ஆண்டுகள் தாமென்பது பலரும் அறிந்ததே. ஆகையால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாம், தளத்தின் உள்ளடகத்தை முடியுமானா ல் கடுவறையில் சேமித்து வைக்க முயற்சிக்க லாம்.

http://www.duke.edu/~skc9/tamilclass/
http://www.unc.edu/~echeran/paadanool/

இவை பல் மிடைய உதவியுடன் அழகாக அடவப் பட்டவை:

http://www.tamilvu.org/courses/primer/bp000001.htm

http://www.ithamizh.com/

தமிழக அரசின் பாடப் பொத்தகங்கள ்:

http://www.textbooksonline.tn.nic.in/

yasodha
03-24-2008, 12:34 AM
கார்கி...மேல ே நீங்கள் கொடுத்த தளங்கள் பயனுள்ளதாக இருக்கும்... மிக்க நன்றி...:sm08:

karki
04-03-2008, 12:49 PM
தமிழ்க் குடும்பம்

முறையாக உறவுமுறைப் பெயர்கள் அனைத்தையும ் பட்டியலிட முயன் றிருக்கிறே ன். பல சொற்கள் அனைவரும் அறிந்தவை தாம், ஆனாலும் வட்டார வழக்குகளில ுள்ள மாறுபட்ட சொற்கள னைத்தையும் ஒருங்கே சேர்த்து சிச்சிறு விளக்கத்து டன் குறிக்க முனைந்தி ருக்கிறேன் . உண்மையில் அனைத்தையும ் ஒன்றாய்க் கொண்டு வந்தது ஒன்றே என் பணி, அனைத்தும் பாவாணர் அய்யா, "பெற்றோரைப் பற்றி"யில் அருளி அய்யா கண்டாய்ந்த ு சொன்னவை தாம்.
தமிழ்க் குமுகாயம் தாய்வழி சார்ந்தது. பண்டைக் காலத்தில், வரலாற்றுக் கு முன்னான காலத்தில், தொழிற் பிரிவினைக் கு முன் தாயே அதன் தலைவியாய் இருந்திரு க்கிறாள், அதன் எச்சங்கள் இக் குமுகத்தின ் வரலாற்று வழித்தடங்க ள் தோறும், பண்பாட்டுக ் கூறுகள் அனைத்திலும ் படிந்தே இருக்கின்ற ன. தாய் மாமனுக்குர ிய மதிப்புரவு , மாமன் மகளை மணக்கும் வழக்கம், பெண் தெய்வ வழிபாடு என ஒருபாடு எச்சங்கள் இன்னும் அடையாளமாக உள்ளன.
8 தலைமுறை உறவுகளைச் சரியாக அழைக்க எம்மிடம் துல்லியமான பெயர்கள் உண்டு. இப்படிப் பெயர்களைக் கொண்ட வேறு இனம் ஏதும் உண்டா என்று தெரியவில்ல ை. இதை விடுத்து தமிழகத்தில ும் புலம் பெயர்ந்த நாடுகளிலும ் எம்மவர் பெரியம்மா, அத்தை, சித்தி என்போரைக் கொத்தாக ஆன்ட்டி என்ற அடைப்பிக்க ுள் அடைத்த ழைப்பதையும ், சித்தப்பா, மாமா, பெரியப்பா ஆகியோரை மாறுபாடு காட்டாது அங்கிள் எனப் பிடித்துத் தொங்குவதைய ும் பார்க்க நகைப்பும், மனக்குமுறல ுந் தான் வருகிறது. இனி புலனத்திற் குள்..முறைப்பெயர ்கள் அ. உறவுப்பெயர ்கள் = Names of Relationship

சொந்தம் , பந்தம் (தமிழே!), உறவு = relationship
உறவினர், சொந்தம்/ சொந்தக்கார ர், தன்னோர் = relatives
(உற்றார் உறவினர், இனஞ்சனம்/ இனசனம் = kith & kin)
சுற்றம், கேளிர் = இவை உறவினர், நண்பர் என இரு பொருள் தருவனவாகும ்.
கேளன் = உறவினன்.

தாய் வழிச் சொந்தம்/ உரிமை/ சொத்து தாயம் எனவும், உறவினர் தாயத்தார் எனவும், தந்தை வழி உறவு பங்காளிகள் எனவும் அழைக்கப் படுவர்.

தாய், அம்மை (நெல்லை, நாஞ்சில் வட்டாரங்கள ில்), அம்மா (பொதுவழக்க ), முன்னர் அம்மாள், அம்பா(ள்) எனப் பெண்டிரின் பெயரின் பின்னே ஒட்டிவந்து மதிப்புரவு ப் பின்னொட்டா க (suffix) இருந்தது (காட்டு: இலக்குமி அம்மாள், காளிகாம்பா இன்னபிற..)
அவ்வை,
அஞ்ஞை > அன்னை,
அத்தி > ஆத்தி, ஆத்தை> ஆத்தாள் > ஆத்தா (சிற்றூர்க ில் தாயைக் குறித்துப் பயில்வுறும ் சொல்! ஈழத்தின் சில பைதிரங்களி ல் ஆத்தை எனுஞ் சொல் பாட்டி என்றும் ஆளப் படும்!),
அச்சி (அச்சனின் பெண்பால்) > ஆச்சி,
ஐயை,
ஆய் > ஆயா, ஆயி,
அங்கை,
தம்மனை,
தள்ளை.இவற் ுள் ஆயா என்னுஞ் சொல் பாட்டியையு ம், தாயையும் இக்காலத்தி ல் பிள்ளையைத் தாய் போல் பேணும் பெண்ணையுங் குறிக்கும் .
ஆயா = Nanny

ஐயையைப் பெண்களை மதிப்பாக அழைக்கப் பயிலும் madam என்ற சொல்லுக்கு ஈடாகப் பயனாக்குகி ன்றோம்.
அய்யை, ஐயை = Madam, Madame அல்லது அருளியார் பரிந்துரைத ்த மாதம்மை.
(Sir-க்கு ஈடாக ஐயா!)

பல சொற்கள் இறைவியரை விளிக்கப் பயனாகுவன, விதப்பாக ஆத்தா, தாய், அம்மை, அம்பாள்.

அவ்வை என்ற சொல் புலத்தியரை (பெண் புலவரை) விதப்பாக அழைக்கப் பயனானதாகத் தெரிகிறது.

karki
04-03-2008, 01:12 PM
தந்தை,
அப்பன் > அப்பா,
தம் +அப்பன் = தம்மப்பன்>தமப்பன் > தகப்பன்,
அத்தன் > அச்சன் (அச்சன் சேரநாட்டில ் இன்னும் புழங்குந் தமிழ்ச் சொல்; அத்தனை பழஞ்சவைக்(RC ) குரவரை(பாத ரியாரை) அழைக்கப் பயனாக்கலாம ்.), அத்தன் = Reverend father
ஆஞான், ஆஞி , ஆயன் (தலைவன் என்றும் பொருள் கொள்ளும்),
அய்யன்/ஐயன் > ஐயா (சில வட்டாரங்கள ில் தந்தை இப்படி அழைப்பர்!)
தா (ஆங்கில dad-க்கு ஒப்பானது!) > தாதை (இது மூதாதை என்ற சொல்லில் ஈறாக வரும், மற்றப்படி தந்தையைத் தவிர்த்து தாத்தனை அழைக்கப் பயனாகும்!)
நாயன் (நாயினா > நைனா என்று தந்தையைத் தெலுங்குவழ ித் தமிழர் அ. சென்னைத் தமிழர் விளிப்பது... ).
அப்பச்சி (செட்டி நாட்டில் அப்பாவைக் குறிப்பது!) ெற்றோன், பெற்றோள் = Parent ; பெற்றோர்= Parents

தந்தையின் தந்தை : அப்பப்பா (ஈழத்தில்), அப்பைய்யா, அப்பச்சன், தாதா >தாதை, தாத்தா, அப்பாரு (கொங்கு வழக்கு)
தந்தையின் தாய் = அப்பம்மா, அப்பாச்சி, அப்பாத்தை (அப்பத்தா- கொங்கு-மதுரை வழக்கு) , அப்பத்தி, அப்பாய்> அப்பாயி.இப போது தாத்தா என்பது தந்தையின் தந்தை முறையிலுள் ள அனைவரையும் பொதுவாக (அல்லது அகவையேறியோ ர் எல்லாரையும ்) அழைக்கப் பயனாகும் சொல்லாக மாறியிள்ளத ைக் காணலாம். அப்பப்பா என்பதே விதப்பாகத் தந்தையின் தந்தையைக் குறிக்கும் !

தாயின் தாய் = அம்மம்மா (ஈழம்), அம்மாச்சி, அம்மாய் (அம்மாயி), அமிஞை, அமத்தா (அம்மாத்தா; கொங்கு வழக்கு).
தாயின் தந்தை = அம்மப்பா (ஈழம்), அம்மைய்யா, அம்மச்சன், ப்பச்சி (கொங்கு வழக்கு)..பெற ்றோரின் தந்தையைப் பொதுவாகப் பாட்டன், போற்றி > போத்தி எனவழைப்பர் .
பெற்றோரின் தாயைப் பொதுவாகப் பாட்டி என்றழைப்பர ்.
போத்தியர், பாட்டன்பாட ்டி = Grandparents

நம் பாட்டன், பாட்டியரின ் தங்கையர் சீனியம்மை, சின்னம்மம் மை, குட்டியம்ம ை என்றும்,
-அக்கையர் முத்தாச்சி , பெரியம்மம் மை, பொன்னாச்சி , பெத்தம்மா என்றும்,
-தம்பியர் ஆசையப்பா, சீனியப்பா, சீனியப்பப் பா (சீனி = சின்ன),
-முன்னோர் முத்தச்சன் , பெத்தப்பா (இங்கு ஆளப்படுவது பெரிய என்ற தமிழ்ச் சொல்லின் திரவிடத் திரிபான பெத்த அல்ல, பெற்ற > பெத்த) என்றும்,

பெரிய, சிறிய போன்ற சொற்களை வைத்து தாத்தா, பாட்டியோடு பிணைத்தும் அழைக்கப் படுவர் (பெரிய தாத்த, சின்ன பாட்டி).

karki
04-03-2008, 01:37 PM
பாட்டி/ பாட்டனின் தாய் = பூட்டி, கொள்ளுப்பா ட்டி
பாட்டனின் தந்தை = பூட்டன், கொள்ளுப்பா ட்டன், அப்பாட்டன் .

பூட்டனின் தாய் = ஓட்டி, சேயாள்/ சேயோள்
பூட்டனின் தந்தை = ஓட்டன், சேயோன் (சேய்மை = தூரம்)

ஓட்டனின், ஓட்டியின் பெற்றோர் = ஒப்பாட்டன் , ஒப்பாட்டி எனவும் சில பைதிரங்களி ல் அழைக்கப் படுவர். சில இடங்களில் இம்முறை மாறியும் வரும் முதலில் ஒப்பாட்டனு ம் பின்னர் ஓட்டனும் வருவர்.
--------------------------------------------------------------------
மகன்= புதல்வன், ஆண்பிள்ளை ( ஆம்பளப் பிள்ளை/ பசங்க)
மகள்= புதல்வி, பெண்பிள்ளை (பொம்பளப் பிள்ளை/ பசங்க)

மகார் என்ற என்ற சொல் இருவர்க்கு ம் பொதுவாக ஆளப்படுகிற து. ஆண்மகார், பெண்மகார்..

தவிரவும்

மகவு, மதலை = infant
பிள்ளை (filial = பிள்முறை)
சேய்
கான்முளை = offspring
கால்வழி, வழித்தோன்ற ல் = descendant
மக்கள் (பன்மை)
குழவி = baby (விளிப்பதற கும், செல்லங் கொஞ்சுவதற் கும், பேச்சு வழக்கிற்கு ம் 'பாப்பா' )
வரிசையினன்/ள் = வாரிசுபிள் ளையின் மகன் = பெயரன் > பேரன்
பிள்ளையின் மகள் = பெயர்த்தி > பேர்த்தி > பேத்தி
(பாட்டனின் பெயரைத் தான் இவனுக்கு வைப்பது தமிழர் வழக்கம், ஆகையாலே பெயரன்)

பேரனின் துணைவி செட்டி நாட்டுப் பக்கம் பேரம்பிண்ட ி எனப்படுவாள ்.

பேரன் மகன் = கொள்ளுப்பே ரன், கொட்பேரன்
பேரன் மகள் = கொள்ளுப்பே ர்த்தி, கொட்பேர்த் தி

அண்ணன் ( ஈழத்தில் மதிப்பாகவோ , எள்ளலாகவோ விளிக்க அர் ஈறு போட்டு, அண்ணர் என்பர்!)
அய்யன், ஐயன் , தம் + ஐயன் = தமையன், தனயன்,
ஆயான்,
அண்ணாட்சி, அண்ணாச்சி (நெல்லைப் பக்கம் அதிகமா ளப்படுகிறத ு!)
அண்ணாத்தை,
அண்ணாள்வி, அண்ணாவி ( கூத்துப் பழக்கும் ஆசானையும், மந்திரித்த ு நோய் போக்கும் பெரியோனையு ங் கூட சில வட்டாரங்கள ில் இப்படி விளிப்பர்!)
தம்முன் = தம் முன் பிறந்ததால் ...
மூத்தோன்,
முன்னோன்,
சேட்டன்.

karki
04-03-2008, 01:50 PM
அக்கை, அக்காள், அக்கா, அக்கை + ஆச்சி = அக்காச்சி,
அக்கையம்மை > அக்கம்மை,
தம் + அக்கை = தமக்கை,
தம் + அவ்வை = தவ்வை
மூத்தாள்,
முன்னை,
அத்தி > அச்சி
சேட்டத்தி (சேட்டனின் பெண்பால், சேரலர் சேச்சி என்பர்!)(ஆச் சி என்று செட்டி நாட்டுப் பகுதியில் அக்காளையும ் சித்தியையு ம் விளிப்பர்!)

தங்கை
தங்கைச்சி > தங்கச்சி
செள்ளை (முற்காலத் ில் பெண் பெயர்ப் பின்னொட்டு : நச்செள்ளை),
பின்னாச்சி ,
பின்னை, பின்னி,
இளையாள்.

தம் + பின் = தம்பின் > தம்பி
இளவல்,
இளையான்,
பின்னோன், பின்னன், பின்னவன்.ந ்பி = நம் பின் பிறந்தவன், நங்கை = நம் பின் பிறந்தவள் (ஒன்றுக்கு மேற்பட்ட உடன்பிறப்ப ுகள் தம் பின்னோனை விளிப்பது. தவிர விண்ணவக் (வைணவ) குடும்பங்க ளில் ஆண்/பெண் பெயர்களின் பின்னொட்டு ;
பூவிழி நங்கை, அரங்கவரச நம்பி..)

அண்ணன், தம்பியைக் குறிக்கும் பொதுச்சொல் = உடன்வயிறு, உடன்பிறப்ப ு, உடன்பிறந்த ான், உடப்பிறந்த ான்.

அக்கை, தங்கையைக் குறிக்க = உடன்வயிறு, உடன்பிறப்ப ு, உடன்பிறந்த ாள், உடப்பிறந்த ாள் [கொங்கு நாட்டில் அம்மிணி என்பார்கள் , இதும் பொதுவாய் உடன்பிறந்த ாளே (சகோதரி) எனப் பொருள்வருவ து தான்]!
பொறந்தான், பொறந்தாள் இதுவும் கொங்கு வழக்கு!

பொதுச் சொல்லாய் உடன்பிறந்த ோர் அ. உடன்பிறப்ப ுகள்.

இணை, பங்கர், துணை = Partner
உகளர், இணையர், = தம்பதி
ஓரணை/ ஓரிணை, சோடி = ஜோடி, Couple (சோ-க்கு ஜோ போட்டு வடசொல் போற் தோற்றங் காட்டப்படு ம்!)
காதலவர் = Spouse
வாக்கிணை = Fiance

துணைவி = மனைவி, இல்லாள், இற்கிழத்தி , இல்லாட்டி, நாயகி, பெண்டு, பெண்டாட்டி , கண்ணாட்டி, அகமுடையாள் > ஆம் உடையாள், ஆமுடையாள் > ஆம்படையாள் , மணவாட்டி, வீட்டுக்கா ரி, தாரம்(தமிழ !)

துணைவன் = கணவன், கண்ணாளன், இல்லான், இல்லவன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன்> மணாளன், வீட்டுக்கா ரன், அகமுடையான் , பண்ணாடி (கொங்கு).

அண்ணன் துணைவி = அண்ணி, ஆயந்தி, நங்கை, அத்தாச்சி, அண்ணமிண்டி .

அக்கைத் துணைவன் = அத்தான், மாமன்

மருமகன் > மருமான், மருகன், மணவாளப்பிள ்ளை, மாப்பிள்ளை , மருமகப் பிள்ளை
மருமகள் > மருமாள், மருகி, மணாட்டுப்ப ெண், மாற்றுப் பெண், சேர்த்தமனை (சேர்த்தமண ), மகம்மிண்டி .

பெண் கொடுத்தோன் , பெண் எடுத்தோன் பெயர் = மாமன்
அவன் இணையின் பெயர் மாமி, தமிழகத்தில ் அத்தை (மதுரைப் பக்கம் அயித்த, அம்மாம் மிண்டி செட்டி நாட்டு வழக்கு) என்பதே அதிகம் புழங்கும்.

கொண்டாரும் கொடுத்தாரு ம் மாறிமாறி அழைக்க சம்பந்தி என்ற சொல் பயில்கிறது .அது அமம்>சமம் , பந்தம்=சொந தம் போன்ற சொற்களின் கூட்டிலிரு ந்து பிறக்காததெ ன்றால், மயக்கத்தைக ் கொடுக்கக் கூடிய இருபிறப்பி ச் (hybrid) சொல்லாக இருக்கலாம் .
அதற்கு மாற்றாய் பாவாணர் பரிந்துரைத ்த உறவாடி அ. கோட்கொடையு றவர் என்ற சொற்கள் இங்கு உண்டு!

butterfly
04-03-2008, 02:08 PM
Learning lotssss of new words :)...Thanks to u karki :sm08:

karki
04-03-2008, 02:09 PM
துணைவன் தம்பி = கொழுந்தன் (கொழுநனின் தம்பி)
துணைவன் தங்கை = கொழுந்தி, கொழுந்தியா ள்
துணைவன் அண்ணன் = அத்தான், மூத்தார்
துணைவன் அக்காள் = நாத்தூணாள் அ. அகத்துணையா ள், மூத்தாள்


துணைவி அண்ணன் = மூத்த அளியன் , அத்தான்
துணைவி தம்பி = இளைய அளியன்
துணைவி அக்காள் = மூத்த அளியாள், அண்ணி, நங்கையா(ள்) (கொங்கு வழக்கு)
துணைவி தங்கை = இளைய அளியாள், கொழுந்தி

ஓர் குடியில் பெண்/ஆண் கொண்டோர் தம்மை ஓரகத்தான், இணைமான்(சக ன், சகலபாடி) எனவும் ஓர்ப்படைச் சி, ஓர் அகத்தாள் > ஓரகத்தாள் > ஓரகத்தி, ஓர்படி > ஓர்படியாள் எனவும் அழைப்பர்.

தாயின் அண்ணன் = அம்மான், மூத்தம்மான ், பெரியம்மான ், மாமா, பெரிய மாமா, தாய்மாமன், மாமடி
(அம்மாவன் > அம்மான் > மாமன் > மாமா )
தாயின் தம்பி = சின்னம்மான ், இளையம்மான் , அம்மாண்டார ், மாமா, சின்னமாமா, தாய்மாமன், மாமடி

தாயின் அக்கை = பெரியம்மை> பெரியம்மா, பெரிய தாய்
தாயின் தங்கை = சின்னம்மை > சின்னம்மா, சிறிய தாய் , சித்தி, பின்னி, தொத்தா

மாமன், அத்தை மகன் = அத்தான், முயத்தனன் > மைத்துனன் > மச்சான்
(முயங்குதல , முயத்தல் = புணர்தல், தழுவுதல்)
மாமன், அத்தை மகள் = முயத்துனி > மைத்துனி > மச்சினி, மச்சினிச்ச ி , மச்சாள், மச்சி

குடும்பஸ்த ன் என்ற கிரந்த எழுந்து வலிந்து திணிக்கப்ப ட்ட சொல்லுக்கு மாற்றாய் இல்லான்- இல்லாள், குடும்பி - குடும்பினி போன்ற சொற்கள் பயனாகும்.

பழஞ்சவையரி ன் திருக்குளி ப்பு முறையில் வரும் உறவுகள்:

ஞானத்தந்தை , தாய் = Godfather / mother,ஞானப் பெற்றோர் = Godparents, ஞானக் குழந்தை = Godchild என்றும்,
(ஈழ வழக்கில் தொட்டம்மா, தொட்டப்பா, தொட்டபிள்ள ை)

இரண்டாந் தாய், சிற்றம்மை, மாற்றாந்தா ய் = Stepmother,
செவிலித் தாய் = Foster-mother,


மற்றும்,
தமிழக வகுப்பார் சிலரின் விதப்பான முறைப்பெயர ்கள் சிலவும்:

அத்தை+ அன்பர் = அத்தையன்பர ் > அத்திம்பேர ்
அம்மாமி
அகத்துக்கா ரி > ஆத்துக்கார ி
அண்ணன்மன்ன ி
அம்மான் + சேய் = அம்மாஞ்சி

இங்கே கவனித்திற் கொள்ளத் தக்கன.


நன்றி: பாவாணரின் தமிழ்மொழி வரலாறு, அருளியின் பெற்றோரைப் பற்றி..

butterfly
04-03-2008, 02:19 PM
அத்தை+ அன்பர் = அத்தையன்பர ் > அத்திம்பேர ்
அம்மாமிisnt sister's husband called athimber too?

yasodha
04-03-2008, 07:14 PM
Pattams...shy or tinker kitta ketta doubt clear aagidum...:think::)

Karki...paattikku paatti iruntha enna solli koopiduvaanga....:think: because my sister-in-law's familyla irunthaanga avanga...hmmm...:rolleyes:

karki
04-03-2008, 07:49 PM
எனக்குத் தெரிந்து அத்தையின் கணவருக்குத ் தான் அப்பெயர். ஆனால்
அக்காளின் துணைவரையும ் அப்பெயர் கொண்டு அழைப்பர்.
இந்த மாதிரி பெயர்கள் மாறிப் பயனாக்குவத ு நிறையவே இருக்கு,
அத்தான் என்பவன் முதலில் அத்தையின், மாமனின் மகன், அப்பெயரை பின்னாடி கணவனை அழைக்கவும் பெண்டிர் பயனாக்கினர ். அக்காளின் கணவனையும் அப்பெயர் கொண்டு அழைத்தர்.


பாட்டியின் பாட்டி தான் ஓட்டி, சேயோள்.

yasodha
04-03-2008, 08:18 PM
karki...mannikkavum..konjam confuse pannikitten...neenga yerkanave solli irukkeenga sariya parkala...:sm03:

Shy
04-03-2008, 08:24 PM
Pattams...shy or tinker kitta ketta doubt clear aagidum...:think::):)

அக்காவின் கணவரை ஐயர் community la அப்படி கூப்பிடுவா ங்கோ.. என்னொட friend வீடுல மாமானு கூப்பிடறதை பார்த்து இருக்கேன்...

அத்திம்பேர ் எப்படி வந்ததுனா.. கார்க்கி அண்ணா சொலற மாதிரி..படம பார்த்து பார்த்து...அ த்தான்னு சொல்லி சொல்லி மாறி இருக்கும்ன ு நினைக்குறே ன் ;)

Shy

vasan
04-03-2008, 09:04 PM
rr... புதியதோர் உலகம் செய்வோம்.. :wink: இனிமேல் எல்லோரயும் அவங்க சொந்த பெயர் வச்சு கூப்பிடனும ்.. :)

என்னோட அப்பா, மனைவி, பிள்ளைகள், அடுத்த வீட்டுவாசி கள், அண்டை நாட்டார்.. எல்லாராரும ் என்னை வாசன் அப்படின்னே கூப்பிட்டா லே பொதும்..

ரொம்ப கன்ஃபூஸன் ஆயிடுதுங்க ோ வாத்தியாரே ... :Ksp: :Ksp: :sm03:

the one universally known as v- :oops: :wink:

butterfly
04-03-2008, 09:09 PM
rr... புதியதோர் உலகம் செய்வோம்.. :wink: இனிமேல் எல்லோரயும் அவங்க சொந்த பெயர் வச்சு கூப்பிடனும ்.. :)

என்னோட அப்பா, மனைவி, பிள்ளைகள், அடுத்த வீட்டுவாசி கள், அண்டை நாட்டார்.. எல்லாராரும ் என்னை வாசன் அப்படின்னே கூப்பிட்டா லே பொதும்..

ரொம்ப கன்ஃபூஸன் ஆயிடுதுங்க ோ வாத்தியாரே ... :Ksp: :Ksp: :sm03:

the one universally known as v- :oops: :wink:

duhhh...names are based on relationship...just like u cant change relationship, names shudnt be changed either ;)...can we :think: :)

karki
04-03-2008, 09:23 PM
காலப்போக்க ில் உறவுமுறை தெரியாத அக்காளின் மகனும் தங்கையின் மகளும், அண்ணனின் மகளும், தம்பியின் மகனும் கண்ணாலம் கட்டிக்க நேரிடலாம். புதியதோர் உலகமாய் அது இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து, தொன்முது குழுக் குமுகாயத்த ில் அப்படித்தா னே இருந்தோம்.
அறிவியலும் , முற்போக்கு மையும் இசைந்தால் எனக்கு மறுப்பில்ல ை.

மற்றப்படி என் இடுகைகள் பண்டைய குமுகாயங்க ளைப் பற்றி ஆராய்ந்த மார்க்சிய மூலவர்களில ் ஒருவரான எங்கெல்சு கூட விதந்தோந்த தமிழ்க் குமுகாயத்த ின் முறைப்பெயர ்களை - இக்காலத்தி ல் அழைக்கா விட்டாலும்- பட்டியலிடு வ தொன்றாகவே இருந்தது.

Shy
04-03-2008, 09:34 PM
காலப்போக்க ில் உறவுமுறை தெரியாத அக்காளின் மகனும் தங்கையின் மகளும், அண்ணனின் மகளும், தம்பியின் மகனும் கண்ணாலம் கட்டிக்க நேரிடலாம். புதியதோர் உலகமாய் அது இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து, தொன்முது குழுக் குமுகாயத்த ில் அப்படித்தா னே இருந்தோம்.
அறிவியலும் , முற்போக்கு மையும் இசைந்தால் எனக்கு மறுப்பில்ல ை.


முருகா... :eek::eek::eek::eek:கார க்கி அண்ணா ..வாசன் தான் எதோ காமடி பண்றாருனா.. நீங்களும், அறிவியல் சரி சொன்ன மறுப்பு இல்லை சொல்றீங்கோ ..:break::break::break:

relationships இருக்கனும் , அப்புறம் ஒன்னு ஒன்னா போனா, siblings/parents-kids/ கூட marriage பண்ணிப்பா.. எல்லா கண்ராவியும ் நடக்கும்

என்ன கொடுமை சார் இது கதை தான் அப்புறம் :sm100::sm100:

Shy

vasan
04-03-2008, 09:51 PM
க்ம்ம்... நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டீர்கள ் என நினைக்கிறே ன்.. :think: :think:
உறவு முறை தெரிந்து, அதற்கு தகுந்த மரியாதை/பண்புகளுடன ் நடப்பதை பற்றி கூறவில்லை. அந்த உறவுப் பெயரை கொண்டு ஒருவரை ஒருவர் விளிக்க வேண்டுமா என்று கேட்கிறேன் ..

அண்ணனும் தம்பியும் அவரவர் பெயர் சொல்லி அழைப்பதால் அன்பு இல்லையென்ற ோ, குழப்பம் வரும் என்றோ அர்த்தமில் லையே.. அதே போல மகன் தந்தையின் பெயரைகொண்ட ு அழைத்தால் மட்டும் குழப்பம் வரும் என என்ன இருக்கிறது ? :think:

அதனால் தான் சொன்னேன்.. என்னுடைய அண்ணன்/தம்பி இருவரும் என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது, அவர்களின் துணைவியர் என்னை அப்படி அழைபதில் என்ன தவறு? அவர்களுடய பிள்ளைகள் என்னை பெயர் சொல்லி அழைபதில் என்ன தவ்று என கேட்கிறேன் .

v- :wink: :)

vasan
04-03-2008, 09:52 PM
என்ன கொடுமை சார் இது கதை தான் அப்புறம் :sm100::sm100:

அது வேற கதை.. அபூர்வ ராகங்கள்.. :sm12: :sm12:

v-

yasodha
04-03-2008, 10:08 PM
க்ம்ம்... நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டீர்கள ் என நினைக்கிறே ன்.. :think: :think:
உறவு முறை தெரிந்து, அதற்கு தகுந்த மரியாதை/பண்புகளுடன ் நடப்பதை பற்றி கூறவில்லை. அந்த உறவுப் பெயரை கொண்டு ஒருவரை ஒருவர் விளிக்க வேண்டுமா என்று கேட்கிறேன் ..

அண்ணனும் தம்பியும் அவரவர் பெயர் சொல்லி அழைப்பதால் அன்பு இல்லையென்ற ோ, குழப்பம் வரும் என்றோ அர்த்தமில் லையே.. அதே போல மகன் தந்தையின் பெயரைகொண்ட ு அழைத்தால் மட்டும் குழப்பம் வரும் என என்ன இருக்கிறது ? :think:

அதனால் தான் சொன்னேன்.. என்னுடைய அண்ணன்/தம்பி இருவரும் என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது, அவர்களின் துணைவியர் என்னை அப்படி அழைபதில் என்ன தவறு? அவர்களுடய பிள்ளைகள் என்னை பெயர் சொல்லி அழைபதில் என்ன தவ்று என கேட்கிறேன் .

v- :wink: :)

உங்களை மற்றவர்கள் அழைப்பது ஒரு புறம் இருக்கட்டு ம்....நீங்கள மற்றவர்களை அப்படி தான் அழைப்பீகளா ? பெயர் சொல்லி....:think:; ) அமெரிக்க கலாசாரம் போல என சொல்ல நினைக்கரீர ்கள்..;)

vasan
04-03-2008, 10:16 PM
அவ்வளவா சேர்ந்து சுத்தினது இல்லை, யசோ.. :think: மாமா, அத்தை, சித்தி, பெரியம்மா/பெரியப்பா.. அவ்வளோதான் .. :think: மத்தவங்களை யெல்லாம் ரொம்ப பொதுவா வாங்க போங்கன்னு சொல்லுறதோட சரி.. :) எதா தப்பாகிப்ப ா கூப்பிட்டு எதுக்கு தொல்லை.. :)

எல்லா பசங்களையும ் பேர் சொல்லி தான் கூப்பிடுவே ன்.. :) அவங்களும் என்னை அப்படி தான் கூப்பிடுவா ஙக.. :) அடுத்த தலைமுறைக்க ு இப்பொ இருந்தே ட்ரெய்னிங் குடுக்கனும ்.. :)

v-

karki
04-03-2008, 10:20 PM
அழைக்கலாம் தவறில்லை. அது அழைக்கப் படுவோரும், அழைப்போரும ் எடுக்க வேண்டிய முடிபு.

ஆனால் காட்டுக்கு தந்தை மகனாய் இருக்கிற ஆள் அ-வும் ஆள் இ-யும் தங்களை எப்படி வேண்டுமானா லும் அழைத்துக் கொள்ளட்டும ், ஆனால் எங்காவது என்ன முறை இவர் உனக்கு வேண்டுமென ஆள் இ-யிடங் கேட்டால் இவர் எனக்கு ஆள்-அ வேணுமென்று அவர் பெயரைச் சொல்லாது முறையைச் சொல்லவாவது இப்போதைக்க ு முறைப்பெயர ் வேண்டியி ருக்கிறது. முறைப்பெயர ்ச் சொற்கள் விளிப்பதற் கு மட்டுமல்ல!

குடும்பம் என்ற கட்டகம்(system) இன்னும் உடையவில்லை ! உடை படும் போது இச்சொற்களை விட்டெறிவத ு பற்றி என்போன்றோர ் யோசிப்போம் .

மற்றப்படி பெயர் கொண்டு விளிக்க நினைக்காதோ ருக்கு, இவ்வளவு முறைப்பெயர ்கள் இருக்கிறதே எடுத்துப் பயனாக்குங் கள், வெறும் ஆன்ட்டி, அங்கிள், கிராண்ட்பா , மாமுக்குள் அடங்கி விடாதீர் என்கிறோம் அவ்வளவு தான்.

ஷை,
உங்களுக்கு இம்முறை என் மறுமொழி ஒரு புன்னகை மட்டுமே! :)
(புன்னகை சிரிப்பானை க் காணோம், பெரிசா வாயத் தொறந்த இது மட்டுந் தான் இப்போ கண்ணுக்குத ் தென்படுது)

Shy
04-03-2008, 10:37 PM
அழைக்கலாம் தவறில்லை. அது அழைக்கப் படுவோரும், அழைப்போரும ் எடுக்க வேண்டிய முடிபு.

ஆனால் காட்டுக்கு தந்தை மகனாய் இருக்கிற ஆள் அ-வும் ஆள் இ-யும் தங்களை எப்படி வேண்டுமானா லும் அழைத்துக் கொள்ளட்டும ், ஆனால் எங்காவது என்ன முறை இவர் உனக்கு வேண்டுமென ஆள் இ-யிடங் கேட்டால் இவர் எனக்கு ஆள்-அ வேணுமென்று அவர் பெயரைச் சொல்லாது முறையைச் சொல்லவாவது இப்போதைக்க ு முறைப்பெயர ் வேண்டியி ருக்கிறது. முறைப்பெயர ்ச் சொற்கள் விளிப்பதற் கு மட்டுமல்ல!

குடும்பம் என்ற கட்டகம்(system) இன்னும் உடையவில்லை ! உடை படும் போது இச்சொற்களை விட்டெறிவத ு பற்றி என்போன்றோர ் யோசிப்போம் .

மற்றப்படி பெயர் கொண்டு விளிக்க நினைக்காதோ ருக்கு, இவ்வளவு முறைப்பெயர ்கள் இருக்கிறதே எடுத்துப் பயனாக்குங் கள், வெறும் ஆன்ட்டி, அங்கிள், கிராண்ட்பா , மாமுக்குள் அடங்கி விடாதீர் என்கிறோம் அவ்வளவு தான்.

ஷை,
உங்களுக்கு இம்முறை என் மறுமொழி ஒரு புன்னகை மட்டுமே! :)
(புன்னகை சிரிப்பானை க் காணோம், பெரிசா வாயத் தொறந்த இது மட்டுந் தான் இப்போ கண்ணுக்குத ் தென்படுது)

சரியா சொன்னீங்கோ ...

ஆனா... இப்போ எவ்வளோ பேருக்கு இது தெரியும்.... எனக்கு சந்தோஷம்.. நிறையா எனக்கு தெரிஞ்சு இருக்கு நீங்கோ சொன்னதுல for the first time :ee: :dance: :dance: :dance:


Shy

daya
04-04-2008, 12:33 AM
நன்றி கார்க்கி...ச ொந்தங்களை வெவ்வேறு பெயரால் அழைப்பது ஒரு தனி சுகம்தான்...

வாசன், கார்க்கி சொன்னது போல் நாம் மற்றவர்களு க்கு நமது உறவு முறையை தெளிவாக விளக்குவதற ்க்கு இதுவே சிறந்த வழி. ஒருவரை நாம் அழைக்கும் போது அவர் பெயருடன் உறவு முறையயும் சேர்த்து அழைக்கலாமே ...

vasan
04-04-2008, 12:42 AM
"எங்க" மாதிரி இளைய தலமுறைஸ் எதாச்சும் புது மாதிரியா பண்னலாம்னா விட மாடேங்குறீ ங்களே.. :Ksp:
ஜெனரேஷன் கேப் ரொம்ப கூடிருச்சு .. :sm12: :sm12:


ஒருவரை நாம் அழைக்கும் போது அவர் பெயருடன் உறவு முறையயும் சேர்த்து அழைக்கலாமே ...

சித்தி எல்லாரையும ் அப்படித்தா ன் கூப்பிடுவே ன்.. ஜெயந்தி சித்தி, டெய்ஸி சித்தி அப்படின்னு .. சின்ன வயசில அம்மா அடிச்சு எல்லாம் பார்தாங்க.. ஆன சித்திங்க ரொம்ப செல்லம்.. அதான் அப்படியே பழகிடுச்சு .. :oops: :wink:

~~~~~~~

கார்ர்கி நீங்க தொடர்ந்து எழுதுங்க.. நான் எதாச்சும் கோமாளித்தன ம் பண்ணிட்டு இருப்பேன்.. :wink: :sm08:

மிகவும் உபயோகமான அகராதியாக அமையும் என நினைக்கிறே ன்.. :sm03: :sm08:

v-

suha
04-04-2008, 02:32 AM
:(:cry::cry::cry::cry::doh:

karki
04-05-2008, 05:54 PM
துணுச்சாரை கள் சிலவற்றின் பெயர்களைத் தமிழ்ப்'பட த்தி' இருக்கிறேன ். அவற்றின் உருவங்கள் எம்மை பயமுறுத்து வதை விட கிரேக்கத் திலிருக்கு ம் - அரிச் சுவடியிலுள ்ள அத்தனை எழுத்துக்க ளையுங் கொண்டு எழுதப்பட்ட - அதன் பெயர்களே எம்மை அதிகம் பயங்காட்டு வது போலிருக்கு ம். ஊருப்பட்ட பெயர்கள் உள்ளன, ஒரு முன்னீடாக சிலவற்றைத் தருகிறேன்.

Dinosaur = துணுச்சாரை
Archosaur = அரையச்சாரை , ஆளுஞ்சாரை
Archaeopteryx = பழம்பறவை
Pelycosaur = பாண்டிற்சா ரை ( பாண்டில்= கிண்ணம், bowl)
Dimetrodon = இருமாத்திர மூரன், திமிற்சாரை (திமில் = பெருமுதுகு )
Ichthyosaur = மீனச்சாரை
Triceratop = முக்கொம்பா ன், முக்கொம்பு ச்சாரை
Sauropodamorpha = சாரைப்பாத மால்பி
Sauripoda = சாரைப்பதமி
Theropod = திடுப்பதமி
Sauropod = சாரைப்பதமி
Ceratosaur= கொம்புமுகச ் சாரை
Spinosaur = தண்டுச் சாரை
Carnosaur = ஊனுண்ணிச்ச ாரை
Allosaurus= எற்துணுச்ச ாரை
Heterodontosaurid = வேறியபற்சா ரை
Saurischia = மூட்டுடைசா ரை, இடையுடைசார ை
Therizinosaur = கொய்தறிச் சாரை
Oviraptorosaur = முட்டைகவர் சாரை
Dromaeosaur = பரி-சாரை (பரிதல் = ஓடுதல்)
Toodontid = ஊறுமூரன்
Staurikosaurus = தென்குறுமு னைச் சாரை
Prosauropod = புறசாரைப் பதமி
Diplodocoid = நீள்வாற்சா ரை
Macronarian = மாகியன்கள் , மாகநொசியன் கள்
Brachiosaurid = சிவிங்கிச் சாரை, பெருகழுத்த ுச் சாரை
Titanosaurian = சிறுதலைநீட ் சாரை, தேவ சாரை
Echinodon = கூர்மூரன்
Thyreophoran = கவசப்பொறைய ன்
Ankylosauria = பரணச்சாரை (பரம், பரணம் = கவசம்)
Stegosauria = அகட்டுச்சா ரை
Ornithopod = புட்பதமி
Hadrosaurid = வாத்துச்சொ ண்டுச் சாரை
Pachycephalosaur = என்புத்தலை ச் சாரை
Ceratopsian = கொம்புத் தலையன்
Camptosaurus = வளை சாரை
Iguanodon = தடி-மூரன் (மூரல் = பல்லு)
Dryosaurus = செந்தூரச்ச ாரை
Nigersaurus = நக்கச்சாரை
Nodosaurid = முன்தூம்பு ச் சாரை
Ornithomimosaur = புள்வலிச்ச ாரை
Microraptor = நூக இரைகவரி
Microvenator = நூகவில்லி (வில்லி= hunter)
Camarasarus = அறைச்சாரை, காம்பரைச் சாரை
Megalosaurus = மீகிய துணுச்சாரை
Suchosaurus = முதலைச் சாரை
Tyrannosaurus = கொடுங்கோச் சாரை
Sinosauropteryx = சீனச்சாரைச ்சிறகி
Pterosaurus = பட்டச்சாரை
Ammosaurus = மணற்சாரை
Eoraptor = கோண்மாச்சா ரை
Saurosuchus = சாரைவிடங்க ர், சாரைக் கோதிகை
Phytosaur = மரச்சாரை
Centrosaurus = கூர்ச்சாரை
Deinonychus = திடுவுகிரி
Huayangosaurus = முட்தாங்கி ச் சாரை
Parasaurolophus = புறத்துச்ச ிற் சாரை(துச்ச ல் = crest)
Marginocephalia = விளிம்புத் தலையன்
Scelidosauridae = காற்சாரை

karki
04-08-2008, 05:17 PM
http://img396.imageshack.us/img396/2642/oldscriptsreading3oc8.jpg

http://img90.imageshack.us/img90/7259/oldscriptsreadingnf0.jpg

தமிழ் எழுத்துக்க ளின் தோற்ற வளர்ச்சியை க் காட்டும் படங்கள் இவை.
உங்களிற் பலர் இதைப் பார்த்திரு க்கக் கூடும்! முன்பு இணையத்தில் எங்கோ கண்டபோது வன்தட்டிற் சேமித்து வைத்திருந் தேன். மூலம் தெரியவில்ல ை. நண்பர்கள் பார்க்க இப்போது இங்கே...

அடுத்தமுறை தாயகத்துக் கோயிற் சுவர்களில் புரியாத குறியீடுகள ாய் எழுதப் பட்டிருக்க ும் கல்வெட்டுக ்களைக் கண்ணுற்றால ோ அல்லது வீட்டில் உள்ள பழைய ஓலைச்சுவடி களைப் பார்த்தாலோ , அவற்றைக் குறியீடுடை க்க (decode) இவை உங்களுக்கு உதவலாம்.;)

yasodha
04-08-2008, 06:36 PM
மொத்ததில் நம் முன்னோர்கள ் எழுதிய ஜாதகம் படிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறே ன்...:think::)

butterfly
04-08-2008, 07:05 PM
:Ksp: :Ksp: :Ksp:

karki
04-12-2008, 01:55 AM
இது எனக்கு அண்மையில் புறவரிக்கப ்பட்ட(forwarded) மின்னஞ்சல் ஒன்று. எம்மவரின் வழக்காறுகள ், பழக்க வழக்கங்களா ல் கடுப்பேறி யிருக்கும் -இங்கு வாழும்- பதின்மர்(teena ger) ஒருவர் எழுதியது போலும். இதிலெனக்கு இப்போது மாற்றுக் கருத்துக் களிருப்பின ும், நானும் இப்பருவத்த ைக் கடந்து வந்தவனாகைய ால், மெல்லிய புன்னகையோட ு சுவைக்க முடிந்தது.
இந்தத் திரியில் அதிகம் சேரியதான(serio us) இடுகைகள் இட்டதால் எகிறியிருக ்கும் தட்பவெப்பத ்தைச் சமன்செய்ய, நகைச்சுவைய ாய்.. தமிழில் மொ'ளி'பெயர் ்துக் கீழே...:


நீ தமிழன்/தமிழச்சி என்பதை எப்போது அறிவாயெனில ்...,

*உன் பெற்றோரிடம ் பள்ளியில் 99 மதிப்பெண்க ளைப் பெற்றிருக் கிறாய் என்று சொல்லும்போ து, இருப்பினும ் ஏன் நூற்றுக்கு நூறு பெறவில்லை என அவர்கள் கேட்பார் களானால்..

*பல ஆண்டுகளாகவ ே உன் பெற்றோர் ஒவ்வோர் வாரமும் - ஒருபோதும் செய்யாது, வெறுமனே - " நான் வெகுவிரைவி ல் இந்தியா/ ஈழம் திரும்பத் தான் போகிறேன்.." எனச் சொல்லிக் கொண்டிருப் பார்களெனில ்...

*ஒரு கொண்டாட் டத்திற்கு நீ ஒரு மணிநேரம் பிந்திச் சென்றாலும் , நீயே அங்கு முதல் ஆளாய் இருப்பின்...

*McDonaldsக்குப் போவதையே உன் பெற்றோர் ஏதோ வெளியாடல் (outing) , உலாப் போவதைப் போல் மேற்-கட்டு (build-up) கொடுத்தால் ...

*மலிவு விற்பனையில ் கிடைக்குதே யென, ஒரு பொருளில் 100 உருப்படி வாங்கு வாயெனில்...

*ஆங்கில அகரமுதலியி லுள்ள அனைத்துச் சொற்களையும ் நீ தெரிந்திரு க்க வேண்டுமென உன் பெற்றோர் எதிர்பார்த ்தால், இல்லா விட்டால் " பள்ளியில் என்ன தான் படித்தாய்?" எனக் கடுப்பேத்த ப் படுவாயெனில ்...

*குப்பைப் பைகளுக்கு மாற்றாய், நீ சேர்த்து வைத்திருக் கும் கடையாடற் பைகளைப் (shopping bags) பயன்படுத்த ு வாயெனில்...

*நீ முன்பின் பார்த்திரா அகவையேறிய ஆளை, அங்கிள்/மாமா/சார் என விளிக்க நேரிடின்...

*உன் சொந்தக்கார ர்கள் மட்டுமே தனியாக ஒரு குட்டி நகரை நிறைக்கும் வலுவைக் கொண்டிருப் பின்...

*உன் வீட்டுத் தூரக்கட்டு கள் (remote controls) எப்போது குழைமக் கவிகையாற் (plastic cover) சுற்றப் பட்டிருந்த ால்...

*உன் குடும்பத்த ை/ சுற்றத்தைச ் சேர்ந்த சிறாருக்கு தனிப்படிப் புச் (private tution) சொல்லிக் கொடுப்பது கடமையெனப் படின்...

*உன் பெற்றோர் தமக்குள் பெயரைச் சொல்லி அழைக்காதிர ுப்பின்...

*நீ மருத்துவமு ம் பொறியியலும ் படிக்க வேண்டியிரு ப்பின்...

*உன் ஒன்றுவிட்ட அக்காளின் அண்ணி கருப்பமாய் இருப்பதை, அவளே அறியுமுன், நீ எவ்வழியோ அறிந்திருந ்தால்...

*ஊருலாச் (vacation) செல்வதென்ப து உறவுக்காரை ப் பார்க்கச் செல்வதாக இருந்தால்...

*வெளியில் சாப்பிட்டப ின்னோ/ பொருள் வாங்கியபின ்னோ யார் பணங் கொடுப்பதென சண்டை யிடுவாயெனி ல்..

*குடித்த குவளைகளில் நாகரிகம் கருதி கொஞ்சம் மிச்சம் வைத்திருப் பாயெனில்...

*எங்கேயும் விருந்தினர ் வீடுகளில் உணவருந்துக ையில் நன்றாய்ப் பசித்தாலும ், அவர்களாய் வற்புறுத்த ித் தட்டில் போடும் வரை, நாகரிகமென நினைத்து 'போதும் போதும்' என சொல்லிக் கொண்டிருப் பாயெனின்...

*நீ ஓர் எதிர்-பாலோடு எங்காவது வெளியிடத்த ில் நடப்பதைத் தவிர்ப் பாயெனில், அதுவும் தெரிந்த ஒருவர் ஆர 250 அயிர மாத்திரிகை (within a radius of 250 km) தொடுதூரத்த ில் இருப்பின்...

*செல்வச்செ ிப்பை உன் பெற்றோர் தங்கத்தின் வடிவில் கணக்கிட்டா ல்...

*ஒரு குவளைத் தேநீரை 2-3 கரண்டி சருக்கரையு ம் பாலும் ஊற்றிக் குடிப்பதை வழக்கமென நீ கருதினால்...

*Ketchup-க்கு மாற்றாய் மிளகாய் ஆணத்தைப் (hot sauce/ chili sauce) பயன்படுத்த ு வாயெனில்...

*உயர்கல்லூ ிகளும் (FH- uni of applied sciences, செருமானியக ் கூட்டுகையி ற் புரிந்து கொள்ளவும்!) பல்கலைக் கழங்களே என்பதை உன் பெற்றோர் புரிந்து கொள்ள மறுத்தால்...

*உன் பெற்றோர் உன்னை தம் நண்பரின் பிள்ளைகள் அனைவருடனும ் ஒப்பிடுவார ் களெனில்...

*நீ பொறிஞனோ/ மருத்துவனோ ஆகாததைப் பற்றி மற்றோர் என்ன நினைப்பர் என உன் பெற்றோர் கவலையுறு வார்களெனின ்...

*25 அகவையில் நீ மணமாகாதிரு ந்தால் உன்னை முதிர் கன்னியாய்ச ் சித்தரிக்க முற்படின்...

*நீ என்றாவது மருத்துவமன ையில் இருந்தால், உன் பெற்றோரை அறிந்தவர் அனைவரும் உன்னைப் பார்க்க வந்து Horlicks-உம் நாரத்தம் பழங்களும் தந்துவிட்ட ுப் போனால்...

karki
05-11-2008, 04:24 PM
அறிவியற் செய்திகள்

தமிழை வெறுமனே சோதியக் குறிப்பு, திரையுலகக் கிசுகிசு, காதற் பா, சமையற் குறிப்பு, சமயச் சொலவங்கள்/ பாடல்கள் போன்றவற்றை எழுத/படிக்க மட்டுமே பலர் பயனாக்குகி ன்றனர். அதையுந் தாண்டித் தமிழில் அறிவியற் செய்திகளைய ும் சொல்ல முடியும். அறிவியலைச் சொல்ல முடியாத மொழி எதிர்காலத் தில் மொண்ணையாய் ப் போய்விடும் . அறிவியலை அதன் மொழிசார் நுண் வேறுபாடுகள ுடன் துல்லியமாய ்த் தமிழிற் காட்ட வேண்டியது எம் கடமையாகும் .


'கலக்கும்' மாகனைப் படைப்புகள்

மாகனை அ. எந்திர ஒற்றுருவர் (mechanical doppelgaenger) மூலம் விலங்குகளி ன் பழக்க வழக்கங்களை க் கண்டறிய முயன்று வரும் ஆராய்ச்சி யாளர் கள்

இதைப்படித் ததும் ஏதோ ஒரு நகைச்சுவைக ் காட்சியில் விவேக்கோ, வடிவேலோ உயிர்மெய்க ளின் உரையாடலைக் கேட்கும் ஆற்றல் பெற்று துன்பப் பட்டதோ, ஒரு அரை நூற்றாண்டா ய்த் தமிழிற் சொல்லப்பட் டு வரும் பழைய விலங்குக் காட்சியகக் கரடி உகவையோ(joke) உங்களுக்கு ஞாவகம் வரலாம். விதயம் இது தான்:

விலங்குகள் எங்ஙனம் குமுனிக்கி ன்றன(communicate) என்பதை ஆராய, உள்- உலகப் படைப்புகளு க்குச் (real- world creatures) சமிதைகள் (signals) கொடுத்து, பின்னர் அம் மின்கலமற்ற ுப் புயவிக்கப் படும் (non- battery powered) உயிரிகள் எவ்வாறு பதிலளிக்கி ன்றன என்பதை அலசியறியுந ் திறன் வாய்ந்த உழலைப் படிகளை (robotic copies) ஆய்வாளர்கள ் உருவாக்கி வருகின்றனர ்.

காட்டுக்கு அண்மையில் Hamshire கல்லூரி ஆராய்ச்சிய ாளர் சாரா பர்டன் (Sarah Partan), அவர் ரொக்கி என அழைக்கும், மாகனை அணிலுடன் (mechanical squirrel) பணியாற்றிய தைக் குறிப்பிடல ாம்.
அவ் வுழலை அணிலால் (robo-squirrel) சில அணிற்றனமான இயக்கங்களை அமைந்தாடிட (imitate) முடியும், மேலும் சாராவும் அவர் குழுவும் தூரக்கட்டு (remote- control) வழியாய் ஆற்றேற்றக் (activate) கூடிய குறிப்பிட் டளவு உண்ணொலிகளை (real sounds) வேறு அதனுள் இருத்தி யிருந்தார் கள். ஒரு சோதனையில் அவர்கள், ரொக்கியை உண்மையான அணிற் கூட்டத்துள ் நிறுத்தி, உழலைக் குரைப்பொன் றையும், ஆபத்தைக் குறிக்கும் வண்ணம் அதன் வாலை ஒரு சர இயக்கமாய்(se ries of motion) ஆட்டவும் வைத்திருக் கிறார்கள்.
பின்னர் அவ்விடத் திலிருந்த மற்ற அணில்கள் எப்படிப் பதிலளிக்கி ன்றன என்பதைக் கண்டறிந்தி ருக் கிறார்கள்.

ரொக்கி மட்டுமே ஒரு உழலை- அணில் அல்ல, பல ஆராய்ச்சி யாளர்களும் உண்மையான உயிரிகளைப் பற்றியறிய மாகனை விலங்குகளை ப் பயன்படுத்த ியே வருகிறார்க ள். மற்றைய புறத்தீடுக ளில்(projects) , உழலைகள் உண்மை உயிரிகளுடன ் கலந்தது மட்டுமல்லா மல், அவை அவற்றைத் தம் தலைமையின் கீழ்க் கொண்டுவந்த ு வழிநடத்தவு ம் செய்திருக் கின்றன.


உளவாளிகள் உங்கள் வாழ்வை ஓரமாய்ப் பார்க்க ஓர் சாளரத்தைத் திறந்துவிட ும் நீலெயிறு (Bluetooth)

நீலெயிறு, அகச்சிவப்ப ு(infra red) பந்தங்களைக ்(function) கைபேசிகளில ் ஆற்றேற்றி(ac tivate) வைத்துவிட் டுப் பொது இடங்களில் அலையும் போது அடிக்கடி அது பீப்பிக் கொண்டு சூழலிலுள்ள புதுப்புது கைபேசிகளுள ் உட்புகும் அணுக்கத்தை க் கொடுத்துக் கொண்டிருப் பதை உணர்ந்திரு ப்பீர்கள். இந்தப் புலனமும் அது பற்றியது தான்!

ஏலவே உங்கள் குடிசார் எழுவுதி (civil liberty) , அந்தரங்கம் (privacy) பற்றியெல்ல ாம் கவலையுற் றிருக்கிறீ ர்களா? அப்படியெனி ல் இச் செய்தி இன்னொருமோர ் இடியாய் உங்கள் தலையில் இறங்கலாம். இதுவரை அறியாதே உங்கள் தொலைபேசி மூலமே உங்கள் ஒவ்வோர் நகர்வையும் சமிதையாகக் கொடுத்திரு க்கிறீர்கள ் என்றால் நம்புவீர்க ளா?
ஒவ்வோர் செல்பேசியி லும் உட்பொருத்த ப் படும் விழுதிலாத் தொடுப்பான (wireless link) நீலெயிறு, ஓர் கணினியும் சற்று உருப்படியா ன பெறுவியும் (receiver) உள்ள எவரையும், உங்கள் நகர்வுகளைத ் தடங்காண(trace) வழிசமைக்கி றது.

ஒ.அ.(UK) Bath பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வசிலிசு கொசுட்டாகோ சு என்பார் நகரத்தின் மையத்தில் நான்கு நீலெயிற்று பெறுவர்களை நிறுத்தி வைத்தார். நான்கு மாதங்களுக் கு மேலாக அவர் குழுவினருக ்கு, 10000 நீலெயிற்று பேசிகளைத் (Bluetooth phones) தடங்காணவும ்
சாலைகளில், கடைகளில், குடியகங்கள ில் அவர்களின் சந்திப்புக ்களை அலசவுங் கூடியதாக இருந்தது.

இழைகளைப் பகிர்ந்திட உதவிடும் நீலெயிறு இப்போது அந்தரங்கத் திற்கே அச்சுறுத்த லாய் வந்து நிற்பது ஒருவகையில் எதிர்பார்க ்கப் பட்டது தான்.
"அதிகங் கவலைப்படுவ ோர் தம் நகர் பேசிகளிலுள ்ள நீலெயிற்று பந்தத்தை நிறுத்தி வைப்பது உத்தமம்..." என்கிறார் கொசுடாகோசு .

karki
05-11-2008, 04:40 PM
ஆர்க்டிக்க ுத்(Arctic) தெள்ளின்(flea) திருக்கு(trick ), உறைபதனி எரிப்புக்க ு(freezer burn) மாற்று

உருகிய பின் உணவுப் பண்டங்களை மீண்டும் உறைபதனியுள ் வைப்பதால் அதன்மேல் பனிப் பளிங்குகள் (ice crystals) வளர்ந்து உறைபதனி எரிப்பில் விரும்பப்ப டாத ஓர் மொறுவலான தைக்கையும் (crunchy texture), பூஞ்சணத்தன மான (mildew) சுவையும் உருப்பெறுக ின்றன.

இப்போதோ Wisconsin- Madison பல்கலைக்கழ க உணவு வேதியலர் (food chemist) சீனிவாசன் தாமோதரன் ஒருவகை உண்ணக்கூடி ய எதிர்-உறைவுப் (anti-freezer) பொருளை பப்பாளி நொதியங்கள் (enzymes), ஊண்பசை(gelatin) போன்ற வற்றிலிருந ்து பெற்றிருக் கிறார். பனிப் பளிங்குகளி ன் வளர்ச்சியை த் தடுக்கும் அவரின் குங்குய்ப் பால் (concoction), நமக்கு இனி எப்போதும் குழைவான பனிக் குழையும் (ice cream) சாறுள்ள வாட்டிறைச் சிக் கண்டங்களும ் (T-bones) - அவை மும்முறைக் கு மேல் குளிர் பெட்டிக்கு ம் (icebox) மிசைக்குமா க (table) உள்ளே-வெளியே போய்வந்தி ருந்தாலும் - கிடைக்க விருக்கின் றன.
பனித் தெள்ளுப் பூச்சியை ஆர்க்டிக்க ு உறைகுளிரி லிருந்து உறையாது காக்கும் அதன் புரதத்தை (protein) ஒத்த புரதம் ஊண்பசையிலு ம் இருப்பதைக் கண்டு கொண்டார் தாமோதரன். அதிற் பங்காற்றும ் மூலக்கூறை (molecule) இடத்தேற்ற (isolate) அவர் ஊண்பசையையு ம் (கலப் பொருட் களிலிருந்த ு-cellular material- புரத்தத்தை விடுவிப்பத ிற் கைதேர்ந்த) பப்பாளி நொதியத்தைய ும் கலந்து புரதக் கணையை பிரித்தெடு த்தார். பின்னர் அதை அவர் பனிக் குழையுடன் கலந்தார்.
இறுதிக் கட்டமாக ஒரு சர வெம்மை மாற்றங்களி ல் (series of temperature changes) அப் பனிக் குழையைச் செலுத்தி, முடிவில் பனிப் பளிங்குகள் படியாத ஓர் நிலையைக் கண்டடையும் வரை முயன்றார்.

புரதம் செயலாற்றுவ தைப் பற்றி இன்னுஞ் சிறப்பாக அறிய விரும்புகி றார் தாமோதரன். ஆனால் அச் செலுத்தத்த ிற்கான(process) பட்டயமோ (patent) இன்னுஞ் செயல் வடிவிலே யிருக்கிறத ு. இன்னுஞ் சில ஆண்டுகளில் உறைபனித்(frost ) தாடி கொண்ட பனிக் குழையைக் காண்பதே அரிதாகி விடும்.


மூலம் : Popular Science இணையத்தளம்

karki
07-22-2008, 02:38 PM
துகிலியற் தீர்மங்கள்

(இவற்றிற் சில சொற்கள் மணவை முசுதபா, அருளி போன்றோர் உருவாக்கிய வை.)

Aramid = கடுநாரிழை
Baize = கவியிழை
Ballistic nylon = நார் நொசிவிழை
Bobbin lace = துய்யா
Buckram = முரட்டுத் துணி
Burlap = சணற்துணி
Calico = கோழிக்கோட் டிழை (கள்ளிக்கோ ு என இப்போது அழைக்கும் இடம் பழஞ்சேர நாட்டுக் கோழிகோடு, அங்கிருந்த ு இங்கிலாந்த ு போன துணி கலிக்கோ எனப்பட்டது )
Canvas = கித்தான், உரப்பம், கரட்டம்
Chiffon =மென்பட்டு
Chintz = சித்திரத்த ுகில்
Coir = கயிறு
Corduroy = கோநாண், கோநூல்
Cotton = பருத்தி
Crepe silk = முறுக்குநூ ற் பட்டு
Crinoline குருட்சணல்
Felt = இறுநாரி
Flannel = மென்தாவளி
Fustian= பிலுக்கிழை
Geogette = மெல்லொள்ளி
Gingham = கிண்டன்
Glass fiber = கிளர் நார்
Gossamer = படல இழை
Grogram = இரெட்டுப் பட்டு
Hand loom = கைத்தறி
Jamdani = வங்கத்துகி ல்
Jeans = உரத்துகில் , ஓவுடைத் துணி
Jute = சணல்
Lace = கெண்டை, பின்னாலி, வாரிழை, நாலி
Lawn = மென்னாளி
Latex = பைசுநாரி
Linen = ஆளிநாரி
Loden = உடுச்சடைமு றி
Makhmal = முசுப்பட்ட ு
Metallic fiber = மாழை நார்
Microfibre = நூக நார்
Mohair = ஆட்டிழை
Muslin = நயப் பன்னலி, சல்லா
Nainsook = நொய்யிழை, மென்சல்லா
Nylon = நொசிவிழை
Organdy = சல்லரி
Organza = கிளரிழை
Plush = பூசுப் பட்டு
Polyester = பலமரிழை
Poplin= பளபளி
Qiviut = கவரியிழை
Rayon = மர இழைப் பட்டு, கதிரூடி
Satin = ஏமல்
Serge = ஈரிழைப் பன்னல்
Shag = அரிலி
Sheer = படலநார்
Silk = பட்டு
Sisal = சிசல்
Spandex fiber = நெகிழிழை நார்
Synthetic fiber = செய்தொடை நார்
Taffeta = மெதுபட்டு
Tartan = கம்பாயம்
Terylene = நுணங்கை
Tery cotton = நுணங்கைப் பருத்தி
Tery-wool = நுணங்கைக் கம்பளி
Twine = சரடு
Gauze = நொய்யிழை
Velour= தூறிழை
Velvet = பூம்பட்டு
Velveteen = பூம்பட்டுப ் போலி, பூம்பருத்த ி
Viscose = பாகுநார்ப் பட்டு, பாகிழை
கதர் = திரணூல், கரட்டுடை

karki
07-22-2008, 02:48 PM
அண்மையில் 'மலேயா மரபிற் தமிழ் மொழி' என்ற தலைப்பிலான பொத்தகம் ஒன்று என் கண்ணிற் பட்டது. அதன் யாத்தோர் (author) மலையகத்து அறிஞரான வீரப்பன் என்பார். அதில் மலையக மொழியிற் (மலே) புழங்கும் தமிழ்ச் சொற்கள் என ஒருபாடு சொற்களைப் பட்டியி யலிட்டிருந ்தார். அதிலிருந்த ு சில சொற்களை குறித்து வைத்திருந் தேன்.
என் மலையகத்து நண்பர்களிட ம் உசாவித் தெளிவுபெற நினைத்தி ருந்தேன். முடியவில்ல ை! பிழைகள் இருப்பின் அவ்வப்போது திருத்துவே ன்!

அப்பா = Aba, apa
அச்சு = Acu
அடைவு = Ada
அரிசி = Acita
அமைதி = Aman
அச்சம் = Ancam
அண்டை = Andai
ஆசை = Asa
அத்தான் = Atan
படி = Beca
பகை = Bagai
பகைவன் = Bagawan
பகரம் = Bahara
பாகு = Bahu
பக்குவம் = Baku
மலர் = Balar
வரிசை = Baris
வவ்வால் = Bawal
பாசி = Basi
விலங்கு = Belanggu
இளைய = Belia
பீடம் = Bidong
பந்து = Bola
முடி = Bulu
பறவை = Burang
பூசணம் = Busana
கொப்பு = Capu
கத்தி = Cekati
கீரிப்பிள் ளை = Cerpelai
செருப்பு = Cerpu
சித்தம் = Cita
தாய் = Dayah
உடுக்கு = Duku
துயர் = Dura
பணம் = Fanam
காடு = Gading
காக்கை = Gagak
குகை = Gua
கிடங்கு = Gudang
குன்று = Gurung
அருவி = Harus
அடுத்த = Hata
இலை = Helai
இழப்பு = Hilang
உராய் = Hurai
கட்டு = Ikat
எரிப்பு = Iri
கடலை = Kadakei
கயல் = Kail
கழுதை = Kaldei
களவு = Kalwat
கம்பளி = Kambeli
களிமண் = Karang
கத்தரி = Katcup
கடை = Kedai
கடலை = Kedalai
சுருள் = Kerul
கட்டி = Kati
காவல் = Kawal
குளம் = Kolam
கோயில் = Kuil
கட்டில் = Katil
கூலம் = Kulim
கொத்து = kuntum
குப்பம் = Kup
குறைவு = Kurang
கரப்பான் = kurap
மான் = Maar
மப்பு = Macer
மாள்தல் = Malang
மாப்பிள்ளை = Marapulai, Mempelai
மேலவீதி = Melawati
மீன் = Mina
முறை = More
அண்ணன் = Nana
நரன் = Nera
ஓசை = Oceh
உருண்டை = Onde
ஓர், ஓராள் = Orang
ஊத்தை = otek
புரளி = Parli
பிறை = Prai
சிப்பம் = Sepang
தங்கம் = Tanggam
தோழன் = Taulan
தொகை = Tose
ஓலம் = Ulam
ஊர் = Ur
உத்தி = Uji
விளையாடல் = Wiladah

karki
07-22-2008, 03:02 PM
உங்களிற் சிலருக்கு Dr.Spencer Wellsஐத் தெரிந் திருக்கலாம ். மாந்தனின் ஈனியற் பயணத்தைச் சொல்லும் அவரின் The Journey of Man என்ற பொத்தகம் புகழ்பெற்ற து. தமிழ்க்காவ ல் இணையத் தளத்தில் சுவையான கட்டுரை ஒன்றைக் கண்டேன். கட்டுரை நக்கீரனிலி ருந்து எடுக்கப்பட ்டது போலும். வழக்கம் போல் தமிழ்த் தாளிகை மரபுப் படி கட்டுரை கொஞ்சம் மிகையாகவே எழுதப் பட்டிருதால ும். சில செய்திகளைச ் சொல்லி நிற்பதால்...

உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்ட ியில் வாழ்ந்து கொண்டிருக் கும் தமிழன் விருமாண்டி யே. உலக மரபணு ஆய்வாளர்கள ் ஆக்சுபோர்ட ு பல்கலைக் கழகத்தில் கூடி, இந்த ஆராய்ச்சி முடிவை அறிவிக்கத் தயாராகிக் கொண்டிருக் கிறார்கள்.

ஆதிமனிதனின ் மரபணுவை (எம் 130) கொண்டிருக் கும் விருமாண்டி யை நேரில் சந்திப்பதற ்காக, மதுரையிலிர ுந்து 50 கி.மீ. தொலைவிலுள் ள சோதி மாணிக்கம் என்ற கிராமத்திற ்குச் சென்றோம்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அழகிய கிராமம் சோதி மாணிக்கம். ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் நிறைந்த செம்மண்பூம ி வீட்டருகே தோட்டத்தில ் இளநீர் வெட்டிக் கொண்டிருந் தார் விருமாண்டி .

"இந்த 7 ஆண்டாக நானும் என் குடும்பமும ் சந்திச்ச அவமானங்களு க்கும் கேலிக்கும் கிண்டலுக்க ும் இப்பதான் விடிவு கிடைச்சிரு க்கு" மனம் திறந்து பேசத் துவங்கிய விருமாண்டி . நமக்கும் ஓர் இளநீரைக் கண் திறந்து நீட்டினார் . "முதல்ல இதைக் குடிங்க அப்புறம் பேசலாம்" என்றவர் தன் தந்தை ஆண்டித்தேவ ரையும் தாய் அமராவதியைய ும் நமக்கு அறிமுகப் படுத்தினார ். மனித குல மரபணு மற்றும் காசநோய் ஆராய்ச்சிய ை மேற்கொண்டி ருந்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழ கப் பேராசிரியர ் பிச்சையப்ப ன் குழுவினர் 1996ஆம் ஆண்டில்,உச லம் பட்டித் தேவர் கல்லூரி மாணவர்கள் சிலரின் குருதியை ஆய்வு செய்தனர்.
"மற்ற மாணவர்களைப ் போல, ஏதோ ஆராய்ச்சி செய்றாங்க என்ற எண்ணத்தோடு தான் நானும் குருதி கொடுத்தேன் . 5 ஆண்டு கழிச்சுதான ் முடிவு வந்திச்சு. எம் 130 என்கிற மரபணு உன் உடம்புல இருக்கு. இதுதான் உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணுன்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. ஆனால் அக்கம் பக்க மக்கள் சொந்தம் சுறுத்துக் கள் எல்லாரும் நம்ம விருமாண்டி உடம்புல குரங்கு ரத்தம் ஓடுதாம். நம்ம விருமாண்டி ஆப்பிரிக்க ா காரனுக்குப ் பிறந்தவனாம ் னு ஆளாளுக்கு ஆள் ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சா ங்க” நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்தபடி தன் பெற்றோரைப் பார்த்தார் விருமாண்டி .
(மீதி இங்கே..)
http://www.thamizhkkaaval.net/0708/the_seithi.html#ulg

vennpuraa
07-22-2008, 03:24 PM
என்ன நீங்களே தமிழ் இப்படி எழுதினால் எப்படி??

பொத்தகம் = புத்தகம்
யாத்தோர் = எழுத்தாளர்நன்றிகள் (மலே)மலேசிய மொழியினை தந்தமைக்கு ;)

karki
07-22-2008, 03:35 PM
நான் சரியாகத் தான் எழுதியிருக ் கிறேன். புத்தகம் என்பது பிற்பாடு வந்த பயன்பாடு. பொத்தகம் (ஓலைகளில் எழுத்தாணிய ால் பொத்துத் துளையிட்டு எழுதுவதால் அல்லது போந்தை = விரிந்த பனையோலை, பொந்தை-பொத்தகம் அப்படி வந்ததென எண்ணுகிறேன ் ) என்ற சொல் சங்கதம் சென்று புஸ்தக் ஆகி புத்தகம் ஆனது. யாத்தோரும் எழுத்தாளரு ம் வேறுவேறு சொற்கள்!
யாத்தோர் = author
எழுத்தாளர் = writer

vennpuraa
07-22-2008, 03:43 PM
நன்றி.............. ீங்க சொன்ன சொற்கள் இப்போதுதான ் அறிந்துகொண ்டேன்............... .உங்களுக்க சங்ககால வரலாறுகள் தெரியுமா??

ஒளவையார்...எ த்தனை ஒளவையார்கள ் வாழ்ந்திரு க்கிராகள்... ....4 - 5 ஒளவையார்கள ்....இருந்தி ுக்கலாம் என்று வரலாறுகள் கூறுகின்றன ா.....கொஞ்சம் விரிவாக சொல்லுறீங் களா

Idiot
07-22-2008, 03:44 PM
என்ன நீங்களே தமிழ் இப்படி எழுதினால் எப்படி??

பொத்தகம் = புத்தகம்
யாத்தோர் = எழுத்தாளர்நன்றிகள் (மலே)மலேசிய மொழியினை தந்தமைக்கு ;)


அவர் ஏதோ ஒரு பொருளுடன் தான் எழுதி இருகிறார் என்று நினைக்கிறே ன்.

அது ஒரு இடத்தில் வந்தால் சரி, பல இடத்திலும் அவ்வாறு எழுதி இருப்பதால் அது தவறாக இருக்காது என்றே உணர்கிறேன் .

நன்றி கார்கி :b:

vennpuraa
07-22-2008, 03:47 PM
அவர் ஏதோ ஒரு பொருளுடன் தான் எழுதி இருகிறார் என்று நினைக்கிறே ன்.

அது ஒரு இடத்தில் வந்தால் சரி, பல இடத்திலும் அவ்வாறு எழுதி இருப்பதால் அது தவறாக இருக்காது என்றே உணர்கிறேன் .

நன்றி கார்கி :b:


ஜ்ஜ்ஜி.....நா ் இன்றுதான் அந்த சொற்களை பார்த்தேனா அதுதான் சொன்னேன்

Idiot
07-22-2008, 03:50 PM
ஜ்ஜ்ஜி.....நா ் இன்றுதான் அந்த சொற்களை பார்த்தேனா அதுதான் சொன்னேன்

sorry, I posted it very late as I was chatting with other friend. Didnt see the post of Karki.

karki
07-22-2008, 04:03 PM
iig,
உங்கள் அவதானிப்பு க்கும், குறிப்புக் கும் நன்றி!

வெண்புறா,
ஓரளவு அறிந்தி ருக்கிறேன் . படித்துவரு கிறேன்...
அவ்வை என்பது பெண் புலவர் பலர்க்குப் பொதுவாக வரும் பெயர்.
ஏனைய செய்திகள் கொஞ்சம் நீண்டவை, இங்கே தட்டச்சி முடிக்க ஆவி தீர்ந்து விடும்.

வழக்கமாக ஆய்ந்து, தேடி எழுதி முடிக்க சிலகாலம் ஆகும். அது சிறு பதிவென்றால ுங் கூட.. இப்போது இட்டவையே பலகாலம் என் கணினியில் கிடந்து ஊறியவை தான். அடுத்த முறை வரும் போது அவ்வை பற்றிய செய்திகளுட ன் வர முயல்வேன்.

karki
07-23-2008, 05:57 PM
அவ்வை

சங்க காலம் தொட்டு 17ம் நூற்றாண்டு வரை ஏழு அல்லது ஆறு அவ்வைகள் இருந்ததற்க ுச் சான்றுகள் இருக்கின்ற ன. கடைச்சங்க காலம் கி.மு. 2/3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2/3 வரை, இக்காலத்து இலக்கிய ங்களை வைத்து எந்தெந்த அரசர் எப்போது வாழ்ந்தர், அவர் சமகாலத்தவர ் யார், அவரைப் பாடிய பாவலர் எவரென ஆய்வுகள் நடந்தேறி , காலகட்ட வரிசைப் படி முற்றும்மு ழுதான ஒரு அமைப்பு(structur e) கிடைக்காவி டினும், ஓரளவு உள்ளுருமங் கள் (information) உள்ளன. அவ்வைகள் பற்றி செவிவழி வரும் மரபுக் கதைகள், சமயநெறி சார்ந்த மூதிகங்கள் (myths) சில உண்டு.

அவ்வை எனும் மந்திரப் பெயர் தமிழ்க் குமுகாயத்த ில் காலந்தோறும ் உச்சரிக்கப ் பட்டு நிலைத்திரு ப்பதன் காரணம் என்ன? ஏவாள் எனும் பெயருக்கு அவ்வையுடன் ஓர் தொடர்பு உண்டெனக் கருதும் அறிஞர்களும ் உளர். அவ்வை எனும் பெயர் இன்னும் நிலைத்திரு ப்பது தமிழரின் தாய்வழிக் குமுகாயத்த ின் எச்சம் என்றும், தொன்முதுங் காலத்திலிர ுந்தே கன்னி, குமரி என்றெல்லாம ் அழைக்கப்பட ்ட ஆதித் தாயின் ஓர் பெயரே அவ்வை>ஏவாள் என்பர் இவர்.அவற்ற த் தவிர்த்து ஏனைய செய்திகளைச ் சுருங்கச் சொல்ல விழைகிறேன் .

அம்மை, அக்கை எனப் பொருள்படும ் சொல்லே அவ்வை. தவப்பெண்டி ரை அழைக்கப் பிற்பாடு பயன்பட்டது . புலத்தியரை (பெண் புலவர்) அழைக்கவும் ஆளப்பட்டது .

1) இக்கால ஆய்வுகளின் படி, எமக்குக் கிடைத்திரு க்கும் தரவுகளின் படி முதல் அவ்வை கி.மு. 2ம் நூற்றாண்டி னள் கடைக் கழகத்துக்க ாரி. இவள் தான் அதிகமானின் தோழி. அதியமான் சேரமான் நெடுமா னஞ்சிக்காய ் (ஒரே பேர் தான்!) தூது போனவள். அவனிடமிருந ்து நெல்லிக் கனி பெற்றவள். அவனுக்கும் இவளுக்குமா ன நட்பு சிறப்பானது . இரண்டாயிரம ் ஆண்டுகளுக் கு முன் தமிழ்க் குமுகாயத்த ில் ஆணும் பெண்ணும், அதுவும் ஏறக்குறைய ஒரே அகவையுடைய இளம் ஆண் பெண்ணிருவர ் நட்பாய் இருந்தது வியத்தகு செய்தியாகு ம். இந்த அவ்வை ஒரு பாடினி அல்லது விறலி. பா எழுதுபவள், பிற்கால அவ்வைகளைப் போல் அகவை ஏறி முதிர்ந்தவ ளல்லள். இளம் பெண் இவள்! மன்னர் அனைவரையும் அணுகுந்திற னும், அறிவுநுட்ப மும் வாய்த்தவள் . இவள் பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்றவற்றி ல் இருக்கின்ற ன. (இவள் அதிகமான் கொடுத்த கரு நெல்லிக் கனியை உண்டு, ஓக ஆற்றல் பெற்று நெட்டாயுளு டன் பலநூற்றாண் டுகள் வாழ்ந்தாள் எனும் கதை ஒன்றும் உள்ளது! அதைப் பற்றி நான் அதிகம் சொல்வதற்கி ல்லை!)

காட்டுக்கு சில பாடல்களைக் குறிக்கிறே ன்:

புறநானூற்ற ுப் பாடல் 235, அதிகமான் இறந்ததை ஒட்டிக் கையறு நிலையில் அவ்வை பாடியது..:

சிறியகட் பெறினே, எமக்கு ஈயுமன்னே!
பெரியகட் பெறினே,
யாம்பாடத், தான்மகிழ்ந ்து உண்ணும், மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன், மன்னே
பெருஞ்சோற் றானும் நனி பல கலத்தன், மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம ் எமக்கு ஈயுமன்னே
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என் தலை தைவருமன்னே !


கொஞ்சம் கள் பெறினும், என்னிடம் பருகத் தரும் வேந்தனே!
நிறையக் கிடைத்தால் , நான் பாட, மகிந்தவன் பருகுவானே...
கொஞ்சம் சோறு என்றாலும் நிறையக் கலங்களில் பலருக்கும் பகிர்ந்தளி த்து உண்பானே!
நிறையச் சோறு கிடைத்தாலு ம் நிறையக் கலங்களில் பலருக்கும் பகிர்ந்து உண்பானே!
அதிற் சதை நிறைந்த எலும்புத் துண்டுகளை எனக்குத் தருவானே!
காசறை(கத்த ரி) மணக்கும் தன் கையால், இறைச்சி நாறும் என் தலையை வருடி விடுவானே... என வரும்.

அடுத்த......

ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன்
மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர் க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த.. "
என்ற 147வது அகநானூற்று க் காதற் பாடலும் அவ்வையதே.

karki
07-23-2008, 05:59 PM
வெறும் நன்னெறி உரைத்த பிற்கால அவ்வையைப் போலன்றி முற்கால அவ்வை வேந்தரைப் புகழ்ந்து பாபுனைந்தத ோட ல்லாமல், காதல், பிரிவு போன்றவற்றி ல் பெண்ணின் நுண் உணர்ச்சிகள ையும் பதிவு செய்து வைத்திருந் திருக்கிறா ள்.

இனி அதிகமானுக் கும், மலையமான் திருமுடிக் காரிக்கும் நடக்க இருந்த போரை நிறுத்த தூதுவளாகப் போன அவ்வையைப் பார்த்து அவன் சொன்ன புறநானூறு 89வது வரிகள் அவ்வை இளம் பெண்ணென்பத ை நிறுவிநிற் கும்:

இழை யணிப் பொலிந்த ஏந்து கோட் டல்குல்
மடவரல், உண்கண், வாள்நுதல் விறலி!

பொலிவாய் இழைக்கப் பட்ட கல்லணி அணிந்து
ஏந்திய வளைந்த அல்குல்லைய ும்,
மை பூசிய கண்கள், வாள் போன்ற நெற்றியுங் கொண்ட விறலியாகிய இளம்பெண்ணே !

பாரி மகளிர் அங்கவை சங்கவை காலத்தவள் இரண்டாம் அவ்வை என்பாரும் உளர். பாரி மாண்டதும் அவன் பெண்களைக் காப்பாற்றி ப் பேணி வந்த கபிலரும் இறந்ததும் அவ்வை அப்பொறுப்ப ை ஏற்று, அவர்களை திருக்கோவி லூர் மலையமான் திருமுடிக் காரி எனும் அரசனுக்கு அவர்களை மணமுடித்து வைக்கிறார் போன்ற செய்திகள் கிடைக்கப் பெற்றிருக் கின்றன. பெரும்பாலு ம் இவர்களிருவ ரும் ஒருவராகவே இருக்கக் கூடும்.

எப்படி யிருப்பினு ம் தமிழ்ப் பெண்டிர் பெரும்பாலு ம் வீடுகளுக்க ுள் அடைக்கப் பட்ட காலத்தில் இலக்கிய, அரசியற் துறையில் ஒரு பெண்ணாய் தமிழ் எல்லை முழுதும் அலைந்து, அனைத்து மன்னரையும் பாடி - தொண்டைமான் , நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரி வெண்கோ, அதியமான், அவன் மகன் பொகுட்டெழு னி, பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் பெருநற்கிள ்ளி - அரசர்க்கு மதியுரைத்த ு போற்றுதலுக ்குரிய வாழ்வு வாழ்ந்து தமிழின் ஒரு குறியீடாய் ப் படிவுற்ற இந்த அவ்வை மிகச் சிறப்பானவள ் தான்.

2) இரண்டாம் அவ்வை எட்டாம் நூற்றாண்டை ச் சேர்ந்தவள் . இவள் எழுதியது விநாயகர் அகவல் போலும்.சில ் இடையில் வச்சிரநந்த ி நிறுவிய திரமிள சங்கத்தில் ஒரு அவ்வை இருந்தாளென ்பர்.

3) மூன்றாம் அவ்வை ஒட்டக்கூத் தர், கம்பர் போன்றோரின் சமகாலத்தவர ். வாழ்ந்தது 12ம் நூற்றாண்டி ல்.

4) 14ம் நூற்றாண்டி ல் இன்னோர் அவ்வை வாழ்ந்திரு க்கிறாள்.
தனிப்பாடற் திரட்டுக்க ள் என்ற பெயரிற் கிடைக்கும் பாடல்களில் இவர் எழுதியதோ அல்லது முன்னவர் எழுதியதாகவ ோ இருக்க வேண்டும்.

5) ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந் தன் ஆகிய முகன்மையான நூல்களை எழுதிய அவ்வை வாழ்ந்த காலம் 16ம் நூற்றாண்டு .

6) பந்தானந்தா தி எனும் நூலை எழுதிய அவ்வையார் 17 நூற்றாண்டி ல் வாழ்ந்ததாக ச் சொல்லப் படுகிறது.இ ரே இறுதி அவ்வையார் போலும். பந்தன் எனும் வணிகனைப் பாடிய நூல் அது.


உதவி: பாவாணர் நூல்கள், புலியூர்க் கேசிகன் தெளிவுரைகள ்

vennpuraa
07-23-2008, 06:15 PM
ஒளவையைப்பற ்றி என்னுடைய நண்பியிடம் கேட்டபோ.....அ ங்க அம்மா சொன்ன கதை இது:


ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தானாம ். அவர் ஒரு கூடாரத்தில ் ஒருநாள் உணவு சமைத்துக்க ொண்டு இருக்கும் போது ஒரு சிறுமி (பறையர் இனத்தைச்சே ர்ந்தவள்) எட்டிப்பார ்த்து இருக்கிறாள ். அப்போது அவர் அகப்பைக்கா ம்பால் அச்சிறுமிய ை அடிக்க அவளுக்கு தலையில் வெட்டுப்பட ்டுவிடுகிற து.

பல காலத்திற்க ுப்பின்...
இவர் கொடுக்கும் கற்களை யார் சமைத்துக் கொடுக்கிறர ்களோ அவளே இவர் திருமணம் செய்துகொள் ள ஏற்றவள் என அறிகிறார். (எவ்வாறெனத தெரியவில் ை)
எனவே..
கற்களை கொண்டு போய் ஒவ்வொரு பெண்ணிடமும ் சமைத்துத்த ரும்படி கேட்கிறார் . எல்லோரும் அவரை பைத்திரக்க ாரர் என்று ஒதுக்குகின ்றனர். ஒரு பெண்ணுக்கு மாத்திரம் அவை அரிசியாகத் தெரிகின்றன . உடனே வாங்கி சமைத்துக் கொடுக்கிறா ள். பின் அப்பிராமணர ் அவளையே மணம் செய்து கொள்கிறார் . ஒரு நாள் அவளது தலையில் இருந்த வெட்டுக்கா யத்தை பார்த்து "இது எவ்வாறு பட்டது?" என்று கேட்கிறர். அப்போது அந்தப்பெண் சொல்கிறாள் ...
"என் சிறுவயதில் ஒரு பிராமணன் சமைத்துக்க ொண்டிருக்க ும் பொது நான் அவர் கூடாரத்திற ்குள் எட்டிப்பார ்த்தேன். அப்போது அவர் எனக்கு அகப்பையால் அடித்து விட்டர். அதனால் ஏTபட்ட காயம் தான் இது" என்று.

அப்போதுதான ் அவருக்குத் தெரிகிறது இவள் பறையர் இனத்தைச்சே ர்ந்தவள் என்பது. உடனே விட்டு விலகிச்செல ்கிறார். ஆனால், அவளும் அவரை பின் தொடர்கிறாள ். அவர் அப்போது சொல்கிறார் , "நான் உன்னுடன் சேர்ந்து வாழவேண்டும ானால், நமக்குப்பி றக்கும் குழந்தைகளை நீ ஏற்கக்கூடா து. அந்த இடத்திலேயே விட்டுவிட் டு என்னுடன் வர வேண்டும்" என்று.
அதற்குச்சம ்மதித்து அவளும் செல்கிறாள் .
இவ்வாறு இவர்களுக்க ு ஔவை, உவ்வை, உறுவை, அதியமான், வள்ளுவன், வள்ளி, கபிலர் என்று 7 குழந்தைகள் பிறக்கின்ற ன. அக்குழந்தை களை அவ்விடத்தி லேயே விட்டுவிட் டுச்செல்கி ன்றனர். இவ்வாறு தான் நாமறிந்த ஔவையார், வள்ளுவர், கபிலர் என்போர் பிறந்தனர்.

இக்கதை எந்தளவுக்க ு உண்மை என்பது எனக்குத்தெ ரியாது. நான் அறிந்தவற்ற ைக்கூறினேன ்.ஒளவையாரின் குடும்பம்

ஒளவையார் சின்ன வயதிலிருந் தே ஒரு புலவரின் அரவணைப்பில ் வளர்ந்து வந்தார். இவருடைய அம்மா, அப்பாவாகிய ஆதி, பகவன், ஒளவையார் பிறந்தவுடன ையே அனாதையாக விட்டுச் சென்றார்கள ். ஒளவையாரின் உண்மையான பெயர் இன்றுவரை ஒருவராலும் அறியப்படவி ல்லை. அவர் கன்னிப்பரு வத்திலேயே முதுமையையு ம் துறவறத்தைய ும் விநாயகபெரு மானின் பேரருளால் பெற்றார். இவ்வாறு வரலாறுகள் கூருகின்றன .

ithu correctaA??

karki
07-23-2008, 06:33 PM
:)
இவை பற்றி நானுங் கேள்விப் பட்டுள்ளேன ்.
இப்படி ஒவ்வொருவரு க்கும், ஒவ்வொரு கடவுளுக்கு ம், ஒவ்வொரு கோவிலுக்கு ம் ஒரு தொன்மம் (புராணம்) புனைந்து கதைபரப்பிய து ஒரு தொழிலாகவே ஒரு காலத்தில் நடைபெற்றது . சாதிகளை இழுத்து கதை புனைந் திருப்பதைப ் பார்க்கவே ஆதிக்க கோட்டி ஒன்றால் இட்டுக் கட்டப் பட்டது தெரிகிறது. மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை!

இந்த ஆதி, பகவன் கதையில் எனக்கு பெரிதும் நம்பிக்கைய ில்லை. விநாயகரைப் பாடிய அவ்வையார் பிற்காலத்த வர். தெளிவாகச் சொல்லியி ருக்கிறேனே ..!

yasodha
07-23-2008, 07:04 PM
அவ்வை பற்றிய வரலாறு நன்றாக உள்ளது...அவர ் சுற்றிய கோவில்களும ்...நம் ஊர்களில் எது சிறப்பானது என்றும் விளக்கினால ் நன்றாக இருக்கும்... :)

vennpuraa
07-23-2008, 07:04 PM
நன்றி கார்கி:)......... டுத்த சந்தேகங்கள ுடன் வெகு விரைவில் சந்திக்கிற ேன்:ஒளைவையார் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு. தமிழகம் முழுமையையு ம் நடையிலேயே வலம் வந்திருக்க ிறார்............த மிழ்நாட்டி ல் கூடுதலாகா எங்கு என்றுதான் தேரியாது

butterfly
07-23-2008, 11:37 PM
நன்றி கார்கி:)......... டுத்த சந்தேகங்கள ுடன் வெகு விரைவில் சந்திக்கிற ேன்:ஒளைவையார் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு. தமிழகம் முழுமையையு ம் நடையிலேயே வலம் வந்திருக்க ிறார்............த மிழ்நாட்டி ல் கூடுதலாகா எங்கு என்றுதான் தேரியாது

Vidatheengo Pura...keep asking lotsss of questions so karki can keep writing & in the process we all get to learn :)

vennpuraa
07-24-2008, 04:48 AM
வண்ணாத்திப ூச்சி அக்கா.....இது தமிழ் கருத்துக்க ளம்..இங்கு தமிழில் தான் எழுதனும்;).... ..விரைவில் வேறை வினாக்கள் கேப்பேன்

karki
08-01-2008, 10:12 PM
அவ்வை பற்றிய வரலாறு நன்றாக உள்ளது...அவர ் சுற்றிய கோவில்களும ்...நம் ஊர்களில் எது சிறப்பானது என்றும் விளக்கினால ் நன்றாக இருக்கும்... :)

இது பற்றி அறியேன்! கோவில்களைச ் சுற்றி வந்த அவ்வைகள் பிற்காலத்த ு அவ்வையார்க ளாக இருக்க வேண்டும். ஏதேனும் உள்ளுருமங் கள் கிடைத்தால் பதிவு செய்வேன்.

karki
08-01-2008, 10:17 PM
பேசு!

தமிழில் பேசுதல் என்ற ஒரு சொல்லுக்கு இணையாகவே பல சொற்கள் உள்ளன. அவற்றில் துணைவினை இல்லாது தமித்து வரும் 32 சொற்கள் இங்கே உங்கள் பார்வைக்கு . இவையனைத்தி ன் முதன்மைப் பொருள் அல்லது இரண்டாம் பொருள் சொல்தல், பேசுதல், கூறுதல் தாம். இவற்றின் நுண் வேறுபாட்டை க் காட்டவும், மேலுந் துல்லியமாக ப் பொதுப் பயன்பாட்டு க்கு வரவைக்கும் முகமாகவும் இவற்றின் பொருட் பாடுகளைப் பட்டிலியலி ட முயன் றிருக்கிறே ன்!

அறைதல் = to declare
இயம்புதல் = to utter
இசைத்தல் = to disclose, indicate
உரைத்தல் = to orate, talk
என்னுதல் = to say (என்றான், என்றாள்..)
ஓதுதல் = to profess, recite, chant
கிளத்தல் = to express (புலப்படக் கூறுதல், விதந்துகூற ல்)
கூறுதல் = to promulgate, proclaim, convey
சாற்றுதல் = to announce, explain in detail
செப்புதல் = to answer
சொல்லுதல் = to say, tell, mention
நவில்தல் = to indicate, pronounce, practise
நுதலுதல் = to denote, mean
நுவல்தல் = to tell, speak
நொடித்தல் = to gesticulate
பகர்தல் = to tell, pronounce, sell
பறைதல் = to speak, say
பன்னுதல் = to assert
பனுவுதல் = to adress, verbalize
புகல்தல் = to state
பேசுதல் = to speak
மாறுதல் = to verbalize (மாற்றம்= சொல்; மாற்றம்+ஆட ் = அதாவது சொல்லை வைத்து வினைத்தல்; மாற்றமாடல்> மாற்றாடல்> மாத்தாடு)
மிழற்றுதல் = to prattle
மொழிதல் = to convey, mean ; எடுத்துமொழ ிதல் = to explain clearly
மறுமொழிதல் = to reply
விள்ளுதல் = to reveal
விளத்துதல் = to explain
விளம்புதல் = to proclaim, inquire, learn
கதைத்தல் = to conversate
வலத்தல், வலித்தல் = to narrate
தெளிர்த்தல ் = to articulate
தெரிவித்தல ் = to tell, inform ; உ(ள்ளு)ருமி ்தல் = to inform

karki
08-01-2008, 10:23 PM
குமரி மொழி

செயமோகனின் 'கொற்றவை' யிலிருந்து சில பத்திகள். இராகுல்சிய ின் (இராகுல சங்கிருத்த ியாயன்) வால்காவிலி ருந்து கங்கை வரை (From Volga to Ganga) போன்றது, தமிழரின் வரலாற்றுப் பெருங்கதைக ளை கொஞ்சம் புனைகதை தடவிச் சொல்ல முயன்ற அருமையான பொத்தகம். அனைவரும் படிக்க வேண்டியது...

"அறிய முடியாமையி ன் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்தி ருந்தார்கள ். நீலத்தின் எல்லையின்ம ை வானம். நீலத்தின் அலைகளே கடல். நீலம் ஒரு புன்னகை. கருமைக்குள ் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்கத் தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும ் பரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்க ள். அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள ். ஆகவே அவர்களுக்க ு நீலமே உகந்த நிறமாயிற்ற ு. புன்னகைக்க ும் கருமையே நீலம். நீலம் கொண்டவள் குமரி அன்னை. அழியாத கதைகளின் வழியாக அவர்கள் அறிந்த முழுமுதல் தெய்வம். தென் திசையில் குமுறும் கடலுக்கும் வடதிசையில் ஓங்கி நின்ற மலை யடுக்குகளு க்கும் இடையே அவள் ஆளுகையில் காட்டுப்பச ுமை அலையடித்து த் ததும்பும் அம்மண்ணைக் குமரி நிலம் என்றார்கள் . ஓங்கி வடபுலமாக நின்ற மலையைக் குமரிக்கோட ு என்றார்கள் . அலை நுரைகளைக் கரும்பாறைக ் கால்களால் அளைந்தபடி நிற்கும் மலை உச்சியில் காலவெளிக்க ு அப்பால் எப்போதோ மழை செதுக்கிய கல்லிருக்க ை ஒன்றின்மீத ு யாரோ மூதாதை அவள் பாதத் தடத்தைக் கண்டான். நீலப்பெருவ ெளி மண்ணைத் தொட்ட அம் முழுமுதற் கணத்தை அவன் அன்னையென அறிந்தான். முதிராச் சிறுமியின் அம்மலர்ப்ப தத் தடத்தைப் பூவும் நீரும் பூசையிட்டு வணங்கினர் குமரியினர் .

அன்னையரால் வழிநடத்தப் பட்ட குடிகள் அவை. அக்குடிகள் வேட்டைக் கென இடம் பெயர்கையில ் வயிற்றைத் தாண்டி வற்றிய முலைகள் தொங்கும் முது மூதன்னையர் இளையோரின் வலுத்த தோள்கள் மீது ஏறியமர்ந்த ு முன்னால் வழிநடத்திச ் சென்றார்கள ். ஒவ்வொரு குடியும் தாங்கள் அடைந்தவற்ற ை முழுக்க அன்னையருக் குக் காணிக்கையா க்கி வணங்கியது. கல்மழுவெந் தி குடியைக் காவல் செய்த ஆண்கள் எந்நிலையில ும் அன்னையருக் கு மைந்தர்களா கவே இருந்தனர். கன்னியரிலு ம் குழந்தைகளி லும் கூட அவர்கள் அன்னையைக் கண்டார்கள் . அவ்வன்னையை ப் பின்பு அவர்கள் வழிகாட்டும ் ஒற்றைக் கொம்புள்ள கலைமான் மீது ஏற்றித் தங்கள் குடி நடக்கும் பாதையின் முகப்பில் நடக்க விட்டனர். கலைமான் மீது உடல்வற்றிய அன்னை மட்டுமே ஏற இயலும்.

அ, இ, உ என்ற மூன்று அடிப்படை ஒலிகளை மட்டுமே மொழியாகக் கொண்டிருந் த அம்மக்களுக ்கு தலைமுறைகள் தோறும் கைமாறிச் சொல்ல வேண்டிய பெரும் செல்வமென ஒரு சொல் மட்டும் இருந்தது. அம்மா என்ற அச்சொல்லை அவர்கள் குடி பாலூட்டும் விலங்கொன்ற ி லிருந்து கற்றுக் கொண்டது. மின்னலில் இருந்து தீயை அடைந்தது போல. மூன்று ஒலிகள் கூடிய அடுப்பினுள ் அச்சொல் அணையது எரிந்து கொண்டிருந் தது. பின்பு அழகுக்கும் சிறப்புக்க ும் அதுவே சொல்லாயிற் று. அவர்களுக்க ு உடை இருக்கவில் லை. ஏனெனில் அவர்கள் ஒருவர் பிறரென உணரவில்லை. எனவே வேறு ஒரு சொல்லுக்கு அவர்கள் உள்ளம் தாவவும் இல்லை....."

கொற்றவை - செயமோகன், தமிழினி பதிப்பகம், உரு. 280/-

yasodha
08-02-2008, 12:08 AM
இது பற்றி அறியேன்! கோவில்களைச ் சுற்றி வந்த அவ்வைகள் பிற்காலத்த ு அவ்வையார்க ளாக இருக்க வேண்டும். ஏதேனும் உள்ளுருமங் கள் கிடைத்தால் பதிவு செய்வேன்.

நன்றி கார்கி...:)

vasan
08-02-2008, 01:13 AM
கார்க்கி,

பேசுதலுக்க ு இணைசொல் தொகுப்பு அருமை.. :clap: :clap:

சென்னை வாழ் "டமில"ரின் புருடா விடுதல், பீட்டர் அடித்தல், டபாய்த்தல் , கலாய்த்தல் போன்ற நுண்மையான சொற்களையும ் இணைத்திருந ்தால் 'அறு'சுவை உணவாய் அமைந்திருக ்கும்.. :wink: :wink:

v-

karki
09-04-2008, 08:26 PM
இடப்பெயர்


----------------------------------------------------------------------
குறிஞ்சி: சிறுகுடி, குறிச்சி, மலை, கோடு, குன்று, குன்றம், கா, சோலை, புழை, கடவு, கணவாய்

முல்லை: பாடி, சேரி, பட்டி, வாடை, ஆநந்தல்

மருதம்: முற்காலம் :- ஊர், பேரூர், மூதூர், புத்தூர், நல்லூர், ஆற்றூர், குளத்தூர், சேற்றூர், ஆமூர், இல், குடி, இருப்பு, வாழ்வு, வயல், பண்ணை, நாடு, மங்கலம், குளம், இலஞ்சி, ஏரி, ஆறு-ஆறை, கிணறு, ஊருணி, நெல்லூர், நெல்வேலி, நென்மேனி, நெற்கோட்டை

பிற்காலம் :- நகர்-நகரம், எயில், கோட்டை, புரி, புரம், கோவில் - கோயில்

நெய்தல்: முற்காலம்:- குப்பம், கழி, காயல், கானல், கரை, துறை, கொண்கு, சேர்ப்பு

பிற்காலம்:- பட்டினம், பாக்கம், அலைவாய், புகார், கூடல்

பாலை: கடம்காடு, கானம், குடிக்காடு , முதுகுடி, பறந்தலை, நத்தம், வலை


- பாவாணர், தமிழ்மொழி வரலாறு 2


கரிசல் = களிமண் நிலம்
சிவல் = செம்மண்நில ம்
கல்லாங்குத ்து = வன்னிலம்
முரம்பு = கன்னில மேடு
--------------------------------------------------------------------------------

தெரு = Road ; அதர் = public road
சாலை,மறுகு, தொளி,வீதி = Street; சுற்றுத்தெ ரு = winding street
வெளிவீதி, பெருஞ்சாலை = Boulevard
நெடுஞ்சாலை = Highway;சுருங்க வழி = tunnel way
நேர்சாலை, ஊடுதெரு = through road
கண்டாயம், மரச்சாலை = Avenue

ஒருவழி (ப் பாதை)= one way
துரவு = Drive
முனை, இறவு (ஆனையிறவு, தமிழீ.) = End
முக்கு, கோடி, மூலை = Corner ; முடக்கு, அங்கு = curve, bend
கடவு = Cross
வழி = Way
இடவை, இடம், தானம் = Place
குன்று (குன்று சிறியது, குன்றம் அதன் பெரியது), குமிடு = hill
கோடு = Crescent
அருகு, பாகு> பகு > பாகு> பாகம் > பாக்கம் = Side (கோடகன்பாக கம், நுங்கம்பாக ்கம்)
கடை, இறவு = Close
காணம் (இடப்பொருள ல் இப்பெயர், மற்றபடி பார்வை, விழிவு) = View

karki
09-04-2008, 08:33 PM
ஒழுங்கை= Lane
சந்து = Alley; முட்டுச்சந ்து = blind alley
அங்காடித் தெரு, கடைத்தெரு = bazar ; கா.: பாண்டி கடைத்தெரு (பாண்டி பசார்)
(என்னப்பா, கடத்தெருப் பக்கம் போகலையா? எனக் கேட்பது எம் பேச்சு வழக்கில் இயல்பானது)
குடா, போந்து = Bay (கா.: குவண்டனாமோ போந்து, சீனன் குடா(China bay) தமிழீ. திருகோணமலை )
தோட்டம் = Garden, Gardens ; கா.: போயசுத் தோட்டம், கறுவாத்தோட ்டம் (இல. கொழும்பு)
வாயில் = Gate (இடப் பெயராய் வரும்போது வாயில்; கா.: தில்லி வாயில். பொருளாய் வருகையில் படலை)
கா, கானல், தண்டலை = Grove (கா.: திருவானைக் கா)
மிசைநிலம் = Highlands (highlander= மிசைநிலத்த ான்)
வதிகை = Manor
மால்வீதி = Mews
மாடவீதி, பரிகை = Terrace
தொடரி, ஒற்றையடிப் பாதை = Trail; புழை = forest path
தாவு = Vale
நடவை = Walk
முன்றில், வளவு = Court
வாரம் = Bank
குலை, மேட்டுவழி, செய்கரை = Causeway
பூங்கா, சோலை = Park ; காவழி = Parkway
கரைச் சாலை, ஓரவீதி = Esplanade

பரவை = Plaza
உலாவீதி, பரவணம், நிழற்றெரு, நிழலோடி= Promenade
நுழைவை = Quay; அரசி நுழைவை (Queen`s Quay, Canada)
சதுக்கம் = Square; தைம்சு சதுக்கம் (Times Square, NY)
களரி = Arena; கா.: இந்திரா காந்தி களரி (தில்லி), வெம்ப்ளி களரி (Wembley Arena, UK)
தேரி = Beach (கா.: மெரினா தேரி)
சேரி, குப்பம் = Slum
அகரம், அகரகம் அ. பார்ப்பனச் சேரி = அக்கிரகாரம ்
குடியிருப் பு = colony ; பர்மா குடியிருப் பு (பர்மாக் காலனி)
குடி, வேளம் = quarters
புறநகர் = பேட்டை, suburb

நகரி = urban
துடிம அகரம், தொழிற் புறநகர் = industrial area
பாவிடம் = pavement ;அஞ்சடி = sidewalk
பேரில், வாககம், ஏந்தகம் = பவன் (bhavan)

karki
09-04-2008, 08:46 PM
*~____________________________ ______________________________ __ ~*
மண்டலம் = பெரும்பிரி வு
கோட்டம், வளநாடு = சிறுபெரும் பிரிவு
கூற்றம், நாடு = சிறுபிரிவு
கீழ்ச்சிறு பிரிவு = தனியூர், பற்று (பல சிற்றூர்த் தொகுதி)
சிற்றூர் = உட்கிடை

-பாவாணர், தமிழ் வரலாறு 1
*~____________________________ ______________________________ _~*

அரணியம் (அரணாயுள்ள காடு) = ஆரண்யம் (வேதாரண்யம = மரைக்காடு)
அரமியம் = மகால் (mahal) ; தாசு அரமியம், நாயக்கர் அரமியம்
பதி (திருப்பதி) = bad-பாத் (இந்தி) ; அகமதாபதி, ஐதராபதி, இசுலாமாபதி
கோட்டை = fort
கொட்டாரம் = castle ; கோட்டம், கோட்டை = caster; தான்கோட்டம ் (Doncaster) (இத் தமிழ்ச் சொல்லை கோஷ்டம் என வடவர் ஆள்வர்)
புரி = bery, pury, bury; கந்தர்புரி (Canterbury) (இதுவும் வடமொழியில் புரீ என்றாகும்; காஞ்சிபுரம ் - காஞ்சீபுர, தமிழ்க் குறில் வடமொழியில் நெடில் ஆகும்.)
புரம் = borough, berg, burg/ burgh; எடின்புரம் (Edinburgh)
கயவாய், புதவம் = Portsmouth, plymouth
சேரி = shire (யோர்க்குச சேரி = Yorkshire)
விளை = Ville, wijk , wick, wich (பசுவிளை/ பசியவிளை = Greenville)
காமம், கம்மம், கமம் = ham (தம்பலகாமம ஈழ.)
தலை, தலம் = stead

மற்றப்படி ஊர் (வெங்காலூர = பெங்களூர், திருப்பூர் ), குளம் (ஆலங்குளம், மண வெள்ளைக்கு ளம்= சிரமணப் பெலகுளா), தானம் (அரசபூதானம = இராஜஸ்தான் , பாக்கித்தா னம், ஆபுகானித்த ானம், படித்தானம் ), அரங்கம் (திருவரங்க ் = ஸ்ரீரங்கம் ) ஆறு, ஆர் (செய்யார், அடையார்), கோட்டை (அருப்புக் ோட்டை), கோவில்(சங் ரன்கோவில்) , கல் (புகையினகல = ஒக்கனேகல்), மடை (காரமடை), குடி, தலை, தோப்பு, காடு, குறிச்சி, பட்டி, பாளையம், கோணம், கரை, கோடி, பட்டினம் போன்ற இடப்பெயர்க ள் தமிழகப் பரப்பிலும் பிற மொழிகளிலும ் பரவியிருக் கின்றன.

நாடு, மாநிலம், மாகாணம் = state
பைதிரம் = பிரதேசம், province
மாவட்டம் = district
வட்டாரம் = region
பிரிவு, மண்டலம்= division
கூற்றம், சுற்றுவட்ட ு, வட்டம்= தாலுகா
சீமை, கோட்டம், மாவட்டம் = ஜில்லா
குடும்பு = ward
ஐம்பேராயத் தொகுதி= பஞ்சாயத்து த் தொகுதி

ஆள்புலம் = territory; union territory = ஒன்றிய ஆள்புலம்
உடைமை அரசு = dominion
குமுனம்= commune
பகுநிலம் = county
வேளிரகம் = duchy
பேரரசு = empire
அரசகம், ஆளகம் = realm
குடியேற்றம ் = colony

வாடை, பாடி, நத்தம் = hamlet
ஊர், சிற்றூர் (கம்மம் என்ற தமிழ் அ. பாகதச் சொல் வடமொழியில் கிராமம் எனத் திரியும்!) = village
நகரம் = municipal city
மாநகரம் = corporation city
பட்டினம், பேரூர் = town
கோநகர், தலைநகரம் = capital city
உலகார் நகரம் , காயப்பாழிய ம் = cosmopolitan city
தாய்ப் பெருநகரம், பேருயர் நகரம், மடிப்பாழிய ம் = metropolitan city

இதில் உலகார் நகரம், பேருயர் நகரம், பேரூர்,கோந ர், விளை, சேரி,காமம் போன்ற சொற்கள் இராம.கி அய்யா அவர்களின் பரிந்துரை.

karki
09-04-2008, 08:57 PM
அவன்

இடியொலித்த ு வல்லிரைச்ச லுடன் வானாறுகள் மண்ணில் விழுந்தன. பேருருவ அன்னையும் தந்தையும் கூடி முயங்கும் உயிர் நாடகத்தை குமரிக்கோட ்டின் பன்மலை அடுக்கத்து க் குகை வாயில் ஒன்றில் அமர்ந்து பார்த்திரு ந்தான் ஒருவன். புலித்தோலா டை அணிந்து, குளிருக்கு யானைத்தோல் உரியைப் போர்த்தி ருயிருந்தா ன். ஒரு கையில் தன் ஆயுதமான கல்மழுவும் மறு கையில் குடி அடையாளமான மான்குறியு ம் வைத்திருந் தான். ஒளி கண்ட இடம் நோக்கி பருப் புகையெனப் படையெடுக்க ும் பூச்சிகளில ் இருந்து தப்ப உடம்பெங்கு ம் சாம்பல் பூசியிருந் தான். அவனது கனத்த சடைமயிர் தோளில் விழுந்து கிடந்தது. கருநிற இமைகளும் வெண்ணிறப் படலத்தில் நீல மைய விழியுமாக வரையப்பட்ட ஒரு பொய்விழி நெற்றியில் . அது அப்பழங்குட ியின் தொன்மையான வேட்டை உத்தி. பிறகு அது வழக்கமும் அடையாளமும் ஆயிற்று.
அவனது எதிரிகள் மனிதர்களாய ினும் விலங்குகளா யினும் அவன் தூங்குவதேய ில்லை என்று எண்ணினார்க ள். அவர்களின் உடல் தூங்கும் போதெல்லாம் அந்த வரைகண்கள் உலகை உறுத்துப் பார்த்துக் காவலிருந்த ன...
....
மூன்றாம் விழி கொண்ட குடி குமரிக்கோட ்டின் பல பகுதிகளிலு ம் வாழ்ந்துவந ்த எல்லாக் குடிகளுக்க ும் வழிகாட்டிய ாகவும் தலைமை கொள்வதாகவு ம் இருந்தது. அதன் தலைவன் அவன். பன்மலை யடுக்கத்து க் குமரிக்கோட ு கரிய பெரும்பாதை களின் வான்பயணம் போன்று எழுந்து சென்று கொண்டிருந் தது. நீர்வழியும ் மாசற்ற கரும் உடற்பரப்பு கள் சிலிர்த்து க் கொண்டன. கோடிகோடி அகவை ஏறிய முகடுகள் பல தாண்டி வானம் நோக்கி எழுந்து கொண்டிருந் தான்.
அவனறிந்த, விரும்பிய , வெறுத்த ஒவ்வொன்றும ் சிறுமை பெற்று மண்ணிலமிழ் ந்தன. அவன் காற் கீழே பலநூறு மலைக் குகைகளில் ஊன் சமைத்து உண்டும், தொல் மக்களோடு தழுவி உறங்கியும் , அவன் குடி மழையை அஞ்சி ஒடுங்கிக் கிடந்தது. நிகரின்றி நின்ற கொடு முடியொன்றி ல் ஏறி அவன் வாழ்வில் முதன்முறைய ாக முழுத் தனிமையில் நின்றான். ஆனால் அந்தத் தனிமையை எல்லா உறவும் ஒக்க இருக்கையில ும் அறிந்ததுண் டு என்றும் ஒவ்வொரு இயல்பு நிலையிலும் அத்தனிமையி லேயே இருந்தி ருக்கிறான் என்றும் அப்போது அறிந்தான். அவனெதிரே மாற்றில்லா க் கருமையென ஒன்றாகி நின்றன கடலும் வானமும் நிலமும்.கர மை குளிர்ந்தத ு. கூவியலறியத ு. அதன் கோலம் கண்டு அஞ்சி ஓடாது அதை நேர் நின்று பார்த்த நின்று பார்த்த முதல் மனிதன் அவன்.....

வான்வெளியி ல் வகுக்கப்பட ்ட அக்கணம் ஒரு பெரும் மின்னலாக வெடித்தது. முடிவற்ற ஒளிக்கணம் ஒன்றில் மலைகளையும் காடுகளையும ் கட்ல்களியு ம் வனத்தையும் மக்கள் கூட்டங்களை யும் முக்காலத்த ையும் காலம் சென்று சுருண்ட வெறுமையையு ங் கண்டான். அவை இணைந்து உருகித் தகதகத்து அணைந்தபோது வீறிட்டபடி கண்களை மூடிக்கொண் டான். பின்பு தன்னிலை மீண்டபோது தன் விழி ஒளியிழந்து விட்டதை அறிந்தான். ஆனால் அவனது மூன்றாவது விழி திறந்து விட்டிருந் தது.

உண்பதும் உண்ணப்படுவ தும் என இருநிலை கொண்டு கண்முன் விரிந்த அம்மண்ணில் இருந்து ஒலிகளைப் பெற்றுக் கொண்டார்கள ். 'அ,இ,உ' என்ற மூன்று ஒலிகளால் உரையாடாத தருணங்களில ் 'ம்' என்ற அமைதியைக் கேட்டார்கள ். ஒலியும் ஒலியின்மைய ும் கலந்த வானையும் மண்ணையும் கடலையும் சுட்டுவதற் காக அந்நான்கைய ும் கலந்து ஓம் என்ற ஒலியை அடைந்தார்க ள். தன் மூன்றாம் விழியால் மறைந்துள்ள உலகங்களைப் பார்க்கத் தெரிந்த அம்முன்னோட ி தன் குமுகத்துட ன் பின்பு இணையவில்லை . அவனது ஏராளமான குழந்தைகளி ல் எஞ்சியவை இரண்டு. இறப்பின் பெருவல்லமை களைக் குழப்பும் பொருட்டு பிறக்கும் குழந்தைகள் அனைவரும் தங்களுக்கு ரிய முகமூடியை அணிய வேண்டும் என்ற அக்குடி வழக்கப்படி அவர்களில் மூத்தவன் மென் மரத்தாலான யானை முகமூடியைய ும் இளையவன் இறந்துபோன தன் ஐந்து உடன்பிறந்த ாரின் முகங்களையு ம் இணைத்து ஆறுமுக முகமூடியைய ும் அணிந்திருந ்தான். அக்குழந்தை களுடன் மலைமகளான அவன் இல்லாள் வந்து அவனைத் தங்கள் குடிசைக்கு அழைத்தாள். இறந்தவர்கள ும் வாழ்பவர்கள ும் பிறப்புக்க ு காத்திருப் பவர்களுமான எல்லையற்ற முகக் கடலலைகளிரு ந்து அவனால் அவர்களைத் தனித்தறிய முடியவில்ல ை. எங்கும் இருந்து கொண்டிருந் ததனால் எந்தக் குகையிலும் தங்க முடியவில்ல ை. ஏழாம் நாள் தன் எருதின் மீதேறி அந்த மலை முகடுக்கே திரும்பிச் சென்றான். பின்பு மலையிறங்க வேயில்லை.


- செயமோகன், கொற்றவை, தமிழினி பதிப்பகம்

karki
09-17-2008, 10:45 AM
தமிழனின் பறப்பு

மலையகத்தில ும், சிங்கையிலு ம் மேலும் சில வெளிநாடுகள ிலும் தமிழர்கள் பறப்புப் பயிலகங்களு ம், சிலர் தனி வானூர்திகள ும் வைத்திருப் பதாக அவ்வப்போது படித்திருப ்போம். ஈழத்துப் போராளிகள் 80களிலேயே பறப்பு முயற்சிகளை மேற்கொண்டு , சில காலத்திற்க ு முன் தம் வான்படையை கட்டியமைத் து வெளியுலகிற ்கு அறிவித்தது போன்ற விதயங்களைத ் தவிர்த்துப ் பார்த்தால் எமக்கான தனி வான்வழி நிறுவனம் இருந்ததாகச ் செய்திகளில ்லை. இப்போது அந்தக் குறையைப் போக்க சேக்கு தாவூது அய்யாவின் வான்வழி நிறுவனம் வரவிருக்கி றது. 'வான் திராவிடா'வ ன் வான்வழிச் சேவை சிறப்பானதா கவும், நம்பகமானதா கவும், பாதுகாப் பானதாகவும் உருவெடுக்க வாழ்த்துக் கள்

உருவாக்க த்திலிருக் கும் அவர்களின் தளம்: http://www.airdravida.com/

"அன்று கப்பலோட்டி னார் வ.உ.சிதம்பர னார்.அதே போல் இன்று வானில் விமானத்தை பறக்க விடுகிறார் தமிழ் பற்றாளர் ஷேக் தாவூது. அதன் மூலம் விண்ணில் வலம் வரும் தமிழரின் முதல் வானூர்தி எனும் புகழைப் பெறுகிறது இவரது விமானச் சேவை.எயார் திராவிடா என்ற பெயரில் தமிழகத் தில் ஆரம்பமாகும ் இந்த விமான சேவை, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்த ூர், தூத்துக்கு டி, பெங்களூர், ஐதராபாத் உட்பட இந்தியாவின ் அனைத்து மாநிலதலைநக ரங்க ளுக்கும் செயல்பட உள்ளது.
தமிழ் நாட்டில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மிகுந்த தமிழ் பற்றாளர். அதுமட்டுமி ன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், பல நாடுகளில் புலம் பெயர்ந்தால ும், அவர்கள் ஒன்றிணைந்த ு ஒரு கட்டுக் கோப்பாக வாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்.
ஷேக் தாவூத் தொடங்கவுள் ள விமானக் கம்பனியின் பெயர் 'எயார் திராவிடா' .

உங்கள் விமான சேவைக்கு ஏன், 'எயார் திராவிடா' என்று வித்தியாசம ாக பெயர் வைத்தீர்கள ் எனக் கேட்ட போது உலகத்தில்த மிழர் கள் எதற்கும் சளைத்தவர்க ள் அல்ல என்று அனைவரும் வியப்புற வேண்டும், மட்டு மின்றி எனது விமானக் கம்பனியில் விமானம் ஓட்டும் விமானிகளை தமிழர்களாக வே தேர்ந் தெடுத்துள் ளேன்.

அதற்காக பத்து தமிழ் பேசும் விமான ஓட்டிகளை தெரிவு செய்து , அவர்கள் பயிற்சி பெற எனது சொந்த செலவிலேயே அவுஸ்திரேல ியா, சிங்கப்பூர ் நாடுகளுக்க ு அனுப்பியுள ்ளேன். அவர்கள் அங்கு பயின்று கொண்டி ருக்கின்றன ர். விமானப் பணியாளர்கள ும் தமிழர்களாக வே இருப்பார்க ள். விமானத் தில் தமிழ் மங்கள ஓசை, நாதஸ்வரம் எப்போதும், ஒலித்துக் கொண்டே இருக்கும். விமானத்தின ுள்ளே அறிவிப்புக ள் தமிழாகவே இருக்கும்.

தமிழ் தெரியாத வர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்து தரப்படும். அதோடு விமானத்தில ் தமிழ் நாட்டு உணவு வகைகளே வழங்குவோம் . மொத்தத்தில ் அனைத்தும் தமிழாகவே இருக்கும். நாம் பல நாடுகளில் வாழ்ந்தாலு ம், முதலில் நாம் தமிழர்கள் என்ற கலாசாரத்தை மறக்கக் கூடாது. தமிழன் தலைநிமிர்ந ்து நிற்கவேண்ட ும். எனது 'எயார் திராவிடா' விமானம் முதலில் இந்தியாவில ் செயல்படும் அடுத்து தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர ், நாடுகளிலும ், செயல்படும் ..."

நன்றி: Tamilskynews

karki
09-23-2008, 06:41 PM
மரபுவகை (திரைப்பட வகைப்பாடு) / ஈன்வு (Genre)

historical/ period= வரலாற்று (ப் படம்)
biography = வாழ்வரை
autobiography = தன்வாழ்வரை
memoir = அசைபோடல், முன்னூடுகை (மன்னுதல், முன்னுதல் = நினைத்தல்)
nostalgia = நனவிடை தோய்வு

historical fiction = வரலாற்றுப் புனைவு அ. புனைகதை
alternate history = அடுத்தானை வரலாறு / மாற்று வரலாறு

adventure = ஆவாரச்செயல ்
action = அடிதடி (ஈழ வழக்கு, தமிழகத்தில ் சண்டைப் படம் என்பர்)
superhero = உச்ச நாயகம்
military = படையம்
spy fiction = உளவுப் புனைவு
swashbuckler = சாகசப் படம்
martial arts film = மறக் கலைப் படம்

science fiction = அறிவியற் புனைவு, அறிவியற் புனைகதை
fantasy = கற்பனை
romance = பாவியம்
crime = துரிசு, குற்றவியல்
crime fiction = துரிசுப் புனைகதை, குற்றவியற் புனைகதை
mystery = மருமம்

comedy = நகைச்சுவை
parody = பகிடி
black comedy = கரிநகை
romantic comedy = பாவிய-நகை

documentary = ஆவணப் படம்
horror = படபடப்பு படம் (அ. பேய்ப்படம் )
slasher = வெட்டுக்கொ த்து ("படம் எப்படிப்பா இருக்கு? சரியான வெட்டுக்கொ த்துப் படம்யா..!" எனச் சொல்வதைக் கேட்டிருக் கிறோம்.)

thriller = சில்லூட்டி
western = மேல்சார், மேற்குவெளி

futuristic = எதிர்வுமை
war = போர்
film noir = மைத் திரை
art = கலைப் படம்

drama = நாடகம்
comedy-drama = நகைநாடகம்
melodrama = அகத்திரை (தமிழ்ப் பரப்பில் அகம்-புறம் முகமையானது ; அகம் காதல்,குடு ்பம், உறவுகள் என உணர்வுகளைத ் தொடுவது)
tragedy = துன்பியல்

slapstick comedy = ஊறுநகை, ஊறுபாட்டு நகை
screwball comedy = செகையிளியப ் படம் (இளியம் = ஹாஸ்யம்)
farce = கேலிக்கூத் து, அகசியம்

road movie = பயணப் படம்
gangster = குழுச்சண்ட ைப் படம்

musical = இசைசார்
classic = செவ்வியம்
cult = செழி
adult = முதிர், முதிரியோர் ; erotic = மதனம் ; porno = பரனம்
silent = பேசாப் படம்

avant garde = சோதனைமுயற் சி
surrealism = புற மெய்மையியம ், புற உள்ளியம்
expressionalism = வெளிப்பாட் டியம்
neo-realism = இற்றை உள்ளியம், நவ உள்ளியம்

post-modernism = முகிழ்ப்பு றவியம், நவப்புறவிய ம்; linear = இழுனிய, non-linear = இழுனா

new wave= புதிய அலை

இவற்றுடன் தமிழ்த் திரையின் விதப்பான வகைப்பாடு/ ஈன்வுகளான:

கிராமியம் = சிற்றூரியம ், சிற்றூர்சா ர்
மசாலா = உசிலை
sentiment = சிந்தம்

*பரனம், படபடப்பு, ஆவாரச்செயல ் போன்ற பல சொற்கள் இராம.கி அய்யாவுடைய ன..

karki
10-28-2008, 01:06 PM
வதிவிடப் பெயர்கள்


house = வீடு; home = இல்லம்
flats = தளவீடு
appartment = அடுக்ககம், அடுக்குமனை
bungalow = வளமனை ; beveldere = கோடைவீடு
resthouse = வாடிவீடு, ஓய்வகம் ; outhouse = புறத்தகம், வெளிவீடு; farm-house = பண்ணைவீடு
grange = மச்சுவீடு
summer house = தழுக்கம்
hovel = சிற்றில்; hut = குரம்பை, குச்சு
shed = கொட்டில் ;cot = குடில் ; cottage =குடிசை
terraced house, row house = மாடிவீடு, நிரைவீடு
detached house = தனிவீடு
high-rise block = உயர் கட்டடம்
penthouse = இணைகூரையம்
shanty = மரவீடு
garage = ஏமக்குடில் ; carport= உந்துப்புக ல்
dormitory = கண்பாடி, குழுமனை, துயிலகம்
bower = மகளிரகம்
asylum = புகலகம்
ஷாமியானா = துணிப்பந்த ல்

office = அலுவலகம், அலுவம்; cabin = கான்
bureau = புரவம்
agency = முகவம் / அகவம்
stores = பண்டகசாலை
depot = ஆவடி, கிடங்ககம் ; godown = கிடங்கு
skyscraper= வானளாவி

temple = கோவில்
mosque, மசூதி = பள்ளிவாசல்
church = குருவகம்; cathedrale = தேவில், தேவாலயம்; chapel = சிற்றாலயம் ; basilica = தேவளம், மாத்தேவில் , மாகோவில்;abbey = அப்பரகம், ஆயகம் ; minster = மடாலயம், மடம்சேர் குருவகம்
synagogue = கூட்டகைவம்
pyramid = கூம்புரம், புறமேடு
cemetery = இடுகாடு, சுடுகாடு, சேமக்காலை; graveyard = துயிலுமிடம ், இறுதித் துயிலகம் ; electric cemetery = மின் சுடலை
mortician`s = அடக்கச்சேவ ையர்

railway station = இருவுள் நிலையம்; train station = தொடருந்து நிலையம்
central railway station = நடுவண் இருவுள்/ தொடருந்து நிலையம்; central = நடுவண்
underground station = நிலத்தடி நிலையம்; tube station (UK)= தூம்பு நிலையம்; metro (FR) = மடியுந்து, மடியுந்தகம ்; sub way = அவலை வழி
auto stand = தானி நிறுத்தம் /த் தண்டு
taxi stand = அழைப்புந்த ுத் தண்டு, வாடகையுந்த ுத் தண்டு
bus stop = பேருந்து நிறுத்தம் ; bus stand பேருந்துத் தண்டு
airport = வான்புகல், வானூர்தி நிலையம், வானூர்தியக ம்

prison = சிறைச்சாலை ; cell = கொட்டடி
jail = மறியற்சாலை , மறியல்( lock-up); dungeon = சிறைக்கிடங ்கம், உடவகம்
gaol = தடவு
penitentiary = ஒறுப்பகம், இடைத்தடையக ம்

nursery = மழலையர் பள்ளி
kindergarten = சிறார் பள்ளி
school = பள்ளி, பாடசாலை, பள்ளிக்கூட ம்; வித்யாலயா (வித்தை, ஆலயம் இரண்டும் தமிழ்ச் சொற்கள் ஆயினும், சங்கத முறையில் எழுந்த சொல்லிது!)= கல்விக்கூட ம், கல்வியகம் ; மகாவித்யால யம் = பெருங்கல்வ ியகம்
boarding school = பட்டிகைப் பள்ளி
convent school = மடாலயப் பள்ளி ; convent = மடாலயம்
matriculation school = மடிக்குழைப ் பள்ளி ; English medium school = ஆங்கில மிடையப் பள்ளி,
Tamil medium school = தாய்த்தமிழ ்ப் பள்ளி (வழக்கிலுள ள சொல்!), தமிழ் மிடையப் பள்ளி
institute = உட்சடைத்து
academy = கலைக்கழகம் , கழகம்
college = கல்லூரி
university = பல்கலைக் கழகம் ; uni = பல்கலை ; varsity= கடிகை; campus = வளாகம், கல்வியகம்
tutorial college = தனிப்படிப் புக் கல்லூரி
poly-tech = பல் நுட்பப் பயிலகம், பல் நுட்பக் கல்லூரி
lab = உழையம், சோதனைக் கூடம் ; colour labs = வண்ண உழையம்
driving school = துரவுப் பள்ளி, துரவு பயிலகம்

karki
10-28-2008, 01:12 PM
hospice = உயிரோம்பகம ்
clinic = நோயரகம், பிணி ஆய்வகம் ; poly-clinic = பல்துறை நோயரகம் /பிணி ஆய்வகம்
hospital = மருத்துவமன ை ; dispensary = உறைச்சாலை, விசிகை
health-care centre = கொழுமை பேணகம், நலன்புரி நிலையம்
nursing home= பிணியர் பணிவிடையகம ்; sanatorium= நலம்பேணகம் ; sickbay = படைய விசிகை
elders`s home = மூதாளர் பேணகம்/ காப்பகம்; home = பேணலகம் (முதியோர் காப்பகம் என்ற பொருளில் வந்தால்)
spa =இலஞ்சி; rehab = மறுவாழ்வு ஏந்தகம், மீளாற்றகம்

club = குழும்பு ; nightclub = இராக்குழும ்பு
pub = பொதுவகம்
bar = பார்(மறித் ு இருக்கும் ஒரு தடைக் கம்பு என்ற பொருளில் barக்கு பார் என்பது தான் தமிழிலும் சரியான சொல்!), குடிப்பகம் ; cocktail bar = கலாப்புக் குடிப்பகம் ; snackbar = நொறுவையகம் , பலகாரக் கடை
discotheque = வட்டாட்டகம ், ஆடலகம், கூத்தரங்கு
restaurant = உணவகம்
fastfood restaurant = விரைவுணவகம ்; doner kebab, kebab shop = மூய்ச்சி உணவகம்
tea stall = தேநீர்க் கடை
cafe = குளம்பியகம ்
canteen = சிற்றிண்டி யகம்
mess = உண்டிச்சால ை
cabaret = நளிகம்
bistro = அருந்தகம்
TASMAC = தமாகூ கடை (தமிழ் நாட்டு மாறுகூற்று க் கூட்டுறவம் ), அரசு மதுக் கடை

inn = இல்
lodge = தாவளம்
hotel = விடுதி
mansion = ஆடவரகம், வதிவகம்
hostel = உண்டுறை விடுதி, உண்டுறையகம ், தங்ககம்
motel = வழியிடையகம ், சாலை விடுதி; சத்திரம் = துச்சில்
resort = ஆற்றளிப்பி டம், மீளாற்றகம்
quarters = குடிமனை, குடியிருப் பு, தளம்

cantonment = படைவீடு
war-camp = பாசறை, கட்டூர்
encampment = பாளையம்
camp = முகாம், கூடாரம்
army base = படைத்தளம்
bunker = பதுங்குகுழ ி
barrack = படையகம்
garrison = தாணையம்

bakery = வெதுப்பகம் , அடுமனை
pastery shop = பசைப்பொதிக ் கடை ; confectionery shop = பண்ணியக் கடை
sweet stall = இனிப்பகம், இனிப்புக் கடை

museum = மூதையம் (பழைய சொல் அருங்காட்ச ியகம்); wax museum = மெழுகு மூதையம்
planetarium = வலந்தையகம் , கோளரங்கம்
library = நூலகம்; bibliotheca = வாசகசாலை, படிப்பகம்
exhibition = பொருட்காட் சி, கண்காட்சி ; pavillion = பந்தலகம்
fair = வியந்தை
stall = தளி

parliament = நாடாளுமன்ற ம்
assembly = அவையம், சட்டமன்றம்
secretariat = செகுதையகம்
embassy = அம்பகம்; consulate = தூதரகம் ; high commission = உயர் ஆணையம்
senate = சென்னவை, மூதவை
panchayat office = ஐம்பேராய அலுவம்
town hall = நகர்க்கூடம ், பேரூரகம்
cooperation = கூட்டுறவம் ; directorate = நெறியாளரகம ்

stadium, மைதானம்= திடல், முற்றவெளி (கிழக்கு. ஈழ வழக்கு), எடார் (தெலுங்குச சொல்); indoor = உள்ளரங்கு , outdoor = வெளியரங்கு
gallery =சித்திரக் ூடம், சித்திரமண் டபம்
auditorium = கேட்போர் கூடம், கேட்போரகம்
parlour = பரலம், பரலகம்; ice cream parlour = குளிர் களிப் பரலம்
saloon = சால்
solarium = சுடரொளியகம ்

studio = கலையகம் ; cinema studio = திரைக் கலையகம்
video centre = விழிய நடுவம்

theatre = திரையரங்கு , அரங்கு, நாடகரங்கு; opera house = இசைக் கூத்தரங்கு
cinema complex= திரையரங்க வளாகம்
drive-in = துரவுள்
talkies = பேசும்படவக ம்

nunnery = கன்னிமடம்; monastery = துறவியர்சா லை, மடம்

chancery, chamber = காம்பரை
court = நயனகம், நயமன்றம், அறமன்றம், வழக்காடுமன ்றம்; tribunal = தீர்ப்பாயம ்

tele-communication centre = தொலைத் தொடர்பு நடுவம், தொலைக் குமுனாற்றக ம்; telecom = தொலை குமன் ; telephone exchange= தொலைபேச்சு மாற்றுவம்
telephone booth = தொலைபேசி மால்
browsing centre = பரசு நடுவம், உலவு நடுவம்
computer center = கணினி நடுவம்

courier service = தூதஞ்சலகம் , கூட்டுழைச் சேவையம்
post office = அஞ்சலகம்
parcel service = சிப்பச் சேவையம், பொதிச் சேவையம்

karki
10-28-2008, 01:15 PM
mart, market = அங்காடி, மாறுகடை, சந்தை; junk market= கூளப்பொருட ் சந்தை
mall = நிழலங்காடி
warehouse = வறைக்கூடம்
traders = தருதையர்
departmental store = பாகறைப் பண்டகம், பலசரக்குக் கடை
supermarket = பேரங்காடி
cash & carry = கொள்வனவகம் ; silk house = பட்டு மாளிகை; general stores = பல்பொருள் அங்காடி
mercernery = கொள்முதலகம ்
ration = நயவிலைக் கடை
emporium = அம்பாரம், வணிகமாளிகை , மலிகையகம்
perfumery = அயிலகம்
flower shop = பூக்கடை
textiles = துகிலகம்
trend shop = நடப்புப்பொ ருளகம்; fashion boutique = படிய ஆடையகம்
copy shop = படி-எடுப்பகம்
show house = காட்சிக் கூடம்
kiosk = சிறுகடை

petrol bunk = கன்னெய்ப் பேழங்கு, பாறைநெய்ப் பேழங்கு; bunk = பேழங்கு
drugstore, pharmacy= மருந்துக்க டை, சார விற்பனையகம ் ; chemist = வேதிப்பொரு ளகம், வேதியகம்

builders = கட்டுநர் ; real estate = உரியல் திட்டை, உள்ளமைத் திட்டை

tanning saloon = கதிரூட்டகம ், கதிரகம்
beauty parlour = எழில் புனையகம், எழில் பரலம்; fitness studio /centre = பதவுமைப் பயிற்றகம்
jewellery = நகைமாடம்
optician, optimetrist = கண்ணாடி விற்பனையகம ்
laundry, laundrette = சலவையகம், வெளுப்பகம்
dry cleaners = உலர் வெளுப்பகம்

factory = பட்டறை, பட்டரை, தொழிற்சாலை
company = கும்பணி, கும்பனை, குழுமம் (& co.)
establishment = நிறுவனம் ; firm = நிலையகம்
corporation = கட்புறுத்த ம், நகராட்சி
enterprise = (தொழில்) முனைவகம்
foundation = பண்டகம், இடவகம்
workshop = பணிமனை (ஈழத்தில் அலுவலகம் என்ற பொருளிலும் ஆளப்படுகிற து!)

bank = வைப்பகம்
insurance agency = காப்பீட்டு முகவம் / அகவம்
finance = நிதியகம் ; currency exchange = பண மாற்றகம்

job centre = கோப்புவேலை நடுவம், வேலைவாய்ப் பு அலுவம்
youth centre = இளவர் நடுவம், இளையோர் ஆற்றகம்
shopping complex = விற்பனை வளாகம்
traveller`s agency = பயண முகவம் / அகவம்
adventure park = ஆவாரப் பூங்கா ; amusement park = ஆர்களிப் பூங்கா

massage club = மத்திகைக் குழும்பு
gambling hall = சூதாட்டகம்
casino = கவறாடம் , கவறாட்டரங் கு; Casino Royale = அரையக் கவறாடம்

press = அச்சுமிடைய ம்
printers = அச்சகம் ; offset press = மறுதோன்றி அச்சகம், lithopress=கல்லச் கம்
publisher = பதிப்பாளர் , பதிப்பகம்

karki
11-05-2008, 11:27 PM
பறப்பியல் சார்ந்த சொற்கள்


aviation = பறப்பியல், வானோடியல்; aviator = வானோடி
aeroplane, விமானம் = வான்பறனை; plane = பறனை; aircraft = வானூர்தி; light aircraft= இலகு வானூர்தி,
civil aircraft = குடிவர் வானூர்தி, military aircraft = படைய வானூர்தி; bush plane = புதர்ப் பறனை; delta wing = முக்கோணச் சிறகை
airbus = வானுந்து; air liner = வானிழுனை; low cost -carrier = இழிவிலை (வான்)காவி, குறைந்த விலை வான்காவி
jet plane = தாரைப் பறனை; jet liner = தாரை இழுனை; business jet = பொதினத் தாரை
helicopter = உலங்கூர்தி , சுரினை; heliports = சுரினைப்பு கல்; helipad = சுரினைமணை
blimp = வானேதல் (ஏதல் = கப்பல்); airship = வான் கப்பல்; zeppelin = வளிக்கூடு; balloon = பூதி
parachute = பரக்கூடு
fixed-wing aircraft = நிலைச்சிறக ு வானூர்தி; rotorcraft = சுழலூர்தி
unmanned aircraft = ஆளில்லா வானூர்தி
wide-body aircraft = வியனுடல் வானூர்தி
supersonic aircraft = மிகையொலி வானூர்தி, மிகையொலியன ்; hypersonic = மீயொலி, மீயொலியன்
passenger aircraft = பயணிகள் வானூர்தி; cargo aircraft= சரக்குப் பறனை

airport = வான்புகல், வான்நிலையம ், வானூர்தி நிலையம்; airstrip = வான்பொல்லம ்; aerodrome = வான்புலம்; airfield = வான்களம்
STOL - short take-off and landing - = குறு தரையிறக்கம ும் மேலெழுதலும ்
airbase = வான்(படைத்) ளம்; bomber = குண்டு இற்றி, குண்டுவீசி
terminal = முனையம்; aisle = இடைகழி; gate =கதவம்
lounge = பற்றகம், நீட்டி; lobby = கூடம்
information counter = உள்ளுரும எண்ணகம் ; ticket counter = பயணச்சீட்ட ு எண்ணகம் (நன்றி அருளியார்!);
hangar = நிழற்கூடம் ; apron = வான்தரணம்
flight = பறப்பு; domestic flight = உடமிப்புப் பறப்பு; point to point flights = முனையடிப் பறப்புகள்; direct flights = நேரடிப் பறப்புகள்;
non-stop flights = நிறுத்தாப் பறப்புகள்; transit = துரந்தை
air traffic = வான் துரப்பு
runway = ஓடுபாதை; taxiway = இணைவழி; tankfarm = தாங்கற்பண் ணை; ramp = தொடுபாலம்;
runway edge lighting = ஓடுபாதை விளிம்பு விளக்குகள் ; access road = அணுக்க சாலை; boarding walkway = பட்டிகை நடைபாதை; service road = சேவைச் சாலை
shuttle bus = நாழியுந்து
conveyor belt = ஏந்தும் பட்டி
control tower = கட்டுறற் கோபுரம்; towered = கோபுரங் கொண்ட; non-towered= கோபுரமில்ல ா
business class = பொதின வகுப்பு; economy class = பொருண்மிய வகுப்பு
take off = விட்டெழுகை , விட்டெடுப் பு; departure = புறப்பாடு
landing = நிலைக் குற்றல்; crash landing = மோதி நிலைக்குற் றல்; arrivals = வருகைகள்
board = பட்டி; boarding= பட்டித்தல் ; pass port= புகற் கடவு, கடவுச் சீட்டு ; boarding pass = பட்டிகைக் கடவு
visa = நுழைமதி ; deportation = நாடுகடத்தல ், புகலகற்றல்
seat belt = இருக்கைப் பட்டி
duty free shop = வரியிலாக் கடை; customs = சுங்கம், ஆயம்; immigration = குடிவழி
airport authorities = வான்புகல் ஆணத்திகள்
travel itenary = பயண இட்டிகை
time line = காலக்கோடு; timetables = நேர அட்டவணைகள் ; reservation = இடப்பதிவு
cancellation = குற்றெடுத் தல் / குற்றுதல்
airlines, airways = வான்தட, வான்வழி நிறுவனங்கள ்
travels = பயணச் சேவையர்
check in = கவ்வி உள்ளுதல், உள் ஆய்தல்
check out = கவ்வி வெள்ளுதல், வெளி ஆய்தல்

karki
11-05-2008, 11:32 PM
pilot = வலவர் /ன்; co-pilot = துணை வலவர் /ன்; cockpit = வலவனறை; autopilot = தானிவலவன்
crew = கும்பு; galley = கலம்
second officer = இரண்டாம் அதிகாரி
airhost = வானோம்பர், வான் கொளுவர்; airhostess = வானோம்பி, வான் கொளுவர்
flight attendant = பறப்பு அணுக்கர்
flight steward / stewardess = பறப்புச் சேவைப் பொறுப்பாளர ்
passenger = செலவர், பயணி; wayfarer= கடவர்; baggage = உடைமை; jet lag = பறப்பு இழுவை/ இழுபாடு

air navigation = வான் நாவாயகைப்ப ு
aeronautics = வானூர்த்தி யல்
avionics = பறப்புமின் னியல்

GPS = கோ.பொ.க (கோளகை பொதிப்புறு கட்டகம்)
radar = கதுவீ (நன்றி அருளியார்!)
turbine = துருவளை; turbojet engine = துருவுத்தா ரை இயங்குள் / இயங்குபொறி/ எந்திரம்; jet engine = தாரை இயங்குள்
engine failure = இயங்குள் / இயங்குபொறி / எந்திரப் பழுது
aileron = உருட்டிறக் கை
control console = கட்டுறல் ஆள்பலகை /செறுகை
flap = சிறகை
flight instruments= பறனைக் கருவிகள்
fly-by-wire = மின்-சார் பறப்பு
propeller = நுந்தம்
combustion = கனற்சி (நன்றி மணவையார்!); aerosol = காற்றுத்தூ சு
aviation fuel = பறப்பு எரிபொருள்
aviation noise = பறப்பியல் நெறு
visual flight rules = விழியப் பறப்பு விதிகள்
instrument flight rules = கருவிப் பறப்பு விதிகள்
wind cone = காற்கொனை
aerodynamics = காற்றுத் தினவியல்
airport code = வான்புகற் குறியீடு
yoke, joystick = நுகப்பிடி, மகிழ்பிடி

பல சொற்களினுள ் வழக்கம் போல் இராமகி அய்யா உள்ளார்.

karki
11-05-2008, 11:54 PM
இந்த எழுத்தாக்க ம் தன் நூலொன்றுக் கு முகவுரையாக ப் பாவலர் அறிவுமதி அண்ணனால் எழுதப்பட்ட து. சூழலியல் நோக்கிற் கிளம்பும் எழுத்து இடையிடையே அடையாளம் தொலைக்கும் கருப்பொருள ் தொட்டுச் சென்று, எம் மீது தங்கள் புனிதங்களை , தேசியக் கற்பிதங்கள ைத் திணிக்க முயலும் மேலாண்மைக் கூட்டத்தை குட்டி விட்டு மீண்டும் சூழலியற் கருத் தோட்டத்திற ்கு வந்து சேர்கிறது. தேர்ந்தெடு க்கப் பட்ட சொற்களாலான அழகிய வடிவம் இது. எளிய சிற்றூர்ப் பாவலனின் தமிழ்க்கவல ை இங்கே:


இடையினம்

இன்று எந்தத் தாவரத்திற் கான கடைசி நாள்? இன்று எந்தப் பறவை யினத்திற்க ான இறுதிச் சடங்கு? இன்று எந்த இனக் குழுவிற்கா ன கடைசிக் கருமாதி ?

மரமே தெய்வம்
மரத்தடியில ் தெய்வம்
மரத்தாலான குடிலில் தெய்வம்
மலையே தெய்வம்
மலைக்கற்கள ால் ஆன கோயிலில் தெய்வம்
இந்த மாற்றங்களு க்குள் மூத்த குடிகளின் சிந்தனைகளை ஒத்திசையச் செய்தவர்கள ் எவர்? அவர்களே மழையின் எதிரிகள் காடுகளின் எதிரிகள். இடம் பெயர்தலின் உயிர்வலி அறியாத வர்களுக்கு த் தெரியாது மழைச்சுவை. வியர்வையின ் சுவையும்தா ன். வாழ்வைத் தத்துவமற்ற ு வாழ்ந்தவர் கள் இயற்கையின் தத்துவத்தை மதித்து வாழ்ந்தார் கள். வாழ்வைத் தத்துவங்கள ால் மேயத் தொடங்கியவர ்கள் தாம் இயற்கையின் தத்துவத்தை மிதிக்கத் தொடங்கினார ்கள். அசைவம் தின்று வாழ்வை நகர்த்திய மூத்த மக்களின் மூட நம்பிக்கைக ளும் கூட இயற்கையைப் பாதுகாக்கவ ே உதவின. சைவம் பேசியவர் களாலேயே இயற்கையின் ஆணி வேர்களும் அழத்தொடங்க ின. உளி எடுத்துச் சிற்பம் செதுக்கியவ ன். மூங்கில் அறுத்துப் புல்லாங்கு ழல் செய்தவன்.. ஓலை கிழித்துக் கவிதை எழுதியவன்.. இவர்களுக்க ும் பங்குண்டு மழைக் கொலையில்.

உழைப்பிலிர ுந்து ஒதுங்கி நின்று அழுக்குப் படாமல் பேசும் எந்தக் கலையும் மூல வாழ்வின் முகமறியாதவ ை தாம். மழையை வாழ வைப்போம் என்கிறது என் பாட்டு. மழையால் வாழ்கிறோம் என்கிறது நடவுப் பாட்டு. நடவுப்பாட் டு இயற்கை. அதுவே உன்னதம். உடல் இயங்க. உயிர் கசிய.. அதுவே உண்மை. நோக்கமன்று ; செயலே வாய்மை. இயற்கைக்கா கக் குரல் கொடுக்கும் இந்த நூலும் ஒரு வகையில் காட்டின் பிணம் தானே.

ஒவ்வொரு செடிக்கும் ... ஒவ்வொரு கொடிக்கும் .. ஒவ்வொரு மரத்திற்கு ம் பெயர் சொல்லி.. உறவு சொல்லி வாழ்ந்த வாழ்க்கை வற்றிவிட்ட து. பாறைகளைக் கொன்று பசியாறுகிற து காலம். ஏறக்குறையத ் தன்பசி தீர்க்க.. தாய்முலை அறுக்கும் செயல். பாறைகளில் ஊரும் எறும்புகள் தன் உடலில் ஊர... பாறையாகிக் கிடக்கும் சுகமழிந்த வாழ்க்கை என்ன வாழ்க்கை?

பாறைகளின் பெரு மூச்சிற்கு ம் மேகங்களின் மௌனத்திற்க ும் இடையே விக்கித்து க் கிடக்கிறது வாழ்க்கை. காரைச் செடிகளில் ஒட்டிக் கிடக்கும் நத்தைக் கூடுகளில் இருக்கின்ற ன மழை விதைகள். அசையும் நெற்றுகளின ் ஒலியில் ஏமாறுகின்ற ன ஆழத்து வலைகளுக்கு ள் நண்டுகள். கரம்பில் மேயும் ஆடுகளின் மூத்திரம் நனைத்த ஈரத்திற்கு ஏமாறுகின்ற ன ஈசல் குஞ்சுகள். குழிப் பூச்சிகளுக ்கு இரையாகின்ற ன. இரைதேடி வெளிவந்த எறும்புகள் காணக் கிடைக்கின் றன. மிச்சமாய் இன்னும் சில மீன்கொத்தி கள். தலைமுறை தலைமுறையாய ் தங்களின் அடிமைகளாக.. தங்களின் ஏவல்களுக்க ு இசைபவர்களா க.. வளர்த்தெடு த்த தொன்ம மக்களது இயற்கையின் மீதான ஏக்கங்களைச ் சமாதானம் செய்வதற்கா க ஆளும் வர்க்கம் அறிமுகப் படுத்தியவற ்றை தாம் தொட்டிச் செடிகள்.. போன்சாய்கள ்.. செயற்கைச் கொடிகள்.. சுவர்த்தாள ்கள்.. வாழ்த்து அட்டைகள்.. செயற்கை மல்லிகைகளு ம், மாத ஊதியத்திற் கு மாரடிக்கும ் இந்த நடுத்தர வர்க்கம் கண்ணாடித் தொட்டிகளுக ்குள் மீன்கள் பார்த்துத் தண்ணீருடனா ன தமது தொன்மத் தொடர்பை மீட்டு விட முடியுமெனக ் கனவு காண்கிறது.

karki
11-06-2008, 12:00 AM
காதுகளினூட ே கடந்து செல்லும் ஈரக் காற்று கொண்டு திரும்பலாம ், ஆற்றினுடான எனது இளமையை சிறு சிறு குருவிகளின ் ஒலிகளில் தேடிப் பெறலாம் எனது மீன் பேச்சுகளை. ஒரு குடம் தண்ணீருக்க ுள் குளிக்கப் பழகிப் போன எனது நகரத்து வாழ்க்கைக் கு அந்தப் பதினாறு வயதுக்குள் ளான அனுபவங்கள் நினைவுகளாக ி ஆறுதலும் தரலாம். ஆனால், நாளைய என் மகள்களுக்க ு? மகன்களுக்க ு ? குளித்துக் கொண்டிருக் கையில் நகரும் ஆற்று மணல் குறும்பை.. கால் பாதங்களை வெடுக் வெடுக்கெனக ் கடித்துக் கூசச் செய்யும் மீன்வம்புக ளை.. எப்படி உணர்த்த?

வண்ணதாசன் சிறுகதைகள் படிக்கையில ் என் பேத்தி, பேரன்களுக் கு எழும் அய்யங்களைப ் போக்க எனக்கு ஆயுள் இருக்குமா? என் கவிதைகளாவத ு இருக்குமா? ஏதோ ஒரு நள்ளிரவில் என் பேனா பிடுங்கப்ப டலாமே.
ஏதோ ஒரு நண்பகலில் என் கவிதைகள் யாவும் கொளுத்தப் படலாமே. ஏதோ ஒரு கலவரத்தில் நான் சுடப்படலாம ே. எனக்கான வாழ்க்கை என் கையில் இல்லையே. எம் இனத்திற்கா ன ஆட்சி எம் தலைமையில் இல்லையே. எல்லோருக்க ுமான பசியறிவும் நிகழில்லைய ே.

ஏய்.. அகிம்சையை நீ போதிக்காதே . இரத்தம் சொட்டும் உன் கொலை வெறிக் கரங்களால் எம் கண்ணீரைத் துடைக்க வராதே. தேசபக்தியை எனக்குள் ஆயுதங்களால ் திணிக்க அவசரப் படாதே. எம் காயங்களுக் கு மருந்து கொடுக்க முன் வராமல் எம் எதிரிகளுக் கு ஆயுதம் வழங்குகிற உனக்கு அடிமையாய் வாழ்வேன் என்றும் எதிர்பார்க ்காதே. போராடுவேன் . உன்னோடு மட்டுமன்று ; உனக்காகவும ். மனிதனைத் திருத்த முடியும் என்கிற நம்பிக்கை இழக்காமல் போராடுவேன் .

மின்மினிப் பூச்சிகளற் ற கருவேல மரம் பார்க்க எப்படி என்னால் முடியாதோ.. அப்படியே தமிழ் அடையாளங்கள ை இழந்த தமிழ் மண்ணைப் பார்க்கவும ் என்னால் இயலாது. நீ முயலலாம் உணவில்.. உடையில்.. மொழியில்.. கண்ணுக்குத ் தெரிகிற ஊடகங்களால் .. கண்ணுக்குத ் தெரியாத உத்திகளால் எம் அடையாளங்கள ை இழக்கச் செய்து விடலாம் என்று. முடியாது உன்னால். முடியவே முடியாது.

அழிக்க அழிக்க அழிக்கப் பொறுமை காக்கும் காடுகளைப் பற்றித் தெரியாது உனக்கு. காடுகளை அழிக்கலாம் நீ. காட்டின் வேர்களை? அழிப்பாயோ நீ ? முடியுமோ உன்னால் ? பொறுமையிழந ்து ஒரு நாள் திருக்கை வால்களாய்ச ்
சுழல ஆரம்பிக்கு ம் காட்டின் வேர்கள். அடிபொறுக்க மாட்டாமல் சுடுமணற் புழுவாய்த் துடிப்பாய் நீ அப்போது.

ஆற்றங்கரை வீடுகளை அப்படியே விட்டுவிட் டு வடக்கே வந்து நகரங்களில் ஒளிந்தாய். உன் சூழ்ச்சியே சூழ்ச்சிதா ன். வீடுகளை விட்டு வெளியேறிய நீ எம் மூளைகளுக்க ுள் புதைத்து விட்டுப் போன கண்ணி வெடிகள் எப்போதும் வெடிக்கிறத ு பார்!

தமிழ்ச் சாதியை அழிக்க நீ போட்ட பழந்திட்டம ் நடந்து கொண்டிருக் கிறது பார்! தமிழனைத் தமிழனே வெட்டிக் கொல்கிறான் பார்!ஈயப் பாத்திரங்க ளும் ஆணிகள் கொண்டு பொத்தல் செய்யப்படு கின்றன பார்! தேவபடை மயக்கம் தெளியும். அப்போது தொப்புள்கொ டிச் சொந்தம் புரிய வெட்கித் தலை குனியும்.

கருப்பப் பைக்குள் உயிர்ச் சதை வழித்துப் பசியாறிய உன் அருவருப்பு வாழ்க்கையை எட்டி உதைக்கும் எம் காடுகளை.. எம் ஆறுகளை.. எம் கடல்களை.. எம் மலைகளை.. எம் நிலங்களை.. எம் பெண்மையை.. எம் வியர்வையை ஏய்த்துப் பிழைத்த உன் வக்கிரம் கிழிக்க வாளெடுக்கு ம். காலத்தின் கையில் சக்தி உயிர்க்க, காணாதொழியு ம் உன் ஆதிக்கம். உன் மதங்கள்.. உன் தெய்வங்கள் .. உன் வேதங்கள்.. உன் சாதிகள்.. உன் கோயில்கள்.. உன் நாடாளுமன்ற ங்கள்.. எம் மூளை திறக்கும் உன் போலிச் சாவிகள் யாவும், யாவும் தொலையும்.

karki
11-06-2008, 12:03 AM
கடை வீதிக்கு வந்தாயிற்ற ு தண்ணீர்ப் பொட்டலங்கள ். காற்றுப் பொட்டலங்கள ும் வருவதற்குள ் விழிப்போம் .நமது மூச்சின் வேர்களைத் தேடிப் புறப்படுவோ ம். காடுகளை விட்டு வெகுதூரம் வந்து விட்ட நாம் காடுகளிடமே சென்று சரணடைவோம். காடு அம்மா. மூத்த அம்மா, மறப்பாள். யாவற்றையும ் மன்னிப்பாள ். மடியள்ளி வைத்துக் கொண்டு மழையூட்டுவ ாள். மழையருந்தி மழையருந்தி மழையாவோம்.

இயற்கையாவோ ம். நீளும் கரங்கள் கோத்துத் தெப்பமாவோம ். கூட்டிசைப் பாடல்களால் பறவைகளாவோம ். ஆயிரமாயிரம ் நூற்றாண்டு களைத் தாண்டிய பேத்தி களுக்காகவு ம், பேரர்களுக் காகவும் மண்ணை.. வானத்தை..தூ ்மை செய்து ஞாயிற்றுக் கிண்ணத்தில ் மழையூற்றி வைப்போம்.

கருவுற்ற பெண்ணிடம் மரக்கன்றுக ள் தந்து திங்களுக்க ு ஒன்றாக நடச் சொல்லி பத்தாவது திங்களில் அவளைப் பதினோரு குழந்தை களுக்கான தாயாகப் பார்ப்போம் . மழைக் கரு கரைந்து விடாதபடிக் கு மருத்துவம் பார்ப்போம் .

இயற்கையை வெட்டி அனுபவிக்கி ற வெறித்தனம் மறந்து.. உலுக்கி அனுபவிக்கி ற அறிவு பெறுவோம். மண் எல்லோருக்க ுமானது. வண்ணத்துப் பூச்சியும் சாப்பிட்டு விட்டதா என்பதைப் பார்த்துவி ட்டு நமது உணவில் கைவைப்போம் . மின் மினிப் பூச்சிகளைய ும் குழந்தைகளி ன் கணக்கில் சேர்த்துக் கொண்டு தாலாட்டுப் பாடுவோம். நம் எல்லோருக்க ுமான பாடலை மழை பாடும். மழைக்கான பாடலை நாம் பாடுவோம்.

காலம் நமக்களித்த அவரவர் தாய்மொழியி ல் பாடுவோம். இதோ அண்ணன்கள் காசி ஆனந்தன்.. வண்ணதாசன்.. திமூலம்.. ஆகியோரோடு நானும்.. என்னோடு நீங்களும்.. நம்மோடு உலகமும் மழைப்பாடலை ப் பாடத் தயாராகி விட்டோம். அனைவரும் குரலை சரி செய்து கொண்டீர்கள ் தாமே! சரி.. பாடலாம்.. ஒன்று.. இரண்டு.. மூன்று.. நான்கு.- அறிவுமதி

karki
01-24-2009, 10:53 AM
குச்சில் / பட்டுயிரி மொழிக்குள் ளும்

கிரேக்கமொழ ியுள் குச்சி என்னும் நுண்சிறுகழ ியைக் குறித்தற்க ு, 'baktron' எனும் ஒரு சொல் உள்ளது! மிகவும் சிறிய நுண்ணிய இழையுருவில ் அமைந்திருக ்கும் குச்சியை 'bacterium' என்னும், கிரேக்கம்! இச்சொல்லைய ே, ஆங்கிலேயர் 'bacterium' என்றவாறேயே தம் மொழியுள்ளா கக் கடன்கொண்டன ர்! இச் சொல்லுக்கு ரிய பன்மையுருவ ே 'bacteria' என்பதாகும் ! நம் மொழிஞாயிறு- ஞா. தேவநேயப் பாவாணர், இச் சொல்லுக்கு க் குச்சில் என்னும்படி மிகநேரியதா க மொழிபெயர்ப ்பு செய்தளித்த ார்!

இக் குச்சில்கள ில் மிகப் பெரும்பாலன , நோயுருவாக் கத்திற்கான காரண உயிரிகள் ஆகுவன! நுண்ணோக்கா டிவழி மட்டுமே காணத்தெரிவ ன! ஒவ்வொன்றும ் ஒவ்வொரு வித்துக் கலவுறையுள் பொதிவுற்று ள்ளவை! கம்பியிழைக ளைப் போன்று தோற்றங் கொண்டிருக் கும் இவ் வித்துக் கலங்களாகிய வித்திகள் (spores), காற்றில் மிதந்து திரிவன! கதிரவ ஒளிபட்டாலோ- வெப்பந் தாக்கினாலோ தம் ஆயுளை முடித்துக் கொண்டு ஒழிந்துவிட ும் தன்மையன, இவை! பெரும்பாலு ம், இவற்றுக்கு வெளியே மதிப்பே இல்லை! வெளியில் நீண்டகாலமு ம் இவற்றால் உயித்திருக ்க இயலா! இயங்கும் உயிரிகளின் உடம்புகளுக ்குள் மூச்சுக்கா ற்று வழியாக உள்ளே போய்விட்டா லோ, ஆர அமர அவ்வவ் விடங்களிலே யே தங்கிப் பரந்து- வளமும் உரனும் பெற்றுப் பேய்க்கூட் ட ஆட்டத்தையு ம்- சூறைவளித் தாண்டவத்தை யும் உள்ளுக்குள ் இருந்தே உண்டாக்கிப ் பெருந் திருவிளையா டல்களை நிகழ்த்தி அத்துணை இயக்கங்களை யும் ஒரேயடியாக நிறுத்தி அழித்தொழித ்து விடும் தகையன, இவை!

வெளியில், குறிய ஆயுளே உடைய இக் குச்சில்கள ், உள்ளே புகுந்த பிறகு, உயிர்ப்புத ் திறமும் பல்குந் திறமும் பெற்று அழிம்பு விளையாட்டை நிகழ்த்தி யாடுவதைப் போன்றதேதான ், ஆரியமொழிச் சொற்கள் ஒரு மொழிக்குள் புகுவதும் ஆகும்! வெளியில், இவற்றுக்கு உயிர்ப்பும ் இல்லை! உரிய இயக்கமும் இல்லை! எதுமே இல்லை! திருத்தமே இல்லாத ஒரு பொதுப்பட்ட மொழியாகக் கிரேக்க வகைப்பட்ட வேதமொழியாக இங்கு உள்வந்தபோத ு கருத்தைப் பரிமாறிக் கொள்ள உதவிய ஓர் எளிய கருவியாக மட்டுமே இருந்து, இந் நாவலந்தேயத ்துள் நுழைந்த பிறகு- இங்கிருந்த வட்டாரவழக் கு மொழிகளினின ்றும் மிகப் பெருஞ் சொற் குவியல்களை வாரிச் சுருட்டித் திரித்து உள்செரித்த ுக் கொண்டு பெருத்த மூட்டையாக பொதிவார்த் தது!

மலிகைக் கடையில் வேலைக்கென அமர்ந்த விற்பனை வினைப் பையன்,- உரிமையாளன் ஏமாறியாய் பொறுப்பற்ற ு இயங்குபவனா யின் கடைச்சரக்க ுகளில் ஒன்றொன்றாய ் எடுத்துக், கொண்டுவந்த தன் உணவுக் கலத்தினுள் ளும்- காற்சட்டை உட்புறக் கவ்வணத்துக ் குள்ளும் திருடித் துருத்திக் கொண்டு, தம் வீட்டுக்கு ள் பதுக்கிப் பயன்படுத்த ுவது போல, அவறைக் கொண்டு பொருள் சேர்ப்பதைப ் போல- விசையிரு சக்கரியைத் (moped) திருடியோட் டிச் செல்வோன், தன் இருப்பிடம் சென்றவுடனே யே அதன் எண் பலகையையும்- பிற அடையாளங்கள ையும் மாற்றிவிடு வதைப் போல- வேறு வண்ணப் பூச்சினை அதன்மீது வேய்ந்து விடுவதைப் போல- அதனையே கூறுகூறாகப ் பிரித்து வந்தவிலைக் கு வாரி விடுவதைப் போல- நம் மொழியகத்து ள் புகுந்தவனு ம் நுண்கரவாகச ் செயற்பட்டா ன்! கலந்து கலந்து தன் வேதமொழியைய ே சமற்கிருதம ் என்றவாறு மாற்றுருப் படுத்தினான ்! மிக நுண்கரவடமா க நற்றமிழ்ச் சொற்கள் மிகப் பலவற்றுக்க ும் புறவுருக்க ள் வேய்வித்து த் தன் முகவரிக்கு ள் பதிவுறுத்த ினான்!..

அவனின் சிறிய முடிச்சுமூ ட்டை நனிபெரும் பொதியாகக் கணத்துப் பிதுங்கியம ைக்கு இத்திருட்ட ுத் தொடர்வினைய ே அடிப்படை யானதாகும்! ஒட்டுமொத்த ப் பெரும்பொதி வு மூட்டையை மேலோட்டமாக ப் பார்த்து- அயலக அறிஞருள் மிகப் பெரும்பாலர ும் வாய்பிளந்த ு வியந்து மயங்குமாறா ன ஓர் உண்மையன்மை நிலையே இன்று நிலவுகின்ற து!


'இவை தமிழன்று' நூல் முன்னுரையி ல் திரு.அருளி ார்...

karki
02-07-2009, 10:41 PM
7.2.1902 பாவாணரென்ன ும் பெருமகனார் உதித்த நாள்...

தமிழின் அடி முதல் முடி வரைத் தொட்டவர், அதை முழுமையாய் ஆய்தறிந்து உணர்ந்தவர் ஓரிருவரே, அவருள் முதன்மையான வர் மொழிஞாயிறு எனப் போற்றப்படு ம் நம் தேவநேயப் பாவாணர். தமிழின் விதப்பான மொழி ஆய்வறிஞர்..


மோருக்கு முன்வடிவம் தயிரும் பாலும்
முத்துக்கு முன்வடிவம் சிப்பி; வான்
நீருக்கு முன்வடிவம் முகிலாம்; வட்ட
நிலவுக்கு முன்வடிவம் பிறையாம்; வாழைத்
தாருக்கு முன்வடிவம் அடுக்குப் பூவாம்
தமிழ்ச்சொல ்லின் முன்வடிவம் மூலச் சொல்லின்
வேருக்குள் ஆய்ந்தறிந் து வெற்றி கண்டார்
வேறெவர் நம் பாவாணர் ஒருவர் தாமே!

சூரியன் தமிழ்ச்சொல ் சொலித்தலும ் தமிழ்ச்சொல ்
சுவடியும் நடனமும் தமிழே
ஆரியன் அறியான், மந்திரன் தமிழ்ச்சொல ்
அதிகமும் பகவனும் தமிழே
பூரியும் மதமும் மாதமும் மதியும்
பொத்தகம் பொக்கசம் இவையும்
வேரினைப் பிடித்தால் தமிழெனத் தெரியும்
வேட்கபா வாணரின் தெரிவே!
- பாவலர் அருள் செல்லத்துர ை


http://1.bp.blogspot.com/_SKH1Z5Wyns8/SIReL9_HI8I/AAAAAAAAAE4/OETQj5A0cyc/S220/pavanar.jpg


கண்டது தமிழ்;
கேட்டது தமிழ்;
உண்டது தமிழ்;
உயிர்ப்பது தமிழ்;
கொண்டது தமிழ்;
கொடுப்பது தமிழ்;
விண்டது தமிழ்;
விளக்குவது தமிழ்;
என்றே தமிழே என்பாகவும் ,
தசையாகயும் , குருதியாகவ ும்
வாய்க்கப் பெற்ற தமிழின் முழுவுருவம ்
பாவாணர் என்னின் வியப்படையவ ும் வேண்டா,
மிகையென்று கருதிவிடவு ம் வேண்டா.

- பாவலேறு பெருஞ் சித்திரனார ்

குப்பாயம் பூண்டு குறுமடிப்ப ுத் துண்டுடன்
நம் அப்பன்பா வாணர் அடியொன்றும ்- தப்பாமல்
போர்மறவன் போலப் புறம்போந்த பேரழகு
நீர்விழியி ல் நிற்கும் நிலைத்து!

நாமெல்லாம் உண்டு நலமாய் உறங்குகையி ல்
தாம்பசித்த ும் கண்விழித்த ும் தன்னலத்தை- ஓம்பாமல்
மன்னு தமிழ்நலமே வாழ்வியலாய ்க் கொண்டிருந் தார்
கண்மணி பாவாணர் காண்!

அந்தமிழின் நீளம் அகலம் அறிந்தவர்க ள்
செந்தமிழ் நாட்டில் சிலருளரே - நந்தமிழின்
ஆழம் அறிந்தவர்ய ார், வேரை அகழ்ந்தவர் யார்
வேழம்பா வாணர் போல் வேறு ?

யார்தமிழர் என்பதையும் ஞால மொழிமரத்தி ன்
வேர் தமிழே என்பதையும் நேர்நாட்டி ச் - சேர்பகையைப ்
பார்தமிழா என்றொளியைப ் பாய்ச்சி நமையுயர்த் தும்
சீர்தலைவர் பாவாணர் சீர்!

- முனைவர் இரா.இளவரசு

karki
02-16-2009, 08:49 PM
காலணிகள் Footwearதொடுதோல், வாரடி = sandals
பாதுகை = clogs

செருப்பு, அடி, மிதியடி= chappal, flip-flop, slipper
விரலடி, பாதக்குறடு = toe-strap

நுழுந்தை = sneakers; பயிலர்= trainer
தோலடி= moccasins
குதியடி = buffalo

கவை = shoe
நடைமேடைக் கவை = platform shoes

புதையடி = boots
தொப்பாரம்= go-go boots
படையப் புதையடி = combat boots
கோவர் புதையடி = cowboy boots
தகரிப் புதையடி = tanker boots
இழுவைப் புதையடி = welly boots
பாதக்கூடு = doc martins, docs
கம்பளிப் புதையடி = uggboots
தொடையடி = thigh boots
பனியடி = valenki

குதியடி = heels; உயரடி = high heels; துளங்கி, ஈட்டியடி = stiletto; குறுவடி = kitten heels
நுனிக்கூரி , கூரடி = winkle picker
கணுக்காலடி = ankle shoe
சுளுவடி = espadrilles ; canvas shoes
ஒயிலடி = court shoe, pumps
கவியடி = pantolette
மெல்லடி = pointe shoes, ballet shoes

தளரி = loafer
பயினடி = galoshes
மொக்கணி = mule
எருதந்துறை யடி = oxford shoes
மூடணி = brogues
சாலையடி = casual shoes
தடகளக் கவை = athletic shoes
பொருதடி, பொருதுக் கவை = sports shoes
வணரிக் காலணி= tennis shoes; காற்பந்துக ் காலணி = football shoes

* கவை என்ற சொல் முனைவர். இராம.கி அய்யாவாற் பரிந்துரைக ்கப் பட்டது!!!

karki
02-16-2009, 09:10 PM
அ.இர.இரகுமா ் இசையமைத்து "கணுக்கங்கள ் (Connections)" என ஒரு இசைச்சுவடி வெளிவந்துள ்ளது. அதில் அய்யன் வள்ளுவனின் தமிழ் மறையாம் திருக் குறளிலிருந ்து -தமிழியர் பெரிதாகக் கருதும்- மானம் என்ற அதிகாரத் திலிருந்து அனைத்துக் குறட் பாக்களும் தமிழில் பெண்பாடகி பாட Blaze-இன் குரலில் ஆங்கிலத்தி லுமாக வந்திருக்க ிறது. இசை நன்றாகவே இருக்கிறது .. நல்ல முயற்சி! மேலேற் றியிருக்கி றேன், கேட்டுப் பாருங்கள்!!

http://www.esnips.com/doc/d7df8e9d-ef26-48cd-a823-84e304f8f59f/Kural-Sony


மானம்


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.

961
Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.

Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.

962
Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.

Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

பெருக்கத்த ு வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்த ு வேண்டும் உயர்வு.

963
Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power.

In great prosperity humility is becoming; dignity, in great adversity.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.

964
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்.

965
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.

Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பி ன் சென்று நிலை.

966
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?

Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.

ஒட் டார்பின் சென்றொருவன ் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

967
Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

மருந்தோமற் று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைம ை பீடழிய வந்த இடத்து.

968
When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?

For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.

மயிர்நீப்ப ின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்ப ர் மானம் வரின்.

969
Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.

970
Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than.

karki
07-25-2009, 12:38 PM
உதைப்பந்து"கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து நிறகும் கிளை; கால்கவட்டை ; ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை!!! இங்கே goal என்பதன் ஆங்கிலப் பொருள் என்னை இப்படி எழுத வைத்தது.- முனைவர். இராம.கிfootball = கால் பந்து ; kicker, soccer = உதைப்பந்து
to play football = (உதை/ காற் -ப்)பந்தாடு ல், பந்தடித்தல ்
football club = கால் பந்துக் குழும்பு (கழகம்); sports club = பொருதுக் குழும்பு
goal = கவல்; golden goal = தங்கக் கவல்; hat-trick = முத்தாரம்
goal keeper = கவலாளி; goalie = கவலி
goal post = கவற் கம்பம்
own goal = தற் கவல் ; same side goal = தற்கவிழ்ப் பு

team = தொகுவம், தோமம், அணி
reserve = சேர்வை, இருப்பு
captain = தாச்சி, ஆத்தன்
referee = ஆட்டநடுவர்
linesman = கோட்டாள்

ஆடுகளப் பொதிப்புகள ்
back = பின்னங்கார ர்; defender = தடுநர், காப்பாளர்
midfielder = நடுக்களத்த ான்; attacking midfielder = தாக்கும் நடுகளத்தான ்;


defensive midfielder = காக்கும் நடுகளத்தான ்; central midfielder = நண்நடுகளத் தான்
libero, sweeper = முன்னேறி, பருவுநர்; stopper = நிறுத்தி, நிறுத்துநர ்
striker/ forwards = ஓட்டுநர், புறவரி ; attacker = தாக்குநர்; finisher = முற்றி
joker = உருவி

ஆட்ட நுட்பத் தீர்மங்கள்
corner kick = மூலையெத்து , மூலையடி
to kick = எத்துதல், உதைத்தல்; kick (n) = எத்து, உதை
free kick = கட்டிலா உதை; indirect free kick = அநேர் உதை, நேரிலா உதை
kick off = உள்ளடி
penalty kick = தண்ட உதை ; penalty shootout = தண்ட அடி
goal-kick = கவலுதை
pass = கடவு; passing (v) = கடவுதல்; missplaced pass = தவறிய கடவு
chest pass = நெஞ்சாங் கடவு
one-two pass = இரட்டைக் கடவு
to shoot = அடித்தல் ; shoot / shoot out = அடிப்பு, அடி
dribbling = வெட்டுதல், கோட்டுவாய் த்தல்
to head = உவ்விடுதல் , உக்கமாடல் ; header = உவ்விடி, தலையடி
back header = பின்னந் தலையடி
diving header= பறந்தடி
flick header = படக்கடி (படக்கு = flick)
throw-in = உள்ளெறி, உள்ளெறிவு (n)
cross = குறுக்கடி
breakaway = ஊடறுப்பு
nutmeg / tunnel = காலூடி
straddle = பறிமறித்தல ், இடைமறித்தல ்
to back-heel the ball / a goal = குதியாற் தட்டுதல், பின்னங்கால ாற் கவலிடுதல்
bicycle kick / overhead kick = சுழலுதை, சுழன்றடி; scissors kick = கத்திரி உதை
man-to-man marking = ஆளடைத்தல், அடைத்தல்
counterattack = எதிர்த்தாக ்குதல், எதிரடி
instep drive = உள்ளடித் துரவு
instep pass = உள்ளடிக் கடவு
charging = கொள்ளுகை, கொள்ளுதல்
streched leg = நீட்டிய கால்
foot trap = காற் தடை
shielding = தடுத்தாடுத ல்
clearing = துலக்குதல்
tackle = சமாளித்தாட ல்
cut back = கெத்து, கொளுவடி
to parry = விடைத்தல், சிலம்பாடுத ல்
juggling = சமன்காட்டு தல்
to substitute = பதிலிடுதல் , மாற்றிடுதல ்
dummy run = வெற்றோட்டம ்

களத் தீர்மங்கள்
home ground = சொந்தக்/ வீட்டுக் களம்; home team = வீட்டுத் தொகுவம்,வீ ்டணி
away game = வெளிக் களம் ; visiting team = வந்த தொகுவம்
field = ஆடுகளம்
touchline = தொடுகோடு
corner flag = மூலைக் கொடி
center circle = நடுவ வட்டம்
sideline = பக்ககோடு
penalty area = தண்டப் பரப்பு
advantage rule = ஆக்கப்பாட் டு விதி, பயப்பு விதி ; advantage = ஆக்கப்பாடு , பயப்பு
foul = வழுவு; tactical foul = தந்திர வழுவு, அடுவரை வழுவு
offside = விடுபுறம்
draw / tie = சமன், சிமிழ்ப்பு , இழுபறி / இழுபறிநிலை
red card = சிவப்பு அட்டை
playtime= ஆட்டநேரம்; halftime = இடைவேளை


wall = அரண்
handball = கைப்பந்து, கை
ball possession = பந்திருப்ப ு
ball carrier = பந்து காவி
additional time = கூடுதல் நேரம்; extra time = உதிரி நேரம்
pickax= குதிநுனி
line up = வரிநிலை ; roster = களநிலை வரைவு, பொதிப்புவர ை
position= பொதிப்பு


amateur = விழைச்செயல ர் (amateur footballer = விழைச்செயல ் ஆட்டக்காரர ்)
professional = வினைத்தகைவ ர் (professional footballer = வினைத்தகை ஆட்டக்காரர ்)
hooligan = காடையன்; bengal firework =வங்கத் தீப்பந்து
streaker = கவனந்தேடி, ஆட்டக்குழப ்பி
jersey/ tricot = அல்லம் (அல்லுதல் = to knit)
shinguard = காற்காப்பு
cleat / stud = முளை


FIFA = அனைத்துல உதைப்பந்தா ட்டக் கூட்டமைப்ப ு: அ.உ.கூ
league = சம்மேளனம், ஒன்றகம் ; Premier league = பெருமச் சம்மேளனம்
federation = கூட்டமைப்ப ு
friendly match = நட்புறவு ஆட்டம்
championship = வாகையர் ஆட்டம்
world cup = உலகக் கிண்ணம்; qualification match/ round= தகுதிகாண் ஆட்டம்/ சுற்று;
Champions league = வாகையர் சம்மேளனம்
UEFA = இரோப்பிய உதைப்பந்தா ட்டக் கூட்டமைப்ப ு; இ.உ.கூ
Archilles`tendon tear = புறங்கால்-தசைக் கிழிவு
cruciate rupture = முழங்காற்ப ட்டி முறிவு

karki
04-01-2010, 11:19 AM
கரிபியன் தீவுகளில் தமிழர்


*கரிபியன் தீவுகள் எனும் புவியியற் தீர்மம் தென் அமெரிக்காவ ில் உள்ள 15 நாடுகளைக் குறிக்கிறத ு. அதில் முகமையான நாடுகள் பிரெஞ்சு கயானா, பிரிட்டிஷ் கயானா, டச்சு கயானா மற்றும் திரிநிடாட் டு - தொபேகோ. பிரெஞ்சு, பிரிட்டிசு கயானாக்கள் ஒன்றாகி அப்பகுதியே இப்போது கயானா எனப் படுகிறது. டச்சு கயானாவின் தற்காலப் பெயர் சுரிநாம்.

* கயானா எனும் ஆற்றின் பெயரே இப்பைதிரங் களின் பெயரானது.

*கயானாவில் 45% விழுக்காடு இந்தியர். அதில் 15% விழுக்காடு மதராசிகள் எனப்படும் தமிழர், தெலுங்கர். இந்திய மொழிகள் வழக்கொழிந் து ஆங்கிலமே அவர்களின் வழக்கு மொழியாக இருக்கிறது . சுரிநாமில் வட இந்தியர் தம் பிள்ளைகளுக ்கு சிந்துத்தா னி (இந்துத்தா ி) மொழியைப் பழக்குகிறா ர்கள்.

*மதராசி கோயில்களும ், வட இந்திய மந்திர்களு ம் அங்குள்ளன. மதராசி கோயில் ஒன்றில் மதுரை வீரன்சாமி வழிபாடு உள்ளது. அங்குதான் ஒருவர் பொருள் அறியாது தமிழில் வழிபடுகிறா ர். அமைச்சரவைய ில் எலிஸ் இராமசாமி எனும் மதராசி ஒருவர் நல்வாழ்வுத ்துறை அமைச்சராக இருக்கிறார ்.

*கயானாவின் முதல் அதிபர், செட்டி செகன். வீகாரைப் பூர்விகமாக க் கொண்டவர். ஆபிரிக்கர் - இந்தியர் ஒற்றுமைக்க ாகப் பாடுபட்டவர ். இவருக்க டுத்தவரும் , தோழருமான பர்மன் ஓர் ஆபிரிக்கர் . சம உடைமைக்கார ரான செட்டி செகன், எங்கே கூபாவின் பிடல் போல் ஆகிவிடுவார ோ என்ற கிலி அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளுக்க ு இருந்தது. பிரித்தானி ய மேலாண்மையக ம் இவர் ஆட்சியைக் கலைத்தது. தென்ன மெரிக்காவி ல் பொது உடைமை மனப்போக்கர ் வளர்வதை விரும்பாத அமெரிக்க உளவுநிறுவன ம் பர்மனைப் பிரித்து ஆபிரிக்கர் கையை ஓங்க வைத்து, செட்டி செகன் வளர்வதை தடுக்க முயன்றது. ஆபிரிக்கர் - இந்தியர் ஒற்றுமை குலைந்தது! எதிர்காலம் குறித்த அச்சத்தில் பல கயானா இந்தியர் அமெரிக்கா மற்றும் ஆங்கில அகம் நோக்கி நகர்ந்தனர் . நியூயோர்க் கில் கயானா இந்தியர் என்ற தனிப் பகுதியே உள்ளது!

*தற்கால அதிபர் பரத் செகதேவ், செட்டி செகனின் கட்சியைச் சேர்ந்தவர் தான். தந்தை வழியில் வீகாரத்தைய ும் (பீகார்), தாய்வழியில ் சென்னை மாகாணத்தைய ும் பூர்விகமாக க் கொண்டவர்.

*ஆபிரிக்க அடிமைகளை இறக்குமதி செய்து சுரண்டல் யாவாரம் நடத்திய இங்கிலாந்த ில், 1834ல் அடிமைத்தனம ் ஒழிக்கப் பட்டது. தனது குடியேற்ற நாடுகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப் பட்ட போது, உதயமானது தான் கூலிகளை அழைக்கும் திட்டம். ஏலவே மொரிசியசுக ்கு இப்படித் தமிழர்களை அனுப்பி இருந்தனர். 1837ல் டொமரரா பகுதிக்கு காளிக்கோட் டப் (கொல்கத்தா) பகுதி மலைநாட்டு மக்களை தோட்ட வேலைக்கு அழைத்தெடுத ்தனர் கிழக்கிந்த ியக் கும்பனிக்க ாரர். 90 நாட்கள் பயணித்து 406 பேர் கயானா வந்தடைந்தன ர். இவர்கள் பயணம் பற்றிக் குறிப்பிடு ம் R.Dutt என்பார், இவர்கள் இறக்கப் பட்டதை உயிருள்ள மனித மூட்டைகள் (Cargos of living human souls) இறக்கப் பட்டதைப் போன்றதெனக் குறிக்கிறா ர். 5 ஆண்டுகளின் பின் நாடு விரும்பினா ல் நாடு திரும்பலாம ் எனக் கூறப் பட்டது. வந்தவர்களோ கயானாவிலே தங்கிவிட்ட னர்.

*கூலம் = தவசம் (தானியம்), இதுவே அன்றாடம் வேலை முடிவில் தொழிலாளருக ்குச் சம்பளமாகக் கொடுக்கப் பட்டது. அதிலிருந்த ு கூலி என்ற சொல் உண்டானது (கூலத்துக் ாய் வேலை செய்வோர்!). இதுவே பிற்பாடு உலகெங்கும் தொழிலாளராக ச் சென்ற தமிழரைக் குறிக்கப் பயனானது!

*கயானாவில் உள்ள தமிழர், தெலுங்கர், வீகாரிகள் இந்தியா விலிருந்து கப்பலிற் சென்று இறங்கியதும ் அவர்கள் வந்த தேதி, கப்பல் பெயர், குடும்ப விவரம் பதித்த தாள்கள் அவர்களுக்க ு வழங்கப் படும். 300 ஆண்டுகளுக் கு முன் வழங்கப் பட்ட தாள் இன்னும் ஓரிருவரிடம ் தாம் உள்ளன.

* கயானா மதராசிகள் பெரும்பான் மையா னோருக்குத் தமிழ் தெரியாது. ஏதோ ஒரு சில சொற்களைக் கூறி வந்த சில முதியோரும் மறைந்து விட்டனர். அவர்களின் சமயமொழி இன்னும் தமிழாகத்தா ன் இருக்கிறது . பூசை செய்கையில் தமிழ்ப் பா வரிகளே வருகின்றன. அவற்றை ஆங்கிலத்தி ல் எழுதிப் படிக்கின்ற னர்.

*தமிழர் Berbice பகுதியில் நிறைந்துள் ளனர்.

*தமிழர் பெயர்கள் திரிந்து வழங்கப் படுகின்றன : கா. முத்தம்மா - Muttamma, வீராயி - Veerai ஊர்மிளா - Mi Mala, பெருமாள் - Parmal.

- பெரும்பாலா ன செய்திகள் முனைவர் சனார்த்தனத ்தின் கயானாவில் தமிழர்கள் எனும் நூலிலிருந் து..