PDA

View Full Version : தீ அணையட்டும் - வைரமுத்து



dinesh
12-19-2003, 05:00 PM
தீ அணையட்டும் - வைரமுத்து

ஆண்டுக்காண ்டு நிகழும் மாரியம்மன் திருவிழாவை ப் போல ஆண்டுக்காண ்டு நடக்கும் ஜாதிக்கலவர ங்களுக்கெத ிராய் எத்தனையோ கவிதைகள். இந்தக் கவிதையே இறுதிக் கவிதையாய் இருக்க வேண்டுமென் று இந்திய சுதந்திரத் தைப் பிரார்த்தி க்கிறோம்.

தெற்கே தெற்கே ஜாதிகள் மூட்டும்
தீயே பற்றாதே! - பழங்
கற்காலத்து ப் பாம்பே! எங்கள்
காலைச் சுற்றாதே!

மண்பானைகளு ம் மண்பானைகளு ம்
மல்லுக்கு நிற்பதுவோ - இங்கே
கண்ணீர்த்த ுளிகளும் கண்ணீர்த்த ுளிகளும்
கைகள் கலப்பதுவோ?

தாழ்த்தப்ப ட்டவர் ஒடுக்கப்பட ்டவர்
சண்டை பிடிக்கையி லே - அங்கே
வீழ்த்தப் படுவதும் வெல்லப் படுவதும்
வேறோர் இனம(ல்)லவே!

முற்நூறாண் டை முன்னுக் கிழுத்குது
முரட்டு விஞ்ஞானம் - நாமோ
முந்நூ றாண்டு பின்னே செல்வது
முழுக்க அஞ்ஞானம்

அந்நிய ரோடு சண்டை கொண்டது
ஆறோ ஏழோதான் - சொந்த
மண்ணவ ரோடு சண்டை கொண்டது
மணலினும் அதிகம்தான்

செயற்கை மனிதன் செவ்வாய்த் தரையில்
சிற்றில் ஆடுகையில் - இங்கே
இயற்கை மனிதர் ஜாதிச் சண்டையில்
இடுப்பு முறிவதுவோ?

நீண்ட நாள்முன் யாரோ விதைத்த
நெருப்பின் மிச்சத்தில ் - மண்ணை
ஆண்ட பரம்பரை இன்று வரைக்கும்
அழிந்து கருகுவதோ?

புதைந்த தமிழின் சங்கம் மூன்றைப்
புதுக்க எண்ணாமல் - நம்மைப்
புதைக்கும் ஜாதிச் சங்கத்துக் கள்
புதைந்து போவீரோ?

வறுமை ஏழ்மை பேதைமைக் கெதிராய்
வாளை எடுக்காமல் - நாம்
ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
உற்சவம் நடத்துவதோ?

புத்தகம் ஈந்து கல்விச் சாலை
போக்கும் சிறுவர்களை க் - கையில்
கத்திகள் தந்து ஜாதிக் களத்தில்
கருகச் செய்வீரோ?

மனிதன் என்னும் நிஜத்தை நீங்கள்
மறந்து தொலைத்துவி ட்டு - ஜாதிச்
சனியன் என்னும் கற்பனைக் காகச்
சமர்கள் புரிகுவதோ?

ஆயுதங்களைக ் கட்டும் கைகாள்
அணைகள் கட்டுங்கள் - அந்த
ஆயுதங்களை உருக்கி உருக்கி
ஆலைகள் எழுப்புங்க ள்

சிறைகள் எடுக்கும் செலவில் நீங்கள்
சிறகுகள் வாங்குங்கள ் - வீணே
தரையில் சிதறும் ரத்தம் போதும்
தானம் புரியுங்கள ்

முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு - அட
இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
இலக்கியம் ஏதுக்கு?

thirudan
12-19-2003, 08:12 PM
miga arumaiyaana varigal....today i read a article in uyirezhuththu yahoo groups...that was a meeting with vairamuthu by Mr.Xavier, one of the best poets in the net, just recalling those sentenses...allways vairamuthu is vairamuthu....in this occasion just remembering some varigal from his ituvarai naan....he told in that ...his first cinema song...pon maalai pozhuthu..was written on the occasion of his first child's birth day...he came back to hospital and then he told his wife that...the first line he wrote in the song is about his wife..ponmaalai pozhuthu.....his wife name is ponmani howmuch he loves his wife???appppaa nenachaale udambu silirkkuthu....
thiru...:)