PDA

View Full Version : வேண்டாம் வரதட்சணை! - சி. ஜெயபாரதன்



dinesh
12-20-2003, 04:50 PM
வேண்டாம் வரதட்சணை! - சி. ஜெயபாரதன்

ஈழத்தில் இட்டதீ சீதைக்கு! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! - வாழாது
மீண்டும் நகைச்சண்டை ! மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!

தாலிகட்ட நூறுபவுன்! தாயாக்க வேறுபவுன்!
கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமென ும் - வாலிப
ஆண்மகனும் தாசியைப்போ ல் ஆசையுடைத் தாசனே!
வேண்டாம் வரதட் சணை!

ஆக்கம் - சி. ஜெயபாரதன்
நன்றி - திண்ணை - 07/05/2000 (www.thinnai.com)