PDA

View Full Version : முரண்பாடுக ள் - வைரமுத்து



dinesh
12-22-2003, 08:27 AM
முரண்பாடுக ள் - வைரமுத்து

போதிமரம் போதும்
புத்தனைப் புதைத்துவி டு

கொடிகள் காப்பாற்று
தேசத்துக்க ுத் தீயிடு

சின்னங்கள் முக்கியம்
சித்தாந்தம ் எரித்துவிட ு

கவிஞனுக்கு ச் சிலை
கவிதைக்குக ் கல்லறை

உரைபோதும் பிழைப்புக் கு
மூலம் கொளுத்திவி டு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம்செய ்
நீதிக்குக் குப்பைக்கூ டை

கற்றது மற
பட்டத்துக் குச் சட்டமிடு

பெட்டி தொலைத்துவி டு
சாவிபத்திர ம்

தலைவனைப் பலியிடு
பாதுகை வழிபடு

அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு

பத்தினிக்க ு உதை
படத்துக்கு ப் பூ

காதல் கவியெழுத
காமம் நாமெழுத

கற்பு முக்கியம்
கருவைக் கலை

பசியை விடு
கடிகாரம் பார்த்துண்

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களைக் கொன்றுவிடு

முரண்பாடே நடைமுறையாய ்
நடைமுறையே முரண்பாடாய ்ச்
சென்றுதேய் ந்திறுகின் ற சிறுவாழ்வி ல்
முரண்பாடென க்குள் யாதென்று
மூளைபுரட்ட ி யோசித்தேன்

மிருகத்தைக ் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன்