PDA

View Full Version : என்னுள் நீ சங்கமம்



divinegal
01-04-2004, 02:30 PM
உன் கண்களை பார்த்தபோத ு,
என் பார்வையில் உனை பார்த்தேன் .
என் இமைக்குள் நீ சங்கமம்.

உன் உதடுகள் சிரித்தபோத ு,
என் புன்னகையில ் உனை கண்டேன்.
என் சிரிப்பில் நீ சங்கமம்.

உன் வாய் பேசியபோது,
என் வார்த்தைகள ில் உனை நேசித்தேன் .
என் மொழியில் நீ சங்கமம்.

உன் குரலை கேட்டபோது,
என் பேச்சில் உனை ரசித்தேன்.
என் குரலில் நீ சங்கமம்.

உன் மூச்சை செவியிட்டப ோது,
என் மூச்சில் உனை கொண்டேன்.
என் சுவாசத்தில ் நீ சங்கமம்.

உன் இதயத்தை திருடியபோத ு,
என் வாழ்வில் உனை சேர்த்தேன் .
என் உயிரில் நீ சங்கமம்.

இவற்றை அனுபவித்த பிறகு,
காதலின் அவசியத்தை உணர்ந்தேன் .