எம் முகவரி
+ Reply to Thread
Page 1 of 8 12345 ... LastLast
Results 1 to 20 of 143

Thread: எம் முகவரி

 1. #1

  Default எம் முகவரி

  இந்தத் திரி தமிழ், தமிழர் பற்றி வரையப்படும ் கட்டுரைகள் , குறிப் புக்களைப் படியெடுத்த ுப் பதியவும், நான் வேறு தளங்களில் எழுதியவற்ற ை இங்கிடவும் பயன்படும்.

  முதலில் திருவாளர் குமரிமைந்த ன் அவர்களது கட்டுரைத் தொடரின் தொடுப்புக் களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .
  இரு ஆண்டுகளுக் கு முன்னர் கீதத்தில் Coolian அவர்கள் தொடக்கிய குமரிக் கண்டம்/ இலெமூரியா தொடர்பான திரியில் நான் மேலோட்டமாக ஒரு கட்டுரை எழுதியிருந ்தேன், அதையொட்டி வாசனும் நானும் சிறு விவாதம் நடத்தியிரு ந்தோம்.

  இந்தக் கருத்துக்க ள் குமரி பற்றி ஆராய்ச்சிக ள் நடத்திவரும ் திருவாளர் குமரிமைந்த னைச் சென்றடைந்த ிருக் கின்றன. அது தொடர்பாக, அதற்கு எதிர்வினைய ாக என்னைக் கிடுக்கியு ம், பல செய்திகளைச ் சொல்லியும் குமரிமைந்த ன் எழுதிய நீண்ட மறுமொழி ஒன்று தனிப்பட்ட செய்தியாக அவரது நண்பர் மூலம் கீதத்தில் அனுப்பி வைக்கப் பட்டது.அதை பொதுவுக்கள ிக்க அவர்களிடம் வேண்டிக் கொண்டேன்.அ ் நேரத்தில் நானும் கொஞ்சம் பரபரத்து ஓடிக் கொண்டிருந் ததால் அதனை மறந்துவிட் டிரு ந்தேன்.பின னர் கீதம் புது உருக் கொண்டபின் அது என் தனிப்பட்ட செய்திப் பெட்டியிலி ருந்து காணாமலும் போய்விட்டத ு.

  இப்போது இந்த விவாதத்தை ஒட்டி குமரிமைந்த னார் தன் வலைப்பதிவி ல் கருத்துக்க ளும் கட்டுரையும ் வழங்கியிரு க் கிறார்.
  இங்கு செய்தி சொல்லும் முகமாக மேலோட்டமாக ப் பதிந்த என் கருத்துக்க ளுக்கு சேரியதாயும ் ஆழமாயும் மறுமொழித்த , கட்டுரை வரைந்த அவருக்கு என் நன்றிகள்.
  அக்கட்டுரை யில் சில கருத்துக்க ளில் நான் சிறுது மாறுபட்டால ும், அவரின் குமரிக் கண்ட அறிவுச் சேகரத்துக் கு முன் நான் ஒரு தூசு என்பதனை அறிவேன்.
  செயமோகனின் 'கொற்றவை' ஆக்கத்திற் கு அவர் உதவியதைப் பற்றி அறிந்திருக ்கி றேன்.

  இங்கு நண்பர்கள் சிலர் அவரது வலைப்பதிவை ப் படித்திருக ்கக் கூடும். படித்திருக ்கா தோருக்காகவ ும், இடையார்வுள ்ளோரு க்காகவும் கீழே தொடுப்புகள ்..

  http://kumarimainthan.blogspot.com/2007/05/1_13.html

  http://kumarimainthan.blogspot.com/2007/05/2_13.html

  http://kumarimainthan.blogspot.com/2007/05/3_14.html

  http://kumarimainthan.blogspot.com/2007/05/4_14.html

  http://kumarimainthan.blogspot.com/2007/05/5_14.html
  Last edited by karki; 05-29-2007 at 10:26 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 2. #2

  Default

  இது 'உலகம் பரவிய தமிழின் வேர்-கல்', 'தமிழ்க்கப பல்' போன்ற பொத்தகங்கள ் எழுதிய சொல்லாராய் ச்சியா ளர் முனைவர். கு.அரசேந்த ரனார் ஐந்தாண்டுக ளுக்கு முன் இணையத் தமிழ் மாநாடொன்றி ல் வாசித்த கட்டுரை ஒன்றின் படி.

  உலகமொழிகளி ல் தமிழ்
  முனைவர்.கு. ரசேந்திரன
  சென் னைக் கிறித்தவக் கல்லூரி
  ______________________________ ______________________________ _______________
  உலகமொழிகள்

  உலகமொழிகள் சற்றொப்ப 2,796 என்பர்அறிஞ ர் . [1]
  இம் மொழிகளை
  1. இந்தோ ஐரோப்பியம் ( Indo - European )
  2. செமித்திக் - அமித்திக் (Semito - Hamitic)
  3. ஊரால்- அல்தாய் (Ural - Altaic)
  4. சப்பானிய - கொரியன் (Japanese - Korean)
  5. சீனதிபெத்த ியம் (Sino -Tibetan)
  6. திரவிடம் (Dravidian)
  7. மலேய -பொலினீசியம ் (Malayo - Polynesian)
  8. ஆப்பிரிக்க நீக்கிரோனி யம் (African - Negro)
  9. அமெரிக்க இந்தியம் (American Indian) என ஒன்பதாகப் பிரிப்பார் மரியோ பெய் (MarioA.pei) [2]

  முதன்மொழி
  உலகமொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியில ிருந் து பிறந்திருக ்கலாம் என்ற கருத்து
  மொழிநூலறிஞ ர்களிட ம் இருந்து வருகின்றது . விவிலியத்த ிருமறை யில் ஆதிக்காலத் தில்
  ஒருமொழியே பேசப்பட்டு வந்ததென்ற செய்தி காணப்படுகி ன்றது.[3]
  எபிரேயமொழி யே (Hebrew) உலகில் தோன்றிய முதன்மொழி என்ற கருத்தும் அறிஞரிடை
  உண்டு. இதனை மொழிநூல் வல்லுநர்கள ் அவ்வளவாய் ஏற்பதில்லை . சிந்துவெளி யில் வாழ்ந்த
  தமிழர்களே எகிப்தில் (Egypt) குடியேறினர ் என்ற முடிவும் அறிஞர்களிட ையே உண்டு.[4]
  இலேநாடு வுல்லி ( Leonard Wooly) என்னும் தொல்பொருளா ய்வறிஞ ர் எகிப்தின் ஊர் நாகரிகம்
  பற்றி எழுதிய நூலில் சுமேரியர்க ள், தங்கள் முன்னோர் நாகரிக முதிர்வுடன ் கிழக்கிலிர ுந்து
  மேற்கு நோக்கி வந்து குடியேறிவர ்கள் என்ற கருத்துள்ள தென்று இயம்பியுள் ளார்.[5]
  "பண்பாட்டி ் தொடக்கம் - தென்னிந் தியா (Beginning of civilisation in south India-by H.D.
  Sankalia ) என்னும் நூலில் அதன் ஆசிரியர் உலகில் முதன்முதலா க கிடைக்கப்ப ட்ட எழுத்து,
  சிந்துவெளி எழுத்தே என்றும் எகிப்திய நாகரிகத்தி னும் தமிழர் நாகரிகம் முந்தியதென ்றும்
  கூறியுள்ளா ர்.[6]
  தெற்கிலிரு ந்து வடக்கா அல்லது வடக்கிலிரு ந்து தெற்கா தமிழர், எகிப்து தேசத்திலிர ுந்து சிந்துவெளி ப் போந்து அதன் பின்னர்த் தெற்கு நோக்கி நகர்ந்த
  இனத்தவர் என்று அறிஞர் பலராலும் தமிழர் தெற்கேயிரு ந்து வடக்கு நோக்கி நகர்ந்து
  வடமேற்காகச ் சென்று ஏந்தியம் கடந்து நைல் ஆற்றங்கரைய ில் குடியேறினர ் என்று அறிஞர்
  சிலராலும் இருவகையிலு ம் கருத்துக்க ள் சொல்லப்படு வதுண் டு.

  உலக மொழிகளில் தமிழ், என்னும் இக்கட்டுரை
  1. சுமேரிய மற்றும் இந்தோ ஐரோப்பிய மொழிகளில்,
  2.ஆத்திரேலி ப் பழங்குடிகள ின் மொழிகளில். 3.ஆப்பிரிக் மொழிகளில், 4.சீனமொழியி ் தமிழ் என இவைகளில் கலந்து விரவி மூலமாயிருப ்பதைச் சான்றுகள் சில கொண்டு விளக்கி அமையவுள்ளத ு.
  -----------------------------------------------------------

  இங்கே தமிழில் எழுதி முடிக்க ஆவி தீருகிறது.
  படியைப் பதியவும்,ஒ ்டவும் சரவலாக உள்ளது.ஆகவ , ஆர்வமும், PDF-வாசிப்பானு ம் உள்ளோர் கீழுள்ள தொடுப்பைச் சொடுக்கி கட்டுரையை முழுமையாகப ் படிக்கலாம் .

  http://www.infitt.org/ti2002/papers/71ARASEN.PDF
  Last edited by karki; 05-29-2007 at 10:25 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #3
  suriyan80 Guest

  Default

  nanrigal

 4. #4

  Default

  நல்ல திரி , நல்ல பணி கார்க்கி


 5. #5

  Default

  தமிழும் திரவிட மொழிகளும் - பேராசிரியர ் இரா. மதிவாணன்

  தமிழ் இனத் திரவிட மொழிகளுக்க ுத் தாயும் ஆரியத்திற் கு மூலமுமாகும ் என்று மொழி ஞாயிறு பாவாணர் திண்ணமாக வரையறுத் திருக்கிறா ர். திரவிட மொழிகளில் அமைந்துள்ள தமிழ்க்கூற ுகளும், சிறப்பாகத் திரவிட இலக்கியப்ப ோக் கில் ஆழ வேரூன்றியு ள்ள தமிழிலக்கி ய இலக்கணக் கூறுகளும், சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்கள ால் மறுக்கப்பட ா விடினும் அறவே மறைக்கப்பட ்டுள் ளன. அங்ஙனம், மறைந்துள்ள இலக்கிய இலக்கணக்கூ றுகளைச்
  சிற்றளவில் புள்நோட்டம ாக ஆய்வதே இக் கட்டுரையின ் நோக்கம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென் திராவிட மொழிகள் மூன்றும் தொடக்கநிலை யில் முழுக்க முழுக்க தமிழாகவேயி ருந்து நாளடைவில் திரிந்தவை என்பதற்குக ் கீழ்காணும் சான்றுகளைக ் காட்டலாம்:

  * கடைக் கழகக் காலத்திற்க ு முற்பட்ட நூற்றாண்டு களில் இவற்றுக்கு வேற்றுமொழி நிலையிருந் தி ருப்பின் பழந்தமிழ் நூல்களிலும ் வடமொழி நூல்களிலும ் அவற்றின் பெயர் சுட்டப்ப ட்டிருக்கு ம். ஆந்திரர் என்பது ஆய் அண்டிரன் மரபினரின் இனப்பெயரேய ன்றி மொழிப் பெயராகாது.

  * ஏனைத் திரவிட மொழிகளின் தோற்றம் பிராகிருத மொழியின் தோற்றத்துக ்குப் பிந்தியது. பிராகிருத மொழி, வேதகால ஆரிய மொழியின் வரவுக்கும் சமற்கிருதத ்தின் தோற்றத்துக ்கும் இடைப்பட்டத ு. அப்பொழுது தமிழொன்றே இந்தியாவில ் வழங்கிய தனிமொழி, ஏனைத் திரவிட மொழிகளின் அடிப்படை தொல்காப்பி ய நெறிக்குப் பொருந்துகி ன்ற தேயன்றி, பாணினி இலக்கண மரபுக்குச் சிறிதும் பொருந்தவில ்லை. தொல்காப் பியத்திற்க ு மூலநூலானது , தென்னாட்டி ல் தோன்றியதும ான ஐந்திர இலக்கணத்தி ன் வழி வந்த காதந்திர நெறிகளையே தெலுங்கு, மராத்தி, கன்னட மரபு இலக்கண ஆசிரியர்கள ் போற்றியுள் ளனர்.

  * ஏனைத் திரவிட மொழிகளில், ழ, ற, ன சிறப்பெ ழுத்துக்கள ின் பெரிதும் முயன்று எழுத்து அழிவுப் பணி செய்துள்ளன ர். எனினும், எகர ஒகரக் குறில் ஆட்சியின் அடிப்படையை அவர்களால் சிறிதும் அழிக்க இயலவில்லை. தெலுங்கில் அச்ச தெலுங்கு இயக்கமும், கன்னடத்தில ் பழங்கன்னட இயக்கமும், மலையாளத்தி ல் பச்ச மலையாள இயக்கமும் வடமொழித் தாக்கத் திலிருந்து தத்தம் மொழிகளைக் காக்கப்பாட ுபட்டன. தென்னாட்டு மொழிகளில் தமிழ் ஒன்றில்தான ் தனித்தமிழ் இயக்கம் முழு வெற்றி பெற்று வாகை சூடியுள்ளத ு. தமிழைச் சாரச்சார அவற்றின் தனித்தன்மை காக்கப்படு வதும், வடமொழியை சாரச்சார அவற்றின் தனித்தன்மை அறவே கெடுவதும் அவற்றின் தமிழ் அடிப்படையை க் காட்டும்.
  தமிழிலில் லாதவையாகவு ம், ஏனைத் திரவிட மொழிகளில் மட்டும் வழங்குவனவா கவும் உள்ள மறைந்துபோன தமிழ்ச் சொற்கள் எண்ணில்லாத வை. கடைக்கழகக் காலத்திற்க ு முன்பே திரவிடமொழி களில் குடியேறி நிலைத்தபின ், தமிழில் வழக்கிழந்த தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அவ்வம் மொழிகளில் தமிழ் அடிப்படைத் தொன்மையையு ம், அம் மொழிகள் தமிழிலிருந ்து முகிழ்த்தவ ை என்பதையும் எடுத்துக் காட்டாகப் பட்டியலிட் டுத் தந்துள்ளேன ்.
  அவை அனைத்தும் செந்தமிழ்ச ் சொற்களாகவு ம் சில திரிபுற் றனவாகவும் இருத்தலை நன்குணரலாம ்.

  தெலுங்கு
  அடிவாள்புள ் = சேவல்
  கோடகத்தி = குரங்கு(கோ ்தி)
  நூநெய் = எண்ணெய்(நு= ள்)
  ஊரேகல் = ஊர்வலம்
  கன்னு = மகப்பெறு
  நேர்ப்பு = கல்வி, படிப்பு
  தன்னு = உதை
  நுவர் (நோரு) = வாய்(நுவல்)
  பால் = பங்கு
  நள் = கருமை
  காமுகர் = சுவைஞர், ரசிகர்

  கன்னடம்
  கொள்கொடை = கொடுக்கல் வாங்கல்
  துப்பம் = நெய்
  நிறைதரல் = முடிவுறல்
  பொழில் = நகரம்
  நடுவு = இடுப்பு
  அறிகை = விசாரணை,உச வல்
  தோள்மரம் = பக்க மரம்
  இரியர் = பெரியர்
  முளவு = முயல்
  முகிழ் = தயிர்
  அமல் = இரட்டை,சோட

  --------------------------------------------------
  இன்தாம் தளத்திற் படியெடுக் கப்பட்டது!
  Last edited by karki; 07-16-2007 at 10:58 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 6. #6

  Default

  கன்னடம்
  தென்னக நான்மொழிகள ுள் பழங்கன்னடம ் பழந்தமிழுக ்கும் பழகு தமிழுக்கும ் ஒரு பொற்பாலமாக விளங்குகிற து. பழங்கன்னட இலக்கியத் தொடர்கள் தமிழினின்ற ும் வேறுபடுத்த ியறிய முடியாதவை என்பதற்கு 'வட்டாராதன ' என்னும் பழங்கன்னட நூலிலிருந் து பின்வரும் வரிகளைச் சான்றாகக் காட்டலாம்.

  கன்னடம்-மர்தள கஹலாதி த்வனிகளும் எனித்து எனித்து ஆ புலி கேள்கும் அனித்து அனித்து அஞ்சி குகையொள் அடங்கி இர்தத்து.

  தமிழ்- மத்தளம் காகளம் முதலியவற்ற ின் ஓசைகளை எனைத்து எனைத்து அந்தப் புலி கேட்குமோ அனைத்து அனைத்து அஞ்சிக் குகையுள் அடங்கி இருந்தது.

  மைசூர் தொல்பொருள் ஆய்வுத்துற ை இயக்குநர் தம் நூலில், தக்கணப்பகு தி முழுவதிலும ் வாழ்ந்த பழங்குடிகள ் தமிழர்களே என்றும் கன்னடம் கருநாடகம் என்று பெயரிட்டவர ்களும் தமிழர்களே என்றும் கூறுகிறார் . (எம்.எச். கிருட்டிணன ் "கர்நாடக பூர்வ சரித்ரெ")

  "கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
  கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
  என்பன குடபால் இருபுற சையத்
  துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் "

  என்றார் அகத்தியனார ் என்று நன்னூல் 161ஆம் நூற்பாவுரை யில் மயிலைநாதர் குறிப்பிடு கிறார்.
  கருநாடு-கரிசல்மண் நிலம் எனப் பொருள் படுவதாகப் பலரும் கருதுகின்ற னர். பழந்தமிழ் நிலப்பாகுப ாட்டில் குறிஞ்சி முதலாய நிலவகையாலல ்லது மண்வகையில் பாகுபாடின் மையின் கல்+அகம்+-கல்நாடகம்-கன்னடம் எனத் திரிந்தது என்பதே முற்றிலும் உண்மை.
  இன்றும், மலையாளத்தா ர் கன்னடத்த, கன்னாடகம் என்று அழைக்கின்ற னர்.
  'பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே', 'கல்லிறந்த ரே', 'கல்நாடன்' என்னுந் தொடர்களில் 'கல்' மலையும் குன்றும் சார்ந்த நிலப்பகுதி யைக் குறித்து வருதலைக் காணலாம்.
  கல்நாடு-குன்றுகள் நிறைந்த நாடு. ஆந்திரத்தி லுள்ள ராயலசீமைப் பகுதியும் கல்நாடே. அறைராய் (தெ.)-கல். கன்னட இலக்கியத்த ிலும் கல்வெட்டுக ளிலும் கருநாடர் என்னும் சொல் பயிலவில்லை . வீரசோழியத் தில் 'கன்னாடர்' என்றும், பிராகிருதத ்தில் 'கன்னாட' என்றும், மராத்தியில ் 'கானட' என்றும் கன்னடம் குறிப்பிடப ்படுகிறது.
  கருநாடகம் என்னும் சொல் அக்காலத்தி ல் மராட்டிய மாநிலத்தைக ் குறித்தது. கருநாடு என்றால் பெரியநாடு என்று பொருள். கன்னடத்தில ் 'கருமாட' என்னும் சொல் பெரிய மாளிகையைக் குறிக்கிறத ு. 'தராதந்திர ்' என்னும் மராத்திய நூல் மகா ராட்டிரத்த ிற்குக் 'கர்னாடக்' என்னும் மற்றொரு பெயரிருப் பதாகக் கூறுகிறது. கலிங்கத்து ப் பரணியில் கருநாடர், வடுகுந் தமிழும் குழறிப் பேசியதாகவு ள்ள தேயன்றிக் கன்னடம் பேசியதாகக் கூறப்படவில ்லை. கன்னட மன்னன் புலிகேசி மராட்டியப் பகுதி வரை ஆண்டதால் தன்னை மகாராட்டிர அரசன் என அழைத்துக் கொள்கிறான் . எனவே, மராட்டிய மாநிலத்திற ்கு நெடுங்கால முதலே 'கருநாடு' என்று பெயரிருந்த து என்பதும், இத்தமிழ்ச் சொல்லே பெரிய நாடு என்னும் பொருளில் வட மொழியாளரால ் 'மகாராட்டி ம்' என மொழி பெயர்க்கப் பட்டுள்ளது . என்பதும் தெள்ளத் தெளிவாக வெளிப் படுகிறது.
  சிலப்பதிகா ரக் கதை கன்னட நாட்டுப் புறங்களில் சந்திரா வின் கதையாக வழங்கி வருகிறது. எல்லாவற்று க்கும் மேலாகத் தமிழ்ப் பண்பாட்டுக ்கே உரிய அகநானுற்று த் திருமணமுறை இன்றளவும் கன்னட, தெலுகு நாட்டுப் புறங்களில் உயிரோடு நிலவி வருவது பெரிதும் உவப்புக்கு ம் வியப்புக்க ும் உரியதாக இருக்கிறது .
  Last edited by karki; 07-16-2007 at 10:56 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 7. #7

  Default

  தெலுங்கு:
  கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை புகழ் பெற்று விளங்கிய ஆந்திர சாதவாகனர் காலத்தில் பிராகிருத இலக்கியங்க ளே புகழ்பெற் றிருந்தது. தெலுங்கு மொழியின் சுவடே சிறிதும் அறிப்படவில ்லை. பிராகிருத இலக்கியங்க ளில் தெலுங்குச் சொற்களாகச் சுட்டப்படு பவை தமிழ்ச் சொற்களாகவே உள்ளன.
  பிராகிருத இலக்கண இலக்கியக் கட்டுக்கோப ்பில் தமிழின் தாக்கமே வடமொழித் தாக்கத்தின ும் விஞ்சி நின்றது. பிராகிருதப ் புலவர்கள் வடமொழியை வல்லொலிமொழ ி என இகழ்ந்தனர் . பிராகிருதம ் தமிழைப் போன்றே சமற்கிருதச ் சொற்களி மெல்லொலிச் சொற்களாக மாற்றிக் கொள்வதால் பிராகிருதம ் பாட்டுமொழி , இன்மொழி எனப் பாராட்டப்ப ட்டது. கி.பி. முதல் நூற்றாண்டி ல் ஆளன் என்னும் சாதவாகன மன்னன் எழுநூறு அகப்பாடல்க ளி 'காதா சப்தசதி' என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தான் . இதிலுள்ள பல பாடல்கள் கடைக்கழகத் தமிழ்ப் பாடல்களின் மொழிபெயர்ப ்புகள் போலவே காணப்படுகி ன்றன. திணை துறை வகுக்கப்பட ாமல் வெறும் பாடல்களாக உள்ளன. ஆதனுங்கனைக ் கள்ளில் ஆத்திரையான ர் பாடிய புறநானூற்ற ு 175ஆம் பாடலில் வரும் "என் நெஞ்சாம் திறப்போர் நிற்காண்கு வரே" என்னும் வரி ஆந்திர நாட்டு அகநானூறு: 1978 பக் 55) சொற்பிறழாம ல் அப்படியே பிராகிருதப ் புலவர்களால ் எடுத்தா ளப்பட்டுள் ளது. சமற் கிருதத்தில ் இத்தகைய தனிநிலைப் பாடல்களான அகப்பாடல் வகை இன்மையால் இந்நூலை கோவர்தனா ச்சாரியார் என்பவர் 'ஆரிய சப்தசதி' என்னும் பெயரில் சமற்கிருதத ்தில் மொழி பெயர்த்துள ்ளார். இதிலிருந்த ு தமிழிலக்கண இலக்கியக் கூறுகள் எண்ணிறந்தன , பிராகிரு தத்திலும் சமற்கிரு தத்திலும் கால வெள்ளத்தில ும் ஊடுருவிச் சென்றுள்ளன என்பதும், பிராகிருத, சமற்கிருத வல்லுநர்கள ் அவ்வுண்மைய ை மறைத்து வருகின்றனர ் என்பதும் வெளிப்படுக ிறது. வடபுலத்து ஆரிய அரசன் பிருகத்தனு க்குத் (அசோகனுக்க ப் பின் மூன்றாவதாக ப் பட்டம் பெற்றவன்) தமிழ் அறிவுறுத்த க் கபிலர் 'குறிஞ்சிப பாட்டு' இயற்றியதும ், வடபுலத்தார ் அக்காலத்தி ல் தமிழை விரும்பிப் படித்ததை உறுதிப்படு த்தும்.

  பழந்தமிழில ் 'தொன்மை என்றும். இந்திய மொழிகள் அனைத்திலும ் 'சாம்பு காவியம்' என்றும் அழைக்கப்பட ும் உரையிடையிட ்ட பாட்டுடைச் செய்யுள் அமைப்பு, தமிழிலிருந ்து பிறமொழிகள் பெற்ற கொடை என்பதில் எட்டுணையும ் ஐயமில்லை. இதனைச் சமற்கிரு தத்துக்கோ பிராகிரு தத்துக்கோ சொந்தமானதா கக் கூறுவது அறியாமை. ஆரிய மொழிகளும் பிராகிருதம ் உருப்பெறாத அறப்பழங் காலத்திலேய ே செய்யுளும் உரைநடையும் விரவிவரும் பாங்கு, தமிழ் மொழிக்கே தனியுடைமைய ாகக் குமரிநாட்ட ில் தோன்றி, தொல்காப் பியத்தில் எண்வகை வனப்பு (எட்டுக் காப்பிய வகை)களுள் ஒன்றாகத் 'தொன்மை' என்னும் பெயரில் நிலை பெற்றுள்ளத ு.

  "தொன்மை தானே
  உரையோடு புணர்ந்த பழமை மேற்றே"

  என்று தொல்காப்பி யர் கூறுகிறார் . இத்தகைய வரலாற்றுப் பின்னணி சமற்கிருதம ் உள்ளிட்ட இந்திய மொழிகள் எவற்றுக்கு ம் அறவே இல்லை.
  தெலுங்கில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தமிழுக்கே உரிய சிறப்பு ழகரம் இருந்தது என்பது ஆந்திரநாட் டுக் கல்வெட்டுக ளால் புலனாகிறது . யுவான் சுவாங் கோதாவரி யாற்றைக் கடந்ததும் தமிழ் நாட்டைக் கண்டதாகக் கூறுகிறான் ; இன்றும் குச்சரம், மராத்தி, இந்தி மொழிகளைப் பேசும் மக்களின் பேச்சுமொழி யில் ழகர ஒலிப்பு உருப்பதாகக ் கூறுன்றனர் . தெலுங்கரில ் முற்போக்கு எண்ணமுடைய சிலர் தெலுங்கு எழுத்துகளி ல் வலியப் புகுத்தப் பட்டிருக்க ும் வேண்டாத வட எழுத்துகளி ல் சிலவற்றையே னும் நீக்கவேண்ட ும் என்கின்றனர ். பங்காரு ஐயா என்னும் தனித்தெலுங ்கு அறிஞர், ஆந்திர மண்ணில் தோன்றிய பெருமக்கள் மீது காப்பியம் பாடாமல், பாரத இராமாயண (வட நூற்) காப்பியங்ள ை என்று தெலுங்கர் பேரிலக்கிய மாகக் கொண்டார்கள ோ அன்றே தெலுங்கின் மேன்மை அழிந்துவிட ்டது என்றும், 'தல்லிநுடி ி மறசினவாடு இச்சினவாடே ' (தாய்மொழிய மறந்தவன் இறந்தவனே) என்றும் தந்நூலில் அவருடைய உள்ளக் கொதிப்பை உருக்கமாக எடுத்து ரைக்கிறார் .
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 8. #8

  Default

  தெலுங்குப் புலவர் ஒருவர், தெலுங்கு தனிமொழியென ்று நிலைநாட்டத ் தமிழினின்ற ும் வேறான தெலுங்குச் சொற்கள் பலவுள்ளன என்றார். அவ்வாறாயின ் அவற்றின் வேர்ப்பொரு ளை விளக்கி நிறுவுக என்றேன். கோடாலு (மருமகள்), வல்லகாடு (சுடுகாடு), நூனை(எண்ணெ ்) என்னும் முச்சொற்கள ைக் குறிப்பிட் டு, கோடாலு என்பதை, கோட (மென்மை)+ஆலு (பெண்) எனப் பிரித்தார் . ஏனையவை வேர்ப்பொரு ளறியாத் தொன்மையான என்றார். கோடாலு என்னும் சொல் விளக்கத்தி ன்படி, மருமகள் மட்டுந்தான ் மென்மையான பெண்ணா? மற்றப் பெண்டிர் மென்மையற்ற வரா? என வினவினேன்? அவர் மறுமொழியேத ும் சொல்லவில்ல ை.

  அவர் தனித்தெலுங ்குச் சொற்களாகக் காட்டும் அனைத்தும் தனித்தமிழ் ச் சொற்களே என்றும், அவற்றுக்கு த் தமிழிலன்றி த் தெலுங்கில் வேரும் பொருளும் காணமுடியாத ு என்பதையும் பின்வருமாற ு விளக்கிக் காட்டினேன் .
  தெலுங்கு>>>>>> >>>>> தமிழ்
  1. கோடாலு (மருமகள்) கோடல் -பிறர் வீட்டிலிரு ந்து கொண்ட பெண். கொளல்-கோடல். தமிழ்மக்கள ் 'கொள்வினை' 'கொடுப்பின ' என்று பேசுவதைக் காணலாம்.

  2. வல்லகாடு (சுடுகாடு) வெள்காடு-ஆள் இயங்காக் காடு. வெண்களமர் (பிறரைக்கொ ்டு வேளாண்மை செய்பவர்), கருங்களமர் (தாமே உழுது உழைப்பவர்) என்னும் சொல்லாட்சி களில்
  வெள்- செயற்படாமை யைக் குறித்தல் காண்க. இச்சொல் பழங் கன்னடத்தில ும் பெள்காடு என வழங்குகிறத ு.

  3. நூன (எண்ணெய்) நூ+நெய்-நல்லெண்ணெய ், நூ=எள். தெலுங்கிலு ம் எள் நூ குல் எனப்படுறது .
  நோலை-எள்ளுருண்ட ை.

  இவ்விளக்கம ் கேட்டு அவர் அகமகிழ்ந்த ார். ஆரிய இலக்கண இலக்கியக்க ூறுகள் தெலுங்கிலு ம் விரைந்து புகுத்தப்ப ட்ட அளவிற்குத் தமிழிலக்கண இலக்கியத் தாக்கம் தெலுங்கு கன்னட மலையாள மொழிகளில் ஏற்படாதது தவக்குறைவே யாகும். ஆண்டாள் வரலாறு ஒன்று மட்டும் கிருட்டிண தேவராயரால் தெலுங்கு இலக்கியமாய ிற்று.

  ****************************** ***
  இன்தாம் இணையத் தளத்திலிரு ந்து படியெடுக் கப்பட்ட கட்டுரையின ் ஒரு பகுதி
  Last edited by karki; 07-16-2007 at 10:58 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 9. #9

  Default About u r post

  மிக அருமையான கட்டுரை. தமிழின் தொன்மையை அரிய நல்ல ஒரு கட்டுரை.

 10. #10

  Default

  நுண்மையான நிறங்களைத் தமிழில் அழைக்க முயற்சித் திருக்கிறே ன்.
  வழக்கம்போல ் பாவாணர், இராமகி அய்யா போன்றோர் கண்டடைந்த சொற்களையும ் பயன்படுத்த ி யிருக்கிறே ன். இம்முயற்சி முழுமையானத ல்ல, இன்னும் ஆய்ந்து, நிறங்களை ஒப்பிட்டு வருகிறேன். அதுவரைத் தற்காலிகமா க எனது முன்னீடுகள ை இங்கிடுகிற ேன். இத்திரியை அவ்வப்போது மேற்திகழ்த ்த(update) முயற்சிப்ப ேன்.
  ஒன்றுக்கு மேற்பட்ட தமிழாக்கங் கள் இருக்கும் இடங்களில், நான் பரிந்துரைக ்கும் சொல்லைத் தடிமனா க்கியிருக் கிறேன்.

  முதற்கட்டம ாக வெள்ளை, பூஞ்ஞை, சிவப்பு, நாரங்கு போன்ற வண்ணங்களைத ் தொட்டிருக் கிறேன். மீதியைத் தொடர்வேன்.

  நிறம், வண்ணம், கெழு

  நிறம் பற்றிய பல கூட்டுச் சொற்களுக்க ு முன்னொட்டா க(prefix) வரும் சொற்கள் சில:

  Baby = அரும்பு (குழவி என்பது விலங்கினக் குட்டிகளுக ்கு மட்டு பொருந்துகி றது, இங்கு அரும்பென்ப தையே பயன்படுத்த லாம்!)
  Bright = பிறங்கு
  Dull = மங்கிய, அம்மிய
  Deep = ஆழ்
  Dark = அடர், கரு, கடு, காழ்
  Hot = பளிர், சுள்
  Light = இள
  Off = விடு
  Pale = பசலை, வெளிர்
  Metallic = மாழைய(ம்)
  Pastel = பசைக்கட்டி

  வெள்ளையும் அதன் சாயைகளும் (Shades of White)

  White = வெள்ளை
  Cream= களிம்பு, குழைமம்
  Ivory = மருப்பு (நிறம்)
  Cosmic Latte = காயப் பால் (நிறம்)
  Magnolia = ஊதாம்பல், குயின்
  Old Lace = வால்மணல் (நிறம்)
  Seashell = சங்கு நிறம்

  பூஞ்சையும் அதன் சாயைகளும்

  Pink = பூஞ்சை, பூங்கை, இளஞ்சிவப்ப ு
  Amaranth = கம்மை, கண்டி நிறம்
  Brilliant rose = திகழ்முளரி
  Carnation pink = அரளி, தசைப் பூஞ்சை, செந்தாரை
  Fuchsia = செந்துருக் கம்
  Magenta = நன்னிறம், மகரம்
  Salmon Pink = வஞ்சன நிறம், துவரி
  Deep pink = ஆழ் பூஞ்சை
  Hollwood Cerise = சீமைச் சேலா, நாலுமணிப்ப ூ நிறம்
  Hot pink = பளிர் பூஞ்சை
  Shocking pink = மிட்டாய்ப் பூங்கை, மிட்டாசு நிறம்
  Cherry Blossom pink = சேலாப்பூப் நிறம்
  Coral pink = பவழப் பூஞ்சை
  Cerise (Cherry)= சேலா நிறம், இரந்தை (கனிந்த இலந்தை), செப்பலி
  French Rose = பிரெஞ்சு முளரி
  Lavender Pink = குறிஞ்சிப் பூஞ்சை
  Persian Rose = பாரசிக முளரி
  Carmine Pink = பூங்காவி, கோழிப்பூ நிறம்
  Japanese Pink = சப்பானியப் பூங்கை
  Dark Pink = கரும் பூஞ்சை
  Hot Magenta = பளிர் நன்னிறம், தமரத்தை நிறம்
  Lavender Rose = பவழக்குறிஞ ்சி
  Rose = முளரி
  Thulian Pink = நீலத்திருவ த்தி நிறம் ( Pink butterfly tree)
  Light Thulian Pink = இள நீலத்திருவ த்தி நிறம்
  Puce = சங்குப்பூ நிறம், இருட்பூங்க ை
  Rose quartz = முளரிப் படிகம்
  Tea Rose = தேமுளரி
  Brink Pink = ஓரச்சிவப்ப ு
  Mountbatten pink / Plymouth = பாண்டுப் பூங்கை
  Ultra Pink = புறப் பூஞ்சை

  சிவப்பும் அதன் சாயைகளும்

  Red = சிவப்பு
  Alizarin = அலத்தம், மாதுளை நிறம்
  Burgundy = தேறல் சிவப்பு (Wine red)
  Bordeaux = தூமளம், சிவல்
  Cardinal = பூவல்
  Carmine= குங்குமம், கொங்காரம்
  Carnelian = அருணம்
  Cerise = சேலா நிறம், இரந்தை, செப்பலி
  Chestnut = இந்தியச் சிவப்பு , தேனவரை நிறம்
  Coral Red= வழகம் (பவழத்திற் ு இன்னொரு பெயர்)
  Crimson = சோணம்
  Dark Pink = கரும் பூஞ்சை
  Fire engine Red = தீயணையூர்த ி நிறம், கெம்புமல்ல ி நிறம்
  Falu red = புலிமா நிறம் (இதுவும் ஒருவகைப் பூ தான். பிலிம்பி என வட இந்திய மொழிகளிற் சொல்வார்கள ்)
  Magenta = நன்னிறம், மகரம்
  Maroon = காசுக்கட்ட ி நிறம்
  Mauve Taupe = வாழைப்பொத் தி நிறம் (வாழைப்பொத தியின் உட்பகுதி தெளிவான வண்ணத்தோடு இருந்தாலும ் அதன் மேற்பகுதி, உறை ஒருவித வெள்ளை பூசியது போல் அம்மிப் போய் இருக்கும். அந்த நிறம் இங்கு பொருந்தி வருகிறது!)
  Orange - Red = கிஞ்சுகம்
  Persimmon = செங்கல் நிறம்
  Red - violet = செந்நாவல், ஆம்பல்
  Rust = கறள், துரு
  Sangria = புலது, அரத்த நிறம்
  Scarlet = செந்தூரம், துவர் (கனவள்ளி நிறம்)
  Terra cotta = சுடு மண் (நிறம்)
  Venetian red = செங்காந்தள ் நிறம் ( தமிழில் இதற்கு வேறுசில பெயர்களுண் டு. இது ஈழத்தின் தேசிய மலராக்கப் பட்டுள்ளது . அங்கு இதை கார்த்திகை ப்பூ என்பார்கள் . வேறு பெயர்களும் இருக்கக் கூடும். அறியேன்!)
  Vermillion = சேலகம் (சீனச் சிவப்பு)
  Ruby = செம்மணி, கெம்பு

  நாரங்கும் அதன் சாயைகளும்

  Orange = நாரங்கு, கிச்சிலி
  Amber = சந்தன நிறம், அம்பர்
  Coral = பவழம்
  Dark salmon = கரு வஞ்சனம், கருந்துவரி
  Gamboge = அரக்குமஞ்ச ள் (கம்போச மை)
  International orange = பொது நாரங்கு
  Mahogany = ஆயில் நிறம், நுக்கு
  Opal orange = கொழிஞ்சி, கொஞ்சி
  Peach = வம்மி நிறம்
  Peach - Orange = வம்மி நாரங்கு
  Pink - Orange = வெட்சிப்பூ நிறம், செச்சை
  Persimmon = செங்கல் நிறம்
  Pumpkin = பூசணி
  Rust = கறள், துரு
  Safety orange = சேம நாரங்கு
  Salmon = வஞ்சன நிறம் (இம்மீனின் சதை இந்நிறத்தி லேயே இருக்கும்!) , துவரி, சீவரம்
  Tangerine = பிசங்கம்
  Tennè , tawny= கபிலம்
  Burnt Orange = தீய் நாரங்கு
  Apricot = சம்பங்கி (நிறம்)
  Carrot Orange = குருக்கிழங ்கு நிறம்
  Orange Peel = செவ்விளநீர ் நிறம்
  Brown = பழுப்பு/ பழுவம்
  Orange - Red = ஞாழல் நிறம், புலிநகக் கொன்றை நிறம்
  Tomato = தக்காளி நிறம்
  Harley Davidson Orange = சேதா


  *நிறப் பட்டியல் தந்த Wikipedia-க்கு நன்றி!
  Last edited by karki; 02-27-2010 at 02:00 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 11. #11

  Default

  மஞ்சளும் அதன் சாயைகளும்

  Yellow = மஞ்சள், எல்லை
  Amber= அம்பர்
  Apricot= சம்பங்கி
  Beige = புழுங்கு நிறம் , பீது, இலவம்
  Buff = பாண்டு , தவிட்டு நிறம்
  Chartreuse yellow = செலிய மஞ்சள்
  Corn= சோள மஞ்சள்
  Cream = களிம்பு, குழைமம்
  Dark Goldenrod= காழ் வல்லிகம்
  Ecru= புகர் , கற்சாம்பு (கல் இங்கே மஞ்சள் என்ற பொருளில் ஆளப்பட்டுள ்ளது!)
  Flax= சணல்
  Gamboge= அரக்குமஞ்ச ள்
  Golden= காசறை (கத்தூரி) மஞ்சள், மாளம்
  Goldenrod= கொடிப்பசலை நிறம்
  Goldenpoppy= பொலிக்கொடி நிறம்
  Golden yellow= ஆவாரம்பூ நிறம், பொன்மஞ்சள்
  Green-yellow= கிளிப்பச்ச ை, கொழுந்து நிறம், உல்லரி
  Lemon= எலுமிச்சை நிறம்
  Lemon Chiffon= புல்லை
  Lime= அரி, குருந்து, மஞ்சைப் பழநிறம்
  Metallic Gold= மாழைப் பொன் நிறம்
  Mustard= கடுகு நிறம்
  Navajo white= வெளிர் குந்த நிறம் (குந்தன்/ம் = குருந்தம்)
  Old Gold= பழங் கிழி, பழம் பொன்னிறம்
  Olive= இடலை
  Papaya whip= பப்பாளிச் செண்டு நிறம்
  Peach-yellow= வம்மி மஞ்சள்
  Pear = நீர்க்காய்/ பேரிக்காய் நிறம்
  Saffron= காவி
  School bus yellow= சுள்ளி
  Selective yellow= விரலி மஞ்சள்
  Tangerine Yellow= கல்லாரம்
  Blond = தீ நிறம், பொன்னிறம்
  Tuscany jasmine = சிந்து

  ஊதாவும் அதன் சாயைகளும்

  Violet = ஊதா, செங்கருநீல ம்
  Lilac = நாவல்
  Purple = கத்தரி, செந்நீலம்
  Amethyst = ஒளிர்நாவல் , செவ்வந்திக ்கல் நிறம், குதிரைவாற் பூ நிறம்
  Cerise = சேலா நிறம், இரந்தை
  Eggplant = வழுதுணை நிறம்
  Fuchsia = செந்துருக் கம்
  Han purple = சீன ஊதா
  Heliotrope = எற்றிரும்ப ி
  Indigo = அவுரி
  Lavender = குறிஞ்சி
  Lavender blush= வெண் குறிஞ்சி
  Lavender gray = கார் குறிஞ்சி
  Lavender rose= முளரிக் குறிஞ்சி
  Magenta = நன்னிறம், மகரம்
  Mauve = சரையூதா
  Mountbatten pink= பாண்டுப் பூஞ்சை
  Orchid = தூம்பங்கடை ப்பூ
  Palatinate purple = காழ் ஊதா
  Persian indigo= பாரசிக அவுரி
  Red-violet = செந்நாவல்
  Thistle = விண்ணுக்கர ந்தை, பெருவேம்பு
  Tyrian purple = காழூதா
  Rose= முளரி
  Wisteria= எருக்கம்பூ நிறம்
  Last edited by karki; 09-06-2009 at 08:11 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 12. #12

  Default  Thanks Karki

 13. #13

  Default

  பழுப்பும் அதன் சாயைகளும்

  Brown = பழுப்பு/ பழுவம்
  Auburn = குரால்
  Bistre = கருங்குரால ்
  Buff = பாண்டு , தவிட்டு நிறம்
  Burnt sienna = தீஞ் சிவல்
  Burnt umber = தீஞ்சாயம் ,
  Blanched Almond = வெண் வாதுமை
  Bisque = குழைக்கூழ்
  Bronze = வெண்கலம்
  Coca Cola colour = காளம்
  Chocolate = காவிக்கண்ட ு
  Cornsilk = சோளத்தும்ப ு / சோளப்பட்டு (ஒருவகைச் சோளத்தின் மேல் குடுமி போல வளர்ந்திரு க்கும் பட்டு நூலின் நிறம்)
  Copper = செம்பு, செப்பு
  Cordovan = பூங்கைப் பழுப்பு
  Cinnamon = கறுவாய்ப் பட்டை நிறம்
  Khaki = களிநிறம்
  Liver= ஈரல்
  Mahogany = ஆயில், நுக்கு
  Maroon = காசுக்கட்ட ி
  Ochre= காற்காவி, அளறு
  Pale brown = வெளிர்ப் பழுப்பு
  Raw Umber = இயற்சாயம்
  Russet = கடுந்துரு
  Rust = கறள்
  Sandy brown = மணற் குரால்
  Seal brown = முகர்க் குரால் (முகர், மொகர் = seal)
  Sepia = கணவா மை
  Sienna = சிவல் (சிவல்னா சிவந்த மண்)
  Tan= தேன் நிறம்
  Wheat = மாநிறம், கோதுமை
  Zinnwaldite = தும்புகர் (தும், துப்பு = சிவப்பு)
  Fallow = வெளிறு / வெளிரம்
  Bole = காவிக்கல்
  Taupe = புற்கு, உளுவை (ஒரு வகை மீனினம்)
  Medium Taupe = வரியோரா நிறம்
  Pale Taupe = வெளிர் உளுவை/ புற்கு
  Sandy taupe = மணல் உளுவை/ புற்கு
  Ecru =புகர் , கற்சாம்பு
  Beige = புழுங்கு நிறம் , இலவம்

  பச்சையும் அதன் சாயைகளும்

  Green = பச்சை
  Asparagus= விடைத்தண்ட ு, நீர்த்தண்ட ு
  Bright Green= பிறங்கிய பச்சை
  Camouflage Green= கரக்கவர் பச்சை
  Celadon = பசலை, தரட்டை, வரால்
  Chartreuse = செலியம், உசிக்கழுத் தி
  Emerald= மரகதப் பச்சை
  Fern green= புற் பச்சை
  Gray asparagus = நீர்த்தண்ட ுச் சாம்பல்
  Green yellow = மஞ்சட் பச்சை
  Jade = பச்சைக்கல்
  Jungle green = வல்லைப்பச் சை
  Lime = அரி, குருந்து
  Moss green= பாசிப் பச்சை
  Myrtle= குழிநாவல்
  Olive = இடலை
  Olive drab= சாணிப்பச்ச ை
  Pear= நீர்க்காய்/ பேரிக்காய் நிறம்
  Pine green= தாழைப் பச்சை, வரிக்கோலா (ஒருவகை மீன்)
  Sea green= கடற் பச்சை
  Spring green= இளந்தளிர்
  Tea green= தேயிலைப் பச்சை
  Forest green = காட்டுப்பச ்சை
  Chartreuse yellow = செலிய மஞ்சள்
  Harlequin = கூசும்பச்ச ை
  Office green= அலுவப் பச்சை
  Lime pulp= அரிச் சுளை, குருந்துச் சுளை
  Hunter green= வேட்டைக்கா ரன் பச்சை
  Kelly green= கீரைப் பச்சை, வெற்றிலைப் பச்சை
  Shamrock green= நாகப்பச்சை
  Islamic green= முகமதியப் பச்சை
  Lime green= அரிப் பச்சை, குருந்துப் பச்சை
  Persian green= பாரசிகப் பச்சை, வாளைப் பச்சை
  British racing green= யாமளம்
  Spring bud= மாந்துளிர்
  Army green= அரணப் பச்சை

  நீரமும் அதன் சாயைகளும்

  Cyan = நீரம் (இதன் மூலமான கியானோசு என்ற கிரேக்கச் சொல்லுக்கு ம் நீலம் என்று தான் பொருள். இங்கே வெளுத்த இள நீலம். வேறுபாடு காட்ட நீரம் எனலாம்!)
  Alice blue= சொட்டு நீலம்
  Aqua = அஃகம்
  Aquamarine = வாரண வண்ணம்
  Baby blue= அரும்பு நீலம்
  Bondi blue= புது நீலம், மயிற்கழுத் து நிறம்
  Cerulean = மயில் நீலம், விண் கேழ்
  Electric blue = மின்-நீலம்
  Robin egg blue = காக்கை முட்டை நிறம்
  Teal = பசியநீல்
  Turquoise = நீலாம்பரி நிறம், துருக்கு நிறம்
  Viridian = சூடை நிறம்
  Last edited by karki; 01-23-2009 at 12:33 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 14. #14

  Default

  நீலமும் அதன் சாயைகளும்

  Alice blue= சொட்டு நீலம்
  Azure = விடாரம்
  Baby blue = அரும்பு நீலம்
  Bondi blue = பாண்டுநீலம ்
  Cerulean = மயில் நீலம், விண் கேழ்
  Chinese blue = சீன நீலம்
  Cobalt blue = நீர்க்காவி
  Columbia blue= வெளிர் நீலம்
  Cornflower blue= கூடைப்பூ நீலம்
  Dark blue= கரு நீலம்
  Denim= ஆழி வண்ணம்
  Dodger blue= கருங்குவளை
  Duke blue = காங்கு
  Indigo = அவுரி
  International Klein blue = பொது நீலம்
  Light blue = இளநீலம்
  Midnight blue = நீலி,யாம நீலம்
  Navy blue = கடற்படை நீலம்
  Periwinkle = பாண்டுநீலம ், மாக்கல் நிறம்
  Persian blue= பாரசிக நீலம்
  Powder blue= பொடி நீலம்
  Prussian blue= ஓரி நிறம் (கருந்தேன் = ஓரி)
  Royal blue = அரைய நீலம்
  Sapphire= நீலக்கல் நிறம்
  Steel blue = எஃகு நீலம்
  Teal = கிளுவை நிறம்
  Ultramarine= புற வாரணம், மை நீலம்
  Air force blue = வான்படை நீலம்
  Egyptian blue = மிசிர நீலம்
  Electric blue = மின்- நீலம்
  Maya blue = மாயநீலம், மாயோன் நீலம் [கரும்ந/கண்ண நீலங்கிறது (கிருஷ்ண நீலம்) இதுதானா?]
  Medium blue = மித நீலம்
  Sky blue = வான் நீலம்

  சாம்பலும் அதன் சாயைகளும்

  Grey= சாம்பல்
  Arsenic = பிறாக்காண் டம், தவளம்
  Bistre= செவலைப் புகர்
  Black = கருப்பு
  Charcoal= கரி
  Davy`s gray = மயிலை
  Feld grau= கரிசல்
  Khaki = களிநிறம்
  Liver = ஈரல்
  Payne`s gray= கடும் புகர்
  Seal brown= முகர்க் குரால்
  Silver= சுல்வம், வெள்ளி
  Slate gray = சேறி
  Taupe = உளுவை, புற்கு
  Purple Taupe= ஊதா உளுவை/ புற்கு
  Medium Taupe= மித உளுவை/ புற்கு நிறம்
  Taupe grey = கமலை, நீறு
  Pale Taupe= வெளிர் உளுவை/ புற்கு
  White = வெள்ளை
  Xanadu = பசியச் சாம்பல்
  Last edited by karki; 01-23-2009 at 12:28 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 15. #15

  Default

  யம்மாடியோவ ்...

  பெயர் எல்லாம் தெரின்சு வச்சாலும், கடையில போயி பார்த்தா தக்காளி சிவப்பு, வாழைபழம் மஞ்சள், கொத்தமல்லி பச்சைன்னு மட்டும் தெரியும்.. மற்ற நிறம் எல்லாம் பெண்களுக்க ு தான்.. நமக்கு ஒத்து வராது..

  மிக்க நன்றி, கார்க்கி. அருமையான முயற்சி.


  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 16. #16

  Default

  karki............

  yaso

 17. #17

  Default

  thank you

 18. #18

  Default

  மேலும் இப்போது அறைகலன்கள்/ தளவாடங்கள் அடவுவோரால் புதுப்புது நிறங்கள் அறிமுகமாகி உள்ளன, அவற்றையுங் கீழே குறிக்கிறே ன். முழுமையான பட்டியலாய் அல்ல.முடிக க வேண்டும்!

  Chrom= குருவம்
  Metallic = மாழையம்
  Neon = மிளிரம், நிகுளம்(நி ுநிகு!), நித்தி
  Aluminium = அளமியம்
  Beech = புங்கை
  Birch = பூர்ச்சம் (சங்கதப் பெயர்??)
  Oak = சிந்தூரப் பலகை
  Sycamore = வெண்ணாங்கு
  Iceblue= குளிர் நீலம்
  Snow white= வெண்பனி
  Nougat = நெற்றுக்கு ழைமம்
  Colonial colour = குடியேற்ற நிறம்
  Chilli red = மிளகாய்ச் சிவப்பு
  Carbon = கரிமம்
  Lava = செங்குழம்ப ு
  Capuccino = கப்பூசீனோ (இடுகுறிப் ெயர்)
  Beryl = வெளிறு
  Noce =
  ______________________________ ______________________________ ___

  வாசன் மற்றும் மறுமொழி ந்தோருக்கு ,

  பல தமிழருடனும ் பேசுகையில் பல நிறப் பெயர்கள் இயல்பாக அவர்கள் வாயில் வந்ததைக் கவனித் திருக்கிறே ன். அவற்றை எல்லாம் கூடப் பயன்படுத்த ி யிருக்கிறே ன். காசுக்கட்ட ி நிறம், செலியம், பூஞ்சை, பசலை, காக்கை முட்டை நிறம் எனப் பல சொற்கள் இன்னும் மக்கள் பயன்படுத்த ுபவை தாம்.
  மற்ற நிறங்கள் பூக்கள், மீன்கள், வேதியற் தனிமங்கள் மற்றும் நம் குமுகத்தில ் காலகாலமாக நிறங்களைக் குறிப்பிடப ் பயனாகும் விதப்பான பொருட்களின ் பெயர்களை எடுத்தா ண்டிருக்கி றேன். சொல்லுக்கு ச் சொல் மொழிமாற்று வதைத் தவிர்த்து முடிந்தவரை தமிழ்த்தன் மையோடு தமிழாக்கம் பண்ணி யிருக்கிறே னென நினைக்கிறே ன்.
  பல சொற்கள் நீண்ட காலமாக என்னுள்ளே அசைபோடப்பட ்டவை.
  இருந்தும் முழுமையான பொந்திகையை நான் இன்னும் அடையவில்லை .
  காட்டாக wisteria, thistle, peach, apricot போன்றவற்றி ற்கான பெயர்கள் இன்னுந் துல்லியமாக இருக்கலாம் . பார்க்கலாம ், நல்ல சொற்கள் கிடைத்தால் அவ்வப்போது மேற்திகழ் த்துவேன்.

  தமிழிற் சொற்களைத் துல்லியமாக ்குவது தான் என் நோக்கம்.
  மற்றபடி, நுட்பத் தீர்மங்களோ டு யாராவது கட்டுரைகள் வடிக்க நினைத்தால் , இத்தீர்மங் கள் அவர்களுக்க ு உதவலாம்.
  Last edited by karki; 07-25-2009 at 12:45 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 19. #19

  Default

  மேகம்

  வானத்தை அடிக்கடி பார்த்திரு க்கிறீர்கள ா? அங்கு மிதந்து விளையாடும் முகில்கள் போடும் கோலங்களை அவதானித் திருக்கிறீ ர்களா? சிற்றகவை முதல் வானத்தை அவதானிப்பத ு (observe) என் ஓய்வுழையாக வும் (hobby), காலப்போக்க ில் ஒரு பழக்கமாகவு ம் படிந்துவிட ்டது. ஊரிற் சிறுவனாக விளையாடப் போன திடலில் சிலமணி நேரம் உட்கார்ந்த ு மேக விளையாட்டை க் கண்டு கழுத்து சுளுக்கிய நாளில் இருந்து இன்றுவரை சாளரத்தின் ஊடே கொஞ்ச நேரமாவது வானைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன ். உங்களில் சிலருக்கேன ும் இத் துய்ப்பு, பழக்கம் இருக்கக் கூடும்.

  நம் தலைக்கு மேலே விரிந்திரு க்கும் இறும்பூதான (ஆச்சரியமா ) பெருவெளி அடிக்கடி அடவுகளை (designs), வண்ணங்களை மாற்றி, நாம் கவனியா மாயவித்தைய ை அன்றாடம் அங்கே அரங்கேற்றி க் கொண்டே தான் இருக்கின்ற து.
  காலநிலைக் கேற்ப மேகங்கள் புது உருக்கொண்ட ு ஒரு குயப்பைக்(sh ape) காட்டி நின்று கொண்டிருக் கின்றன. ஒவ்வொரு முகில் உருக் கூட்டுக்கு ம் ஒரு பெயர் அறிவியலில் உண்டு.
  நம் சிற்றூர்க் குடியானவனி ன் தமிழில் மூட்டம், மழைமேகம், கார்மேகம், கருக்கம் என எளிய பதங்கள் எம்மிடையே கூட ஆண்டாண்டுக ளாக உள்ளன.
  அண்மையில் ஓர் சிறுவனுக்க ுப் பொது அறிவியல் என்ற பாடத்தில் மழை, முகில்கள், ஆவியாக்கம் பற்றி விளக்க நேரிட்டது.
  (6,7 அகவையில் இவர்களுக்க ு இங்கு Nimbus, Cumulus என முகில்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறா ர்கள், எனக்கு இந்த அகவையில் அங்கு "மழையே மழையே போ போ, இன்னொரு நாள் வா வாவும்" , மழையில் நனைந்தால் சிரங்கு பிடிக்குமெ ன்ற ஓர் கட்டுரையுந ் தான் புகட்டப் பட்டன.காலங கள் மாறுகின்றன ).
  மீண்டும் முகில்கள் மனதில் வந்தேறிக் கொண்டன (ஆக்கிரமித து). அதன் பெயர்களை/ காலநிலையிய ற் தீர்மங்களை (terms) தமிழில் எப்படிச் சொல்லலாம் என யோசித்ததன் விளைவே இவ்விடுகை:


  * மேகத்துக்க ுத் தமிழில் முகில், ஆயம், கிளை, கனம், கார், காளம், கொண்டல், கொண்மூ, செல், மங்குல், மால், மை ,குயின், எழிலி, மஞ்சு (மென்னொலி பெற்று சேரநாட்டார ிடை இன்று 'மஞ்ஞு'வாக) எனப் பல சொற்கள் உண்டு.

  நீழற்கோளம் (நீழல் = காற்று; நீண்டு இருப்பது), ஊதக்கோளம் = atmosphere. இது நம் புவிப்பந்த ைச் சூழ்ந்திரு க்கும் பல வளிகள், வாயுகளாலான து. புவிக்கு மேலே உள்ள பகுதி கோளங்கள், மண்டலங்களா லான வெவ்வேறு இழியங்களால ்(layers) பின்வருமாற ு வரையறுக்கப ் படுவன:

  Troposphere= திருப்பக்க ோளம்= 6 - 20 அ.மா(அயிர மாத்திரிகள ்= Kilo meters), நம் பறனைகள்(planes), வானூர்திகள ் பறப்பது இதற்குட் தான்.

  Stratosphere= தீற்றக்கோள ம் = திருப்பக் கோளத்திற்க ு மேலாக 50 அ.மா பரந்து உள்ளது.
  காலநிலையறி வளிக்கூடுக ள் (Weather balloons) பறப்பது இங்கு தான்.

  Mesosphere = மிடைக்கோளம ், மத்திய கோளம் = எரிகற்கள் எரிந்து போவது இங்கு தாம்.85 அ.மா விரிந்திரு ப்பது.

  Thermosphere = தெறுமக்கோள ம் = மிடைக் கோளத்திற்க ு மேலாக 640 அ.மா விரிந்திரு ப்பது. இதன் அடியில் தான் வடவைத்தீ(Auror a) உண்டாகும். விண்கலங்கள ் பறப்பதும் இதன்னுள்ளே தான்.

  Exosphere= புறக்கோளம் = தெறுமக் கோளத்திற்க ு மேலாக உள்ளது.

  Magnetosphere= காந்தக் கோளம்

  நம் தலைக்குச் சற்று மேலாகத் தொடங்கி திருப்பக் கோளம், தீற்றக்கோள ம் இவற்றுள் மட்டுமே முகில்கள் மிதக்கின்ற ன.
  Last edited by karki; 08-13-2008 at 03:15 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 20. #20

  Default

  முகமை மேக வகைகள் (Main Cloud Types)

  Stratus = தீற்று முகில் ; பல்வகை இழியங்கள்(layers) கொண்டது (எளிமையாக "இறகு முகில்"). இம்முகில் சிறு தூறலுக்கு வழிவகுக்க வல்லது. தாழ்வான முகிலான இது நிலத்தைத் தொடுகையில் அதனை நாம் புகார்,மூட பனி என அழைக்கிறோம ்.

  Nimbus = மழைச்சூலி அல்லது பெயற்சூலி (எளிமையாக "மழைமுகில " எனலாம்!) மழைத் துளிகளைத் தாங்கி வயிறு திரண்டு நிற்கும்கரு முகில்.


  Cumulus = கும்மல்(கும்மல் என்பதை வேறுவிதமாக ப் பொருள்படக் கூடுமென எண்ணுபவர்க ள், குமியம் எனலாம். எளிமையாக நுட்பத் தீர்மங்கள் பயமுறுத்தா த் தமிழில் "திரள்முகி ்" எனலாம்!)
  பஞ்சுத் திரள் போன்ற தாழ்வான மேகம். வியவுக் காலநிலைக் கும்மல்கள் Fair Weather Cumulus என அழைக்கப் பட்டு நல்ல காலநிலையை உணர்த்துவன வாகவும் உள்ளன. ஆனால் இவை பிற்பாடு இடி மின்னலுடன் கூடிய பெருமழையை உண்டாக்கும ் குவிந்த மழைச்சூலிகளாகவும் மாறும் வாய்ப்பும் உண்டு!


  Cirrus = குருளம் அ. குருள முகில் ; சுருண்ட முடிக்கற்ற ைகளைப் போன்றது. மிக உயரத்தில் (ஏறக்குறைய 6000 மாத்திரிகள ்) இருக்கும் வெறும் படிமத் துகள்களாலா ன மெல்லிய முகில். 24 மணிநேரத்தி ல் காலநிலை மாற்றம் வருமென்பதன ் அடையாளம் இது.


  Altocumulus = நடுக் கும்மல்; உயரத்திலும ், குவிந்து திரட்சியாக வும் இருக்கும் முகில் வகை புழுக்கமான கோடை நாள் ஒன்றில் இம்முகில்க ளை வானிற் பார்த்தீர் க ளென்றால், சில நாழிகைகளில ் இடிமழை வரப்போகிறத ெனக் கொள்ளலாம்.

  Altostratus = நடுத் தீற்று; உயர்ந்தும் திட்டுத் திட்டாயும் இருப்பது. இவையும் தொடர்மழை, பனி பொழிவிப்பி களே.


  Cirrocumulus = குருளக்கும ்மல்; குருளாகவும ்(curl) , குமிந்து கிடப்பதும் . அரிதான முகில் உருக்கூட்ட ு. பனிக்காலத் தில் வருபவை வியவான (fair) ஆனால் குளிரான காலநிலையைக ் குறிப்பன.


  Cirrostratus = குருளத்தீற ்று; சிலபொழுது இது வானின் பெரும்பரப் பைக் மூட வல்லன. இருசுடர்கள ை(நிலா, பரிதி) இவை மூடினாலும் , மறைக்கா. அவற்றின் ஒளியூடுருவ ி வருவதைக் காணலாம். ஒரு அ. அரை நாளுக்குள் மழையோ பனியோ பெய்ய இருப்பதன் அறிகுறி.

  Nimbostratus = பெயற் தீற்று; புகார் நிறமும், மழைத்துளிக ளைத் தாங்கியதும ், பல இழியல்களைக ் கொண்டதும்.


  Cumulonimbus = குவிந்த பெயற்சூலி (பெயல்=மழை); இவற்றின் மறுபெயர் புயலிடி முகில்கள். இவை கடும் இடியுடன் கூடிய மழை, ஆலி(hail) , பனிப் பொழிவு வரக் காரணமானவை.


  Stratocumulus = தீற்றுக்கும்மல்; இவை உருண்ட திரள்களாக இடையிடை தெளிவானையு ம் காட்டிய படி படர்ந்திரு ப்பன. அரிதாக மழையை பெய்விப்பன , ஆனால் விரைவில் பெயற்தீற்று ஆகக் கூடியன.
  Last edited by karki; 12-10-2007 at 10:34 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

+ Reply to Thread
Page 1 of 8 12345 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts