எம் முகவரி - Page 4
+ Reply to Thread
Page 4 of 8 FirstFirst 12345678 LastLast
Results 61 to 80 of 143

Thread: எம் முகவரி

 1. #61

  Default

  பட்டியலில் விடுபட்ட மீதிச் சொற்கள் சில...

  பாச்சா = அரம், வல்லமை
  பீலா = வண்டில் (விடல்)
  ரவுசு = அழிம்பு, அரவுசு
  ஜே ஜே னு கூட்டம் = செளு செளுன்னு/ கச கசன்னு கூட்டம்
  Once more = இன்னொரு முறை, இன்னொருக்க ா
  தமாஷ் = களிதம், விள்ளாட்டு
  தாலுக்கா = கூற்றம்
  டக்கர் = செண்ணம்
  டமாரம் = தமருகம்
  டின்னு கட்டுதல் = தகரங் கட்டுதல்
  டிங்கு ஜுரம் = முடக்கு சுரம்
  டைபாயிடு> typhoid = குடல் காய்ச்சல்
  பிட்டு = துண்டு, நுக்கு, முரி
  ரசீது = பற்றுமுறி
  சீக்கு (sick) = பிணி ("பிணி புடிச்ச கோழி மாதிரி...")
  சீட்டி (மராத்தி) = சீழ்க்கை
  சிக்கன் 65 = குக்கன் 65, பொரிகோழி 65
  leg piece = கால் பாகம், காற் துண்டு
  பிரியாணி = புலவுச்சோற ு
  குஸ்கா = காய்ச்சை
  சகா = கூட்டு, உடனன் (உடனொத்தன்)
  சாதா = வெறும்
  something = கையூட்டு, சிலது ; சிச்சிலது = something something
  case = கட்டு, வழக்கு
  குவார்ட்டர ் = கால் ; ஆஃப்பு = அரை
  லுங்கி = மூட்டி, சாரம் > சறம்
  out = வெளியே, வெளி
  bench = வீச்சி, வாங்கு
  bet = பந்தயம்
  மொள்ளமாரி = முல்லைமாறி > மொள்ளமாறி (தமிழே!)
  ஜமாய் = கலக்கு
  footboard = பாதப்படி
  தப்புத்தண் டா = தப்புத் தண்டு
  காக்கா பிடித்தல் = காக்காய் பிடித்தல் ( கால் + கை பிடி)
  டிமிக்கி, டேக்கா = கடுக்காய் கொடுத்தல்
  escape ஆகுதல் , எஸ் விடுதல் = கம்பிநீட்ட ல்
  கம்மனாட்டி > கைம்மணாட்ட ி (துணையிழந் ோன்!)
  பாவ்லா = பாவலா
  flat ஆகுதல் = மட்டையாகுத ல் (மட்டையா யிட்டான்டா !)
  பிலிம் காட்டுதல் = படங் காட்டுதல்
  லூட்டி = கொட்டம்
  so = ஆகையால், ஆக
  Last edited by karki; 01-28-2010 at 06:35 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 2. #62

  Default

  விளையாட்டு க்களை, அதன் பெயர்களைப் பட்டியலிட முயற்சித் திருக்கிறே ன்.

  பொருது, கும்மாளம் போன்றன இராமகி அய்யா பரிந்துரைத ்த அருமையான சொற்கள். Sports, games எல்லாவற்றி ற்கும் விளையாட்டு என்பதை வைத்து பட்டையடித் துக் கொண்டிருக் கிறோம்.

  Sports = பொருது; sportsman = பொருதாளன் ; sportsmeet = பொருதுக்கூ டல்
  Game= கும்மாளம்; சிலபோது "ஆட்டம்"
  Field game = விளையாட்டு
  Captain = ஆத்தன்
  Team = தோமம், தொகுவம்
  Champion = வாகையர் (அருளியார் உண்டாக்கி, மக்கள் தொலைக்காட் சி பரவலமாக்கி ய சொல்!)
  Trophy = திருவை
  Tournament = திருமிப்பு
  Match = போட்டி, ஆட்டம்

  பொருது - Sports

  விளையாட்டு க்கள், தோமக் கும்மாளங்க ள்/ ஆட்டங்கள் - Team games

  Baseball = கழிப்பந்து , அடிப்பந்து ; Softball = மென்பந்து , சொவ்வுப் பந்து
  Cricket = மட்டைப்பந் து, துடுப்பாட் டம்
  Kicker = உதைப்பந்து , உதைப்பந்தா ட்டம்
  Association Football = கழகப் பந்தாட்டம்
  American Football = அமெரிக்கப் பந்தாட்டம் , அமெரிக்கக் கால்பந்து
  Rugby = பந்துமல்லம ், இரக்பி
  Field Hocky = வளைதடிப் பந்தாட்டம்
  Basketball = கூடைப்பந்த ு
  Netball = வலைப்பந்து
  Handball = எறிபந்து
  Volleyball = கைப்பந்து
  Tennis = வணரிப்பந்த ு
  Squash = சுவர்-பந்து
  Badminton = பூப்பந்து
  Table tennis = மிசைப்பந்த ு
  Curling = சுருளாட்டம ்
  Brennball = எரிபந்து (பந்தால் எறிந்து வெளியேற்று ம் செருமானியப ் பொருது, பந்து பட்டவர் எரிந்து விட்டார் என்பது ஆட்டவிதி!)


  தானி ஓட்டப் பந்தயம் - Auto racing (racingக்கு சரியான சொல் நம்மிடமில் லை, ஓட்டப் பந்தயம் துல்லியமான தல்ல. பந்தயத்தை ஏலவே bet-க்கு நிகராய் பயின்று கொண்டிருக் கிறோம்!)

  Dirt track racing = சகதித் தட ஓட்டம்; Dirt speedway racing = சகதி வேகவழியோட் டம்
  Drifting = வளையோட்டம்
  Hill climbing = மலை இவரோட்டம்
  Off-road racing = சாலை-சாரா ஓட்டப்பந்த யம்
  Sport car racing = பொருதுந்து ஓட்டப்பந்த யம்
  Open-wheel car = திறவளவி உந்தோட்டம் , ஓரிருக்கைய ுந்து ஓட்டம்; Formula 1 = உருவுழை 1/ உருவல் 1
  Slalom (அலைவளை) = அலையோட்டம்
  Sprinting = இலிற்றுதல்

  சம்மணப்பயி ற்று - Gymnastics

  Artistic gymnastics - கலைவரிதிச் சம்மணப்பயி ற்று
  Acrobatics - கழைக்கூத்த ு
  Tricking - திருக்கல்
  Trampolining - எம்பிக்குத ித்தல்
  Cheerleading = களிவிறலியம ்; Cheerleaders= களிவிறலியர ்
  Weightlifting = பளுதூக்கல்
  Fitness training = பதவுமைப் பயிற்சி, யாப்புப் பயிற்சி
  Bodybuilding = யாக்கையாப் பு, உடலங் கட்டுதல் (நன்றி அருளி!); Bodybuilder= யாக்கையாப் பர், உடலங்கட்டு நர்


  உதவி: எருதந்துறை அகரமுதலி, விக்கிப்பீ டியா, Merriam-Webster...
  Last edited by karki; 10-06-2008 at 10:26 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #63

  Default

  சொற்களின் அரசியல்

  "இனிய சொற்கள் சிறிதாகவும ், பேசுவதற்கு எளிதாகவும் இருக்கலாம் , ஆனால் அதன் எதிரொலிகள் மெய்யாகவே முடிவற்றவை ..."
  - அன்னை தெரசா

  செருமனியில ் முன்பு ஒரு ஒருங்கியம் (organisation) 'Unwort des Jahres' (Ugliest word of the year) எனச் சொற்கள் சிலவற்றைத் தேர்ந்தெடு த்து அவை குமுகாயத் திலிருந்து ஒதுக்கப் பட வேண்டியவை, பிற்போக்கு த் தனமானவை, மற்றோரைப் புண்படுத்த ுபவை என ஒவ்வோர் ஆண்டும் பட்டியலிட் டு வந்தார்கள் . இது மொழியியற் துறைப் பேராசிரியர ்கள் உதவியோடு நடைபெற்று வந்தது. இன்னும் நடக்கிறதா அல்லது வெறுமனே இணையத்தில் மட்டும் சுருங்கி விட்டார்கள ா தெரியவில்ல ை. இவர்கள் அதைச் சேரியதாய்(se rious) முனைப்பாய் ச் செய்தார்கள ். ஏனைய மிடையங்களி லும் (media) பரவ விட்டார்கள ். முகமையாய்ப ் பள்ளிகளில் , இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் சொற்களைத் தேர்ந்தெடு த்து பொதுவளிக்க ையில் வரும் அறிக்கைகளை நாங்கள் மொழிப் பாடத்தில் வாசிப்பது கட்டாயமான ஒன்றாக இருந்தது அப்போது.
  அரசியற் தலைகள் உதிர்க்கும ் அவத்த வாக்கியங்க ள், அவர்களின் அரசியல் நோக்கங் கொண்ட சொல்லாடல்க ள் தவிர்த்து , ஏற்கனவே குமுகாயத்த ிற் புழங்கப் பட்டு வரும் வெறுப்பை உமிழும் பயில்வுகள் , எதிர்-சேமிய, இனவாத, மானுடத்திற ்குக் களங்கம் வருவிக்கும ், ஒரு இனக்குழுவி ன் மேல் முற்கோளைப் (prejudice) பதிக்கும், சம-பாலுறவுக்க ாரர்/ சமச்செகையர ்(homosexuals), பெண்கள், பால்மீறிகள ்(transgenders) போன்றோர் மீதான சொல்- வன்முறையைக ் கட்டவிழ்த் து விடும் சொற்களை/ கிளவிகளைப் பட்டியலி ட்டார்கள். தவிர்க்க அறிவு றுத்தினார் கள்.
  இது ஒரு மொழி-கிடுக்கிய இயக்கமாகவே செயற்பட்டத ு. பொதுக் குமுனீட்டத ்தில் (communication) சரளமாகப் பயனாகும் மாந்த மாண்புக்கெ திரான சொற்களை எல்லாத் துறைகளிலும ் அடையாளங் கண்டு, நீக்கி விட வேண்டினார் கள். வன்முறை என்பது ஆய்தங் கொண்டு அரத்தம் வர அடிப்பது மட்டுமல்ல, கிளவி வடிவில் சொல்லாடல் களாலான ஈட்டிகளால் மாந்த மனத்தைக் குதறுவதும் , அவன் மாண்பைக் குலைப்பதும ், மனதை நோகடிப்பது ம் கூட வன் முறை தான். நாக்கு அணுகுண்டுக ்குச் சமனான கூரிய ஆய்தம்..

  ஆங்கில வெளியில் இந்த வகைச் சொற்களை இனங்காணல் பெரும்பாலு ம் நகைச்சுவைய ாய் நடைபெறுகிற து. அல்லது அகரமுதலி நிறுவனங்கள ் இவ்வகைப் பட்டியலை ஆண்டுக்கொர ு முறை குறித்துக் காட்டு கின்றன. Unwortஐ ஆங்கிலத்தி ல் இப்போது unword என்றே சொல்லுகிறா ர்களென நினைக்கிறே ன், இந்தச் சொல்லாடல் எவ்வளவு புறவலமானது என்பது கேள்விக்கு ரியது. மற்றப்படி faux-pas word என்ற சொற்களைக் கேட்டிரு ப்பீர்கள்.

  காட்டாக மேலைப் பரப்பில் நிகழும் சொல் - மாற்றுக்கள ், பதில்(substituting) பயில்வுகளை பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம ். எசுக்கிமோவ ுக்கு மாற்றான இனுயிட்டு நக்கருக்கு மாற்றான ஆபிரிக்கர் போன்ற பயில்வுகள் நன்கு தெரிந்த எடுத்துக் காட்டுகள். இங்கு Zigeuner என்ற சொல் ஒரு இனக்கூட்டத ்தை (சிந்தி-உரோம நாடோடிகள்) ஒரு எள்ளற் தொனியோடு இழிவு படுத்துகிற தென்று அதற்கு மாற்றாக 'நகரும் இனச் சிறுபான்மை யினர்' என்றே அழைக்கப்பட வேண்டுமென அறிவித்தார ்கள். அதன் ஆங்கில gipsy என்னும் சொல்லில் செருமானியக ் கிளவியிற் பொதிந்திரு க்கும் இழிவுப்பொர ுள் இல்லை. ஆனாலும் பிரித்தானி ய வழக்குச் சொல்லான gyppo நிச்சயம் ஒருவகையில் இதற்கு ஒப்பானதே. Handicapped மறைந்து Physically challenged வந்தது அதைத் தமிழில் இராம.கி அய்யா 'உடம்பால் கலங்குற்றோ ர்' எனப் பயின்றார்.
  Last edited by karki; 05-12-2009 at 12:55 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 4. #64

  Default

  Unwort-ஐ தமிழில் இதை அ-சொல் எனலாம். அ-சொற்கள் என்பவை வசவுச் சொற்களோ, அவையற் கிளவியோ (unparliamentary word) அல்ல. எல்லா மொழிகளிலும ் வசைச் சொற்களுக்க ும், அவையற் கிளவிகளுக் குமா பஞ்சம்? அது வேறு புலனம். அதை, அதன் உள்ளிருக்க ும் அரசியலைத் தனியாக இன்னொரு புலனத்திற் பார்க்க வேண்டும்.இ ்கு அதற்கு கள விதிகளும் மட்டுறுத்த மும் இசைவளிக்கா தென எண்ணுகிறேன ்.

  ஆக மேலே சொன்னது போல், அ- சொற்கள் தமிழில் உள்ள பாலுறுப்பு க்கள், சாதியம், ஊனம் குறித்த வசைச் சொற்கள் அல்ல மங்கலம் அமங்கலம் சார்ந்தவைய ும் அல்ல. மாறாக அவை நேரியலான(norma l) உரையாடல்கள ில் நாமெல்லோரு ம் உணராது பயன்படுத்த ும் சொற்கள். சொற்கள் வீச்சு, அரசியல் அறிந்து அதைத் தவிர்ப்பது ம் , மாற்றுத் தேடுவதும் பரவலாக மேலைப் பரப்பில் நிகழ்ந்து வரும் மாற்றம். தமிழில் இது அங்கொன்றும ் இங்கொன்றும ாக இடம் பெறுகின்றத ு. ஈ.வே.ரா பெரியார் இதைச் சரியான முறையில் தமிழ்ப் பரப்பிற் கையாண்டாரெ ன நினைக்கிறே ன்.
  நான் சிலவற்றை இங்கு குறிக்கிறே ன்.. நண்பர்கள் தமக்குத் தெரிந்தவற் றை குறிப்பிட் டு மாற்றையும் எழுதவும். உரையாடுவோம ்....

  கற்பு = பழந்தமிழ்ச ் சூழலில் வேறு பொருளிற் புழங்கப்பட ்டு, பிற்பாடு வந்த குமுகாயத்த ில் பெண்ணடிமைப ் பொருளில் உருப்பெற்ற சொல். பெண்ணுடன் தொடர்புற்ற ு வரும் கூட்டுகையி ல்(context) இச்சொல்லை முற்றாகத் தவிர்க்கலா மென எண்ணுகிறேன ்.

  கற்பழிப்பு = வன்புணர்ச் சி

  மனைவி = மனைவி என்பது இல்லாள், இல்லத்தரசி க்குச் சமனானது.அத வது housewife என்ற பொருளில் வருவது. துணைவி என்பதே மண ஒப்பந்தத்த ில் தன்னுடன் வாழ்வில் இணைந்த இணையைக் கண்ணியமாய் க் குறிக்கக் கூடிய சொல். தமிழ்க் குமுகம் மாற்றத்துக ்கு உட்பட்டி ருக்கின்றத ு, பெண்கள் அடுக்களையை விட்டு வெளியே வரத்தொடங்க ி நாளாகி விட்டது.

  ஒன்பது = தமிழ்ப் பரப்பில் இன்னும் இழிவுபடுத் தப் படுவோர் இம்மூன்றாம ் பாலினர். எல்லாத் திரைப் படங்களிலும ் இவர்களை இழுத்து ஒரு மூன்றாந் தர நகைச்சுவைக ் காட்சி இருக்கும். 'அரவாணி' முன்பு பயனாகியது இப்போது 'திருநங்கை' என்கிறார்க ள்.

  செவ்விந்தி யர் = ஊற்றுகை அமெரிக்கர் , அமெரிக்கப் பழங்குடிகள ்
  விபச்சாரி/ -ரன் = பாலியற் தொழிலாளி
  அநாதை = குமுகப் பிள்ளை
  செவிடு = கேட்குந் திறனற்றோர்
  குருடு = கண் பார்வையற்ற ோர்
  முடம் = நடக்க முடியாதோர்
  ஆதிதிராவிட ர் = தொல்தமிழர்
  Last edited by karki; 10-13-2010 at 09:30 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 5. #65

  Default

  பொருதுகள், விளையாட்டு க்களின் பட்டியல் தொடர்கிறது ...

  பரம்பு/ மணைப் பொருதுகள்- Boardsports

  Surfing = சறுக்குதல்
  Windsurfing = அலைச் சறுக்குதல்
  Bodyboarding = உடற் மணையாடுதல்
  Kitesurfing = பட்டச் சறுக்கல்
  Skateboarding= பரம்புதல், பரம்பாடுதல ்
  Mountainboarding= மலை மணையாடல்
  Skysurfing = வான்வெளிச் சறுக்கல்
  Sandboarding = மணல் மணையாடுதல்
  Snowboarding = பனியால் மணையாடுதல்
  Riverboarding = ஆற்று மணையாடல்
  Street luge = தெருச் சறுக்கை


  நீர்ப் பொருதுகள் - Water sports

  Swimming = நீச்சல்
  Diving = முக்குளித் தல்
  Water Polo = நீர்ப் பந்தாட்டம் ; Polo = பந்தாட்டம்
  Scuba diving = ஆழிமுங்குத ல்
  Sailing = படகோட்டம்
  Sailboard = பாய்மரப் படகு
  Rowing and Sculling = துடுப்பு வலித்தல்
  Waterskiing = நீர்த் தொடுக்குதல ்


  வான் பொருதுகள் அ. பறப்புப் பொருதுகள் - Air sports & Flying sports

  Ballooning = பூதிப்பறப் பு (பூதி அ. வளிப்பந்து = balloon); Cluster ballooning = கொத்துப் பூதிப் பறப்பு
  Sky Diving = வான் வழுவல்
  Paragliding = பரநழுங்கல்
  Hang Gliding = தொங்கு நழுங்கல்
  Gliding = நழுங்கல், வழுவல்
  Aerobatics = வான்வித்தை
  Air racing = வானோட்டம்
  Wingsuit flying = சிறகுடை பறப்பு
  Parachuting = பரக்கூடு பாய்தல்


  மாரி / பனிக்காலப் பொருதுகள் - Winter sports

  Alpine Skiing = ஆல்பைன் தொடுக்குதல ், ஆல்பைன் ஆலிச்சறுக் கு
  Cross-country skiing = குறுக்கு-வெளித் தொடுக்குதல ்
  Luge = சறுக்கை (sled)
  Bobsleigh = குறுஞ்சரின ை
  Skating = கதழ்வு, கதழ்வாடல்
  Figure skating = ஒயிலாட்டக் கதழ்
  Short track speed skating = குறுந்தட விரை கதழ்
  Snowshoe = பனிக்கவை
  Roller Skate = உருளைக் கதழ்வு
  Skeleton = கூடுச் சறுக்கு, பற்றுத் தட்டுச்சறு க்கு
  Biathlon (Cross-country skiing & rifle shooting) = இரட்டைப் பந்தயம் (குறுக்குவ ளி ஆலிச்சறுக் கும், துவக்குச் சுடுதலும்)
  Cross-country skiing = குறுக்குவெ ளி ஆலிச்சறுக் கு
  Curling = சிந்துச்சு ருளல்
  Freestyle skiing = பரிஒயில் ஆலிச்சறுக் கு
  Nordic combined (ski jumping & cross country skiing) = வடபுலக் கூட்டுப் பந்தயம்
  Ski jumping = தொடுக்குத் தாவல்
  Skiing = ஆலிச்சறுக் கு, தொடுக்குதல ்

  நன்றி இராம.கி அய்யா!
  Last edited by karki; 01-28-2010 at 07:01 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 6. #66

  Default

  அ- சொற்கள் தற்பொழுது தமிழின் "politically correct expressions" என்று கூறலாமோ?

  கற்பு பற்றி எல்லாம் எழுதி இருக்கீங்க .. தமிழ் நாட்டு அரசியல்வாத ிகள் யாராவது கீதம் படித்தா, தமிழர் பற்றி இழிவாக பேசினதாக வழக்கு போட்டு, கொடும்பாவி எரிக்க கிளம்பிடுங ாங்க.. குஷபு அக்கா கதை கேள்விப் பட்டீங்களா ?

  கண்பார்வைய ற்றோர், கேட்கும்தி றனற்றோர் போன்றோருக் கான பொதுச்சொல் லான ஊனமுற்றோர் என்ற சொல், கடந்த 15 வருடங்களாக புளங்கி வருகிறது.

  தமிழ் நாட்டில் மொழி வளர்ர்சிக் கான திட்டம் கொண்டுவந்த வர்களில் நிறைய பேர் நாத்திகவாத ிகளாக இருப்பதால் , இறைகுழந்தை என்ற சொல் பெற்றோர் இல்லாத குழந்தைகளு க்கு உபயோகப் படுத்துவது இல்லை. அது மட்டும் இல்லாமல் இறைகுழந்தை என்ற சொல், ஹரிஜன் (harijan, literally, children of god, a term coined by Gandhiji) என்ற சொல்லின் தமிழாக்கமா க தோன்றுகிறத ு. ஹரிஜன் என்ற வார்த்தை 'தாழ்த்தப் ட்ட' மக்களுக்கா க அரசு குறித்த எல்லா இடங்களிலும ் உபயோகித்து வருவதால், அதேசொல்லை இப்படி பயன்படுத்த ுவது, குழப்பத்தை உண்டாக்கும ் என நினைக்கிறே ன்.

  இந்த குழந்தைகளு க்காக அரசு நடத்தும் விடுதிகளுக ்கு "கருணை இல்லம்" என்று பெயரிட்டிர ுக்கிறார்க ள்.

  மனைவி --> துணைவி...

  ஆதிதிராவிட ர் = தமிழர், பழந்தமிழர்

  தற்பொழுது உள்ள பழக்கத்தின ் படியாக, தாழ்த்தப்ப ட்ட சாதியினர்க ்கு, மக்கள் தொகை கணக்கெடுப் பின் படிஅவர்களி லும் ஒரு குறிப்பிட் ட குழுவினருக ்கு மட்டும் ஆதிதிராவிட ர் என்று பெயரிட்டு இருக்கிறார ்கள் - sort of a classification of a particular caste among the scheduled caste. அவர்களை மட்டும் தமிழர் அல்லது பழந்தமிழர் என்று அழைப்பது, மற்றவர்களை (both other caste members of scheduled castes and tribes as well as other castes all together) தள்ளிவைப்ப தாக அமைந்து விடும் என நினைக்கிறே ன்.

  என்னுடைய தனிமனித கண்ணோக்கத் தில், குமுக உறவு வளர்க்கும் சொல்லாக அமையாமல், தொடர்ந்து சாதிஅடிமைக ்கு வித்திடும் அ- சொல்லாக அமைய வாய்ப்பு அதிகம் என நினைக்கிறே ன்..

  நல்ல முயற்சி, கார்க்கி. தொடருங்கள் ..

  வாசன்
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 7. #67

  Default

  'அரசியல் வரிதியாய் சரியான வெளிப்பாடு கள்' என்பது சரியே!

  கற்பு புலனம், ஏற்கனவே நடந்த வினைக்கான எதிர்வினை தான் அது!
  திருமணத்தி ற்கு முன் புணர்ச்சிய ில் ஈடுபடுதல், தமிழ்நாட்ட ில எல்லாரும் இப்படித் தானிருக் கிறார்கள் போன்ற கருத்துக்க ள இங்க எழுதல, அதனால ஆர்ப்பாட்ட ம், விளக்குமாத ்து பூசை, உருவப் பொம்மை எரிப்பு எதும் வராதென நம்பலாம்.
  மத்தப்படி குச்சுப்பூ க்கா விதயத்துல எனக்கு தனிக் கருத்து உண்டு.

  அரிசன் - இறைக்குழந் தை விதயம், நீங்க சொன்னதும் தான் நினைவிற்கு வந்தது.நன் ி!

  ஊனமுற்றோர் விதயத்துல கால் முடியாதவங் க, பார்வை அற்றவங்க என்று எல்லோரையும ் கொத்தா அழைப்பதற்க ு உருவாக்கப் பட்ட சொல் தான் அது. ஆனால் இப்போ 'ஊனம்' என்று சொல்வதையே மேற்கத்தேய ப் பரப்பில் பலரும் அநாகரிகமா கருதறாங்க.
  அவங்களப் புண்படுத்த ுவதா, அதுனால தான் உடலால் கலங்குற்றோ ர் என்ற பரிந்துரை!

  ஆதிதிராவிட ர் என்ற சொல்லைக் கேட்கும் போதே கடுப்பா இருக்கும். இந்தச் சொல்ல அரசு அறிக்கைகள் ல பார்க்கலாம ்! எல்லாரும் திராவிடன் தானே எதுக்கு அவன மட்டும் தனியா ஆதிதிராவிட னுங்கறேன்ன ு அரசு கன்னத்துல அறையணும் போல இருக்கும். அதான் முதல்ல தமிழன்னு போட்டேன், பிற்பாடு இன்னும் குறிப்பா 'தனிச்சேர் ்கை' (reservation) தேவைகளுக்க ாய் அந்த சொல்லைப் பயனாக்க வேண்டி நேர்ந்தால் இருக்கட்டு மென பழந்தமிழர் என்ற சொல்லாடலைக ் குறித்திரு ந்தேன். அது ஆதிதிராவிட ர் என்ற சொல்லுக்கு சற்றும் சளைத்ததில் லை என்றே உணர்கிறேன் .

  உரையாடலுக் கு நன்றி, இரு சொற்களை மேலிருந்து எடுத்து விட்டேன்!
  மாற்று பரிந்துரைக ்கவும்!
  Last edited by karki; 03-22-2008 at 10:21 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 8. #68

  Default

  நண்பர்களுக ்காய் சில தொடுப்புகள ் இங்கே..

  கிழக்குப் பதிப்பகம் புதிய வரிதரை (writer)/ எழுதியை சில மாதங்கள் முன் அறிமுகம் செய்திருந் தது. எந்த மாற்றியையு ம் பயன்படுத்த ாது நேரடியாய் ஒருங்குறிய ில் தட்டச்சிக் கொள்ளலாம். ஒருங்குறி(Un icode) , பாமினி போன்ற சில எழுத்து முறைகளையும ், வார்ப்புகள ையும் (fonts) கொண்டது. பயனுள்ளதாக இருக்கிறது . என்ன..., ஆங்கிலந் தவிர்ந்த வேற்று மொழிக் குயவுப் பலகை (keyboard) வைத்துளோரு க்குச் சொதப்புகிற து. தனியே ஆங்கிலம் மட்டும் வைத்திருப் போர் கவலையின்றி நிறுவிப் பார்க்கலாம ். நீங்களும் உங்கள் கணினியிற் தளைக்க வைத்துப்(insta ll) பாருங்களேன ்!

  http://software.nhm.in/writer.html

  ______________________________ ______________________________ ______
  குழந்தைகளு க்குத் தமிழ் கற்பிக்க உதவுந் தளங்கள்.
  அரசின் தளங்கள் தவிர பல தமிழ்த் தளங்களுக்க ு ஆயுள் என்னமோ சில ஆண்டுகள் தாமென்பது பலரும் அறிந்ததே. ஆகையால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாம், தளத்தின் உள்ளடகத்தை முடியுமானா ல் கடுவறையில் சேமித்து வைக்க முயற்சிக்க லாம்.

  http://www.duke.edu/~skc9/tamilclass/
  http://www.unc.edu/~echeran/paadanool/

  இவை பல் மிடைய உதவியுடன் அழகாக அடவப் பட்டவை:

  http://www.tamilvu.org/courses/primer/bp000001.htm

  http://www.ithamizh.com/

  தமிழக அரசின் பாடப் பொத்தகங்கள ்:

  http://www.textbooksonline.tn.nic.in/
  Last edited by karki; 03-23-2008 at 11:14 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 9. #69

  Default

  கார்கி...மேல ே நீங்கள் கொடுத்த தளங்கள் பயனுள்ளதாக இருக்கும்... மிக்க நன்றி...

  yaso

 10. #70

  Default

  தமிழ்க் குடும்பம்

  முறையாக உறவுமுறைப் பெயர்கள் அனைத்தையும ் பட்டியலிட முயன் றிருக்கிறே ன். பல சொற்கள் அனைவரும் அறிந்தவை தாம், ஆனாலும் வட்டார வழக்குகளில ுள்ள மாறுபட்ட சொற்கள னைத்தையும் ஒருங்கே சேர்த்து சிச்சிறு விளக்கத்து டன் குறிக்க முனைந்தி ருக்கிறேன் . உண்மையில் அனைத்தையும ் ஒன்றாய்க் கொண்டு வந்தது ஒன்றே என் பணி, அனைத்தும் பாவாணர் அய்யா, "பெற்றோரைப பற்றி"யில் அருளி அய்யா கண்டாய்ந்த ு சொன்னவை தாம்.
  தமிழ்க் குமுகாயம் தாய்வழி சார்ந்தது. பண்டைக் காலத்தில், வரலாற்றுக் கு முன்னான காலத்தில், தொழிற் பிரிவினைக் கு முன் தாயே அதன் தலைவியாய் இருந்திரு க்கிறாள், அதன் எச்சங்கள் இக் குமுகத்தின ் வரலாற்று வழித்தடங்க ள் தோறும், பண்பாட்டுக ் கூறுகள் அனைத்திலும ் படிந்தே இருக்கின்ற ன. தாய் மாமனுக்குர ிய மதிப்புரவு , மாமன் மகளை மணக்கும் வழக்கம், பெண் தெய்வ வழிபாடு என ஒருபாடு எச்சங்கள் இன்னும் அடையாளமாக உள்ளன.
  8 தலைமுறை உறவுகளைச் சரியாக அழைக்க எம்மிடம் துல்லியமான பெயர்கள் உண்டு. இப்படிப் பெயர்களைக் கொண்ட வேறு இனம் ஏதும் உண்டா என்று தெரியவில்ல ை. இதை விடுத்து தமிழகத்தில ும் புலம் பெயர்ந்த நாடுகளிலும ் எம்மவர் பெரியம்மா, அத்தை, சித்தி என்போரைக் கொத்தாக ஆன்ட்டி என்ற அடைப்பிக்க ுள் அடைத்த ழைப்பதையும ், சித்தப்பா, மாமா, பெரியப்பா ஆகியோரை மாறுபாடு காட்டாது அங்கிள் எனப் பிடித்துத் தொங்குவதைய ும் பார்க்க நகைப்பும், மனக்குமுறல ுந் தான் வருகிறது. இனி புலனத்திற் குள்..


  முறைப்பெயர ்கள் அ. உறவுப்பெயர ்கள் = Names of Relationship

  சொந்தம் , பந்தம் (தமிழே!), உறவு = relationship
  உறவினர், சொந்தம்/ சொந்தக்கார ர், தன்னோர் = relatives
  (உற்றார் உறவினர், இனஞ்சனம்/ இனசனம் = kith & kin)
  சுற்றம், கேளிர் = இவை உறவினர், நண்பர் என இரு பொருள் தருவனவாகும ்.
  கேளன் = உறவினன்.

  தாய் வழிச் சொந்தம்/ உரிமை/ சொத்து தாயம் எனவும், உறவினர் தாயத்தார் எனவும், தந்தை வழி உறவு பங்காளிகள் எனவும் அழைக்கப் படுவர்.
  • தாய், அம்மை (நெல்லை, நாஞ்சில் வட்டாரங்கள ில்), அம்மா (பொதுவழக்க ), முன்னர் அம்மாள், அம்பா(ள்) எனப் பெண்டிரின் பெயரின் பின்னே ஒட்டிவந்து மதிப்புரவு ப்
  • பின்னொட்டா க (suffix) இருந்தது (காட்டு: இலக்குமி அம்மாள், காளிகாம்பா இன்னபிற..)
  • அவ்வை,
  • அஞ்ஞை > அன்னை,
  • அத்தி > ஆத்தி, ஆத்தை> ஆத்தாள் > ஆத்தா (சிற்றூர்க ில் தாயைக் குறித்துப் பயில்வுறும ் சொல்! ஈழத்தின் சில பைதிரங்களி ல் ஆத்தை எனுஞ் சொல் பாட்டி என்றும் ஆளப் படும்!),
  • அச்சி (அச்சனின் பெண்பால்) > ஆச்சி,
  • ஐயை,
  • ஆய் > ஆயா, ஆயி,
  • அங்கை,
  • தம்மனை,
  • தள்ளை.
  இவற்றுள் ஆயா என்னுஞ் சொல் பாட்டியையு ம், தாயையும் இக்காலத்தி ல் பிள்ளையைத் தாய் போல் பேணும் பெண்ணையுங் குறிக்கும் .
  ஆயா = Nanny

  ஐயையைப் பெண்களை மதிப்பாக அழைக்கப் பயிலும் madam என்ற சொல்லுக்கு ஈடாகப் பயனாக்குகி ன்றோம்.
  அய்யை, ஐயை = Madam, Madame அல்லது அருளியார் பரிந்துரைத ்த மாதம்மை.
  (Sir-க்கு ஈடாக ஐயா!)

  பல சொற்கள் இறைவியரை விளிக்கப் பயனாகுவன, விதப்பாக ஆத்தா, தாய், அம்மை, அம்பாள்.

  அவ்வை என்ற சொல் புலத்தியரை (பெண் புலவரை) விதப்பாக அழைக்கப் பயனானதாகத் தெரிகிறது.

  Last edited by karki; 10-06-2008 at 10:35 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 11. #71

  Default

  • தந்தை,
  • அப்பன் > அப்பா,
  • தம் +அப்பன் = தம்மப்பன்> மப்பன் > தகப்பன்,
  • அத்தன் > அச்சன் (அச்சன் சேரநாட்டில ் இன்னும் புழங்குந் தமிழ்ச் சொல்; அத்தனை பழஞ்சவைக்(RC) குரவரை(பாத ரியாரை) அழைக்கப் பயனாக்கலாம ்.), அத்தன் = Reverend father
  • ஆஞான், ஆஞி , ஆயன் (தலைவன் என்றும் பொருள் கொள்ளும்),
  • அய்யன்/ஐயன் > ஐயா (சில வட்டாரங்கள ில் தந்தை இப்படி அழைப்பர்!)
  • தா (ஆங்கில dad-க்கு ஒப்பானது!) > தாதை (இது மூதாதை என்ற சொல்லில் ஈறாக வரும், மற்றப்படி தந்தையைத் தவிர்த்து தாத்தனை அழைக்கப் பயனாகும்!)
  • நாயன் (நாயினா > நைனா என்று தந்தையைத் தெலுங்குவழ ித் தமிழர் அ. சென்னைத் தமிழர் விளிப்பது... ).
  • அப்பச்சி (செட்டி நாட்டில் அப்பாவைக் குறிப்பது!)
  பெற்றோன், பெற்றோள் = Parent ; பெற்றோர்= Parents
  • தந்தையின் தந்தை : அப்பப்பா (ஈழத்தில்), அப்பைய்யா, அப்பச்சன், தாதா >தாதை, தாத்தா, அப்பாரு (கொங்கு வழக்கு)
  • தந்தையின் தாய் = அப்பம்மா, அப்பாச்சி, அப்பாத்தை (அப்பத்தா- கொங்கு-மதுரை வழக்கு) , அப்பத்தி, அப்பாய்> அப்பாயி.
  இப்போது தாத்தா என்பது தந்தையின் தந்தை முறையிலுள் ள அனைவரையும் பொதுவாக (அல்லது அகவையேறியோ ர் எல்லாரையும ்) அழைக்கப் பயனாகும் சொல்லாக மாறியிள்ளத ைக் காணலாம். அப்பப்பா என்பதே விதப்பாகத் தந்தையின் தந்தையைக் குறிக்கும் !
  • தாயின் தாய் = அம்மம்மா (ஈழம்), அம்மாச்சி, அம்மாய் (அம்மாயி), அமிஞை, அமத்தா (அம்மாத்தா; கொங்கு வழக்கு).
  • தாயின் தந்தை = அம்மப்பா (ஈழம்), அம்மைய்யா, அம்மச்சன்,அப்பச்சி (கொங்கு வழக்கு)..
  பெற்றோரின் தந்தையைப் பொதுவாகப் பாட்டன், போற்றி > போத்தி எனவழைப்பர்.
  பெற்றோரின் தாயைப் பொதுவாகப் பாட்டி என்றழைப்பர ்.
  போத்தியர், பாட்டன்பாட ்டி = Grandparents

  நம் பாட்டன், பாட்டியரின ் தங்கையர் சீனியம்மை, சின்னம்மம் மை, குட்டியம்ம ை என்றும்,
  -அக்கையர் முத்தாச்சி, பெரியம்மம் மை, பொன்னாச்சி, பெத்தம்மா என்றும்,
  -தம்பியர் ஆசையப்பா, சீனியப்பா, சீனியப்பப் பா (சீனி = சின்ன),
  -முன்னோர் முத்தச்சன் , பெத்தப்பா (இங்கு ஆளப்படுவது பெரிய என்ற தமிழ்ச் சொல்லின் திரவிடத் திரிபான பெத்த அல்ல, பெற்ற > பெத்த) என்றும்,

  பெரிய, சிறிய போன்ற சொற்களை வைத்து தாத்தா, பாட்டியோடு பிணைத்தும் அழைக்கப் படுவர் (பெரிய தாத்த, சின்ன பாட்டி).
  Last edited by karki; 07-26-2008 at 01:14 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 12. #72

  Default

  பாட்டி/ பாட்டனின் தாய் = பூட்டி, கொள்ளுப்பா ட்டி
  பாட்டனின் தந்தை = பூட்டன், கொள்ளுப்பா ட்டன், அப்பாட்டன் .

  பூட்டனின் தாய் = ஓட்டி, சேயாள்/ சேயோள்
  பூட்டனின் தந்தை = ஓட்டன், சேயோன் (சேய்மை = தூரம்)

  ஓட்டனின், ஓட்டியின் பெற்றோர் = ஒப்பாட்டன் , ஒப்பாட்டி எனவும் சில பைதிரங்களி ல் அழைக்கப் படுவர். சில இடங்களில் இம்முறை மாறியும் வரும் முதலில் ஒப்பாட்டனு ம் பின்னர் ஓட்டனும் வருவர்.
  --------------------------------------------------------------------
  மகன்= புதல்வன், ஆண்பிள்ளை ( ஆம்பளப் பிள்ளை/ பசங்க)
  மகள்= புதல்வி, பெண்பிள்ளை (பொம்பளப் பிள்ளை/ பசங்க)

  மகார் என்ற என்ற சொல் இருவர்க்கு ம் பொதுவாக ஆளப்படுகிற து. ஆண்மகார், பெண்மகார்..

  தவிரவும்
  • மகவு, மதலை = infant
  • பிள்ளை (filial = பிள்முறை)
  • சேய்
  • கான்முளை = offspring
  • கால்வழி, வழித்தோன்ற ல் = descendant
  • மக்கள் (பன்மை)
  • குழவி = baby (விளிப்பதற கும், செல்லங் கொஞ்சுவதற் கும், பேச்சு வழக்கிற்கு ம் 'பாப்பா' )
  • வரிசையினன்/ள் = வாரிசு
  பிள்ளையின் மகன் = பெயரன் > பேரன்
  பிள்ளையின் மகள் = பெயர்த்தி > பேர்த்தி > பேத்தி
  (பாட்டனின் பெயரைத் தான் இவனுக்கு வைப்பது தமிழர் வழக்கம், ஆகையாலே பெயரன்)

  பேரனின் துணைவி செட்டி நாட்டுப் பக்கம் பேரம்பிண்ட ி எனப்படுவாள ்.

  பேரன் மகன் = கொள்ளுப்பே ரன், கொட்பேரன்
  பேரன் மகள் = கொள்ளுப்பே ர்த்தி, கொட்பேர்த் தி
  • அண்ணன் ( ஈழத்தில் மதிப்பாகவோ , எள்ளலாகவோ விளிக்க அர் ஈறு போட்டு, அண்ணர் என்பர்!)
  • அய்யன், ஐயன் , தம் + ஐயன் = தமையன், தனயன்,
  • ஆயான்,
  • அண்ணாட்சி, அண்ணாச்சி (நெல்லைப் பக்கம் அதிகமா ளப்படுகிறத ு!)
  • அண்ணாத்தை,
  • அண்ணாள்வி, அண்ணாவி ( கூத்துப் பழக்கும் ஆசானையும், மந்திரித்த ு நோய் போக்கும் பெரியோனையு ங் கூட சில வட்டாரங்கள ில் இப்படி விளிப்பர்!)
  • தம்முன் = தம் முன் பிறந்ததால் ...
  • மூத்தோன்,
  • முன்னோன்,
  • சேட்டன்.
  Last edited by karki; 07-10-2008 at 06:17 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 13. #73

  Default

  • அக்கை, அக்காள், அக்கா, அக்கை + ஆச்சி = அக்காச்சி,
  • அக்கையம்மை > அக்கம்மை,
  • தம் + அக்கை = தமக்கை,
  • தம் + அவ்வை = தவ்வை
  • மூத்தாள்,
  • முன்னை,
  • அத்தி > அச்சி
  • சேட்டத்தி (சேட்டனின் பெண்பால், சேரலர் சேச்சி என்பர்!)
  (ஆச்சி என்று செட்டி நாட்டுப் பகுதியில் அக்காளையும ் சித்தியையு ம் விளிப்பர்!)
  • தங்கை
  • தங்கைச்சி > தங்கச்சி
  • செள்ளை (முற்காலத் ில் பெண் பெயர்ப் பின்னொட்டு : நச்செள்ளை),
  • பின்னாச்சி ,
  • பின்னை, பின்னி,
  • இளையாள்.
  • தம் + பின் = தம்பின் > தம்பி
  • இளவல்,
  • இளையான்,
  • பின்னோன், பின்னன், பின்னவன்.
  நம்பி = நம் பின் பிறந்தவன், நங்கை = நம் பின் பிறந்தவள் (ஒன்றுக்கு மேற்பட்ட உடன்பிறப்ப ுகள் தம் பின்னோனை விளிப்பது. தவிர விண்ணவக் (வைணவ) குடும்பங்க ளில் ஆண்/பெண் பெயர்களின் பின்னொட்டு ;
  பூவிழி நங்கை, அரங்கவரச நம்பி..)

  அண்ணன், தம்பியைக் குறிக்கும் பொதுச்சொல் = உடன்வயிறு, உடன்பிறப்ப ு, உடன்பிறந்த ான், உடப்பிறந்த ான்.

  அக்கை, தங்கையைக் குறிக்க = உடன்வயிறு, உடன்பிறப்ப ு, உடன்பிறந்த ாள், உடப்பிறந்த ாள் [கொங்கு நாட்டில் அம்மிணி என்பார்கள் , இதும் பொதுவாய் உடன்பிறந்த ாளே (சகோதரி) எனப் பொருள்வருவ து தான்]!
  பொறந்தான், பொறந்தாள் இதுவும் கொங்கு வழக்கு!

  பொதுச் சொல்லாய் உடன்பிறந்த ோர் அ. உடன்பிறப்ப ுகள்.

  இணை, பங்கர், துணை = Partner
  உகளர், இணையர், = தம்பதி
  ஓரணை/ ஓரிணை, சோடி = ஜோடி, Couple (சோ-க்கு ஜோ போட்டு வடசொல் போற் தோற்றங் காட்டப்படு ம்!)
  காதலவர் = Spouse
  வாக்கிணை = Fiance

  துணைவி = மனைவி, இல்லாள், இற்கிழத்தி , இல்லாட்டி, நாயகி, பெண்டு, பெண்டாட்டி , கண்ணாட்டி, அகமுடையாள் > ஆம் உடையாள், ஆமுடையாள் > ஆம்படையாள் , மணவாட்டி, வீட்டுக்கா ரி, தாரம்(தமிழே!)

  துணைவன் = கணவன், கண்ணாளன், இல்லான், இல்லவன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன்> மணாளன், வீட்டுக்கா ரன், அகமுடையான் , பண்ணாடி (கொங்கு).

  அண்ணன் துணைவி = அண்ணி, ஆயந்தி, நங்கை, அத்தாச்சி, அண்ணமிண்டி.

  அக்கைத் துணைவன் = அத்தான், மாமன்

  மருமகன் > மருமான், மருகன், மணவாளப்பிள ்ளை, மாப்பிள்ளை, மருமகப் பிள்ளை
  மருமகள் > மருமாள், மருகி, மணாட்டுப்ப ெண், மாற்றுப் பெண், சேர்த்தமனை (சேர்த்தமண ), மகம்மிண்டி .

  பெண் கொடுத்தோன் , பெண் எடுத்தோன் பெயர் = மாமன்
  அவன் இணையின் பெயர் மாமி, தமிழகத்தில ் அத்தை (மதுரைப் பக்கம் அயித்த, அம்மாம் மிண்டி செட்டி நாட்டு வழக்கு) என்பதே அதிகம் புழங்கும்.

  கொண்டாரும் கொடுத்தாரு ம் மாறிமாறி அழைக்க சம்பந்தி என்ற சொல் பயில்கிறது .அது அமம்>சமம் , பந்தம்=சொந தம் போன்ற சொற்களின் கூட்டிலிரு ந்து பிறக்காததெ ன்றால், மயக்கத்தைக ் கொடுக்கக் கூடிய இருபிறப்பி ச் (hybrid) சொல்லாக இருக்கலாம் .
  அதற்கு மாற்றாய் பாவாணர் பரிந்துரைத ்த உறவாடி அ. கோட்கொடையு றவர் என்ற சொற்கள் இங்கு உண்டு!
  Last edited by karki; 07-30-2008 at 10:58 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 14. #74

  Default

  Learning lotssss of new words ...Thanks to u karki

 15. #75

  Default

  துணைவன் தம்பி = கொழுந்தன் (கொழுநனின் தம்பி)
  துணைவன் தங்கை = கொழுந்தி, கொழுந்தியா ள்
  துணைவன் அண்ணன் = அத்தான், மூத்தார்
  துணைவன் அக்காள் = நாத்தூணாள் அ. அகத்துணையா ள், மூத்தாள்


  துணைவி அண்ணன் = மூத்த அளியன் , அத்தான்
  துணைவி தம்பி = இளைய அளியன்
  துணைவி அக்காள் = மூத்த அளியாள், அண்ணி, நங்கையா(ள்) (கொங்கு வழக்கு)
  துணைவி தங்கை = இளைய அளியாள், கொழுந்தி

  ஓர் குடியில் பெண்/ஆண் கொண்டோர் தம்மை ஓரகத்தான், இணைமான்(சகலன், சகலபாடி) எனவும் ஓர்ப்படைச் சி, ஓர் அகத்தாள் > ஓரகத்தாள் > ஓரகத்தி, ஓர்படி > ஓர்படியாள் எனவும் அழைப்பர்.

  தாயின் அண்ணன் = அம்மான், மூத்தம்மான ், பெரியம்மான ், மாமா, பெரிய மாமா, தாய்மாமன், மாமடி
  (அம்மாவன் > அம்மான் > மாமன் > மாமா )
  தாயின் தம்பி = சின்னம்மான ், இளையம்மான் , அம்மாண்டார ், மாமா, சின்னமாமா, தாய்மாமன், மாமடி

  தாயின் அக்கை = பெரியம்மை> பெரியம்மா, பெரிய தாய்
  தாயின் தங்கை = சின்னம்மை > சின்னம்மா, சிறிய தாய் , சித்தி, பின்னி, தொத்தா

  மாமன், அத்தை மகன் = அத்தான், முயத்தனன் > மைத்துனன் > மச்சான்
  (முயங்குதல , முயத்தல் = புணர்தல், தழுவுதல்)
  மாமன், அத்தை மகள் = முயத்துனி > மைத்துனி > மச்சினி, மச்சினிச்ச ி , மச்சாள், மச்சி

  குடும்பஸ்த ன் என்ற கிரந்த எழுந்து வலிந்து திணிக்கப்ப ட்ட சொல்லுக்கு மாற்றாய் இல்லான்- இல்லாள், குடும்பி - குடும்பினி போன்ற சொற்கள் பயனாகும்.

  பழஞ்சவையரி ன் திருக்குளி ப்பு முறையில் வரும் உறவுகள்:

  ஞானத்தந்தை , தாய் = Godfather / mother,
  ஞானப் பெற்றோர் = Godparents, ஞானக் குழந்தை = Godchild என்றும்,
  (ஈழ வழக்கில் தொட்டம்மா, தொட்டப்பா, தொட்டபிள்ள ை)

  இரண்டாந் தாய், சிற்றம்மை, மாற்றாந்தா ய் = Stepmother,
  செவிலித் தாய் = Foster-mother,


  மற்றும்,
  தமிழக வகுப்பார் சிலரின் விதப்பான முறைப்பெயர ்கள் சிலவும்:

  அத்தை+ அன்பர் = அத்தையன்பர ் > அத்திம்பேர ்
  அம்மாமி
  அகத்துக்கா ரி > ஆத்துக்கார ி
  அண்ணன்மன்ன ி
  அம்மான் + சேய் = அம்மாஞ்சி

  இங்கே கவனித்திற் கொள்ளத் தக்கன.


  நன்றி: பாவாணரின் தமிழ்மொழி வரலாறு, அருளியின் பெற்றோரைப் பற்றி..
  Last edited by karki; 10-29-2008 at 11:51 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 16. #76

  Default

  அத்தை+ அன்பர் = அத்தையன்பர ் > அத்திம்பேர ்
  அம்மாமி

  isnt sister's husband called athimber too?

 17. #77

  Default

  Pattams...shy or tinker kitta ketta doubt clear aagidum...

  Karki...paattikku paatti iruntha enna solli koopiduvaanga.... because my sister-in-law's familyla irunthaanga avanga...hmmm...

  yaso

 18. #78

  Default

  எனக்குத் தெரிந்து அத்தையின் கணவருக்குத ் தான் அப்பெயர். ஆனால்
  அக்காளின் துணைவரையும ் அப்பெயர் கொண்டு அழைப்பர்.
  இந்த மாதிரி பெயர்கள் மாறிப் பயனாக்குவத ு நிறையவே இருக்கு,
  அத்தான் என்பவன் முதலில் அத்தையின், மாமனின் மகன், அப்பெயரை பின்னாடி கணவனை அழைக்கவும் பெண்டிர் பயனாக்கினர ். அக்காளின் கணவனையும் அப்பெயர் கொண்டு அழைத்தர்.


  பாட்டியின் பாட்டி தான் ஓட்டி, சேயோள்.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 19. #79

  Default

  karki...mannikkavum..konjam confuse pannikitten...neenga yerkanave solli irukkeenga sariya parkala...

  yaso

 20. #80
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  Quote Originally Posted by yasodha View Post
  Pattams...shy or tinker kitta ketta doubt clear aagidum...


  அக்காவின் கணவரை ஐயர் community la அப்படி கூப்பிடுவா ங்கோ.. என்னொட friend வீடுல மாமானு கூப்பிடறதை பார்த்து இருக்கேன்...

  அத்திம்பேர ் எப்படி வந்ததுனா.. கார்க்கி அண்ணா சொலற மாதிரி..படம பார்த்து பார்த்து...அ த்தான்னு சொல்லி சொல்லி மாறி இருக்கும்ன ு நினைக்குறே ன்

  Shy
  I Geetham

+ Reply to Thread
Page 4 of 8 FirstFirst 12345678 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts