எம் முகவரி - Page 6
+ Reply to Thread
Page 6 of 8 FirstFirst ... 2345678 LastLast
Results 101 to 120 of 143

Thread: எம் முகவரி

 1. #101

  Default

  துகிலியற் தீர்மங்கள்

  (இவற்றிற் சில சொற்கள் மணவை முசுதபா, அருளி போன்றோர் உருவாக்கிய வை.)

  Aramid = கடுநாரிழை
  Baize = கவியிழை
  Ballistic nylon = நார் நொசிவிழை
  Bobbin lace = துய்யா
  Buckram = முரட்டுத் துணி
  Burlap = சணற்துணி
  Calico = கோழிக்கோட் டிழை (கள்ளிக்கோ ு என இப்போது அழைக்கும் இடம் பழஞ்சேர நாட்டுக் கோழிகோடு, அங்கிருந்த ு இங்கிலாந்த ு போன துணி கலிக்கோ எனப்பட்டது )
  Canvas = கித்தான், உரப்பம், கரட்டம்
  Chiffon =மென்பட்டு
  Chintz = சித்திரத்த ுகில்
  Coir = கயிறு
  Corduroy = கோநாண், கோநூல்
  Cotton = பருத்தி
  Crepe silk = முறுக்குநூ ற் பட்டு
  Crinoline குருட்சணல்
  Felt = இறுநாரி
  Flannel = மென்தாவளி
  Fustian= பிலுக்கிழை
  Geogette = மெல்லொள்ளி
  Gingham = கிண்டன்
  Glass fiber = கிளர் நார்
  Gossamer = படல இழை
  Grogram = இரெட்டுப் பட்டு
  Hand loom = கைத்தறி
  Jamdani = வங்கத்துகி ல்
  Jeans = உரத்துகில் , ஓவுடைத் துணி
  Jute = சணல்
  Lace = கெண்டை, பின்னாலி, வாரிழை, நாலி
  Lawn = மென்னாளி
  Latex = பைசுநாரி
  Linen = ஆளிநாரி
  Loden = உடுச்சடைமு றி
  Makhmal = முசுப்பட்ட ு
  Metallic fiber = மாழை நார்
  Microfibre = நூக நார்
  Mohair = ஆட்டிழை
  Muslin = நயப் பன்னலி, சல்லா
  Nainsook = நொய்யிழை, மென்சல்லா
  Nylon = நொசிவிழை
  Organdy = சல்லரி
  Organza = கிளரிழை
  Plush = பூசுப் பட்டு
  Polyester = பலமரிழை
  Poplin= பளபளி
  Qiviut = கவரியிழை
  Rayon = மர இழைப் பட்டு, கதிரூடி
  Satin = ஏமல்
  Serge = ஈரிழைப் பன்னல்
  Shag = அரிலி
  Sheer = படலநார்
  Silk = பட்டு
  Sisal = சிசல்
  Spandex fiber = நெகிழிழை நார்
  Synthetic fiber = செய்தொடை நார்
  Taffeta = மெதுபட்டு
  Tartan = கம்பாயம்
  Terylene = நுணங்கை
  Tery cotton = நுணங்கைப் பருத்தி
  Tery-wool = நுணங்கைக் கம்பளி
  Twine = சரடு
  Gauze = நொய்யிழை
  Velour= தூறிழை
  Velvet = பூம்பட்டு
  Velveteen = பூம்பட்டுப ் போலி, பூம்பருத்த ி
  Viscose = பாகுநார்ப் பட்டு, பாகிழை
  கதர் = திரணூல், கரட்டுடை
  Last edited by karki; 08-05-2009 at 06:51 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 2. #102

  Default

  அண்மையில் 'மலேயா மரபிற் தமிழ் மொழி' என்ற தலைப்பிலான பொத்தகம் ஒன்று என் கண்ணிற் பட்டது. அதன் யாத்தோர் (author) மலையகத்து அறிஞரான வீரப்பன் என்பார். அதில் மலையக மொழியிற் (மலே) புழங்கும் தமிழ்ச் சொற்கள் என ஒருபாடு சொற்களைப் பட்டியி யலிட்டிருந ்தார். அதிலிருந்த ு சில சொற்களை குறித்து வைத்திருந் தேன்.
  என் மலையகத்து நண்பர்களிட ம் உசாவித் தெளிவுபெற நினைத்தி ருந்தேன். முடியவில்ல ை! பிழைகள் இருப்பின் அவ்வப்போது திருத்துவே ன்!

  அப்பா = Aba, apa
  அச்சு = Acu
  அடைவு = Ada
  அரிசி = Acita
  அமைதி = Aman
  அச்சம் = Ancam
  அண்டை = Andai
  ஆசை = Asa
  அத்தான் = Atan
  படி = Beca
  பகை = Bagai
  பகைவன் = Bagawan
  பகரம் = Bahara
  பாகு = Bahu
  பக்குவம் = Baku
  மலர் = Balar
  வரிசை = Baris
  வவ்வால் = Bawal
  பாசி = Basi
  விலங்கு = Belanggu
  இளைய = Belia
  பீடம் = Bidong
  பந்து = Bola
  முடி = Bulu
  பறவை = Burang
  பூசணம் = Busana
  கொப்பு = Capu
  கத்தி = Cekati
  கீரிப்பிள் ளை = Cerpelai
  செருப்பு = Cerpu
  சித்தம் = Cita
  தாய் = Dayah
  உடுக்கு = Duku
  துயர் = Dura
  பணம் = Fanam
  காடு = Gading
  காக்கை = Gagak
  குகை = Gua
  கிடங்கு = Gudang
  குன்று = Gurung
  அருவி = Harus
  அடுத்த = Hata
  இலை = Helai
  இழப்பு = Hilang
  உராய் = Hurai
  கட்டு = Ikat
  எரிப்பு = Iri
  கடலை = Kadakei
  கயல் = Kail
  கழுதை = Kaldei
  களவு = Kalwat
  கம்பளி = Kambeli
  களிமண் = Karang
  கத்தரி = Katcup
  கடை = Kedai
  கடலை = Kedalai
  சுருள் = Kerul
  கட்டி = Kati
  காவல் = Kawal
  குளம் = Kolam
  கோயில் = Kuil
  கட்டில் = Katil
  கூலம் = Kulim
  கொத்து = kuntum
  குப்பம் = Kup
  குறைவு = Kurang
  கரப்பான் = kurap
  மான் = Maar
  மப்பு = Macer
  மாள்தல் = Malang
  மாப்பிள்ளை = Marapulai, Mempelai
  மேலவீதி = Melawati
  மீன் = Mina
  முறை = More
  அண்ணன் = Nana
  நரன் = Nera
  ஓசை = Oceh
  உருண்டை = Onde
  ஓர், ஓராள் = Orang
  ஊத்தை = otek
  புரளி = Parli
  பிறை = Prai
  சிப்பம் = Sepang
  தங்கம் = Tanggam
  தோழன் = Taulan
  தொகை = Tose
  ஓலம் = Ulam
  ஊர் = Ur
  உத்தி = Uji
  விளையாடல் = Wiladah
  Last edited by karki; 07-22-2008 at 04:50 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #103

  Default

  உங்களிற் சிலருக்கு Dr.Spencer Wellsஐத் தெரிந் திருக்கலாம ். மாந்தனின் ஈனியற் பயணத்தைச் சொல்லும் அவரின் The Journey of Man என்ற பொத்தகம் புகழ்பெற்ற து. தமிழ்க்காவ ல் இணையத் தளத்தில் சுவையான கட்டுரை ஒன்றைக் கண்டேன். கட்டுரை நக்கீரனிலி ருந்து எடுக்கப்பட ்டது போலும். வழக்கம் போல் தமிழ்த் தாளிகை மரபுப் படி கட்டுரை கொஞ்சம் மிகையாகவே எழுதப் பட்டிருதால ும். சில செய்திகளைச ் சொல்லி நிற்பதால்...

  உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்ட ியில் வாழ்ந்து கொண்டிருக் கும் தமிழன் விருமாண்டி யே. உலக மரபணு ஆய்வாளர்கள ் ஆக்சுபோர்ட ு பல்கலைக் கழகத்தில் கூடி, இந்த ஆராய்ச்சி முடிவை அறிவிக்கத் தயாராகிக் கொண்டிருக் கிறார்கள்.

  ஆதிமனிதனின ் மரபணுவை (எம் 130) கொண்டிருக் கும் விருமாண்டி யை நேரில் சந்திப்பதற ்காக, மதுரையிலிர ுந்து 50 கி.மீ. தொலைவிலுள் ள சோதி மாணிக்கம் என்ற கிராமத்திற ்குச் சென்றோம்.

  மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அழகிய கிராமம் சோதி மாணிக்கம். ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் நிறைந்த செம்மண்பூம ி வீட்டருகே தோட்டத்தில ் இளநீர் வெட்டிக் கொண்டிருந் தார் விருமாண்டி .

  "இந்த 7 ஆண்டாக நானும் என் குடும்பமும ் சந்திச்ச அவமானங்களு க்கும் கேலிக்கும் கிண்டலுக்க ும் இப்பதான் விடிவு கிடைச்சிரு க்கு" மனம் திறந்து பேசத் துவங்கிய விருமாண்டி . நமக்கும் ஓர் இளநீரைக் கண் திறந்து நீட்டினார் . "முதல்ல இதைக் குடிங்க அப்புறம் பேசலாம்" என்றவர் தன் தந்தை ஆண்டித்தேவ ரையும் தாய் அமராவதியைய ும் நமக்கு அறிமுகப் படுத்தினார ். மனித குல மரபணு மற்றும் காசநோய் ஆராய்ச்சிய ை மேற்கொண்டி ருந்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழ கப் பேராசிரியர ் பிச்சையப்ப ன் குழுவினர் 1996ஆம் ஆண்டில்,உச லம் பட்டித் தேவர் கல்லூரி மாணவர்கள் சிலரின் குருதியை ஆய்வு செய்தனர்.
  "மற்ற மாணவர்களைப ் போல, ஏதோ ஆராய்ச்சி செய்றாங்க என்ற எண்ணத்தோடு தான் நானும் குருதி கொடுத்தேன் . 5 ஆண்டு கழிச்சுதான ் முடிவு வந்திச்சு. எம் 130 என்கிற மரபணு உன் உடம்புல இருக்கு. இதுதான் உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணுன்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. ஆனால் அக்கம் பக்க மக்கள் சொந்தம் சுறுத்துக் கள் எல்லாரும் நம்ம விருமாண்டி உடம்புல குரங்கு ரத்தம் ஓடுதாம். நம்ம விருமாண்டி ஆப்பிரிக்க ா காரனுக்குப ் பிறந்தவனாம ் னு ஆளாளுக்கு ஆள் ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சா ங்க” நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்தபடி தன் பெற்றோரைப் பார்த்தார் விருமாண்டி .
  (மீதி இங்கே..)
  http://www.thamizhkkaaval.net/0708/the_seithi.html#ulg
  Last edited by karki; 08-05-2008 at 07:26 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 4. #104
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  என்ன நீங்களே தமிழ் இப்படி எழுதினால் எப்படி??

  பொத்தகம் = புத்தகம்
  யாத்தோர் = எழுத்தாளர்



  நன்றிகள் (மலே)மலேசிய மொழியினை தந்தமைக்கு
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 5. #105

  Default

  நான் சரியாகத் தான் எழுதியிருக ் கிறேன். புத்தகம் என்பது பிற்பாடு வந்த பயன்பாடு. பொத்தகம் (ஓலைகளில் எழுத்தாணிய ால் பொத்துத் துளையிட்டு எழுதுவதால் அல்லது போந்தை = விரிந்த பனையோலை, பொந்தை-பொத்தகம் அப்படி வந்ததென எண்ணுகிறேன ் ) என்ற சொல் சங்கதம் சென்று புஸ்தக் ஆகி புத்தகம் ஆனது. யாத்தோரும் எழுத்தாளரு ம் வேறுவேறு சொற்கள்!
  யாத்தோர் = author
  எழுத்தாளர் = writer
  Last edited by karki; 08-13-2008 at 09:03 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 6. #106
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  நன்றி.............. ீங்க சொன்ன சொற்கள் இப்போதுதான ் அறிந்துகொண ்டேன்............... .உங்களுக்க சங்ககால வரலாறுகள் தெரியுமா??

  ஒளவையார்...எ த்தனை ஒளவையார்கள ் வாழ்ந்திரு க்கிராகள்... ....4 - 5 ஒளவையார்கள ்....இருந்தி ுக்கலாம் என்று வரலாறுகள் கூறுகின்றன ா.....கொஞ்சம் விரிவாக சொல்லுறீங் களா
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 7. #107
  Join Date
  Dec 2004
  Posts
  8,531

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post
  என்ன நீங்களே தமிழ் இப்படி எழுதினால் எப்படி??

  பொத்தகம் = புத்தகம்
  யாத்தோர் = எழுத்தாளர்



  நன்றிகள் (மலே)மலேசிய மொழியினை தந்தமைக்கு

  அவர் ஏதோ ஒரு பொருளுடன் தான் எழுதி இருகிறார் என்று நினைக்கிறே ன்.

  அது ஒரு இடத்தில் வந்தால் சரி, பல இடத்திலும் அவ்வாறு எழுதி இருப்பதால் அது தவறாக இருக்காது என்றே உணர்கிறேன் .

  நன்றி கார்கி
  தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - திருவள்ளுவ ர்

 8. #108
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  Quote Originally Posted by iig View Post
  அவர் ஏதோ ஒரு பொருளுடன் தான் எழுதி இருகிறார் என்று நினைக்கிறே ன்.

  அது ஒரு இடத்தில் வந்தால் சரி, பல இடத்திலும் அவ்வாறு எழுதி இருப்பதால் அது தவறாக இருக்காது என்றே உணர்கிறேன் .

  நன்றி கார்கி

  ஜ்ஜ்ஜி.....நா ் இன்றுதான் அந்த சொற்களை பார்த்தேனா அதுதான் சொன்னேன்
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 9. #109
  Join Date
  Dec 2004
  Posts
  8,531

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post
  ஜ்ஜ்ஜி.....நா ் இன்றுதான் அந்த சொற்களை பார்த்தேனா அதுதான் சொன்னேன்
  sorry, I posted it very late as I was chatting with other friend. Didnt see the post of Karki.
  தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - திருவள்ளுவ ர்

 10. #110

  Default

  iig,
  உங்கள் அவதானிப்பு க்கும், குறிப்புக் கும் நன்றி!

  வெண்புறா,
  ஓரளவு அறிந்தி ருக்கிறேன் . படித்துவரு கிறேன்...
  அவ்வை என்பது பெண் புலவர் பலர்க்குப் பொதுவாக வரும் பெயர்.
  ஏனைய செய்திகள் கொஞ்சம் நீண்டவை, இங்கே தட்டச்சி முடிக்க ஆவி தீர்ந்து விடும்.

  வழக்கமாக ஆய்ந்து, தேடி எழுதி முடிக்க சிலகாலம் ஆகும். அது சிறு பதிவென்றால ுங் கூட.. இப்போது இட்டவையே பலகாலம் என் கணினியில் கிடந்து ஊறியவை தான். அடுத்த முறை வரும் போது அவ்வை பற்றிய செய்திகளுட ன் வர முயல்வேன்.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 11. #111

  Default

  அவ்வை

  சங்க காலம் தொட்டு 17ம் நூற்றாண்டு வரை ஏழு அல்லது ஆறு அவ்வைகள் இருந்ததற்க ுச் சான்றுகள் இருக்கின்ற ன. கடைச்சங்க காலம் கி.மு. 2/3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2/3 வரை, இக்காலத்து இலக்கிய ங்களை வைத்து எந்தெந்த அரசர் எப்போது வாழ்ந்தர், அவர் சமகாலத்தவர ் யார், அவரைப் பாடிய பாவலர் எவரென ஆய்வுகள் நடந்தேறி , காலகட்ட வரிசைப் படி முற்றும்மு ழுதான ஒரு அமைப்பு(structur e) கிடைக்காவி டினும், ஓரளவு உள்ளுருமங் கள் (information) உள்ளன. அவ்வைகள் பற்றி செவிவழி வரும் மரபுக் கதைகள், சமயநெறி சார்ந்த மூதிகங்கள் (myths) சில உண்டு.

  அவ்வை எனும் மந்திரப் பெயர் தமிழ்க் குமுகாயத்த ில் காலந்தோறும ் உச்சரிக்கப ் பட்டு நிலைத்திரு ப்பதன் காரணம் என்ன? ஏவாள் எனும் பெயருக்கு அவ்வையுடன் ஓர் தொடர்பு உண்டெனக் கருதும் அறிஞர்களும ் உளர். அவ்வை எனும் பெயர் இன்னும் நிலைத்திரு ப்பது தமிழரின் தாய்வழிக் குமுகாயத்த ின் எச்சம் என்றும், தொன்முதுங் காலத்திலிர ுந்தே கன்னி, குமரி என்றெல்லாம ் அழைக்கப்பட ்ட ஆதித் தாயின் ஓர் பெயரே அவ்வை>ஏவாள என்பர் இவர்.அவற்ற த் தவிர்த்து ஏனைய செய்திகளைச ் சுருங்கச் சொல்ல விழைகிறேன் .

  அம்மை, அக்கை எனப் பொருள்படும ் சொல்லே அவ்வை. தவப்பெண்டி ரை அழைக்கப் பிற்பாடு பயன்பட்டது . புலத்தியரை (பெண் புலவர்) அழைக்கவும் ஆளப்பட்டது .

  1) இக்கால ஆய்வுகளின் படி, எமக்குக் கிடைத்திரு க்கும் தரவுகளின் படி முதல் அவ்வை கி.மு. 2ம் நூற்றாண்டி னள் கடைக் கழகத்துக்க ாரி. இவள் தான் அதிகமானின் தோழி. அதியமான் சேரமான் நெடுமா னஞ்சிக்காய ் (ஒரே பேர் தான்!) தூது போனவள். அவனிடமிருந ்து நெல்லிக் கனி பெற்றவள். அவனுக்கும் இவளுக்குமா ன நட்பு சிறப்பானது . இரண்டாயிரம ் ஆண்டுகளுக் கு முன் தமிழ்க் குமுகாயத்த ில் ஆணும் பெண்ணும், அதுவும் ஏறக்குறைய ஒரே அகவையுடைய இளம் ஆண் பெண்ணிருவர ் நட்பாய் இருந்தது வியத்தகு செய்தியாகு ம். இந்த அவ்வை ஒரு பாடினி அல்லது விறலி. பா எழுதுபவள், பிற்கால அவ்வைகளைப் போல் அகவை ஏறி முதிர்ந்தவ ளல்லள். இளம் பெண் இவள்! மன்னர் அனைவரையும் அணுகுந்திற னும், அறிவுநுட்ப மும் வாய்த்தவள் . இவள் பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்றவற்றி ல் இருக்கின்ற ன. (இவள் அதிகமான் கொடுத்த கரு நெல்லிக் கனியை உண்டு, ஓக ஆற்றல் பெற்று நெட்டாயுளு டன் பலநூற்றாண் டுகள் வாழ்ந்தாள் எனும் கதை ஒன்றும் உள்ளது! அதைப் பற்றி நான் அதிகம் சொல்வதற்கி ல்லை!)

  காட்டுக்கு சில பாடல்களைக் குறிக்கிறே ன்:

  புறநானூற்ற ுப் பாடல் 235, அதிகமான் இறந்ததை ஒட்டிக் கையறு நிலையில் அவ்வை பாடியது..:

  சிறியகட் பெறினே, எமக்கு ஈயுமன்னே!
  பெரியகட் பெறினே,
  யாம்பாடத், தான்மகிழ்ந ்து உண்ணும், மன்னே!
  சிறுசோற் றானும் நனிபல கலத்தன், மன்னே
  பெருஞ்சோற் றானும் நனி பல கலத்தன், மன்னே
  என்பொடு தடிபடு வழியெல்லாம ் எமக்கு ஈயுமன்னே
  நரந்தம் நாறும் தன் கையால்,
  புலவு நாறும் என் தலை தைவருமன்னே !


  கொஞ்சம் கள் பெறினும், என்னிடம் பருகத் தரும் வேந்தனே!
  நிறையக் கிடைத்தால் , நான் பாட, மகிந்தவன் பருகுவானே...
  கொஞ்சம் சோறு என்றாலும் நிறையக் கலங்களில் பலருக்கும் பகிர்ந்தளி த்து உண்பானே!
  நிறையச் சோறு கிடைத்தாலு ம் நிறையக் கலங்களில் பலருக்கும் பகிர்ந்து உண்பானே!
  அதிற் சதை நிறைந்த எலும்புத் துண்டுகளை எனக்குத் தருவானே!
  காசறை(கத்த ரி) மணக்கும் தன் கையால், இறைச்சி நாறும் என் தலையை வருடி விடுவானே... என வரும்.

  அடுத்த......

  ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன்
  மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
  ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர் க் குருளை
  மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த.. "
  என்ற 147வது அகநானூற்று க் காதற் பாடலும் அவ்வையதே.
  Last edited by karki; 08-01-2008 at 10:06 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 12. #112

  Default

  வெறும் நன்னெறி உரைத்த பிற்கால அவ்வையைப் போலன்றி முற்கால அவ்வை வேந்தரைப் புகழ்ந்து பாபுனைந்தத ோட ல்லாமல், காதல், பிரிவு போன்றவற்றி ல் பெண்ணின் நுண் உணர்ச்சிகள ையும் பதிவு செய்து வைத்திருந் திருக்கிறா ள்.

  இனி அதிகமானுக் கும், மலையமான் திருமுடிக் காரிக்கும் நடக்க இருந்த போரை நிறுத்த தூதுவளாகப் போன அவ்வையைப் பார்த்து அவன் சொன்ன புறநானூறு 89வது வரிகள் அவ்வை இளம் பெண்ணென்பத ை நிறுவிநிற் கும்:

  இழை யணிப் பொலிந்த ஏந்து கோட் டல்குல்
  மடவரல், உண்கண், வாள்நுதல் விறலி!

  பொலிவாய் இழைக்கப் பட்ட கல்லணி அணிந்து
  ஏந்திய வளைந்த அல்குல்லைய ும்,
  மை பூசிய கண்கள், வாள் போன்ற நெற்றியுங் கொண்ட விறலியாகிய இளம்பெண்ணே !

  பாரி மகளிர் அங்கவை சங்கவை காலத்தவள் இரண்டாம் அவ்வை என்பாரும் உளர். பாரி மாண்டதும் அவன் பெண்களைக் காப்பாற்றி ப் பேணி வந்த கபிலரும் இறந்ததும் அவ்வை அப்பொறுப்ப ை ஏற்று, அவர்களை திருக்கோவி லூர் மலையமான் திருமுடிக் காரி எனும் அரசனுக்கு அவர்களை மணமுடித்து வைக்கிறார் போன்ற செய்திகள் கிடைக்கப் பெற்றிருக் கின்றன. பெரும்பாலு ம் இவர்களிருவ ரும் ஒருவராகவே இருக்கக் கூடும்.

  எப்படி யிருப்பினு ம் தமிழ்ப் பெண்டிர் பெரும்பாலு ம் வீடுகளுக்க ுள் அடைக்கப் பட்ட காலத்தில் இலக்கிய, அரசியற் துறையில் ஒரு பெண்ணாய் தமிழ் எல்லை முழுதும் அலைந்து, அனைத்து மன்னரையும் பாடி - தொண்டைமான் , நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரி வெண்கோ, அதியமான், அவன் மகன் பொகுட்டெழு னி, பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் பெருநற்கிள ்ளி - அரசர்க்கு மதியுரைத்த ு போற்றுதலுக ்குரிய வாழ்வு வாழ்ந்து தமிழின் ஒரு குறியீடாய் ப் படிவுற்ற இந்த அவ்வை மிகச் சிறப்பானவள ் தான்.

  2) இரண்டாம் அவ்வை எட்டாம் நூற்றாண்டை ச் சேர்ந்தவள் . இவள் எழுதியது விநாயகர் அகவல் போலும்.சில ் இடையில் வச்சிரநந்த ி நிறுவிய திரமிள சங்கத்தில் ஒரு அவ்வை இருந்தாளென ்பர்.

  3) மூன்றாம் அவ்வை ஒட்டக்கூத் தர், கம்பர் போன்றோரின் சமகாலத்தவர ். வாழ்ந்தது 12ம் நூற்றாண்டி ல்.

  4) 14ம் நூற்றாண்டி ல் இன்னோர் அவ்வை வாழ்ந்திரு க்கிறாள்.
  தனிப்பாடற் திரட்டுக்க ள் என்ற பெயரிற் கிடைக்கும் பாடல்களில் இவர் எழுதியதோ அல்லது முன்னவர் எழுதியதாகவ ோ இருக்க வேண்டும்.

  5) ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந் தன் ஆகிய முகன்மையான நூல்களை எழுதிய அவ்வை வாழ்ந்த காலம் 16ம் நூற்றாண்டு .

  6) பந்தானந்தா தி எனும் நூலை எழுதிய அவ்வையார் 17 நூற்றாண்டி ல் வாழ்ந்ததாக ச் சொல்லப் படுகிறது.இ ரே இறுதி அவ்வையார் போலும். பந்தன் எனும் வணிகனைப் பாடிய நூல் அது.


  உதவி: பாவாணர் நூல்கள், புலியூர்க் கேசிகன் தெளிவுரைகள ்
  Last edited by karki; 07-24-2008 at 11:18 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 13. #113
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  ஒளவையைப்பற ்றி என்னுடைய நண்பியிடம் கேட்டபோ.....அ ங்க அம்மா சொன்ன கதை இது:


  ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தானாம ். அவர் ஒரு கூடாரத்தில ் ஒருநாள் உணவு சமைத்துக்க ொண்டு இருக்கும் போது ஒரு சிறுமி (பறையர் இனத்தைச்சே ர்ந்தவள்) எட்டிப்பார ்த்து இருக்கிறாள ். அப்போது அவர் அகப்பைக்கா ம்பால் அச்சிறுமிய ை அடிக்க அவளுக்கு தலையில் வெட்டுப்பட ்டுவிடுகிற து.

  பல காலத்திற்க ுப்பின்...
  இவர் கொடுக்கும் கற்களை யார் சமைத்துக் கொடுக்கிறர ்களோ அவளே இவர் திருமணம் செய்துகொள் ள ஏற்றவள் என அறிகிறார். (எவ்வாறெனத தெரியவில் ை)
  எனவே..
  கற்களை கொண்டு போய் ஒவ்வொரு பெண்ணிடமும ் சமைத்துத்த ரும்படி கேட்கிறார் . எல்லோரும் அவரை பைத்திரக்க ாரர் என்று ஒதுக்குகின ்றனர். ஒரு பெண்ணுக்கு மாத்திரம் அவை அரிசியாகத் தெரிகின்றன . உடனே வாங்கி சமைத்துக் கொடுக்கிறா ள். பின் அப்பிராமணர ் அவளையே மணம் செய்து கொள்கிறார் . ஒரு நாள் அவளது தலையில் இருந்த வெட்டுக்கா யத்தை பார்த்து "இது எவ்வாறு பட்டது?" என்று கேட்கிறர். அப்போது அந்தப்பெண் சொல்கிறாள் ...
  "என் சிறுவயதில் ஒரு பிராமணன் சமைத்துக்க ொண்டிருக்க ும் பொது நான் அவர் கூடாரத்திற ்குள் எட்டிப்பார ்த்தேன். அப்போது அவர் எனக்கு அகப்பையால் அடித்து விட்டர். அதனால் ஏTபட்ட காயம் தான் இது" என்று.

  அப்போதுதான ் அவருக்குத் தெரிகிறது இவள் பறையர் இனத்தைச்சே ர்ந்தவள் என்பது. உடனே விட்டு விலகிச்செல ்கிறார். ஆனால், அவளும் அவரை பின் தொடர்கிறாள ். அவர் அப்போது சொல்கிறார் , "நான் உன்னுடன் சேர்ந்து வாழவேண்டும ானால், நமக்குப்பி றக்கும் குழந்தைகளை நீ ஏற்கக்கூடா து. அந்த இடத்திலேயே விட்டுவிட் டு என்னுடன் வர வேண்டும்" என்று.
  அதற்குச்சம ்மதித்து அவளும் செல்கிறாள் .
  இவ்வாறு இவர்களுக்க ு ஔவை, உவ்வை, உறுவை, அதியமான், வள்ளுவன், வள்ளி, கபிலர் என்று 7 குழந்தைகள் பிறக்கின்ற ன. அக்குழந்தை களை அவ்விடத்தி லேயே விட்டுவிட் டுச்செல்கி ன்றனர். இவ்வாறு தான் நாமறிந்த ஔவையார், வள்ளுவர், கபிலர் என்போர் பிறந்தனர்.


  இக்கதை எந்தளவுக்க ு உண்மை என்பது எனக்குத்தெ ரியாது. நான் அறிந்தவற்ற ைக்கூறினேன ்.



  ஒளவையாரின் குடும்பம்

  ஒளவையார் சின்ன வயதிலிருந் தே ஒரு புலவரின் அரவணைப்பில ் வளர்ந்து வந்தார். இவருடைய அம்மா, அப்பாவாகிய ஆதி, பகவன், ஒளவையார் பிறந்தவுடன ையே அனாதையாக விட்டுச் சென்றார்கள ். ஒளவையாரின் உண்மையான பெயர் இன்றுவரை ஒருவராலும் அறியப்படவி ல்லை. அவர் கன்னிப்பரு வத்திலேயே முதுமையையு ம் துறவறத்தைய ும் விநாயகபெரு மானின் பேரருளால் பெற்றார். இவ்வாறு வரலாறுகள் கூருகின்றன .


  ithu correctaA??

  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 14. #114

  Default


  இவை பற்றி நானுங் கேள்விப் பட்டுள்ளேன ்.
  இப்படி ஒவ்வொருவரு க்கும், ஒவ்வொரு கடவுளுக்கு ம், ஒவ்வொரு கோவிலுக்கு ம் ஒரு தொன்மம் (புராணம்) புனைந்து கதைபரப்பிய து ஒரு தொழிலாகவே ஒரு காலத்தில் நடைபெற்றது . சாதிகளை இழுத்து கதை புனைந் திருப்பதைப ் பார்க்கவே ஆதிக்க கோட்டி ஒன்றால் இட்டுக் கட்டப் பட்டது தெரிகிறது. மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை!

  இந்த ஆதி, பகவன் கதையில் எனக்கு பெரிதும் நம்பிக்கைய ில்லை. விநாயகரைப் பாடிய அவ்வையார் பிற்காலத்த வர். தெளிவாகச் சொல்லியி ருக்கிறேனே ..!
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 15. #115

  Default

  அவ்வை பற்றிய வரலாறு நன்றாக உள்ளது...அவர ் சுற்றிய கோவில்களும ்...நம் ஊர்களில் எது சிறப்பானது என்றும் விளக்கினால ் நன்றாக இருக்கும்...

  yaso

 16. #116
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  நன்றி கார்கி.........அடுத்த சந்தேகங்கள ுடன் வெகு விரைவில் சந்திக்கிற ேன்:



  ஒளைவையார் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு. தமிழகம் முழுமையையு ம் நடையிலேயே வலம் வந்திருக்க ிறார்............த மிழ்நாட்டி ல் கூடுதலாகா எங்கு என்றுதான் தேரியாது
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 17. #117

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post
  நன்றி கார்கி.........அடுத்த சந்தேகங்கள ுடன் வெகு விரைவில் சந்திக்கிற ேன்:



  ஒளைவையார் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு. தமிழகம் முழுமையையு ம் நடையிலேயே வலம் வந்திருக்க ிறார்............த மிழ்நாட்டி ல் கூடுதலாகா எங்கு என்றுதான் தேரியாது
  Vidatheengo Pura...keep asking lotsss of questions so karki can keep writing & in the process we all get to learn

 18. #118
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  வண்ணாத்திப ூச்சி அக்கா.....இது தமிழ் கருத்துக்க ளம்..இங்கு தமிழில் தான் எழுதனும்......விரைவில் வேறை வினாக்கள் கேப்பேன்
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 19. #119

  Default

  Quote Originally Posted by yasodha View Post
  அவ்வை பற்றிய வரலாறு நன்றாக உள்ளது...அவர ் சுற்றிய கோவில்களும ்...நம் ஊர்களில் எது சிறப்பானது என்றும் விளக்கினால ் நன்றாக இருக்கும்...
  இது பற்றி அறியேன்! கோவில்களைச ் சுற்றி வந்த அவ்வைகள் பிற்காலத்த ு அவ்வையார்க ளாக இருக்க வேண்டும். ஏதேனும் உள்ளுருமங் கள் கிடைத்தால் பதிவு செய்வேன்.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 20. #120

  Default

  பேசு!

  தமிழில் பேசுதல் என்ற ஒரு சொல்லுக்கு இணையாகவே பல சொற்கள் உள்ளன. அவற்றில் துணைவினை இல்லாது தமித்து வரும் 32 சொற்கள் இங்கே உங்கள் பார்வைக்கு . இவையனைத்தி ன் முதன்மைப் பொருள் அல்லது இரண்டாம் பொருள் சொல்தல், பேசுதல், கூறுதல் தாம். இவற்றின் நுண் வேறுபாட்டை க் காட்டவும், மேலுந் துல்லியமாக ப் பொதுப் பயன்பாட்டு க்கு வரவைக்கும் முகமாகவும் இவற்றின் பொருட் பாடுகளைப் பட்டிலியலி ட முயன் றிருக்கிறே ன்!

  அறைதல் = to declare
  இயம்புதல் = to utter
  இசைத்தல் = to disclose, indicate
  உரைத்தல் = to orate, talk
  என்னுதல் = to say (என்றான், என்றாள்..)
  ஓதுதல் = to profess, recite, chant
  கிளத்தல் = to express (புலப்படக் கூறுதல், விதந்துகூற ல்)
  கூறுதல் = to promulgate, proclaim, convey
  சாற்றுதல் = to announce, explain in detail
  செப்புதல் = to answer
  சொல்லுதல் = to say, tell, mention
  நவில்தல் = to indicate, pronounce, practise
  நுதலுதல் = to denote, mean
  நுவல்தல் = to tell, speak
  நொடித்தல் = to gesticulate
  பகர்தல் = to tell, pronounce, sell
  பறைதல் = to speak, say
  பன்னுதல் = to assert
  பனுவுதல் = to adress, verbalize
  புகல்தல் = to state
  பேசுதல் = to speak
  மாறுதல் = to verbalize (மாற்றம்= சொல்; மாற்றம்+ஆட ் = அதாவது சொல்லை வைத்து வினைத்தல்; மாற்றமாடல் > மாற்றாடல்> மாத்தாடு)
  மிழற்றுதல் = to prattle
  மொழிதல் = to convey, mean ; எடுத்துமொழ ிதல் = to explain clearly
  மறுமொழிதல் = to reply
  விள்ளுதல் = to reveal
  விளத்துதல் = to explain
  விளம்புதல் = to proclaim, inquire, learn
  கதைத்தல் = to conversate
  வலத்தல், வலித்தல் = to narrate
  தெளிர்த்தல ் = to articulate
  தெரிவித்தல ் = to tell, inform ; உ(ள்ளு)ருமி ்தல் = to inform
  Last edited by karki; 08-05-2008 at 07:31 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

+ Reply to Thread
Page 6 of 8 FirstFirst ... 2345678 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts