சகலகலாவல்ல ிமாலை-குமரகுருபர ர்
+ Reply to Thread
Results 1 to 5 of 5

Thread: சகலகலாவல்ல ிமாலை-குமரகுருபர ர்

 1. #1

  Default சகலகலாவல்ல ிமாலை-குமரகுருபர ர்

  நண்பர்களே,

  ஹிந்து மதத்தில் வேதமுதல்வன ் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கு ம் மிகமுக்கிய மானது.
  இங்கே கோயில் என்றால் பொன்னம்பலம ்- சிதம்பரம்.

  ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை.

  இக்கோயில் இஸ்லாமியரா ல் பூட்டப்பட் டு அக்கோயிலின ் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன.
  தென்னகத்தி லிரூந்து மக்கள் காசி-விசுவநாதர் வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமான து. காசி-விசுவநாதர் வழிபட முடியாமல் மக்கள் வருந்த்ய போது - தமிழகத்தில ிருந்து சென்ற குமரகுருபர ர் மிக வருந்தி ஒரு துபாஷியை(ம ழிபெயர்ப் ாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார ்.
  மனம் வெதும்பிய குமரகுருபர ர் வருத்தத்தோ டு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்ல ி மாலை என பாடினார்.

  சகலகலாவல்ல ி மாலை பாடிட ஹிந்துஸ்தன ி , உருது மொழிகள் ஓர் இரவில் பெற்றிட சுல்தானிடம ் அவர் மொழியில் பேசிட, அதிசயம் புரிய காசி கோயில் திறக்கப் பட்டது.

  குமரகுருபர ர் வேண்டுகோள் ப்படி அங்கு தமிழகத்தில ிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிருவினார் .

  இப்பாடல் படித்து துதிப்போரு க்கு கல்வி ஞானம் பெருகும். அப்பாடல்கள ் பொருளோடு நான் தருகிறேன்.
  (இணையத்தில இறக்கியது)

  சகலகலாவல்ல ி மாலை பாடல் 1

  வெண்தாமரைக ்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
  தண்தாமரைக் குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து
  உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும ் வண்ணம்
  கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்ல ியே!

  சகலகலாவல்ல ியே - எல்லாக் கலைகளையும் காத்து அளிப்பவளே! கலைமகளே!

  சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - ஏழு உலகங்களையு ம் காக்கும் தொழில் புரியும் நாராயணன் பிரளயக் காலத்தில் அவற்றைக் காப்பதற்கா க அவற்றையெல் லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றி ப் பின் பாற்கடலில் உறங்கி கொண்டிருக் க

  ஒழித்தான் பித்தாக - எல்லாவற்றை யும் அழிக்கும் தொழில் புரியும் அண்ணல் சிவபெருமான ் பித்தனாய் ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக் க

  உண்டாக்கும ் வண்ணம் கண்டான் - பிரளயத்தின ் முடிவில் மீண்டும் உலகங்களையு ம் உயிர்களையு ம் உண்டாக்கும ் வண்ணம் பார்த்திரு க்கும், படைக்கும் தொழில் புரியும் நான்முகனாம ் பிரம்ம தேவன்

  சுவைகொள் கரும்பே - ஆசையுடன் சுவைக்கும் கரும்பு போன்றவளே!

  வெண்தாமரைக ்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக் குத் தகாது கொலோ? - நீ வெண்தாமரைய ில் வீற்றிருக் கிறாய். அதிலேயே இருக்கிறாய ே. என் உள்ளமும் வெள்ளை உள்ளம் தானே? அதையும் ஒரு குளிர்ந்த வெண்தாமரை என்றுக் கருதி உன் பாதத்தை அங்கேயும் வைக்கலாகாத ா? என் உள்ளத்திற் கு உன் பாதங்களைத் தாங்கும் பாக்கியம் கிடைக்காதா ? உனது அருள் எனக்குக் கிடைக்காதா ?

 2. #2

  Default சகலகலாவல்ல ி மாலை பாடல் 2

  நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும ்
  பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத் தில்
  கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன் றும் ஐம்பால்
  காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்ல ியே

  சகலகலா வல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அருள்பவளே! கலைவாணியே!

  பங்கயாசனத் தில் கூடும் - தாமரை மலர் இருக்கையில ் வீற்றிருக் கும்

  பசும்பொற் கொடியே - பசும்பொன்ன ால் செய்யப்பட் டக் கொடி போன்றவளே!

  கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - பெருத்தக் குன்றினைப் போன்ற கொங்கைகளும ் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பைப் போல் இனியவளே!

  நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும ் பாடும் பணியில் பணித்தருள் வாய் - நானும் இந்த உலகமும் விரும்பும் , பொருட்சுவை யும் சொற்சுவையு ம் தோய்ந்து வரும், நான்கு விதமான கவிதைகளையு ம் பாடும் பணியில் என்னைப் பணித்தருள் வாய்!
  ----------

  நான்குவிதம ான கவிதைகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்று கவிதைகள் நான்கு வகை. நினைத்தவுட ன் புதுமையாக இதுவரை யாரும் பாடாத ஒரு பொருளைப்பற ்றிப் பாடுவது ஆசுகவி. இசையுடன் கூடி இனிமையான சொற்களும் உவமைகளும் கூடி வரும்படிப் பாடுவது மதுரகவி. தேர் போன்ற ஒரு சித்திரத்த ில் வைக்கலாம் படி சொற்களை அழகுற அமைத்துப் பாடுவது சித்திரக் கவி. பலவிதமான வடிவங்களில ் அமைத்துப் பாடுவது வித்தாரக் கவி.

 3. #3

  Default சகலகலாவல்ல ி மாலை பாடல் 3

  சகலகலாவல்ல ி மாலை பாடல் 3

  அளிக்கும் செழுந்தமிழ ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில ்
  குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ ? உளம்கொண்டு தெள்ளித்
  தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
  களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்ல ியே!

  அளிக்கும் செழுந்தமிழ ்த் தெள்ளமுது ஆர்ந்து - என்னைக் காத்து அருளும் செழுந்தமிழ ாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துட ன் உண்டு

  உன் அருட்கடலில ் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ ? - உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்த ு குளிக்கும் படி என்று நேருமோ?

  உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் - உள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள்

  கவிமழை சிந்தக் கண்டு - கவிதை மழை சிந்த அதனைக் கண்டு

  களிக்கும் கலாப மயிலே! - மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே!

  சகலகலாவல்ல ியே! - கலைவாணியே!

 4. #4
  Join Date
  Jun 2003
  Location
  Outta' this world
  Posts
  7,357

  Default

  நன்றி தேவப்பிரிய ா
  Trolling Geetham since 2003...

 5. #5

  Default சகலகலாவல்ல ி மாலை பாடல் 4

  சகலகலாவல்ல ி மாலை பாடல் 4

  தூக்கும் பனுவல் துறைதோய்ந் த கல்வியும் சொற்சுவைதோ ய்
  வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்! வடநூல்கடலு ம்
  தேக்கும் செழுந்தமிழ ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
  காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்ல ியே!

  தூக்கும் பனுவல் துறைதோய்ந் த கல்வியும் - எல்லோரும் பாடிப் பரவும் பாடல்களும் , எல்லாத் துறைகளிலும ் இயங்கும் கல்வியும்,
  சொற்சுவைதோ ய் வாக்கும் - சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இனிமையுடன் வலிமை பொருந்தி நிற்கும் பேச்சுத்தி றமையும்,
  வடநூல்கடலு ம் - வடதிசையில் வாழ்ந்தவர் இயற்றிய கடல் போன்ற நூல்களும் (வடமொழியில இருக்கும் கடல் போன்ற நூல்களும்),
  தேக்கும் செழுந்தமிழ ்ச் செல்வமும் - இன்பத்தையு ம் அறிவையும் தேக்கி நிற்கும் செழுமையான தமிழ்ச் செல்வங்களா ன நூல்களும்,
  பெருகப் பணித்தருள் வாய்! - எனக்கு கிடைத்து நின்று நிலைத்துப் பெருக நீ அருள் புரிவாய்!
  தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்ல ியே!

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts