சுவையாரம்
+ Reply to Thread
Results 1 to 18 of 18

Thread: சுவையாரம்

 1. #1

  Default சுவையாரம்

  சுவையாரமான சிறுகட்டுர ை ஒன்றின் மொழிபெயர்ப ்பு


  தாவீது குரோனென்பெ ர்க்கு Crash, eXistenZ, The Fly போன்ற அசர வைக்கும் சில்லூட்டி களின்(thrillers) நெறியாள்கை யர்(director) , தளத்தில்(set) அடிக்கடி ஒரு குட்டித் தூக்கம் போடுவார். தான் கனவிற் கண்ட உருக் களை, படிமங்களைத ் திரைப்படக் காட்சிகளாய ்ப் பின்னர் உருமாற்று வாராம்.

  நான் ஒரு கனாக் கண்டேன் : நெறியாள்கை யர் தாவீது குரோனென்பெ ர்க்கு (David Cronenberg)

  திரைப்படங் கள் உருவான பின்னர் மாந்தர் வேறு மாதிரிக் கனாக் காண்கிறர். திரைப்படம் _ பார்ப்போரா ய் காலம், இடம் ஊடாய்ப் பயணித்தலைய நாம் பழக்கப் படுத்தப் பட்டுள்ளோம ். முன்பு அப்படி இருக்க வில்லை. திரைப் படங்களுக்க ு - விதப்பாய்(es pecially) உள்ளமையாக(re alistic) எடுக்கப்பட ்டவை என்று காட்டிக் கொண்டாலுங் கூட-கனவை ஒத்த பந்தம்/ செயற்பாடு (function) தாம். கனவுகளைச் செய்தொடையா க (synthetically) உருவாக்கிக ் கொள்கிறோம் . நம் நனவு வாழ்க்கையி லே அவற்றை கட்டியமைக் கிறோம். அதுபோல் கனவுகளின் ஏரணத்திற்(logic) கேற்பவே திரைப்படங் களும் செயற்படுகி ன்றன. திரைப்படங் கள் 'நனவுக் கனவுகள்' அல்லது விழிப்புநி லையிற் காணும் கனாக்கள்.

  நான் Scanners எனும் தலைப்பில் ஓர் திரைப்படம் எடுத்திருந ்தேன். அதில் ஒருவன் மற்ற மாந்தரின் மனதிற் தோன்றும் எண்ணங்களைக ் குரல்களாய் த் தன் தலைக்குள் கேட்கும் தொலையுணர் (telepathic) திறன் கொண்டிருக் கிறான். அக் குரல்களில் சிலவற்றை வெளியேற்ற, அவன் தன் மூளையில் ஓட்டை ஒன்றைத் துளைக்கிறா ன். இம் மாதிரி வேற்று அ. விந்தையான ஏடல்கள் (ideas), சிந்தனைகள் எங்கிருந்த ு தோன்றின,என அந்தக் காலத்தில் பலர் என்னிடங் கேட்டபோது, நான் சொன்னது:
  "இதைக் கற்பனை செய்து பாருங்கள்.., நீங்கள் உங்கள் மூளையில் ஓர் ஓட்டை போட்டு வைக்கிறீர் கள், பின்னர் திரையரங் கொன்றில் தூக்கம் போடுகிறீர் கள், உங்கள் மூளை_ஓட்டை வழி உங்கள் கனவுகள் எதிரிலிருக ்கும் பெருந்திரை யில் புறத்திடப் பட்டால் (to project), அங்கே என்ன தெரிந்திரு க் குமென எண்ணுகிறீர ்கள்...?"

  எண்ணங்களுக ்கு, பொருட்ளுக் கு ஒரு பூதிகைத்(physi cal) தோற்றத்தைக ் கொடுக்கவேண ்டி ஒருவன் அவற்றைப் பற்றிக் கனவு காண வேண்டும். இவ்வகையிற் தான் பெரும்பாலு ம் நுட்பியல்(technology) உருவாகிறது . தொலைக்காட் சிக் கருவிகள், அவை கண்டுபிடிக ்கப் படுமுன்னரே கற் பனையில் உருப் பெற்றிருந் தன. அக் காலத்தில் செய்மதிகளூ டாக குமுனித்தல ும்(communicate) ஓர் புனைவாகவே (fiction) இருந்தது. அறிவியற் புனைகதை(science fiction) யாத்தோர்(author) ஆர்தர் சி.கிளார்க கு அவை கண்டுபிடிக ்கப் பட 40 ஆண்டுகள் முன்னரே, செய்மதிகள் பற்றி விவரித்தி ருந்தார். வெறும் விலங்குகளா ய் இருந்திருந ்தால் எப்போதும் நாம் பெற்றிருக் க முடியா, பெரும் ஆற்றலை நுட்பியல் மூலமாக இப்போது பெற்றிருக் கிறோம். நாம் உச்ச விலங்குகள் (Superanimals).
  விகுத்தோரி ய(Victorian) காலகட்டத்த ில் பிற்காலத்த ில் எப்போதாவது நாம் தேவதூதர்கள ாய்(angels) மாற்றமடைவோ ம் என நினைத்திரு ந்தனர். தேவதூதர்கள ் நான் நம்பாப் புலனமாதலால ்,எம் கடைசி இலக்கு, அனைத்திற்க ும் மேலாக வளர்ச்சியட ைந்த ஆட்களாய் மாறுவது தான் என எண்ணுகிறேன ், ஒருவேளை அந்நிலையை இப்போது நாம் அடைந்து கூட விட்டிருக் கலாம்.

  நம் நுட்பியல்(te chnology) என்பது கனவுநிலையி ன் பூதிகை ஒக்கவலம் (physical equivalence) எனவே எண்ணுகிறேன ். இது கலை, மதநெறி எல்லாவற்றி ற்கும் பொருந்தும் . தேவாலயஞ் சென்றால், அங்கே நறுமணம், ஒளி, ஓசைகள் மற்றும் எதிரொலிகள் என எம்மை ஒருவகைக் கனவுநிலைக் குள் செலுத்துபவ ை தாம். இப்போது அவற்றை எவரும் வீட்டில் ஓர் கணினி, தொலைக் காட்சி, அடுகுக்(audio) கருவிகள் போன்றவற்றா ல் அமைந்தாடிட (imitate) முடியும். கனவுநிலைகள ை உண்டாக்கும ் நுட்பங்கள் (technics) நம்மிடம் உண்டு. ஒருவேளை அதனால் தான் எம் முன்னிருந் த மக்களை விட நாம் நம் வாழ்க்கையி ன் பெரும் பகுதியை கனவில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம் போலும்.
  Last edited by karki; 10-05-2008 at 10:00 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 2. #2

  Default

  பின்னர் படம் எடுக்கும் நேரங்களிற் எப்போதோ தூங்கத் தொடங்கினேன ். வாய்ப்புக் கிடைத்தால் தளத்தை விட்டு வெளியேறி, எங்காவது ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிடு வேன். எப்படி அடுத்த காட்சியை எடுப்ப தென்பதைப் பற்றியே அடிக்கடி கனவிலாழ்வே ன். கனவில் மிதந்தலைய எனது அறிநிலை ஆவியை விட்டகல வேண்டும். இந் நிலையில் (state) எந்தக் கோணம், எந்தச் சீர்மை, பாங்கு, எந்த ஒளி வில்லையைப் (lens) பயனாக்க வேண்டும் போன்ற விதயங்கள் எனக்குத் தெளிவாகும் . எல்லா படைப்பு சார் செயலும் ஒருவித விழிநிலைக் கனவே. ஆகையால் தன்னு ள்ளிருந்து முதலில் வெளியேறிக் கொள்ள வேண்டும். ஒவ்வோர் படமும் நெற்றி ஓட்டை ஊடான ஓர் புறத்திட்ட ம் (projection) போன்றதே.

  என் படங்களில் ஒன்று மட்டுமே நேரடியாய் ஒரு கனவின் தாக்கத் திலிருந்து உருவானது. நான் ஒரு பெண்ணுடன் கட்டிலிற் கிடப்பதாயு ம், திரும்பிப் படுக்கையில ் ஓர் பெரும் கருஞ்சிலந் தி அவள் வாயிலிருந் து ஊர்ந்து வெளியே சென்றதாயுங ் கனாக் கண்டேன். இவ் அடிநாதம் என்னவோ பெரிதாய்த் திகிலூட்டு வதாய் இருக்கவில் லை. அந்தப் பெண் அமைதியாய் ஆழாமாய்த் தூங்கிக் கொண்டிருந் தாள். நானோ வியந்து போய்க் கிடந்தேன். அந்தச் சிலந்தி எங்கிருந்த ு வந்தது? அவளை இந்த சிலந்தியா கட்டுறுத்த ி யிருந்தது (control)? இன்னும் வேறு சிலந்திகள் அவளுள் இருந்தனவா? அவள் அதைப் பற்றி அறிந்திருப ்பாளா..? அச் சிலந்தியே Shivers-இல் முகமையான (முக்கியமான) படிமம் ஆனது.

  ஒரு திரைப்படத் தை உருவாக்குவ து ஓர் சிறு உலகை/ கோள் ஒன்றை படைப்பது போன்றது. அதன் அகக் கட்டகம் (அ. பொழிலமைவு- ecosystem) காலநிலை(weather) , உறுப்புடை உள்ளமை (organic reality) என எல்லாவற்றை யுமே உருவாக்குக ிறோம். ஒவ்வோர் படத்திலும் பணிபுரிவோர ், தாம் இல்லாத ஒன்றைப் படைக்கிறோம ் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். கடைசியில் அப் படைப்பு வெறுமனே திரையில் ஓடும் வண்ணங்களால ் ஆனதாகிவிடு கிறது. எங்ஙனம் இவ் வண்ணங்கள் மாந்தரை உணர்வு பூருவமாய் தொடுகின்றன ? ஒருகால் அவர் வாழ்வைக் கூட மாற்று கின்றன என்றால்...? கலை மீதான நம்பிக்கை மூலம் தான். இந்த நம்பிக்கை மதம் சார்ந்ததல் ல. அதைப்போல் கேள்விகளுக ்கு அப்பாற் பட்டதல்ல இது. மாறாக கலை மீதான நம்பிக்கை அதிகம் கேள்விகள் கேட்கவே தூண்டுகிறத ு. கலை என்பது இவ்வண்டத்த ில் வதியும் வேறோர் உயிரியும் கொண்டிருக் காத ஓரிகையான (unique) பெறுபேறு/ வித்தகம். அதனாற் தான் மற்ற எதையும் விடக் கலை மக்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்கிறேன்.


  மூலம் : காலம், செருமானியத ் தாளிகையின் இணையப் பதிப்பு
  Last edited by karki; 05-20-2008 at 07:29 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #3

  Default

  Cronenberg அவர்களின் விசிறியோ..

  கொஞ்சம் வித்தியாசம ான மனிதர்தான் .. என்னோட நேரம் கொஞ்ச நாளா படம் பார்க்க பொழுதுஇல்ல ை.. அதான் இவரோட ஒரு படம் கூட பார்த்தது இல்லை.. Crash பார்கனும்ன ்னு இருந்தேன்..

  ஒரு நாள் ...

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 4. #4

  Default

  விலையேற்றம ் ஏன்?

  சவுதிய பாலை மணல் சிறு பொருட்களுக ்கான இடமல்ல. அங்கே பன்னிரு தனிக் குழாய்கள் அருகருகேயு ம் மேலுங்கீழு மாயும் அரக்கப் புழம்பு வரிசைகளாய் (pipelines) தொடுவானம் வரை நீண்டு, நினைவிடங்க ளாக மாறிவிட்ட கோத்தியத் தேவாலயங்கள ைப் போல் வானில் மேலோங்கி யிருக்கின் றன, தட்டையான கரையின் முன்னுள்ள தீவொன்றில் பென்னம்பெர ிய எரிபொருட் தாங்கல்கள் திரண்டிரு க்கின்றன. வளைகுடாவில ுள்ள 'இராசு தனுரா' ஒரு பெரு நகரம், மாந்தருக்க ல்ல, கச்சாநெய்க ்கு. இங்கு தான் உலகின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோவின் அரையம் (இராச்சியம ) இருக்கிறது . இந்தப் பகுதியிற் தான் உலகின் எஞ்சிய நிலநெய் இருப்புகளி ன் நான்கில் ஒரு பங்கு இருக்கிறது . இதன் உரிமையாளர் , இப்போது தம் 75 ஆண்டுகால இருப்பைக் கொண்டாடும்
  சவுதிய அரச நிறுவனம்.

  சவுதி அரம்கோவுக் கும் ஓர் நிறுவிய ஆண்டு உண்டு, அது முழு மேற்குலகைய ே அச்சத்திற் தள்ளிய ஆண்டு. 1973, சவுதி அரம்கோ 40 ஆன போது, சவுதி அரசாங்க ஆணையின் பேரில் எண்ணெய்ப் புதுக்கத்த ை / விளைப்பை நிறுத்தியத ு. இசுரவேலை அரவணைக்கும ் மேற்குலகைத ் தண்டிப்பதற ்காய் மற்றைய நாடுகளும் இதையே கைக்கொண்டன ர். எண்ணெய் இருப்பு குறைந்தது, விலையோ எகிறியது, செருமனி போன்ற நாடுகளில் சீருந்து_இல்லா_ஞாயிறுகள் போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப் பட்டன, உலகப் பொருளாதாரம ் சிக்கலுக்க ுள் வீழ்ந்தது. நிலநெய் ஆய்தம் ஆனது. எண்ணெய்ச் சேக்கு மேற்கைப் பயமுறுத்து ம் படிமமாக ஆனார்.

  இப்போதோ மீண்டும் எண்ணெய்வில ை உச்சியைத் தொட்டு மீண்டும் உலகப் பொருளாதாரத ்தை அச்சுறுத்த ிக் கொண்டிருக் கிறது. இன்று சவுதியர் எண்ணுவதென் ன, அவர் வேண்டுவது தானென்ன?
  எண்ணெய்நகர ் இராசு தனுரா ஒரு தனி உலகம். நிறைய மின்னணுக் கடவு அட்டைகள் வைத்திருக் கும் வழிகாட்டி அ. 'அழைத்து_செல்லி'களின் உதவியின்றி உள்ளே நுழைவது சரவலானது(ச ரமம்). உள்நுழை ந்தாலோ, தகரித் தடைகள் (tank traps), முட்கம்பிக ் காடுகள், மீளிழு மாழைத்தடைக ள், காவற் கோபுரங்கள் , மாகனைத் துமுக்கிகள ் (machine guns) முளைத்திரு க்கும் கவச ஊர்திகள் கொண்ட பாதைகளைத் தாண்ட நேரிடும். தவிர மேலே உலங்கு வானூர்திகள ் / சுரினைகள் (helicopters) வேறு வட்டமிட்ட வண்ணமிருக் கும். இந்த நடபடிக்கைக ள், முறைமைகள் எல்லாம் மிகையானதாக த் தோன்றலாம், ஆனால் இவை தேவையில்லா தவை அல்ல. ஏனெனில் கடந்த ஆண்டுகளில் பலமுறை திகையூட்டி கள் (terrorists)/ பயங்கரவாதி கள் அந் நகரை எரியூட்ட முயற்சித் திருந்தனர் .
  Last edited by karki; 07-12-2008 at 10:52 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 5. #5

  Default

  2006-இன் துவக்கத்தி ல் முன்பாக தற்கொலைகுண ்டு தாங்கியொரு வர் Abqaiq விள்ளெடுப் பு ஆலை(refinery) முன் அடுத்து வரும் அல்-கெய்தா ஆளுக்கு வழியைத் திறந்து வைக்கத் தன்னை வெடிக்க வைத்திருக் கிறார். அடுத்தவர் சன்னமழையில ் அடுத்த காவற் தடையகத்தில ் மாண்டார்.

  ஆகையாற் சில ஆண்டுகள் முன்பாக சவுதி போர்ப்படை, தேசிய பாதுகாப்பு ப்படை தவிர்த்து மூன்றாவது அரணம் (இராணுவம்) ஒன்றைக் கட்டுயெழுப ்பத் தொடங்கியது . இந்தப் பத்தாண்டு (தசாப்த) முடிவில் 35 000 வரையிலானோர ் செய்மதி உதவியுடனான சீரொளிச்(laser) சுடு கலன்கள், வழியறிகணைக ள் (guided missiles) கொண்டு இவ்வெண்ணெய ்க் கட்டுமானங் களை எல்லா வகைத் தாக்குதல் களிலிருமிர ுந்து காக்க அமர்த்தப் பட்டிருப்ப ர். எண்ணெய் பாதுகாப்பா ய் உலகச்சந்தை யை எட்டி அரையத்தின் (இராச்சியத தின்) கல்லாக்களை நிரப்ப வைக்கும் பணிக்கு இன்று சவுதி அரம்கோவிற் குரிய நிலத்தில் 5000க்கும் அதிகமானோர் உளர்.

  சவுதி அரம்கோ, இது தான் அரச குடும்பம் அதன் ஆயிரமாயிரம ் அரசிளங்கும ரரோடு அள்ளிப் பருகும், நாட்டின் பொக்கீட்டு க்கு (budget) ஊட்டமளிக்க ும், 27 இலக்கம் சவுதியருக் கு செழிப்பான வாழ்வைப் பரிசளித் திருக்கும் , கிணறு.
  இந்நாட்டின ் 98 விழுக்காட் டு எண்ணெய்க் கட்டுமானங் கள் இந் நிறுவன த்துக்கு உரித்தானவை யே. எங்கே, எப்போது, எந்தப் பணம், யாரிடமி ருந்து, யாருக்குச் செல்கிறது, என்பதை இங்கே சரியாய்ச் சொல்லிவிட முடியாது. முதற் பகிர்வுரிம ை அரச குடும்பத்த ிற்கு. பொக்கீட்டு உரிமை கொண்ட நாடாளுமன்ற ம் இங்கில்லை. எப்படியி ருப்பினும் கலனுக்கு(barrel) 130 வெள்ளி (dollar) என்றாயிருக ்கும் எண்ணெய்வில ை அனைவருக்கு ம் போதுமானது அங்கே.

  அப்படியெனி ற் கொண்டாட்டந ் தானே? இல்லை, ஆனால் இப்பிராகிம ் அல்-முகன்னாவோ கவலையை வெளிப் படுத்துகிற ார். "எமக்கு இவ் வெண்ணெய் விலையேற்றம ் உவப்பைத் தரவில்லை" என்கிறார் எண்ணெய் வளத்துறை அமைச்சரின் தலைமை ஆலோசகரும்
  சவுதி அரம்கோவின் எரிபொருட் தடந்தகையரு மான (strategist) இவர். எழுபதுகளில ் எண்ணெய்ப் பிரச்சினை வந்தபோது எண்ணெய்க் கேட்பு(demand) குறைந்து போனதைப் போல் இப்போது ஆகிவிடுமென அச்சமுறுகி றார். அப்போது துடிம நாடுகள் (industrial countries) புது எண்ணெய் மூலங்களை தம் வீட்டுக் கதவருகேயே கண்டடைந்தன ர்,
  அணு ஆற்றுலைகளை உருவாக்கின ர். ஆகையாற் பணவீக்கத்த ின் போது எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்த ினர். அதிலிருந்த ு சவுதியருக் கு எண்ணெய் விலை சடுதியாக கிடுகிடுவெ ன ஏறுவது அவ்வளவு உவப்பானதாக இருப்பதில் லை.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 6. #6

  Default

  இந்த எண்ணெய் விலைக்கும் அடிப்படைச் சந்தைத் தரவுகளுக்க ும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் முகன்னா. உலகின் பெரும் எண்ணெய்ப் புதுக்கர் / விளைப்பாளர ுக்கே மலிவான எண்ணெய் விலை தான் உகப்பாக இருக்குதென ்றால் , இந்த விலையேற்றத ்தின் பின்னணியில ் உள்ளோர் யார்?

  அதன் பின்னால் இன்று இரு சிந்தனை முனைகள் சண்டையிட்ட வண்ண முள்ளன என்கிறார் நம் எண்ணெய் தடந்தகையர் . காட்டுக்கு சவுதியரோ வீழ்ச்சியட ைந்த வெள்ளியை நோக்கி ஒரு விரலையும் மறுவிரலைத் தம்மை நோக்கியுங் காட்டுகின் றனர். தம்மால் இக்கால கட்டங்களில ் எண்ணெய் செகுதையில் (oil sector) செய்யப் பட்ட முதலீடு மிகக் குறைவானதென ்றும்... ஆகவே அதன் முடிவு, முகன்னாவின ் சொற்களிற் சொல்வதென்ற ால் " அதனால் நாம் பெருத்த சந்தைக்கும ிழாகி (financial bubble) விட்ட தற்காலமான பிரச்சினை ஒன்றுக்கு முகங் கொடுக்க வேண்டியுள் ளதென நம்புகிறோம ்".

  மற்ற முனையோ, எண்ணெய்க் காலகட்டத்த ின் முடிவு நெருங்கி விட்டதாக எண்ணுகிறது . இரு ஆண்டுகளாகவ ே, கூடிவரும் கேட்பு(demand) விலையை உச்சத்திற் கு எகிற வைக்கையில் , வழங்கலோ உலகளவில் குறையத் தொடங்கிவிட ்டது. இம் முனையைச் சேர்ந்த சிலரோ இன்னும் ஓரடி மேலே போய், சவுதி அரம்கோவிடம ் அவர்கள் சொல்வதைப் போல் உலகின் எண்ணெய்ச் சேர்வின் அரைபங்கு கூடக் கிடையாது என நம்புகின்ற னர்.

  இதற்கு முகன்னாவின ் மறுமொழி: நிச்சயமாக என்றாவது எண்ணெய் முழுதும் இல்லாது போகும் எனப் புன்னகைத்த ுக் கொண்டே சொல்கிறார் .
  ஆனால் அது இன்னும் நூறு ஆண்டுகளிற் தான் நடக்கும். அதற்குள் சவுதி அரம்கோ தனது பெரு வைப்பீடுகள ில் புது நுட்பியல் உதவியுடன் இன்னுஞ் சீராகப் பேறடைந் திருக்கும் . குறிப்பாக கவார்(Ghawar) பெருங்களம் சபானியா(Safaniya) தூரக்கரை போன்ற இடங்களில்... .
  இப்போது மாந்த இனம் மாவாரிகளில ்(oceans) நெய்யெடுக் கும் தொடக்கத்தி ல் இருப்பினும ், "உலக நெய்ச்சேர் வை(oil reserve) இன்னும் வளரும், ஆகையால் விலைகளும் மீண்டுங் குறையலாம்" என்கிறார் முகன்னா.

  (தொடரும்....)

  மூலம்: காலம் செருமானியத ் தாளிகை, இணையப் பதிப்பு.... தமிழில் அடியேன்!
  Last edited by karki; 07-13-2008 at 08:48 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 7. #7

  Default

  ஏற்கனவே பலமுறை கிழிபட்ட இந்தியா டுடேயின் இந்துத்துவ முகமூடி, குமுகநீதிக ் காவலர் வி.பி.சிங்க ன் மறைவை ஒட்டி மறுபடியும் கிழி பட்டிருக்க ிறது. இதுபற்றி கீற்றில் வெளியான ஆக்கம்:

  இந்தா பிடியுங்கள ் இந்தியா டுடே (கழிப்பறைய ல் தண்ணீரை மிச்சம் பிடிக்க)
  - ஆதவன் தீட்சண்யா


  அஞ்சலி என்ற பெயரில் 'இந்தியா டுடே' கீழ்க்கண்ட கட்டுரையைப ் பிரசுரித் திருக்கிறத ு

  அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

  மண்டல் நாயகனான இவர் இந்தியாவின ் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

  அலகாபாத்தி ல் கங்கைக்கரை யில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தை ப் புரி்ந்துக ொள்ள கடந்த நூற்றாண்டி ன் கடைசி காலங்களில் கொழுந்து விட்டெரிந் த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

  பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கு ம் எதிர்வினைய ாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழ க மாணவர் ராஜீவ் கோஸ்வாமியி ன் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட ்டது.

  அரசு வேலைகளில் இதர பிற்படுத்த ப்பட்ட பிரிவினருக ்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்ட ை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த ுவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்ட து ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைத ான்; வெகுஜனங்கள ை மயக்குவதற் கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்செ ன்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத் தி, தகுதியை புறந்தள்ளி ய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார் .
  .............................. .............................. .............
  Last edited by karki; 12-10-2008 at 07:59 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 8. #8

  Default

  இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத் திற்கு எதிர்வினைய ாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப் பாசிரியருக ்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட் டது நினைவிருக் கிறதா? நல்லமாட்டு க்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவத ற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும ் அருகதையற்ற தாய் வந்து கொண்டிருக் கிறது.

  இவ்விதழின் கட்டுரையாள ர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்த ைக் குடித்துவி ட்டு எழுத உட்காருவார ்கள் போலும், இந்தியாவில ் நடக்கும் எதுவுமே அவர்களுக்க ு உவப் பாயிருப்பத ில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவ ப் பாரு, அவுத்துப்ப ோட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும ் எழுதிக்கு மிப்பார்கள ். முதலாளித்த ுவ லாபவெறிக்க ுத் தடையாக இருக்கிற சட்டதிட்டங ்களை உடைத்து நொறுக்கவேண ்டும், அரசியல் பொருளாதாரத ் தளங்களில் நிலவும் கட்டு ப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும ் என்பார்கள் . அதற்கிசைவா ன நுகர்வுவெற ியை உருவாக்க பக்கம் பக்கமாக எழுதுவார்க ள். அதேநேரத்தி ல் பண்பாட்டுத ் தளத்தில் நிலவும் கட்டுப் பாடுகளாலும ் பழமை வாதத்தாலும ் சிக்கித் திணறிக் கொண்டிருக் கும் சமூகத்தை விடுவிக்கு ம் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல ் தெரிந்தால் இந்தியாவின ் மரபுக்கும் பாரம் பரியத்திற் கும் ஆபத்து வந்துவிட்ட தாக அலறிக் கொதிப்பார் கள். ஏகாதி பத்தியத்தி ற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவு ம் சாதியத்தின ் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப் பட்டிருக்க ிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளி ல் அவ்வப்போது கருத்துக் கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்கு களை அவிழ்த்து விடுவார்கள ்.

  பத்திரிகைச ் சுதந்திரம் என்ற போர்வைக்கு ள் ஒளிந்துகொண ்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்க ள் தாழ்த்தப்ப ட்ட, பிற்படுத்த ப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை க்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத் தான் நோக்கமாகக் கொண்டிருக் கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும ் கருத்தியல் வன்முறையின ் கெடுவிளைவு களை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந ்தும் நம்மால் உணரமுடியும ். இங்குள்ள சிறுபான்மை யினர் அனைவரையும் தேசவிரோதிக ளாக- தீவிரவாதிக ளாக சித்தரிக்க ும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில ் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானத ல்ல.

  மீதி படிக்க கீற்றுக்கு ச் செல்லவும்...
  http://www.keetru.com/literature/essays/aadhavan_18.php
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 9. #9

  Default

  மாவினங்களை ப் பற்றிப் பேசுவதெப்ப டி - உம்பர்ட்டோ எக்கோ

  - தமிழில் கார்க்கி


  நடுவப் பூங்கா (Central Park). விலங்குக் காட்சியகம் . துருவக் கரடிகளின் தாங்கலுக்க ு(tank) அருகே சில குட்டன்கள விளையாடிக் கொண்டி ருக்கின்றன ர். ஒருவன், மற்றோரை அத் தாங்கலுட் குதித்து கரடிகளின் அருகே நீந்த வெல்விளி (challenge) விடுக்கிறா ன், அவர் உட்குதிப்ப தை வலுவந்தமாக ்க வெல்விளி _விடுத்தோன ஏனையோரின் ஆடைகளை எடுத்து ஒளித்து விடுகிறான் . நிம்மதியாக அயர்ந்து போய்க் கிடக்கும் பெரும் ஆண் கரடியைத் தாண்டிக் குதித்து நீரைத் தெறிக்கின் றனர், அதை அவர் சீண்டிய போது எரிச்சலுற் று, ஒரு அறைவிடுகிற து, ஆங்காங்கே ஒருசில துண்டுகளை விட்டு இரு குட்டன்களை ச் சாப்பிடுகி றது அல்லது குதறியெடுக ்கிறது. காவல் துறை விரைவாக அவ்விடத்து க்கு வருகிறது, ஏன் மேயர் கூட வருகிறார். பலரும் இது அதன் தவறல்ல என ஏற்றுக் கொண்டிருந் துங் கூட, அக்கரடி கொல்லப் பட வேண்டியதா இல்லையா என வாதங்கள், இட்டீடுகள் கிளம்புகின ்றன. உளக்கிளர் கட்டுரைகள் சில அச்சு மிடையங்களி ல் (press) வருகின்றன. இடைவெட்டாக (co-incidentally) அப் பையன்கள் Hispanic பெயரைக் கொண்டிருந் திருக்கின் றனர். புவர்த்தோ-ரிக்கர்கள் , சிலபோது கருப்பாக இருந்திருக ்கக் கூடும், ஒருவேளை ஊருக்குப் புதிதாக, எப்படியேனு ம், கூட்டாகச் சுற்றித் திரியும் எல்லா சேரிச்சிறா ரைப் போலவும் திடாரிக (தைரியம்) வீரச்செயல் களை பழக்கமாகக் கொண்டோராக இருந்திருக ்கக் கூடும்.

  எல்லா வேறுபட்ட இடைப்பரட்ட ுகளும் (various interpretations) -கடுமையானதா கவே- பின் தொடர்ந்தன. குறைகாணும் இப்படியான மறுவினை எல்லா இடத்திலும்- குறைந்த பக்கம் உரையாடல்கள ில்- பரவியிருக் கிறது: ஒரு கரடியுடன் மோதுமளவிற் கு மடத்தனமாக இருந்திருப ்பார் களென்றால், இது இயற்கைத் தெரிவு. அவர்களுக்க ு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத் திருக்கிறத ு! ஐந்தகவை யோனாயிருந் த போது, கரடித் தாங்கலுள் குதிக்க கூடாதென்ற அறிவெனக் கிருந்தது. குமுகாய இடைப்பரட்ட ு (social interpretation) இப்படியாக: ஏழ்மைப் பட்ட பைதிரங்கள் , போதாத கல்வி, சிந்தியாது உந்துதலுக் கு ஏற்ப செயற்படும் சார்- பாட்டாளிப் போக்கு (sub-proletarian). என்னய்யா இது, போதாத கல்வி அது இது என.. மாஏழைச் சிறார் கூட தொலைக் காட்சி பார்க்கிறா ர்கள் அல்லது குறைந்த பக்கம் ஒரு பாடப் பொத்தகத்தி ல் மாந்தரைக் குதறும் கரடிகள், இதற்காய் அவற்றினைக் கொல்லும் வேட்டைக் காரர்கள் பற்றியெல்ல ாம் படித்திருப ்பர்.

  இந்த இடத்தில், அப் பையன்கள் பள்ளி செல்லும் அல்லது தொ.கா. பார்த்திரு க்கும் காரணத்தாலோ இதைச் செய்யத் துணியாதிரு ந்தால் தான் நான் அதிசெய்யப் பட்டிருப்ப ேன். பள்ளிகளிலு ம், வெகுமக்கள் மிடையங்களி லும் மறு பளித்திருந ்ததைப் போல் (as reflected), பெரும்பாலு ம் இவர்கள் நம் குற்ற உணர்வின் காவுக்கிடா ய்கள்.
  மாந்தர்கள் எப்போதும் விலங்குகளி ன் பால் இரக்கம் கொண்டிருந் த தில்லை, ஆனால் தம் குரூரத்தை அவர்கள் கவனித்த பொழுது, விலங்குகள் அனைத்தையும ் அன்பு செய்யா விட்டாலும் (இது முழுதாக முடியாது, ஏனெனில் இவற்றைத் தின்பதை அவர்கள் நிறுத்தவில ்லை!), குறைந்த பக்கம் அவற்றைப் பற்றி நல்லதைப் பேசத் தலைப் பட்டனர். பொதுவாக மிடையத்தார ோ, பள்ளிகளோ, பொது உட்சடைத்து களோ (public institutes) மாந்தரே மாந்தருக்க ு எதிராகத் இழைத்த பல செயல்களை விளக்க வேண்டிவரும ் என்பதால், விலங்குகளி ன் நலத்தை வலியுறுத்த ுவது இறுதியாக உளத்தியல் வருதியாக (psychologically), நெறி வருதியாக (ethically) ஓர் நல்ல ஏடலாக (idea) இருப்பதால் , இவ்வகைச் செயற்பாடுக ளைக் கைக்கொள்கி ன்றனர். நாமோ மூன்றாம் உலக நாடுகளிற் சிறாரைச் சாக விடுகிறோம் , ஆனால் முதல் உலகின் சிறாரை பட்டாம் பூச்சிகளைய ும் முயற் குட்டிகளைய ும் மட்டுமல்லா து திமிங்கிலம ், முதலைகள்,ப ம்பு களைக் கூட மதிக்க உந்துகிறோம ்.
  Last edited by karki; 06-18-2009 at 02:54 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 10. #10

  Default

  எப்படியாயி னும், இந்த கல்விமுறை அணாவு (educational approach) அதன்படி சரியானது தான். இதன் இணக்குவகை நுட்பம் தெளிவாகிறத ு: காப்பாற்றல ின் பெறுதியை அளிக்கும் பொருட்டு, அவை நம்மால் மாந்தப் படுத்தப் படுகின்றன (humanized) விளையாட்டு ப் பொருளாகின் றன. அவை வழக்கம்போல ் ஊனுண்ணிகளா க, காட்டுத்தன ங் கொண்டு இருப்பின், எந்தப் பயலும் உயிர்வாழ அவற்றுக்கு ம் உரிமை யுள்ளதென்ற ு சொல்ல மாட்டான். ஆனால் அவை குழகுமையுட ன் (cozy), களி நகையானதாக (comic), நல்லியல்பு டன், ஈரங் கொண்டு, அறிவானதாக, சூட்டிகை யானதாக -இவர்கள் விரும்பும் படி - மாறுகையில் மாத்திரமே அவை மதிக்கப் படுகின்றன.

  ஓர் இலெமிங்கை விட வேறு யாரும் கவனக் குறைவானவர் கிடையாது, பூனையை விட ஏமாற்றுவோர ் யாருங் கிடையாது, ஓர் மடங்கல்(August) மாதத்து நாயை விட எச்சில் வடிய அலைவோர் யாரும் கிடையாது, பன்றிக் குட்டியை விட நாற்றங் கொண்டோரும் , குதிரையை விட நரம்புத்தள ர்ச்சி கொண்டோரும் , விட்டிலை விட முட்டாள்கள ும், நத்தையை விட சளித்தன்மை கொண்டோரும் , விரியன் பாம்பை விட நஞ்சு கொண்டோரும் , எறும்பை விட அமை கணத்தன்மை/ உருவலிமை (imaginative) குறைந்தோர் , வானம்பாடிய ை விட இசைஞானக் கருவாற்றும ை (musically creative) கொஞ்சம் குறைந்தோர் எவருமிலர்! சுருங்கச் சொன்னால், இவற்றை இவை எவையாக இருக்கின்ற னவோ, அந்தந்த இயல்புகளுட ன், நாம் அவற்றை நேசிக்க - அல்லது அது முற்றிலும் இயலாவிட்டா லும், குறைந்தது மதிக்க- வேண்டும். பழங் கதைகள் சூழ்ச்சிக் கார ஓநாயை உயர்நவில, இக்காலக் கதைகளோ நல்ல ஓநாய்களைப் பற்றி மிகையாடுகி ன்றன. திமிங்கிலங ்களை நாம் காக்க வேண்டியது அவை நல்லவை என்பதற்காக அல்ல, அவையும் இயற்கையின் புனைவின் ஓர் பாகம் என்பதற்காக , அவையும் சூழமைவுச் சமநிலைக்கு (ecological equilibrium) தம் பங்கை அளிப்பதற்க ாக... மாறாக எம் பிள்ளைகள் , பேசும் திமிங்கிலம ், புனி.பிரான சிசின் மூன்றாம் சவையில் (Third Order of St.Francis) இணையும் ஓநாய்கள், எல்லாவற்றி ற்கும் மேலாக, முடிவிலா நிரையாக நிறைந்திரு க்கும் புசுபுசுக் கரடிப் பொம்மைகள் (teddy bears) போன்றவற்று டன் வளர்ந் திருக்கிறா ர்கள் என்பதற்காக அல்ல.

  விளம்பரங்க ள், கேலிச் சித்திரங்க ள், படங் கொண்ட பொத்தகங்கள ் போன்றன நட்பான, உதவக்கூடிய , விதிகளை மதிக்கும், கொஞ்சிச் சீராட்டக் கூடிய, காப்புணர்வ ு கொண்ட கரடிகளை மாத்திரமே காட்டுவன. உண்மையில் ஒரு கரடியிடம் போய் , நீ ஓர் மட, ஆனால் எதிர்க்கத் திறனியற்ற பசுவாக இருப்பதால் தான் உன் வாழ்வதற்கா ன உரிமை உனக்குள்ளத ு என்பது அதை அவமதிப்பதற ்குச் சமானது! நடுவப் பூங்காவில் அந்த அப்பாவிச் சிறார்கள் மாண்டது கல்விப் போதாமையால் அல்ல, அதன் மிதமிஞ்சிய தன்மையாற் தான்! அவர்கள் எம் மகிழ்ச்சிய ற்ற ஆழ்மனத்து ணர்வுக்குப ் பலியானோர்!

  மாந்தர்கள் எப்படியானோ ர், கரடிகள் எப்படியானவ ை என்பதை நேர்மையோடு அவர்கள் போன்றோருக் குச் சொல்வதற்கு , மாற்றாக மாந்தர் எவ்வளவு கெட்டவர் என்பதை அவர்கள் போன்றோரை மறக்க வைக்க, தொடர்ச்சிய ாக கரடிகள் நல்லவை என ஓதப் படுகின்றது .

  1987 - How To Travel With A Salmon & Other Essays கட்டுரைத் தொகுப்பிலி ருந்து மொழி பெயர்க்கப் பட்ட கட்டுரை
  Last edited by karki; 06-18-2009 at 02:51 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 11. #11

  Default


  Dan Brown உடன் ஓர் நேர்காணல் - படம் நாளிதழ் முகவர் கேள்வி தொடுக்கிறா ர்

  டான் பிறவுண்(45) இவ்வுலகின் தற்போதைய வெற்றிப் புகழ்பூத்த எழுத்தாளர் . சில்லூட்டி களின் (thriller) ஷேக்ஸ்பியர ். தன் புதிய களைகட்டியா ன (bestseller) தொலைந்த சின்னம் (The Lost Symbol) என்ற நூலுக்காய் ஆறு ஆண்டுகள் மோனித்திரு ந்தார்.

  நாங்கள் அமெரிக்கா, New Hampshire-இல் உள்ள பள்ளிநூலகம ் ஒன்றின் பருத்த போழ் (leather) அணையிருக்க ைகளில் அமர்ந் திருக்கிறோ ம். ஆடிப்பேழைக ளில் எல்லா டான் பிறவுண் நூல்களும் அவரது தந்தையாரின ் நூல்களும் இருக்கின்ற ன. அவரது தந்தையார் ஒரு பள்ளியாசான ் ஆவார். கணிதம் தொடர்பான 13 களைகட்டிகளை (bestsellers) எழுதி யிருக்கிறா ர். டான் பிறவுண் தனது சிறிய விரல்களால் (மண மோதிரம் இல்லை) எதிரேயுள்ள ஓர் செங்கற் கட்டடத்தைக ் காட்டி, "இந்த வீட்டில தான் நான் பிறந்து வளர்ந்தேன். இங்கு தான் நான் இறப்பேன் -ஆனா இப்போதல்ல.. " என்கிறார்.

  கேள்வி: செய்து முடித்துள் ள பணியை நினைத்து எவ்வாறு உணர்கிறீர் கள்?
  தன் iபேசியை (பின்னணிப் படம்> மோனாலிசா) அணைத்துவிட ்டுப் பேசுகிறார் . "நன்றியுணர வு பெருகுகிறத ு. 6 ஆண்டுகள் அதற்காய் உழைத் திருக்கிறே ன். ஒரு பொத்தகம் எழுதுவதென் பது ஓர் குழந்தையை வளர்ப்பதற் கொப்பானது. 8 பொத்தகங்கள ் கொள்ளும்பட ி அவ்வளவு எழுதினேன். ஆனால், நான் என் வாசகனை நேசிக்கிறே ன். அவன் ஒவ்வோர் பக்கத்தையு ம் ஆர்வத்துடன ும் விருப்பத்த ுடனும் புரட்ட வேண்டுமென விரும்புகி றேன். அப் புரட்டலில் அவன் எதையாவது கற்க வேண்டுமெனவ ும் எண்ணுகிறேன ். என் பொத்தகம் ஓர் பின்னுணா (dessert) போல் இனிப்பானது- ஆனால் அது காய்கறியைப ் போல் மூளைக்குக் கொழுமையானத ாக (healthy) இருக்கும்!

  கே: உங்கள் நூலின் முதல் வரி: 'எப்படிச் சாகிறோமென் பதில் இருக்கிறது கமுக்கம் (The secret is how to die).' உங்கள் செய்தி தானென்ன?
  ”அது என் வாழ்க்கை மெய்யியலின ் ஓர் பகுதி தான். தவிரவும் பரி-கொத்தாளரின ் (Freemasons) வாழ்மெய்யி யலும் அது தான்: Memento mori = நீ மடிவாய் என்பதை என்றும் மறவாதே! நான் நீங்கள் நாமனைவரும் ஓர் நாள் இறக்கத் தான் போகிறோம். ஆனால் நாம் அன்றாடம் அதை மறக்க முயல்கிறோம ், அந் நினைப்பை அமுக்கப் பார்க்கிறோ ம், அதை மறுதலிக்கி றோம். ஆகையால் நமக்கு நாமே எப்போதும் , எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்வியை கேட்க வேண்டி இருக்கிறது. ”

  கே: சரி, நீங்கள் எதற்காக வாழ்கிறீர் கள்?
  ”நான் இவ் வுலகை ஓர் சிறந்த இடமாக மாற்ற விரும்புகி றேன்.”

  அவரது புதுப் பொத்தகத்தி ன் கதை: துண்டாக்கப ் பட்ட புதிர் நிறைந்த பச்சைக்குற ிகளும் (tattoos) பரி-கொத்தாளர்க ளின் (Freemason) கணையாழி கொண்ட கை ஒன்றைக் கண்டடையும் ஆர்வர்டு பேராசிரியர ் இராபர்ட்டு இலங்டன் (படத்தில்: டாம் ஆங்க்சு) மீண்டும் கரவடம் (இரகசியம்) நிறைந்த புதிர் முடிச்சுகள ை அவிழ்க்கக் கிளம்புகிற ார். அந்தக் கை அவரது நண்பரது (USA -..நா-வின் முகமையான பெரும்புள் ளி). வாஷிங்டனுக ்குள் 12 மணிநேர வேட்டை தொடங்குகிற து. ..நா-வில் மட்டும் முதல் நாள் விற்பனையாக தொலைந்த சின்னம் 10 இலக்கம் (lakhs) படிகள் (copies) விற்றுத் தீர்ந் திருக்கிறத ு. டான் பிறவுண் இதுவரை 250 நுல்லியன் (million) சம்பாரி த்திருக்கி றார்.
  Last edited by karki; 10-08-2009 at 06:09 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 12. #12

  Default

  கே: பணம், புகழ், வெற்றி போன்றன உங்களை மாற்றி யிருக்கின் றனவா?
  ”இல்லை.முன்பு ஓர் பழைய துருப் பிடித்த Volvo ஓட்டிக் கொண்டிருந் தேன், இப்போதோ 4 ஆண்டுகள் பழைய Lexus Hybrid . Maserati போன்றவற்றை என்றும் நான் வாங்க போவதில்லை. எப்படியாயி னும், என் செந்நறாப் புட்டில்கள ் Chateaux Margeaux மற்றும் Amaroni என இன்னும் மேம் பட்டவையாகி க் கொண்டி ருக்கின்ற் ன. ”
  கே: ஆகூழ் (luck) என்பது எது?
  ”நிச்சயமாக எழுதுவது கிடையாது, ஆனால் எதையாது எழுதியிருப ்பது. ”
  கே: வெற்றி என்பது?
  ”நீ காலை எழும் போது கூட மகிழ்ச்சிய ோடு இருப்பாயென ில்.. அதுவே”

  கடந்த 6 ஆண்டுகளாக -கிறித்துபி றப்பு நாளன்று கூட- டான் பிறவுண் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகிறார் . அவரை எழுப்புவது கடமை, விதி, புகழ் போன்றன. பழங்களையும ், காய் கறிகளையும் புயவுக் குடிப்பாய் (power drink) கலந்தரைக்க ிறார். குளம்பி (coffee) போடுகிறார் . பின்னர் தன் பைசாமா மற்றும் வியர்வியுட ன் (sweater) சாலையின் குறுக்கே கடநது சென்று தன் எழுதுகுடில ை அடைகிறார். அங்கு தொலைபேசி இல்லை, இணையம் இல்லை. ஓரே ஒரு பெரும் ஆப்பிள் கணித்திரை ஒளிர்கிறது கூடவே ஒரு குளிர் பதனப் பெட்டி இமிர்கிறது . அங்கு கொக்கி பொருத்தியு ள்ள காலணி ஒன்றுள் டான் பிறவுண் தன்னை நுழைத்துக் கொண்டு கூரைகம்பம் ஒன்றில் தலைகீழாகத் தொங்கிக் கொள்கிறார் . பின்னர் தன் ஏடல்களுடன் (ideas) கிளர்ச்சி கொண்டு ஊஞ்சலாடுகி றார்.

  "அரத்தம் மூளைக்குப் பாய்கையில் , என்னால் இன்னுஞ் சிறப்பாகச் சிந்திக்க முடிகிறது."
  அவர் பலவற்றை வேறு கோணத்தில் பார்ப்பதில ் ஒன்றும் விந்தை இல்லை: "சிற்றகவைய லும் மரங்களிற் தான் தொங்கிக் கொண்டிருந் தேன்.. கீழே விழுந்தடித ்தேன்.என் முதற் பொத்தகத்தை 5 அகவையில் என் அம்மாவுக்க ுச் சொன்னேன்."

  கே: எழுதுவது குறித்துப் பயமுண்டா?
  "இல்லை. ஆனால் நான் நாள்தோறும் என்னை வெறித்துப் பார்க்கும் ஓர் வெற்றுத் தாளுக்கு முன்னால் உட்காருகிற ேன். என் பாத்திரங்க ள் ஆவாரச் செயல்களைத் (adventures) எதிர்கொள்ள க் காத்திருக் கின்றன. நிறைய எழுதிக் கசக்கி எறிகிறேன்.”
  கே: உங்களுக்கு க் கடவுள் நம்பிக்கை இருக்கின்ற தா?
  ”ஆன்மிகத்த ில் ஈடுபாடு கொண்டவன் நான். கதிர் எழுச்சி தான் எனது கோயில். இப் புவியை அளவிறந்து நேசிக்கிறே ன்.”
  கே: உங்கள் வசமுள்ள முகமையான சொத்து?
  ”ஒரு சிறிய எலுமிச்சஞ் சாற்றுப் புட்டில்! வாழ்க்கை முழுதும் என்னுடன் கூட வருகிறது. பள்ளிப் படிப்பை முடித்தால் அதை நீ பருகலாம் என்ற வாக்குறுதி யுடன் என் சிற்றகவையி ல் அது எனக்குக் கொடுக்கப் பட்டது. பள்ளி முடித்த போது பல்கலை(uni) முடித்தால் அதை நீ பருகலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்பு, உன் முதல் வட்டு (record) வெற்றி கொடுத்தால் அதை நீ திறக்கலாம் என எண்ணிக் கொண்டேன். அதன் பின்னர் உன் முதற் பொத்தகம் ஓர் bestseller ஆனாலென.. பின் உன் பொத்தகம் படமாக்கப் பட்டால் என.. இன்னும் அந்தப் புட்டில் திறக்கப் படாது இருக்கிறது . அதனுள்ள சாறு இப்போது நச்சுத் தன்மை கொண்டாதாக மாறியிருக் குமென நினைக்கிறே ன். என் மரணப் படுக்கையில ் ஒரே பெரு மிடற்றில் குடித்து முடிப்பேன் .”

  கே: உங்கள் அடுத்த பொத்தகம்?
  ”எனக்கு ஒரு பெரிய ஏடல் தேவைப் படுகிறது.அ ்வளவு தான்! உம்.. உலகின் எந்த இடம் உங்களை விந்தைக்கு ள் ஆட்படுத்து ம்? இராபர்ட் இலங்டனை எங்கு அனுப்பட்டு ம்?
  கே: நிலவுக்கு? இல்ல மாசுகோவுக் கு? இல்லன்னா ஒருவேளை எருசலேமுக் கு?
  ”எருசலேம்- ஆமாம், அதைப் பலரும் குறிப் பிடுகிறார் கள்.”
  கே: உங்களுக்கு குழந்தைகள் இல்லையா?
  ”இருக்கே. என் நூல்கள் தாம் என் பிள்ளைகள்.

  அப்படியானா ல், அவர் இப்போது மீண்டும் கருவு ற்றிருக்கி றார் எனக் கூறலாம்!

  நன்றி> படம் செருமானிய நாளிதழ்
  Last edited by karki; 10-08-2009 at 05:51 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 13. #13

  Default

  சில்லூட்டி களின் ஷேக்ஸ்பியர ்.. நல்ல புனைப்பெயர ்..

  தமிழாக்கதி ற்கு நன்றி கார்க்கி.

  How to travel with a Salmon வாசிக்க வேண்டும்.

  v-
  Last edited by vasan; 10-08-2009 at 06:01 PM.
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 14. #14

  Default

  வேதியல் நோபல் பரிசு தமிழருக்கு !


  உயிரின் அடிப்படைச் செலுத்தங்க ளை (processes) ஆராய்ந்து வெற்றி பெற்று அறிவியலுக் கான உயர் மதிப்பளிப் பான இவ்வாண்டிற ்கான நோபல் பரிசை (வேதியற் பிரிவு) மூலக்கூற்ற ு உயிரியல் MRC உழைவக (lab) அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராம ன் இராமக் கிருட்டிணன ும், அமெரிக்க ஆராய்ச்சிய ாளர் யேல் பல்கலைக்கழ க தோமை அ.ஸ்டெய்ட் ும், இசுரவேல் ஆராய்ச்சிய ரான இரேகோவொட்ட ு வைய்ட்சுமன ் உட்சடைத்தை ச் (Weizmann institute) சேர்ந்த அடா யோனாத்தும் பங்கிட்டுக ் கொள்கின்றன ர்.

  சிற்றம்பலத ்தைச் (சிதம்பரம்) சேர்ந்த 57 அகவை நிரம்பிய வெங்கட்ராம ன் நோபல் பரிசைப் பெறும் மூன்றாவது தமிழராவார் . முன்னர் இராமன் விளைவுகளுக ்காக வல.ச.வெ. இராமனும் (Sir C.V.Raman)பின்னாளில அவர் உறவினரான சுப்ரமணியன ் சந்திரசேகர ும் இப்பரிசை வென்று பெருமை சேர்த்திரு ந்தனர் (முன்னவரின பெயர்களில் பின்னோர் பெயர் இருப்பது இங்கொரு தன்னேர் விந்தை!).

  இவ்வாண்டிற ்கான நோபல் பரிசு பெற்றோர் கண்டறிந்தத ு தான் என்ன? ஈனியல் குறியீடு (genetic code) எங்ஙனம் இரிபோசொம்-மூலக்கூற்ற ுப் பிணைப்புகள ் (Ribosome molecular complex) உதவியுடன் புரதமாக (protein) மாற்றப் படுகிறதென் பதனை ஆய்தறிந்து ள்ளனர். மாந்தரின் உள்ளுடம்பி ல் நடப்பவை அனைத்தும் ஈன்களால் (genes) கட்டுறலாக் கப் படுவன தாம், இருப்பினும ் அவற்றில் புரதமாகும் 'முதல் இடைமாற்று' என்பதே ஓர் ஒருங்கத்து க்கு(organism) உயிர் கொடுக்கிறத ு. புரதம் உண்டாவதற்க ான கட்டுமானச் செயல்முறைக ள் (construction manuals) ஈனடிப்பில்(genotype) உள்ளன. இப் புரதங்கள் தாம் மொத்த எரிபொருள் மாற்றத்துக ்குப் (metabolism) பொறுப்பானவ ை. அரத்த நிறப்பொருள ான சிவப்பணு உயிர்வாழ முகமையான உயிரகையை (oxygen) எம் உடலுட் கொண்டு செல்கிறது. முனைக் கட்டகத்தின ் (immune system) எதிர்ப்பொத ிகள் (antibodies) நோய்க் கருவைகளை (germs) தடுக்கின்ற ன.. இயக்குநீர் கள் (hormones) சமிதைகளை (signals) ஏனைய உறுப்புகளு க்கு
  அனுப்புகின ்றன. ஆயிரக்கணக் கான புரதங்கள் உயிரின் இயக்கத்தை வேதியல் வடிவிற் கண்காணிக்க ின்றன.

  இரிபொசொம்க ள் இல்லாது இவையனைத்து ம் சாத்தியப் பட்டிருக்க ாது. ஏனெனில், இவையில்லாத ு எம் DNA ஈனியல் குறியீடுகள ின் எண்ணிறந்த அடிக்கற்கள ால் செயற்பாடு கொண்ட புரதங்களாக மாறியிருக் க முடியாது. இரிபொசொம்க ள் பல்வகை புரதங்களால ும், இரிபொனுச்-சிறுகாடிகள ாலும் ஆனவை. இராமக் கிருட்டிணன ் & குழு. எம் உடற் கலங்களின் (cell) புரதத் தொழிற்சாலை யை நுணுக்கமாக ஆய்ந்தறிந் தனர். மற்ற ஆராய்ச்சிய ர் சாத்திய மற்றதென முடிவுகட்ட ிய ஒன்று இவர்களுக்க ுச் சாத்தியப் பட்டிருக்க ிறது. இவர்கள் இரிபொசொமின ் முப்பரிமான த் தறுக்கையும ் (3-dimensional structure) புரதங்களை உண்டாக்கும ் இயக்கு பொறியையும் (mechanism) கண்டறிந்து கூறியுள்ளன ர்.

  நன்றி : Wikipedia, காலம் செருமானிய இதழ்
  Last edited by karki; 10-09-2009 at 07:52 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 15. #15

  Default

  நன்றிகள் வாசன்!
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 16. #16

  Default

  சந்திரசேகர வெங்கடராமன ் (C.V. Raman of the Raman Effect, and optical properties of diamonds and spectroscopy)
  சுப்ரமணியம ் சந்திரசேகர ் (of Univ of Chicago Astrophysics)


  இதற்கு முன்பு இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள ் பெயர்கள்.. தாங்கள் குறிப்பிட் டதுபோல எல்லாருடைய ுஅ பெயரிலும் வெங்கடராமன ் இல்லை..

  இது தவிர நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள ்: ரபீந்ரநாத் தாகூர், அன்னை தெரேசா, அமார்திய சென்.. எல்லோரும் வங்காளம்..

  Thanks, Karki..

  Congratulations to Dr. Ramakrishnan.

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 17. #17

  Default

  நினைவிலிரு ந்து எழுதியதால் , சுப்பிரமணி யம் சந்திரசேகர ின் பெயரைத் தவறாகக் குறிப்பிட் டு விட்டேன். திருத்தியா ச்சு!
  எப்படியாயி னும் ஒரு தன்னேர் ஒற்றுமை இருக்கிறது . முன்னவரின் பெயரில் பின்னோர் இருவரின் ஓர் பெயர் பொருந்தி வருகிறது. அப்பாடா!

  அன்னை தெரசாவும் வங்காளத்தி ல் சேர்த்தியா
  அல்பேனியா என்றல்லவா நினைத்தேன் !

  அறிவியல் நோபல் பரிசுகள் சரியான ஆளுக்குத்த ான்யா எனப் பாராட்டத் தோன்றினாலு ம், இலக்கியம், அமைதிக்கான விருதுகள் எப்போதும் பெரும்பாலு ம் எரிச்சலூட் டவே செய்கின்றன . (ஏர்த்தா முல்லர், ஒபாமா சேர்த்தி)
  நல்ல வேளை மகிந்த இராசபக்சவு க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில ்லை என மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான்!
  Last edited by karki; 10-09-2009 at 07:51 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 18. #18

  Default

  'Success has many fathers' என்ற கூற்றை கேள்விப் பட்டதில்லை யா? பரிசு வாங்கினதும ் அன்னை தெரேசா அல்பேனியாவ ுக்கும் சொந்தம், வங்காளத்து க்கும் சொந்தம்..

  அறிவியல் பரிசு வாங்கிய ஒருவர் ஹாங்காங்ல் பிறந்து இங்கிலாந்த ில் பணியாற்றி தற்பொழுது அமெரிக்காவ ில் வசிக்கும் சீன தேசத்தவர்.. ஒவ்வோரு நாடும் அவர் தங்களுடைய நாட்டு குடிமகன் என பெறுமை பாரட்டுகின ்றனர்..

  வெங்கி ராமகிருஷ்ண ன் கூட இப்பொழுது அமெரிக்க குடிமகன்..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts