கூனைப்பூ துவையலுடன் - Artichoke and Dips
+ Reply to Thread
Results 1 to 9 of 9

Thread: கூனைப்பூ துவையலுடன் - Artichoke and Dips

 1. #1

  Default கூனைப்பூ துவையலுடன் - Artichoke and Dips

  கூனைப்பூக் கள் (artichokes) நண்ணிலப் (Mediterranean) பகுதியிலும ் மத்திய ஆசியாவிலும ் விளைபவை. அதன் பருவம் வருகையில் மேற்குலக நாடுகளின் பேரங்காடிக ளில் (supermarkets)நிறையவே கிடைக்கிறத ு. செய்முறை எளிதானது, கொஞ்சம் நூதனமானது. உண்ணக்கூடி ய கூனைப்பூக் களில் இருவகை உண்டு, ஒன்று பெரியது, பச்சை நிறமானது, கோள வடிவானது. மற்றையது சிறியது, சிவப்பு நிறைந்து பச்சையும், மஞ்சளும் ஆங்காங்கே பூசியபடி, சிறு பூங்கொத்து போலிருப்பத ு. சிறிய கூனைப்பூக் களை அவித்துச் சமைத்துப் பிட்சாக்கள ின் மீது அமர்த்தி வெதுப்பி (bake)எடுத்து வைத்திருப் பர் இத்தாலிய வேகப்பக் கடைகளில்.
  இந்தச் செய்முறைக் குறிப்போ பெரிய கூனைப்பூக் களை பற்றியது. இவ்வகைக் கூனைப்பூவை மூன்று பகுதியாகப் பார்க்கலாம ். அதன் அடியிலிருக ்கும் காம்பு, இது சமையலுக்கு த் தேவையற்றது.
  மற்றையது அதன் இதழ்கள் இவற்றின் சாற்றை நாம் உண்ணலாம், மற்றையது இதழ்களை உரிக்க உரிக்க இறுதியில் வரும் அதன் குருதயப்(இதயம்) பகுதி. குருதயப் பகுதி இருவகையானத ு இதன் நடுவிலிருக ்கும் தும்புப்பூ போன்ற வெண்மையான ஒரு மொட்டு (இது முற்றிய கூனைப்பூக் களில் மெலெழும்பி நாவல் நிறப் பூவாகப் பூத்திருக் கும்). இது உண்ணுதற்கு உதவாதது, சுவையற்றது. தும்புப்பூ வை, இதழ்களைத் தாங்கியிரு க்கும் அதன் அடிப்பாகம் கிழங்கு போன்ற சுவையைத் தருவது, உண்ணுதற் குகந்தது.

  இந்தச் சமையற் செய்முறை மிகு சுவையான உணவை எதிர் பார்த்திரு ப் போருக் கானதல்ல, கொழுமையான (healthy)வேற்று நிலக்காய்க றி ஒன்றை சமைத்துப் பார்த்து, மாறுபாடான துய்ப்பு(அனுபவம்) ஒன்றை பெற நினைக்கும் மாறுபாடுவி ரும்பி களுக்கானது. விரும்புவோ ர் ஒரு முறை செய்து பார்க்கலாம ்.

  கூனைப்பூவி ன் செமிபாட்டை(digestion) ஊக்குவிக்க ும், கொழுப்பைக் குறைக்கும் தன்மையும், ஈரல், பித்தப்பை போன்ற உறுப்புகளு க்கு கூடிய உயிர்ப்பைக ் கொடுக்கும் தன்மையும் குறிப்பிடத ் தக்கன.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 2. #2

  Default

  கூனைப்பூ துவையலுடன்

  செலவாகும் நேரம்: 1 1/2 மணி நேரம் --------------- செய்முறை:மிக எளிது!

  ஒரு பங்கில் தோராயமாக 410 kcal . புரதம் 5g . கொழுப்பு 39g


  தேவையானவை:

  2 கூனைப்பூக் கள்
  2 எலுமிச்சம் பழங்கள்
  உப்பு
  (துப்புரவான) நூல் (கட்டுவதற்க ு)


  1
  முதலில் கூனைப்பூக் களை நன்றாய்க் கழுவிக் கொள்ளவும். அதன்போது அதன் இதழ்களை கொஞ்சங் கிளப்பி அதனுள்ளும் நன்றாய் நீராற் கழுவித் துப்புரவு செய்து கொள்ளவும், ஏனெனில் ஒவ்வொரு இதழ்களுக் குள்ளும் சிறு அழுக்கோ, துகள்களோ, சிறு பூச்சிகளின ் பூதவுடல்கள ோ படிந்து கிடக்கக்கூ டும். ஆகையால் மிகவும் கவனமாக இதழ்கள் பிரிந்திடா வண்ணம் செம்மையாகக ் கழுவிக் கொள்ளவும்.
  அதன் காம்பை (மொத்தமான தண்டை) அடியில் நன்றாக, அதன் மர/ நார்த்தன்ம ை கொண்ட இழைகள் பிய்ந்து காம்புடன் போகும்படிய ாக வெட்டிக் கொள்ளவும்.


  2
  எலுமிச்சைக ளை 9 துண்டுகளாய ் வெட்டிக் கொள்ளவும். இரு பெருத்த எலுமிச்சந் துண்டங்களை த் தனியாக எடுத்து வைக்கவும். கூனைப்பூவி ன் தலை மற்றும் அடியை தீட்டப்பட் ட கத்தியால் நேராக வெட்டி விடவும். கூரான தலையை நன்றாகவே வெட்டி விடவும். சுற்றியிரு க்கும் ஒவ்வோர் புற இதழின் கூரான முனைகளையும ் சமையற் கத்திரியால ் சிறிதாக நறுக்கி விடவும். இப்போது வெட்டப் பட்ட இடங்களை (அடி, தலை, இதழ் முனைகள்) , எலுமிச்சந் துண்டுகளால ் அதன் சாறு படும் படியாக நன்றாய்த் தேய்க்கவும ். ஏனெனில் கூனைப்பூவி ன் வெட்டுப்பட ்ட இடங்கள் விரைவாகக் கயர்(astringency) பட்டுவிடக் கூடியவை. அதைத் தவிர்ப்பதற ்காகவே இந்த ஏற்பாடு. (பார்க்க படம், இதைப் போல் வெட்டப் பட்டிருக்க வேண்டும்)


  Last edited by karki; 07-07-2008 at 10:13 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #3

  Default

  3
  தனியாய் வைத்த இரு எலுமிச்சந் துண்டுகளை எடுத்து, ஒன்றைக் கூனைப்பூவி ன் தலையிலும் மற்றையதை அடியிலும் வைத்து(பரிசுப் பொதியைக் கட்டுவதைப் போல்) நூலால் ஒரு குறுக்கு (cross) முடிச்சு ஒன்றைப் போட்டு இறுக்கிக் கட்டவும்.

  4
  இப்போது அதை ஒரு நீர் நிரப்பிய (ஏற. 5 l) சட்டியில் உட்கார்த்த ி, ஒரு மிசைக்கரண்டி உப்பிட்டு 35- 45 நுணுத்தங்க ள்(mins) நன்றாக அவிய விடவும். கூனைப்பூவை த் தலைகீழாய் வைக்காது நேராய் வைக்கவும்.
  தண்ணீர் கூனைப்பூவி ன் தலைக்கு மேலே இருக்க வேண்டும்! அளைமியச் (aluminium) சட்டிகளைத் தவிர்க்கவு ம், ஏனெனில் காடித்(acidic) தன்மையான பண்டம் இது ஆகையால், அனைத்தும் வேதியல் மாற்றத்தில ் கருஞ்சாம்ப ல் நிறமாகும் இக்கட்டு இருக்கிறது.

  5
  45 நுணுத்தங்க ளின் பின் முள்ளுக்கர ண்டி ஒன்றை கூனைப்பூவை ப் பிணைத்திரு க்கும் நூலிற் சொருகிக் கூனைப்பூவை த் தூக்கி அதன் இதழ் ஒன்றைப் பிரித்துப் பார்க்கவும ்.
  Last edited by karki; 07-07-2008 at 10:32 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 4. #4

  Default

  எளிதாக அது பிரிந்தால் நன்றாய் அவிந்து விட்டது என்று அறிந்து கொள்ளலாம். அவிந்திருந ்தால் வெளியே எடுத்து நீரனைத்தும ்
  வெளியேறி, உலரும் வண்ணம் 10 நுணுத்தம் ஓர் தட்டில் தலைகீழாய் வைக்கவும். நல்ல பச்சையாய் இருந்த கூனைப்பூ, வெந்ததும் ஓர் இடலை(olive) நிறத்தை அடைந்திருக ்கும்.

  6
  பின்னர் நூலையும், எலுமிச்சந் துண்டுகளைய ும் எடுத்து விட்டுத் துவையலுடன் பரிமாறவும்.

  சாப்பிடுவத ு எப்படி: ஒவ்வோர் இதழாய்ப் பிரித்து, இதழின் மேற்பாகம், நுனியை விரல்களில் வைத்துக் கொண்டு, அடிப் பாகத்தை துவையலிற் தோய்த்து, முருங்கைக் காய்த் துண்டுகளை எப்படி பற்களுள் வைத்து இழுத்துச் சாறு எடுப்போமோ, அப்படி நுனியிலிரு ந்து அடி வரை பற்களுள் இழுத்து எடுக்கவும். இதழின் அடியிலுள்ள வெள்ளைச் சதையையும் உண்ணலாம் (சூப்பி இழுக்கையில ் அதுவும் தானாக வந்து விடும்!). இரண்டு துவையல்கள் கைவசம் இருந்தால், ஒவ்வொன்றில ும் துவைத்தெடு க்க சுவை மாறுபாடாக இருக்கும். புற இதழ்களில் அதிகம் சாறு இருக்கும். அக இதழ்களில் சாறு குறைவாக இருக்கும். நடுவிலுள்ள தும்புப்பூ போன்ற பகுதியை நீக்கிவிட் டு அதன் அடியில் உள்ள கிழங்கு போன்ற அடிப்பாகத் தை வெட்டி துவையலிற் தோய்த்துண் ணலாம்.

  இவ்வுணவுடன ் பக்கிட்டிய ும் (baguette/ french loaf) சேர்த்துச் சாப்பிடலாம ்!
  Last edited by karki; 07-07-2008 at 09:06 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 5. #5

  Default

  துவையல்(dip)1 : பூண்டுத் துவையல்

  தே.பொ.:

  2 பூண்டுப்பல்லுகள்
  150 - 200 g Mayonnaise
  எலுமிச்சைச ் சாறு
  உப்பு
  மிளகு

  உரலில் இட்டு நசுக்கிய பூண்டுப்பற ்கள், மிளகுக் கலவையை Mayonnaise இல் சேர்க்கவும ். தேவையான அளவு உப்பு, கொஞ்சம் எலுமிச்சஞ் சாறு விட்டு கலக்கி வைக்கவும்.

  துவையல் 2: வெண்ணெய்ப் பழத் துவையல்

  தே. பொ.:

  1
  வெண்ணெய்ப்பழம் - Avocado (கொஞ்சம் கனிந்த)
  2
  அளவான தக்காளிகள்
  1 தே.. இடலைநெய் (Olive oil)
  1 சப்புநீர்க ் கட்டி (stock)
  கொஞ்சம் உப்பு
  கொஞ்சம் மிளகுதூள்
  1 வெங்காயம்
  1 மிசைக்கரண்டி எலுமிச்சஞ் சாறு

  கழுவிய தக்காளி, வெங்காயத்த ை மிகச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெண்ணைப் பழத்தை நேர்வெட்டா க, சரிபாதியாக வெட்டி விட்டுக் கையாற் பிரித்தெடு க்க தானே கழன்று வரும். அதன் கொட்டையை அகற்றி விட்டுக் கரண்டியாற் சுரண்ட அதன் சதை தானாக வெளிவரும். அதை ஒரு ஏனத்தில் நன்றாக மசித்து விட்டு, வெட்டிய தக்காளி, வெங்காயக் கலவை அதனுட் சேர்க்கவும ். கைபிடிக் கலப்பி (hand-held blender) உதவியுடன் ஓரிருமுறை நன்றாய் அடித்து களி போன்ற தன்மைக்குக ் கொண்டு வரவும். பின்னர் அதனுடன் இடலை நெய், மிளகுதூள், உப்பு, எலுமிச்சஞ் சாறு அனைத்தையும ் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான ்.
  Last edited by karki; 07-07-2008 at 10:52 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 6. #6

  Default

  அய்யா...சாமி .. இப்படி சமையல் குறிப்புகள ், அதுவும் படம் போட்டு கதை எழுதி கலக்கிட்டீ ங்க..
  இந்த வாரம் சனிக்கிழமை இதுதான் செய்யப் போகிறேன்..

  மிக்க நன்றி, கார்க்கி..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 7. #7

  Default

  அய்யா...சாமி .. இப்படி சமையல் குறிப்புகள ், அதுவும் படம் போட்டு கதை எழுதி கலக்கிட்டீ ங்க..
  மிக்க நன்றி, கார்க்கி

 8. #8

  Default

  வாசன்,
  அதிகமா எதிர்பார்ப ்போட பண்ணாதேங்க . சுவை சுமார் தான். துய்ப்பு தன் புதுசு. எதையும் ஒருமுறைன்ன ு ஒரு கை வேணா பார்க்கலாம ்!...

  பட்டாம்பூச ்சி ,
  உங்க வீட்லயும் இந்த வாரம் இதானே..
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 9. #9

  Default

  Karki arumaiyaana recipe... Artichoke is my hubby's fav...but preparation konjam harda irukkura naala naan avalova seyya maatten....neenga ippadi azhaga recipe pottu asathi irukkeenga.....me will try again...thanks a lot...

  yaso

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts