வட்டார வழக்குச் சேகரம்
தமிழின் வட்டார வழக்குச் சொற்களைத் திரட்டும், சேகரிக்கும ் முகமாக இத்திரியைத ் தொடங்கி யிருக்கிறே ன். இங்கு நம்மிற் பலர் தமிழகத்தின ், தமிழீழத்தி ன், இலங்கையின் , மலையகத்தின ் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர் கள். அவர்கள் தங்கள் வட்டார வழக்குக்கெ னச் சிறப்பாக உள்ள சொற்களை இங்கு அவ்வப்போது பதிந்து வைத்தால், ஏனையோர் அறிய உதவி யாயிருக்கு ம். தவிர, கலைச்சொற்க ளைத் திரட்டி வரும் என்போன்றோ ருக்கு புதிய சொற்களை உருவாக்கு வதற்கும் , வட்டாரச் சொற்களை பொதுவுக்கு க் கொண்டு வருவதற்கும ் உதவியாயிரு க்கும்.
இன்னமும் நாஞ்சில், குமரி, கோவை, ஈழத்து வழக்குகள் புரியாத இளம் நகர்ப் புறத்துத் தமிழர்கள் பலர் உளர். அப்படியுள் ள எம் போன்றோருக் கு எம் மொழியை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவலாம்.
உங்கள் பங்களிப்பை எதிர்பார்த ்து...
கார்க்கி
______________________________ ______________________________ ___
என் பங்குக்கு 3 வட்டாரச் சொற்களும் ஒரு பழமொழியும் ...
ஆக்கங் கெட்ட = இச்சொல்லை நம்மிற் பலர் கேட்டிருப் போம், இதன் துல்லியமான பொருள் தெரிந்திரு க்கா விட்டாலும் ... வசையாகத் திட்டுவதற் கு இச்சொல் பயன்படுகிற து குமரி, நாஞ்சில் வட்டாரங்கள ில். மதுரை மாவட்டத்தி லும் இது புழக்கத்தி லுண்டு. ஆக்கம் என்பது இங்கு ஆகூழ் (அதிட்டம்) என்ற பொருளில் வருகிறது. ஆகூழ் இல்லா.. எனப் பொருள் படும்.
மட்டுப் படுதல் (செட்டிநாட )= புரிய மாட்டேங்கு து.. "இந்த விதயம் மாத்திரம் நமக்கு மட்டு படுதில்ல அய்யா..!" இது சிவகங்கை, காரைக்குடி பக்கத்து வழக்கு. இதை ஒத்த 'மட்டுக் கட்டுதல்' = அடையாளம் காணுதல், இனங் காணுதல், கண்டுபிடித ்தல் என்ற பொருள்களில ் ஈழத்தின் பெரும்பகுத ி களிலும் , தமிழகத் தென் மாவட்டங்கள ிலும் ஆளப்படுகிற து: "என்ன தம்பி, நீங்க சொக்கநாயகம ் மவன் ஆரவமுதனா? மட்டுக் கட்டல, மன்னிச்சுக ்கோங்க!"
புறட, புறடை = கப்சா, புருடா, பொய். இது கொங்கு நாட்டில் ஆளப்படும் சொல்.
--------------------------------------------------------------------------------------------------------
பழமொழி:
சூட்டுக் கோலைத் தந்தவன், ஆற்றுக் கோலையுந் தருவான்.
கட்டத்தை, சோதனையைக் கொடுத்தவன் (இறைவன்), அதை ஆத்துறதுக் கு, அதிலிருந்த ு நாம மீண்டு வெளிய வர ஒரு வழியையுங் காட்டுவான்.
ஈழத்தில், குறிப்பாக அதன் வடமேற்குப் பைதிரங்களி ல் சொல்லப் படும் பழமொழி, சொலவடை இது.
Last edited by karki; 08-02-2008 at 06:24 PM.
இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்
Bookmarks