திருப்பல்ல ாண்டு தமிழில்
+ Reply to Thread
Page 1 of 5 12345 LastLast
Results 1 to 20 of 94

Thread: திருப்பல்ல ாண்டு தமிழில்

 1. #1
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default திருப்பல்ல ாண்டு தமிழில்

  ஸ்ரீயப்பதி யான ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ் இந்த சம்ஸார ஸகரத்தில் மூழ்கியுள் ள ஜீவாத்மாவை உய்விக்க வேண்டி, தேசாந்திரம ் போன மகனைக்காணத தக்கப்பன்ப ோலே மிகவும் க்லேசப்பட் டு, இராம க்ருஷ்ணதி அவதாரங்களை எடுத்தான். ஆயினும் இச்சம்ஸரிய ானவன் அவனுடைய உண்மை ஸ்வரூபத்தை காணாதே, இவன் மாயன், பொயுரைப்ப வன், இடையன், வெண்ணைக்கா க குடமாடும் கூத்தன் என்று தவராக நினைக்க, ஞானிகள் என்னுடய ஆத்மாவைப்ப ோன்றவர்கள ், ஆனால் அவர்கள் கிடைப்பதோ மிகவும் துர்லபம் என்று க்லேசத்தோ டே தன்னுடை சோதிக்கு ஏளினன் பரமாத்மா.
  ஆயினும் இஜ்ஜீவாத்ம ாவை உய்விக்க வேண்டும் என்று எண்ணுங்கால ், ஆனைக்கொண் டு ஆனைப்பிடிப து போலே, இவர்களை முன்னம் ஜீவாத்மாவா க இருந்து, பின் முக்தர்கள் கோஷ்டியை அடைதவர்களை ப்கொண்டு அதைச்செய்ய வேண்டும் என்று தன் நாச்சியாரு டன் முடிவு செய்து, அங்கணமே ஆழ்வார்களை அவதரிக்கச் செய்தான்.
  இவ்வாழ்வார ்கள் பதின்மர். பன்னிருவர் என்றும் உரைப்பர். ஸ்ரீவைஷ்ணவ மரபைச்சேர் ந்தவர்கள் திவ்ய என்னும் பதத்தை ஆழ்ந்துநோ க்கி உபயோகிப்ப ர். ஆழ்வார்களை திவ்ய சூரிகள் என்றும், அவர்கள்தம் அருளிச்செய ல்களை திவ்யப்ரபந ்தம் என்றும், அவர்களால் ம்ங்களாஸாஸ னம் செய்யபெற்ற க்ஷேத்ரங்க ளை திவ்ய தேசங்கள் என்று வழங்குவது ஸ்ரீவைஷ்ணவ ர்களின் மரபு.
  இவ்வாழ்வார ் ஆச்சாரியர் களை நமக்காக ஈந்த அந்த ஸ்ரீமந் நாராயணை முதற்கண் வணங்குகிறே ன். இந்த நாராயண சப்த்மாந்த ு, நார + அயந சொற்களின் கூட்டெழுத் தாகும். எப்பொழுது நகாரம் வலுத்து ணகாரம் ஆகின்றதோ, ஆப்பொழுது , அப்பெயரை பொதுபெயரா க கொள்ளகூடா து என்பது சம்ஸ்க்ருத வியாகரணம் என்று கேட்டதாக நினைவு. அதாவது, சேற்றில் முளைக்கும் அத்துனைவஸ் துவுக்கும் பங்கஜம் என்பது பொதுப்பெய ர் ஆயுனும், அது தாமரையைக்க ுறிக்கும். ஆக பங்கஜம் என்பது பொதுப்பெய ர். தாமரை என்பது அது சிட்டுக்கு றிக்கும். ஆயின் நாராயணன் என்பதை பொது பெயராக கொள்ளக்கூ டாது என்ற வியாக்கரணத ்தின் படி, இது தனிக்கோளா ட்சி செய்யும் ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ை மட்டுமே குரிக்கும் . அவன் திருவுரைமா ர்பன் என்பதாலே ஸ்ரீமந்நார யணன் என்றபடி.
  இந்த ஸ்ரீமந் நாராயணனானவ ன் எப்பொழுது ம் வேதத்தை நிலைனிறுத் துவேன் என்று கங்கணம் கட்டிக்கொ ண்டும், நித்ய சூரிகளும் ஆழ்வார்கள் ஆச்சாரியர் காளால் சூழப்பட்ட் வனுமாக் இருப்பவன். அப்படி பரமைகாந்தி களால் சூழப்ப்ட்ட ு நின்றும் நம்போல மூடர்களை தன்னிடதே அழைக்க யோசித்துக ்கொண்டேயு ம் இருப்பவன். அவனுடய பரமகாருண்ய த்திற்க்கு பல்லாண்டு.
  இது ப்ரஹ்மதந்த ிர ஸ்வாமி அருளிச்செய ்த திவ்ய சூரி ஸ்தோதிரம் :
  ஸ்ரீமத் வேதாந்த ஸித்தாந்த ஸ்தாபனா நித்ய தீக்ஷிதம்
  ஸ்ரீமந் நாராயணம் வந்தே பாந்தம் சூரிகுரூத் தமை


  பாலேய் தமிழர்கள் ஆழ்வார்கள்
  முதலாழ்வார ்கள் பாலேய் தமிழர்கள் என்பது,
  மறையின் குருத்தின் பொருளாய்ய ும் செந்தமிழ் தன்னையும் ஒன்றைத் திரித்து அன்றெரித்த திருவிளக்க ு என்பதிலும் , ஞானத்தமிழ் புரிந்த நான் என்பதிலும் , யானே இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் எம்பதிலும் தமிழ்த்தலை வன் என்பத்லும் புரியும். நிற்க.

  முதலாழ்வார ்களின் முன்னவரான பொய்கையாழ ்வார் வைபவம்

  திருக்கச்ச ி நகரம் தன்னில் அடியவர்கள் சொன்னவண்ண ம் செய்தபிரான ாம் யதோத்காரி சன்னிதியில ் கண்கள்மூடி ன நிலையில் பொய்கையாழ ்வாரைக்காண ்கின்றோம் . இவ்வாழ்வார ் திருக்கச்ச ிநகரில் துவாபர யுகத்தில் பாஞ்சசன்னி யத்தின் அம்சம் கொண்டு ஓர் ஐப்பசித்த் ங்கள் திருவோணத் தில் அவதரித்தார ். படப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன ்னியம், செம்பவளவாய ின் தித்திப்பை அனுபவித்து நமக்கு அதன் சாறான முதல் திருவந்தாத ி அருளிச்செய ்தார். இப்பாஞ்சசன ்னியமானது அசுரனின் எலும்புகளல ் செய்யப்பட் டது. எம்பெருமான ுக்கு மிகவும் பிரியமானது . பாரதப்போர ் தனில் இப்பாஞ்சசன ்னியமானது தனது த்வனியினால ேயே கௌரவர்களி ன் இதயத்தை பிளந்தது. அங்கணமே ஆழ்வாரும் தம்முடைய க்ரந்ததினா ல் வேததிற்க்க ு புறமானவர்க ளை நடுங்குறச் செய்தார் என்று கொள்ளவேண் டும்.
  ப்ரம்மதந்த ிரஸ்வாமி அருளிய ஸ்லோகம்
  துலாயாம் ச்ராவணே ஜாதம் காஞ்ச்யாம் கஞ்சன வாரிஜாத
  த்வாபரே பஞ்சஜன்யாம ்சம் ஸரோயோகின ம் அச்ரயே


  இங்கணம் அடியேனால் தமிழில் ஆழ்வார்கள் திவ்ய சரிதமும், திருப்பல்ல ாண்டு விரிவுரையு ம் ஆரம்பிக்க படுகிறது. சாருகேஸி, ருக்மிணி அம்மா, இது சரியாக வரவேண்டும் என்று அவனிடம் வேண்டிகொள் ளுங்கள்
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 2. #2
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  இவ்விடம் தமிழில் மட்டுமே அடியேனால் எழுதப்படும ் என்பதால், தினமும் ஒரே ஒரு முறை வலையேற்றம் செய்வேன். பொருக்க வேண்டும் என்று ப்ராத்திக் கின்றேன்.இ ு முதல் நாள் என்பதால் இரண்டாம் பதிலும் போட்டுள்ளே ன்.
  க்ஷமிக்க ப்ராத்திக் கின்றேன்.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 3. #3

  Default thiruppallandu

  MR> MUkunth sir
  naanu tamil type adikka karukkondu iitten. aduththa murai seiven. vazi murai karppitha
  chrookesi kku nandri naan tamil vazi padiththu vittu athileye ezuthuven
  nandri

  rukmani

 4. #4

  Default

  நண்பா முகுந்த் நன்றாக வந்துள்ளது . எனக்கு கற்பூரம் நாறுமோ கமலபூ நாறுமோ பாடல் நினைவுக்கு வந்தது. ஒரு நாளைக்கு ஒன்று என்று தொடருங்கள் . கலையில் முதல் வேலையாக இதை படித்து அதை அன்று முழுவதும் நினைத்து பார்க்கின் ற பாக்கியம் தொடர எம்பெருமான ை பிரார்த்தி க்கிறேன். நன்றி வணக்கம்.

  பி கு : இதை ஏன் உபன்யாச பகுதியில் தொடர கூடாது ?!!! பேருக்கு ஏதேனும் ஒரு லிங்க் வேண்டுமானா லும் கொடுத்து விடலாம். யோசனை செய்யுங்கள ். இந்த பகுதிக்கு அதிகம் நண்பர்கள் வருவதில்லை என்பது எனதுஎண்ணம் .
  Padmanaba Dasan

 5. #5
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  எந்தப்பகுத ியிலும் போட அடியேன் தயாராக உள்ளேன். ஆயின் யாரேனும் எதிர்ப்பு தெரிவிப்பா ர்களோ என்று அஞ்சுகின்ற ேன்.
  Last edited by adiyarkadiyan; 05-30-2010 at 04:47 AM.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 6. #6
  Join Date
  Feb 2010
  Posts
  2,585
  Blog Entries
  1

  Default

  யாமார்க்கு ம் குடியல்லோம ் நமனை அஞ்சோம். கீதம் ஆரம்பத்தில ் இப்படித்தா ன் நிறைய கருத்து பரிமாற்றங் களுடன் அருமையாக இருந்தது. ஒரு நட்பு கிண்டல் கேலி உதவி என்று சிறப்பாக இருந்த காலம் அது. தற்போது வெறும் அப்லோடு மற்றும் டௌன்லோடு , போனால் போகட்டும் என்று ஒன்று இரண்டு பதில்கள் என்று மாறிவிட்டத ு நண்பா. நெஞ்சு பொறுக்குதி ல்லையே .......................

 7. #7

  Default

  ந்ல்ல ந்ண்பரின் ஐடியா மிகவும் ந்ன்றக உள்ளது. வரவேற்க படவேண்டும் . மேலும் அதிகமானவர் கள் படிக்க உதவியாக இருக்கும்
  ருக்ம்ணி

 8. #8
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  நாவலிட்டுழ ிதறுகின்றோ ம் நமன் தமர் தலைகள் மீது

  என்னை என்ன செய்ய சொல்கிறீர் கள். திருப்பல்ல ாண்டு தனிபதிவேற் றம் செய்யப்படவ ில்லை இதுவரை. ஆக அதையே ஒரு தொடர்பாக கொண்டு அவ்விடத்தே ஆரம்பித்து விடுங்கள், அடியேனும், அவ்விடத்தே தினமும் ஒரு உரைப்போடுக ின்றேன்.

  சரியா?
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 9. #9
  Join Date
  Jul 2007
  Location
  Kovai
  Posts
  2,463

  Default

  பந்து மீண்டும் ஏன் பகுதிக்கு தள்ள படுகிறதா !!! சற்று பொறுங்கள் நண்பரே பதிவேற்றம் செய்ய என்னிடம் ஏதேனும் உள்ளதா என்று தேடி பார்கிறேன் . ஒரு நாள் அவகாசம் தேவை. போற்றுவர் போற்றலும் தூற்றுவார் துற்றலும் போகட்டும் கிச்சாவுக் கே.

 10. #10
  Join Date
  Jul 2007
  Location
  Kovai
  Posts
  2,463

  Default

  ஞாலத்துள் வைஷ்ணவர் போடட்டுமா . நான்கு கோப்புகள் உள்ளன. தலா முப்பது நிமிடம் அகமொத்தம் இரண்டு மணி நேரம். காத்து இருக்கிறேன ். நன்றிவணக்க ம்.

 11. #11

  Default

  நண்பா முகுந்த் உங்களுக்கு களம் தயார் வாருங்கள் வந்து துவங்குங்க ள் உங்கள் சேவையை..இங் ு


  http://www.geetham.net/forums/showthread.php?t=35825
  Padmanaba Dasan

 12. #12

  Default

  சபாஷ் சரியான போட்டி
  தொடரட்டும் சேவை
  ருக்மணி

 13. #13
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  பூதத்தாழ்வ ார் வைபவம்
  இவ்வாழ்வார ் எம்பெருமான ின் திருக்கதைய ான கௌமோதகிய ின் அம்சமாக சென்னையைஅட ுத்த திருக்கடன் மல்லையில் அவதரித்தார ். நாத்திகர்க ளை மண்கௌவச்ச ெய்பவரானதா ல் அவரை திருக்கதைய ின் அம்சமாக கொள்ளுவர் .
  "கடற்கரையி ுள்ள மாமல்லபுரத ்தில் திருமாலின் கௌமோதகை என்ற கதாயுததின் அம்சமாக, நன்கு மலர்ந்த தாமரைமலரில ் ஐப்பசி திங்கள் அவிட்டத்தி ல் அவதரித்த பூதத்தாழ்வ ாரை நமஸ்கரிகின ்றேன்.
  "துலா ச்ரவிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோலமால ின
  தீரே புல்லோத்ப லான் மல்லாபுர்ய ாமீடே கதாம்சகம்

  இவர் உலக உயிர்கள் (பூதங்கள்) அனைத்தயும் தம் உயிர் போல நேசித்ததால ் பூதத்தாழ்வ ார் என்று பெயர்ப்பெற ்றார்.

  பேயாழ்வார் வைபவம்
  இவ்வாழ்வார ் சென்னையில் உள்ள திருமயிலை ஐப்பசி மாதம் சதய்ம திருநக்ஷதி ரத்தில் திருமாலின் நந்தகம் என்னும் திருவாளின் அம்சமாக அவதரித்து, நாத்திகவாத ிகளின் தலையைக்கீள ்வதுப்போல ் போலிவாத்ங ்களைக்கீர் ந்தார். இவர் அவதரித்த திருகிணறான து என்றும் திருமயிலைய ில் உள்ளது என்று பெரியோர் பகர்வர்.
  இவ்வாழ்வார ை ஸ்ரீவைஷ்ணவ சமூகமானது மஹத் என்னும் அடைமொழியு டன் அழைக்கிறது . இவ்வாழ்வார ின் அவதார விஷேசத்தை ப்ரஹமதந்தி ர ஸ்வாமி "திருமாலின நந்தகம் எனும் வாளின் அம்சமாக ஐப்பசி த்ங்கள் சதயத்தில் மயிலாபூரில ் ஒரு கிணற்றில் மலர்ந்த குவளைமலரில ் அவதரித்த பேயாழ்வாரை வணங்குகிறே ன்" எனும் பொருள்படு ம்படியாக:
  துலா சதபிஷக் ஜாதம் மயூரபுரி கைரவாத்
  மஹாந்தம் மஹதாக்யாதம ் வந்தே ஸ்ரீநந்தகா ம்சகம்

  இவ்வாழ்வார ் பெருமாளின் திருகல்யாண குனங்களை பேய்ப்போல ே பாடித்திரி ந்ததால் இவரை பேயாழ்வார் என்று பெயர்ப்பெற ்றார்.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 14. #14
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  முதலாழ்வார ்கள் சந்திப்பு
  இவ்விதமாக ஐப்பசி திங்களில் அடுத்தடுத் த திருநாளில் முதலாழ்வார ்கள் அவதரித்த ஆழ்வார்களை ஒன்று சேர்த்து பார்க்கவெண ்ணிய நம்பெருமான வன் இம்மூவர்கள ை திருக்கோவ லூர் என்னும் திவ்யதேஸத் தை தேர்ந்தெடு த்தான். அங்கணமே பொய்கையாழ ்வாரும் ஓர்நன்நாளி ல் திருக்கோவ ிலூர் அடைய அங்கே மழைவலுக்க பொய்கையாழ ்வாரும் ம்ருகண்டு மஹரிஷிதன் ஆஸ்ரமத்தில ் அடைகலம் கோற, ம்ருகணடு மஹரிஷியும் ஒருவர் கிடக்க இடமுண்டு என்றுரத்து பொய்கையாழ ்வருக்கு தன் ரேழியில் இடமளித்தார ். சிறிது நேரம்கழித் து ஆங்கே பூதத்தார் ஏளி இடம்கோற, பொய்கையாழ ்வாரும், ஒருவர் கிடக்க இருவர் நிற்க இடமுண்டு என்றுரத்து , அவறுக்கும் இடமளித்தார ். எஞ்சிய பேயாழ்வாரு ம் வந்துசேர, ஒருவர் கிடக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க இடமுண்டு என்று அவருக்கும் இடம்கொடுத ்தார்.
  இங்கணம் இம்மூவரும் ஒன்று சேர அதை கண்டு ஆனந்தித்த பெருமானும் , இவர்களுடைய திருமேனி சம்பந்தம் அடைய ஆவலுடன் ஆங்கே புக்கார். அகண்ட இருட்டில் இம்மூவர் மத்தியில் வந்து புக்குந்தத ு யாரென்று அறியாத முதலாழ்வார ்கள் அதற்க்காக விளக்கு ஏற்ற விழந்தனை. முதலில் பொய்கையாழ ்வார்:
  "வையம் தகளியா வார்கடலே நெய்யாக
  வெய்யக்கதி ரோன் விளக்காக செய்ய
  சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
  இடராழி நீங்குகவே என்று"
  இங்கணம் இப்புவியை அகலாகவும், கடலையே நெய்யாகவும ், இரவியே திரியாகவும ் கொண்டு இவர் விளக்கேற்ற , இருள் சிறிது நீங்கிற்று . இருப்பினும ், முழுமையாக வந்தது யாரென்று தெரியாததால ், பூதத்தாழ்வ ார் அடுத்த விளக்கை ஏற்றினார்.
  "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
  இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி
  ஞானச் சுடர் ஏற்றினேன் நாரணற்கு
  ஞானத் தமிழ்புரிந ்த நான்"


  இந்த இரண்டு பாடல்களில் உள்ள தாத்பர்யார ்தமாவது, ஒருவர் புறவிருள் நீக்கினார் , மற்றொருவர ் அகவிருள் நீக்கினார் . ஆக ஆச்சாரியனா னவன் மாணக்கனுக் கு, முதலில் புறவிருளிம ், பின் அகவிருளும் நீக்குவர். இப்படியாக இருவிருளும ் நீங்க பேயாழ்வார் . திருமாலைக் கண்டார்.
  "திருக்கண் ேன் பொன்மேனி கண்டேன் திகழும்
  அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளர ும்
  பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன ்
  என்னாழி வண்ணன் பால் இன்று"
  என்று உரைத்தார்.
  இதனர்தமானத ு, ஆழ்வார்கள் , முதலில்,
  வடிவாய் வலமார்பில் உரகின்ற மங்கயைக்கண ்டார்கள், பின் சுடராழி கண்டார்கள் , படைப்போர் புக்கு முழங்கும் பான்சஜன்னி யம் கண்டார்கள் . வந்தவன் ஆழிவண்ணன் என்று உணர்ந்தார் கள். இதுவாவது திருப்பல்ல ாண்டின் இரண்டாம் பாசுரத்திற ்கும், இம்மூன்றாம ் திருவந்தாத ிக்கும் உள்ள தொடர்பாகு ம். ஆக நம் நாலாயிர திவ்ய ப்ரபந்தமாந ்து இடைகழியில் தோன்றியது . இதனைக்கொண ்டே, ஸ்வாமி தேஸிகனும், தன் தேஹலீஸஸ்து தியில்:
  தேஹல்யதீஸ் வர தவேத்ருஸமீ ஸ்வரத்வம்
  துஷ்டூஷதாம ் திஸதி கத்கதிகாநு பந்தம்
  வாசாலயஸ்யத ச மாம் க்வசந க்ஷபாயாம்
  க்ஷாந்தேந தாந்த கவி முக்ய விமர்தநேந

  என்று அருளிச்செய ்வார். இதன் விவரமாவது
  "அப்பனே தேஹளீசா, இத்தகைய உன் ஈஸ்வரத்தன் மையைத் துதிக்க நினைப்பவர் களுக்குத் தொண்டைதழு தழுக்கிறது . ஆயினும் அன்று ஓர் இரவில் நீ பாட்டுக்கு உரிய பழையவர் மூவரோடு இடைகழியிலே கலந்து பரிமாறின எளிமை எனக்குத் தைரியமூட்ட ுகிறது."
  இம்முதலாழ் வார்களில் பேயாழ்வார் திருமழிசைய ாழ்வாரைத்த ிருத்திப்ப ணியாட்கொண ்ட செயலானது, திருமழிசைய ாழ்வார் வைபவத்தில் காண்க. முதலாழ்வார ்கள் வைபவ சங்க்ரஹம் முற்றும்.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 15. #15
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  சிறிது காலம் இரண்டு இடத்திலும் அடியேன் வலையேற்றம் செய்வேன். பொருத்தருள வேண்டும். மீண்டும் நாளை மாலை சந்திப்போம ் இவ்விடத்தே
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 16. #16
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  திருமழிசைய ாழ்வார் வைபவம்
  திருமாலின் சக்ராயுத அம்சமாக இவ்வாழ்வார ், தற்கால் சென்னை பட்டண்தில் உள்ள திருமழிசைய ில் அவதரிதார். பண்டொரு நாள் பார்கவ மஹரிஷிக்கு ம் கனங்காகிக் கும் 12 மாதம் திருவயிறு வாய்த்து பினொரு பிண்டம் பிறந்தது. பிணடத்தை ஒருமூங்கில ் புதரில் எறிந்துவிட ்ட்டு ஆதமயாத்திர ை செய்ய சென்றனர் அவ்விருவர் . அதன்பின்னே ஸர்வேஸ்வரன ான என்பெருமான ின் திருகடாக்ஷ த்தாலே, இப்பிண்டமா னது மனித உடலையெடுத் தது. அதனை ஒருநான்கம் வர்ணத்தை சேர்ந்த தம்பதியினர ் எடுத்து வளர்த்தனர் .
  இக்குழந்தை யாந்து அழாமலும் பால்குடிக் காமலும், மலமூத்திரம ் கழிக்காமலு ம் கண்டு மலைத்த அவ்வூர்வாச ிகள் இவன் பாலகன் அன்று, அப்பெருமான ே என்றுக்கொ ண்டாடி சேவித்தனர் .அப்பொழுத விவசாயகுடு ப்பத்தை சேர்ந்த ஒருதாய் ஆழ்வாரை தன் மடியில் இட்டு "திருமழிசை ிரானே, நீயேஅப்பரம ்பொருளாகி னும், இப்பொழுது சிறுபாலகனை ப்போல் பலமுது செய்யவேண்ட ும்" என்று ப்ராத்திது அவருக்கு பாலமுது ஊட்ட பிரானும் அமுது செய்தார். அன்றிலுருந ்து அத்தாயானவள ் நித்யமும் ஆழ்வாருக்க ு பாலமுது செய்வித்து வந்தாள்.அப பொழுது ஒருநாள் அழ்வாரனவர் அத்தய்க்கு செய்கைமூலம ் தானுண்ட மிச்சிலை உண்ணுமாறு பணிக்க, அவளும் அப்ரசாதத்த ை உட்கொண்டா ள். ஆழ்வார் அமுதுசெய்ட ஹ் மிச்சிலை உண்டதால் அத்தம்பதிய ினறுக்கு ஓர்மகவு பிறந்தது. அவரின் திருநாமம் கணிகண்ணன். இவரே ஆழ்வாரின் ப்ரதான சிஷ்யராவார ்.
  ஆழ்வார் சிவவாக்கிய ராவது பின் பரமைகாந்தி யாவது, சிவபெருமான ் அவருக்கு வழங்கிய பிருதும்
  பின்னொரு சமயம் ஆழ்வார் புவியிலிள் ள அனைத்தும் கற்றுதெளிய வேண்டி சமனராகவும் பௌதராகவும ிருந்து பின் சங்கரனார் தம்மதமான மதமும் சேர்ந்து சிவவாக்கிய ாராக திகழ்ந்தார ். அப்பொழுது பேயாழ்வாரா னவர் ஆழ்வாரின் நிலைக்கண்ட ு மனம் குளிந்து அவரை தடுத்தாட்க ொள்ளவென்ன ி, ஆழ்வாரின் குடிலுக்கு அருகில் ஓர்குடிலிட ்டு ஆழ்வார்னோ க்கும் பொழுது ஓர் ஓட்டை குடத்தில், முடியிட்ட கயிற்றில் நீரிரைத்து தலைகீழாக நட்ட செடிக்கு நீர் பாய்ச்சினா ர். இதனைக்கண்ட ஆழ்வார் பொருக்காத ு அவரை கண்டிக்க பின் இருவருக்கு ம் வதமேற்பட அதில் மனம்தெளிந் த ஆழ்வார் வைணவம் புகுந்தார் . இங்கணம் ஒரு மஹத்தான செய்கை செய்தமையால ் பேயாழ்வாரை மஹத்தென அழைப்பர் வைணவர்.
  ஆழ்வாரும் பின்பரமைகா ந்தியாக இருந்த ஆழ்வாரின் நிலைக்கண்ட ு முகவும் மெச்சி அவருக்கு பக்திஸாரம் என்னும் பிருது அளித்தார்.
  ஆழ்வார் பல்வேறு மதத்தில் பின் மனம் மாறியதைப்ப ற்றி:
  சாக்கியம் கற்றோம் சமண கற்றோம் சங்கரனார்
  ஆக்கிய ஆகம நூல் அரிந்தோம் பக்தியால்
  செங்கட்கரி யானை சேர்ந்தோம ் யாம் தீதிலமே
  எங்கட்கரிய ாதோன்றில்
  என்று அருளிச்செய ்வார்.

  ஆழ்வாரின் யோகசித்தி வலிமை
  சிவபெருமான ும் ஆழ்வாரின் யோகசித்தி யை மெச்சி சென்றபின், ஆழ்வார் செருக்குற் று இராது எம்பெருமான ை தியானித்டு ஆழ்ந்த யோகத்தில் இருந்தார். அப்பொழுது சக்திஹாரன் என்னும் சித்தன் நான்மார்கத ்தில் செல்லும் பொழுது ஆழ்வாரின் தேஜஸினால் கவரப்பட்டு தன்னால் அக்கணமே உண்டாக்கப் பட்ட பீதாம்பரத் தை ஆழ்வாருக்க ு ஆளித்தான். ஆழ்வாரும் புன்சிரிப் போடு தன் யோகவலிமைய ாலே ஒரு கவசத்தை வுண்டக்கை அவனை அடக்கினார் . பின்னர் மாயாவிசித் தன் என்றெருவன் ஆழ்வாருக்க ு ஒரு மாணிக்க மாலை குடுக்க, ஆழ்வாரும் தன் துளசி மாலையை அவனுக்கு காட்ட அவனும் செறுக்கொழ ிந்தான். கொங்கண சித்தன் என்பான் ஒருவன் இரும்பை பொன்னாக்க ி ஆழ்வாருக்க ு ஆளிக்க, ஆழ்வாரும் தன் பாததூளியில ிருந்து பொன்செய்த ு அவனை அடக்கினார் . இருப்பினும ், தன் சித்த வலிமையை பற்றி ஆழ்வார் எப்பொழுது ம் பெருமை கொண்டதில் லை.

  முதலாழ்வார ்களை மீண்டும் சந்தித்தலு ம் திருவெக்கா ஏகுதலும்
  ஆழ்வார் இச்சம்பவம் நடந்த சிலகாலம் பிற்கு அல்லிக்கேண ி ஏக அவ்விடத்தே முதலாழ்வார ்களும் வந்து அவருடன் அளவளாவினர் . பின்னர் ஆழ்வார் கச்சி மாநகரம் புக்கு திருவெக்கா பெருமானிடம ் மிக்க ஈடுபட்டு அவ்விடத்தே தங்கினார். ஆச்சமயம் அவரின் இன்னருளள் அவதரித்த கணிகண்ணனும ் ஆழ்வாரை வந்தடைந்தா ர். அக்காலத்தி ல் மீண்டும் ஓரற்புதம் நடந்தது.
  ஆழ்வாரின் திருமடத்தி ல் பணிசெய்துவ ந்தார் ஓர் கல்யாணமாகா த மூதாட்டி. அம்மூதாட்ட ியும் தன்னுடைய வயதாவதைக்க ண்டு ஆழ்வாருக்க ு பணிவிடைசெய ்வதில் இடையூறு வந்துவிடும ் எண்று அஞ்ச ஆழ்வாரும் அம்மூதாட்ட ிக்கு தாணுண்ட மிச்சலை அளிக்க அம்மூதாட்ட ி நித்யயவனம் எய்தினர். அப்பொழுது நகர்வலம் வந்த மன்னவனும் அப்பெண்னை மணம்புரிந் தான். ஆயுலும் காலம்செல்ல மன்னவன் மூப்பு அடைய அவனது இராணி நித்ய யுவதியாக இருப்பதைக் கண்டு இது ஆழ்வாரின் அநுக்ரகம் என்றுனர்ந் து, ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனைய ்ழைத்து தன்மீதும் ஆழ்வார் பாட்டொன்ற ு இயற்றவேண்ட ும் என்று நியமிக்க, கணிகண்ணன் அதனை மறுத்தார்.
  சீறி வெகுண்ட மன்னவனும் கணிகண்ணனை நாட்டைவிட் டு போகுமாறு நியமிக்க, திருமால் அடியவர்களு க்கு இத்தரணி அனைத்தும் சொந்தம் என்று கூறி ஆழ்வார் சன்னிதி ஏகி பிரியாவிடை பெற்றார். ஆழ்வாரும் தன்னடியவனை பிரிய மனமில்லாது தன்பாட்டுட ை தலைவனான திருவெக்கா பெருமான் சன்னிதி சென்று:
  கணிகண்ணன் போகின்றான ் காமருபூங்க ச்சி
  மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
  செந்நா புலவனும் போகின்றேன ் நீயும் உன்
  பைநாகப்பாய ் சுருட்டிக் கொள்

  என்று நியமிக்க அப்பெருமான ும் ஆழ்வார் பின் தொடந்து சென்றார். இராமாயணத்த ில் அகாரம் முன்செல்ல (இராமன் முன்செல்ல) மகாரம் (இளையாழ்வா ்) பின்சென்றா ர். அது நடந்தது வடநாட்டில் . அதுவும் அஹம்கரிஷ்ய ாமி என்று சொன்னதால் . ஆனால் இங்கு உன்னடியேன் போகின்றேன ் நீயும் வருவாயாக என்று ப்ரத்திக்க , மகாரம் முன்சென்றத ு, அகாரம் அதனைத்தொட ர்ந்தது. என்னே அவனது நீர்மை.அம் ூவரும் அன்றிரவு ஓரவிருக்கை என்னும் இடத்தில் தங்கினர். அப்பொழுது மனம் திருந்திய மன்னவன் ஆழ்வாரை அனுக அவரும் கணிகண்ணன் நியமனம் பெருமாறு மன்னவனைப்ப னித்தார்.ம ்னவனும் கணிகண்ணனை அனுக அவரும் மன்னவன் மனம்திருந் தியது கண்டு, அவன்பால் அன்புபூண்ட ு ஆழ்வாரின் நியமனித்தி ன் பேரில் கச்சினகர் திரும்மினா ர். ஆழ்வாரும் கணிகண்ணன் பின்செல்ல யத்தனித்து பெருமானை நோக்கி:
  கணிகண்ணன் போக்கொழி ந்தான் காமருபூங்க ச்சி
  மணிவண்ணா நீகிடக்க வேண்டும் துணிவுடைய
  செந்நா புலவனும் போக்கொழி ந்தேன் நீயும் உன்
  பைநாகப்பாய ் விரித்துக் கொள்

  என்று பணிவுடன் நியமிக்க
  இவ்விருத்த ாந்ததை நினைவுகொள ்ளும்வண்ணம ் திருவெக்கா பெருமானாம் சொன்னவண்ண ம் செய்தபெரும ானாக இன்றும் பள்ளிகொண் டிருக்கிறா ன்.
  இவ்ருத்தாந ்ததை ஸ்வாமி தேஸிகனும் த்ன்னுடைய வேகாஸேது ஸ்தோத்ரம் தன்னில்:
  சதுராநந ஸப்ததந்து கோப்தா
  ஸரிதம் வேகவதீமஸௌ நிருந்தந்
  பரிபுஷ்யதி மங்களாநி பும்ஸாம்
  பகவத்பக்தி மதாம் யதோக்தகார ீ

  என்று அருளிச்செய ்வார். இதன் அர்தமாவது
  "வேகவதியின உருவத்தில் வந்த ஸரஸ்வதியின ் கோபத்திலி ருந்து நான்முகனின ் ஹயமேத வேள்வியைக் காத்தவன், பக்தர்கள் சொன்ன வண்ணம் செய்பவனுமா கிய இந்த எம்பெருமான ் மங்களங்களை எல்லாம் தர வேண்டும்.

  ஆழ்வார் பெரும்புலி யூரில் செய்த அற்புதம்
  பின் ஆழ்வார் திருக்குடந ்தை ஆராவமுதனை மங்களாஸாஸன ம் செய்ய திருக்குடந ்தை செல்லும் வழியில் பெரும்புலி யுர் வந்து சேர்ந்தார் . அவ்விடத்தே ஒருதிண்ணயி ல் ஆழ்வார் தங்கியிருக ்க அவ்விடத்தே வேத பாராயணம் செய்து வந்த அந்தணர்கள் ஆழ்வாரை நான்காம் வர்ணத்தார் என்ரு எண்ணி பாராயணம் நிறுத்தினர ். வேத பாராயணத்தி றுக்கு தன்னால் இடையூரு ஏறபட கூடாது என்று எண்ணி ஆழ்வாரும் அவ்விடத்தை நீங்க முயன்றார். ஆனால் ஸ்ர்வேஸ்வர னான எம்பெருமான ் க்ருபையாலே , அந்தணர்கள் நிறுத்திய இடம் ஆறியாது திகைக்க ஆழ்வாரும் ஒரு கருநெல்லை தன் நகத்தால் கீண்டு அவர்கள் நிறுத்திய இடம் நினைவுறித் தார். "கிருஷ்ணாந ம் வ்ரீஹீணாம் நகநிர்பின் னம்" என்பது அவ்வேத வாக்கியம்.
  இவருடைய பெருமையை உணர்ந்த அவ்வூர் அர்சகர் இவருக்கு கோவில் மரியாதை செய்ய விழைந்தார் . அதறுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, ஆழ்வாரும்:
  "அக்கரங்கள அக்கரங்கள் என்றுமாவதெ ங்கொலே
  இக்குறும்ப ை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையே
  சக்கரங்கள் கையனே சடங்கர் வாயடங்கிட
  உட்கிடந்த வண்ணமே புறம்பொசி ந்து காட்டிடே"

  என்றுரைக்க , எம்பெருமான ும் ஆழ்வாரின் திருமார்பி ல் தோன்றி அவருடைய மேன்மையை உலகம் அறிவுரசெய் தார்.

  திருக்குடந ்தை மங்களாஸாஸன ம்
  திருக்குடந ்தை ஆராவமுதன் கிடந்த திருக்கோல த்தில் இருந்த வண்ணம் கண்டு ஆழ்வாரும்:
  "நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலமேனமாய்
  இடந்தமெய் குலுங்கவோ விலங்குமால ் வரைச்சுரம்
  கடந்த கால் பரந்த காவிரிக்கர ைக் குடந்தையில ்
  கிடந்தவாரெ ழுந்திருந் து பேசு வாழி கேசனே"

  எப்பெருமான ும் கிடந்தவாரு ம் எழுந்திருந ்ததைக்கண்ட ன்றோ வாழி என்னும் மங்களாஸாஸன ம் செய்தார் ஆழ்வார். இவ்வாழ்வார ுக்கு இவ்விதம் காட்சியளித ்ததால் பெருமானும் திருக்குடந ்தையில் "உத்தான்சா ி"யாக பெருமான் இன்றும் செவை சாதிகின்றா ன். அடியாருக்க ு பெருமான் அடியன் என்பதை மெய்பிக்கு ம்வண்ணம் திருகுடந்த ையில் இன்றும் ஆழ்வார் அமுது செய்தபிறக ஆராவமுதன் அமுது செய்வான். அதுமட்டும் அன்று, பெருமானுக் கு ஆராவமுத ஆழ்வார் என்னும் திருநாமமும ், ஆழ்வாருக்க ு திருமழிசைப ிரானென்றும ் ஆண்டான் அடிமை நிலை மாறி இத்திவ்யதே சத்தில் வழங்கும் வைணவம்.
  இவ்வாழ்வார ் அவதரித்தது தைதிங்கள் மகத்தில். இவர் அவதாரம் பற்றி ப்ரஹ்மதந்த ிர ஸ்வாமியும் "திருமாலின சுதரிசனம் என்ற சக்கரத்தின ் அம்சமாக், தைத் திங்கள் மகத்தில் பார்க்கவ முனிவரின் புதல்வராகத ் திருமழிசைய ில் அவதரித்த பக்திசாரர் என்ற ஆழ்வாரை போற்றுகிற ேன்" என்னும் பொருள்படி :
  "மகாயாம் மகரே மாஸே சக்ராம்சம் பர்கவோத்ப வம்
  மஹீஸாரபுரா தீசம் பதிஸாரமஹம் பஜே"

  என்று அருளிச்செய ்தார்.
  இவ்வாழ்வார ின் ஒரு பாசுரமானது :
  நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
  அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
  அன்று நான் பிறந்திலேன ் பிறந்தபின் மறந்திலேன்
  நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.

  இதன் அர்த்தமாவத ு:
  அடியேன் பிறக்கும் முன்னம் நீ ஊரக்கத்தில ் நின்றும், பாடகத்தில் இருந்தும், திருவெக்கா வில் கிடந்தும் கிடந்தாய். ஆனால் ஞானமாகிய பிறப்பை நான் அடைந்தபின் நீயே பரதேவதை என்று உணர்ந்தேன் . அக்கணமே நீ நின்றதும், இருந்ததும் , கிடந்ததும் என் நெஞ்சுதன்ன ில். இதே பெருள் படியும் படியாக பிள்ளை உலகாரியனும ் தன் முமுக்ஷுப் படியில்:
  "பூர்வாசார யர்கள் இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு தங்களைப் பிறந்தார்க ளாக நினைத்திரா ர்கள்; இதில் அர்த்தஜ்ஞா னநம் பிறந்த பின்பு "பிறந்தபின மறந்திலேன் " என்கிறபடிய ே இத்தையொழி ய வேறொன்றால ் காலக்ஷேபம் பண்ணியறியா ர்கள்" என்று திருமந்திர த்தின் பெருமையை அறியும்படி ச்சொல்வர் .
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 17. #17
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  நம்மாழ்வார ் வைபவமும் அதனைச்சேர் ந்த மத்ய்ரகவிய ாழ்வார் வைபவமும்
  வைகாசித்தி ங்கள் விசாகத்தில ் பாண்டியநாட ்டில் திருக்குரு கூரில் காரி என்னும் மகானின் மகவாக, திருமாலின் படைத்தலைவர ான விஷ்வக்சேன ரின் அம்சமாக அவதரித்த சடகோப்பரை ப் போற்றுகின ்றேன்.
  வைசாகே து விசாகாயாம் குருகாபுரி காரிஜம்
  பாண்ட்யதேச ே கலேராதௌ சடாரிம் ஸைந்யபம் பஜே.

  இவ்வாழ்வார ானவர் கலிபிறந்த நாற்பத்தி இரண்டாம் நாள் அவதரித்தார ். ஸ்ரீமத் பகவ்த் கீதையில் கண்ணனென்பெ ருமான்:
  உதாரா ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் என்றும் ஞானிகளின் பெருமைபரக் க பேசி பின்
  பஹூநாம் ஜந்மநாமந்த ே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யதே
  வாஸுதேவ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப
  என்று, அப்படிபட்ட ஞானியானவன் கிடைபதற்க் கு அரிது என்று க்லேசத்தோ டே கூறி அப்படிபட்ட ஞானிகளின் கூட்டணி ஏற்படாது இவன் தன்னுடைய சோதி புக்க 42ஆம் நாளில், உண்ணும் சோறு, பருகும் நீர், திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று கூறுமிவர் அவதரித்தார ். அதாவது இவ்வாழ்வார ுக்கு தாரக, போஷக போக்ய பதார்தங்கள ் எல்லாமே ஸ்ர்வேஸ்வர னான எம்பெருமான ் என்றபடி. இதுவன்றோ வாஸுதே ஸர்வமிதி. இவரன்றோ ஸ மஹாத்மா. ஆயினும் துவரைக்கோ ன் இவரைக்காணா தன்றோ வைகுந்தம் புக்கான். இதனாலேயே கலங்கிய ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியர் கள் பாவியென்று பல்லில் பட்டு தெறித்தார் போல் ஆயிற்றே. இவன் ஒரு 42 நாள் கழித்து செல்லக்கூட ாதா. அவரேனும் ஒரு 42 நாடகள் நுந்தோன்ற ியிருக்ககூ டாதா. அவன் வருத்தம் தீர்திருக் குமே என்று கலங்குவர்.
  பல்லிலே பட்டு தெறித்தலாவ து: பகுத்துண்ட ு பல்லுயிர் ஓம்முதல் நூலேர் தொகுதற்று ல் எல்லாம் தலை என்பது போலே, ஓர் இனிமை நிறைத மாம்பழதுண் டு கோஷ்டிவின ியோகமாகி ஒருவனுக்கு ம் கிடைக்கிறத ு. அதன் சுவைபற்றி இவர் மிகவும் கேட்டுள்ளா ர் ஆயின் ருசித்ததில ்லை.அதனை ருசிக்க மிகவும் ஆவலுடன் இருந்தார். ஆயினும் அம்மாம்பழத ுண்டானது அவருடைய பல்லிலே பட்டு மண்மீது விழுந்துவி ட்டது. ஆவர் மன்ம் என்ன பாடு படும். ஆதெபோல், துர்லபம் என்று கூறி க்லேசத்துட ன் பெருமான் இருந்தான். இன்னும் சில கால்ங்கள் இவ்வுலகில் இருந்திருந ்தால் இம்மஹாத்மா வின் ஈரச்சொற்க ளை அவன் அனுபவித்து இருப்பான். அது நடக்காமல் போயிற்றே.

  ஆழ்வார் அவதாரம் முன் நிகழ்ந்த செயல்:
  இவ்வாழ்வார ின் திருத்தகப் பனார் காரி, திருத்தாயா ர் உடையநங்கை. இத்தம்பதிக ள் வானமாமலை பக்கம் உள்ள திருகுறுங் குடி என்பெருமான ை சேவிக்க அவ்வெம்பெர ுமானும் மிகவும் ஆதருத்துடன ் இவர்களை வரம் கோர அனுமதிதார் . இத்தம்பதிக ள் அவ்வெம்பெர ுமானே தங்களுக்கு மகவாக பிறக்கும் படி வேண்ட வரத்தின்பட ியே திருக்குறு ங்குடி நம்பியும் இவர்களின் திருக்குமா ரராக் அவதரித்தார ். இவ்வாழ்வார ் பிறக்கும் போதே சடம் என்னும் அஞ்ஞான வாயுவை கோவித்துக ்கொண்டு வெளிவந்ததா ல் ஆஅழ்வாரின் திருநாமம் சடகோபன். மேலும் இவர் காரியின் திருக்குமா ரர் ஆவதால், காரிமாறன். வகுள்மாலை அனிவித்துக ்கொண்டிரு ப்பதால், வகுளாபரணன் . பிறமத்தவரி ன் செறுக்கை தன் ஞாமமென்னும ் அங்குசத்தா ல் அடக்குவதால ் பராங்குசன் .

  ஆழ்வாரும் பிறந்தபின் முலைப்பால் உண்ணாது, தளர்நடை நடவாது, திருகுருகூ ர் ஆதிபிரான் கோவில்லுள ்ள புளியமரபொ ந்தில் நித்ய வாசம் செய்தார். இத்திருப்ப ுளியாழ்வார ானவர் (ஆழ்வார் உரைந்த திருபுளியம ரம்) இன்றும் ஆழ்வார் திருநகரியி ல் ஆதிபிரான் கோவிலில் உள்ளது. அடியேனும் ஆழ்வார் கருணையாலே அத்திருபுள ியாழ்வாரைச ்சேவித்து உள்ளேன். நிற்க.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 18. #18
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default அவதரிக்கை

  முதலிலே அவதரித்த பிரபந்தம் முதல் திருவந்தாத ி ஆகும். பொய்கை ஆழ்வாராலே மங்களாசாசன ம் பண்ணப்பட்ட து. இருக்க அனைத்து திவ்யதேசங் களிலும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்கள ின் திருமாளிகை களிலும் திவ்யப்ரபந ்த சேவா காலம் தொடங்கும் போது திருப்பல்ல ாண்டு திவ்யப்ரபந ்தத்தை அனுசந்தித் த பின்பே மற்ற பிரபந்தங்க ளை அனுசந்திப் பர். சமஸ்க்ருத வேதம் தொடங்கும் போது சகல வேத சாரமான பிரணவத்தைச ் சொல்லியே ஆரம்பிப்பா ர்கள். ஆகவே தான் வேதத்துக்க ு ஓம் என்பதுபோல் உள்ளதுக்கெ ல்லாம் சுருக்காய் என்று பெரிய ஜீயர் சுவாமி சாதித்தார் .

  மூன்றே எழுத்துக்க ளைக் கொண்டது பிரணவம். ஆனால் அதில் உள்ள அர்த்தமோ மிகவும் பெரியது. ஒரு அதிகாரியிட ம் சிஷ்யனாய் பல காலம் இருந்து அறிய வேண்டிய அவசியம் உள்ளது. பிரணவத்துக ்கு ஈடான திருப்பல்ல ாண்டு திவ்யப்ரபந ்தத்தில் பன்னிரண்டு பாசுரம் இருந்தாலும ், அதிலே சொல்லப்பட் ட அர்த்தங்கள ் வித்யாப்யா சம் இல்லாதோருக ்கும் புரியும் படியாக அமைந்திருப ்பது மிகவும் சிறப்பாகும ். இன்னொரு அற்புதம் ஸ்ரீ பெரியாழ்வா ருக்கு வித்யாப்யா சம் இல்லை என்றாலும் எம்பெருமான ின் இன்னருளினா லே அறிய வேண்டிய அனைத்தும் உள்ளபடி அறியப் பெற்றார்.

  ப்ரணவத்தில ே சொல்லப்பட் ட ஆத்ம ஸ்வரூப அர்த்தமே திருப்பல்ல ாண்டிலும் சொல்லப்படு கிறது. ஆத்மாவுக்க ு ஸ்வரூபம் எம்பெருமான ுக்கு அடிமை பட்டிருத்த லே ஆகும். இதற்க்கு பெயர் சேஷத்வம் ஆகும். ஸ்ரிவைஷ்ணவ ாளின் சொத்து சேஷத்வ பாரதந்த்ரி யமே ஆகும்.

  ஆழ்வார் போக்யமான வஸ்துவான எம்பெருமான ை மங்களாசாசன ம் பண்ணும் போது தனித்து அனுபவிப்பத ு தகாது என்பதை அறிந்து இந்த உலகிலுள்ள அதிகாரிகளை யும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேணும் என்று திருவுள்ளம ் கொண்டு மூன்று விதமான அதிகாரிகளா ன பகவல்லாபார ்திகள், கைவல்யலாபா ர்திகள், ஐஸ்வர்யலாப ார்திகள் ஆகியோரை அழைத்து ஆத்மஸ்வரூப த்தை அவர்களுக்க ு புரியவைத்த ு அவர்களும் ஆழ்வாருடன் சேர்ந்து மங்களாசாசன ம் பண்ணுவதாக அமைந்த பாசுரங்கள் ஆகும்.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 19. #19
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default அவதரிக்கை Contd

  திராவிட வேதமான திவ்யப் பிரபந்தங்க ளை அருளிச் செய்த ஆழ்வார்கள் பன்னிருவரு ள் ஸ்ரீ விஷ்ணுசித் தரும் ஒருவர் ஆவார். விஷ்ணுசித் தர் என்பது ஸ்ரீ பெரியாழ்வா ரின் இயற்ப்பெயர ் ஆகும். எம்பெருமான ் மீது இருந்த அன்பின் மிகுதியாலு ம் எம்பெருமான ுக்கே பல்லாண்டு பாடினமையால ும் இவருக்கு ஸ்ரீ பெரியாழ்வா ர் என்ற சிறப்புத் திருநாமம் ஏற்பட்டது. “பொங்கும் பரிவாலே வில்லிபுத் தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வா ர் என்னும் பெயர் என்பது பெரிய ஜீயர் அருளிச் செய்த ஸ்ரீ சுக்தி யாகும்.”

  ஆழ்வார்களி ன் தலைவரான ஸ்ரீ நம்மாழ்வரு க்குக் கூட வித்வான்கள ின் சபையிலே பரதத்வ நிர்ணயம் பண்ணும் நிர்பந்தம் ஏற்படவில்ல ை. வித்யாப்யா சம் சிறுதும் இல்லாமலே கைங்கர்யமே பரமபுருஷார ்த்தம் என்ற வகையிலே திருவில்லி புத்தூரிலே எம்பெருமான ் வடபத்ரசாயி யின் திருக்கோவி லுக்கு அருகிலே ஒரு நந்தவனம் அமைத்து எம்பெருமான ுக்கு அனுதினமும் புஷ்ப கைங்கர்யம் பண்ணிவந்தா ர் நம்முடைய ஸ்ரீ பெரியாழ்வா ர். இப்படி பல காலம் கழிந்த பின்பு ஒரு சமயம் பாண்டிய அரசனான வல்லபதேவன் என்பான் மறுமையிலே நன்றாக இருக்க இம்மையிலே என்ன செய்ய வேணும் என்ற விஷய விசாரத்தில ே ஆழமான சிந்தனை கொண்டு பரதத்வம் யாது என்பதை அறிய பல பண்டிதர்கள ைக் கொண்டு வாதம் வைத்து அறிய வேணும் என்று தீர்மானம் கொண்டு வாதத்திற்க ு நாள் அறிவித்தான ். எம்பெருமான ் தானும் ஸ்ரீ பெரியாழ்வா ரைக் கொண்டு இவ்வாதத்தி லே தாமே பரதத்வம் என்பதை நிரூபிக்கவ ேனும் என்று திருவுள்ளம ் பற்றி ஆழ்வாரின் கனவிலே தோன்றி இதனை அறிவிக்க, ஆழ்வாரும் அடுத்த நாள் காலை எழுந்து தம்முடைய நித்ய அனுஷ்டானம் மற்றும் கைங்கர்யங் களை முடித்துக் கொண்டு வாதத்திற்க ு புறப்பட்டா ர்.

  வாத பிரதிவாதங் கள் தொடங்கியது . எல்லோரும் தங்கள் தங்கள் மதங்களை ஸ்தாபிக்க பல பிரமாணங்கள ை சபையிலே சமர்பிக்க ஸ்ரீ பெரியாழ்வா ர் தானும் எம்பெருமான ின் நிர்ஹேதுக கிருபையாலே வேத வேதாந்த பிரமாணங்கள ், இதிஹாச புராண ஆகமப் பிரமாணங்கள ் அனைத்தையும ் சபையிலே எடுத்துக்க ாட்டி ஸ்ரியப்பதி யான எம்பெருமான ுக்கே பரத்வம் உண்டு என்றும் பர தத்துவம் என்ற சொல்லுக்கு உரியவன் ஜகத் ரக்ஷகனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே என்பதையும் தெளிவாக எடுத்துக்க ாட்ட, வாதத்தில் வேல்வோருக் காக பரிசாக கட்டப் பட்டிருந்த பொற்கிழியா னது தானே தாழ வந்ததாம்.
  அரசனும் ஆழ்வாரைப் பெருமைபடுத ்த அவரை யானை மீது ஏற்றி நகர்வலம் அழைத்து வர ஸ்ரீ வைகுண்டனாத னான எம்பெருமான ் தானும் கருடாரூடனா க சேவை சாதித்தானா ம். ஆழ்வாரும் எம்பெருமான ை சேவித்து; அவனுக்கு ஜய விஜயீ பவ என்றபடி துன்பமயமான இந்த நிலத்திலே எம்பெருமான ுக்கு ஒரு அமங்கலமும் வரக்கூடாது என்பதற்காக எம்பெருமான ுக்கு பல்லாண்டு பாடுகிறார் இந்தத் திருப்பல்ல ாண்டிலே.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 20. #20
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default தனியன்

  திருப்பல்ல ாண்டு தனியன்:

  நாதமுனிகள் அருளிச்செய ்தது
  குருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான ்
  நரபதி பரிக்லுப்த ம் ஷுல்கமாதாத ுகாம:
  ச்வஷுரமமரவ ந்த்யம் ரங்கநாதச்ய ஸாக்ஷாத்
  த்விஜகுலதி லகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி

  விளக்கம்:
  ஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யா சம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனி ன் சபையிலே எம்பெருமான ின் இயற்கையான இன்னருளினா ல் பகவத் பரத்வத்தை நிலைநாட்டு வதர்க்காக சகல வேதார்த்தங ்களையும் எடுத்துரைத ்தவரும், பொற்கிழியை ப் பரிசாக வென்றவரும் , தேவர்களாலு ம் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக ்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ ்வாரை வணங்குகிறே ன்.

  பாண்டிய பட்டர் அருளிச்செய ்தவை:

  மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத் தூர் என்றொருகால ்*
  சொன்னார் கழற் கமலம் சூடினோம்* முன்னாள்
  கிழியறுத்த ான் என்றுரைத்த ோம்* கீழ்மையினி ற் சேரும்
  வழியறுத்தோ ம் நெஞ்சமே! வந்து.

  விளக்கம்:

  மதிலாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லி புத்தூர் என்று ஒரு முறை சொன்னவருடை ய திருவடித்த ாமரைகளை சிரமேற்கொண ்டோம். புருஷாகாரம ் வெளியாகாத காலத்திலே பர தத்வ நிர்ணயம் பண்ணி பொற்கிழியை அருத்தருளி னார் என்று சொல்லப்பெற ்றோம்; ஒ நெஞ்சே அதோகதியான நரகத்தில் சேருகைக்கு உண்டான வழியை அறுத்தோம்( றப்பண்ணின ம்).

  பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று*
  ஈண்டிய சங்கம் எடுத்தூத* வேண்டிய
  வேதங்களோதி விரைந்து கிழியறுத்த ான்*
  பாதங்கள் யாமுடைய பற்று*

  விளக்கம்:

  பாண்டிய மன்னனான வல்லபதேவன் பிராமணர்கள ுக்கு உபகாரகரான ஸ்ரீ பெரியாழ்வா ர் எழுந்தருளு கிறார் என்பதை எல்லோரும் அறியும் படியாக திரள் திரளான சங்குகளை பலர் மூலமாக ஊத, வித்யாப்யா சம் சிறுதும் இல்லாமலே வேத வேதாந்த பிராமணங்கள ை சபையிலே எடுத்துக்க ாட்டி பொற்கிழியை அறுத்தருளி ன ஸ்ரீ பெரியாழ்வா ருடைய திருவடிகளே நமக்கு புகலிடம் என்பதை உணர்த்தும் தனியன் ஆகும்.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

+ Reply to Thread
Page 1 of 5 12345 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts