செட்டிநாடு மட்டன் குழம்பு
+ Reply to Thread
Results 1 to 2 of 2

Thread: செட்டிநாடு மட்டன் குழம்பு

 1. #1

  Default செட்டிநாடு மட்டன் குழம்பு

  செட்டிநாடு மட்டன் குழம்பு
  தேவையான பொருட்கள் :

  மட்டன் (இளம் ஆட்டுகறி) 1/2 கிலோ
  சீரகம் - 1 டீஸ் ஸ்பீன்
  மிளகு - 1 டீஸ் ஸ்பீன்
  சோம்பு -1 டீஸ் ஸ்பீன்
  பட்டை - இரண்டு விரல் அளவு
  லவங்கம் - 1 டீஸ் ஸ்பீன்
  நட்சத்திர பூ - மூன்று துண்டு
  காய்ந்த மிளகாய் - 6
  இஞ்சி - பாதி உள்ளங்கை அளவு
  பூண்டு - பெரிய பூண்டு 2
  பச்சை மிளகாய் - 4 கீறியது
  கருவேப்பிள ை - தேவையான அளவு
  கொத்தமல்லி - தேவையான அளவு
  தக்காளி - 2 பெரியது, சின்னதாக இருந்தால் 3
  சின்ன வெங்காயம் - 1/2 கிலோ

  செய்முறை

  இளங்கறியாக இருந்தால் அதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொஞ்சம் முத்தின கறியாக இருந்தால் தனியாக குக்கரில் போட்டு கொஞ்ச நேரம் வேக வைக்கவும். (இளங்கறியை எப்படி கண்டுபிடிப ்பது, வெட்டின ஆட்டிடம் பிறப்புச் சான்றிதழா கேட்க முடியும், ஹா ஹா ஹா. இளங்கறி என்பது பார்ப்பதற் கு ரோஸாக இருக்கும், முத்தின கறி என்பது சிகப்பாக இருக்கும். எல்லாரும் சிகப்பாக இருப்பது தான் நல்ல ஆரோக்கியமா ன ஆட்டின் கறி என்று அதை வாங்கிக் கொண்டு போய், ஒரு துண்டை அரை மணி நேரமாக மென்றுக் கொண்டு இருப்பார்க ள். அதே போல ஆட்டு உடலில் மிகவும் ருசினான பகுதி என்பது ஆட்டின் முன் இரண்டு கால்களில் இருக்கும் சதை தான்)

  இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, நட்சத்திர பூ, காய்ந்த மிளகாய் அனைத்தையும ் போட்டு வாணலில் நன்றாக வதக்கவும், அது பொன் நிறத்தில் மாறியவுடன் . அதை எடுத்து அம்மியில் போட்டு அரைக்கவும் . இந்த காலத்தில் யாரிடம் அம்பி இருக்கிறது , இன்னும் இரண்டு ஆண்டுகளில் அம்பியை எல்லாம் மியூஸியத்த ில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறே ன். மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயத்த ையும், தக்காளியைய ும் நன்றாக வதக்கி விட்டு அதையும் அரைத்துக் கொள்ளவும்.

  அடுப்பில் மண் சட்டு இருந்தால் அதை வைக்கவும், அப்படி இல்லை என்றால் சாதாரண அடிப்பிடிக ்காத பாத்திரத்த ை வைக்கவும், எண்ணையை கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளவும், காரணம் ஏற்கனவே வதக்கிய பொருட்களில ் எண்ணை இருப்பதால் , எண்ணையை கொஞ்சமாக விட்டு விடவும்.
  முதலில் கருவேப்பில ையை போடவும், அப்புறம் பச்சை மிளகாய் அப்புறம் அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை போடவும். கொஞ்ச நேரம் கழித்து தக்காளி வெங்காயம் அரைத்ததை போடவும். நன்றாக கிளறி விடவும். அதன் பின் கறியை போடவும். கலருக்காக கொஞ்சம் மிளகாய் பொடியை தூவிக் கொள்ளலாம், மசாலா நன்றாக கறியில் ஏறும் வரை கறியை அடிபிடிக்க ாமல் கரண்டியால் புரட்டவும் . அளவான தண்ணீரை ஊற்றி விட்டு அடுப்பில் தாழ்வான நெருப்பை வைத்து விட்டு அரை மணி நேரம் வேக வைக்கவும், கறி பஞ்சு பஞ்சாக ஆகும் வரை. அதன் பின் தேங்காயை தேவையான அளவு 3 பத்தை எடுத்துக் கொண்டு அதை அரைத்து குழம்பில் போட்டு, கொத்தமல்லி யையும் கலந்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.

  அருமையான காரமான சுவையான செட்டிநாட் டு மட்டன் குழம்பு ரெடி. இதை நீங்கள் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம ், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம ். இந்த குழம்பின் சுவை சாப்பிட்டு முடித்த பின்னும் நாக்கிலே ஒட்டிக் கொண்டு இருக்கும்.

 2. #2
  Join Date
  Sep 2007
  Location
  Trichy
  Posts
  978

  Default

  Dear Sathikdm,

  Please post your thread in the appropriate Sub-forums in future.

  Mods: May I reqeust for a change of this thread to the Non-Vegetarian section?
  Ragothaman N

  Happy moments, praise God.
  Difficult moments, seek God.
  Quiet moments, worship God.
  Painful moments, trust God.
  Every moment, thank God

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts