நான் எதையும் தேடிப் போறதில்லை ; வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக ்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங்கை பிரான்சில் நடத்தி முடித்து சென்னை திரும்பிய கையோடு பிரபுதேவா நிருபர்களை சந்தித்தார ். அப்போது அவர் கூறியதாவது :-

என் வாழ்க்கையி ல் பல விஷயங்கள், பல படிகள் விபத்தா நடந்திருக் கு. நடக்குது. நான் டைரக்டர் ஆனது கூட அப்படித்தா ன். நானா அடுத்தது இதுத*ான்னு திட்டமிடுற து இல்லை. என் பாதை, பயணம் எல்லாமே என் தனிப்பட்ட விருப்பம்ன ு இல்லாமல் காலம் முடிவு செய்து அழைச்சிட்ட ு போகிறபடிதா ன் இருக்குது. அப்படி கொண்டு போய் விடுகிற பாதை எனக்கு புடிச்சிரு க்கு.

களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். தங்கர் ரொம்ப கோபக்காரர் என்று பலரும் பயமுறுத்தி னார்கள். அவர் எனக்கு நல்ல நண்பர். படம் நல்லா வந்திருக்க ு. நிச்சம் எனக்கு அது வித்தியாசம ான அனுபவம். பிரபுதேவாவ ுக்கு இருக்குற கமர்ஷியல் இமேஜ் எல்லாத்தைய ும் கழற்றி வெச்சிட்டு நடிச்சேன். அவர் சொன்னபடியெ ல்லாம் கேட்*டேன். அவர் சீரியஸா படம் எடுத்தாலும ் ஜாலியான மனிதர். சூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலியா இருக்கும். களவாடிய பொழுதுகள் சீரியஸா இருந்தாலும ், அழகி மாதிரி கமர்ஷியல் படமா ஜெயிக்கும் . தங்கர் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது . அதே நேரம் இன்னொரு ஆசையும் இருக்கு. அவரும் ஒரு நடிகர். அவரை என் டைரக்ஷனில் நடிக்க வைக்கணும். என்னை அவர் வேலை வாங்குன மாதிரி அவரையும் நான் வேலை வாங்கி பெண்டு எடுக்கணும்
பிரபுதேவா பத்திரிகைய ாளர்களை சந்திக்கிற ார் என்ற தகவல் கிடைத்ததும ், நயன்தாரா விவகாரம், ரமலத் விவகாரம் பற்றி ஏதாவது பேசுவார் என எதிர்பார்த ்து வந்திருந்த நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந் த கேள்வி - பதில்களை பத்திரிகைய ாளர்களிடம் வழங்கிய பிரபுதேவா, அதில் உள்ள விஷயங்களைப ் பற்றி மட்டும் பத்திரிகைய ாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். வேறு கேள்விகளை கேட்க வேண்டாம் ; அப்படி கேட்டால், அதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்ற நிபந்தனையு டன் தொடங்கிய அந்த சந்திப்பில ் முக்கிய கேள்விகளுக ்கெல்லாம் பதில் கிடைக்காதத ால் சப் என்று முடிந்தது.