சின்னத்திர ை நடிகை புவனேஸ்வரி பாவத்தின் சம்பளம் என்ற புதிய தொடரில் நடிக்கிறார ். தமிழ் சீரியல்களி ல் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த புவனேஸ்வரி , தெலுங்கு சீரியல்கள் மற்றும் சினிமாக்கள ிலும் கொடிகட்டி பறந்தார். விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி , அதன் பிறகு சின்னத்திர ையில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இடையில் அரசியல் அழைக்க, அதில் கவனம் செலுத்தியத ால் நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்போது இந்த இடைவெளியைக ் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திர ைக்கு வருகிறார் புவனேஸ்வரி . வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ ் தினத்தில் ஒளிபரப்பாக விருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான்சுவா ங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங ்களும் நடிக்கிறார ்கள். எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக ்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.
Bookmarks