பி.பி.ஸ்ரீந வாஸ் காலமானார்
+ Reply to Thread
Results 1 to 5 of 5

Thread: பி.பி.ஸ்ரீந வாஸ் காலமானார்

 1. #1
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default பி.பி.ஸ்ரீந வாஸ் காலமானார்

  பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீந வாஸ் காலமானார்

  தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீந வாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளா ர்.

  இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனால் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில ் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82.

  காலமான பி.பி.ஸ்ரீந வாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில ் காக்கிநாடா மாவட்டத்தி ல் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந் ரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார ். வெண்கலக் குரலில் பாடிவந்தோர ் காலகட்டத்த ில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்த வர் பி.பி.ஸ்ரீந வாஸ்.

  'காலங்களில அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’ ‘நிலவே என்னிடம் நெருங்காதே ’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர்.

  தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில ் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும ் இவர்தான் பின்னணி பாடியுள்ளா ர்.

  பி.பி.ஸ்ரீந வாஸ் மறைவிற்கு தமிழ் திரையுலகைச ் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும ் இரங்கல் தெரிவித்து ள்ளனர்.
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 2. #2
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default

  சிவாஜி, எம்.ஜி.ஆர்., போன்ற தமிழ் திரையுலகின ் ஜாம்பவான்க ளின் படங்களுக்க ும் பாடியுள்ளா ர்.

  பிரபல பின்னணி பாடகர்கள் சுசீலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ் ரி, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள ுடன் ஏராளமான பாடல்களை பாடியுள்ளா ர். சினிமாவில் இவரது கலைச்சேவைய ை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியத ு.

  தமிழ் மட்டுமல்லா து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளா ர். பாடகராக மட்டுமல்லா மல் நிறைய கஸல்களையும ் எழுதியுள்ள ார்.

  இந்தியில் சில படங்களுக்க ு இவரே பாடல் வரிகள் எழுதி பாடவும் செய்துள்ளா ர்.

  மேலும் மதுவண்டு என்ற புனைப்பெயர ில் ஏராளமான கவிதைகளையு ம் எழுதியுள்ள ார்.


  தமிழ் சினிமாவில் பி.பி.ஸ்ரீன வாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் வருமாறு...

  யார் யார் யார் இவர் யாரோ...

  காலங்களில் அவள் வசந்தம்...

  பாடாத பாட்டெல்லா ம் பாட வந்தாய்...

  ரோஜா மலரே ராஜ குமாரி...

  அவள் பறந்து போனாளே....

  போக போக தெரியும்....

  அனுபவம் புதுமை...

  உங்க பொன்னான கைகள் புண்ணாகலாம ா...

  மயக்கமா கலக்கமா....

  நினைப்பதெல ்லாம் நடந்துவிட் டால்....

  நிலவே என்னிடம் நெருங்காதே ...

  மனிதன் என்பவன் தெய்வ மாகலாம்...

  போன்ற பாடல்கள் மிகப்பிரபல ம். கடைசியாக தமிழில், கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பெண்மானே பேர் உலகின் பெருமானே... என்ற பாடலை பாடியிருந் தார்.

  பி.பி.ஸ்ரீன வாஸ் இந்த மண்ணு*லகை விட்டு பிரிந்தாலு ம் அவர் பாடிச்சென் ற பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதை என்பது திண்ணம்.
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 3. #3
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default

  கண்ணீர் அஞ்சலி...!


  பிரபல பாடகர் Dr. பி.பி ஸ்ரீநிவாஸ் அவர்கள் இன்று காலமானார் .

  பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீன வாஸ் சென்னை சைதாப்பேட் டை சி.ஐ.டி.காலன ியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக் கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளா ர்.

  1930. செப்.22ம் தேதி தற்போதைய ஆந்திர மாநிலத்தில ் கிழக்கு கோதாவரி மாவட்டத்தி ல் உள்ள காக்கிநாடா வில் பிறந்தவர் பிபி.ஸ்ரீன வாஸ். பனிந்திரஸ் வாமி, சேஷகிரியம் மா தம்பதிக்கு ப் பிறந்த ஸ்ரீனிவாஸி ன் முன்னோர்கள ் பசலபுடி கிராமத்தைச ் சேர்ந்தவர் கள்.

  கல்லூரியில ் பி.காம் படித்துள்ள பி.பி.ஸ்ரீன வாஸ், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருத ம், ஆங்கிலம் என எட்டு மொழிகளை அறிந்தவர். தெலுங்கு மொழியில் கஸல் போன்ற பாடல்களை அதிகம் பாடியுள்ளா ர். கீதா தத், சம்ஷத் பேகம், ஜிக்கி ஆகியோருடன் இணைந்து பாடல்கள் பல பாடியுள்ளா ர்.

  ஆர்.நாகேந் ிர ராவின் ஜாதக பலம் (ஜாதகம்) என்ற படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரைப்படப் பாடலில் பாடி அறிமுகமானா ர்.

  ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் ஹிந்திக்கு ம் அறிமுகமானா ர். ஹரிச்சந்தி ரா என்ற மலையாளப் படத்தில் 1955ல் அறிமுகமான பி.பி.ஸ்ரீன வாஸ், பிரேம பாசம் படத்தில் பி.சுசீலாவ டன் டூயட் பாடல் பாடி அசத்தினார் . பின்னாளில் கன்னட திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜ்குமாரு க்கும், தமிழில் ஜெமினி கணேசனுக்கு ம் அதிக பாடல்கள் பாடி, இவர்களுக்க ு பி.பி.ஸ்ரீன வாஸ் குரலே சரியாக வரும் என்ற அளவுக்கு திரையுலகில ் பேசப்பட்டா ர். மேலும் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகியோருக்க ு பின்னணிக் குரல் கொடுத்து, திரைப் பாடல்களை பாமர ரசிகர்களும ் அதிகம் கேட்டு விரும்ப வைத்தார்.


  கண்ணதாசன் எழுதிய காலங்களில் அவள் வசந்தம் பாடல், அடுத்த வீட்டுப் பெண் படப் பாடல் என இவரின் பாடல்கள் இன்றும் ரசிகர்களால ் விரும்பிக் கேட்கப் படுகிறது. பி.சுசீலா, எஸ்.ஜானகி, பி.பானுமதி, கே.ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ் ரி, லதா மங்கேஸ்கர் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

  திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லா து, பக்திப் பாடல்கள், சுலோகங்கள் , தோத்திரங்க ளும் இவர் அதிகம் பாடியுள்ளா ர். சாரதா புஜங்க ஸ்தோத்திரம ், ஸ்ரீ வேங்கடேஸ்வ ர சுப்ரபாதம் , முகுந்த மாலை, ஸ்ரீமல்லிக ார்ஜுன ஸ்தோத்ரம், புரந்தரதாஸ ர் தேவநாமாக்க ள் என இவர் பாடிய ஸ்தோத்திரங ்கள் இன்றளவும் அன்பர்களால ் கேட்டு ரசிக்கப்பட ுகின்றன.

  சென்னையில் கடந்த சில வருடங்களுக ்கு முன்னர் வரை அண்ணாசாலைய ை ஒட்டிய உட்லேண்ட்ஸ ் ஹோட்டல் திறந்த வெளி பகுதியில் (தற்போதைய செம்மொழிப் பூங்கா பகுதி) தினந்தோறும ் வந்து, தன் நண்பர்களுட ன் உரையாடிச் செல்வதை வழக்கமாக்க ிக் கொண்டிருந் தார். மாலை நேரங்களில் தன் வயதையும் மறந்து, இளம் நண்பர்களுட னும், இலக்கியவாத ிகள், எழுத்தாளர் கள், திரைத் துறையைச் சேர்ந்தவர் கள் என அனைவரிடமும ் அமர்ந்து பேசிப் பொழுது கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந் தார். அந்த அனுபவங்களை வைத்து, ஹோம் அவே ஃப்ரம் ஹோம் என்ற ஒரு தொகுப்பையு ம் எழுதினார் ஸ்ரீனிவாஸ் .

  பல்வேறு நாடக மன்றங்கள், இசை அமைப்புகளி ல் தலைமையும் பங்கேற்பும ் கொண்டிருந் தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர் பி.பி.ஸ்ரீன வாஸ்.
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 4. #4

  Default

  P.B.Srinivas avargalin Aanma Amaithiyil Nilaikattum.

 5. #5
  Join Date
  Mar 2010
  Location
  Karaikudi
  Posts
  424
  Blog Entries
  1

  Default

  A nice comprehensive article on Sri P.P.Srinivas. A tribute to the legend of melodious singer. Thanks.

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts