தமிழில் பங்கு வர்த்தகம்
+ Reply to Thread
Results 1 to 10 of 10

Thread: தமிழில் பங்கு வர்த்தகம்

 1. #1

  Default தமிழில் பங்கு வர்த்தகம்

  வணக்கம் நண்பர்களே. தமிழில் பங்கு வர்த்தகம் பயில பல பேருக்கு ஆர்வம் இருக்கிறது . ஆனால் தமிழ் மொழியில் மிகவும் குறைந்த இணைய தளங்களே உள்ளன.

  புத்தகங்கள ும் இந்த தலைப்பில் அதிகம் வெளி வரவில்லை.

  பிரபல தமிழ் நாளிதழ்களு ம், பத்திரிக்க ைகளும் தமிழ் வணிகத்திற் கு அதிக பக்கங்கள் ஒதுக்குவதி ல்லை.

  இதனால் நாம் பெரும்பாலு ம் பங்கு தரகர்களையே நம்பியிருந ்தோம். இப்போது இணையம் மூலம் நாமே நேரிடியாக பங்கு சந்தையில் இறங்கும் வசதிகள் வந்துள்ளன. அதனால் இந்த துறையில் நாமே இறங்கி கூடுதல் வருமானம் செய்யும் ஆர்வமும் வரக்கூடும் .

  இந்த வலைப்பூவில ் நான் அறிந்த கற்றுவரும் சில தகவல்களை தமிழ் வாசிக்கும் நல்லுகத்தி ற்கு பகிர்ந்துக ் கொள்ள விரும்புகி றேன்.

  தவறுகள் இருந்தால் மன்னிக்கவு ம். சுட்டிக் காட்டவும்.

  முதலில் அனைத்து பங்கு வர்த்தக தளங்களைப் போல சில Disclaimer இங்கு தருகிறேன்.

  இங்கு இடப்படும் கருத்துகள் தகவல்கள் உங்களை பங்கு சந்தைக்கு அறிமுகப்பட ுத்தும் முயற்சியே.
  இது முற்றிலும் இலவசமான தளம்
  இதை நடத்த எனக்கு எந்த நிறவனமும் எந்த விதமான ஊக்கத் தொகையும் தரவில்லை
  இதில் குறிபிடப்ப ட்ட பங்குகளை நீங்கள் வாங்கினாலோ விற்றாலோ அது உங்களுடைய தனிப்பட்ட முடிவு. அதனால் ஏற்படும் லாப நட்டங்களுக ்கு என்னை பொறுப்பாக் க இயலாது.
  இந்த அடிப்படை தகவல்களை வைத்து நீங்கள் பங்கு வர்த்தகத்த ில் பெரிய வல்லுனராக ஆக இயலாது. அவ்வாறு யாராவது வல்லுனர் என்று கூறிக் கொண்டால் அதை நீங்கள் ஏற்க வேண்டாம்.
  மேற்படி தகவல்களை படித்துவிட ்டு பங்கா வேண்டவே வேண்டாம் என்று ஓடிவிடாதீர ்கள்.

  மேலும் பேசலாம்……
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

 2. #2

  Default

  பங்கு வர்த்தகம் - முன்னுரை


  நண்பர்களே Whatsapp, Twitter, Facebook போன்ற பல சமூக பிணைய முறைகள் பிரபலமாகி இருக்கும் இந்த காலத்தில் அனைவரும் பல நல்ல அறிவுரைகளை தினமும் பகிர்ந்துக ் கொள்கிறோம் .

  பலரும் வாழ்கை வாழ்வதற்கே , தினமும் நன்கொடை வழங்குங்கள ், ஏழைகளை காப்பாற்று ங்கள், அநாதைகளக்க ு உதவுங்கள் என்று அறிவுரைகளை பிறருக்கு forward செய்கிறார் கள். இது நல்ல விடயம் தான். மறுப்பதற்க ில்லை. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் என்றோ தனக்கு அதிக பணம் சம்பாதிக்க ும் ஆசை இருக்கிறது என்றோ யாரும் சொல்லிக் கொள்வதில்ல ை. அவ்வாறு யாராவது சொன்னால் சமூகத்தில் அவர்களை தவறாக எண்ணி விடுவார்கள ோ என்று நினைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது.

  முதல் மந்திரம்

  அதிக பணம் சம்பாதிக்க விரும்பவதோ நல்ல வாழ்கை வாழ வேண்டும் என்று நினைப்பதோ பாவம் இல்லை. நேர்மையான எந்த வழியில் நீங்கள் பணம் சம்பாதித்த ாலும் அதைக் கொண்டு உங்களுக்கு ம் உங்கள் குடும்பத்த ிற்கு நல்ல வாழ்கை அமைத்துக் கொடுக்க நினைப்பதும ் எந்த தவறும் இல்லை. அதனால் இந்த ஆசை உள்ளவர்கள் குற்ற உணர்ச்சியோ டு இருக்க வேண்டாம்.

  அவ்வாறாக அறிவுரை அனுப்பும் பல நல்ல உள்ளங்கள் பயன்படுத்த ும் WhatsApp திறன் கொண்ட கைப்பேசிகள ் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல். ஒரு ஏழை குடும்பத்த ின் வருடாந்திர வருமானம். ஏன் இவர்கள் இந்த கைப்பேசியி ன் செலவை அவர்களுக்க ு அளித்திருக ்கக் கூடாது? ஆகையால் இந்த போலியானவர் களை நம்ப வேண்டும்.

  நிறைய சம்பாதிக்க வும். அதைக் கொண்டு உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும். எஞ்சியவை தான தர்மம் செய்யவும். இன்று தான தர்மங்கள் செய்துவிட் டு நாளை உங்கள் சந்ததி நடுத்தெருவ ில் நிற்கும் நிலை வந்தாலும் நீங்கள் தான் அதற்கு பொறுப்பாவீ ர்கள்.

  எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம்:

  நிலம்
  வீடு
  தங்கம்
  வெள்ளி
  வங்கி சேமிப்பு
  மேலும் பேசுவோம்….
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

 3. #3

  Default

  முதலீட்டு வகைகள்

  மேலும் அதைப் பற்றி பேசுவதற்கு முன் சில விடயங்கள் பேசுவது அவசியமாகிற து.

  முதலீடு என்றாலே நம்மிடம் தேவைக்கு அதிகமாக சற்றே பணம் இருப்பதாக தானே பொருள் என்று நினைக்கலாம ். அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின் வரும் பதிவகளில் அறிவீர்கள் .

  பணம் இருப்பவன் தானே அதிகம் பணம் பண்ண முடியும் என்றும் நினைக்க வேண்டாம்.

  இரண்டாவது மந்திரம்
  உங்கள் வருமானத்தி ற்கும் உங்கள் செலவகுகளிற ்கும் சரியாக குறிப்பேட் டில் பதிவு செய்துக் கொள்ளுங்கள ். எந்த செலவு தண்டமாக போகிறது என்பதை அடிக்கடி பார்த்து அதை தவிர்த்து வாருங்கள். ஒரு நாளைக்கு 20 ரூபாய் எங்காவது நீங்கள் சேமிக்க முடிந்தால் அதை வைத்து நீங்கள் ஒரு கோடி ரூபாய் செய்யலாம். இதனை மறக்க வேண்டாம்.

  எப்போது முதலீட்டை துவங்க வேண்டும்?

  உங்கள் முதல் சம்பளத்தில ிருந்தே முதலீட்டு சேமிப்பு இவற்றை துவங்க வேண்டும். அட நான் தான் திருமணமாகா தவனாயிற்றே சற்றே வாழ்கையை அனுபவித்து போகிறேன் என்று ஊதாரியாக செலவு செய்யும் எண்ணத்தை விட வேண்டும்.

  இன்னிக்க செத்தா நாளைக்குப் பால். என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போவோம் இவ்வாறாக பேசுபவர்கள ை தவிர்க்கவு ம். கடைசியில் இடுகாட்டில ் கூட செலவு இருக்கிறது என்பதை அறியாத வீணர்கள் இவர்கள்.

  ஆக சேமிப்பையே நினைத்து இன்றைய வாழ்கை அனுபவிக்கா மல் விட வேண்டுமா என்று கேட்டால் நான் இல்லை என்பேன். அதற்கு நீங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவது எது என்று பட்டியலிடு ங்கள். நிரந்த மகிழ்ச்சி எது தற்காலிக மகிழ்ச்சி எது என்று வரையறை செய்யுங்கள ். பிறகு நீங்களே உணர்வீர்கள ்.

  மாதாந்திர செலவுப் பட்டியல்:

  வீட்டு வாடகை
  மின்சாரம்
  தண்ணீர்
  மளிகை
  பால் மற்றும் பழங்களை
  காய் கறிகள்
  எரிபொருள் (Petrol, Gas Cylinder, Kerosene)
  வீட்டுத் தொலைப்பேசி
  கைப்பேசி
  பிள்ளைகளின ் பள்ளிக் கட்டணம்
  குடும்பத்த ுடன் சினிமா மற்றும் வெளியே சென்ற உணவு உண்டு ஆகும் செலவு
  பணியாட்டகள ின் சம்பளம்
  தொலைகாட்சி மாதாந்திர கட்டணம்
  இஸ்திரி செலவு
  முடிவெட்டு ம் செலவு
  உடற்பயிற்ச ி கூட கட்டணம்
  இதர செலவுகள்
  இது ஒரு மாதிரிப் பட்டியல் தான். இன்னும் ஏதாவது விடுப்பட்ட ிருந்தால் அதையும் இணைத்துக் கொள்ளுங்கள ்.
  மொத்த வருமானம் – 20,000 (எடுத்துக் ாட்டாக)
  மொத்த செவு – 18,000
  மீதம் – 2,000


  மேலும் பேசுவோம்…..
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

 4. #4

  Default

  மிக்க நன்றி நண்பரே... தொடருங்கள் .

 5. #5
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default

  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 6. #6

  Default

  பங்கு வர்த்தகத்த ில் செல்வந்தரா கலாமா


  என்னடா இது பங்கு வர்த்தகம் பயில வந்த இடத்தில் என் வீட்டுக் கணக்கை கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.


  பெரும்பாலு ம் நான் பேசியவர்கள ிடம் அறிந்தது என்னவென்றா ல் என்ன ஐயா வீட்டு செலவிற்கே வருமானம் போதவில்லை நீங்கள் பங்கு வர்த்தகம் பண்ணு சேமிப்பு பண்ணு முதலீடு பண்ணு அப்படியெல் லாம் பேசறீங்க என்று சொன்னவர்கள ே அதிகம்.


  அதனால் தான் இந்த முன்னேற்பா டு.


  நீங்கள் தினமும் செய்யும் செலவுகளை குறிப்பெடு த்து வந்தால் மாத முடிவில் எது அவசிய செலவு எது அநாவசிய செலவு என்பதை விரைவில் அறிந்து விடுவீர்கள ். அதை தவிர்த்தால ே அந்த மீதம் உள்ள பணத்தை என்ன செய்யலாம் என்பதை அறிவீர்கள் .


  நாம் முதலீட்டை பற்றி பேசினோம் அல்லவா.


  நமக்கு கூடுதல் வருமானம் வரத்தானே நாம் முதலீட்டை பற்றி பேசினோம். அவ்வாறான கூடுதல் வருமானம் எப்போது வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

  - நான் ஓய்வு பெற்ற பிறகு அமைதியாக வாழ ஒரு வீடு வேண்டும்
  - நான் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர வருமானம் வேண்டும்
  - என் மகளுக்கு இன்னும் 20 வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
  - என் மகனை நல்ல பொறியியல் கல்லூரியில ் சேர்க்க வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
  - வாகனம் வாங்க வேண்டும். எத்தனை நாள் தான் பேருந்தில் செல்வது.

  எத்தனை வேண்டும். எப்போது வேண்டும் என்பதை வைத்தே நமது சேமிப்பு முறைகளும் நிர்ணயமாகி றது.

  நிலம்

  - குறுகிய கால முதலீட்டிற ்கு உகந்தது அல்ல.
  - எத்தனை மடங்கு அந்த முதலீடு பெருகிறது என்பது நீங்கள் வாங்கிய இடத்தை பொறுத்தது.
  - நினைத்தவுட ன் விற்க இயலாது
  - மாதாந்திர வருமானம் கிடைக்காது
  - நிலம் இருக்கும் இடத்தை பொறுத்து ஆக்கரமிப்ப ு பிரச்சனை, அரசியல் குறுக்கீடு , நிலம் அபகரிக்கும ் முதலைகளிடம ் சிக்குதல், வழக்கு என்று பிரச்சனைகள ் இல்லாது இருக்க வேண்டும்
  - நிலம் வாங்க முதலீடு தேவை. பெருந்தொகை அல்லது வங்கிக் கடன். அதற்கு கட்ட வேண்டிய தவணைகள். அதற்கான வட்டி விகிதம். (EMIs and Interest Rates).

  மேலும் பேசுவோம்….
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

 7. #7

  Default

  பணமும் பங்கு வர்த்தகமும ் பிரச்சனையு ம்

  அதெல்லாம் எனக்கு தெரியும். நேரா மேட்டருக்க ு வா என்று சிலர் அவசரப்படுவ து நியாயமே.

  அது போன்றவர்கள ுக்கு நேரிடையாக சில விடயங்கள் சொல்கிறேன் . பிறகு முன் பதிவின் இறுதியிலிர ுந்து தொடர்கிறேன ்.

  பாதுகாப்பா க பங்கு வர்த்தகம் பயிலும் வழி முறைகள்:

  முதலில் http://moneybhai.moneycontrol.com எனும் தளத்தில் இலவசமாக ஒரு கணக்கை துவக்கவும் .

  Courtesy: http://www.moneycontrol.com

  இத்தளத்தில ் பங்கு வணிக விளையாட்டு என்று ஒன்று உண்டு. உங்களுக்கு முதலில் ஒரு கோடி ரூபாய் தருகிறார்க ள். ஹா ஹா மெய்யான பணம் இல்லை. இது இ-பணம்.
  நீங்கள் நிஜமான சந்தைகளில் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.

  ஒவ்வொரு நாளும் நீங்கள் வாங்கிய பங்குகளின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியை அறியலாம்.
  இதனால் நீங்கள் சரியான பங்குகளை வாங்குகிறீ ர்களா என்பதையும் உங்கள் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்ளலாம்.
  உங்கள் கடினமான உழைப்பில் சம்பாதித்த பணத்தை போட்டு பங்கு வர்த்தகம் பயில்வதை விட சில மாதங்கள் இந்த தளத்தில் விளையாடி பயிலவும்.

  மேலும் பேசுவோம்….
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

 8. #8

  Default

  Quote Originally Posted by murugapoopathi View Post
  மிக்க நன்றி நண்பரே... தொடருங்கள் .
  நன்றி முருக பூபதி அவர்களே.
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

 9. #9

  Default

  Quote Originally Posted by rrengamani View Post
  நன்றி ரெங்கமணி அவர்களே.
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

 10. Default

  இந்த பகுதியை மேலும் எனது வலைப்பூவில ் தொடர்ந்து படிக்கலாம்
  Live, Love, Laugh
  With regards,

  Mohan

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts